எண்ணியிருந்தது ஈடேற -173

173 ' என்னாங்கிற.. இப்ப என்னாங்கிற. ?' என்று முரசு கொட்டி விடத் துடிப்புக் கொண்டாள் நந்தினி.. ' எதுக்கெடுத்தாலும் என்...


173


'என்னாங்கிற.. இப்ப என்னாங்கிற.?' என்று முரசு கொட்டி விடத் துடிப்புக் கொண்டாள் நந்தினி..
'எதுக்கெடுத்தாலும் என்னோட செக்கரட்டரி.. என்னோட செக்கரட்டரின்னு என்னை ஏலம் போடறான்.. நான் என்ன பிறக்கறப்பவே இவனோட செக்கரட்டரியாவா பிறப்பெடுத்தேன்..? வாயைத் திறந்தாலே இதே பேச்சுத்தான்.. பெரிசா செக்கரட்டரியைக் கண்டிருக்கவன்..'
தூக்கம் கலைந்த எரிச்சல்.. மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த முடியாத கோபம்.. இயலாமை என்று அனைத்தும் ஒன்று சேர்ந்ததில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு..
'நான் இவனோட செக்கரட்டரிதான்.. அதுக்கு இப்ப என்னவாம்..? செக்கரட்டரிக்கு என்னத்தை வைச்சிருக்கான்.. வேலையை வேணும்ன்னா வைச்சிருப்பான்.. கம்மாண்டர்..'
"திட்டி முடிச்சாச்சா..?"
மனதில் அவள் தாளித்துக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டதைப் போல அவன் கேட்டான்..
"வேணாம் பாஸ்.. தூங்கிக்கிட்டு இருந்தவளை எழுப்பி உட்கார வைச்சு வம்புக்கு வராதீங்க.. நான் உங்களைத் திட்டினேனா..? தேமேன்னு இருக்கேன்.. வம்பிழுக்காதீங்க.."
"இப்ப உன் மனதுக்குள் என்னைத் திட்டலை..?"
"ஆமாமாம்.. இவரு பெரிய சூப்பர் மேன்.. என் மனசுக்குள்ள நுழைஞ்சு கண்டு பிடிச்சுட்டாரு.. போவீங்களா.."
"ஓ..! இதுதான் சாக்குன்னு என்னைத் தனியா வேலை செய்டான்னு அனுப்பி வைச்சுட்டு ஹாயாய் ரூமில தூங்கி எழுந்திருக்கலாம்ன்னு பிளான் பண்றியோ..?"
அப்படிச் செய்தால்தான் என்ன என்று நந்தினிக்குத் தோன்றிவிட்டது.. அப்போதைய மனநிலையில் அவள் தனிமையில் இருப்பதே சாலச் சிறந்தது.. அவன் முன்னால் உட்கார்ந்து முகத்தைப் பார்த்துப் பேசி வேலை செய்து விட முடியுமென்ற தன்னம்பிக்கை அவளுக்கு வரவில்லை..
'இவனே ஐடியா கொடுக்கிறான்.. வாழ்க.. வாழ்க..' நந்தினி மூக்கை உறிஞ்சினாள்..
"எதுக்கு இந்த பில்ட்-அப்..?"
"பாஸ்.. எனக்குத் தலைவலி.."
"பாருடா.. சொல்லவே இல்லை.."
"இப்பத்தான் சொல்லிட்டேனே.."
"அதுசரி.. ஒற்றைத் தலைவலியா..? இரட்டைத் தலைவலியா..?"
"நீங்க மட்டும்தானே இருக்கீங்க பாஸ்..?"
"இதென்ன கேள்வி..?"
"இல்லை.. கூட அந்த தரங்கிணியோ.. கிண்கிணியோ இருக்காளான்னு கேட்டேன்.."
"ரப்பிஷ்..! இது யாழ் ஹோட்டல்..! என் ரூம்..! நான் மட்டும்தான் இருக்கேன்.."
"அப்ப இது ஒற்றைத் தலைவலி மட்டும்தான் பாஸ்.."
"சப்போஸ்.. தரங்கிணியும் என் கூட இருந்திருந்தா..?"
"நிச்சயமா இரட்டைத் தலைவலின்னு சொல்லியிருப்பேன்.."
"நீ இருக்கியே.."
அவன் ரசித்துச் சிரித்தான்.. என் வயிற்றெரிச்சல் உனக்கு சிரிப்பை மூட்டுகிறதா என்ற கடுப்புக் கிளம்பியது அவளுக்கு..
"நான் இல்லாமப் போனா சந்தோசப் படுவீங்க போல இருக்கே.." வெடுக்கென்று சொல்லி விட்டாள்..
"ப்ம்ச்.. என்ன பேச்சு இது.."
அவன் அதட்டியது சுகமாக இருந்துத.. உரிமையான அந்த அதட்டல் அவளைத் தாலாட்டியது.. மனதை அழுத்தும் பாரத்தை அவனிடம் சொல்ல முடியாமலும்.. சொல்லத் தெரியாமலும் தவிக்கும் இந்தத் தவிப்புக் கொடுமையானது.. அவன் மடியில் முகம் புதைத்து அழுதால் தேவலை.. எங்கே.. காதல் அவள் மனதில் நுழையாமல் இருந்தவரை நினைத்ததை செயல்படுத்துவது அவளுக்கு எளிதானதாக இருந்தது.. காதல் புகுந்த பின்னால் அவன் நிழலை அணுகக் கூட மலைப்பாக இருக்கிறதே..
"ரூமுக்குள்ளே அடைஞ்சுக்கிட்டு இருந்தால் இப்படித்தான் நெகடிவ்வா பேசத் தோணும்.. கிளம்பு.. கிளம்பு.."
"கிளம்பி..?"
"வேலையிருக்கும்மா.."
'அம்மாவா..?' அவள் மனம் சிணுங்கியது..
அடாவடித்தனமாக அவன் அழைக்கும் 'வாடி, போடி' அழைப்புக்காக மனம் ஏங்கியது..
'வேலையிருக்குடின்னு சொன்னால்தான் என்னவாம்.. அந்தத் தரங்கிணியைப் பார்த்த பின்னால் ஆளே மாறிட்டான்..'
அவள் மீதான காதலும் மாறி விட்டதோ என்ற சம்சயத்தில் அவள் கண்கள் கண்ணீரில் மிதந்தன.. அவன் தேடி வந்தபோது அவள் அலட்சியப் படுத்தினாள்.. இப்போது அவள் மனம் அவனைத் தேடும்போது அவன் அலட்சியப் படுத்துகிறானா..? இது அவன் முறையா..?
"வேலை இருந்தா நான் கிளம்பி வரனுமா..? இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை பார்க்க முடியாது பாஸ்.. லேபர் லா என்ன சொல்லுதுன்னு தெரியுமா..?"
"ஓ..! லேபர்ஸ் லா பேசறிங்களோ.."
"யெஸ் பாஸ்.."
"யூனியன் ஆரம்பிக்கப் பிளான் பண்ணியிருக்கயா..?"
"எந்தப் பிளானையும் நான் யோசிக்கறதில்ல பாஸ்.. நீங்க எதுக்கு இருக்கீங்க..? இதுக்கு பிளான் பண்ணியிருக்கயா.. அதுக்குப் பிளான் பண்ணியிருக்கயான்னு ஐடியாக்களை அள்ளி விட்டிற மாட்டிங்களா..?"
மறுமுனையில் அவன் கடகடவென சிரித்து வைத்தான்.. மல்லிகைப்பூ பல்வரிசையில் நினைவில் அவளது மனம் மயங்கியது..
'ஏண்டா மயக்கற..?' மனதுக்குள் அரற்றினாள்..
"உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு.."
"அது பாட்டுக்கு அது இருக்கு.. அதை எதுக்கு தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணச் சொல்றிங்க..?"
"உத்ரா வந்ததில இருந்து ஓர் நாளாவது நீ உன் டியூட்டியைப் பார்த்திருக்கிறயா..?"
"இல்லை.. இதை என்கிட்டக் கேட்டாலே பதில் சொல்லிருவேனே.. தேவையில்லாம மனச்சாட்சியைப் போய் இழுக்கறிங்களே.. அதுவா உங்க பெர்சனல் செக்கரட்டரி..?"
"வாலு..!"
அவன் ரசித்துச் சிரித்தான்.. உன் கண்களுக்கு நான் வாலாக மட்டும்தான் தெரிகிறேனா என்று மனம் குமைந்தாள் நந்தினி.. அவளும் பெண்தான்.. அவளுக்கென்றும் ஓர் மனம் இருக்கிறது என்பதை அவன் யோசிக்கவே மாட்டானா..?
'முதலில் நீ யோசித்தாயா..?' உணக்கையாய் கேள்வி கேட்டு மடக்கியது அவளின் மனச்சாட்சி..
'அவன் உன்னைச் சாட்சிக்குக் கூப்பிட்டான்னு அவனுக்கு வக்காலத்து வாங்கறியா..? அடங்கு மனச்சாட்சியே..' என்று அடக்கி வைத்தாள் நந்தினி..
"நான் மட்டும் ஊர் சுற்றலை பாஸ்.. நீங்களும்தான் ஊர் சுற்றினீங்க.. மனசிலாயி.."
"இப்ப நான் வொர்க்கைப் பார்க்கக் கிளம்பனும்.. ஸோ.. நீயும் என்னுடன் கிளம்பனும்.. மனசிலாயி.."
'விடமாட்டானே..'
உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு..
"ஊம்.. ஊம்.." என்றாள் நந்தினி..
"ஆஃப் ஆன் அவரில நீ கிளம்பியாகனும்.." உத்தரவிட்டான் அவன்..
'அதிகாரமெல்லாம் தூள் பறக்குமே.. யாரு இவன்..? கம்மாண்டராச்சே..'
"கேட்டுக்கிட்டு இருக்கியா..?"
"கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன் பாஸ்.. கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்.. வேற வழி..?"
தெரிந்தால் சரி.. லேபர்ஸ் லாவையெல்லாம் மூட்டை கட்டி கடலில போட்டுட்டு சீக்கிரமாக் கிளம்பி வா..
"அதுக்கென்ன பாஸ்.. அப்படியே செய்துட்டாப் போச்சு.. யாரு நீங்க..?"
"நீயே சொல்லு.."
"என்ன்ன்.. னோட பாஸ்ஸ்ஸ்.."
"பல்லைக் கடித்துக்கிட்டே சொல்கிறதைப் போல இருக்கு.."
"ஹி.. ஹி.. இல்ல பாஸ்.."
"அதுக்காக இந்த அளவுக்கு சிரித்து மழுப்ப வேண்டாம்.."
'எல்லாத்துக்கும் ஒரு ஷொட்டுக் கொடுத்துருவான்..'
"நந்தினி.."
திடிரென்று அவன் குரல் மென்மையானது..
'என்னவாம்..?' அவள் திருதிருத்தாள்..
"நாம கோலிக்கோடில ஷாப்பிங் போனப்ப மெரூன் கலர் ஸாரி மட்டும் வாங்கலை.."
'அதை எதுக்கு இப்பச் சொல்றான்..?'
"இன்னும் கொஞ்சம் வாங்கினோம்ன்னு நினைக்கிறேன்.."
"நினைக்கிறது சரிதான் பாஸ்.. நாலைஞ்சு சேலை வாங்கினேன்.. எல்லாத்துக்கும் கணக்கு வைச்சிருக்கேன்.. நீங்க சேலரியில கழித்துக்கங்க.."
"தத்தி.."
அவன் போட்ட சப்தத்தில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது..
'எதுக்கு இப்படிக் கத்தறான்..?'
அவனுடைய திடிர் சினத்திற்கான காரணம் யாதாக இருக்கக் கூடும்..? அவள் ஒன்றும் தவறாய் எதையும் சொல்லி விடவில்லையே..
"நீ இப்படியேதான் பேசிக்கிட்டு இருப்பியா நந்தினி.. மாறவே மாட்டியா..?"
"சொல்லிக் காட்ட வேணாம் பாஸ்.." அவளுக்கு கோபம் வந்து விட்டது..
"உங்க தரங்கிணி, அஜந்தா அளவுக்கு நான் அறிவாளியில்லைதான்.. அதுக்காக ஒரேயடியா தத்தியும் இல்லை.. என் அறிவோட லெவலைப் பத்தி உங்களுக்கென்ன தெரியும்..? நான் காலேஜ் பர்ஸ்ட்.. யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட்.."
"அதுதான் எனக்கு டவுட்டா இருக்கு.. உன் பெயர்தானா அதுன்னு செக் பண்ணச் சொல்லனும்.." கோபமாக அவன் சொல்ல..
"என்னது..?" என்று இவள் சிலிர்த்தெழுந்தாள்..
"படிப்பில பர்ஸ்ட்டா வந்து என்ன செய்ய..? சொல்ல வருகிறதைப் புரிஞ்சுக்கனும்.. அதுதான் சுத்தமா இல்லையே.."
"ஓகே.. ஓகே.. என்னத்தை சொல்ல வந்தீங்க..?"
அரை மனதாகத்தான் அவள் கேட்டாள்.. அவளை அவன் மட்டம் தட்டுகிறான் என்று அவளது மனம் குமைந்து கொண்டிருந்தது.. இது முதல்தடவையா..? எதற்கெடுத்தாலும் அவளை மட்டம் தட்டுவதையே வேலையாக வைத்திருக்கிறான்..
"பிங்க் கலர் ஸாரி ஒன்றை எடுத்தியே.."
"ஆமாம்.. எடுத்தேன்.. இன்னும் ஒருதரம் கூடக் கட்டலை.. எங்கே..? உங்க ஊரில அத்தனை அழகிகளும் பிங்க் கலர்ல ஜொலித்து என்னைச் சோதிக்கிறாங்களே.. இவங்க கலருக்கு முன்னாலே என் சேலை கலர் எடுபடுமான்னு கட்டாமலே வைச்சிருக்கேன்.."
"இப்ப அதை உடுத்திக்கயேன்.."
அவனது நேயர் விருப்பத்தில் ஆச்சரியமானாள் நந்தினி.. என்னடா இது என்று ஆகிவிட்டது அவளுக்கு..
பிங்க கலர் சேலைக்கும் அவனுடைய இம்பார்ட்டண்ட் வொர்க்கிற்கும் என்ன சம்பந்தம்..?
இருந்திருந்து அவளை பிங்க் கலர் சேலையில் பார்க்க நேயர் விருப்பம் தெரிவித்திருக்கிறான்.. அவனைப் போன்ற பேரழகனை ஜீன்ஸ் பேண்ட், சர்ட்டில் பார்க்க அவள் ஆசைப்படுவதில் ஓர் அர்த்தமுள்ளது.. அந்தப் பேரழகன் அவளை பிங்க் கலர் சேலையில் பார்க்க விரும்புவது உலக அதிசயமல்லவா..?
'ஒருவேளை.. இன்னும் இவன் மனதில் என்மீது காதல் இருக்குமோ..?'
மனதில் ஆசையைப் புறம் தள்ளி ஒதுக்கினாள் நந்தினி.. முடவி கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது.. அவன் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர பிம்பம் கொண்ட கோடிஸ்வரப் பேரழகன்.. ராஜ பாரம்பர்யம் கொண்டவன்.. நந்தினி தஞ்சாவூர் ஜவுளிக்கடை மேகநாதனின் மகள்.. விண்மீன் மீது மண்மீன் ஆசை கொள்வதா..?
"ஓகே பாஸ்.." உடனடியாக சம்மதம் சொன்னாள் நந்தினி..
அவன் கேட்ட காரணத்தினாலேயே அந்தச் சேலையை அவளுக்குப் பிடித்துப் போய் விட்டது.. குளித்து உடைமாற்றி.. முடியைத் தளர்வாகப் பின்னலிட்டு.. காது, கழுத்து, கைகளில் செம்பவள நிறத்திலான நகைகளை அணிந்து கண்ணாடி பார்த்தவளுக்கு..
'ஆஹா.. நானும் அழகுதான்..' என்று குதூகலம் உண்டானது..
அவளுக்காக ரிசப்சனில் காத்திருந்த ரவிச்சந்திரனின் கண்கள் மின்னின.. இது போன்ற பிரத்யேக மின்னலைப் பார்த்து எத்தனை நாளானது என்ற பரவசத்துடன்
அவனைப் பார்த்தாள்.. உத்ராவும், வினித்தும் ஊர் சுற்றப் போய் விட்டார்கள் என்று சொன்னான் அவன்.. அவர்களைப் பற்றிய நினைவேயில்லாமல் அவன் கேட்ட பிங்க வண்ணப் புடவையின் நினைவில் இருந்தவள் ஒப்புக்கு தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாள்..
"போகலாமா..?" அவன் கேட்டான்..
ஏதோ முக்கிய வேலை என்றானே என்ற நினைவில் அவள் தலையை அசைத்தாள்.. அவன் பக்கத்தில் உட்கார்ந்து தனித்துப் பயணம் செய்தது அவளுக்கு இனிப்பாக இருந்தது.. கேரளத்துக்கே உரிய பூஞ்செடி, கொடிகளின் மத்தியில் இருந்த பங்களாவின் போர்டிகோவில் கார் நின்றது.. உள்ளிருந்து மேற்கத்திய இசை மெல்லிசையாய் கசிந்து கொண்டிருந்தது..
"இம்பார்ட்டண்ட் வொர்க்குன்னு சொன்னிங்க..?" புரியாமல் கேட்டாள் நந்தினி..
"இம்பார்ட்டண்ட் பிஸினெஸ் பார்ட்டி.." சுருக்கமாக பதில் அளித்தான் ரவிச்சந்திரன்..
பார்ட்டி ஹாலுக்குள் நுழையும் போது வெகு இயல்பாக அவளது இடையை அவனது கரம் வளைத்து இறுக்கிக் கொண்டது.. அவள் விலக முயன்றாள்.. முடியவில்லை.. வரவேற்றவர்களிடம் அவள் நந்தினி என்று மட்டும் சொன்னான்.. மெல்லிசைக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்த ஜோடிகளுடன் அவளையும் இழுத்து அணைத்துக் கொண்ட ஐக்கியமானான்.. நந்தினிக்கு புது வருடப் பிறப்பன்று அவனும் அவளும் ஆடிய நடனம் நினைவுக்கு வந்தது..
இன்றும் அதைப் போலவே அவளது தோள் தொட்டு.. அணைத்துத் தழுவி கண்களுக்குள் கிறக்கமாக பார்த்தபடி ஆடினான்.. அவனுடைய கிறக்கம் அவளையும் தொற்றிக் கொண்டது.. அவன் மீது சரிந்து அவள் தோள் சாய்ந்த தருணத்தில் அவளது காதோரமாக முத்தமிட்டு..
"இப்போது உன் காதலைச் சொல்லுடி.." என்றான் ரவிச்சந்திரன்..
'இவனுக்குத் தெரியுமா..?'
விழி விரிய அவள் அவனுடைய முகத்தை நோக்க.. அவன் குனிந்து அவளது இமைகளில் முத்தமிட்டான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -173
எண்ணியிருந்தது ஈடேற -173
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-173.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-173.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy