எண்ணியிருந்தது ஈடேற -172

  172 நந்தினிக்குப் பிடித்தமான மலபார் பிரியாணியின் மணம் நாசியைத் துளைத்தாலும் அதைப் பற்றிய பிரக்ஞையின்றி யாருக்கான விருந்தோ என்று உட்...


 172

நந்தினிக்குப் பிடித்தமான மலபார் பிரியாணியின் மணம் நாசியைத் துளைத்தாலும் அதைப் பற்றிய பிரக்ஞையின்றி யாருக்கான விருந்தோ என்று உட்கார்ந்திருந்தாள் நந்தினி.. ரவிச்சந்திரனின் பாதம் நீண்டு டேபிளுக்கு அடியிலிருந்த அவளது பாதத்தில் படிந்தது.. அந்த ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவள் சட்டென தன் காலை இழுத்துக் கொண்டு படபடத்தாள்..
"வாட் இஸ் திஸ் பாஸ்..?"
"ஷாக் ட்ரீட்மெண்ட்.."
"வாட் ஃபார்..?"
"உன் மனதை மயக்கும் மலபார் பிரியாணியைக் கண்டுக்காம உட்கார்ந்திருக்கிறயே.. பிரியாணி மேல் என்ன கோபம்..? ஏன் இதை மொக்கலை..?"
"பசியில்லை.."
"என்னது..?"
ஆச்சரியத்துடன் கண்களை அகல விரித்தான் ரவிச்சந்திரன்.. கேட்பதற்கரிய வார்த்தைகளைக் கேட்டு விட்ட முகபாவனையுடன்..
"நீயா இதைச் சொல்கிற..? ஐ கான்ட் பிலிவ் திஸ்.." என்றான்..
'என்னை சாப்பாட்டு ராமின்னே முடிவு கட்டிட்டான்..' நந்தினியின் கண்களில் கண்ணீர் தளும்பி விட்டது..
"ஹேய்.. எதுக்காக கண் கலங்கற..?"
"நத்திங்..."
"நத்திங் ஹெஸ் மெனிதிங்.. யு நோ..?"
"ஐ டோன்ட் நோ.."
"உனக்கு எதுதான் தெரிந்திருக்கு..?"
அவள் முன்னால் பிரியாணித் தட்டை நகர்த்திய ரவிச்சந்திரன் அவளது விழிகளுக்குள் ஊடுறுவும் ஆழ்ந்த பார்வையோடு..
"சாப்பிடு.." என்றான்..
மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவளைப் போலச் சாப்பிட ஆரம்பித்தான் நந்தினி.. அவளுக்கு மறுக்கத் தோன்ற வில்லை.. அவன் சொல்வதை செய்து விட வேண்டும் போல இருந்தது.. எதனால் என்று புரியவில்லை..
அவன் மீதான அவளது  காதல் அவனுக்கு அவளை அடிமையாக்குகிறதா..?
காதல் அடிமை கொள்வதென்றால் அவள் மீது காதல் கொண்ட அவன் அவளுக்கு அடிமையாகி விட்டானா என்ன..? இல்லையே..
'இப்போதும் இவன் மனதில் என் மீது காதல் இருக்கிறதா..?' ஏக்கத்துடன் சாப்பிட்டு முடித்து எழுந்தாள் நந்தினி..
"ஈவினிங் ரூமை வெகேட் பண்ணனும்னு சொன்னீங்கள்ல.. எத்தனை மணிக்கு நாங்க ரெடியாகனும்..? அதைத் தெரிந்துக்கிட்டா திங்ஸை பேக் பண்ண வசதியாயிருக்கும்.." வினித் கேட்டான்..
"இப்ப புரோக்ராமை மாத்திட்டேன்.. நாம் வயநாட்டைச் சுற்றிப் பார்த்துட்டு அப்புறமா எங்க அரண்மனைக்குப் போகலாம்.. இப்பக் கிடைக்கிற பிரைவஸி.. அரண்மனையில உங்களுக்குக் கிடைக்கிறது சிரமம்ன்னு எனக்குத் தோணுது.. நீங்க சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிறதுக்கு இரண்டு நாள்கள் இருக்கிறப்ப அரண்மனைக்குப் போனால் போதும்.. அப்பா, அம்மா உங்களைப் பார்த்ததும் சந்தோசப் படுவாங்க.. நீங்க அரண்மனையிலே தங்கி விழுந்து சாப்பிடனும்னு நினைப்பாங்க.. உங்களாலே வயநாட்டைச் சுற்றிப் பார்க்க முடியாது.."
ரவிச்சந்திரனின் நீண்ட விளக்கத்தில் புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்டாள் நந்தினி.. அவளை அவன் பார்த்த பார்வையில் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கக்கூட அவளால் முடியவில்லை.. அது எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.. அதைத் தெரிந்து கொண்டு அவளுக்கு ஆகப் போவதென்ன..? அரண்மனைக்குப் போனாலாவது அத்தை, ரம்ய மாலினியென்று கலகலப்பாக இருக்கும்.. வினித்தையும் உத்ராவையும் ஊரைச் சுற்றிப் பார்க்க அனுப்பி வைத்து விட்டு அரண்மனையின் கலகலப்பில் அவள்
ஒன்றிக் கொள்ளலாம்.. மனதுக்குள் இத்தனை சோர்வு இருக்காது..
"பட்.. வயநாட்டில்தானே உங்க அரண்மனை இருக்கு..? அங்கே தங்காம இங்கே ஹோட்டலில் தங்கி உங்க ஊரைச் சுற்றிப் பார்த்தா சரியாய் இருக்குமா சார்.."
"ஓ.. நீங்க வயநாடுன்னா அது தனி ஊர்ன்னு நினைத்துட்டிங்களா வினித்..? நோ.. நோ.. இது எங்க டிஸ்ட்ரிக்கோட நேம்.. சுல்தான் பத்தேரி.. எடக்கல் குகை.. ஜைனர் கோவில்ன்னு இங்கே பார்க்கிறதுக்கு நிறைய இடங்கள் இருக்கு.. கோழிக்கோடு வெரி நியரஸ்ட் சிட்டி.."
"எங்க பிரைவஸிக்காக நீங்க காம்ப்ரமைஸ் ஆக வேண்டாம் சார்.. நாங்க இங்கே உங்களோட கெஸ்ட்டாத்தான் வந்திருக்கோம்.. ஹனிமூனெல்லாம் அப்புறம்தான்.."
"உங்களுக்காக நான் காம்ப்ரமைஸ் ஆகலை வினித்.. இதுவும் என்னோட இடம்தான்.. யாழ் ஹோட்டலும் அரண்மனையும் ஒன்றுதான்.. நீங்க இங்கேயிருந்து சுத்திப் பார்த்துட்டு அப்புறமா ஓன் ஆர் டூ டேஸ் அரண்மனையில ஸ்டே பண்ணிட்டுக் கிளம்பறதுதான் பெட்டரா இருக்கும்.."
"தேங்க் யு சார்.."
ஓர்விதமான விடுதலையுணர்வு மனதை வியாபிக்க மனமார நன்றி சொன்னான் வினித்... அவனுக்கு அரண்மனையில் தங்கி ஹனிமூன் கொண்டாடுவதில் விருப்பமில்லை.. அது அரண்மனையாக இருந்தாலும் ரவிச்சந்திரனின் குடும்பம் வசிக்கும் வீடு.. அங்கிருந்து ஹனிமூன் கொண்டாடலாமே..
'யாழ்' ஹோட்டல் அவனுக்கும் உத்ராவுக்குமான தேநிலவுத் தனிமையை வெகு இனிமையாக கொடுத்தது.. உணவருந்துவது முதல் ஊர் சுற்றுவது வரை அவர்களுக்கான தனிமையை வழங்கி ரவிச்சந்திரன் தள்ளியே நின்றான்.. நந்தினியையும் இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டான்..
அந்தச் சூழல் அப்படியே நீடித்ததில் வினித்துக்கு சந்தோசமாக இருந்தது.. இடையூரற்ற தேநிலவு கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..
"தேங்க்ஸெல்லாம் எதுக்கு வினித்..? நீங்க என்னோட பிரண்ட்.. தேங்க்ஸ் சொல்லி தள்ளி நிற்கக் கூடாது.." அன்புடன் கடிந்து கொண்டான் ரவிச்சந்திரன்.
நந்தினிக்கு அது இதமாக இருந்தது.. அவளுக்காக உத்ரா வரலாம்... வினித்தும் வந்திருக்கிறானே... தேநிலவைப் பற்றிய அவனது கனவுகள் தடைபடாமல் நிறைவேற வேண்டும் என்று நந்தினி விரும்பினாள்.. இதைப்பற்றிய எண்ணம் அவளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னால் வரவில்லையே.. உத்ரா அவளைப் பார்க்க வந்திருக்கிறாள் என்று ஒட்டுப்புல்போல அவளுடன் ஒட்டிக் கொள்ளத் துடித்தாளே..
எந்த நொடியில் ரவிச்சந்திரனின் மீதான காதல் அவளுக்குள் தகிக்க ஆரபித்ததோ.. அந்த நொடியிலிருந்து அவளுக்குள் அரும்பாக இருந்த உணர்வுகள் மலர்ந்து விரிந்து அவளை குழந்தைத்தனத்திலிருந்து மீட்டு முழுமையான பெண்ணாக்கி விட்டனவே..
காதல் சொல்ல தனிமை கிடைக்கவில்லையென்று அவள் இந்த அளவுக்கு ஏங்குகிறாளே.. திருமணமாகி தேநிலவு கொண்டாட வந்திருப்பவர்கள் தனிமைக்காக ஏங்க மாட்டார்களா..?
"பை வினித்.. ஈவினிங் நீங்களும் உத்ராவும் அவுட்டிங் போய்விட்டு வர கார் ரெடியா இருக்கும்.. நந்தினி என்கூட ஜாயின் பண்ணியாகனும்.. சம் இம்பார்ட்டண்ட் வொர்க்.."
"ஸோ வாட் சார்..? நாங்க அவுட்டிங் போய்க்கறோம்.. நந்தினியை டிஸ்டர்ப் பண்ணலை.."
கண்ணா.. லட்டு திங்க ஆசையா என்று கேட்டால் எப்படியொரு மகிழ்வுடன் பதிலைச் சொல்வார்களோ.. அது போன்ற மகிழ்வோடு பதில் சொன்னான் வினித்..
'டிஸ்டர்ப் பண்றது நானா.. இல்லை.. இவங்களா..?'
வினித்தின் சந்தோசத்தை உணர்ந்தவளாய் நொந்து போன பார்வை பார்த்தாள் நந்தினி.. ரவிச்சந்திரன் நமட்டுச் சிரிப்பு சிரிப்பதைப் போல இருந்தது..
'சும்மாவே சிரிப்பான்.. சான்ஸ் கிடைச்சா விட்டா வைப்பான்..? ஆனாலும் நான் இந்த அளவுக்கு தத்தியா இருக்கக் கூடாது.. இவன் தத்தின்னு சொன்னா மட்டும் கோபப்படறேனா.. இப்படியிருந்தா இவன் தத்தின்னு சொல்லாம புத்திசாலின்னா கொஞ்சுவான்..? நந்தினி.. நீ இருக்கியே..'
ரவிச்சந்திரனின் நமட்டுச் சிரிப்பைக் கவனிக்காதவளைப் போல நகர்ந்தாள் நந்தினி..
"நீ எங்கே போகிற..? வொர்க் விசயமா உன்னிடம் டிஸ்கஸ் பண்ணனும்.. அவங்க ஹனிமூன் கப்புள்.. நீ அப்படியா..? என்னுடைய பெர்சனல் செக்கரட்டரி..! மனசிலாயி..?"
"மனசில ஆகியாச்சு.. சொல்லுங்க..." பற்களை நறநறத்தாள் நந்தினி..
சிரித்தபடி வினித்தும் உத்ராவும் சென்றுவிட.. நந்தினியும் ரவிச்சந்திரனும் தனித்து நின்றார்கள்.. ஏஸியின் இதமான குளிர் நந்தினியை சிலிர்க்க வைத்தது.. ஏஸி அறையில் இல்லாவிட்டாலும் கோழிக்கோடின் குளிர் சில்லிடத்தான் வைக்கும்.. துளைக்கும் ரவிச்சந்திரனின் பார்வையை உணராதவளைப் போலச் சிலையாக நின்றாள் நந்தினி.. அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க அவளால் முடியவில்லை.. தடுமாற்றமாக இருந்தது.. இனி அவன் முகம் பார்த்துப் பேச முடியுமா என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.. நிச்சயமாக முடியாது.. உள்ளம் நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..?
இந்தப் பொல்லாத காதல் அவளது உள்ளத்தில் புகுந்து விடும் என்று அவள் கனவா கண்டாள்..? புகுந்து விட்டதே..
"ஏய்ய்.."
'என்னது.. 'ஏய்யா..?'' வெடுக்கென்று தலை நிமிர்ந்த நந்தினி..
"என் பெயர் ஒன்னும் 'ஏய்'யில்லை.. நந்தினி..!" என்று சிடுசிடுத்தாள்..
"ஈஸிட்..? உன் பெயர் நந்தினியா..? எனக்கு மறந்து போச்சே.." உல்லாசமாக சிரித்தான் ரவிச்சந்திரன்..
"மறக்கும்.. மறக்கும்.." நந்தினிக்கு அழுகையே வந்துவிட்டது.. இமைகளைச் சிமிட்டிக் கண்ணீரை அடக்கியபடி..
"இன்னைக்கு என் பெயர் மறந்து போகும்.. நாளைக்கு என்னையே மறந்துருவீங்க.." என்று உதட்டைக் கடித்தாள்..
"உன்னை மறக்கிறதா..? நானா..?" அவளைக் கூர்மையாக பார்த்தான் அவன்..
'இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்..?' அவள் மனம் படபடத்தது..
"போ.. போய் ரெஸ்ட் எடு.. எதையோ மனதில் போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்கிறதைப் போல தெரியுது.. தூங்கி எழுந்தா சரியாகிரும்.. ஈவினிங் நான் கால்
பண்றப்பக் கிளம்பி வா.." முதலாளியாக உத்தரவிட்டான் ரவிச்சந்திரன்..
'எந்த நேரம் என்ன வேசம் கட்டுவான்னே தெரிய மாட்டேங்குது.. இதுக்கு எதுக்கு என்னை நிப்பாட்டி வைச்சானாம்.. இதைச் சொல்கிறதுக்கா..?' நந்தினிக்கு வெறுத்துப் போனது..
"ம்ம்ம்.." எங்கோ பார்த்தபடி முணுமுணுத்து விட்டு நடையைக் கட்டப் போனாள்..
"வெயிட்.." மறுபடியும் உத்தரவு..
'இப்ப என்ன..?' மனதில் குமைந்தபடி நின்றாள் அவள்..
"இந்த ஸாரி உனக்கு அழகாயிருக்கு.." ரவிச்சந்திரனின் குரல் மென்மையாக குழைந்தது..
'தேங்க் டு காட்..' நந்தினிக்கு நிறைவாக இருந்தது..
பார்த்துப் பார்த்து அவள் செய்து கொண்ட ஒப்பனைக்கு மதியத்தில் ஒரு சிறு பாராட்டுக் கிடைத்திருக்கிறது..
இதுபோதும் என்று மனம் முழுவதுமாக நிறையாமல் ஓர் வெற்றிடம் உருவாகியிருந்ததில் ஏதும் சொல்லாமல் நின்றாள்..
'இவ்வளவுதானா..?' மனம் சிணுங்கியது..
"இது நான் வாங்கிக் கொடுத்த ஸாரி தானே..?"
"என் சேலரியில் இந்தச் சேலைக்கான விலையைக் கழிக்கச் சொல்லியிருந்தேன்.."
"நான் அதைச் செய்யலை.."
"ஏன் செய்யலை..? எனக்காக ஒன்னும் நீங்க செலவளிக்க வேணாம்..?"
"ஊஹீம்..? ஏன் அப்படி..?"
அவள் என்னவோ குழந்தை போலவும்.. அவள் பேசும் மழலைப் பேச்சை அவன் ரசிப்பதைப் போலவும் அவன் சிரித்து வைத்ததில் கொதித்துப் போனாள் நந்தினி..
"எதுக்கு இந்தச் சிரிப்பு..?" உக்கிரமானாள்..
"சிரிக்கக் கூடாதா..?" சரசமாக வினவி அவளை சோதித்து வைத்தான் ரவிச்சந்திரன்..
நந்தினிக்கு அங்கே நிற்க முடியவில்லை.. அவன் மீதான காதல் கொதிகலனாய் கொதித்துக் கொண்டிருக்க.. அதை மூடி மறைத்து நிற்கச் சிரமமாக இருந்தது..
"தலை வலிக்குது.. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்.." முணுமுணுத்தபடி திரும்பிப் பார்க்காமல் விரைந்து விட்டாள்..
அவள் மட்டும் திரும்பிப் பார்த்திருந்தால் அவனது இதழ்களில் நெளிந்த குறுஞ்சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பிப் போயிருப்பாள்.. எதுவோ துரத்திக் கொண்டு வருவதைப் போல அறைக்கு ஓடிக் கட்டிலில் விழுந்தவள் மனம் விட்டு அழுதாள்.. அழுதால் மனம் பாரம் குறையும் என்பார்கள்.. அவளது மனதில் பாரம் குறைந்து தொலைக்காமல் அதிகரித்து வைத்தது.. இமைகளின் சோர்வில் உறக்கம் அவளைத் தழுவியதில் அவள் உறக்கத்தில் அமிழ்ந்து விட்டாள்.. மெல்லிய சங்கீதம் போலக் காதோரமாக ஒலித்த செல்போனின் ஒலியில் கண்விழித்தவள் யாரென்று கூடக் கவனிக்காமல் செல் போனை காதுக்குக் கொடுத்து..
"சொல்லுங்க பாஸ்.." என்றாள்..
"போன் நம்பரைக் கூடப் பார்க்காம கூப்பிடறது நண்தண்ணு எப்படிக் கண்டுபிடிச்ச..?" என்றான் அவன்..
'நான் போன் நம்பரைக் கவனிக்கலைன்னு இவன் எப்படிக் கண்டு பிடிச்சான்..?' அவளுக்குத் தூக்கம் பறந்து விட்டுத..
"'ஙே'ன்னு விழிக்காதே.. எந்த நேரம் நீ எதைச் செய்து வைப்பன்னு எனக்குத் தெரியாதா..? தூங்குமூஞ்சி..! தூக்கத்தில நீ இதைத்தானே செய்து வைப்ப..?"
மிகச் சரியாக அவன் அவளைக் கணித்து வைத்திருந்ததில் அவளுக்கு ரோசமாகி விட்டது.. இதைச் சும்மா விடக் கூடாது என்று வரிந்து கட்டியவள்..
"தூங்க விடாம நீங்கதானே இம்சை பண்ணுவீங்க..? அது எனக்கும் தெரியும் பாஸ்.. நேரம் காலம் இல்லாம போன் வந்தா அதை நீங்கதான் பண்ணியிருப்பீங்கன்னு கண்ணை மூடிக்கிட்டுச் சொல்லிரலாம்.. இதுக்குன்னு உங்க ஊர் சோழிகளை உருட்டி தாயக்கட்டத்தில ஜோஸியம் பார்க்க வேண்டியதில்லை.." என்று செமத்தியாக கொடுத்துக் கட்டினாள்..
"நீ என் செக்கரட்டரி..!" அழுத்தமாக அறிவித்தான் அவன்..
அவன் குரலில் இருந்தது ஆணவமா அல்லது சிரிப்பா என்று இனம் காண முடியாமல் திணறிப் போனாள் நந்தினி.
இது ஆசையா.. இல்லை அதிகாரமா..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -172
எண்ணியிருந்தது ஈடேற -172
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-172.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-172.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy