எண்ணியிருந்தது ஈடேற -174

174 "தையத்தா.. தையத்தா.. தையத்தா.." மைக்கை கையில் பிடித்தபடி மேடையின் எதிரே நின்றிருந்தவர்களில் ரவிச்சந்திரனின் மீது மட...


174


"தையத்தா.. தையத்தா.. தையத்தா.."
மைக்கை கையில் பிடித்தபடி மேடையின் எதிரே நின்றிருந்தவர்களில் ரவிச்சந்திரனின் மீது மட்டும் பார்வையைப் பதித்தபடி பாடிக் கொண்டிருந்தாள்
நந்தினி..
இமைமூடி அவன் கொடுத்த முத்தத்தின் ஸ்பரிசத்தை உடல் சிலிர்க்க உணர்ந்த அந்த நொடியின் இன்பத்திலிருந்து இன்னும் அவள் வெளிவரவில்லை.. அதற்கு முன்பும் அவன் முத்தம் கொடுத்திருக்கிறான்தான்.. இதுபோல அந்த முத்தங்கள் இனிப்பைத் தரவில்லையே..  ஏன்..?
அவனை அவள் காதலிப்பதை அறிந்தபின் அவன் தரும் முதல் முத்தம் இது என்பதினால் தேன் போலத் தித்தித்ததா..?
"தையத்தா.. தையத்தா.. தையத்தா..
             பையத்தா.. பையத்தா.. பையத்தா.."
துள்ளலாக வெளி வந்தது பாடல்.. நடனம் முடிந்ததும் பாடல் என்றார்கள்.. வழக்கப்படி அவன் அவளை முன்மொழிந்து மேடைக்கு அனுப்பி விட்டான்.. மேகத்தில் மிதப்பதைப் போல மிதந்து கொண்டிருந்தவள் மறுப்புச் சொல்லாமல் மேடையேறி பாட ஆரம்பித்தாள்..
"உயிர் வாழ்கிற வரைக்கும்
             உன்கே மடி கொடுப்பேன்..
    இனி ஓர் ஜென்மம் இருந்தால்
             உனக்காக மீண்டும் பிறப்பேன்.."
நந்தினியின் குரல் தழதழத்தது.. அவளை விட்டு விழிகளை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிக் குவியல் அவளை முத்தங்களின் குவியல்களில் ஆழ்த்திவிட அவன் உத்தேசித்திருப்பதை அறிவித்தது..
"சொல்லித்தான் தெரியனுமாடி..?"
எப்படித் தெரியும் என்ற அவளது தடுமாற்றத்திற்கு அவன் சொன்ன பதில் அவளது மனப் பெட்டகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிச வார்த்தைகள்..!
"உன் கனவில்
             நினைவில் உருவில்
    நானே என்றும் இருப்பேன்..
             தையத்தா தையத்தா தையத்தா.."
அவளது உள்ளம் தையத்தா என்று குதிக்க ஆரம்பித்தது.. அவள் சொல்ல வேண்டும் என்ற அவசியமேயில்லை.. அவள் மனதை அவன் உணர்வான்.. அவளது விழிகளில் அவளுடைய காதலைப் படிப்பான்.. அவளை அவளைவிட அவன் நன்கு அறிந்து வைத்திருக்கிறான்.. அவளது விழியசைவு சொல்லும் கோடிக் கதைகளில் ஒரு கதையைக்கூட அவன் தவற விட மாட்டான்..
"நிஜங்கள் உடைந்து போனாலும்
             நிழல்கள் உடைவதில்லை..
    நேசம்.. பாசம்.. நிஜமானது.."
அவளது குரல் நெகிழ்ந்து கரைந்தது கமறியது.. அவள் மீதான அவனது காதல் நிஜமானது என்பதில் அவள் வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.. என்ன தவம் செய்தாள்..! இப்படியோர் காதலைப் பெற..! சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை என்று கண்ணதாசன் எழுதிய காலத்தால் அழியாத காவிய வரிகளுக்கு இவன் உயிர் கொடுத்து விட்டானே..
"மழையில் கிளிகள் நனைந்தாலும்
             சாயம் போவதில்லை..
    அன்பே..! நம் காதல் அது போன்றது.."
விளையாட்டுப் பெண்ணாக அவனுக்குத் தோற்றமளித்துக் கொண்டிருந்த நந்தினியின் புதிய பரிணாமத்தில் ரவிச்சந்திரன் வியப்பில் ஆழ்ந்தான்.. குழந்தைத்தனத்தைத் தாண்டிய.. ஆழ்கடலின் ஆழ் உணர்வுகளை விழிகளில் தேக்கிய.. இவள் புதிதானவள்.. அவன் மனதின் காதலை உணர்ந்தவள்.. அவள் மனதின் காதலை உணர வைத்தவள்..
"பெண்ணுக்கு பேராசை
             வேறு ஒன்றும் இல்லை..
    சொன்னதைச் செய்தாலே
             நிகரேதும் இல்லை.."
அவனிடத்திலான அவளது அளவு கடந்த அன்பிற்கான காரணம் எதுவென்பதை உணர்த்தினாள் அவள்.. அவளுக்கு அவனுடைய பெருமைகளைப் பற்றிப் பெரிதாக ஒன்றுமில்லை.. அவனது கணக்கிலடங்கா சொத்துக்களைப் பற்றிய பிரக்ஞை எதுவும் இல்லை..
அவள் அவனை உயிராக நினைப்பதற்கான காரணம்  ஒன்றே ஒன்றுதான்.. அவன்..! அவன் மட்டுமே அவளது இலக்கு..! அனைத்து அடையாளங்களையும் தாண்டிய இரும்பு குணம் படைத்த அந்த இரும்புக்கை மாயாவியின் மீது அவள் உயிரை வைத்திருக்கிறாள்.. அவன் சாகசம் புரியும் மாவீரன்..! புத்திசாலி..! அவளை நேசிப்பவன்..! அவளது நேசத்துக்கு உரியவன்..! அவளை அறிந்தவன்..!
"நீ உறுதியானவன்..
             என் உரிமையானவன்..
    பசிருசியை.. பகல் இரவை..
             பகிர்ந்து கொள்ளும் தலைவன்..!
    தையத்தா.. தையத்தா.. தையத்தா..
             பையத்தா.. பையத்தா.. பஞ்சு முத்தம் தா.."
ரவிச்சந்திரனின் விழிகள் பிரகாசித்தன.. கூர்மையான அவனது பார்வை.. குளிர் நிரப்பி.. அவளது உடலில் மேய்ந்து கதகதப்பை உணர வைத்தது.. நந்தினி தவித்தாள்.. ஆகிருதியான காதலனின் தோள் சாய்ந்து.. முடி கோதி முத்தம் பதித்திடத் துடித்தாள்.. அவனைக் கண்ட நொடி முதல் இந்த நொடி வரை அவளை ஆவேசமாய் காதலிக்கும் அன்பானவனுக்குத் தன் அன்பைப் பரிசாக அள்ளியள்ளித் தரும் ஆவேசம் கொண்டாள்.. அவன் போல் யாருண்டு..? அவள் மீது ஆளுமை கொண்ட அவனது அன்பிற்கு நிகர் உண்டா..? ஜென்மங்கள் தோறும் அவளைக் காதலித்துக் கரம் பற்றியவனை சந்தித்து விட்ட சிலிர்ப்பு அவளது நாடி நரம்பெங்கும் வியாபித்திருக்கிறதே.. இந்த உணர்விற்கு ஈடேது..?
"பிறவி வந்து போனாலும்..
             உறவு முறிவதில்லை..
    உயிரை உயிரால் முறுக்கேற்றவா..?
             உயிரை உயிரால் முறுக்கேற்ற.. வா.."
கேள்வியைக் கேட்டு அவனையும் அழைத்தாள் அவள்.. அவன் தேடிய காதலை விழிகளில் தேக்கி நின்றாள்.. அவன் எதிர் பார்த்து ஏங்கிய காதலை தன்னுள் நிரப்பித் தேம்பினாள்..
'நந்தினி..!'
அவனது நாடி நரம்புகள் முறுக்கேறின.. நீ எனக்குத்தான் என்று அறைகூவி அவளை அடைகாத்த ஆஜானுபாகுவானவன் அவளை எழும்புகள் நொறுங்க இறுக்கி அணைக்கும் உன்மத்தம் கொண்டான்.. அவள் வேண்டும் என்று அவனது உடலில் இருந்த ஒட்டு மொத்த அணுக்களும் ஒன்று சேர்ந்து கூவின..
"உன்னைப் போன்ற அன்பானவன்..
             யார்க்கு இங்கு வாய்க்கும்..?
    உடலை உடலால் குளிப்பாட்டவா..?
             உடலை உடலால் குளிப்பாட்ட.. வா.."
அதே கேள்வி.. அதே அழைப்பு..
'ஏய்ய்..'
மேடையில் தாவி ஏறி அவளைக் கடத்தி விடும் வேகம் அவனுக்குள் ஊற்றெடுத்தது.. பிடிவாதமாக அவன் காதலை மறுத்தவள்.. இதோ.. அவனிடம் சரணடைந்து காதல் சொல்லி உருகிப் பாடுகிறாள்.. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.. ஆனால் காதல் வரவில்லையே என்று குழந்தையாகக் கேட்டவள், அணை உடைந்த வெள்ளமாக அவனை ஆக்ரமிக்க முற்படுகிறாள்..
அவளைத் தழுவி இதழ் சேர்க்காவிட்டால் அவனென்ன காதலன்..? அவனிடம் அஞ்சியவளை அவனை அழைக்க வைத்து விட்டானே.. இது அல்லவோ அவனது காதலின் வெற்றி..
அவனது விழிகளின் தாபத்தில் கரைந்து கொண்டிருந்தது அவளின் பெண் மனம்.. தேக்குமரம் போன்ற அவனது கட்டான உடல்கட்டில் கட்டுப்பட்டு மயங்கித் தவித்தது அவளின் பெண்மனம்.. செதுக்கி வைத்த கிரேக்க சிற்பத்தைப் போன்ற சீரான அவனது வடிவழிகில் சிக்கிச் சிதிலமானது அவளின் பெண் மனம்.. அலைபாயும் அவனது முடிக் கற்றையில் முகம் புதைத்து விரல் கோதி நறுமணம் நுகர ஏங்கியது அவளின் பெண் மனம்..
அரும்பாகி மொட்டாகி.. பூவாக விரிந்து மணம் பரப்பாமல் காதல் களத்தில் அவனிடம் சரணடைய முடியாதென பிடிவாதமாக போர் புரிந்த அவளின்
பெண் மனம் ஆயுதங்களைத் தூக்கியெறிந்து விட்டு நிராயுதபாணியாக அவனிடம் சரண் புக நினைக்கிறதே.. இது என்ன விந்தை..!
மொட்டு விரிந்து மலர்ந்து மணம் புரப்பும் காதல் பூவின் நறுமணத்தை அவனுக்குள் நிரப்பி அவனுடைய மூச்சுக் காற்றுடன் இவளது மூச்சுக்காற்றுக் கலக்க ஈருடல் ஓருயிர் ஆவதற்குத்தான் இத்தனை பிரயத்தனங்களும்..
"ஒரு கணம்
             நீயென்னைப் பிரிந்தாலும்.. கண்ணா..
    மறு கணம்
             நானுன்னைச் கேரும் வரம் வேண்டும்."
அவளைப் பிரிய அனுமதிக்காத பிடிவாதக்காரனிடம் வரம் கேட்டாள் அந்தப் பேதை.. நான் உன்னை விட்டு விலக மாட்டேன்.. நீ விலகுவதையும் அனுமதிக்க மாட்டேன் என்று அவளைச் சிறையெடுத்த காதல் மூர்க்கனிடம் விண்ணப்பித்தாள்.. அவனைத் தவிர எவரைப் பார்த்தாலும் அந்தப் பார்வைக்கான பதில் கிடைக்கும் வரை ஓயாத புலன் விசாரணையை அவள்மீது திணித்த அந்த அநியாயக்காரனிடம் இறைஞ்சினாள்..
"உன்னை இறுக்கி அணைக்கிறேன்..
                உயிர் நுரைக்க ரசிக்கிறேன்..
    அணுவணுவாய் உனைப் பிளந்து
                என் ஆயுள் அடைப்பேன்..
    தையத்தா.. தையத்தா.. தையத்தா..
               பையத்தா.. பையத்தா.. பஞ்சு முத்தம் தா.."
அவள் கேட்ட பஞ்சு முத்தத்தை இரும்பு முத்தமாக அவளுக்கு அள்ளி வழங்கினான் அந்த முரடன்.. மேடையை விட்டு இறங்கியவளைத் தோட்டத்தின் இருளுக்குள் இழுத்து இறுக்கிக் கொண்டான்... அவன்மீது காதல் வரவில்லையென்று அவள் சொன்ன காலத்திலேயே தள்ளி நிற்காதவன் இந்த அளவுக்கு அவள் காதலால் கசிந்துருகிப் பாடி அழைத்த பின்பு தள்ளியா நிற்பான்..?
சுவையான பாலை ருசி பார்க்கத் துடிக்கும் சிங்கமாக அவளை வேட்டையாட அவன் துடித்தான்.. இரை தேடும் சிங்கத்தின் கைகளில் அகப்பட்ட வேதனையும் வலியும் அவளுக்கு இல்லை.. இன்பமான அந்த இம்சைகள் அவளை எங்கெங்கோ அழைத்துச் சென்றன.. ஏதோ ஓர் நதியில் இறங்கும் உணர்வை அவளுக்கு அவன் கொடுத்துக் கொண்டிருந்தான்.. மூச்சுத் திணறும் முத்தங்கள்.. இன்பமான நதிச் சுழல்கள்.. ஈரம் படர்ந்த முகம்.. பனி படர்ந்த ரோஜா..
ஒப்புக்குக்கூட அவளது ஒப்புதலை அவன் கேட்கவில்லை.. நீயென் உரிமையானவள்... என் உடமையானவள்.. உன்னை ருசிக்க உன்னிடம்
நானென்ன அனுமதி கேட்பது என்று அத்து மீறினான்.. வேட்கை மிகுந்த அவனது தழுவல்கள் அவளுக்குப் பரிச்சயமில்லாதவை.. அவனது தழுவல்கள் அவளுக்குப் புதிதல்ல.. மென்மையாக அவளைத் தொட்டுத் தழுவி விட்டு விலகும் தழுவலாக இந்தத் தழுவல்கள் இல்லை..
அவனது வெப்ப மூச்சுக் காற்று அவளது உடலைத் துளைத்த கோழிக்கோடின் குளிர் காற்றை அனலாக்கியது.. ஊசி முனைத் தாக்குதலை நிகழ்த்திய குளிருக்கு கேடயமாக அவனது மூச்சுக்காற்று அவளை அரவணைத்தது.. தகிக்கும் காதலின் வெம்மையோடு அவன் உடல் அவள்மீது அழுந்தியிருந்ததில் நந்தினி இனம் புரியாத உணர்வுகளின் ஆளுகைக்கு ஆட்பட்டாள்.. இரும்புக்கரங்கள் அவளை வளைத்திருந்தன.. அத்து மீறிப் பிரவேசிக்கும் அவனது கரங்களுக்குத் 'தடா..' போடும் முயற்சியில் தோல்வியுற்றாள்.. அவள்மீது போர்வையாகக் கவிந்திருந்தவனை அப்புறப் படுத்தும் திராணியில்லாமல் அவனுடைய கைகளுக்குள் அடைக்கலமாகி அவன் மார்பில் புதைந்து விட்டாள்..
நீ எனக்கு சகலமும்..
இந்த சரணாகதியில் ஆறிப் போய் வருகின்றன அனைத்து மன ரணங்களும்..
ரவிச்சந்திரனுக்கும் அப்படித்தான் இருந்தது.. அதற்கு முன்னாலும் அவள் அவனிடம் அடைக்கலமாகியிருக் கிறாள்.. அது உண்மையிலேயே அடைக்கலம் தேடும் அடைக்கலம்.. அவனை ஓர் பாதுகாவலனாக மட்டுமே உணர்ந்து அவள் புகுந்த அடைக்கலம்.
இப்போது அப்படியில்லை.. அவனே சகலமும் என்று உடலும் மனமும் உருக அவனிடம் அடைக்கலமாகியிருக் கிறாள் அவள்..
'இது போன்ற ஓர்நாள் இதற்கு முன்னால் வந்ததில்லை..'
எத்தனையோ இமாலய வெற்றிகளை ஈட்டிய அந்த வெற்றியாளனின் சூடான இதழ்கள் அவளது உச்சந்தலையில் பதிந்து அன்றைய வெற்றிக்கு எதுவும் இணையில்லை என்று அறிவித்தது.. அவள் மனதை வெற்றி கொண்டு விட்ட கர்வப் புன்னகை அவன் இதழ்களில் விரிந்தது..
"நந்தினி.."
"ம்ம்ம்.."
"எத்தனை நாளா இதை வெளியில் சொல்லாம மனதுக்குள்ளே வைத்திருந்த..?"
"எத்தனை நாளா..? நீங்க வேற.. இந்த இரண்டு நாள்களைக் கடக்கிறதுக்குள்ள போதும்.. போதும்ன்னு ஆகி வாழ்க்கையே வெறுத்துருச்சு.. உங்களிடம் சொல்லவும் முடியல.. சொல்லாம இருக்கவும் முடியல.. அழுகையழுகையாய் வந்துச்சு.. தெரியுமா..?"
தேம்பியவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளது பட்டுக் கன்னத்தில் பட்டு முத்தமொன்றைத் தந்தவன்..
"குழந்தைடி.. நீ.." என்று பிரியத்துடன் சொன்னான்..
"ஹை.. இப்படிச் சொல்லி எஸ்கேப் ஆகிரலாம்ன்னு பிளானா..? அதுதான் நடக்காது.. இனி தரங்கிணி, கிண்கிணின்னு எவளாவது உங்க பக்கத்தில் வந்தான்னா நடக்கிறதே வேற.. சொல்லிட்டேன்.."
"அடேங்கப்பா.. பயமாய் இருக்கே.. அத்தனை டெர்ரரா நீ..?"
அவளது முகத்தைக் கைகளில் ஏந்திக் காதலுடன் பார்த்தவன்..
"இரண்டு நாள்களுக்குள் இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கயே.. இத்தனை நாள்களா உன்மீது காதலை வைத்து விட்டு.. நீ 'நோ..' சொன்னதில நான் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பேன்..?" என்று கேட்டான்..
"ஆமாமில்ல.. ஸாரி.. ஸாரி.." அவள் அவனது கோட்டின் நுனியைப் பிடித்துத் திருகியபடி அண்ணாந்து முகம் பார்த்தாள்..
"தரங்கிணி மேல உனக்கு இவ்வளவு கோபம் வருதே.. இதைப் போல்தானே உன்னிடம் யார் பேசினாலும் எனக்கும் கோபம் வரும்..?"
அவனை அவன் உணர்த்தி விட்டதில் நெகிழ்ந்து போன நந்தினி.. அனைத்திற்கும் ஈடுகட்டப் போவதைப் போல அவனது கழுத்தை வளைத்து அவனது முகத்தை இழுத்து எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -174
எண்ணியிருந்தது ஈடேற -174
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-174.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-174.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy