அம்மம்மா.. கேளடி தோழி...! -70

70 என்னென்னவோ சொல்ல நினைத்தேன்.. உன்னைப் பார்த்ததும் மறந்துவிட்டேன்.. "அது வேற ஒன்னமில்லடி ராது.. உன்னைப் போலவே நானும் காதல்...


70
என்னென்னவோ சொல்ல நினைத்தேன்..
உன்னைப் பார்த்ததும் மறந்துவிட்டேன்..

"அது வேற ஒன்னமில்லடி ராது.. உன்னைப் போலவே நானும் காதல்.. கீதல்ன்னு ஆரம்பிச்சு வச்சிருவேனோன்னு லேடி ஹிட்லர் மனசில ஒரு எண்ணம் ஓடிக்கிட்டு இருக்கு.. அதனால உன்மேல் கோபத்தைக் காட்டறதைப் போல எனக்கும் மறைமுகமாய் எச்சரிக்கை பண்ணிக்கிட்டு இருக்காங்க..."
'அவங்க மனசில மட்டுமா அந்த பயமிருக்கு.. என் மனசிலும் அதுதாண்டி இருக்கு...'
பெருமூச்சுடன் தங்கையைப் பார்த்தாள் ராதிகா...
"என்ன.. உன் மனசிலயும் அதேதானா..."
"எப்படிடீ கண்டு பிடிச்ச...?"
"நீ என்ன நினைப்பன்னு எனக்குத் தெரியாதா..? என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சவ நீ ஒருத்திதான்.. இத்தணூண்டு தெரிஞ்ச லேடி ஹிட்லருக்கே பயம் வரும்போது... எல்லாம் தெரிஞ்ச உனக்கு அந்த பயம் வராமபோகுமா..."
"ஆனாலும்.. நீ புத்திசாலி.. கெட்டிக்காரத்தனமாய் இருப்ப.. எல்லோருமே முரளியைப் போல நல்லவங்களா இருக்க மாட்டாங்க.. இதெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன..?"
"இப்படிச் சொல்லி மனசைத் தேத்திக்கிற..."
"ஏண்டி இப்படி பயமுறுத்தற..."
"விடு.. விடு.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு.. முதல் வேலையா பியூட்டி பார்லருக்குப் போயாகனும்..."
"எதுக்குடி..."
"முகூர்த்தச் சேலை எடுக்கப் போக வேணாமா..?"
"யாருக்கு...?"
"உனக்குத்தான்.. பின்னே.. எனக்கா..?"
"தெரிஞ்சாச் சரிதான்.. கல்யாணப் பெண்ணே காலேஜீக்குப் போகப் போறேன்.. நீ பியூட்டி பார்லருக்குப் போறயா..?"
"எக்ஸாமில இருந்து தப்பிக்க லட்டு போல சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதைவிட்டுட்டு.. நீ எக்ஸாம் எழுதியே தீருவேன்னு அடம்பிடிக்கிற மண்டுவாய் இருக்க... உன்னைப் போல நானும் இருக்க முடியுமா..?"
"எப்படியோ செய்து தொலை..."
"உனக்குப் பொறாமையா ராது.. இல்லை பயமா...?"
"எதுக்குடி..."
"இல்ல.. பியூட்டி பார்லருக்குப் போய் இருக்கிற பியூட்டியை அதிகப்படுத்திக்கிட்டு வந்தால் உன் ஆள் என்னிடம் மயங்கிப் போய் உன்னை மறந்து விடுவாருங்கிற பயமா...?"
கீதா என்னவோ விளையாட்டாகத்தான் கேட்டாள்.. இதைப் போன்ற பேச்சுக்களை இதற்கு முன்னாலும் அவள் பேசியிருக்கிறாள்தான்... ஆனாலும் என்னவோ.. அன்று ராதிகாவிற்கு 'சுரீர்..' என்று மனதில் வலித்தது...
அவளது கைப்பொருளை யாரேனும் தட்டிப்பறிக்க முயன்றால் ஏற்படும் பதட்டம் அவளுக்குள் ஏற்பட்டது...
அந்தப் பதட்டத்தில் சட்டென்று கீதாவின் கன்னத்தில் அடித்து விட்டாள்...
"அடிப்பாவி..." அறை வாங்கிய கீதா வலிதாங்க முடியாமல் கன்னத்தை பிடித்துக் கொண்டாள்...
"ஸாரி.. ஸாரி.. தெரியாம... ஏதோ ஒரு வேகத்தில அடிச்சுட்டேண்டி.." ராதிகா கையைப் பிசைந்தாள்...
"நீ முரளியைக் காதலிக்கிறேன்னு தெரியும்.. இந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு இப்பத்தானே தெரியுது.. இனிமே உன் பக்கத்தில நின்னு பேசக்கூடாதுடி.. நாலடி தள்ளி நின்னுதான் பேசனும் போல..."
ராதிகா அடித்ததை பெரிது பண்ணாமல் கீதா சிரித்தபடி போய் விட்டாள்.. மனம் தாளாத ராதிகாதான் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள்.. எதனாலோ அவள் மனம் அமைதியின்றி தவித்தது.. அமைதியான மனக்குளத்தில் யாரோ கல்லெரிந்து விட்டதைப் போல மனதில் அலைகள் அடித்தன...
ஒருவழியாக குளித்துக் கிளம்பியவள்.. பாலமுரளிக்கு பிடித்த வண்ணத்தில் ஜரிகை வேலை பாடுகள் செய்த புடவையை உடுத்திக் கொண்டாள்.. அவன் வாங்கிக் கொடுத்திருந்த நகைகளை அணிந்து கொண்டாள்..
"வைரத்தோட எக்ஸாம் எழுதப் போறியா.. அசத்து.." கீதா கையாட்டி விடைகொடுத்தாள்...
"பத்திரம்..." கிருஷ்ணமூர்த்தி கவலைப்பட்டார்...
"அதெல்லாம் அவ பத்திரமாய் போய்க்குவாப்பா.. நீங்க உள்ளேவாங்க..." கீதா தகப்பனாரை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள்..
ராதிகாவின் வகுப்புத் தோழிகள் அவளது திடீர் திருமணத்தைப் பற்றி விசாரித்தார்கள்.. சங்கருடனான திருமணம் ஏன் நின்று போனது என்று காரணம் கேட்டார்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லிச் சமாளித்தவள் அவசரமாக தேர்வை எழுதிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள்...
'இன்னம் அவனைக் கானோமே...'
நகத்தைக் கடித்துத் துப்பியபடி பாதையோர மரத்தடியில் இருந்த சிமிண்ட்பெஞ்சில் அமர்ந்தாள்.. அவள் மனதில் அமைதியில்லை... ஏதோ நடக்கப் போவதைப் போல மனம் தவிப்பது எதனால் என்று அவளுக்கு புரியவில்லை...
"ராதிகா.." என்ற குரலைக் கேட்டதும் பதறி எழுந்தாள்...
'இது சங்கரின் குரலாச்சே...'
அவள் பயந்ததைப் போலவே அங்கே சங்கர்தான் நின்று கொண்டிருந்தான்..
'இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்...'
முரளி வந்து விடுவானோ என்ற பயத்துடன் ராதிகா பார்வையை சுழல விட்டாள்...
"என்ன பயம் ராதிகா..?" சங்கர் அவளருகில் வந்து நின்றான்...
"உங்களுக்கு என்ன வேணும்...?" ராதிகா படபடத்தாள்...
"வெயிட்.. வெயிட்.. ஏன் இப்படி பதட்டப்படறிங்க.. நான் உங்களைப் பார்க்க வந்ததை யாரும் பார்த்து விடுவாங்களோன்னு பயப்படறிங்களா..? அதனால் தான் நான் காலேஜீக்குள்ளேயே வந்து விட்டேன்..."
அவன் விளக்கம் சொல்லிய விதத்தில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
'இவன் எதுக்காக என்னைப் பார்க்க வந்தான்னு கேட்டா.. என்னென்னவோ பினாத்தறானே...'
"மத்த இடம்ன்னா மற்றவங்க பார்வையிலே பட்டு விடலாம்..."
'பட்டால்தான் என்ன...'
"இங்கேன்னா யாருக்கும் தெரியாது..."
'தெரியாம ஏன் இருக்கனும்..?'
"சொல்லுங்க ராதிகா..."
'எதைச் சொல்லச் சொல்ற...?'
"உங்களுக்கு என்ன பிரச்னைன்னு சொல்லுங்க..."
'நீதான் என்பிரச்னை...'
"நானிருக்கேன் உங்களுக்கு..."
'அடப்பாவி...'
"யாருக்கும் பயப்படாதீங்க..."
'உன் பேச்சைக் கேட்டுத்தான் பயப்பட்டுத் தொலைக்கிறேன்... அது தெரியுமா உனக்கு...'
"அந்த முரளி உங்களை என்ன சொல்லி மிரட்டினான் ராதிகா..?"
'அவன் என்ன வில்லனா..? என் ஹீரோ...'
"அவனால் என்ன செய்ய முடியும்..? எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்க.. நான் உங்களைக் கைவிட மாட்டேன்..."
'உளராதே...'
"முரளியிடமிருந்து நான் உங்களைப் பாதுகாக்கிறேன் ராதிகா... என்கூட வந்து விடுங்க..."
அதுவரை மனதுக்குள் பொறுமிக் கொண்டிருந்த ராதிகா பொறுமை உடைந்தவளாக வெடித்தாள்...
"சங்கர்..."
"சொல்லுங்க ராதிகா.. முரளியால் உங்களுக்கு என்ன நடந்திருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன்.. அவன் செய்கிற பிளாக் மெயிலுக்காக பயப்பட்டு உங்க வாழ்வை பணயம் வைக்காதீங்க..."
"போதும் சங்கர்..."
"முதலிலேயே என்னிடம் சொல்லியிருக்கலாமே ராதிகா.. அந்த முரளி உங்களை மிரட்டுகிறான்னு சொல்லியிருந்தா நான் அவனைக் கவனிக்கிற விதத்தில் கவனிச்சிருப்பேன்..."
"சங்கர்.. எனக்கு மேரேஜ் எங்கேஜ்மென்ட் முடிஞ்சிருச்சு..."
"இன்னும் மேரேஜ் முடியலையே.. வந்து விடுங்க ராதிகா.. என்கூட வந்து விடுங்க.. நான் உங்களைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கிறேன்.."
"ப்ளீஸ் சங்கர்.. போய் விடுங்க..."
"ஏன் ராதிகா..? ஏன் நான் போகனும்..? அந்த முரளியைப் பற்றி நினைத்து பயப்பட வேணாம்ன்னு சொன்னேனா இல்லையா..?"
"தயவு செய்து என்நிலைமையை புரிஞ்சுக்கங்க சங்கர்.. எனக்கு மேரேஜ் நடக்கப் போகுது.. இப்பப் போய் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு வந்து நிற்கறிங்களே..."
"எனக்குத் தெரியாதே ராதிகா.. எதானால் நீங்க இந்த முடிவை எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியாதே.. ஹேமா சொல்லித்தானே எனக்கே எல்லா விவரமும் தெரிய வந்தது..."
"ஹேமாவா...?"
"ஹேமாதான்.. அவங்கதான் உங்க நிலையைச் சொன்னாங்க... அதைக் கேட்ட பின்னால்தான் உங்களைக் கையோடு என்கூட கூப்பிட்டுக்கொண்டு போகும் முடிவை நான் எடுத்தேன்..."
"அவ என்ன சொன்னா...?"
"நீங்க சொன்னதையெல்லாம் சொலிட்டாங்க.. இதை முன்னாலேயே செய்திருக்கலாமே ராதிகா.. இதை இவ்வளவு தூரம் வளர நான் விட்டிருக்க மாட்டேனே..."
"ஹேமாவை நீங்க எங்கே பார்த்தீங்க...?"
"நேற்றே பார்த்திட்டேன்.. அப்பவே உங்களை வீடு புகுந்து தூக்கிக் கொண்டு வந்து விடலாம் போல வேகம் வந்தது.. மற்றவங்க வீணாய் ஊடே வருவாங்க.. அதனால்தான் இங்கே வந்தேன்.. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. இப்படியே என்கூட வந்து விடுங்க..."
"வந்து...?"
"நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்..."
சங்கர் சொல்லிக் கொண்டே போக.. ராதிகாவிற்கு பயத்தில் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது...
'முரளி வருகிற நேரமாச்சே...'
அவள் பயந்ததைப் போலவே தான் நடந்தது...
"குட் ஐடியா..."
யாருடனோ செல் போனில் பேசியபடி அங்கே பிரசன்னமானான் பாலமுரளி... சங்கர் அங்கே நிற்பதைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினான்...
"இவர் இங்கே என்ன செய்கிறார் ராதிகா..."
"அது.. அதுவந்து..."
பயத்தில் தடுமாறிய ராதிகாவின் பார்வையில் அவர்களையே முறைத்தபடி வந்து கொண்டிருந்த ஷோபா தென்பட்டாள்...
சட்டென்று அவளைக் கைகாட்டி விட்டாள் ராதிகா...
"அவளைப் பார்க்க வந்தாராம்..."
"ஒ... ஷோபாவைப் பார்க்க வந்தாரா..."
"ஆமாம்.. வாங்க.. நாம போகலாம்..."
"இரு... ஷோபா வந்ததும் அவளிடம் ஒரு வார்த்தை பேசிட்டுப் போயிடலாம்.. அதுதான் முறை..."
"எனக்குத் தலை வலிக்குது..."
"அப்படின்னாச் சரி.. வா.. போகலாம்..."
ராதிகா சங்கரைக் கவனிக்காமல் ஓட்டமும்.. நடையுமாக பாலமுரளியின் காரை நோக்கி விரைய.. அவள் பின்னால் போகாமல் நின்று சங்கரை முறைத்தான் முரளி...
"அவளிடம் உனக்கென்ன பேச்சு...?"
"அதைக் கேட்க நீ யார்..?"
"அவளோட வருங்காலக் கணவன்..."
"இப்ப அவளோட ஹஸ்பெண்டாய் நீ இல்லை.. நினைவில் வைத்துக்க.."
"என்ன சொல்கிற...?"
"மேரேஜ் முடிகிற வரைக்கும் எதுவும் நிச்சயமில்லை..."
"அவ என் பெண்டாட்டி..."
"இன்னும் ஆகலைன்னு சொன்னேனே..."
"அது உனக்கு.. எனக்கில்லை..."
"நீ அவளை மிரட்டிப் பணிய வைச்சிருக்க முரளி.. அவ பயத்தை உடைச்சு அவளை வெளியே கொண்டு வராம விடமாட்டேன்..."
"முடிஞ்சா அதைச் செய்..."
சவால்விட்ட முரளி கோபத்துடன் காரை நோக்கிப் போனான்.. காரில் ஏறி கதவை அவன் ஓங்கிச் சாத்திய வேகத்தில் கார் கதவு உடைபடாமல் அதிசயமாய் தப்பிப் பிழைத்தது...
வெறி பிடித்தவனைப் போல கண்கள் சிவந்திருந்த அவனது ரௌத்ரமான தோற்றத்தைக் கண்டு ராதிகா அரண்டு போனாள்.. பாலமுரளியின் முகத்தைப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது...
காரை ஒடித்து திருப்பிய முரளி... கடற்கரைச் சாலையில் காரை விட்டான்... அது ஏனென்று புரியாமல் ராதிகா திகைத்தாள்..
'ஜவுளிக் கடைக்குப் போகாமல் இங்கே ஏன் வந்திருக்கான்...'
நண்பகலைத் தொட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கடற்கரையில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.. மரங்கள் அடர்ந்திருந்த கடலோரச் சாலையில்.. மூடியிருந்த கார் கதவின் ஜன்னல் வழியாக.. அலைகடலின் அலையடிக்கும் தோற்றம் தெரிந்தது... அந்த நீலக்கடலின் அலைகளால் ராதிகாவின் நெஞ்சினில் அமைதியைக் கொண்டு வர முடியவில்லை...
ஓரக் கண்ணால் முரளியைப் பார்த்தாள் ராதிகா...
அவன் மிகவும் ரௌத்திரத்துடன் இருந்தான்.. அன்று பண்ணைவீட்டில் அவளை ஆக்ரமித்தபோது எப்படிப்பட்ட ஆவேசத்துடன் இருந்தானோ... அதைவிடப் பலமடங்கான ஆவேசத்தை அடக்கி வைத்துக் கொண்டிருப்பவனாக காட்சியளித்தான்.. காரின் ஸ்டிரியங்கைப் பிடித்திருந்த அவன் கை நரம்புகளின் இறுக்கத்தைக் கண்டவளுக்கு... அவன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது...
வேக மூச்சுக்களை எடுத்து தன்னைச் சமனப் படுத்திக் கொள்ள அவன் முயன்று கொண்டிருந்தான்.. அவனது சிவந்த விழிகளில் அளவுகடந்த ஆத்திரம் குடி கொண்டிருந்தது... அவன் முகத்தில் வழிந்த சினத்தைக் கண்ட ராதிகா மனதிற்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள்...
காலையிலிருந்து ஏன் அவள் மனம் அலைகடலாய் ஆர்ப்பரித்துத் தவித்தது என்று அந்த நொடியில் அவளுக்குப் புரிந்தது...
அவன் அவளுக்கு உயிருக்குயிரானவன்.. சில நாள்களாய் அவள் மனதை சிறகடிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.. வெயிலாய் அவளைச் சுட்டவன்.. பனியாய் மாறி குளிர வைத்துக் கொண்டிருக்கிறான்...
அவன் கட்டும் தாலியை கழுத்தில் ஏற்றுக் கொள்ளப் போகும் நாள் வெகு அருகில் இருக்கும்போது.. அந்த இதம் மறைவது எதற்கான அறிகுறி..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -70
அம்மம்மா.. கேளடி தோழி...! -70
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-70.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-70.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy