எண்ணியிருந்தது ஈடேற -182

182 "அரண்மனைன்னா இதுதான் அரண்மனை.. ரொம்ப அழகாயிருக்கில்ல.." வியந்தாள் உத்ரா.. "ம்ம்ம்.. ரோஜாவைப் போல அழகு.." சு...


182

"அரண்மனைன்னா இதுதான் அரண்மனை.. ரொம்ப அழகாயிருக்கில்ல.." வியந்தாள் உத்ரா..
"ம்ம்ம்.. ரோஜாவைப் போல அழகு.." சுற்று முற்றும் பார்த்தபடி சொன்னாள் நந்தினி..
"ரோஜாவுக்கும் அரண்மனைக்கும் என்னடி உவமைப் பொருத்தம்..?" முடியலை என்ற ரீதியில் கைகளை விரித்துக் கேட்டாள் உத்ரா..
"அழகான ரோஜாப்பூவின் அடியில் முள் இருக்கும் என்ற உவமை.." வெடுக்கென்று பதில் சொன்னாள் நந்தினி..
உத்ரா துணுக்குற்றாள்.. நந்தினியின் பேச்சில் ஏதோ மறைபொருள் ஒளிந்திருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.. நந்தினி அப்படி பொடி வைத்துப் பேசுபவள் அல்ல.. அவளுக்கு அது தெரியாது..
"முள்ளா..?" உத்ரா புருவங்களை நெறித்தாள்.. நந்தினி பதில் சொல்வதற்குள் வீணா வந்து விட்டாள்..
"நந்தினிம்மா.." பாசத்துடன் அவள் கைகளை விரிக்க அனைத்து மனக் கிலேசங்களையும் மறந்து..
"அத்தை.." என்று அவள் கைகளுக்குள் புகுந்து கொண்ட செல்லம் கொஞ்சினாள் நந்தினி..
ஒருவழியாக செல்லம் கொஞ்சி முடித்து விடுபட்டு வந்தவளிடம்..
"ஏண்டி.. ஸ்மார்ட்டா, படு ஹேண்ட்சம்மா உன் பாஸ் இருக்கிறப்ப அவரை விட்டுட்டு அவரோட அம்மாவை லவ் பண்ணிக்கிட்டு இருக்கிற..?" என்று முணுமுணுத்தாள் உத்ரா..
"பிகாஸ்.. ஷி இஸ் ஸோ ஸ்வீட்.. யு நோ.." பாசத்துடன் வீணாவைப் பார்த்தாள் நந்தினி..
"பார்த்து.. பாசம் வழுக்கி விடப் போகுது.." கிண்டடித்தாள் உத்ரா..
"நந்தினி.. வந்துட்டிங்களா..?" ரம்யமாலினி விரைந்து வந்து நந்தினியைக் கட்டிக் கொண்டாள்..
அவளின் வார்த்தைகளில் தெரிந்த எதிர்பார்ப்பிலும் சந்தோசத்திலும் ஆச்சரியமானாள் உத்ரா.. ரவிச்சந்திரனின் அம்மாதான் நந்தினியைத் தாலாட்டுகிறாள் என்றால் அவனுடைய தங்கை கொண்டாடுகிறாளே..
"அதான்.. வந்துட்டேனில்ல.. உங்க அண்ணனிடம் இருந்து தப்பிச்சுப் போக முடியலை.. ஸோ.. ஐ ஆம் ரிட்டர்ன் பேக்.." சிரித்தாள் நந்தினி..
"எங்களை விட்டு ஓடிப் போக நினைத்தீங்களா..? இருக்கு உங்களுக்கு.." ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டினாள் ரம்யா..
"பயமே வரலைங்க.." என்றாள் நந்தினி..
"நான் மிரட்டினாத்தானே பயம் வராது..? அண்ணன் மிரட்டினா..?"
"ஹைய்யோ.. எதுக்குங்க இந்தக் காண்டு..? உங்களுக்கு நான் பயப்படனும்.. அவ்வளவுதானே..? இந்தா.. பயந்தாச்சு.."
நந்தினி பயப்படுவதைப் போலப் பாவனை செய்ய ரம்யமாலினி அதை ரசித்துக் கலகலவென்று சிரித்தாள்..
"அம்மே.." தழதழப்பான விளிப்பில் உத்ராவே அரண்டு போய் நந்தினியை மேலும் கீழுமாக பார்த்து வைத்தாள்..
"நந்தினி.. மைடியர் பிரண்ட்.. உனக்கு என்னடி ஆச்சு..?"
"எனக்கு ஒன்னும் ஆகலைடி உத்ரா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. உன் கூடத்தானே வந்தேன்..?"
"எனக்குத் தெரியாம பெரிசா ஏதாவது பிரெயின் டியூமர் மாதிரி இருக்காடி நந்தினி..? எனக்கு நெஞ்சு வலிக்கிறதைப் போல இருக்கே.."
"அடச்சீ.. அடங்கு.. அதிகமா தமிழ் சினிமா பார்க்காதேன்னு சொன்னாக் கேட்கறதில்ல.. எதுக்கெடுத்தாலும் பிரெயின் டியூமரா..? இவ ஓமனா.. ரொம்ப நாளைக்கப்புறம்மா என்னைப் பார்க்கிறாளாம்.. அதான் பாசத்தைப் பிழியறா.."
"ரொம்ப நாளா..? ரெண்டு வாரம்தானடி ஆகுது.."
"நான் நேற்றைக்குப் போயி இன்னைக்கு வந்தாலும் இவ இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவா.. என்மேல அப்படியொரு பிரேமம்.."
"யு மீன் லவ்..?"
"அதைத்தான் டீசண்டா மலையாளத்தில பிரேமம்ன்னு சொல்றேனில்ல... விடேண்டி... நான் ஓமனாவைக் கவனிச்சாகனும்.. ஓமனா.."
"அம்மே.."
"ஓமனா.."
"அம்மே.."
"ஓமனா.."
"அம்மே.."
இந்த உணர்வுப் பரிமாற்றம் பெயரைத் தாண்டிப் பயணிக்காது போல தோன்றியதில் வெறுத்துப் போன உத்ரா.. ரம்யமாலினியைப் பார்த்தாள்.. அவளோ விழுந்து விழுந்து சிரித்தாள்.. உத்ரா நந்தினியின் முதுகில் ஓங்கி ஒரு அப்பு அப்பி உரையாடலை முன் நகர்த்தினாள்..
"பார்த்தியா ஓமனா.. உன் கண் முன்னாலேயே இவ என்னைப் போட்டுத் தாக்கறா.." நந்தினி பற்ற வைக்க..
"ஈ பெண்குட்டி ஆரானு அம்மே..?" என்று ஓமனா உத்ராவை விரோதத்துடன் பார்த்தாள்..
"எண்ட ஜோட்டுக்காரியாக்கும்.."
"ஓ.. அதுக்கோசரம் இ மொத்து மொத்துவதோ..? எண்ட நந்தினி மேமைத் தள்ளுவதோ..?"
"ம்ஹீம்.. எனக்காக கேட்க யாருமில்லையெண்டு இந்தத் தள்ளு தள்ளரா ஓமனா..?"
நந்தினி கண்ணைக் கசக்க..
"அடிப்பாவி.. ஏண்டி போட்டுக் கொடுக்கற..?" என்றாள் உத்ரா..
"ஞான் உண்டு அம்மே.. எண்ட நந்தினி மேமுக்காக எண்ட உயிரையும் கொடுப்பேனல்லோ.."
"அதை நீயே வைத்துக்க... உன் உயிரைக் கொடுத்துட்டா யார் என்னைத் தேடுவாங்களாம்..?"
"ஞான் தேடும் அம்மே.."
"எப்படி..? ஆவியா வந்தா..? எனக்கு ஓமனாக்குட்டி யெண்டால்தான் வளர இஷ்டம்.. ஓமனாப் பேயெண்டால் ரொம்பவும் கஷ்டம்.."
"ஹைய்யோ நந்தினி.." ரம்யமாலினி சிரிப்பைத் தாங்க முடியாமல் அங்கிருந்த சோபாவில் விழுந்து விட்டாள்..
"இவ இப்படித்தான்.." என்ற உத்ராவும் சேர்ந்து சிரித்தாள்..
"அம்மே.."
"இந்த 'மே'யைத் தாண்டி ஜீன், ஜீலைன்னு ஓடி வா ஓமனா.. நந்தினி மேம்ன்னு விளிச்சா வளர நன்னாயிட்டுண்டு.. கேட்டோ.."
"ஆகட்டும் அம்மே.."
"ஊஹீம்.. நந்தினி.."
"நந்தினி மேம்.."
"அம்மே, மேம்.. எதையாச்சும் தொத்த வைச்சுக்கனும்.. எப்படியோ போ.."
"ஊஹீம்.. ஞான் நந்தினி மேமை விட்டுப் எங்ஙனயும் போகாண்டாம்.."
"உன்னை யாரு போகச் சொன்னது..?"
"நீங்கதான்.."
"இந்தப் 'போ..' அந்தப் 'போ..' இல்லை ஓமனா.. ககபோ.."
"எந்தா..? காக்கா கக்கா போயிருச்சா..?"
"முடியலை.. ககபோன்னா உனக்கு இந்த காக போதான் நினைவுக்கு வருமா ஓமனா..?"
"ஹி.. ஹி.."
"வழியுது.. துடைத்துக்க.."
நந்தினி ஓமனாவை வாரிக் கொண்டிருக்கும் போது அங்கு ரவிவர்மன் வந்து விட நந்தினி விறைப்பானாள்.. அவள்..
"வாம்மா.." என்றதும் மரியாதையாக.. தலையை ஆட்டினாள்..
"ஏண்டி.. இங்கே நீ கெஸ்ட்டா இல்லை நான் கெஸ்ட்டா..?" சந்தேகம் கேட்டாள் உத்ரா..
"ஒருத்தராவது என்னை ரிஸிவ் பண்ணினாங்களா..? எல்லோரும் உன்னையே வா, வாங்கிறாங்க.."
உத்ராவின் பெறாமையில் நந்தினிக்கு சில்லென்று இருந்தது.. அதற்குள் வீணா..
"வாம்மா.. நீதான் உத்ராவா..? எங்க நந்தினியின் பிரண்ட் எங்களுக்கெல்லாம் சொந்தம் போல.. தம்பி பெயர் வினித் இல்லையா..? ஜோடிப் பொருத்தம் பிரமாதமா இருக்கு.. கோழிக்கோடைச் சுற்றிப் பார்த்தீங்களா..? எப்படி.. கேரளாவை பிடித்திருக்கா..?" என்று உத்ராவையும் வினித்தையும் வரவேற்று உத்ராவின் பெறாமையை விரட்டியடித்து விட்டாள்..
"ஆசிர்வாதம் செய்யுங்க ஆண்ட்டி.."
வினித் உத்ராவை அருகில் அழைத்து ரவிவர்மனையும் வீணாவையும் அருகருகே நிறுத்தி பாதம் பணிந்து எழுந்தான்.. அதில் ரவிவர்மனின் முகத்தில் திருப்தி நிலவியது..
"நல்லாயிருங்க.."
மணமக்களை மனமார ஆசிர்வதித்தவர் தன் கையிலிருந்த தங்கக் கடிகாரத்தைக் கழற்றி வினித்தின் கையில் கட்டி விட்டார்.. அவன் பிரமித்து விட்டான்.. எண்கள் இருக்கும் இடத்தில் மிளிர்ந்த வைரங்கள் அவனை அயர வைத்தன..
'எத்தனை லட்சம் பெறுமோ..'
வீணா தன் கழுத்தில் இருந்த வைர அட்டிகையைக் கழட்டி உத்ராவின் கழுத்தில் போட்டு விட உத்ரா பயந்து போய் பின் வாங்கினாள்.. அவள் வைரத்தையே பார்த்ததில்லை.. இதில் வைர அட்டிகையைப் போட்டு விட்டால் மிரண்டு விட மாட்டாளா..?
"உங்க அன்பும், ஆசிர்வாதமும் இருந்தால் போதும் ஆண்ட்டி.. ஜ்வல் வேணாம்.. இது டயமண்ட் நெக்லஸ் போல இருக்கு.."
உத்ராவின் பயத்தைக் கண்டு மிருதுவாகச் சிரித்தாள் வீணா..
"டயமண்ட்தான்ம்மா.. கல்யாணமாகி விருந்துக்கு வந்திருக்கிற தமிழ்நாட்டுப் பெண் நீ.. என் பிறந்த ஊர்.. உனக்கு டயமண்டில்தான் பரிசு கொடுக்கனும்.. வாங்கிக்க.. வயநாட்டு அரண்மனையின் ஞாபகம் வைரமா உன் கழுத்தில் இருக்கனும்.."
மறுக்க முடியாமல் தயக்கத்துடன் தலையை அசைத்தாள் உத்ரா.. நகையை அவிழ்க்கப் போன கை அதைத் தொட்டுப் பார்த்து விலகியது.. வைர அட்டிகை அவள் கழுத்தில் எப்படி ஒளிர் விடுகிறது என்று பார்க்க ஆசை கொண்டாள் உத்ரா..
'தனி ரூமுக்கு போனதும் முதல் வேலையா கண்ணாடி பார்க்கனும்..'
நந்தினி கலவரத்துடன் ஹாலைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டாள்.. உத்ராவும், வினித்தும் பரிசுகளை எதிர்பார்த்து வயநாட்டு அரண்மனைக்கு வருகை தரவில்லை.. அவர்கள் நந்தினியைப் பார்ப்பதற்காக தேநிலவு என்ற பெயரில் வந்திருக்கிறார்கள்.. ரவிச்சந்திரனின் அழைப்பை ஏற்று மரியாதையின் நிமித்தம் வயநாட்டு அரண்மனையில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து செல்ல ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.. வந்த இடத்தில் அவர்களுக்கு வைர நகைகள் பரிசாக கிடைக்குமென்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.. பரிசை தட்டிக் கழிப்பது மரியாதையாகாது என்று தயக்கத்துடன் அந்த நகைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்..
இதை அவந்திகாவும் அஜந்தாவும் புரிநது கொள்வார்களா..? இதற்காகத்தான் இங்கே விருந்துக்கு வந்தீர்களா என்பதைப் போல ஒரிரு வார்த்தைகளைக் கேட்டு விட்டால் கூடப் போதும் உத்ரா நொறுங்கி விடுவாள்.. வினித்திற்கு கோபம் வந்து விடும்.. அளித்த பரிசுகளை அங்கேயே கழற்றிக் கடாசிவிட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்கக் கோழிக்கோடுக்கு கிளம்பிப் போய் விடுவார்கள்..
'அப்படி ஏதும் நடந்து விடக் கூடாது..'
நந்தினி மனதுக்குள் கடவுளை வேண்டியபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்..
"என்னடி..?" உத்ராவுக்கு வேடிக்கையாக இருந்தது.
"ஓமனா அம்மேன்னு கூப்பிடக் கூடாதுன்னு கடவுள்கிட்ட ப்ரே பண்றாங்களோ என்னவோ.." ரம்ய மாலினி சிரித்தாள்..
"இருக்கும்.. இருக்கும்.." வெகு இலகுவாக ரம்ய மாலினியிடம் தோழமை பூண்டு விட்டாள் உத்ரா..
"எண்ட மலையாள பகவதி..! எனிக்கோசரம் எண்ட அம்மே கடவுள வணங்நு..?" ஓமனாக்குட்டி புல்லரித்துப் போனாள்..
"உனக்காக வணங்கலை ஓமனா... அவங்களுக்காகத்தான் வணங்கிக்கிறாங்க.. இல்லைன்னா நீ அவங்களை உனக்கு அம்மையாக்கி விடறியே.." ரம்யமாலினி விரிவுரை கொடுத்தாள்..
"ஓ..! இதிக்கு எதிக்கு கடவுளிண்ட பறஞ்ஞு.. ஈ ஓமனாக்குட்டியிண்ட பறஞ்ஞா.. ஞான் எண்ட அம்மைய மேமிண்டு விளிக்குமல்லோ.."
"அதுசரி.. எத்தனை தரம்தான் உன்னிடம் பறயறது..?"
அலுத்துக் கொள்வதைப் போல நந்தினி பேச்சை மாற்றினாள்.. யதேச்சையாக ரவிச்சந்திரனைப் பார்த்த போது அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.. இருவர் விழிகளும் சந்தித்தபோது அவன் இமைகளை மூடித் திறந்தான்.. நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீ கவலை கொள்ளாதே என்ற அந்த மௌன சமிக்ஞையில் நந்தினியின் கலக்கம் விலகியது..
எதிரில் நிற்கும் அந்த இரும்பு மனிதனின் காவலைத் தாண்டி அஜந்தாவின் நாக்கு உத்ராவைச் சுட்டு விடாது என்ற நிம்மதி அவளுக்குள் வந்தது..
"ஓமனா.. மாடியில இவங்க ரூமைக் காட்டு.." வீணா உத்தரவிட்டாள்..
"வரனும் அம்மே.." ஓமனா உத்ராவின் பெட்டியைத் தூக்கிக் கொண்டாள்..
"இவளும் அம்மையா..? எண்ட குருவாயூரப்பா.." நந்தினி தலையில் கை வைக்க.. ரம்யமாலினி கலகலத்துச் சிரித்தாள்..
மகளின் சிரிப்பைக் கண்ணார கண்ட ரவிவர்மனின் விழிகளில் நீர் துளிர்த்தது.. அவருடைய செல்வ மகளிடம் அனைத்துச் செல்வங்களும் நிரம்பியிருக்கின்றன.. ஆனால் சிரிப்புச் செல்வம் இல்லாமல் முகம் வாடியிருந்தாள்.. அந்தச் செல்வத்தை அவருடைய மகளுக்கு அளிப்பதற்காகவே நந்தினி அவரது அரண்மனையில் காலடி வைத்திருக் கிறாளோ..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -182
எண்ணியிருந்தது ஈடேற -182
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-182.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-182.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy