எண்ணியிருந்தது ஈடேற -179

179 தாள முடியாத தாபத்துடன் அவள் காதோரமாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்.. ' ம்ம்ம் ' என்பதைத் தவிர வேறு எதையும் சொ...


179
தாள முடியாத தாபத்துடன் அவள் காதோரமாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்.. 'ம்ம்ம்' என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் நந்தினி.. அவளுடைய காதல் விவகாரத்தை மேகநாதன் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம் ஒரு பக்கம் அவள் மனதை போட்டு அரித்துக் கொண்டிருந்தது.. அதை ரவிச்சந்திரனிடம் சொன்னால் அவன் அவளை உண்டு, இல்லையென்று பண்ணி விடுவானே என்ற பயம் அதைவிட அதிகமாக இருந்தது.. அவனைக் காதலிப்பதை மேகநாதன் எப்படி மறுப்பார் என்று கிளம்பி விடுவான் அவன்..
கேரளாவில் அவன் பெரிய பிஸினெஸ் ஸ்டாராக இருக்கலாம்.. கோடிஸ்வர ராஜகுமாரனாக இருக்கலாம்.. தஞ்சாவூரின் மேகநாதனுக்கும் அப்படியே இருப்பானா..?
இதை அவனிடம் சொல்ல முடியுமா..?
"என்னடி யோசிக்கிற..?" தாபம் சொட்டும் குரலில் கெஞ்சலாக கேட்டான் அவன்..
"ம்ப்ச்.. சும்மா.."
"சும்மான்னுதான் தெரியுமே.. நீயெல்லாம் சீரியஸா திங்க் பண்ண ஆரம்பிச்சா உலக உருண்டை ஆப்போசிட் போலில சுத்த ஆரம்பிச்சிரும்.. ஹா.. ஹா.."
'அப்படியே நான் இருந்திருக்கக் கூடாதா..?'
காதல் எனும் மாய வலைக்குள் அகப்படாதவளாக.. சுதந்திர வானில் விட்டுச் சிறகடிக்கும் சிட்டுக் குருவியாக.. தளைகளற்று விட்டு விடுதலையான புள்ளி மானாக.. கவலைகளற்ற பழைய நந்தினியின் கலகலப்போடு என்று அவள் வலம் வருவாள்..?
'உள்ளம் நிறைவிலோர்
             கள்ளம் புகுந்திடில்..
    உள்ளம் நிறைவாமோ..'
இது கள்ளம் புகுந்து விட்ட உள்ளம்.. இதைச் சுமந்து மேகநாதனின் முன் நிற்பதென்பது வெகு சிரமம்..
"என் நந்தினி.." அவளது மூக்கைத் தன் மூக்கால் உரசி விரக தாபத்தை வெளிப்படுத்தினான் ரவிச்சந்திரன்..
அவனை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் திணறிப் போனால் மாலினி.. அவன் மீதான காதலை உணர்ந்து அதை அவனிடம் சொல்ல முடியாத
இரண்டு நாள்களில் நரக வேதனையை அனுபவித்தவள் நந்தினி..
அதிலிருந்து அவன் மீட்காமலிருந்திருந்தால்..?
நினைத்துப் பார்க்கவே அவளது நெஞ்சம் நடுங்கியது.. அவனுக்காக ஏங்கியவள்.. அவன் பக்கத்தில் வந்தால் தன்னை ஒப்படைக்காமல் பின்னடைவது எந்த விதத்தில் நியாயம் என்று அவன் கோபப் பட்டான்.. அவனது கோபத்தில் அவள் தவித்தாள்..
அவனிடம் அவளை ஒப்படைத்து விடுவதென்பது அத்தனை எளிதான ஒன்றா என்ன..? அடைக்கலம் என்று அவனிடம் அடைக்கலம் புகுந்திருந்த போது வெகு இயல்பாக அவனிடம் தன் பாதுகாப்பை ஒப்படைத்தவளாக அவன் மார்பில் சாய்ந்து கண்மூடி அவன் கரம் பற்றிப் பின் தொடர்ந்தாள் அவள்.. அப்போது அவன் அவளுடைய பாதுகாவலன்.. அவனிடம் அவளை ஒப்படைப்பதும் அவனைக் கேள்வியே கேட்காமல் பின் தொடர்வதும் எளிதாக இருந்தது..
இப்போது அவன் அவளுடைய பாதுகாவலன் மட்டுமல்ல.. காதலனும் கூட.. காதலுக்கான கடமையை ஆற்று என்று அவளைக் கட்டாயப் படுத்துகிறான்.. அவளால் அதைச் செய்ய முடியவில்லையே.. அவன் மீது காதல் உண்டு.. ஆசை உண்டு.. அவனுடன் கலந்து விடும் தாபமும் உண்டு..
ஆனால் அவளால் எல்லைகளைக் கடக்க முடியவில்லையே.. ஏன்..?
"ரவி.." அவள் தழதழத்தாள்..
"என் நந்தினி..!" அவள் பெயர் சொல்லி அழைத்ததில் அவன் பரவசப் பட்டுப் போனான்..
"நான் பட்டிக்காடு ரவி.. உங்களோட எதிர் பார்ப்புகளுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது.."
"அடித்தேன்னா தாங்க மாட்டடி.."
"இதையெல்லாம் யோசிச்சுத்தான் இதுவரைக்கும் ஐயா அடி மேல அடியாய் கொடுத்தீங்களாக்கும்..?"
"இனி அடிக்க மாட்டேன்.."
"ஏன்னா நான் காதல் சொல்லிட்டேனில்ல..? அதனால என் கன்னம் இனிப் பழுக்காது.."
"அப்படின்னு யார் சொன்னது..?"
"ஏனாம்.. நீங்கதானே இனி அடி கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க.."
"அடித்தால்தான் கன்னம் பழுக்குமா..?"
அவன் சட்டெனக் குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.. ஆழப் பதிந்த அந்த முத்தத்தில் அவள் கிறங்கிப் போனாள்..
"முத்தம் கொடுத்தாலும் கன்னம் பழுக்கும்டி.."
நந்தினியால் பேச முடியவில்லை.. புயலில் சிக்கி விட்டத் தளிர் கொடி போல நடு நடுங்கினாள்.. அவன் ஒன்றும் புதிதாய் அவளைத் தொட்டு விடவில்லை.. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கட்டித் தழுவுவான்.. முத்தம் பதிப்பான்.. அவள் அவனுடைய காதலை ஏற்காத பொழுதும் அவனுடைய காதலில் அவன் உறுதியாக இருந்தான்.. நீ என்னுடையவள் என்று வெறியாக இருந்தான்.. நந்தினிதான் அவனுடைய காதலின் உறுதி பற்றிய சந்தேகத்துடன் விலகுவதிலேயே முனைப்பாக இருந்தாள்..
இப்போது அப்படி விலக முடியவில்லையே.. அதுதான் அவளுக்குப் பயமாக இருந்தது.. அவன் தொட்டால் அனல்மேல் உருகிக் கரைகிறாளே.. இது எதில் போய் முடியுமோ..
"ரொம்பவும் யோசிக்காதே.. இந்தக் குட்டித் தலை தாங்காது.."
செல்லமாக அவளது தலையோடு தலை மோதிச் சிரித்தான் ரவிச்சந்திரன்.. மயங்கிப் பார்த்தவளிடம் இமையைச் சிமிட்டிக் கண்ணடித்து சோதித்தான்.. அந்தச் சோதனையையே தாங்க முடியாமல்.. 'குப்' பென்று உடல் முழுவதும் கிளர்ந்து எழுந்த உணர்வுப் பேரலைகளில் உருள ஆரம்பித்தாள் நந்தினி.. அடுத்த சோதனையாக..
"என்னடி.. இப்போதுதான் பர்ஸ்ட் டைம் என்னைப் பார்க்கிறதைப் போலப் பார்த்து வைக்கிற..? ம்ம்ம்..?" என்று புருவங்களை வசீகரமாக உயர்த்தி இறக்கினான்..
நந்தினி உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றாள்.. பலகோடி பட்டாம் பூச்சிகள் ஒன்று சேர்ந்து அவளது வயிற்றுக்குள் பறக்கும் இன்ப அவஸ்தையில் சிக்கித் திக்கு முக்காடினாள்..
"ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ஸஸை உன் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதே.." அவள் காதைப் பிடித்துத் திருகினான் ரவிச்சந்திரன்..
"ஐ ஆம் யுவர்ஸ்.. ஆல்வேஸ் யுவர்ஸ்.. இதை மைண்டில் ரிகார்டு பண்ணிக்க.. இப்படி நடுங்க மாட்ட.." அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்..
அவன் மீதிருந்து வெளிப்பட்ட நறுமணத்தில் நிலை குலைந்து கொண்டிருந்தாள் நந்தினி.. அவனுக்கே உரித்தான நறுமணம் அது.. அவளை மயக்கத்தில் ஆழ்த்தும் நறுமணம்..
அவளது விழிகளில் வெளிப்பட்ட மயக்கத்தில் ரவிச்சந்திரன் அவள் மீது சாய்ந்தான்..
"ப்ளீஸ்.. வேண்டாம்.." நந்தினி தடுமாற்றத்துடன் மறுத்தாள்..
"வாட்'ஸ் தி மீனிங் தட் 'வேண்டாம்..' ம்ம்..? நான் உனக்கு வேண்டாமா..?" ரவிச்சந்திரன் ரகசியக் குரலில் வினவினான்..
நந்தினிக்குள் சுகமான ஓர் இதம் பரவியது.. அவஸ்தைகளை உள்ளடக்கிய இதம் நிரம்பிய அந்த இம்சைப் பொழுதுகளை அவள் மனமார விரும்பி வரவேற்றாள்.. அது எப்படி என்றுதான் அவளுக்குப் புரியவில்லை.. வேண்டாம் என்று உதடுகள்தானே சொல்கின்றன..? மனம் வேண்டும் என்று குதியாட்டம் போடுகின்றதே.. அது ஏன்..?
"இப்படியெல்லாம் பேசக் கூடாது.." அவள் சிணுங்கினாள்..
அவளது சிணுங்கலை அவன் ரசித்தான்.. மனதின் உணர்வுகளை மறைக்கத் தெரியாத பேதை அவள்.. அவன் மீதான காதலில் அவள் தவிப்பதைக் காண்பதற்கு அவனுக்குச் சுகமாக இருந்தது.. பிள்ளை மனம் கொண்ட கிள்ளையவளின் மனதை அவன் வென்று விட்ட மமதை அவனது நெஞ்சில் விரவியது..
"எப்படியெல்லாம் பேசக் கூடாது..?"
"நீங்க வேண்டாம்ன்னு நான் சொல்வேனா..?"
"சொன்னியே.."
அவன் நினைவு படுத்தியதில் அவளது முகம் சிணுங்கியது.. அவனை அவள் மறுத்த நாள்களை நினைவு கூர அவள் பிரியப்படவில்லை.. அவனுக்காக உருகும் இன்றைய நாள்களில் நிலைத்து நிற்கவே விரும்பினாள்..
"என்னத்தைச் சொன்னேனாம்..? இவர் பெரிசா என்னத்தைக் கேட்டுட்டாராம்..? நான் சொன்னதை யெல்லாம் கேட்டு விடறதைப் போலத்தான் பேச்சு.."
"சொல்லிப்பாருடி.. அப்பத் தெரியும்.."
"என்னன்னு..?"
"நான் கேட்கிறேனா.. இல்லையான்னு.."
அவன் கேட்டபான் என்றுதான் அவளுக்குத் தெரியுமே.. அவள் மீது ஆணை வைத்து விட்டாள் என்பதற்காக மறைவிடத்தில் நின்றவனாயிற்றே..
'இரும்புக்கை மாயாவி ஞான் எது பறஞ்ஞாலும் கேட்பானல்லோ.. என்ன ஒந்நு.. ஞான் அதைக் காதலோடு பறஞ்ஞனும்.. கேட்டோ..'
வினித்தும் உத்ராவும் சிரிக்கும் சிரிப்பொலி அவர்களின் காதுகளில் விழுந்தது.. அவசரமாக அவன் கைபிடிக்குள் இருந்து விலகி வெளிப்பட்டாள் நந்தினி..
"இவ்வளவு ஏர்லியரா ரிட்டர்ன் ஆகனுமா என்ன..?"
ரவிச்சந்திரனின் கோபத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.. காதலுக்கான தனிமைக்கு இடையூறு நேர்ந்தால் நியாய, அநியாயங்கள் அங்கு மறக்கப் படுகின்றனவே..
"உச்சிப் பொழுதாகிச்சு பாஸ்... புலரியில காட்டுக்குள்ள போனவங்க இப்பத்தான் வந்திருக்காங்க.."
"கோலிக்கோடில புலரியையும், உச்சியையும் எப்படிடீ கால்குலேட் பண்ற..?"
"டைம் பார்த்துத்தான்.. போவீங்களா.."
"நீ இல்லாமலா..? வா, வா.. சேர்ந்தே ஓடலாம்.."
"ஓடனுமா..? எதுக்கு..?"
"அதுதானே உனக்குப் பிடிக்கும்.."
'இவன் அதை விடவே மாட்டானா..' அவளுக்கு கோபம் வந்து விட்டது.. அவனை இமைக்காமல் பார்த்தாள்.. அவனோ ஒற்றை இமையை மட்டும் சிமிட்டி அவளைக் கிறங்கடித்தான்..
'ஈ மன்மதன் இங்ஙன மயக்கினா.. ஞான் எங்ஙன வெப்பராளம் கொள்வதாம்..'
கோபத்தில் சிவக்க வேண்டிய நந்தினியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.. அவனிடம் காதல் சொல்லாத காலத்தில்... அவன் அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்த தருணங்களிலேயே அவளால் அவன்மீது கோபம் கொள்ள முடிந்ததில்லை..
'இப்பக் கோபப் பட்டுட்டாலும்.. கழுதையில.. சும்மாவே ஈ மனுசனக் கண்டா மனசு ரெக்கை கட்டிப் பறந்து தொலைக்கும்.. இந்த லட்சணத்தில மனசுக்குள்ளே காதல் வந்து அது இவனுக்குத் தெரிஞ்சும் தொலைச்சிருச்சு.. பின்னிப் பிணையறான்.. கட்டின புருசன் மாதிரி நொடிக்கொரு தரம் கண்ணடிச்சுக் கவிழ்க்கிறான்.. இதில கவிழாம நிமிர்ந்து நின்னு என்னத்தைச் சாதிக்கப் போறேனாம்..?'
கணவன் கவிழ்க்க முனையும் போது கவிழ்வதைப் போலக் கவிழ்ந்து அவர்களைக் கவிழ வைத்து விடும் வித்தை தெரிந்தவர்கள் இந்தியப் பெண்கள்.. மயங்கி மயக்குவதில் கை தேர்ந்தவர்கள்.. அந்த சூட்சுமங்கள் எவருக்கும் சொல்லி வருவதில்லை.. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை..! அது தானாய் வரும் கலை..!
நந்தினி இயல்பாகவே சொல் பேச்சுக் கேட்க மாட்டாள்.. இது பற்றிய பேச்சுகள் என்றால் "அய்யே.." என்று முகம் கோணி இடத்தைக் காலி செய்து விடுவாள்..
"பிரியாணி மேல காட்டற இண்ட்ரெஸ்டை லவ் மேலயும் காட்டேண்டி.." அவளுடைய தோழிகள் கிண்டல் செய்வார்கள்..
காதலைப் பற்றிய அரிச்சுவடி தெரியாதவளுக்கு ஆனானப்பட்ட ஆணழகன் காதலனாக கிடைத்திருக் கிறான்.. அவளுடைய கல்லுரித் தோழிகளுக்கு இது மட்டும் தெரிந்தால் போதும்..
"உன்னையும் ஒருத்தன் விழுந்து விழுந்து காதலிச்சிருக்கான்ங்கிறதையே நம்ப முடியலை.. இதில அவன் உலகம் முழுக்கத் தெரிஞ்ச கோடிஸ்வரன்னு வேற சொல்ற.. எல்லாம் நேரம்டி.. உனக்கு மச்சம்டி.." என்று வயிறெரிந்திருப்பார்கள்..
ரவிச்சந்திரன் அவள் முகத்தில் மூக்கை உரசினான்..
"ஸ்ஸ்ஸ்.. உத்ராவும், அண்ணாவும் பக்கத்தில் வந்துட்டாங்க.." நந்தினி எச்சரித்தாள்..
ரவிச்சந்திரனிடம் வினித்தைப் பற்றிப் பேசும் போது வினித் அண்ணா என்று கூடச் சொல்ல மாட்டாள்.. 'அண்ணா' மட்டும்தான் அப்போதுதான் அவன் பேசாமல் இருப்பான்..
'இருந்தாலும் இவனுக்கு இத்தனை பொஸஸிவ்னெஸ் இருக்கக் கூடாது..' மனத்தாங்கல் போல பெருமைப் பட்டுக் கொண்டாள்..
"ஹனிமூன் கப்புள் போலவாடி இருக்காங்க..? போன வேகத்தில திரும்பிட்டாங்களே.."
"இப்பத்தான் புலரி முதல் உச்சி வசைன்னு காலக் கணக்குச் சொன்னேன்.. மனசில ஆகலையா..?"
"உன் வாய் இருக்கே.. வாய்.."
ஆசையுடன் அவன் வாயைப் பார்க்க முத்தம் கொடுத்து விடுவானோ என்ற பயத்துடன் தள்ளி நின்று கொண்டாள் நந்தினி..
"எஸ்கேப்..?" அவன் முறைத்தான்..
"கிரேட் எஸ்கேப்.." அவள் அழகு காட்டினாள்..
"உன் பிரண்டும் வினித்தும் வந்துட்டாங்க என்கிற தைரியம்..?"
"ஆமாம் பாஸ்.."
"பாஸாடி நான் உனக்கு..?"
"என் ஆசை மச்சான்தான் நீங்கள் எனக்கு.. பட்ஷே.. மத்தவங்க முன்னாடி இதே வாய் வந்து தொலைச்சிட்டா என்ன பண்றது..? பாஸீன்னு சொல்லி மெயின்டெயின் பண்ணிக்கிறது பெட்டர் பாஸ்.."
"உன்னை.."
"தள்ளியே நில்லுங்க.. உத்ரா கமிங்"
"இவ்வளவு சீக்கிரமா வந்திருக்க வேண்டாம்.."
"உச்சிப் பொழுது மச்சான்.. லன்ச் டைம்.."
"என்னடா.. என் ஆசைக் காதலி இவ்வளவு நேரமா ஃபுட்டைப் பத்தி வாயே திறக்கலையேன்னு பார்த்தேன்.. உனக்குப் பசி வந்திருச்சுன்னு சொல்லு.."
"வயிறிருக்கிற எல்லோருக்கும் பசி வரத்தான் செய்யும்.."
விட்டுக் கொடுக்காமல் வாயடித்த அந்த வாயாடியின் மூக்கைத் திருகி வார்த்தையாட வேண்டும் என்று ஆசை பொங்கியது ரவிச்சந்திரனுக்கு.. வினித்தும் உத்ராவும் பக்கத்தில் வந்து விட்டதால் பல்லைக் கடித்தபடி பொறுமை காத்தான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -179
எண்ணியிருந்தது ஈடேற -179
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-179.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-179.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy