எண்ணியிருந்தது ஈடேற - 176

176 கால்களை ஊன்றி முன்னால் ஏறிய வினித் கதாநாயகனைப் போலத் திரும்பி உத்ராவுக்கு கை நீட்டினான்.. அதை இறுகப் பற்றிக் கொண்டு மலையேறிய உத...


176


கால்களை ஊன்றி முன்னால் ஏறிய வினித் கதாநாயகனைப் போலத் திரும்பி உத்ராவுக்கு கை நீட்டினான்.. அதை இறுகப் பற்றிக் கொண்டு மலையேறிய உத்ரா தன்னைக் கதாநாயகியைப் போல உணர்ந்தாள்.. கால்கள் வலிப்பதைப் போல இருந்ததில் நின்று முட்டியைத் தடவி விட்டுக் கொண்டாள்..
"வலிக்குதா..?" கவலையும் கரிசனமுமாக கேட்டான் வினித்..
"வேணும்னா தூக்கிக்கங்க அண்ணா.."
அவர்களுக்கு முன்னால் ரவிச்சந்திரனுடன் மலையேறிக் கொண்டிருந்த நந்தினி கேலி செய்தாள்..
"கால் வலிக்குதுடி.." உத்ரா சிணுங்கினாள்..
"எடக்கல் குகையைப் பார்க்க எடக்கல் மலையில ஏறுகிறதுக்கே முட்டியைப் பிடிச்சுக்கறியே.. உன்னை மீன்முட்டி அருவிகளைப் பார்க்க நீலிமலையில் ஏற்றி விட்டா என்ன செய்வியோ.. நான் அந்த மலையிலேயே ஏறி மீன் முட்டி அருவிகளைப் பார்த்துட்டு வந்தவளாக்கும்.." பெருமையுடன் பீற்றிக் கொண்டாள் நந்தினி..
"நீ..? மலையேறின..? நம்பாதீங்க உத்ரா.. இவளுக்கு மீன் முட்டி அருவிகளைப் பார்க்க நீலிமலையில் ஏறனும் என்கிறதே தெரியாது.. அருவிக்குப் போகலாம் வர்றியான்னு கூப்பிட்ட உடனே.. மலையடிவாரத்தில கொட்டற அருவின்னு நினைத்துக் குதித்துக்கிட்டு கூட வந்தா.. வடுவாஞ்சலில ஜீப்பை நிறுத்திட்டு எதிரில தெரிந்த மலையைக் காட்டி அதில ஏறினாத்தான் அருவிகளைப் பார்க்க முடியும்ன்னு சொன்னதும் அருவியும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்ன்னு ரிடர்ன் ஆகப் போனவதான் உங்க பிரண்ட்.." ரவிச்சந்திரன் காட்டிக் கொடுத்தான்..
"இவர் மட்டும் என்னவாம்.. மீன் முட்டி அருவிகளைப் பார்க்கனும்னா மலையேறனும்னு எனக்குச் சொல்லவே இல்லைடி உத்ரா.. பக்கத்தில இருக்கிற அருவியைக் காட்டுகிறதைப் போலப் போக்குக் காட்டிக் கூப்பிட்டுக்கிட்டுப் போயி.. கால் முட்டி தேய மலையேற வைத்தார்.. நம்ம்ம்.. பி இவர் பின்னாலே போனதுக்கு என்னமா கிப்ட் கொடுத்தாருங்கிற..? சின்னப் பிள்ளைக்கு சாக்லெட் ஆசையைக் காட்டி ஏமாத்தறதைப் போல அருவி ஆசையைக் காட்டி என்னை ஏமாத்தி வருவாஞ்சலுக்கு கடத்திக்கிட்டுப் போயி மலையேற வைச்சவருடி இவரு.. பாஸை என்னன்னு நினைச்ச..?"
நந்தினி ரவிச்சந்திரனைப் பார்த்து உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்..
வினித்தின் உள்ளங்கையை ரகசியமாகக் கிள்ளினான் உத்ரா.. பதிலுக்கு அவனது விரல் உத்ராவின் உள்ளங்கையை ரகசியமாக சுரண்டியது..
"பார்த்தீங்களா..?" கிசுகிசுத்தாள் உத்ரா..
"பார்த்தேன்.. பார்த்தேன்.." பதிலுக்கு கிசுகிசுத்தான் வினித்..
"இவங்களுக்குள்ள ஏதோ ஒரு சார்ட் ஃபிலிம் ஓடறதைப் போலவே இருக்குல்ல.."
"சார்ட் இல்ல.. லாங் ஃபிலிமே ஓடிக்கிட்டு இருக்கு.."
"ஹனிமூன் கப்புள் நாமா, இல்ல இவங்களான்னு டவுட்டா இருக்கு.."
"இந்த டவுட் எப்பவோ எனக்கு வந்துருச்சு.."
"லவ்வர்ஸ் போலவே பேசிக்கிறாங்க.."
"நீ வேற.. ரவிசார் வாடி, போடிங்கிற ரேன்ஜில அவ, இவன்னுதான் நந்தினியைச் சொல்கிறார்.. இது அதுக்கும் மேலே.."
"ஜோடிப் பொருத்தம் நல்லாத்தான் இருக்கு.."
"நம்ம ஜோடிப் பொருத்தத்தை விடவா..?"
இவன் எங்கே சுற்றினாலும் ஒரே இடத்தில்தான் வந்து நிற்பான் என்ற நினைவில் புன்னகைத்தாள் உத்ரா.. அவளுக்கும் அவனுக்குமான உலகம் அது... அங்கே வினித்தும் உத்ராவும் மட்டுமே கதாநாயகன், கதாநாயகியாய் உலா வருவார்கள்..
எந்த மனைவிதான் இதை விரும்ப மாட்டாள்..? உத்ராவும் விரும்பினாள்.. அவளை கதாநாயகியாக்கி அழகு பார்க்கும் அவளுடைய கதாநாயகனின் மீது ஆசை கொண்டாள்.. தாழ்ந்த குரலில் கணவனிடம் ரகசியம் பேசினாள்.. அவன் பேசிய ரகசியப் பேச்சில் முகம் சிவந்தாள்..
அவர்கள் செய்த அத்தனை வேலைகளையும் ரவிச்சந்திரனும் நந்தினியும் செய்து கொண்டிருந்தார்கள்.. தேநிலவு ஜோடிக்குத் தனிமை கொடுக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் நந்தினியை இழுத்துக் கொண்டு முன்னால் மலையேறி விட்டான்.. தனிமை தேவைப்படுவது அவர்களுக்கா இல்லை இவர்களுக்கா என்ற நினைவில் நந்தினி முகம் சிவந்தாள்.. ரவிச்சந்திரனின் ஆசைப் பார்வை அவள் மீது படிந்து இறங்கிக் கவிழ்ந்து அவளுக்குள் ஆசைத்தீயின் அனலை மூட்டிக் குளிர் காய்ந்தது.. அவள் எதையாவது சொன்னால் அதைப் பற்றி அறியாதவனைப் போல புருவங்களை உயர்த்தி இறக்கி அவளைக் கிறங்கடித்து மயங்க வைத்தான்.. அவளுடைய அந்த மயக்கத்தை நொடிக்கொருதரம் கண்டு ரசிக்க விரும்பினான்.. அவன் மீதான மயக்கத்தில் தடுமாறுபவள் இப்போது ஆசைக் கடல் அலை மோத அவனை
அள்ளித் தின்று விடுபவளைப் போல பார்த்து வைத்ததில் கிளர்ச்சியடைந்தான்..
"நந்தினி.."
உத்ரா உரக்க அழைத்ததில் வினித்தும் ரவிச்சந்திரனும் எரிச்சலடைந்தார்கள்.. இப்போது எதற்காக தோழியைத் தேடுகிறாள்..? தேநிலவு கொண்டாட வந்தவள் கணவனுடன்தானே கடலை போட வேண்டும்..? தோழியை எதற்காக ஜோடி சேர்க்க வேண்டும்..? அவளென்ன சுற்றுலாவா வந்திருக்கிறாள்..
"இப்ப எதுக்கு உன் பிரண்டைக் கூப்பிடற..?"
வினித் மனைவியைக் கடிந்து கொண்டது ரவிச்சந்திரனின் காதுகளில் விழுந்து வைத்தது.. அவன் அதை ஆதரித்தான்.. முதல்நாள் இரவில் அவனும் நந்தினியும் கொட்டும் மழையில் காதல் பேசிய நொடிகள் நினைவுக்கு வந்து உடலை சூடேற்றிக் கொண்டிருந்தன.. முடிந்தவரை தன் காதலியிடம் மோகத்தீயை மூட்டிவிட்டுக் குளிர் காய விரும்பினான் அவன்.. அதற்கு இடையூறாக உத்ரா நந்தினியை அழைப்பதா..?
"ஸ்ஸ்ஸ்.. இது ஒன்றும் ரொமான்டிக்கான இடமில்லை.. ஹிஸ்டரிக்கல் பிளேஸ் போல தோணுது.. கொஞ்ச நேரம்தானேங்க.. அதுக்கப்புறம் ஹோட்டலுக்கு  ரிட்டர்ன் ஆகிறப் போகிறோம்.. யாழ் ஹோட்டலை விட ஃபெண்டாஸ்டிக்கான பிளேஸ் ஹனிமூன் கப்புளுக்குக் கிடைக்குமா என்ன..?"
ஆமாம்தானே என்று தோன்றி விட்டதில் வினித் அமைதியாகி விட்டான்.. ரவிச்சந்திரனுக்குத்தான் கோபம் கோபமாக வந்தது.. யாழ் ஹோட்டல் ஹனிமூன் கப்புளுக்கு ஃபெண்டாஸ்டிக் பிளேஸ்தான்.. ஏனென்றால் அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.. ஹோட்டலின் உரிமையாளருக்கு அப்படியா..? அவன் எங்கே போய் நின்றாலும் அங்கே பணியாளரின் கூட்டம் சேர்ந்து விடுமே.. அவர்களுக்கு மத்தியில் எப்படிக் காதல் செய்து..?
"என்னடி..?"
ரவிச்சந்திரனின் முறைப்பில் மனதில் தென்றலடிக்க.. மன்னிப்புக் கேட்பதைப் போல காதிரண்டையும் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதைப் போல பாவனை செய்தபடி தோழியின் குரலுக்குப் பதில் குரல் கொடுத்தாள் நந்தினி..
"வெயிட் பண்ணுங்கடி.. நாங்களும் ஜாயின் பண்ணிக்கறோம்.."
"ஓகே.. ஓகே.."
நந்தினி நின்று விட அவள் எதற்காக ஒகே சொன்னாள் என்று ஆத்திரமடைந்தான் ரவிச்சந்திரன்..
"உன் பிரண்ட் ஜாயின் பண்ணிக்கத்தான் அவங்க பக்கத்திலேயே அவங்களோட ஹஸ்பெண்ட் நிற்கிறாரே.. உன்கூட ஏன் ஜாயிண்ட் அடிக்கிறாங்க..?"
"அதை அவளிடம்தான் கேட்கனும்.."
"கேட்டு விடவா..?"
ரவிச்சந்திரன் உண்மையிலேயே உத்ராவிடம் கேள்விக் கணையைத் தொடுத்து விடுவான் என்பதில் கலவரமாகிப் போனாள் நந்தினி..
"உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.. அப்படி எதுவும் செய்து விடாதீங்க.." என்று பதறினாள்..
"புண்ணியத்துக்காக உன்கூட ஸ்பெண்ட் பண்ற இந்த தனிமையை விட்டுக் கொடுக்கச் சொல்கிறயா..?"
"எனக்காக விட்டுக் கொடுக்கலாமில்லையா..?"
"நீ எனக்காக பார்க்கவே மாட்டியாடி.."
அவன் தாபத்துடன் கேட்டதில் நந்தினிக்குள் காதல் வந்தது.. காதலிக்கான கடமையை ஆற்றுகிறவளாய் இமைகளைச் சிமிட்டினாள்.. அவன் விழிகள் மின்னின..
"ஏய்ய்.." என்று கிளர்ந்தான்..
"ஸ்ஸ்ஸ்.. உத்ரா கிட்ட வந்துட்டா.."
"ம்ப்ச்.."
ரவிச்சந்திரன் சலிப்பாக வினித்தைப் பார்த்தான்.. அவனைவிடச் சலிப்பாக வினித் அவனைப் பார்த்தான்..
'ம்ஹீம்.. ஒரு ஆணோட மனது இன்னொரு ஆணுக்குத்தான் தெரியும்..'
புரிந்து கொள்ளலுடன் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்..
"இந்த இடம் ரம்யமா இருக்கில்ல..?"
இந்தக் கேள்வியைத் தேநிலவுக்கு வந்திருக்கும் மனைவி கணவனைப் பார்த்துக் கேட்டால் நன்றாக இருக்கும்.. உத்ராவோ தோழியைப் பார்த்துக் கேட்டு வைத்தாள்.. வினித் பெருமூச்சு விட்டான்.. காதில் புகை வராதது ஒன்றுதான் குறை..
"பாவம் வினித் நீங்க.."
போதாக்குறைக்கு ரவிச்சந்திரனும் இரக்கப்பட்டு வினித்தை உசுப்பேற்றி விட்டான்..
"நீங்க பாவம் பார்க்கறிங்க சார்.. இவ பார்க்கலையே.."
வினித் உத்ராவைப் பார்க்க அவள் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. தோழிகள் இருவரும் கை கோர்த்து எடக்கல் மலையின் அழகை ரசித்தார்கள்..
சில்லென்ற இதமான குளிர் காற்று அவர்களின் உடலைத் தழுவிச் சென்றது.. நந்தினியிடம் வியந்த போது அவள்..
"கேரளாவில் இப்படித்தான் இருக்கும்.." என்று கேரளத்தில் பிறந்து வளர்ந்தவளைப் போலப் பீற்றிக் கொண்டாள்..
"பாருடா.." உத்ரா உதட்டைப் பிதுக்கி தோழியை மேலும் கீழுமாக பார்த்து வைத்தாள்..
"பாருடான்னு என்னைத்தானே சொன்ன..?" வினித் மனைவியிடம் ஒட்டிக் கொள்ளத் துடித்தான்..
"இல்லேண்ணா.. என்னைச் சொன்னா.. கேரளாவைப் பற்றி எல்லாம் தெரியும்ன்னு நான் பீற்றிக்கிட்டேனாம்.. மேடம் அதைச் சொல்லிக் காட்டறாங்களாம்.. இவளுக்கு கொழுப்பு அதிகம்ன்னா.." நந்தினி பட்டுக் கத்தரித்து வினித்தை விலக்கி வைத்தாள்..
"கொலஸ்ட்ரால் இருக்கா..? இல்லையே.. கொடி போல இல்ல இருக்கா..?" வினித்தின் விழிகள் மனைவியின் வடிவழகை அளவிட்டன..
"இவளை விடவா.. செம தீனி திங்கிறா.. ஆனாலும் வெயிட்லெஸ்.. பூப்போல இருக்கிறா.." ரவிச்சந்திரன் நந்தினியை அளவெடுத்து ஜொள்ளினான்..
"ஊஹீம்.. இவங்க ரெண்டு பேரும் நம்மை ஜோடி சேர விட மாட்டாங்கடி.." உத்ரா சன்னக்குரலில் நந்தினியிடம் முணுமுணுக்க..
"சரியாச் சொன்ன.." என்று நந்தினி தலையை ஆட்டி அதை ஆமோதித்தாள்..
அந்த நொடியில் உத்ரா திருமணமானவள்.. வினித் அவளுடைய கணவன்.. நந்தினி அப்படியல்ல.. ரவிச்சந்திரனுக்கும் அவளுக்குமான காதலைப் பற்றி உத்ராவிடம் அவள் இன்னும் கூறவில்லை என்பதை அடியோடு மறந்து விட்டாள் நந்தினி.. உத்ராவுக்கு வினித் எப்படியோ.. அதைப் போல நந்தினிக்கு ரவிச்சந்திரன் என்பதைப் போல நடந்து கொண்டாள்..
"பேசாம இவங்க கூட ஜோடி போட்டுக்குவோம்.. இல்லேன்னா ஒரு வார்த்தை கூட நம்மாலே பேச முடியாதுடி நந்தினி.."
"யு ஆர் கரெக்ட்.. நீ அண்ணா பக்கத்தில ஒட்டிக்க.. நான் இவரோட ஜாயினடிச்சுக்கறேன்.."
நந்தினி ரவிச்சந்திரனின் பக்கத்தில் ஒட்டி நிற்க.. உத்ரா வினித்தின் கை விரல்களோடு விரல் கோர்த்துக் கொண்டாள்..
"இப்பத்தான் இந்த கிளைமேட்டே சில்லுன்னு மாறியிருக்கு.." என்றான் வினித்..
"யெஸ்.. யெஸ்.. நான் நினைத்தேன்.. நீங்க சொல்லிட்டிங்க.." ரவிச்சந்திரனின் கரம் நந்தினியின் தோளை வளைத்தது..
அவள் அதைத் தட்டி விடாமல் ஒட்டி நின்றாள்.. இரண்டு ஜோடிகளையும் இணை சேர்த்துப் பார்த்ததில் உற்சாகமான வாடைக்காற்று ஊதல் காற்றாய் மாறி அவர்களின் உடல் தழுவியது.. கணவன், மனைவியும், காதலின், காதலியும்.. வாடைக் காற்றின் உபயத்தால் மெல்லிய குரலில் காதல் மொழிகளை பேச ஆரம்பித்தார்கள்..
எடக்கல் மலையிலிருந்து பார்க்கும் போது எங்கும் பசுமையாக அழகாக இருந்தது.. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்த மலைத் தொடர்களில் எத்தனை அருவிகள் இருக்கக் கூடும் என்று யோசித்தாள் நந்தினி.. அவையத்தனையும் மீன்முட்டி அருவிகளைப் போல அழகாக இருக்குமா...? எடக்கல் மலையில் நிற்கும்
போதும் நீலி மலையின் நினைவுதான் அவளுக்குள் வந்தது.. மறக்க முடியாத நினைவுகளை அவளுக்குள் தந்த மலையல்லவா அது..!
மலைத் தொடர்கள் அடர்ந்த வயநாட்டில் அவள் வந்து நிற்பாள்.. அவளுக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பாள் என்பதை நினைத்துப் பார்த்திருப்பாளா..?
அவளுடைய தோளை வளைத்திருந்த ரவிச்சந்திரனின் கரத்தின் மீது இதழ் பதித்தாள்.. அவளது முத்தத்தை உணர்ந்த ரவிச்சந்திரனின் கைவிரல்கள் அவளது கன்னத்தைத் தடவின..
'உத்ரா பார்த்திருப்பாளோ..'
பதட்டத்துடன் தோழியைப் பார்த்தாள்.. உத்ராவும் வினித்தும் ரகசியப் பேச்சில் இருந்தார்கள்.. அவர்கள் இவர்களைக் கவனிக்கவில்லையென்பதில் நிம்மதியானாள்..
"ரிலாக்ஸ்.." ரவிச்சந்திரன் முணுமுணுத்தான்..
"அவங்க இரண்டு பேருமே கிளவர்ஸ்.. நம் காதலை கண்டு பிடிச்சிருப்பாங்க.. தேவையில்லாம பயப்படாதே..
வி ஆர் லவ்வர்ஸ்.."
அப்படியும் இருக்குமோ என்று தோன்றியது நந்தினிக்கு.. அதனால்தான் உத்ரா அவளிடம் அப்படிப் பேசினாளோ.. நந்தினியின் மனதில் ரவிச்சந்திரனின் மீது காதல் இருக்கிறது என்பதை கண்டு சொன்னவள் உத்ரா தானே..
தோழிக்கு அவள் மனது தெரியும் என்பதில் சங்கடம் விலகிய நந்தினி.. ரவிச்சந்திரனின் கைவிரல்களில் கன்னம் சாய்த்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற - 176
எண்ணியிருந்தது ஈடேற - 176
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-176.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-176.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy