எண்ணியிருந்தது ஈடேற -178

178 "நேற்று இல்லாத மாற்றம்              என்னது.. ?     காற்று என் காதில் ஏதோ              சொன்னது.." வாய் விட்டுப...


178


"நேற்று இல்லாத மாற்றம்
             என்னது..?
    காற்று என் காதில் ஏதோ
             சொன்னது.."
வாய் விட்டுப் பாடிய நந்தினிக்கு கைகளை விரித்துத் தட்டாமாலை சுற்ற வேண்டும் போல இருந்தது.. பெல்ட் மன்னனுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கும் செய்தியைக் கேள்விப் படும் வரை எத்தகைய உற்சாகத்துடன் இருந்தாளோ.. அத்தகைய உற்சாகத்திற்கு அவள் திரும்பியிருந்தாள்.. பாரங்களற்ற மனது விட்டுச் சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் உல்லாச மனப்பான்மையுடன் சிறகடித்துப் பறக்கத் துடித்தது.. உலகம் வண்ணமயமாகி அவளது ஆனந்தத்தில் ஆனந்தத்துடன் பங்கேற்றது..
"இதுதான் காதல் என்பதா..?"
தனக்குள் கேட்டுக் கொண்டவள் களுக்கென்று சிரித்தாள்.. அவளுடைய சிரிப்புச் சப்தத்தைக் கேட்டு மிரண்டு தலையைத் திருப்பிப் பார்த்தது ஒரு மான்.. அதன் கண்களில் அச்சம் தெரிந்தது..
"ஹேய்.. நானும் உன் போலதான்.." நந்தினி கையை ஆட்டிக் குதித்தாள்..
அவள் பேசாமல் இருந்திருந்தால் அந்த மான் ஓடாமல் இருந்திருக்கும்.. அவள் அதனுடன் பேச்சு வார்த்தையில் இறங்கியதில் அது அவளை விடத் துள்ளிக் குதித்து ஓடோடி விட்டது..
"மானைத் துரத்திட்டயா..?" ரவிச்சந்திரன் அவளுடைய காதைத் திருகினான்..
"என் காதைத் திருகறதுக்கு எப்படா சான்ஸ் கிடைக்கும்ன்னு காத்திருப்பீங்களோ..? வலிக்குது பாஸ்.." நந்தினி கண்ணிமைகளையும் மூக்கையும் சுருக்கி அவனைக் கவர்ந்தாள்..
துறுதுறுப்பு நிரம்பிய அவளது அழகில் ஈர்க்கப் பட்டவனாக அவளது தோளில் கை போட்டுத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. மறுப்புச் சொல்லாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு இசைந்து கொடுத்து அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கிக் கொண்டாள் நந்தினி.. அவளது அந்த இணக்கம் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது..
அதற்கு முன்னாலும் அவள் அவனைத் தொட்டுப் பேசியிருக்கிறாள்தான்.. மன பாரம் அதிகமானால் அவனிடம் அடைக்கலம் புகுந்து அவன் மார்பில் முகம் புதைத்து அழுதிருக்கிறாள்தான்.. அவையெல்லாம் பாதுகாவலனிடம் ஆறுதல் தேடும் தொடுகை.. ஒரு காதலியாய் காதலனைத் தொடும் தொடுகை இருப்போதுதான்..
அவன்மீதான அனைத்து பயங்களையும் சஞ்சலங்களையும் உதறிவிட்டு அவன் மீதான காதலை மட்டும் மனதல் நிரப்பி அவன் கழுத்தைக் கைகளால் வளைத்து ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டான் ரவிச்சந்திரன்.. இமைமூடி அவனது முத்தத்தை அவள் ஏற்றுக் கொண்ட விதம் அலாதியான அழகைக் கொண்டதாக இருந்தது..
"நந்தினி.." போதையுடன் முணுமுணுத்தான்..
மது அருந்தாமலே போதை தரும் வஸ்து காதல் ஒன்றுதான்..
"ம்ம்ம்.." நந்தினி முணுமுணுத்தாள்..
"ஐ லவ் யு.."
"ஐ லவ் யு டூ.."
இது போதும் என்று இருந்தது ரவிச்சந்திரனுக்கு.. அவனுடைய காதலை ஏற்றுக் கொள்ளாதவளின் வாயிலிருந்து நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்ற வார்த்தைகள் வந்து விட்டன.. இதற்கு மேல் அவனுக்கு வேறு என்ன வேண்டும்..?
அவளைத் தழுவிக் கொண்டவனின் ஆவேச முத்தங்களில் மூழ்கி எழுந்தா நந்தினிக்கு மூச்சுத் திணறியது..
உத்ராவும் வினித்தும வேறு பக்கமாக உலா போய் விட்டார்கள் போலும்.. கண்களில் தென்படவே இல்லை.. அன்று அவர்கள் முதங்காவிற்கு வந்திருந்தார்கள்..
வழியில் ஆதிவாசிகள் வசித்த குகைகளைப் பார்த்தார்கள்.. அதன் தொன்மை மாறாத பழமையின் அழகோடு அவை இருந்தன.. சிலவற்றை சிதைத்துப் புதுப்பிக்காமல் அவற்றின் இயல்போடு விட்டு விட வேண்டும்.. ஆதிவாசிகள் வாழ்ந்த குகைகள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை..
முதங்காவில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வந்து கொண்டிருந்தன.. மான்களும், யானைகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வனவியல் பூங்காவைப் பார்த்த நந்தினி உதட்டைக் குவித்து..
"வாவ்.." என்று கண்களை விரித்தாள்..
அவள் 'வாவ்' சொன்ன அழகில் சொக்கிப் போன ரவிச்சந்திரனுக்கு அதற்கு ஒரு 'வாவ்..' சொல்ல வேண்டும் போல இருந்தது..
"கூண்டுக்குள் அடைக்காம ஃப்ரீயா விட்டிருக்காங்க பாருங்க.. இதுக்காக கேரளா கவர்ண்ட்மெண்டைப் பாராட்டியே ஆகனும்.. எங்க தமிழ்நாட்டில் ஃப்ரீயா விடு.. ப்ரீயா விடுன்னு பாட்டுப் பாடத்தான் செய்வோம்.. செய்கையில காண்பிக்க மாட்டோம்.."
"உங்க தமிழ்நாடா..? பல்லை உடைச்சிடுவேன்.."
"ஹப்பா..! என்ன ஒரு மேல்சாவிசம்..! பல்லை உடைக்கச் சுத்தியலும் கையுமா அலைவீங்க போல இருக்கு.. இதுக்குத்தானே உங்களைக் காதலிச்சேன்..? உங்களிடம் பல்லைக் காட்டிட்டா அந்தப் பல்லை உடைச்சுரனும்னு நேர்த்திக்கடன் வைச்சிருக்கீங்களா..?"
"ஹா.. ஹா.. இவர் என்னிடம் பல்லைக் காட்டிட்டாலும்.."
"இப்ப என்ன செய்துக்கிட்டு இருக்கேனாம்..?"
"வாயைக் குறைடி.."
"முடியாததைச் சொல்லக் கூடாது மச்சான்.."
"மச்சான்..?"
"இட் மீன்ஸ் மாமு.."
"மாமு..?"
"இதுவும் புரியலையா..? உங்களைப் போய் காதலிச்சேன் பாருங்க.. என்னைச் சொல்லனும்.."
"என்னடி அலுத்துக்கிற..?"
ரவிச்சந்திரன் நந்தினியின் தோளைப் பிடித்து இழுத்து அருகிலிருந்த மரத்தின் மீது சாய்த்தான்... அவள் விடுபட முடியாதபடி இரு கைகளையும் மரத்தில் ஊன்றி நடுவில் அவளை வைத்தான்.. அவள் மீது சாய்ந்து முகம் பார்த்தான்..
"இதுதான் பனிஷ்மெண்டா..?" நந்தினி சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்..
"யெஸ்.. காதல் வெர்ல்டில இப்படித்தான் பனிஷ் பண்ணுவாங்க.."
"எவங்க..? நம்ம கேரளத்து பிஸினெஸ் ஸ்டார் ரவிச்சந்திரனுங்களா..?"
"அவனைத்தானேடி நீ காதலிக்கிற..?"
ரவிச்சந்திரன் அவளது முகத்தின் மீது முகம் வைத்துக் கவிழ்ந்து வாசம் பிடித்தான்.. நந்தினிக்குள் உணர்வுப் பேரலையொன்று எழுந்து ஓங்கி அடித்தது.. அதன் பிரவாகத்தில் மூழ்கி மூச்சுத் திணற அவள் இழுத்துச் செல்லப் பட்டாள்..
"ஹம்மா.." பலவீனமான குரலில் முணுமுணுத்தாள் நந்தினி..
அவளது கைகள் அவன் கழுத்தை வளைத்துப் பின்னந்தலை முடியை இறுக்கிப் பிடித்தன.. நடுங்கிய அவளது பூவுடலை தன் உடலின் அதிர்வால் உணர்ந்தவனுக்குள் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.. அவன் மூர்க்கமானான்.. அவளுக்குள் புதைந்து இததோடு இதழ் பதித்தான்.. நந்தினியின் நடுக்கம் அதிகரித்தது..
"யு ஆர் மை லவ் நந்தினி.."
"ம்ம்ம்.."
"ஐ நீட் யு.."
"ம்ம்ம்.."
"என் ஆயுள் முழுக்க.. ஏன்.. அதற்குப் பின்னாலும் நீ வேணும்டி.."
"ம்ம்ம்.."
நந்தினிக்குள் மோகத்தீ பற்றியிருந்தது.. அதன் சுழற்சியில் அவள் சுழற்சியில் அவள் சுழன்றாள்.. பதில் பேச வார்த்தைகள் வரவில்லை.. வாய் திறந்தால் முணுமுணுப்பு மட்டுமே வந்தது.. அவனது பின்னந்தலை முடியைப் பிடித்திருந்த கரங்கள் இறங்கி முதுகில் பரவின.. அவன் தோள் வளைவில் முகம் புதைத்தாள்..
"எப்படியோ.. என்னை ஜெயிச்சுட்டிங்கள்ல.."
"ஈஸிட்..? நீ என்னை ஜெயிச்சுட்டேனில்ல நான் நினைத்துக்கிட்டிருக்கேன்.. ஐ லவ் யுடி கண்ணம்மா.."
"எத்தனை முறைதான் ஐ லவ் யு சொல்வீங்க.. வாய் வலிக்காதா..?"
"ஊஹீம்.. இனிக்கும்.."
பிரபாகரன் அவளது முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான்.. விழிமூடி நின்றிருந்தவளின் இமைகளில் முத்தமிட்டான்.. பட்டுப் போன்ற மென்மை என்று வர்ணித்தபடி கன்னத்தில் முத்தமிட்டான்.. அவன் முகத்தில் முகம் புரட்டிச் சிணுங்கியவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்..
நந்தினி மயங்கிப் போனாள்.. ஆழிப் பேரலைகளின் ஆழத்தில் அமிழ்வதைப் போன்ற ஓர் உணர்வு.. குளிர் நிரம்பிய கோழிக்கோடின் கானகமும், தனிமையும், அவனது ஸ்பரிசமும், அவளுக்குள் எழுப்பி விட்ட கிளர்ச்சி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாததாக இருந்தது..
மான் ஒன்று அவர்களைக் கடந்து ஓட.. நந்தினி அந்த மானைப் பார்க்கும் ஆர்வத்தில் முகம் திருப்பினாள்..
"ம்ப்ச்..." கண நேர விலகலையும் பொறுத்துக் கொள்ளாத ஆட்சேபத்துடன் அவளது முகம் திருப்பி விழிகளுக்குள் உற்றுப் பார்த்த ரவிச்சந்திரன்..
"உன் கண்களை விட அந்த மானின் கண்கள் அழகாடி..?" என்று கோபம் காட்டினான்..
"அது துள்ளி ஓடறதைப் பார்க்க அழகாய் இருந்தது பாஸ்.."
"நீ துள்ளி ஓடுவது அதைவிட அழகாயிருக்கும்.."
இந்த அளவுக்கு அவன் கொண்டாடுகிறானே என்றிருந்தது நந்தினிக்கு.. அவன் என்ன சாமான்யனா..? கேரளத்தின் ராஜகுமாரன்.. கோடிஸ்வரப் பேரழகன்.. அவனுடைய நிழலுக்குப் பக்கத்தில் நிற்கக் கூட ஒரு தகுதி இருக்க வேண்டும்.. அவன் அவனையே அவளுக்கக் கொடுக்கிறான்.. ஆட்கொள்ளும் தகுதி அவளுக்கு இருக்கிறதா..?
இருக்கிறது என்று சொன்னான் அவன்..
"என்னை எடுத்துக்கடி.." என்று அரற்றினான்..
உணர்வுகளின் வீச்சைத் தாங்க முடியாத பேதையாக தவித்துப் போய் தடுமாறினாள் நந்தினி.. அவனுடன் ஒன்றிப் போக ஆசை சொன்னது.. வெட்கம் தடுத்தது.. உத்ராவும், வினித்தும் அருகில் இல்லாத தனிமைதான் அது.. ஆனாலும் அவர்களின் பெயரைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயன்றாள் நந்தினி.. அவனோ..
"ஹா.. ஹா.." என்று சிரித்து பக்கத்தில் உலவிய மான்குட்டிகளைத் துள்ளி ஓட வைத்தான்..
"அதுக பாட்டுக்கு புல் மேய்ந்துக்கிட்டு இருந்ததுக.. விரட்டி விட்டுட்டிங்களே.. இது நியாயமா..?" நந்தினி விலக யத்தனித்தாள்..
"மான் குட்டிகள் மட்டும்தான் மேய்ந்துக்கிட்டு இருந்ததுகளா..?"
விசயம் சொட்டும் ரவிச்சந்திரனின் கேள்வி அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று வினவியது.. நந்தினி சொக்கிப் போனாள்.. அவன் மீதான மயக்கம் தீரா மயக்கம் என்று தோன்றியது.. அது தீரவே தீராது.. எவ்வளவுதான் அவன் அள்ளி வழங்கினாலும் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்ற கிறக்கம் அவளுக்குள் எழுந்து கொண்டே இருக்கிறதே..
"வா நந்தினி.. தஞ்சாவூருக்குப் போகலாம்.. உன் அப்பாம்மாவிடம் பெண் கேட்கிறேன்.. உன் கழுத்தில் தாலியைக் கட்டி உன்னை என் வொய்ப்பாக்கிக் கொள்கிறேன்.. என்னால் தாங்க முடியவில்லை.." தாள முடியாத தாபத்துடன் அவன் சொன்னான்..
நந்தினி பதில் சொல்லவில்லை.. மேகநாதனின் முன்னால் ரவிச்சந்திரனின் மீதான காதலைச் சொல்லி நிற்கும் தைரியம் அவளிடம் இல்லை.. அவர் நிச்சயம் பண்ணி வைத்திருந்த மாப்பிள்ளையை மறுத்து வயநாட்டுக்கு ஓடி வந்து விட்டு.. அவளாக ஒருவனை நிச்சயம் பண்ணிக் கொண்டு அவர் எதிரில் போய் நிற்க அவளால் எப்படி முடியும்..? மேகநாதனும் வெண்ணிலாவும் அவளை எப்படி வளர்க்கவில்லையே..
தனக்கெல்லாம் காதல் வரும் என்று நந்தினி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை... நினைத்துப் பார்க்காததெல்லாம் நடப்பதுதானே வாழ்க்கை..! படிப்பை முடித்து ஊர் திரும்பியவள் அங்கே அவளுக்காக கல்யாணம் காத்து நிற்கும் என்று நினைத்துப் பார்த்தாளா..? அந்தக் கல்யாண மாப்பிள்ளை ஒரு கையில் துப்பாக்கியும், இன்னொரு கையில் பெல்ட்டுமாக பயமுறுத்தும் பெல்ட் மன்னனாக இருந்து தொலைப்பான் என்று நினைத்துப் பார்த்தாளா..? வெண்ணிலாவிடம் சொல்லாமல் பக்கத்து வீட்டுக்குக் கூடப் போயிராத நந்தினி, பெல்ட் மன்னனுக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி வந்தவள் மன்மதன் போன்ற பேரழகனிடம் மயங்கிப் போய் காதலில் விழுந்து விடுவாள் என்றுதான் நினைத்துப் பார்த்தாளா..?
இப்படி நினைத்துப் பார்க்காத அத்தனையும் நந்தினியின் வாழ்வில் நிகழ்ந்து விட்டன.. நிகழ்ந்து விட்ட நிகழ்வுகளின் தொடர்ச்சியாக மேகநாதனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை மட்டும் அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை..
'அப்பாவிடம் இதையெல்லாம் எப்படிச் சொல்வேன்..?'
அவளுக்குப் பயமாக இருந்தது.. திருமணம் வேண்டாம் என்று அவரை எதிர்த்துப் போராட முடியாமல் வீட்டை விட்டு ஓடிவந்தவள் அவள்.. இப்போது புதிதாக முளைத்திருக்கும் காதலுக்காக அவரை எதிர்த்து நின்று எப்படிப் போராடுவாள்..?
காதலிக்கும் போது இனிப்பாகத்தான் இருக்கிறது.. அதற்க்கடுத்து காதலுக்காக போராடத்தான் பயமாக இருக்கிறது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -178
எண்ணியிருந்தது ஈடேற -178
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-178.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-178.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy