எண்ணியிருந்தது ஈடேற -167

167 சும்மா இருக்காமல் ரவிச்சந்திரனுடன் சிரித்துப் பேசி அளவளாவிக் கொண்டிருந்த உத்ராவை அவளது காதல் கணவன் வினித் சும்மா விட மாட்டான் என்...


167

சும்மா இருக்காமல் ரவிச்சந்திரனுடன் சிரித்துப் பேசி அளவளாவிக் கொண்டிருந்த உத்ராவை அவளது காதல் கணவன் வினித் சும்மா விட மாட்டான் என்பதில் நந்தினிக்குள் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..
'கல்யாணமானவ அடக்கி வாசிக்கனும்.. கம்மாண்டர்கிட்ட உனக்கென்னடி பேச்சு..?'
ஆத்மார்த்தமான தோழியையும் விரோதிக்க வைக்கும் ஆற்றல் படைத்தது காதல்..
"வினித்.." பதறித் திரும்பினாள் உத்ரா..
அவளது பதட்டத்தை ரசித்தாள் நந்தினி..
'எதுக்காக கம்மாண்டரிடம் வாய் வளர்க்கனும்..? எதுக்காக இப்படி பயந்து நடுங்கனும்..? ஒழுங்கா மரியாதையா ஒரு ஹாயோடு கழன்றுக்கிட்டுப் போயிருக்கலாமில்லையா..?'
வினித்திடம் உத்ரா வாங்குப் பெறப் போகும் மகோன்தை நிகழ்வைக் காண ஆவலுடன் தயாரானாள் நந்தினி..
"வொய் திஸ் டென்சன்..?" படு கேசுவலாக உத்ராவிடம் கேட்ட ரவிச்சந்திரன்..
"ஹாய் வினித்.. குட்மார்னிங்.. ஹேவ் எ நைஸ் டே.." என்று வினித்தை வரவேற்றான்..
"குட்மார்னிங் சார்.." இறுக்கமான முகத்துடன் உத்ராவைத் துளைப்பதைப் போல உறுத்துப் பார்த்தபடி சொன்னான் வினித்..
உத்ராவின் முகம் கலங்கிச் சிவந்ததில் 'வேணும்டி உனக்கு..' என்ற திருப்தி உண்டானது நந்தினிக்கு..
அவளே மனதில் வந்து விட்டக் காதலைச் சொல்ல வாய் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.. இதில் பூஜை வேளைக் கரடி போல தோழிவந்து ஊடே புகுந்து நந்தினி பேச முடியாத பேச்சுக்களைப் பேசி.. அவளால் சிரிக்க முடியாத சிரிப்புக்களைச் சிரித்துக் கொண்டிருந்தால் அவளுக்கு கொலைவெறி வராதா..?
"வி ஆர் வெயிட்டிங் ஃபார் யு.." வினித்தின் கோபத்தைக் கவனிக்காததைப் போலச் சொன்னான் ரவிச்சந்திரன்..
'அதுசரி.. அடுத்தவன் பெண்டாட்டி கூட அரட்டையடிச்சா நல்லாத்தான் இருக்கும்.. இதுவே இவன் இல்லாம நான் வேற யார்கூடவாவது பேசிக்கிட்டு இருந்தா வண்டை, வண்டையாக் கேட்பான்.. ஊருக்கு ஒரு நியாயம்.. இவனுக்கு ஒரு நியாயமா..?' நந்தினி பல்லைக் கடித்தாள்..
"தேங்க் யு சார்.." ரவிச்சந்திரனிடம் சொல்லியபடி உத்ராவின் பக்கமாக திரும்பிய வினித்..
"என் ரெட் கலர் சர்ட்டை எங்கே வைத்த..?" என்று கோபத்துடன் கேட்டான்..
அது நிச்சயமாக ரெட் கலர் சர்ட்டுக்காக வந்த கோபமில்லையென்று நந்தினிக்கும் புரிந்தது.. உத்ராவுக்கும் புரிந்தது..
"ஷெல்பில் அடுக்கி வைச்சிருந்தேனேங்க.." உத்ரா மென்று விழுங்கினாள்..
"ஷெல்பில் இருந்தது இறக்கை முளைச்சுப் பறந்து போயிருக்குமா..? குளித்துட்டு வந்து சர்ட்டைப் போடலாம்ன்னு பார்த்தாக் காணோம்.. உன்கிட்டக் கேட்கலாம்ன்னு பார்த்தா உன்னையும் காணோம்.. ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிப் பார்த்துட்டு கைக்கு கிடைச்ச சர்ட்டை எடுத்து மாட்டிக்கிட்டு வந்து சேர்ந்திருக்கேன்.." உத்ரா அறையில் இல்லாமல் போன குற்றத்திற்காக அடாது பழிகளை அடுக்கினான் வினித்..
'அடப்பாவிகளா..!' அயர்ந்து போனாள் நந்தினி..
'ஒட்டு மொத்தமா எல்லா ஆம்பளைகளும் இப்படியாடா இருப்பீக.. எப்படிடா இந்தக் குணத்தை மெயின்டெயின் பண்ணறீங்க.. இவ வந்து பத்து நிமிசம்
கூட ஆகலை.. உங்க ஊரில இதுதான் ஒரு மணி நேரக் கணக்கா..? பாவம்டி உத்ரா நீ..'
வினித் கொடுத்த ஓடர் டோஸில் நந்தினிக்கே உத்ராவின் மீது இரக்கம் வந்து விட்டது..
"ஆனாலும் இது அநியாயம் அண்ணா... இப்போத்தான் இவளை இழுத்துக்கிட்டு வந்தேன்.. நீங்க ஒரு மணி நேரமாச்சுன்னு உடான்ஸ் விடறிங்க.." என்று தோழிக்கு கை கொடுத்தாள்..
'அப்பாடா..' உத்ராவின் முகம் தெளிந்தது..
'இனி வினித் அண்ணா இல்லாம ரூமை விட்டு நகரமாட்டா..' நந்தினிக்கு அதுவே போதுமானதாக இருந்தது..
"நீங்க வந்து இழுத்துக்கிட்டு வந்தீங்களா..?" வினித்தின் கோபம் சற்றுக் குறைந்தது..
"யெஸ்.. நான்தான் வந்து உத்ராவைக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்.. அதுண்ணா.. இன்னைக்குன்னு சீக்கிரமா முழிச்சு ரெடியாகிட்டேனா.. ரூமில இருப்புக் கொள்ளலை.. ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தா.. ஸ்விம்மிங் பூல்..! பக்கத்தில போய் பார்க்கலாம்ன்னு ஆசையாகிருச்சு.. நீங்களும், உத்ராவும் ரெடியாகிருந்தா சேர்ந்து போகலாம்ன்னு வந்தேனா.. உத்ரா மட்டும்தான் ரெடியாகி இருந்தா.. நீங்க குளித்துக்கிட்டு இருக்கிறதாச் சொன்னா.. நீங்க குளித்துட்டு வருகிறதுக்குள்ள ஸ்விம்மிங் பூலைப் பார்த்துட்டு வந்துரலாம்ன்னு நான்தான் இவ கையைப் பிடிச்சுத் தரதரன்னு இழுத்துட்டு வந்தேன்.. இவ மாட்டேன், மாட்டேன்னு சொல்லிக்கிட்டே முரண்டு பிடிச்சுத்
திரும்பிப் போகப் பார்த்தாளா.. வழியில பார்த்தவங்க எல்லாம் நான் இவளைக் 'கிட்நாப்' பண்றேன்னு சந்தேகப் பட்டு விசாரிக்க ஆரம்பத்துட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்.. இதுக்குத்தான் வயநாட்டுக்கு ஹனிமூனுக்கு வர்றேன்னு வந்தியாடின்னு நாலுப் பாட்டுப் பாடினதும்தான் அடங்கினா.."
நந்தினி சரளமாக கதை பிணைய அதை சுவராஸ்யமாக வேடிக்கை பார்த்தான் ரவிச்சந்திரன்.. அவன் கண்களில் 'பொய்யா சொல்கிற..?' என்ற செல்ல மிரட்டல் இருந்தது.. 'உன்னால்தாண்டா இந்தக் கப்ஸா..' நந்தினி அவனை முறைத்தாள்..
"ஓ.." என்றபடி ரவிச்சந்திரனை யோசனையுடன் பார்த்தான் வினித்..
"பாஸ் இப்பத்தான் வந்தார்.." அவன் மனமறிந்து சொல்ல வேண்டியதைச் சொன்னாள் நந்தினி..
"அப்படியா.." வினித்தின் நெஞ்சுக்கு நிம்மதி கிடைத்து விட அவன் கோபம் முற்றிலுமாக மறைய ஆசுவாசமானான்..
"பிஸினெஸ் டீடெயில் ஒன்னைக் கேட்கிறதுக்காக வந்தார் பாஸ்.. நானும் உத்ராவும் இங்கேயிருக்கிறோம்ன்னு சொன்னதும் நீயே கனடாக்காரன்கிட்ட அந்த டீடெயில்ஸைச் சொல்லிருன்னு போனை என் கையில கொடுத்துட்டு.. நீங்க எங்கேன்னு உத்ராகிட்ட விசாரிச்சுக்கிட்டு இருந்தார்.. பாஸ் கேட்கிறதுக்கும் நீங்க எண்ட்ரி கொடுக்கிறதுக்கும் சரியா இருந்தது.. ஏன் அண்ணா.. நீங்களும் பாஸீம் சொல்லி வைத்துக்கிட்டு ஒருத்தர் பின்னால ஒருத்தர் என்ட்ரி ஆனிங்களோ..? இந்த ஆம்பளைகளே இப்படித்தாண்டி உத்ரா.. நம்மை ஏப்ரல் ஃபூலாக்க என்ன வேண்டுமானாலும் பிளான் போடுவாங்க.."
நந்தினி போட்ட போட்டில் வினித் கிளீன் போல்டாகி விட்டான்..
"இல்லையில்ல.." என்று சிரித்தபடி..
"நான் இப்பத்தான் சாரைப் பார்க்கிறேன் உத்ரா.. பிளான் எதுவும் போடலை.. நம்பு.." என்று மனைவியைக் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்..
"இனி மகளே.. உன் சமர்த்து.." தோழியின் காதோரமாக முணுமுணுத்த நந்தினி அவளை வினித்தின் பக்கம் தள்ளி விட்டு..
"அண்ணாவை நம்பறதா வேண்டாமான்னு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கடி.." என்று கலாய்த்தாள்..
வினித்தை ஏறிட்டுப் பார்த்த உத்ராவின் விழிகள் கலங்கின.. தேநிலவுக்கு வந்த இடத்தில் கணவனின் கோபத்துக்கு ஆளாகி விட்டோமோ என்று பயந்து போயிருந்தவள்.. நொடிப் பொழுதில் நிலைமை மாறி விட்டாலும் அந்த பயம் முற்றிலுமாக அகலாமல் கலங்கி நின்றபடி..
"இவரை நம்பாம வேற யாரை நம்பப் போறேன் நந்தினி..? எனக்கு எல்லாமே இவர்தான்.. இதை கலந்து பேசித்தான் ஒரு முடிவுக்கு வரனுமா என்ன..?" என்று கணவனின் விழியோடு விழி கலக்கக் கேட்டாள்..
வினித் நெகிழ்ந்து விட்டான்.. மனைவியின் சரணாகதியில் அவனது மனதிலிருந்த கிலேசங்கள்
ஓடோடி விட்டன.. ரவிச்சந்திரனும் நந்தினியும் அங்கே நின்று கொண்டிருப்பதை மறந்து போனவனாக கைகளை விரித்து.. இமைகளை மூடி உத்ராவை அழைத்தான்.. கடலில் கலக்கும் நதியாக உத்ரா கணவனின் கைகளுக்குள் புகுந்து விட்டாள்..
'என்னங்கடா இது..' நந்தினிக்கு வெறுத்துப் போய் விட்டது..
அவள் ரவிச்சந்திரனிடம் செய்ய நினைத்ததை உத்ரா அவள் கணவனிடம் செய்து கொண்டிருக்கிறாள்.. நந்தினியும் ரவிச்சந்திரனும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..
'காதல் சொல்ல வந்தவ வாய்க்குப் பூட்டுப் போட்டு விட்டதைப் போல நிக்கறேன்.. புருசன் பொண்டாட்டியா இருக்கிறதுக என்னவோ இன்னைக்குத்தான் பாத்துக் கிட்டதைப் போலக் கட்டிப் புடிச்சுக்கிறாங்க.. இந்த சீனைப் பார்க்கவா இங்கே வந்தேன்..?'
நாம் நடக்கலாம் என்பதைப் போல ரவிச்சந்திரன் ரகசிய சமிக்ஞை செய்தான்.. இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்ற கோபத்துடன் நந்தினி அவனைப்
பின் தொடர்ந்தாள்.. தள்ளி நடக்காமல் அவளுடன் ஒட்டி உரசியபடி நடந்தவன் அவளைப் பார்த்து இமை சிமிட்டி..
"உனக்கேண்டி இவ்வளவு பொறாமை..?" என்று கேட்டான்..
நந்தினிக்குத் தூக்கிவாரிப் போட்டது.. உத்ரா அவனிடம் பேசியதில் நந்தினி காண்டானதை கண்டு கொண்டானோ..
'இவன் எதைப் பத்திப் பேசறான்னு தெரியாம வாய் விட்டிறக் கூடாது..' மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டவள்..
"யாருக்கு யார் மேல பொறாமையாம்..?" என்று தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கேட்டாள்..
"போஸெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. நீதான் நீயா இல்லை.. உத்ரா எனக்குத் தங்கை போல.. அவங்க கூட நான் பேசினா பொறாமைப் படுவியா..?" அவன் நிதானமாக கேட்டான்..
'கண்டு பிடிச்சுட்டான்..'
தெளிவானதில் மறைத்துப் பேச வேண்டிய அவசியமில்லாமல் போய்விட விடுதலையுணர்வுடன் அவனை நேருக்கு நேராகப் பார்த்து முறைத்தாள் நந்தினி..
"உத்ரா உங்களுக்குத் தங்கையா..? எப்போயிருந்து..?"
"வினித் உனக்கு அண்ணாவானாரே.. அப்போதிருந்து.. ஆர் யு மேட்..? உன் அண்ணனின் வொய்ப் எனக்கு தங்கை முறையில்லையா..?"
'ஆஹா..! எப்படியெல்லாம் முறை சொல்றடா மச்சான்..'
நந்தினிக்கு சந்தோசமாக இருந்தது.. அவன் உத்ராவிடம் தங்கையிடம் பேசும் நினைவோடுதான் பேசியிருக்கிறான் என்பதில் அவள் மனதில் ஆறுதல் உண்டானது..
"அவங்களிடம் நான் பேசிக்கிட்டு இருந்த போது என்னையே சாப்பிட்டு விடுவதைப் போலப் பார்த்துக்கிட்டு இருந்தியே.. ஏண்டி..? நைட் அடிக்கிறயா..? என் மீது காதல், கீதல் வந்துருச்சா..?"
உல்லாசமாகத்தான் அவன் கேட்டான்.. அவனை அவள் பார்வையிட்டதில் மகிழ்ந்து போய்த்தான் கேட்டான்.. அவளுக்குத்தான் மகிழ்ச்சியில்லை.. கேள்வி கேட்டவன் அதை உணர்வு பூர்வமாக கேட்காமல் நகைச்சுவையைப் போல கேட்டுத் தொலைக்கிறானே..
"ஆமாம்.. நான் உங்களைக் காதலிக்கிறேன்தான்.."
மனம் படபடக்க அவனைப் பார்க்க முடியாமல் நீச்சல் குளத்தைப் பார்த்தபடி சொல்லி விட்டாள்.. நீரலைகளின் சலசலப்பைப் போல அவளது மனம் சளசளத்தது..
'என்ன செய்வான்..? வினித் அண்ணா கை விரித்ததைப் போல இவனும் கையை விரித்து கண்களால் என்னைக் கூப்பிடுவானா..?'
உடலுக்குள் ஓர்விதமான பரபரப்பு உற்பத்தியானது.. அவனது அழைப்பிற்காக அவள் காத்திருந்தாள்.. அவன் அழைத்ததும் அவனை இறுக்கிக் கட்டியனைத்து உம்மா கொடுக்க வேண்டும் போல மனது பரபரத்தது.. ரத்த நாளமெங்கும் எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.. இப்போது கூப்பிட்டு விடுவான்.. அப்போது கூப்பிட்டு விடுவான் என்று அவள் காத்திருக்க.. அவன் பகபகவென சிரித்து வைத்தான்..
"ஜோக்..? நான் சிரிக்கனுமாக்கும்..? நாளைக்குச் சேர்த்து வைத்து இன்னும் கொஞ்சம் அதிகமாச் சிரிக்கறேன்.. ஓகே.. இவள் என்னைக் காதலிக்கிறாளாம்.. குட் ஜோக்.. வா.. வா.. உனக்குப் பிடித்த பிரேக்-பாஸ்ட் அயிட்டம்ஸ் உனக்காக காத்திருக்குது.. அதை வெட்டறதை விட்டு விட்டு வீணாய் சிரிப்பை மூட்டாதே.. காதலன்னா உனக்கு அவ்வளவு ஈஸியாப் போச்சில்ல..? ஹா.. ஹா.."
'அடப்பாவி ரவிச்சந்திரா..!'
நந்தினி அப்படியே அசையாமல் நின்று விட்டாள்..
அவளுக்கு காதல் வரவே வராது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ரவிச்சந்திரனை நினைத்துத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது..
அவனுக்குத்தான் காதல் வரும்.. அவளுக்கு வராதா..?
'என்னை ரோபோன்னே முடிவு கட்டிட்டானா..?' அவளுக்குச் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை..
'வெறும் ரோபோன்னு முடிவு கட்டலை நந்தினி.. தின்னிப் பண்டார ரோபோன்னு முடிவு கட்டியிருக்கான்..' அவளது மனச்சாட்சி வேறு உணக்கையாக வியாக்கினம் வைத்தது..
ஸ்தம்பித்து நின்றவளைப் பார்த்து அவன் கேள்வியாக புருவங்களை உயர்த்தி வேறு சோதித்து வைத்தான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,42,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -167
எண்ணியிருந்தது ஈடேற -167
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-167.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-167.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy