எண்ணியிருந்தது ஈடேற -181

181 மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.. நடுவில் நந்தினியும் , உத்ராவும் நடந்து வர.. அவர்களின் இரு பக்கத்திலும...


181


மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.. நடுவில் நந்தினியும், உத்ராவும் நடந்து வர.. அவர்களின் இரு பக்கத்திலும் ரவிச்சந்திரனும் வினித்தும் இணைந்து நடந்து வந்தது ஏதோ ஒரு வகையில் அவள் மனதை நிரடியது..
இதுபோல ரவிச்சந்திரன் அஜந்தா, அபராஜிதனுடன் இணைந்து நடந்து வந்ததில்லை என்பது அவள் மனதை உறுத்தியது..
ரவிச்சந்திரன் யாரிடமும் சரி நிகர் சமானமாக நின்று பேசிவிட மாட்டான்.. கண்டிப்பான ஓர் பார்வையில் எட்ட நிறுத்தி விடுவான்.. அபராஜிதனையும், அஜந்தாவையும் அதுபோல கூட அவன் பார்த்ததில்லை.. அவர்கள் பக்கமே திரும்பாமல் கம்பீரமாக நடந்து விடுவான்..
'ஆ ரவிச்சந்திரன்தானா இது..'
யாழினிக்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை.. உத்ரா ஏதோ சொன்னாள்.. அதற்கு நந்தினி கேலி செய்தாள்.. அதை ரவிச்சந்திரன் கிண்டல் செய்தான்.. வினித் நந்தினிக்குப் பரிந்து வந்தான்.. அந்த நால்வரிடமும் தெரிந்த இணக்கமும் ஒட்டுதலும் யாழினிக்கு எதையோ உணர்த்தின..
'எந்தா இது.. ஒந்றுமே நன்னாயில்லையல்லோ..'
இதைத்தான் அஜந்தாவும் சொன்னாள்.. ஒன்றல்ல, இரண்டல்ல... பதினைந்து தினங்களாக ரவிச்சந்திரனும் நந்தினியும் அரண்மனைக்குத் திரும்பவில்லை யென்பதைச் சுட்டிக் காட்டினாள்.. அவர்கள் இருவரையும் கோழிக்கோடின் கடற்கரையில் நெருக்கமாக கண்டதாக தரங்கிணி யாழினிக்கு செல்போனில் தகவல் சொல்லி கோள் மூட்டியிருந்ததை நினைவு படுத்தினாள்... அருள்மொழிவர்மன் கட்டிக் காத்து வந்த வயநாட்டு அரண்மனையின் பாரம்பர்யப் பெருமையை ரவிச்சந்திரன் குலைத்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினாள்..
இதுதான் அஜந்தாவின் சாதுர்யம் நிரம்பிய சாகசம்..
உண்மையில் அவளைப் பெற்ற அவந்திகாவும், யோகானந்தனும்தான் வயநாட்டு அரண்மனையின் பாரம்பர்யப் பெருமைக்கு உலை வைத்தார்கள்.. அது தொலைந்து போய் விடாமல் கட்டிக் காப்பாற்றித் தூக்கி நிறுத்தி அதிக உயரத்திற்கு கொண்டு சென்றவன் ரவிச்சந்திரன்..
அஜந்தாவும் அபராஜிதனும் பெற்றவர்கள் எவ்வழியோ அவ்வழியே எங்கள் வழி என்று வயநாட்டு அரண்மனையின் பாரம்பர்யப் பெருமைக்கு அவர்களால் எந்த அளவுக்கு குந்தகம் விளைவிக்க முடியுமோ அந்த அளவுக்கு குந்தகம் விளைவித்து வந்தார்கள்..
அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து, படிப்பைக் கொடுத்து வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட ரவிச்சந்திரனுக்கு அவர்களால் செய்ய முடிந்த கெட்டது அனைத்தையும் அவர்களால் முடிந்த அளவுக்கும்.. சில தருணங்களில் மூச்சை அடக்கித் தங்களின் சக்திகளை ஒன்று திரட்டித் தம் கட்டி அதற்கு மேலேயும் செய்து வந்தார்கள்..
அவர்களுக்குத் தெரிந்த நன்(றி)னிக் கடன் அதுதான்..
அதையெல்லாம் யாழினி நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு பேசுவதில் அஜந்தா கில்லாடி.. அது எப்படியோ தெரியாது.. அவள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் ரவிச்சந்திரன் வில்லாதி வில்லனாக உருமாறி விடுவான்.. அவள் ஏதுமறியாத பேதையாக யாழினியின் கண்களுக்குத் தெரிவாள்..
"ஈ பெண் குட்டி எவரானு பாட்டி..? ரவியத்தானிடம் ஜோலி பாக்க வந்தவ எந்துக்கோசரம் வயநாட்டு அரண்மனைக்கு வந்து..? பெர்சனல் செக்கரட்டரியோட ஜோலி இதா..? நம்மளிடம் ஜோலி பார்ப்பவர்களுக்கெண்டு பெண்குட்டி இருந்திருக்கனும் பாட்டி..? நமக்கெண்டு பெகுமானம் உண்டல்லவோ.. ரவியத்தான் தன்னோட பெர்சனல் செக்கரட்டரிய வயநாட்டு அரண்மனையில இருக்க வைத்திருக்கிற சேதி ஈ வயநாட்டில பரவினா நம்மட பெகுமானத்தின் கதி எந்தா பாட்டி..?"
அஜந்தா கரைத்து ஊற்றிய புளியில் யாழினி கதி கலங்கிப் போனாள்..
"நிண்ட பறஞ்ஞறதும் சரியெண்டுதான் தோணுது கொச்சு மோளே.." என்று சொல்லி விட்டாள்..
"நம்மட வயநாட்டு அரண்மனையோட பெகுமானத்துக்கு சரியெண்டு படுவதைத்தான் ஞான் பறஞ்ஞு பாட்டி.. ஈ கொட்டாரத்தின் பெகுமானத்துக்கு
ஒரு குறைவெண்டால் ஞான் நோக்கிக்கிட்டு இருக்க மாட்டேனல்லோ.."
"அஃதே.. அஃதே.."
"ஞான் எவரானு..?"
அஜந்தா கேட்ட கேள்விக்கு நீ அவந்திகாவின் மகள் என்றுதான் சொல்லப் போனாள் யாழினி.. அஜந்தா அதைச் சொல்ல விட்டு விடுவாளா என்ன..? அவந்திகாவுக்கு மகளானால் யோகானந்தனுக்கும் மகளாகித் தொலைக்க வேண்டும்..
யோகானந்தனின் மகளுக்கு என்ன பெகுமானம் (மரியாதை) கிட்டுமென்று அவள் அறியாதவளா என்ன..?
கடைந்தெடுத்த வினயம் கொண்ட கைகாரி அஜந்தா.. தனது அடையாளமாக அவள் பெற்றவர்களை முன் நிறுத்த மாட்டாள்.. அது எப்பேர்பட்ட பெகுமானக் குறைவு என்பது அவளுக்குத் தெரியும்.. தமையனையும் முன் நிறுத்த மாட்டாள்.. அவன் பெற்றவர்களுக்கும் மேலான பேமானியென்ற பெயர் பெற்றவன்..
ஆதலினால் ஆதி புத்திசாலி அஜந்தா தனது அடையாளமாக என்றுமே அருள்மொழிவர்மனையும், யாழினியையும் தான் முன் நிறுத்துவாள்.. அதிலும் அவளும் அபராஜிதனும் மட்டும்தான் அவர்களின் பேரன், பேத்தி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார்கள், ரவிச்சந்திரனும், ரம்யமாலினியும் அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை என்பதை நினைவு படுத்துவாள்.. அவளுக்குத் தெரியும்.. யாழினியின் மனதில் அந்த மனத்தாங்கல் இருக்கிறது என்பது..
அஜந்தாவுக்கும், அபராஜிதனுக்கும் அவள் பரிந்து பேசப்பேச ரவிச்சந்திரனும், ரம்யமாலினியும் தாத்தா, பாட்டியிடமிருந்து தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தார்கள்.. ஒரு கட்டத்தில் என் குடும்பம் என்று ரவிச்சந்திரன் பிரித்துப் பேசி அருள்மொழிவர்மனையும், யாழினியையுமே தள்ளி நிறுத்தி விட்டான்.. இதை உணராமல் ரவிச்சந்திரன் தங்கள் இருவரையும் புறக்கணித்து விட்டதாக யாழினி மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள்..
இதைத் தெள்ளத் தெளிவாக புரிந்து வைத்திருந்த அஜந்தா அந்த வயோதிக தம்பதிகளுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே விழுந்து விட்ட பள்ளத்தை அதிகப்படுத்தி தாண்ட முடியாத அகழியாக்கும் பணியில் செவ்வனே ஈடுபட்டிருந்தாள்..
"ஞான் எண்ட தாத்தா, பாட்டியோட கொச்சு மோளாக்கும்.. ஈ கொட்டாரத்தோட தம்புரான் எண்ட தாத்தா அருள்மொழிவர்மனல்லோ.. ஈ கொட்டாரத்தோட தம்புராட்டி எண்ட பாட்டி யாழினி தேவி..! இவரிண்ட கொச்சு மோளுக்கு ஈ கொட்டாரத்தில கிட்டும் பெகுமானம் எந்தா பாட்டி..?"
"எண்ட கொச்சு மோளே..!"
யாழினி கண் கலங்கி விட்டாள்.. அவளுடைய செல்லப் பேத்தி அஜந்தா கேட்பதும் நியாயம்தானே.. அந்த அரண்மனைக்கு ராஜா அருள்மொழிவர்மன்.. ராணி யாழினி தேவி.. இவர்களுடைய புகழை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது அவந்திகாவும் அவள் பெற்ற பிள்ளைகளும்தான்.. மற்றவர்கள் மறந்து விட்டார்கள்..
அருள்மொழிவர்மனும், யாழினியும் ஆட்சி பீடத்தில் இருந்தால்தான் அவந்திகாவும் அவள் குடும்பமும் அந்த அரண்மனையில் சகலவித அதிகாரங்களோடு உலா வர முடியும் என்பதை யாழினிதான் மறந்து விட்டாள்..
அவள் மறக்கவில்லையென்றாலும் அஜந்தா வேப்பிலை அடித்து மறக்க வைத்து விடுவாளே..
"எனிக்கு எந்தா பாட்டி.. நிங்களும், தாத்தாவும் நிங்களோட பெகுமானம் குறையாம ஈ கொட்டாரத்தில ஜீவிக்கணும்.. ஞான் அதை நோக்கனும்.. ரவியத்தானும் அவரிண்ட குடும்பமும் எண்ட தாத்தா, பாட்டியோட பெகுமானத்த பறிக்க ஞான் விட மாட்டேனல்லோ.."
வெகு சாமர்த்தியமாக ரவிச்சந்திரனையும் அவனுடைய குடும்பத்தையும் தள்ளி நிறுத்தி விட்டாள் அஜந்தா.. அருள்மொழிவர்மனையும், யாழினியையும் தனிமைப் படுத்திவிட்டாள்.. அவளுடைய சுயநலத்துக்காக அவளுடைய அன்னையின் அன்னையை மூளைச்சலவை செய்து ரவிச்சந்திரனுக்கு எதிராக திருப்பி விட்டு விட்டாள்..
"ஈ பெண்குட்டியே ஜோலி பார்க்க வந்து.. இவளோட பிரண்டு எந்துக்கோசரம் வயநாட்டுக்கு வந்து..? ஹனிமூன் கொண்டாட ஈ வயநாடுதான் கிட்டியதோ..? ஈ வயநாட்டு கொட்டாரத்தில விருந்தாளியாய் வருவதற்கும் ஒரு பெகுமானம் வேண்டுமல்லோ..?"
அதுதானே என்று பல்லைக் கடித்தாள் யாழினி..
வயநாட்டு அரண்மனைக்கு விருந்துக்கு வர ஒரு தகுதி வேண்டும்தானே.. அது ஏன் ரவிச்சந்திரனுக்குத் தெரியவில்லை..?
"ரவியத்தான் விளித்திருக்க மாட்டார் பாட்டி.. ஈ நந்தினி விளிச்சிருப்பா.. காயலோரமா இது போல கொட்டாரத்தின அவள் கண்டதில்லையல்லோ.. இதோட சேலுல மயங்கிப் போனவ தான் ஈ தரவாட்டில ஜோலி பாக்க வந்தவங்கிறத மறந்து போயி.. தான்தான் ஈ தரவாடோட தம்புராட்டி (ராணி) எண்டு விஜாரம் கொண்டு.."
"எந்தா..? ஈ தரவாடோட தம்புராட்டி ஆரானு..?"
"அதி நீங்கதான் பாட்டி.. வேற எவரானு தம்புராட்டி..?"
"அஃதே.. அதே.."
யாழினி ஆசுவாசமானாள்.. இரு கிழவி.. இந்த ரவிச்சந்திரனுக்கு மனைவாட்டியாகி இந்தக் கொட்டாரத்தின் தம்புராட்டியான பின்பு உன்னைத் தூக்கி மூலையில் கடாசுகிறேன் என்று அஜந்தா மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள்..
'பின்னே.. எப்போது பார்த்தாலும் ஈ கிழவிக்கு சோப்புப் போட்டுக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமெண்டா வெப்பராளம் வராதா..? சோப்பைப் போட்டுப் போட்டு என் கைதான் தேய்கிறது.. ஒன்றையும் காணோம்.. காலம் போன கடைசியில இன்னமும் இந்தக் கிழவிக்கு தம்புராட்டி பட்டம் வேண்டிக்கிடக்கு.. மருமகளையும் ஆள விடலை.. பேரனுக்குக் கல்யாணம் ஆகி அவனுக்கும் ஓர் பெண்டாட்டி வரப் போகிறா.. இந்தக் கிழவி தம்புராட்டி பட்டத்தை விட்டுத் தர மாட்டேங்குது.. இதையெல்லாம் மூலையில் தூக்கிக் கிடாசினால்தான் நான் தம்புராட்டியாக முடியும்.. இந்தக் கிழவி எனக்குக் கூடத் தம்புராட்டி பட்டத்தை விட்டுத் தராது.. கில்லாடி கிழவியல்லோ..'
"அத்தான் வந்ததும் பறஞ்ஞு.. அன்வரிச்சு.."
"எதிப் பத்தி..?"
அஜந்தாவுக்கு கட்டையைத் தூக்கி யாழினியின் மண்டையில் நான்கு போடு போட்டு மண்டையைப் பிளந்து விடலாம் போன்ற வெறி ஏற்பட்டது.. அவளும் இரண்டு வாரங்களாக யாழினிக்கு சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி கரைப்பாய் கரைத்துக் கொண்டிருக்கிறாள்.. அனைத்துப் பழமைகளையும் சுவராஸ்யமாக செவி மடுத்து புறணி பேசி முடித்து விட்டு கிழவி இப்படியொரு கேள்வியைக் கேட்கிறதே.. இதை என்ன செய்தால் தேவலாம்..
'ஈ கொட்டாரத்தோட தம்புராட்டி ஆரானுன்னு கேட்டுப் பாரு.. கிழவி ஞான்தான், ஞான்தான்னு அலறும்.. அதி மட்டும் தெரியுது.. மத்தது தெரியலையாம்.. என்னைப் பிராந்தையின்னு நினைக்குதோ..'
மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள் அஜந்தா.. அவளுடைய கோபத்தை அவந்திகாவிடம் காட்டலாம்.. யாழினியிடம் காட்டி விடக் கூடாது.. அவள் ஒருத்தி மட்டும்தான் அஜந்தாவின் அஸ்திரம்.. எய்தால் குறி தவறாமல் தாக்கக் கூடியவள்.. அருள்மொழிவர்மனிடம் அஜந்தாவின் வாசகம் எடுபடாது.. அவர் ரவிச்சந்திரனின் உறவு கெடாமலிருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்..
"எந்தா பாட்டி இதி.. புலரி வரை ராமாயணக் கதை கேட்டு விட்டு.. புலரியில சீதைக்கு ராமன் ஆரானுன்னு கேட்டோ.. நிங்க ஈ கொட்டாரத்தோட தம்புராட்டி பாட்டி.."
"அதே.. அதே.."
'இதுக்கு மட்டும் அதே போட்டிரு..' அஜந்தாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அதை மறைத்து செல்லமாக பாட்டியை முறைப்பதைப் போல நடித்தாள்..
"தம்புராட்டிக்கு ஆரானு ஆலோசனை பறஞ்ஞு..? தம்புராட்டியல்லவோ ஆலோசிக்கனும்..?"
"எதுக்கோசரம் ஆலோசிக்கனுது கொச்சுமோளே.."
'ஆமாம்.. அதையும் புளிப் போட்டு நான்தான் உனக்கு விளக்கிச் சொல்லியாகனும்.. உனக்கெல்லாம் எதுக்கு தம்புராட்டிப் பட்டம்..? நீயெல்லாம் தம்புராட்டி..! விளங்கிரும் போ..'
"எந்தா இத்தரயும் ஆலோசிக்கனுது கொச்சு மோளே.."
"நிண்ட கள்ளமில்லா சுபாவம் பத்தியல்லோ.. நிங்க வெளுத்ததெல்லாம் பால்ன்னு விஜாரம் கொண்டு.. அதி அல்ல பாட்டி.. ஈ நந்தினிக்கு இருக்க இடம் கொடுத்து.. அவ எந்தாயிண்ட அவளிண்ட பிரண்டுக்கு ஹனிமூன் கொண்டாட இடம் கேட்டு.. அதியும் நிங்க கொடுத்து.."
"ஞான் அளிக்கலயில்லோ கொச்சு மோளே.. ரவியல்nh அளிச்சு..?"
"அதித்தான் நிங்க எந்தான்னு அன்வர்ஷிச்சு.."
"ஓ.."
அஜந்தா போட்டுக் கொடுத்த ரோட்டை சாலையாக்கும் திட்டத்தை யோசிக்க ஆரம்பித்து விட்டாள் யாழினி..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -181
எண்ணியிருந்தது ஈடேற -181
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-181.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-181.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy