எண்ணியிருந்தது ஈடேற -180

180 "இங்கிலீஷ் எடுத்து ' ய ' போலவே இந்த ரோடு வளைஞ்சு வளைஞ்சு போடுதில்ல.." உத்ரா வியந்து போது நந்தினியும் ரவிச்...


180


"இங்கிலீஷ் எடுத்து '' போலவே இந்த ரோடு வளைஞ்சு வளைஞ்சு போடுதில்ல.."
உத்ரா வியந்து போது நந்தினியும் ரவிச்சந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
"என்ன்ன்...ன..?" சன்னமான குரலில் அதட்டினான் ரவிச்சந்திரன்..
"ஒன்ன்ன்..னுமே இல்லை பாஸ்.."  ஜகா வாங்கினாள் நந்தினி..
"உனக்கும் உன் பிரண்டுக்கும் 'ஸேம் தாட்'ன்னு நான் சொல்லனுமா..?"
"வேண்டவே வேண்டாம்.."
"வயநாட்டுக்குப் போகிற பாதை '' ஷேப்பிலதான் இருக்கும்.. யார் இதைப் பாத்தாலும் இப்படித்தான் சொல்வாங்க.."
"ஓகே.. ஓகே.. கூல் பாஸ் கூல்.."
ஒரு பார்வை பார்த்து விட்டாள்.. அவளும் அவளுடைய தோழியும் ஒன்று போல நினைப்பதைப் பார்வையில் உணர்த்தி விட்டாள்.. அதற்கு இத்தனைப் பேச்சா..?
'இவன் பண்ற அட்ராசிட்டி இருக்கே..'
நந்தினி பின்னால் திரும்பி உத்ராவைப் பார்த்தாள்.. ஜன்னல் கண்ணாடிக்கு வெளியே தெரிந்த வயநாட்டுப் பாதையில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் உத்ரா.. சரிவில் தெரிந்த தேயிலை பாத்திகளின் அழகை கணவனுக்குக் காட்டி அவள் குதூகலித்தைப் பார்க்க நன்றாக இருந்தது..
'இதே சந்தோசத்தோடு இவ சென்னைக்குத் திரும்பனும் கடவுளே..' மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்..
உத்ராவுக்கான தேநிலவு நாள்களை இனிமை குறையாமல் கொடுத்து விட்ட நிம்மதி அப்போதுதான் நந்தினிக்குக் கிடைக்கும்.. மனச்சுணக்கத்துடன் உத்ரா கிளம்பிப் போனால் எனக்காக வயநாட்டுக்கு வந்து ஹனிமூன் டேஸின் சந்தோசத்தை ஸ்பாயில் பண்ணிக் கொண்டாளே என்ற குற்ற உணர்வு நந்தினியைக் கொன்று தின்று விடும்..
கோழிக்கோடின் 'யாழ்' ஹோட்டலில் உத்ராவுக்கான சந்தோசதினங்களை குறைவில்லாமல் கொடுக்க முடிந்தது.. முதல்நாள் தான் அவர்கள் பேகல் போர்ட் கோட்டையைப் பார்க்கப் போனார்கள்.. என்னவோ சரித்திர காலத்தின் நினைவிடத்தைக் காட்டுவதைப் போல..
"இங்கேதான் 'உயிரே.. உயிரே..' பாட்டை ஷீட் பண்ணினாங்க.. தெரியுமா..?" என்று பீற்றிக் கொண்டாள் நந்தினி..
சென்னைக்குத் திரும்ப இரண்டு நாள்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர்களை வயநாட்டு அரண்மனைக்கு அழைத்தான் ரவிச்சந்திரன்.. அவர்களும் அதற்கு என்ன என்று ஒப்புக் கொண்டார்கள்.. நந்தினிக்குத்தான் பதக், பதக்கென்று இருந்தது..
வயநாட்டு அரண்மனையில் அவந்திகாவின் குடும்பம் இருக்கிறதே.. அஜந்தா இருக்கும் இடத்தில் உள்ள இரண்டு நாள்கள் தங்கியாக வேண்டுமே..
'என்ன நடக்குமோ..' நந்தினிக்கு கலவரமாக இருந்தது.. அதை ரவிச்சந்திரனிடம் சொல்லி விட முடியாது.. என்னதான் இருந்தாலும் வயநாடு அவனுடைய ஊர்.. வயநாட்டு அரண்மனையில் இருப்பவர்கள் அவனுடைய குடும்பம், உறவினர்..
நந்தினி அவளுடைய பயத்தைப் பற்றி வாய் திறந்தால் அது தவறாகி விடாதா..?
சாலையின் ஓரமாக அடர்ந்திருந்த பச்சை மூங்கில் செடிகள் ஓங்கி வயர்ந்து முனையில் பின்னிப் பிணைந்து கோபுர வாசல் போல நீண்டிருந்ததில் பிரமித்துப் போனாள் உத்ரா.. வினித்தின் தோள் வளைவில் கையை வளைத்து தோள் சாய்ந்து தன் பிரமிப்பை அவள் வெளிப்படுத்தியதில் காரை ஓட்டிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் பெருமூச்சு விட்டு நந்தினியை அர்த்தம் நிரம்பிய பார்வையொன்றை பார்த்து வைத்தான்..
அவளுக்கும் அது போல சாய வேண்டுமென்ற ஆசைதான்.. தனிமையில் இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பாள்.. கூட உத்ராவும் வினித்தும் இருக்கிறார்களே..
"இவங்க கூட நாமும் இருக்கோம்.. இவங்க நம்மை கண்சிடர் பண்றாங்களா..?" முணுமுணுப்பாய் வினவினான் அவன்..
"அவங்க கப்புள்.. நாம அப்படியா..?" நந்தினியும் முணுமுணுத்தாள்..
"நாம லவ்வர்ஸ்.."
"கப்புள் இல்லை.."
"வா.. கப்புள் ஆகிடலாம்.."
இதற்கு மட்டும் அவள் பதில் சொல்லவே மாட்டாள்.. மௌனம் சாதிப்பாள்.. மனதுக்குள் தஞ்சாவூரும், மேகநாதனும் தோன்றுவதில் பதட்டத்துடன் நகத்தைக் கடிக்க ஆரம்பித்து விடுவாள்..
அப்போதும் அதுபோல அவளது கை வாயருகே போனது.. ரவிச்சந்திரன் காரை ஒட்டியபடி அவள் கையைத் தட்டி விட்டு..
"நகத்தைக் கடிக்காதே.." என்று அதட்டினான்..
"இவ அப்படித்தான் சார்... எதற்கெடுத்தாலும் நகைத்தைக் கடிச்சுத் துப்புவா.. சொன்னாலும் கேட்க மாட்டா.. ஒரு நாள் இவ கை நகங்களில வேம்பு எண்ணையைத் தடவி விட்டுட்டேன்.. நானும் மத்த பிரண்ட்ஸீம் இதுக்காகவே பிளான் பண்ணி நாட்டு
மருந்துக் கடையில வேம்பு எண்ணையை வாங்கி வைத்திருந்தோம்.."  உத்ரா கதை சொன்னாள்..
"குட் ஐடியா.." மெச்சிப் போனான் ரவிச்சந்திரன்..
"ஐடியா என்னவோ குட்தான் சார்.. இவகிட்டத்தான் அது வொர்க்அவுட் ஆகலை.."
"ஏன்..? என்ன ஆச்சு..?"
"இவ நகத்தைக் கடித்தா.. தூ, தூன்னு துப்பினா.. நேரா பாத்ரூம் போய் கைவிரல் நகங்களுக்கு சோப்பு போட்டுக் கழுவி வேம்பு எண்ணை வாசத்தைக் கூடத் துரத்தியடிச்சுட்டு வெளியே வந்தா.. ஹாயாய் மறுபடியும் நகத்தைக் கடிக்க ஆரம்பிச்சுட்டா.."
"ஹா.. ஹா.."
'என்னைப் பற்றிக் கேலி பேசினா இவனுக்கு வெல்லக் கட்டிய சாப்பிடறதைப் போலவே இருக்குமே..'
உரக்கச் சிரித்தவனை ஓரக் கண்ணால் ரசித்துப் பார்த்தாள் நந்தினி.. உத்ராவும் விரித்தும் தங்களுக்குள் எதையோ கிசுகிசுத்துச் சிரித்துக் கொண்டார்கள்.. எதைப் பற்றி அப்படி ரகசியம் பேசிச் சிரிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.. அவளைப் பற்றியும் ரவிச்சந்திரனைப் பற்றியும் பேசுகிறார்களோ என்று சம்சயமாக இருந்தது..
'இருந்தாலும் இருக்கலாம்.. யார் கண்டது..?'
பசுமைக் குகை என்று நந்தினி வர்ணிக்கும் மூங்கில் செடிகளின் வளைவுப் பாதையில் கார் பயணிக்க.. பிரமிக்க வைக்கும் அந்த நொடிகளை வீடியோவில் பத்திரப் படுத்தினாள் உத்ரா..
கண்ணுக்குத் தெரியாத சாம்பல் வண்ணப் பனிப் புகையின் ஊடே கார் விரைந்தது.. உத்ராவுக்கு எல்லாமே பிரமிப்புதான்.. வினித்தும் அது போல உணர்ந்திருக்க வேண்டும்.. அதை வெளிக்காட்டிக் கொள்வது ஆண்களுக்கு அழகல்ல என்று நினைத்தானோ என்னவோ.. எனக்கு இதெல்லாம் சகஜமப்பா என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்..
'ஆண்கள்..!'
பச்சைப் பசேல் என உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்களின் பசுமை கூட சாம்பல் வண்ணத்தில் காட்சியளித்ததில் அதிசயப் பட்டுப் போனாள் உத்ரா..
"பாருங்களேன்.." குழந்தையாய் அவள் கூவ.. வினித் அவளைப் பார்த்து வைத்தான்..
'இவளையா பார்க்கச் சொன்னா..?' நந்தினிக்கு காரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..
'இந்த ஆண்கள் இருக்கிறார்களே.. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெண்களைப் பார்வையிடுவதைத்தான் கடமையாக வைத்திருக்கிறார்கள்..'
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வரிசையை ரசித்துப் பார்த்த உத்ராவிடம் வயநாட்டு அரண்மனையை நெருங்கி விட்டதை நினைவு படுத்தினாள் நந்தினி.. தோழியின் விழிகளில் தேங்கியிருந்த பயத்திற்கான காரணம் புரியாமல் புருவங்களைச் சுருக்கினாள் உத்ரா.. ரவிச்சந்திரனின் வீட்டிற்குப் போக இத்தனை பயம் அதற்கு..?
நந்தினியிடம் தனிமையில் அதைப் பற்றி வினவ வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் உத்ரா.. அவள் சென்னைக்குத் திரும்ப இரண்டு நாள்கள்தான் இருந்தன.. இதுவரை நந்தினியின் மனதில் என்ன இருக்கிறது.. வயநாட்டில் அவள் சந்திக்கும் இடர் பாடுகள் என்ன என்று  எதையுமே உத்ரா பேசித் தெரிந்து கொள்ளவில்லை.. கணவனுக்கு ஆற்றும் கடமையாய் தேநிலவு நாள்களை குதூகலமாக கொண்டாடுவதிலேயே கவனமாக இருந்து விட்டாள்.. இப்போது அப்படியிருக்க முடியாது.. தேநிலவு நாள்களைப் போதும் போதும் எனும் அளவில் திகட்டத் திகட்ட அனுபவித்தாகி விட்டது.. இனி தோழிக்கான கடமையை அவள் ஆற்றியாக வேண்டும்..
"ஏய்ய்.. இது நிஜமாவே அரண்மனைதாண்டி.."
பக்கத்தில் வினித் இருக்கிறான் என்பதையும் பறந்து பிரமிப்பை வெளிப் படுத்தி விட்டாள் உத்ரா.. அது போன்ற அரண்மனையை அவள் பார்த்ததே இல்லை.. நந்தினி அளவுக்கு அவள் பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை.. மத்தியதர வர்க்கம்தான்.. அப்பர் மிடில் கிளாஸ் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதி அவ்வளவுதான்..
"தஞ்சாவூரில இருக்கிற உங்க வீட்டைத்தான் அரண்மனைன்னு இத்தனை நாளாய் நினைச்சிருந்தேன்.. அடேங்கப்பா.. என்னைத் தப்பா எடுத்துக்காதே நந்தினி.. உங்க வீடு இந்த அரண்மனையின் தோட்டத்தில் பாதிகூட இருக்காது.."
"ஹா.. ஹா.. நல்லாச் சொல்லுங்க உங்க பிரண்ட் கிட்ட.. எதற்கெடுத்தாலும் பெட்டியைத் தூக்கறா.."
என்னவோ கட்டின புருசன் பிராது கொடுப்பதைப் போல புகார் செய்தபடி வயநாட்டு அரண்மனையின் வாசலில் காரை நிறுத்தி சங்கேதமாக ஹாரனை ஒலிக்க வைத்தான் ரவிச்சந்திரன்..
"கோட் வெர்டு மாதிரி இது கோட் ஹாரனா..?" அதற்கும் வியந்தாள் உத்ரா..
வினித் வாயைத் திறக்கவே இல்லை..
அடுத்தவரின் வீட்டை மனைவி புகழ்வதை எந்தக் கணவன்தான் விரும்புவான்..? அனைத்துக் கணவன் மார்களும் அவரவரின் மனைவிக்கு ஹீரோவாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுவார்கள்..
காரின் ஹாரன் ஒலியில் கேட்டருகே இருந்த செக்யூரியிட்டியின் அறையில் பதட்டம் நிலவியது.. கேட்டைத் திறக்க ஓர் செக்யூரிட்டி ஓடினான்.. இன்னொருவன் ஓடிவந்து காரின் அருகே குனிந்து சல்யூட் வைத்தான்..
"அண்டா கசம் அபூகா கசம் திறந்திடுசே.." உத்ரா வேடிக்கையாகச் சொன்னாள்..
அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் அரண்மனையின் கோட்டைக் கதவுகள் போன்ற பிரம்மாண்டமான கேட் திறந்து வழி விட்டது..
"அட திறந்திருச்சு.." உற்சாகமானாள்..
"ஆக... எங்கள் அரண்மனையை அலிபாபா குகையாக்கிட்டிங்க.." ரவிச்சந்திரன் சிரித்தபடி காரை உள்ளே செழுத்தினான்..
"கரெக்ட் சார்.." வினித் இப்போது வாய் திறந்து ரவிச்சந்திரன் சொன்னதை ஆமோதித்து விட்டு சிரிப்பில் கலந்து கொண்டான்..
'இந்த ஆண்கள் இருக்கிறார்களே..'
நந்தினி தலையை ஆட்டியபடி உத்ராவைப் பார்த்தாள்.. அவளும் தலையைக் குலுக்கிக் கொண்டிருந்தாள்.. மனதுக்குள் நந்தினி சொன்ன வார்த்தைகளைத்தான் அவளும் சொல்லியிருக்கிறாள் என்பதில் புரிந்து கொண்ட உணர்வுடன் தோழிகள் இருவரும் ரகசியமாக கண்சிமிட்டிச் சிரித்துக் கொண்டார்கள்..
காரை விட்டு இறங்கும் போது உத்ராவின் இந்தச் சிரிப்பு நிலைத்திருக்க வேண்டுமே என்ற கவலையுடன் தான் நந்தினி இறங்கினாள்.. இரண்டு நாள்கள்.. நாற்பத்தியெட்டு மணி நேரம்.. அவள் உத்ராவை அடை காக்க வேண்டும்.. உத்ராவின் கள்ளமற்ற வெள்ளைச் சிரிப்பு சிறிதளவும் குறைந்து விடாமல் பாதுகாத்து சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும்..
'முடியுமா..?' அவளுக்கு ஏக்கமாக இருந்தது..
காரை டிரைவரிடம் ஒப்படைத்து விட்டு வந்த ரவிச்சந்திரன் கவலையுடன் இருந்த நந்தினியைப் பார்த்ததும் கேள்வியாக புருவங்களை உயர்த்தினான்..
'போடா.. நேரம் காலம் தெரியாமல் மயக்காதே..' நந்தினி முகத்தில் சிணுங்கலைக் காட்டினாள்..
"என்னடி..?" அவன் முணுமுணுத்தான்..
"பயமாய் இருக்கு.." குழந்தையாய் சொன்னாள் நந்தினி..
"ம்ப்ச்.." என்றான் ரவிச்சந்திரன்..
"இதுவரைக்கும்தான் அடம் பிடிச்ச.. இப்பத்தான் என் மேல காதல் இருக்குங்கிறதை ஒப்புக்கிட்டயே.. இனிமேலும் பயந்தால் எப்படிடீ..? இது உன் வீடு..! மனசிலாயி.. ஐந்து விரல்களும் ஒன்றாய் இருப்பதில்லை.. மனிதர்களும் அப்படித்தான்.. வேறுபட்ட குணங்களோடு இருப்பார்கள்.. சமாளித்து ஜெயிக்கத் தெரியலைன்னா நீ ரவிச்சந்திரனோட பெண்டாட்டின்னு சொல்லிக்கிறதில அர்த்தமில்ல.. என் பெண்டாட்டி பயந்து நடுங்கக் கூடாது..  எது வந்தாலும் எதிர்த்து நிற்கனும்.. போராடனும்.. ஜெயித்துக் காட்டனும்.. மனசிலாயி..?"
"மனசில் ஆகிறது இருக்கட்டும்.. எப்ப நான் உங்க பெண்டாட்டியானேனாம்..? இன்னும் நமக்குக் கல்யாணமாகலை பாஸ்.. இதை நீங்க மனசிலாயி.."
"ஸோ... உனக்கும் எனக்கும் மேரேஜான பின்னாடிதான் நீ எனக்குப் பெண்டாட்டி... அப்படி ஆகலைன்னா வேற யாரோ ஒருத்தனுக்குப் பெண்டாட்டி..?"
ரவிச்சந்திரன் கண்கள் இடுங்கக் கேட்ட கேள்வியில் நந்தினியின் முகுதுத் தண்டு ஜில்லிட்டு விட்டது... காதலென்று ஆன பின்பு இது போன்ற உள் குத்தல்கள் அவளைத் தாக்காமல் பதுங்கியிருந்தன.. இப்போது அவள் வாய் விட்டதில் வெளிப் பட்டு விட்டன..
"ரவி.."
"இஃது.. இப்படியே மெயின்டெயின் பண்ணு.. அதுதான் உனக்கு நல்லது.. நான் உன்னுடைய ரவிச்சந்திரன்.. பாஸில்லை.. நீ என் வொய்ப்.. தாலி கட்டினால்தான் பெண்டாட்டி என்கிறதெல்லாம் மத்தவங்களுக்கு.. எனக்கில்லை.. இந்த ரவிச்சந்திரன் அத்தனை எளிதாக ஒன்றை நினைத்து விட மாட்டான்.. நினைத்து விட்டால் அதில் மட்டுமே நிலைத்து நிற்பான்.. கடைசி வரைக்கும் மாற மாட்டான்.. மனசிலாயி.."
மனசில் ஆகாது என்று சொல்ல அவளுக்கு என்ன பிராந்தையா பிடித்திருக்கிறது..?
பூம் பூம் மாடு போல ஆகட்டும் எனும் விதமாக தலையை ஆட்டித் தப்பித்தாள்.. நந்தினி திடிர் புத்திசாலியாக.. உத்ராவோ முட்டாளாக மாறி..
"அங்கே பாருங்களேன்.. குதிரைகளுக்குத் தனித்தனி லாயம் இருக்கிறதைப் போல ஒவ்வொரு காருக்கும் தனித்தனி போர்டிகோ ரூமும், ஷட்டர்களுமா இருக்கு.. ஹப்பா.. சீனப் பெருச்சுவர் போல இல்ல வரிசையா இருக்கு.." என்று வினித்திடம் சொல்லி விட்டு அவனுடைய நெருப்புப் பார்வைக்கு ஆளானாள்.. ம்ஹீம்.. பெண்கள் எதைப் பேசினாலும் யோசித்துத்தான் பேசியாக வேண்டும் என்பது விதி..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -180
எண்ணியிருந்தது ஈடேற -180
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-180.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-180.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy