எண்ணியிருந்தது ஈடேற -177

177 கடவுளின் தேசம் என்றழைக்கப் படும் கேரள தேசம் இயற்கையை சீதனமாகப் பெற்ற பேறு கொண்டது.. மலைகளும் மலைத் தொடர்களுமாக மாநிலம் முழுவதும...


177


கடவுளின் தேசம் என்றழைக்கப் படும் கேரள தேசம் இயற்கையை சீதனமாகப் பெற்ற பேறு கொண்டது.. மலைகளும் மலைத் தொடர்களுமாக மாநிலம் முழுவதும் இருப்பதால் மலையாள தேசம் என்று கொண்டாடப் படுவது.. அம்மலைவள நாட்டின் வயநாடு மழை பொழியும் மலைப் பிரதேசமாகும்.. உத்ரா வியந்ததைப் போல ரம்யா நிரப்பிய சீதோஷ்ணம் கொண்ட சில்லென்ற மலைப் பிரதேசம் அது..
காதல் வராதவர்களுக்கும் காதல் வர வைத்து விடும் வாடைக்காற்று இது என்று நந்தினியின் மனம் கவிதை வரைந்தது.. மலைத்தொடர்களின் வரிசை மனதில்
இதம் பரப்பினால், மலை முகடுகளை முத்தமிட்டு நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள் மனதில் காதலை விதைத்தன..
புகை மூட்டம் போலக் கவியும் பனிப்புகை.. எதிரில் வருபவர்களைக் கூட இனம் காண முடியாமல் தன்னுள் ஒளிந்து வைத்து விளையாடும்.. இதில் அவ்வப்போது பொழியும் மழைத் தூறல் வேறு.. சாரல் மழையும் பனிப் புகையும் ஒன்று சேர்ந்து உடலையும் மனதையும் குளிர்வித்தன..
வயநாடு என்பது தனிப்பட்ட ஓர் ஊரின் பெயரல்ல.. ஒரு மாவட்டத்தின் பெயர்.. கோழிக்கோடின் அருகாமையில் உள்ளது வயநாடு மாவட்டம்.. ஓங்கி உயர்ந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் நீலவண்ணப் பனிப் புகையும் வயநாட்டிற்கான தனித்த அடையாளங்கள்..
வயநாட்டில் உள்ள முக்கியமான ஊர் சுல்தான் பத்தேரி.. கணபதி வட்டம் என்று அறியப்பட்ட இந்த ஊரில் திப்பு சுல்தான் ஆயுதக் கிடங்கை வைத்தார்.. அதனால் 'சுல்தான் பாட்டரி' என்ற பெயராகி காலப் போக்கில் இந்தப் பெயரும் மருவி சுல்தான் பத்தேரியாகி விட்டது என்று உத்ராவுக்கு கதை சொன்னாள் நந்தினி..
என்னவோ தனது சொந்த ஊரைப் பற்றி விவரிப்பதைப் போலப் பெருமையாக அவள் கதை சொல்லி விவரித்ததை கேலி செய்யாமல் மெந்நகையுடன் கேட்டுக் கொண்டாள் உத்ரா.. ரவிச்சந்திரனின்ஊர் என்பதினால்தான் நந்தினி அந்த ஊரின் மீது
அத்தனை பிரியம் கொள்கிறாள்.. என்பது நந்தினிக்குப் புரிந்திருந்ததோ இல்லையோ.. உத்ராவுக்குப் புரிந்திருந்தது.
காதல் என்பது காதலிக்கப் படும் நபரைச் சார்ந்த அனைத்தையும் காதலிப்பது..
"நீ சொல்கிற சுல்தான் பத்தேரி எங்கே இருக்கு..?"
"நாம நிற்கிற எடக்கல் மலையில இருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கு.. யு நோ உத்ரா.. வயநாட்டில எந்த டூரிஸ்ட் ஸ்பாட்டை நீ பார்க்கிறதா இருந்தாலும் மலையேறித்தான் ஆகனும்.. இப்படித்தான் மீன் முட்டி அருவியைப் பார்க்க ஆசைப்பட்டு நீலி மலையில் ஏறி கால் முட்டியைப் பெயர்த்துக்கிட்டேன்.. கால்வலி அடங்க ரெண்டு நாளாச்சு.."
"இதை எத்தனை தரம்தாண்டி சொல்வ..? உனக்கு வாயே வலிக்காதா..?"
"நீலிமலையையும்.. மீன் முட்டி அருவிகளையும் பத்திப் பேசனும்னா வாழ்நாள் முழுக்கப் பேசிக்கிட்டு இருப்பேண்டி.. எனக்கு வாயே வலிக்காது.."
விழிகளில் ரகசியக் கனவு மிதக்கச் சொன்னவளை உன்னிப்பாகப் பார்த்தாள் உத்ரா.. தோழியின் மனதில் பொங்கும் நுண்ணிய உணர்வுகளை நுணுக்கமாக கண்டு கொண்டாள்..
"ஸோ.. உன்னைப் பொறுத்தவரை நீலிமலைக் காடும்.. மீன் முட்டி அருவிகளும் மறக்க முடியாத நினைவுச் சின்னங்கள்.. இல்லையா..?"
"மரக்குடிலை விட்டுட்டியே.."
"மரக்குடிலா..?"
"யெஸ்.. வுட் ஹவுஸ்.. ரவியோட கெஸ்ட் ஹவுஸ்.. அதைப் பார்த்தா நீ ஆச்சரியப்பட்டுப் போவ உத்ரா.."
ரவிச்சந்திரனை பாஸ் என்று குறிப்பிடாமல் 'ரவி' என்று பெயர் சொல்லி நந்தினி குறிப்பிடுவதை மனதுக்குள் குறித்துக் கொண்டாள் உத்ரா.. தோழியின் மனதில் வந்திருந்த காதல் அவளுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது.. அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதவளாக ஓர் அகதியைப் போல ரவிச்சந்திரனிடம் அடைக்கலமாகி-யிருந்தவள் அவனையே ஆளும் அளவிற்கு உயர்ந்து விட்டாளே..
'இனி நந்தினியின் வாழ்வில் உயிர்ப்பு வந்து விடும்..'
நேசத்துடன் தோழியின் கையைப் பிடித்துக் குலுக்கினாள் உத்ரா..
"எதுக்குடி..?"
"எதுக்குன்னு தெரியாமலே கை கொடுத்த பாரு.. அங்கே நிற்கிறடி நீ.."
"நான் எடக்கல் மலையில் நிற்கிறேன்.. நானாடி உன்னிடம் கை குலுக்க அலைஞ்சேன்..? நீயா கை கொடுத்த.. தானாக் கிடைக்கிற பாராட்டை யாராச்சும் வேணாம்ன்னு சொல்வாங்களா..?"
"அதைச் சொல்லு.."
தோழிகள் இருவரும் சிரித்தபடி மலையேற்றத்தைத் தொடர்ந்தார்கள்.. இருவரும் ஏறினார்கள் என்று பெயர்தான்.. கை கொடுத்து ஏற்றி விட்டதெல்லாம் வினித்தும்.. ரவிச்சந்திரனும்தான்.. இதில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்..
"'ஏலேலோ.. ஐலேசா'..ன்னு பாடலாமாடி உத்ரா..?" என்று கேட்டு வைத்தாள் நந்தினி..
"பேசாம வாயை மூடிக்கிட்டு வந்தாத் தப்பிச்ச.. இல்லைன்னா கையை விட்டிருவேன்.. மலைச்சரிவில் உருண்டோடி மலையடிவாரத்தில போய் நின்னாகனும்.. எப்படி வசதி..?" என்று ரவிச்சந்திரன் கேட்டு வைத்ததில் வாயை மூடிக் கொண்டாள்..
ஓங்கி உயர்ந்திருந்த பாறைகளின் இடைவெளியில் ஒருவர் மட்டும் நடக்கும் அளவுக்கான குறுகிய இடைவெளி..
நால்வர் குழுவிற்குத் தலைமை தாங்கி ரவிச்சந்திரன் முன்னால் நடக்க.. நந்தினி அவனை வால் பிடித்துப் பின் தொடர்ந்தாள்.. நந்தினியின் பின்னால் உத்ரா.. உத்ராவுக்குப் பின்னால் வினித் என்று நடுவில் பெண்களை விட்டு இரண்டு ஆண்களும் முன் பின் காவல் காத்து நடைபயணத்தைத் தொடர்ந்தார்கள்..
என்ன நினைத்தாளோ.. 'களுக்' கென்று வாய் பொத்திச் சிரித்தாள் நந்தினி.. ரவிச்சந்திரனின் ஆர்வப் பார்வை அவளைப் பிய்த்துத் தின்றது.. இமைமூடி அவனை அமைதி காக்கும்படி எச்சரித்தாள்.
"எதுக்குடி சிரிச்ச..?" உத்ரா துருவினாள்..
"கம்மாண்டர்ன்னா கம்மாண்டர்தான்.." நந்தினியின் கண்கள் சிரித்தன..
புரிந்து கொண்ட ரவிச்சந்திரனின் கண்கள் மின்னின.. அவனுக்கான பிரத்யேக கேலி அவனுக்குப் பிடித்திருந்தது..
"கம்மாண்டரா..?" உத்ரா புரியாமல் விழித்தாள்..
"இங்கே எதுவும் மிலிட்டிரி பீபுள்ஸின் பிளேஸ் இருக்கா..?" என்றான் வினித்..
"இல்லையேங்க.. சுல்தான் பத்தேரிங்கிற ஊரைப் பத்திச் சொன்னப்ப அது திப்பு சுல்தானோட ஆயுதக் கிடங்குன்னு சொன்னா.."
"ஒருவேளை அதை மீன் பண்ணிச் சொல்றாங்களோ என்னவோ.."
"இருக்கும்.. இருக்கும்.."
உத்ராவும் வினித்தும் தங்களின் கண்டு பிடிப்புகளை பகிர்ந்து கொண்டிருக்க.. நந்தினியின் விழிகளும் ரவிச்சந்திரனின் விழிகளும் கலந்து ரகசிய பாஷையில் பேசிக் கொண்டன..
சிரிப்பும் கிண்டலுமாக அவர்கள் எடக்கல் குகையை அடைந்து விட்டார்கள்.. 2400 வருடங்கள் பழமையான குகையின் கீழ்பாகத்தில் சித்திர எழுத்துக்களும்.. மேற்பகுதியில் பிரமி, தமிழ் எழுத்துக்களும் இருந்தன..
"பார்த்துக்கங்க.. உங்க வயநாட்டிலயும் எங்க தமிழ் மொழிதான் கொடி கட்டிப் பறக்குது.. எடக்கல் குகையில தமிழ் எழுத்து.. எங்கும் தமிழ்..! எதிலும் தமிழ்..!"
நந்தினி ஆனந்தக் கூத்தாடாத குறைதான்.. உத்ராவும் வினித்தும் குகையின் சித்திர எழுத்துக்களையும்.. தமிழ் எழுத்துக்களையும் வீடியோ எடுத்தார்கள்..
பழமை வாய்ந்த குகை வரலாற்றுத் தொன்மையுடன் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.. அதன் ஒவ்வொரு கல்வெட்டையும் நிறுத்தி நிதானமாக ரசித்துப் பார்த்தார்கள்..
"இங்கே வந்திருக்கிறயாடி..?"
"இல்லை உத்ரா.. இன்னொரு நாள் பார்க்கலாம்ன்னு சொன்னார்.. அந்த இன்னொரு நாள் நீ வரும் நாளாக இருந்திருக்கு பாரேன்.."
"பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்.."
இருபொருள்படச் சொன்னாள் உத்ரா... ரவிச்சந்திரனைப் பற்றிப் பேசும் போது மிகக் கவனமாக 'பாஸ்..' என்ற வார்த்தையைத் தவிர்த்துத் தொங்கத் தொங்கத் தாலி கட்டிக் கொண்டவளைப் போல 'இவர் சொன்னார்..' என்று உரிமையுடன் நந்தினி பேசுவதைக் கணக்கில் எடுத்துச் சொன்னதைப் போல இருந்தது அவள் பேச்சு.. மனைவியின் ஜாடைப் பேச்சை ரசித்துச் சிரித்தான் வினித்..
பறவை, விலங்குகள் வேட்டையாடப் படுவதைக் குறிக்கும் கல்வெட்டை படம் பிடித்துக் கொண்டார்கள்.. எடக்கல் குகைக்குச் செல்லும் வழி அழகானதாக
இருந்தது.. நந்தினியிடம் அதைச் சொன்னபோது அவள் பெருமையாக..
"வயநாட்டில எல்லா வழிகளும் அழகான வழிகளத்தான் இருக்கும்.." என்று பீற்றிக் கொண்டாள்..
"முடியல.." என்று அலுத்துக் கொண்ட உத்ரா..
"நேற்று இல்லாத
             மாற்றம் என்னது..?"
என்று சங்கேதமாக பாடினாள்..
"உனக்குத்தான் பாட்டுப் பாடத் தெரியுமா..? இந்தா.. நானும் பாடப் போறேன் எசப் பாட்டு.." என்று அறிவித்த நந்தினி..
"நேற்று வரை
             நீ யாரோ..? நான் யாரோ..?
    இன்று முதல்
             நீ வேறோ.. நான் வேறோ..?"
என்று ரவிச்சந்திரனைப் பார்த்தபடி படி வைத்தாள்.
"நான் இங்கிருக்கேன்.." குரல் கொடுத்தாள் உத்ரா..
"போடி.." நந்தினிக்கு வெட்கம் வந்து விட்டது..
வெட்கப்படும் போது அவள் மிகுந்த அழகோடு இருக்கிறாள் என்று தனிமையில் அவளைத் தள்ளிக் கொண்டு போய் ஜொள்ளினான் ரவிச்சந்திரன்.. அவனை விடவா அவள் அழகு என்று அவள் அவனுடைய சட்டை பொத்தானைப் பிடித்துத் திருகினாள்.. இப்படிக் கூட காதலைக் காட்ட அவளுக்குத் தெரியுமா என்று அவன் அதிசயப்பட்டுப் போனான்.. ஏன், தரங்கிணிக்கும், அஜந்தாவிற்கும்தான் அது தெரியுமா.. நந்தினிக்குத் தெரியாதா என்று அவள் சண்டைக்கு வந்தாள்..
"ஏய்ய்.. அவங்க எங்கேயிருக்கிறாங்க..? நாம் எங்கேயிருக்கிறோம்.. இங்கே வந்தும் அவங்க நினைவு தானா..?" கடிந்து கொண்டான் ரவிச்சந்திரன்..
ஏன் அவர்களைப் பற்றி நந்தினி நினைக்கிறாள்..?
அவளுக்கே அது தெரியவில்லை.. அவர்களின் நினைவு தானாக வருகிறது.. அது கலவரத்தைக் கொடுக்கிறது என்று மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது..
உத்ராவும் வினித்தும் பக்கத்தில் இருக்கிறார்கள்.. ரவிச்சந்திரன் எனும் ஆண்மை மிகு இளஞ்சிங்கம் அவளது காதலனாய் பாதுகாக்கிறான்.. இருந்தும் ஏன் நந்தினி அந்த இரண்டு பெண்களையும் நினைத்து அச்சம் கொள்கிறாள்..? அவர்கள் இருவரும் சாகசம் நிரம்பிய பெண்கள் என்பதினாலா..? நந்தினியிடம் நிமிர்வு இருக்கிறது.. சாகசம் தெரியாதே.. அவளிடம் இல்லாத சாகசம் அவர்களிடம் இருப்பதுதான் அவளை அச்சுறுத்துகிறதா..?
பாறைகளில் கிறுக்கி வைத்ததைப் போன்று இருந்த சிற்பங்களை பக்கத்தில் போய் உன்னிப்பாக பார்த்தார்கள்..
"நுணுக்கமான வேலைப்பாடு.." வியந்தாள் உத்ரா..
"கொசமுசான்னு கிறுக்கி வைத்ததைப் போலவே இருக்குடி.." குறைபட்டாள் நந்தினி..
"உனக்கு ரசிக்கத் தெரியலைன்னு சொல்லு.." ஷொட்டு வைத்தான் ரவிச்சந்திரன்..
மலையிறங்கியவர்கள் ஜைனர் கோவிலைப் பற்றி வியந்து பேசியபடி 'யாழ்' ஹோட்டலை அசைந்தார்கள்..
"லன்ச்சை முடிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கப் போகலாம்.. இன்றைக்கு ஈவினிங் அவுட்டிங் கேன்சல்.."
ரவிச்சந்திரன் சொன்னதை ஒரு மனதாக மற்ற மூவரும் ஏற்றுக் கொண்டார்கள்.. கால் முட்டியைத் தடவி விட்டுக் கொண்ட உத்ராவிடம் ஆயிரத்தைந்தாவது முறையாக நீலிமலையில் ஏறிய மலையேற்றத்துக்கு முன்னால் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று பீற்றி விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டாள் நந்தினி..
"ஏண்டி..? உனக்கு வாய் வலிக்கவே வலிக்காதா..? ஓயாம பேசிக்கிட்டே இருக்கியே.."
நந்தினியுடன் தனித்துச் சாப்பிட ஒதுங்கிய ரவிச்சந்திரன் எவரும் அறியாத வகையில் அவளுக்கு ஒரு குட்டு வைத்தான்..
"வேணும்ன்னா மௌனவிரதம் இருக்கவா..?"
"என்னடி ஆச்சு..?"
"ஐயாவுக்குத்தான் நான் பேசினாலே பிடிக்கலையே.."
"நீ பேசறதெல்லாம் பிடிச்சிருக்கு.. அந்தப் பேச்சை என்னிடம் பேசாமல் உன் பிரண்டிடம் பேசுகிற பாரு.. அதுதான் பிடிக்கலை.. என்னிடம் மட்டும்தான் நீ பேசனும்.."
"இது வேறயா..? இத்தனை நாளா உங்களைத் தவிர வேற யாரையும் நான் பார்க்கக் கூடாதுன்னு சட்டம் போட்டிங்க.. இப்பப் பேசறதுக்கும் 'தடா' வந்தாச்சா..? போதும் பாஸ்.. நான் தாங்க மாட்டேன்.."
"பாஸா..?"
"தப்புத் தப்பு.. ரவி..!" கன்னத்தில் போட்டுக் கொண்டவள் குனிந்து அவன் முகம் பார்த்துக் கண்சிமிட்டி ஹஸ்கி வாய்ஸில்..
"என் ரவி..!" என்றாள்..
ரவிச்சந்திரன் சுற்றுப் புறத்தை மறந்து விட்டான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -177
எண்ணியிருந்தது ஈடேற -177
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-177.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-177.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy