அம்மம்மா.. கேளடி தோழி...!-75

75 காற்றினிலே   வரும்   கீதம் தேடி.. கழிகின்றது   எந்தன்   நாள்கள்... ராஜராஜனைப் பார்த்த தங்கம் சுதாரித்துக் கொண்டவளாக கரம் குவித...


75
காற்றினிலே  வரும்  கீதம் தேடி..
கழிகின்றது  எந்தன்  நாள்கள்...

ராஜராஜனைப் பார்த்த தங்கம் சுதாரித்துக் கொண்டவளாக கரம் குவித்தாள்....
"வாங்க தம்பி.. சௌக்கியங்களா..."
"ம்ம்ம்..."
ராஜராஜன் அதற்கு வெறும் முணுமுணுப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்.. சும்மாவே அவன் மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாக பேச மாட்டான்.. அப்படியிருக்கும் போது.. அமைதியின் சிகரமாக இருந்த அவனது மனைவியைத் தூண்டி விட்டு.. பேச வைத்து.. வாய் பார்த்துக் கொண்டிருந்த தங்கத்துடன் அவ்வளவு எளிதாகப் பேசிவிடுவானா.. என்ன..?
'ம்ஹீம்... மாமியார்கிட்ட இருக்கிற ரப்பும்.. ராங்கியும்.. அப்படியே மருமகன் கிட்டயும் இருக்கு...'
தங்கத்தின் பார்வையில் அனல் பறந்தது...
"சரஸ்... கொஞ்சம் வெளியே வா.."
ராஜராஜனுக்கு அங்கே உட்காரவே பிடிக்கவில்லை.. அவன் எழுந்து கொள்ள.. வேறு வழியின்றி சரஸ்வதியும் எழுந்து அவனைப் பின்தொடர வேண்டியதாக இருந்தது...
'வந்து சொல்கிறேன்...'
தங்கத்திடம் அவள் மௌன சமிக்ஞை செய்ய... அவளும் கண்கள் ஒளிர தலையை ஆட்டி வைத்தாள்...
"அங்கே என்னடி ஜாடை வேண்டிக் கிடக்கு...?"
வெளியே வந்த ராஜராஜன் அடிக்குரலில் மனைவியிடம் சீறினான்...
"அதில்லைங்க... அவங்க எனக்கு அத்தை முறையாகனும்..."
"நான் உனக்கு என்ன முறையாகனும்கிற நினைப்பாவது உன் மனசில் இருக்கா..?"
"என்னங்க.. இப்படிப் பேசறிங்க..."
"சரஸ்... எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. உன் தம்பி கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததில இருந்து பார்க்கிறேன்.. நீ அடியோட மாறிப் போயிட்ட ...என் பழைய சரஸ்வதி எங்கே...?"
"அத்தான்..." சரஸ்வதியின் கண்களில் கண்ணீர் திரையிட்டது...
"உன்தம்பி அவருக்கு பிடித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறார்.. அதில உனக்கென்ன பிரச்னை..?"
"என் விருப்பத்துக்கு மதிப்பில்லையா..?"
"இது அவங்கவங்க வாழ்க்கை சரஸ்... இத்தனை நாளில் ஒருநாளாவது உன் தம்பி..அவருடைய விருப்பத்தை உன்மேல் திணிக்க முயற்சி செய்திருக்கிறாரா..? நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்கிற..?"
"அந்தப் பெண் முரளிக்கு சரியாய் வரமாட்டாங்க.."
"அதைச் சொல்ல நீ யாரு..? இவ்வளவு நேரமும் இதைத்தான் அந்தம்மா காதில் ஓதிக்கிட்டு இருந்தியா..?"
பாலசரஸ்வதி கணவனிடம் பொய் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தாள்...
"நம்ம வீட்டு விவரத்தை அடுத்தவங்க காதில் ஒப்பிக்கிறயே.. இது உனக்கே நல்லா இருக்கா...?"
சரஸ்வதி.. வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தில் விழிபதித்தாள்.. கணவனுக்கு மறுமொழி கூறவில்லை...
"இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு நீ அம்மா.. அவங்களை வளர்த்து ஆளாக்குகிற பொறுப்பு உனக்கு இருக்கு.. நீயே இப்படிப் பேசினா... நாளைக்கு அதையே நம்ம பிள்ளைகளும் ஃபாலோ பண்ண மாட்டாங்களா..?"
"என்னங்க இது.. வெறும் வாய் பேச்சுக்கு இவ்வளவு பேச்சா..?"
"உன்னைப் பேச வேணாம்ன்னு சொல்லலை சரஸ்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாளில இருந்து இந்தநாள் வரைக்கும் இப்படி நான் பேசியிருக்கேனா..? இல்லை.. இப்படி நான் பேசுகிற அளவுக்கு நீதான் நடந்துக்கிட்டு இருக்கியா..?"
பாலசரஸ்வதியின் விழிகளில் தெரிந்த குற்ற உணர்வில் ராஜராஜன் பேச்சை நிறுத்தினான்.. சற்று நேரம் அவர்கள் இருவரும் மௌனமாக நின்றிருந்தார்கள்.. முதன் முதலாக மனைவியைக் கடிந்து கொண்டதில் ராஜராஜனுக்கு மனதை என்னவோ செய்தது... மனைவியைப் பார்த்தான்...
லேசாக பூசினார் போன்ற தோற்றத்துடனிருந்த பாலசரஸ்வதியிடம் அன்று அதீத அழகு தென்படுவதாக அவனுக்குத் தோன்றியது.. அது எதனால் என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை...
அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசத்தில் அவன் மனதை இதம் நிறைத்தது...
"சரஸ்..." அவன் மென்மையாக அழைத்தான்...
"ம்ம்ம்..."
"ஐ ஆம் ஸாரி..."
"இதை நான்தான் சொல்லனும்..."
"உன்கிட்ட சில குணங்களை நான் எதிர்பாக்கிறேண்டி..."
"புரியுது..."
"பிள்ளைகள் எங்கே...?"
"இங்கேதான் விளையாடிக்கிட்டு இருந்தாங்க..."
"அம்மா.. அப்பா...?"
"அவங்க நம்ம பக்க சொந்தங்களோட உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க..."
ராஜராஜனின் பக்க உறவினர்களை அவள் நம்ம சொந்தபந்தம் என்று சரஸ்வதி கூறிய விதத்தில் அவன் வெகுவாக ஈர்க்கப்பட்டான்...
"வா.. நாமளும் அவங்க கூடப் போய் உட்காரலாம்.."
"ம்ம்ம்..."
அவர்கள் மண்டபத்திற்குள் வந்து.. ராஜராஜனின் பெற்றோருக்கு அருகில் உட்கார்ந்து விட்டார்கள்...
அதுவரை பாலசரஸ்வதி வரும் வழியில் விழி பதித்திருந்த தங்கத்தின் முகம் விழுந்து விட்டது...
"என்ன தங்கம்..?" கோமதி நாயகம் காரணம் கேட்டார்...
"அந்த சரஸ்வதி பொண்ணு அவங்க வீட்டில நடந்துக்கிட்டிருக்கிற அத்தனை சமாச்சாரத்தையும் கொட்டிக் கவிழ்த்துக்கிட்டு இருந்துச்சு.. அவ புருசன் வந்து கெடுத்துப்புட்டாரு..."
"விடுடி... நாள பின்ன.. அந்தப் பொண்ணு உன்கிட்ட தனியா மாட்டாமலா இருக்கும்...?"
"அப்படிங்கறிங்க...?"
"அப்படித்தான்..."
அவர்கள் மேடையை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்கள்.. நலங்கு வைக்கப்பட்டுக் கொண்டிருக்க.. தங்கத்தையும் நலங்கு வைக்க மேடைக்கு அழைத்தார்கள்... அவள் தலையை வலிக்கிறது என்று மறுத்து விட்டாள்...
அதைக் கேட்ட கீதா.. ராதிகாவின் காதருகே குனிந்தாள்...
"ஹப்பாடி...! இப்போத்தான் இது உன் கல்யாணம் போல இருக்குடி ராது..."
"ஏண்டி..?"
"உன் பிரண்ட்ஸ் யாரும் இன்னும் வந்து சேரலை... அந்த ஷோபாவுக்கு உன்னைக கண்டாலே தலைவலி வந்திரும்... ஆயிரம்தான் சொல்லு.. அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன் ராது..."
"அவளை மிஸ் பண்றியா..?" ராதிகா ஆச்சரியப் பட்டுப் போனாள்...
"பின்னே...? உன் காத்துப் பட்டாலே அவ தலையைப் பிடிச்சுக்கிற அந்த அழகு இருக்கே... ஆறாஹா... அதைக் காணக் கண்கோடி வேணும் ராது..."
"அடிப்பாவி..."
"அவ இல்லாத குறையை எதிர்த்தாப்புல உட்கார்ந்திருக்கிற அந்த அம்மா தீர்த்து வைக்கிறாங்க... பார்த்தியா... அப்படியே ஷோபாவைப் போலவே.. இந்தம்மாவுக்கும் உன்னைப் பார்த்தாலே தலைவலி வருதுடி.."
"அதைப் பார்க்கத்தானே இங்கே உட்கார்ந்திருக்கேன்..."
"நீ உன் ஆளைப் பார்க்கத்தான் உட்கார்ந்திருக்க.."
"ஏய்ய்.. நலங்கு வைக்க.. உட்கார்ந்திருக்கேன்..."
"அது ஊருக்கு... உனக்கு...?"
கீதாவின் கேள்வியில் ராதிகாவின் மனம் வலித்தது... இதே போல நிச்சயதார்த்த மேடையில்
அவள் அமர்ந்திருந்தபோது முன் வரிசையில் முரளி அமர்ந்திருந்தான்... அவளை விழுங்குவதைப் போலப் பார்த்தபடி.. கண்களில் காதலைக் கொட்டினான்...
'இன்றைக்கு அவன் எங்கே போனான்...?'
ராதிகாவின் கண்கள் அவனைத் தேடிச் சோர்ந்தன.. அவளது இதயம் ஏமாற்றத்தில் துடித்தது... என்னதான் அவன் காத்திருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்தியிருந்தாலும்.. அன்றைய நாளுக்கான எதிர் பார்ப்பைத் தவிர்க்க ராதிகாவால் இயலவில்லை...
"என்னடி.. உன் ஹீரோ எங்கேன்னு தேடறயா..?"
கீதா கண்டு பிடித்து விட்டாள்.. அதற்குள் ஒரு பெண்மணி நலங்கு வைக்க மேடைக்கு வந்துவிட... அவர்களின் பேச்சு தடைபட்டது...
அவள் போனதும்.. கீதா பேச்சைத் தொடர்ந்தாள்...
"நீ மட்டும் தேடலை.. நானும் தேடினேன்..."
"எதுக்குடி...?"
"ஏண்டி அலருகிற..? உன் ஆளை சைட் அடிக்கத்தேடலை... நம்ம பக்க சொந்தக்காரங்க.. மாப்பிள்ளையைப் பார்க்கனும்னு சொன்னாங்க.. அந்தச் சாக்கில் நாமும் பார்த்துக்கலாம்ன்னு தேடிப் போனேன்.. ஆள் அகப்படலை..."
'எங்கே போயிருப்பான்..?'
"உனக்குத்தான் அவர் உன் ஆளுங்கிறதால ஈஸியா இருக்கு.. இந்த ஊரில அப்படியில்லையாம்.. உன் ஆள் பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாம்..."
'நானா அவனை ஈஸியா நினைக்கிறேன்..? அவனைப் போலவே நீயும் பேசறியே கீதா...'
"ஒரு இடத்தில் கால் பதிச்சு நிற்க மாட்டாராம்.. இப்படியாகப்பட்ட மனிதர்.. உன் பின்னாலே சென்னையில ரோந்து சுத்தியிருக்காரு பாரேன்..."
ராதிகாவிற்கு அதைக் கேட்கையில் பெருமையாக இருந்தது..
"ஆனாலும் ராது.. விடிஞ்சாக் கல்யாணம்.. இப்போக்கூட பிஸியாக அலையனுமா..? கல்யாணமான கையோடு.. இதை முதல் வேலையாய் கண்ட்ரோல் பண்ணு..."
'ஆமாண்டி... நான் சொன்னால் கேட்டு விட்டுத்தான் அவன் வேற வேலை பார்ப்பான்...'
"வேலை... வேலைன்னு அலையக் கூடாது ராது.. கொஞ்சம் வீட்டையும் நினைக்கனும்.."
'அவன் நினைப்பானா..?'
"ஹஸ்பெண்டைக் கைக்குள்ள போட்டுக்கிற வித்தையில நீ கொஞ்சம் மக்குத்தான்.. நான் சொன்னாலும் அதட்டுவ.. ம்ஹீம்... எப்படிச் சமாளிக்கப் போறியோ..."
'எப்படிச் சமாளிக்கப் போறேன்..?'
ராதிகாவிற்கு கவலையாக இருந்தது... இதயத்தை செல்லரித்துக் கொண்டிருந்த அந்தக் கவலைகளிடமிருந்து விடுபட வழிதெரியாமல் அவள் ஏங்கினாள்...
"என்னடி உம்முன்னு ஆகிட்ட..?"
"ஒன்னுமில்ல..."
"இப்படிச் சொன்னா... நான் நம்பிடுவேனா.. விடுடி.. எல்லாம் கல்யாணம்ன்னு ஒன்னு ஆகிட்டா சரியாப் போயிடும்..."
இது சரியாக வாய்ப்பே இல்லை என்று இவளுக்கு தெரிய வந்தால் என்ன சொல்வாளோ என்று நினைத்துக் கொண்டாள் ராதிகா...
"அப்புறம் பாரேன்.. குட்டி போட்ட பூனையைப் போல உன்னையே சுற்றிச்சுற்றி வருவார்.."
'இல்லை...' என்று கூவ வேண்டும் போலத் தோன்றியதை அடக்கிக் கொண்டாள் ராதிகா...
சொல்வதால் என்ன பயன்...?
அதோ.. அங்கே உறவினர் கூட்டத்தின் மத்தியில் முகமெல்லாம் பெருமை பொங்க பேசிக் கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் பெருமை நிலைக்க வேண்டு-மானால் அவள் எதையும் சொல்லக்கூடாது...
பட்டுப்புடவை சரசரக்க.. இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருக்கும் ராஜேஸ்வரியின் முகத்தில் நிலவும் நிம்மதி நிலைக்க வேண்டுமானால் அவள் எதையும் சொல்லக்கூடாது...
தமக்கையின் பக்கத்தில் பொறுப்பாக நின்று கொண்டிருந்தாலும்.. கவலையற்ற பட்டாம் பூச்சியாக இருக்கும் கீதாவின் இந்த சந்தோசம் நிலைக்க வேண்டுமென்றால் அவள் எதையும் சொல்லக்கூடாது...
தாய் சொன்ன வேலைகளைச் செய்து கொண்டே விழாநாளின் உற்சாகத்துடன் இங்கும்.. அங்கும் வளைய வந்து கொண்டிருக்கும் சுந்தரின் உற்சாகம் நிலைக்க வேண்டுமென்றால் அவள் எதையும் சொல்லக்கூடாது...
வாய்திறந்து சொல்லப் போகும் வார்த்தைகளால் ஏற்படப் போகும் விபரீத பின்விளைவுகளை நினைத்துப் பார்த்த ராதிகா வாய்ப் பூட்டு போட்டுக் கொண்டாள்...
எதற்காகச் சொல்ல வேண்டும்..? இது அவள் வாழ்க்கை...! இதுதான் வாழ்க்கை என்று ஆனபின்னால்.. வாழ்ந்துதானே ஆக வேண்டும்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...!-75
அம்மம்மா.. கேளடி தோழி...!-75
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-75.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-75.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy