எண்ணியிருந்தது ஈடேற -168

168 ' போடா.. டேய்ய்ய்... ' நந்தினிக்கு வெறி வெறியாக வந்தது.. அழகான மென்சிரிப்புடன் அவன் புருவங்களை உயர்த்தி இறக்கியதில் வழக...


168

'போடா.. டேய்ய்ய்...'
நந்தினிக்கு வெறி வெறியாக வந்தது.. அழகான மென்சிரிப்புடன் அவன் புருவங்களை உயர்த்தி இறக்கியதில் வழக்கம் போல மயக்கம் வந்து தொலைத்ததில் இவளுக்கு வெறி வெறியாக வந்தது.. முதலிலாவது மயக்கம் மட்டும்தான் வந்து தொலைக்கும்.. இப்போது கிறக்கமும் சேர்ந்து வந்து தொலைத்து இம்சை செய்தது..
'நம்பித் தொலைடா.. நான் உன்னைக் காதலிக்கிறேண்டா..'
நந்தினி மனதுக்குள் புலம்பினாள்.. அலை பாய்ந்த அவனது சிகையில் விரல் விட்டுக் கோத வேண்டும் போல அவளது மனம் அலைபாய்ந்து தவித்தது.. அதை உணராமல் அவன் அவளை மேய்ச்சல் பார்வை பார்த்து கிளர்ச்சியைக் கிளப்பினான்..
'பெரிய ரோமியோ..! காதல் மன்னன்னு மனசுக்குள்ள நினைப்பு.. இவனுக்கு மட்டும்தான் காதல் வரும்ன்னு மனசுக்குள்ள தெனாவெட்டு.. நான் பார்த்தாலும் பார்த்தேன்.. இவனைப் போல மண்டைக்கனம் பிடிச்ச ஆளைப் பார்த்ததேயில்ல.. மனுசனுக்கு காசு, பணத்தில மண்டைக் கனம் வரலாம்.. தான் அழகாய் மன்மதனைப் போல இருக்கிறோம்ன்னு மண்டைக் கனம் வரலாம்.. மத்தங்களை விட புத்திசாலியா, திறமைசாலியா இருக்கிறதில மண்டைக் கனம் வரலாம்.. யாராலும் அசைக்க முடியாத இரும்பு மனுசன்ங்கிறதில மண்டைக் கனம் வரலாம்.. இவனுக்கு மட்டும்தான் காதல் வரும்ங்கிற மண்டைக் கனம் வரலாமா..?'
அந்தத் தலைக்கனம் பிடித்த காதல் மன்னன் நொடிக்கொரு தரம் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.. ஒரு மார்க்கமாகக் கடித்துத் தின்பதைப் போலப் பார்த்து வைத்தான்.. ஒட்டி நடப்பதைப் போல கட்டிக் கொண்டு நடந்தான்.. அவளைக் கிளப்பி விடும் அத்தனை காதல் லீலைகளையும் செய்து விட்டு அவளிடம்..
"என்ன யோசனை..? ஃபுட் அயிட்டத்தில உனக்குப் பிடிச்சக் கோழிக்கோடன் அல்வா இருக்குமா இருக்காதான்னுதானே திங்க் பண்ற..?" என்று கேட்டு வைத்தான்..
உண்பதைத் தவிர அவளுக்கு வேறு எதிலும் ஆர்வம் வந்து விடாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவனிடம் உன்னை உண்ண வேண்டும்
போல ஆசை பெருகுதடா என்று எப்படித் தன் மன உணர்வுகளை அவள் சொல்வாள்..? வெறுத்துப் போனவளாக..
"ஆமாம்.." என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்..
"நினைத்தேண்டி.. எனக்கு அல்வா கொடுக்கிறதில உனக்கு அத்தனை ஆசை..? ம்ம்ம்..?"
தீர்க்கமாக அவன் பார்த்த பார்வை திணறடித்தது.. எப்போதும் அவளுக்கு எரிச்சலை மூட்டும் 'வாடி, போடி,' யென்ற உரிமையான அழைப்பு அப்போது குளிர்ச்சியைக் கொடுத்தது.. அவனுடைய அடாவடித்தனமான பேச்சை அவள் விரும்பினாள்..
"ஆமாம் சாரே.." அவன் பாணியிலேயே பதில் சொன்னாள்..
"சாரே..? ம்ம்ம்.. பாஸ் சார் ஆகிட்டேனா..?"
"ஊஹீம்.. பாஸ் 'சாரே' ஆகிட்டார்.."
"ஸோ.. எனக்கு அல்வா கொடுக்கிறதில படு இண்ட்ரெஸ்ட்டா இருக்கிற..?"
"யெஸ்.. யெஸ்.. யெஸ்.. யெஸ்.. யெஸ்.. யெஸ்.."
"எதுக்கு இத்தனை யெஸ்..?"
"அம்புட்டுக் காண்டு பாஸ்.."
"வாட் ஃபார்..?"
"அது இருக்கு மெனி பாயிண்ட்ஸ்.. எடுத்து விட்டேன்னு வையுங்க.. இன்னைக்கு ஒரு நாள் போதாது.. இவர் பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாம்.. உலகமே கொண்டாடுதாம்.. என்கிட்டக் கேட்டிருக்கனும்.. வண்டியா வண்டியா அடுக்கியிருப்பேன்.."
"எதை..?"
"உங்க அறிவோட லெவலை.. ஆஹா.. எதையெதை எப்படியெப்படி மீன் பண்ணிக்கறிங்க.. புல்லரிக்குது போங்க.. அப்படியே சூடம் ஏத்திச் சாம்பிராணி காட்டிக் கன்னத்தில போடலாம் போல இருக்கு.."
அவன் கன்னத்தில் நான்கு அப்ப அப்ப வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்ததை அடக்கிக் கொண்டு சொன்னாள்..
அவனுக்கா அது புரியாது..? இடுங்கிய கண்களுடன் அவளை ஆராய்ச்சியாக உற்றுப் பார்த்தவன்..
"இது புகழ்ச்சி போலத் தெரியலையே.." என்றான்..
'தெரிஞ்சாச் சரி..' நந்தினி கழுத்தை ஒரு வெட்டு வெட்டி நொடித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
"ஹௌ நைஸ்.. இதையெல்லாம் எப்படிடீ செய்கிற..?" அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்..
"வர்றீங்களா.. அப்படி ஸ்விம்மிங் பூல் பக்கமா உட்கார்ந்து கிளாஸ் எடுக்கிறேன்.." அவள் சிரிக்காமல் அழைத்தாள்..
அவளுக்கும் சேர்த்து வைத்து அவன்தான் சிரித்தான்.
"இன்னைக்கு செம காண்டில இருக்க போல இருக்கு.. எதுக்குன்னுதான் தெரிய மாட்டேங்குது.. ஹீம்.."
நந்தினியின் முகத்தையே அவன் உற்றுப் பார்த்ததில் முகம் சிவக்க அவள் தரையைப் பார்க்க.. அவன்..
"வாவ்..!" என்றான்..
'இது எதுக்காம்..?'
"வெட்கப் படுகிறப்ப நீ ரொம்ப அழகா இருக்கிற நந்தனி.." அவன் குரல் கரகரத்தது..
காதல்வயப்பட்டால் அவனது குரல் கரகரத்து விடுவதை உணர்ந்திருந்தவளுக்கு போடா என்றிருந்தது.
'நீ ஏங்கும் காதலுடன் உனக்காக ஏங்கி நிற்கிறேன்.. என்னிடம் நிறைந்திருக்கும் காதலை உணராமல்.. என்னிடம் இல்லாத அழகை ஃபீல் பண்ணி ரசிக்கிறயே.. நீயெல்லாம் எப்படித்தான் வெற்றிக்கொடி கட்டிக்கிட்டு இருக்கியோ..'
"என்னன்னு தெரியலை.. இன்றைக்கு நீ ரொம்பவும் அழகா இருக்கிறதைப்போல அட்ராக்சன் ஆகுதுடி.. யூசுவலாவே நீ பேரழகுதான்.. இன்றைக்கு அதிகப்படியான அழகு.." அவளை ஆசையுடன் பார்த்தான்..
நந்தினி விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. அவள் விழிகளோடு விழி கலந்தவன் அவளை அணைத்து முகத்துக்கு நேரே குனிந்தான்.. அடர்ந்த செடிகளின் மறைவில் இழுத்துக் கொண்டான்.. மறுப்பின்றி உடன்பட்ட நந்தினியின் மனம்..
'ஹோ..' வென்ற உணர்ச்சிப் பேரலைகளில் மூழ்க ஆரம்பித்தது..
'இதோ.. முத்தமிடப் போகிறான்..'
விழிமூடி எதிர்பார்ப்புடன் அவள் தொய்ந்த போதுதானா அவனுடைய செல்போன் ஒலிக்க வேண்டும்.
'இந்த செல்போனுக்கு எதுக்கு இத்தனை காண்டு..? எனக்கு வில்லியே இதுதான்.. அஜந்தாவும், தரங்கிணியும் கூட்டுச் சேர்ந்து மந்திரிச்சு ஏவி விட்டிருப்பாங்களோ.. அது செல்போனா என்னை சோதிக்குதோ..'
ரவிச்சந்திரன் எரிச்சலுடன் செல்போனை பார்த்து விட்டு..
"அமெரிக்கா கிளையண்ட்ஸ்.." என்று முணுமுணுத்தான்..
உணர்வுகள் வடிந்த நிலையில் நந்தினி அவன் கையை விலக்கி விட்டு நகர யத்தனித்தாள்...
இடது கையில் செல்போனை பிடித்துக் காதுக்குக் கொடுத்திருந்தவன்.. நகர முற்பட்டவளை வலது கையால் இறுக்கிப் பிடித்து நிறுத்தி வைத்தான்.. இரு நிமிடப் பேச்சுக்குப் பின் செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டவன்..
"போன் பேசி முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ண மாட்டியா..? ஓடறதிலேயே குறியாய் இருக்கிற..?" என்று எரிந்து விழுந்தான்..
'எதற்கான எரிச்சல் இது..?' நந்தினியின் மனதில் இதம் வந்தது..
அவன் நினைத்தது நடக்கவில்லையென்பதால் வந்த எரிச்சல் இது.. நந்தினி முகச் சிகப்புடன் பேசாமல் இருந்தாள்..
"மை டியர்.." அவன் குரல் கரகரத்தது..
அவளை இறுக்கி அணைத்து அவன் முத்தம் கொடுத்தபோது நந்தினிக்குள் இருந்த அனைத்து ஏமாற்றங்களும் பறந்து விட்டன.. அவளுக்குள் இருக்கும் காதலை அவன் உணராமல் இருக்கலாம்.. ஆனால் அவனுக்குள் இருக்கும் அவள் மீதான காதல் துளிக்கூட குறையவில்லை.. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது..
மறுப்பின்றி உடன்பட்டவளை விடுவித்து அவளது முகம்தடவி முடிகோதி விட்டவன்..
"இன்றைக்கு என்னடி ஆச்சு..? என் குவினுக்கு என்மேல் இரக்கம் வந்திருச்சு போல இருக்கே..?
முரண்டு பிடிக்காம அலோவ் பண்ணிட்டயே.." என்று திருப்தியுடன் கேட்டான்..
முகச் சிகப்புடன் நந்தினி விலகி நடந்தாள்.. அவளுடன் சேர்ந்து நடந்தவன்..
"என் காதலை கன்சிடர் பண்ணவே மாட்டாயாடி..?" என்று தாபத்துடன் கேட்டான்..
'ஏண்டா இம்சை பண்ற..?' நந்தினி முட்டிக் கொள்ள மொட்டைச் சுவர் அகப்படுமா என்று சுற்று முற்றும் பார்த்தாள்..
நட்சத்திர ஹோட்டலான 'யாழ்' பளிங்குச் சுவருடன் பளபளவென இருந்தது.. அதில் முட்டி ஆகப்போவதென்ன என்று பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தாள்..
"என் காதலைப் புரிஞ்சுக்கவே மாட்டியாடி..?"
'பேசாம இருடா.. இல்லேன்னா குரல்வளையை நெறிச்சுருவேன்..'
ஆறடிக்கும் அதிக அளவில் உயர்ந்து நிற்கும் அந்த நெடியோனின் தோள் சாய்வதே பெரும் பாடாக இருக்கிறது.. இதில் குரல்வளையை எப்படிப் பிடிப்பது என்ற பலத்த யோசனையுடன் அவளிருக்க..
"என்ன..? கோழிக்கோடிலதானே இருக்கிறோம்.. இப்படியே ரூட் விட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடித்து இவனிடமிருந்து எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பிளான் பண்றியா..?" என்று அவன் புருவங்களை நெறித்தான்..
'உன்னை விட்டு ஓடிப் போக முடியுமா..? என்னால் முடியுமா..?' அவள் பெருமூச்சு விட..
"முத்தம்தானேடி கொடுத்தேன்.. முதலிரவா கொண்டாடிட்டேன்..? அதுக்காகவா இப்படியொரு பெருமூச்சு..? என்னை விட்டு எஸ்கேப் ஆகிடனும் என்கிற பிளான்..? ஊம்..?"
அவள் மனம் புரியாமல் அவன் கடுகடுத்தான்.. இதில்..
"ஏண்டி இப்படியே இருக்கிற..? மாறவே மாட்டாயா..?" என்ற கேள்வி வேறு..
'மாறியது நெஞ்சம்ன்னுதானேடா ஓடி வந்தேன்.. நீதான் எனக்குக் காதல் வரவே வராதுன்னு முடிவே பண்ணிட்டயே..'
டைனிங் ஹாலை நெருங்கி விட்டார்கள்.. இன்று ஊர் சுற்றும் போது கிடைக்கும் தனிமையில் எப்படியும் தன் மனதை புரிய வைத்து விடவேண்டும் என்ற உறுதியோடு இருந்தாள் நந்தினி..
ஒருதலைக்காதலாக இருந்திருந்தால் மறைத்து விடலாம்.. போலியாக சிரித்தபடி பிரிந்து விடலாம்.. இது இருதலைக்காதல்.. அது புரியாமல் அவன் அவனை அவள் காதலிக்கவில்லையென்று சினந்து கொண்டிருக்கிறான்..
'இதுதான் வன் கொடுமைடா..'
உத்ராவும் வினித்தும் உலகை மறந்தவர்களாக ரகசியப் பேச்சும் சிரிப்புமாக டைனிங் ஹாலின் மூலையில் இருந்த டேபிளை ஆக்ரமித்திருந்தார்கள்..
"ம்ஹீம்.. கொடுத்து வைத்தவன்.. அவனைக் காதலிக்கிற வொய்ப் கிடைச்சிருக்கா.. எனக்குன்னு நீ வந்து வாய்ச்சிருக்கயே.."
ரவிச்சந்திரன் பொறாமையில் காய்ந்தான்.. நந்தினி பார்த்த மௌனப் பார்வையில் குழம்பிப் போய்..
"என்னடி..?" என்றான்..
நந்தினி பதில் பேசாமல் மறுமூலையைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தாள்.. அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி..
"இதிலெல்லாம் செம விவரம்தாண்டி.. உத்ராவையும், வினித்தையும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தள்ளி உட்காருகிற..? இந்த அண்டர்ஸ்டாண்டிங்கை என் மேட்டரில் காண்பிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறயே.." என்று நெடிய பெருமூச்சை வெளிவிட்டான்..
நந்தினியின் ஊடுறுவும் பார்வையில் புருவங்களை உயர்த்தி அவளைக் கிறங்கடித்தவன்..
"இன்றைக்கு ஒரு தினுசாத்தாண்டி இருக்கிற.. புதிர் போடுகிறதைப் போல பார்த்து வைக்கிற.. வாட்'ஸ் தி மேட்டர்ன்னுதான் புரிய மாட்டேங்குது.. உனக்குக் கூட சஸ்பென்ஸ் வைக்கத் தெரியுமா நந்தினி..?" என்று வியந்தான்..
'எனக்குக் காதலிக்கவே தெரியும்.. உனக்குத்தான் அது தெரிய மாட்டேங்குது..'
இப்போது நந்தினி நெடிய பெருமூச்சை விட்டாள்.. அவன் அதற்க்கும் குதர்க்கமான ஒர் காரணத்தைக் கண்டுபிடித்தான்..
"யாரை நினைத்துப் பெருமூச்சு விடற..? பெல்ட் மன்னனை நினைத்தா..?" கண்கள் இடுங்கக் கேட்டு வைத்தான்..
வேறு ஒரு சமயமாக இருந்திருந்தால் நந்தினி கடுப்பாகி 'ஆமாம்' என்று சொல்லியிருப்பாள்.. அன்று அப்படிச் சொல்ல முடியவில்லை.. உன்னிடம் பேச என்னால் முடியாது என்று ஆயாசத்துடன் முறைத்து வைத்தாள்..
காலை உணவை முடித்து ஹோட்டல் வாசலுக்கு வந்தபோது ரவிச்சந்திரன் காரில் ஏறவில்லை..
"அமெரிக்கக் கம்பெனியோட பிஸினெஸ் மீட்டிங் இருக்கு.. ஈவினிங்கே நாம அரண்மனைக்குக் கிளம்பியாகனும்.. ஸோ.. கடலுண்டி பறவைகள் சரணாலயத்தை நீங்க பார்த்துட்டு வந்திருங்க.. லன்ச் டயத்தில மீட் பண்ணலாம்.." என்று சொல்லி விட்டான்..
நந்தினியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. அவனும் அவளும் கடலுக்கு மத்தியில் தீவு போல இருக்கும் பறவைகள் சரணாலயத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்
போது அவன் கரம் பிடித்து காதல் சொல்லி மார்பில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்ற அவளது கனவு கலைந்ததில் அவளுக்குப் பித்துப் பிடித்ததைப் போல ஆகிவிட்டது..
"அஸ் எ பெர்சனல் செக்கரட்டரி.. நான் உங்க கூட இருந்தாகனுமே பாஸ்.." தேங்கி நிற்க முயன்றாள்..
"சும்மா ஃபிலிம் காட்டி சிரிப்பை மூட்டாம ஊரைச் சுற்றப் போ.. நீ ஹெல்ப் பண்ணிட்டாலும்.." அவன் மறுத்து விட்டான்..
அவன் இல்லாமல் உத்ரா, வினித்துடன் அவள் ஊர் சுற்றுவதை அவன் விரும்ப மாட்டான் என்று உத்ரா சொன்னாளே.. அது பொய்யா..? அவள்மீது அவனுக்கு உரிமையுணர்வு இல்லையா..?அவனை ஏக்கமாகப் பார்த்தபடி அவள் காரில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான் ரவிச்சந்திரன்.. முதல் நாளில் இருந்தே நந்தினியின் செய்கைகள் அனைத்தும் வித்தியாசமானதாக இருந்ததைப் போல அவனுக்குத் தோன்றியது.. அவளது விழிகளில் தெரியும் தவிப்பு..! இதழ்கள் துடிக்கும் துடிப்பு..! பார்வையில் தெரியும் மருகல்..!இவை அத்தனையும் அவனுக்கு எதை உணர்த்த முனைகின்றன..? ரவிச்சந்திரனின் மூளையில் மின்னல் வெட்டியது.. இது காதலா..?
'நந்தினி..!'
பரவசத்துடன் அவன் படியிறங்கியபோது கார் பறந்து விட்டது..
- ஆறாம் பாகத்தில் தொடரும்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -168
எண்ணியிருந்தது ஈடேற -168
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-168.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-168.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy