எண்ணியிருந்தது ஈடேற -169

169 பச்சையா , நீலமா என்று இனம் பிரிக்க முடியாததொரு வண்ணத்தில் கடல்நீர் இருந்தது.. வினித்தும் உத்ராவும் கேரளத்தின் அழகில் பிரமித்துப...


169


பச்சையா, நீலமா என்று இனம் பிரிக்க முடியாததொரு வண்ணத்தில் கடல்நீர் இருந்தது.. வினித்தும் உத்ராவும் கேரளத்தின் அழகில் பிரமித்துப் போயிருந்தார்கள்.. நந்தினி அவர்களை விட அதிகமாக.. பிரமித்தவள்தான்.. அதிகமென்றால் மிக, மிக அதிகம்.. பழகப் பழக கேரளத்தின் வனப்பில் அவள் பிறந்து வளர்ந்தவளைப் போல இதெல்லாம் எனக்குத் தெரியுமே என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டாள்.. அதிலும் உத்ராவின் முன்னிலையில் எனக்கெல்லாம் இது சர்வ சாதாரணம் என்று காண்பித்துக் கொள்வதென்றால் அவளுக்கு அல்வா சாப்பிடுவதைப் போல அவ்வளவு இனிப்பாக இருக்கும்..
"இதெல்லாம் ஜீஜீபி.. நான் இதுக்கும் மேலேயே பார்த்திருக்கேன் தெரியுமா..?" என்று அலட்டிக் கொள்வாள்..
அன்று அதுபோல அலட்டர்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக படகில் உட்கார்ந்திருந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் உத்ரா..
'இது நந்தினிதானா..?'
படகின் ஜன்னலோரமாக உட்கார்ந்து கடல் நீரையே வெறித்த வண்ணம் இருந்த நந்தினியிடம் அசாத்திய அமைதி இருந்தது.. கடல்நீரில் பாய்ந்து கொண்டிருந்த படகின் முனையை ரசிக்கும் எண்ணமின்றி இருபுறமும் பிரிந்து வழி விட்ட நீர்ப் பாதையை வெளித்துக் கொண்டிருந்தாள்..
"இவளுக்கு என்ன ஆச்சுங்க..?"
உனக்கென்ன ஆனது என்று நந்தினியிடம் ரவிச்சந்திரன் கேட்ட கேள்வியை இவளுக்கு என்ன ஆனது என்று வினித்திடம் கேட்டு வைத்தாள் உத்ரா..
கேரளத்து குளிருக்கு இதமாக மனைவியை ஒட்டி உராய்ந்து ரகசிய சில்மிசங்களை செய்து கொண்டிருந்த வினித்..
"யாரைச் சொல்கிற..?" என்று அசுவராஸ்யமாக கேட்டு வைத்து.. மனைவியைத் தரவி வேறு எந்த மங்கையும் அவனது கண்களுக்குப் புலப்படவில்லை என்பதை நிரூபித்தான்..
பொதுவாக நந்தினியின் அருகில் இருக்கும் போது உத்ராவை யாரும் பார்வையிட மாட்டார்கள்.. உத்ரா அழகுதான் என்றாலும் நந்தினி அவளை விடப் பேரழகு.. அவளுடைய இயல்பான சுபாவமும் ஒப்பனையில் ஆர்வம் காட்டாததும் அவளுடைய அழகை அதிகப் படுத்துவதால் நந்தினிக்கான கவனிப்புகள்தான் அதிகமாக இருக்கும்.. நந்தினி அதையும் உணர மாட்டாள்.. உத்ரா தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்வாள்.. கல்லூரியிலும்.. தோழிகள் இருவருமாக சேர்ந்து செல்லும் வெளியிடங்களிலும் இதை உணர்ந்தும் நிகழ்வுகள் அதிகமாக இருக்கும்..
அப்படிப்பட்ட நந்தினி அருகில் இருக்க.. அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் மனைவியின் அழகில் மட்டும் வினித் கண்ணும் கருத்துமாக இருந்ததில் மகிழ்ந்து போனாள் உத்ரா..
'என் புருசன் ஏகபத்தினி விரதனாக்கும்..'
அவள் மனதில் கர்வம் பொங்கியது.. அதனுடன் பொங்கிய காதலுடன் செல்லமாக கணவனின் தோளில் அடித்தவள்..
"உங்களுக்குப் பெண்டாட்டியைத் தவிர வேறு யாரையும் கண்ணுக்குத் தெரியாதே.." என்று அதை விடச் செல்லமாக கடிந்து கொண்டாள்..
"எதுக்குத் தெரியனும்..?" கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்ட வினித் மனைவியின் கன்னத்தில் மூக்கால் உரசினான்..
"ஸ்ஸ்.. நந்தினி..!"
கணவனின் செயல் பிடித்தமானதாக இருந்த போதிலும் திருமணமாகாத தோழி அருகில் இருக்கிறாள் என்ற குற்ற உணர்வுடன் கணவனுக்கு அறிவுறுத்தினாள் உத்ரா..
"நந்தினிக்கு என்ன..?"
வினித் தன் காதலில் கண்ணும் கருத்துமாக நெருக்கத்தை அதிகப்படுத்தினான்..
"நந்தினிக்கு என்னவா..? அவளும் நம்மோட அவுட்டிங் வந்திருக்கிறா.. நினைவிருக்கட்டும்.."
அவள் மீதான கணவனின் தேடலில் பெருமிதம் கொண்டவளாக நினைவு படுத்தினாள் உத்ரா..
"மறந்துட்டேண்டி.."
கண்ணியம் காத்து விலகி அமர்ந்தான் வினித்.. கணவனிடம் அந்தக் கண்ணியமும் உத்ராவைக் கவர்ந்தது..
'இவன் என் புருசன்.. எனக்கே எனக்கானவன்..' மனம் குதூகலத்துடன் கூக்குரலிட்டது..
"நந்தினி ஏன் மூட்-அவுட்டா இருக்கிறாங்க..?"
அவள் காலையிலிருந்தே உற்சாகமில்லாமல்தான் இருக்கிறாள் என்பதை அறியாதவனாக வினித் வினவினான்..
"நானும் அதைத்தான் உங்ககிட்டக் கேட்டேன்.. நீங்க என் கேள்வியைத் திருப்பி என்கிட்டேயே கேட்கறிங்களா..?" சிணுங்கினாள் உத்ரா..
உத்ராவின் சிணுங்கலில் வினித் நந்தினியை மறந்து போனவனாக நெருங்க முற்பட..
"நீங்க இருக்கீங்களே.." என்று சந்தோசமாக அலுத்துக் கொண்டு விலகி நந்தினியிடம் போனாள் உத்ரா..
பக்கத்தில் உத்ரா வந்து உட்கார்ந்ததைக் கூடக் கவனிக்காமல் கரையோர தென்னைமரங்களை உன்னிப்பாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி..
"எத்தனை தென்னை மரங்கள் இருக்குன்னு கணக்கெடுக்கிறயா..?"
தோழியின் தோளில் கை வைத்துக் கேட்டாள் உத்ரா.. விசுக்கென நந்தினி திரும்பிப் பார்த்தாள்.. 'யார் நீ..?' என்று கேட்ட அந்தப் பார்வையில் திகைத்துப் போனவளாக..
"நந்தினி..?" என்று தோழியின் தோளைப் பிடித்து உலுக்கினாள் உத்ரா..
"என்..என்னடி..?" தன்னுணர்விற்கு மீண்டாள் நந்தினி..
"என்னவா..? முழிச்சுக்கிட்டேத் தூங்கறியா..? நீயெல்லாம் அதைப் பண்ண மாட்டியே.. இருபத்தி நாலு மணி நேரமும் கிளாஸ் எடுத்தாலும் அசராம பாடத்தைக் கவனிக்கிற மாணவி சிகாமணின்னு நம்ம காலேஜில நல்ல பெயர் வாங்கி எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்ட புண்ணியவதியாச்சே நீ.."
"அது.. அப்போ.."
"இப்ப மட்டும் என்ன வந்திருச்சாம்..?"
தோழியின் விசாரிப்புக்கு காதல் வந்து விட்டது என்ற உண்மையைச் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினாள் நந்தினி..
"என்னவோ போடி.. நீ நீயா இல்லை.. அது மட்டும் தெளிவாத் தெரியுது.. இது காலேஜீம் இல்லை.. இங்க யாரும் பாடம் எடுக்கவும் இல்லை.. கடவுளோட தேசம்ன்னு உலகத்தில் இருக்கிற அத்தனை மக்களும் கொண்டாடற கேரளத்தில இருந்துக்கிட்டு என்ஜாய் பண்ணாம முழிச்சுக்கிட்டேத் தூங்கற.. உனக்குத்தான் செடி, கொடி, கடல், மலை, அருவின்னா அவ்வளவு பிடிக்குமே.. இயற்கையை ரசிக்கனும்னா பசியைக் கூட மறந்துருவியே.. நீயாடி கோழிக்கோடு கடலில, போட் ஜர்னியில, முழிச்சுக்கிட்டேத் தூங்கற..?"
தோழியை விசித்திரமாகப் பார்த்தாள் உத்ரா..
'காலையிலே கூட நல்லாத்தானே இருந்தா..? வினித்திடம் நான் மாட்டிக்கிட்டு முழிச்சதை ரசிச்சவ.. ஆபத்பாந்தியாய் கை கொடுத்து சுறுசுறுப்பாக் கதை சொல்லி என்னை ரிலீஸ் பண்ணினாளே.. அப்புறம் என்ன ஆச்சு..?'
தோழியை நினைத்துக் கவலை ஏற்பட்டது உத்ராவுக்கு.. எது தொலைந்தாலும் நந்தினியின் உற்சாகம் தொலைந்து விடக் கூடாது.. வற்றாத உற்சாகம்தான் நந்தினியின் அடையாளம்.. அது குறையக் கூடாது..
'பட்.. இவ மனசில என்ன இருக்குன்னு சொன்னாத்தானே அதுக்கான சொலுசனைச் சொல்ல முடியும்..?'
நந்தினி உத்ராவிடமிருந்து எதையும் மறைத்ததில்லை.. அவளுடைய திருமணத்தைப் பற்றிய குமுறலைக்கூட அவள் உத்ராவிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள்.. பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பிக்க வழி காட்டு என்று அழுதாள்.. உத்ரா வழி காட்டிய போது அதைப் பற்றிக் கொஞ்சம் கூட சந்தேகப் படாமல் தோழி காட்டிய வழியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறினாள்..
'அந்த நந்தினியா இது..?'
மனதில் இருப்பதை மறைக்கத் தெரியாத நந்தினி எங்கே போனாள் என்று உத்ராவுக்கு ஆயாசமாக இருந்தது.. இந்த நந்தினி வேறு ஒருத்தி.. உள்ளத்தை தோழியிடம் மறைப்பவள்..
"உன் மனசில் எந்த பூதம்டி ஒளிஞ்சுக்கிட்டு இருக்கு..? சினந்தாள் உத்ரா.."
'காதலெனும் பூதம்..?'
உத்ரா சரியாகத்தான் கேட்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. காதல் ஒரு பூதம்தான்.. எதற்கும் அயராத நந்தினியை துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கிறதே..
ஆணின் காதலுக்கு அடி பணியாத வரைக்கும்தான் பெண் என்பவள் மகா சக்தியாக நிமிர்ந்து நிற்க முடியும்.. உலகத்தையே வென்று நிற்கும் மாவீரனைக்கூடத் துச்சமாகப் பார்க்க முடியும்.. அதுவே அந்த ஆணின் மீது அவள் காதல் கொண்டு விட்டால் அவன் காலடியில் வீழ்ந்து விடுவாள்.. அனைத்தும் நீயே என்று சரணடைந்து விடுவாள்.
காதல் என்பது அடிமைப் படுத்துவது.. அது ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. காதலில் வீழ்ந்தவர்கள் ஒருவரிடமொருவர் அடிமையாகியே தீருவார்கள்..
நந்தினியும் அந்நிலையில்தான் இருந்தாள்.. விட்டுச் சிறகடிக்கும் சிட்டுக்குருவியாக இருந்தவள்.. சிறகுகளை விரிக்க முடியாமல் சிறை பட்டிருந்தாள்..
'காலையில் இவ இப்படியில்லையே..'
அதற்கடுத்து என்ன நேர்ந்திருக்கக் கூடும் என்று வரிசைப் படுத்தி யோசித்துப் பார்த்தாள் உத்ரா.. அவளறிந்த வரை நந்தினிக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் கூட ஏற்படவில்லை..
'நேத்துக்கூட ரெண்டு பேரும் சண்டையும் சச்சரவுமாக இருந்தாங்க.. இன்னைக்கு நல்ல மூடில்தானே பேசிக்கிட்டு இருந்தாங்க.. அதுக்கப்புறம் என்னவாகி யிருக்கும்..?'
ஆழ்ந்து யோசித்தாள் உத்ரா..
'ரவிசார் கூட இன்னைக்கு ஜாயின் பண்ணிக் கலையே.. அவர் கூட வந்திருந்தாலாவது ஏதாச்சும் சொல்லியிருப்பார்.. இவ மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கான்னு சொல்லலாம்.. அதுவும் இல்ல..'
சட்டென்று அது உறைத்தது உத்ராவுக்கு..
'ஒருவேளை.. ரவிசார் கூட வராததினாலதான் இவ இப்படி மூட்-அவுட் ஆகி உட்கார்ந்திருக்காளோ..'
நம்ப முடியாமல் தோழியைப் பார்த்தாள் உத்ரா.. எதையோ தொலைத்து விட்டதைப் போன்ற ஏக்கம் நந்தினியின் முகத்தில் படர்ந்திருந்தது.. இந்த ஏக்கத்தை இப்போதுதான் நந்தினியின் முகத்தில் பார்க்கிறாள்.. என்பதை மனதுக்குள் குறித்துக் கொண்டாள் உத்ரா..
'என்னடா இது.. இவகூட வரலைன்னா ரவி சார் மூட்-அவுட் ஆகிறார்.. தனியாய் ஏன் எங்ககூட ஜாயின் பண்ணினான்னு லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கார்.. இன்னைக்கு இவளே எதையோ தொலைச்சுட்டவளைப் போல மருகி மருகி முழிச்சுக்கிட்டு இருக்கிறா.. அன்னைக்கு ரவிசார் இல்லாம இவ மட்டும் தனியா எங்ககூடப் வந்தப்ப சந்தோசமா துள்ளி குதிச்சுக்கிட்டுச் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தாளே..'
முதல்நாள் மாலையில் நந்தினியிடம் அவள் நடத்திய குறுக்கு விசாரணையை நினைத்துப் பார்த்தாள் உத்ரா..
'உன் மனசில காதல் வந்திருச்சுன்னு சொன்னதுக்கு இல்லவே இல்லைன்னு சாதிச்சாளே..'
இப்போதும் அதைத்தான் செய்வாள் என்று அலுத்துக் கொண்டாள் உத்ரா.. உன் மனசுக்குள்ளே காதல் வந்துச்சா என்று கேட்டால் 'வந்தல்லோ, வந்தல்லோ..' என்று தலையை ஆட்டி ஒப்புக் கொள்ளவா போகிறாள்..? 'இல்லையல்லோ.. இல்லையல்லோ' என்று பொய் சொல்லப் போகிறாள்.. அந்தப் பொய்யை ஏன் கேட்க வேண்டும்..
நந்தினியைப் பொய் சொல்ல வைக்கும் கொடுமையைச் செய்யாமல் ரவிச்சந்திரனைப் பற்றி அவளிடம் பேச ஆரம்பித்தாள் உத்ரா..
'அசோக வனத்தில சீதையை யார்ன்னு கண்டு பிடிக்க அனுமார் இந்த டெக்னிக்கைத்தான் யூஸ் பண்ணினாராம்.. மரத்து மேல உட்கார்ந்துக்கிட்டு ராமனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாராம்.. அதில் சீதை மகிழ்ந்து போய் 'யார் என் சுவாமியின் கதையைச் சொல்வது..' என்று ஆஞ்சநேயரை அடையாளம் கேட்டாளாம்..'
உத்ராவின் சிந்தனை விரிந்ததில்..
'கடவுளே..!' என்று கலவரமானாள் உத்ரா..
அவள் வினித்தின் மனைவி.. புதிதாகத் திருமணமான இளம் மனைவி.. தேநிலவிற்கு வந்திருப்பவள்.. உலகத்திலேயே சிறந்த அழகி நீதான் என்று கணவனால் ஆராதிக்கப் படுபவள்..
'நான் என்ன லேடி ஆஞ்நேயரா..?'
எப்பேற்பட்ட உவமானம் என்று நொந்து போனாள் உத்ரா.. அவளுடைய கணவனோ ஏகபத்தினி விரதன்.. உத்ராவின் உபாசகன்.. அவனே ராமன்..! உத்ராவே சீதை..! அந்தப் போஸ்டை நந்தினிக்கு அளித்து.. கிருஷ்ண லீலா புரிந்து கொண்டிருக்கும் ரவிச்சந்திரனை ராமனாக்கி.. இவள் லேடி ஆஞ்சநேயராகிக் கொண்டிருக்கிறாளே.. இவளுக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது..
'பிரண்டு மேல பாசம் இருக்க வேண்டியதுதான்.. ஆனா இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.. இது ஒன்னும் அசோகவனமில்லை.. கோழிக்கோடு.. நந்தினி மரத்தடியில் உட்கார்ந்திருக்கலை.. போட்டில் உட்கார்ந்திருக்கிறா.. ஸோ.. இவ நந்தினி.. நான் சாட்சாத் உத்ராவேதான்.. வினித்தின் ஆசைப் பெண்டாட்டி.. லேடி ஆஞ்ச நேயரில்லை..'
மனதுக்குள் உருப் போட்டு மனப்பாடம் செய்து கொண்டு நந்தினியிடம் பேச்சை ஆரம்பித்தாள்..
"ரவிசார் சூப்பர் மேனில்ல.."
ஒற்றை வரியைத்தான் சொல்லியிருப்பாள்.. அதில் நந்தினியின் முகத்தில் உயிர்ப்பு வந்து விட்டது.. கண்களில் ஒளி வெள்ளம் பாய ஜீவசக்தி கிடைக்கப் பெற்றவளாக தோழியை ஏறிட்டாள் நந்தினி..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -169
எண்ணியிருந்தது ஈடேற -169
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-169.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-169.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy