அம்மம்மா.. கேளடி தோழி...! -68

68 யார்   மனதில்   யாரிருந்தாலென்ன.. ? என்   மனதில்   நீயிருக்கிறாய்... மாடியிலிருந்த பால்கனியின் முகப்பில் பாலமுரளி நின்று கொண்ட...


68
யார்  மனதில்  யாரிருந்தாலென்ன..?
என்  மனதில்  நீயிருக்கிறாய்...

மாடியிலிருந்த பால்கனியின் முகப்பில் பாலமுரளி நின்று கொண்டிருந்தான்.. அவன் பார்வை மாடிப் படிகளின் மீது பதிந்திருந்தது... மான் குட்டியைப் போல.. இரண்டிரண்டு படிகளாய் தாவிக் கடந்து வந்த ராதிகாவின் விரைவைக் கண்டதும்.. அவன் மனதில் நிறைவு தோன்றியது.. படிகளில் ஏறிக் கொண்டடிருந்தவளின் விழிகள் அவனைத் தேடித் துழாவுவதை கண்டவனின் மனம் சிறகடித்தது.. அவனுக்கான அவளது தேடலை அதிகப்படுத்திப் பார்த்து ரசிக்க விரும்பினான் முரளி...
மெதுவாக நகர்ந்து பால்கனியின் சுவர் மறைவில் நின்று கொண்டான்.. மாடியேறிய ராதிகா அவனைக் காணாமல் தேடியபடி நடந்து வந்தாள்.. அலைபாயும் அவள் பார்வையில் அவன் மனதில் அலையடித்தது...
இங்கும் அங்கும் பார்வையைச் சுழல விட்டபடி பால்கனியில் கால்வைத்தவளின் பின்னாலிருந்து அவன் கரம் வளைக்க.. அவள் விதிர்த்துத் திரும்பினாள்.. திரும்பிய வேகத்தில் அவன் கையைத் தள்ளி விட்டவள்.. எதிரே நின்றவனைக் கண்டதும் நிதானித்தாள்...
"நீங்களா..! நான் யாரோன்னு நினைச்சுட்டேன்..."
அவன் காதுகளில் தேன் பாய்ந்தது.. அவன் புருவங்களை கித்தாய்ப்பாய் உயர்த்தியபடி அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான்...
"என்னை விட்டு வேற ஒருத்தன் உன்னைத் தொட்டிடுவானோ.. கையை வெட்டிற மாட்டேன்...?"
"போதும்... உங்க வீர பிரதாபத்தை அள்ளி வீச வேணாம்.. எதுக்கு வரச் சொன்னீங்க...?"
"வரச் சொன்னாத்தான் வருவியா...?"
அவன் பார்வை அவள் மேனியில் படிந்து பரவி மேய ஆரம்பிக்க.. அவள் கிளர்ச்சியுற்றவளாக முகம் சிவந்து உதடுகளைக் கடித்தாள்...
"ஹலோ பாஸ்.. இது உங்க பண்ணை வீடில்லை..."
"என் பண்ணை வீடா...?"
அவன் ஒருமாதிரியான குரலில் வினவ.. நாக்கைக் கடித்துக் கொண்டுடாள் ராதிகா..
"ஸாரி.. ஸாரி.. நம்ம பண்ணை வீடு.. போதுமா..."
"இன்னும் எத்தனை தடவைதான் ஸாரி கேட்ப..? அடிக்கடி இப்படிப் பேசி ஸாரி கேட்காதே.. எனக்குப் பிடிக்காது..."
"ஓகே.. ஓகே.. கூல்.. ப்ளீஸ்..."
"நான் கூல் ஆகனும்னா ஒரு கண்டிசன்..."
"என்ன..?"
"கிட்டே வா..."
அவன் விழிகளில் தெரிந்த தாகத்தில் அவள் பரபரபுபடன் சுற்று முற்றும் பார்த்தாள்.. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த உறவினர் பட்டாளத்தின் பார்வையில் படாமல் மறைந்து நின்றவள்..
"ஸ்ஸ்.. யார் காதிலயாவது விழுந்து விடப் போகுது.." என்று எச்சரித்தாள்...
"விழுந்தால் என்ன...?"
"என்னவா..? அவங்க நம்மைப் பத்தி என்ன நினைச்சுக்குவாங்க..?"
"இதென்னடி வம்பாப் போச்சு.. என் பெண்டாட்டியை நான் கூப்பிடறேன்.. இதில் மத்தவங்க நினைக்க என்ன இருக்கு..?"
"இப்பத்தான் நிச்சயதார்த்தம் நடந்திருக்கு..."
"அப்படின்னு நீ சொல்றயா..?"
"மத்தவங்க சொல்லுவாங்கன்னு சொன்னேன்..."
"மத்தவங்ககிட்ட சொல்லேண்டி..."
"எதைச் சொல்லச் சொல்கிறிங்க...?"
"நாங்க ஏற்கனெவே முதலிரவைக் கொண்டாடி முடிச்சிட்டோம்ன்னு சொல்ல வேண்டியது தானே..."
மீண்டும் முரளி கண்சிமிட்ட ராதிகா இமைக்காமல் அவனை முறைத்தாள்...
"போதும்டி..." அவன் சிரித்தான்...
"இந்தப் பெருமையை பேசாமல் இருக்கவே மாட்டிங்களா..?"
"உனக்கேண்டி இவ்வளவு கோபம் வருது...?"
"எதுக்குக் கூப்பிட்டிங்க.. அதை முதல்ல சொல்லுங்க..."
"முகூர்த்தப் பட்டு எடுக்கனுமாம்.. அதை நாளைக்கு எடுத்து முடிச்சிட்டா ஊருக்குக் கிளம்பிப் போய் கல்யாண வேலைகளை ஆரம்பிக்கலாம்ன்னு அம்மா சொன்னாங்க.."
"நாளைக்கேவா..?" ராதிகா தயங்கினாள்...
"நாளைக்கேதான்.. ஏன் இப்படிக் கேட்கிற..."
"நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்குங்க.. வேற ஒரு நாளில் புடவை எடுக்கப் போகலாமா..?"
ராதிகாவின் பதிலைக் கேட்டதுட்ம முரளியின் முகம் மாறிவிட்டது..
"விளையாடறியா... இது முகூர்த்தப் புடவைன்னு சொல்றேன்.. புரியாம பேசிக்கிட்டு இருக்கியே..."
அவன் குரலில் மித மிஞ்சிய கோபம் வெளிப்பட்டது...
முரளியின் கோபத்தைக் கண்டு ராதிகா பயந்து விட்டாள்.. அவள் என்ன சொல்லி விட்டாள் என்று அவன் இந்த அளவுக்கு கோபப்படுகிறான்... என்ற வருத்தம் அவள் மனதில் எழுந்தது...
மௌனமாக நின்றவளின் முகம் பார்த்தும் அவன் கோபம் தணியவில்லை...
"ஒன்னு.. தானாய் தெரியனும்.. இல்லைன்னா சொல்கிறவங்க பேச்சையாவது கேட்கனும்.. இங்கே ரெண்டுமில்லை... எதைச் சொன்னாலும் அதை எதிர்த்து ஒரு பேச்சு.. எப்படித்தான் இப்படி இருக்கியோ..."
அவன் அலுத்துக் கொண்டதில் ராதிகாவுக்கு ரோசம் வந்து விட்டது..
"இப்ப என்னத்தை தெரியாம பேசிட்டேனாம்..? இப்படிச் சொல்லிக் காட்டறிங்க..."
"இந்த ரோசத்துக்கொன்னும் குறைச்சலில்ல.. முகூர்த்தப் புடவை எடுக்கிறதுங்கிறது எங்க பக்கத்தில முக்கியமான சம்பிரதாயம்.. அதுக்கு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் சேர்ந்து போவாங்க..."
"நீங்க வரமாட்டிங்களா..?"
கவலையுடன் ராதிகா கேட்க.. முரளியின் கோபம் பறந்து விட்டது..
'இவ என்ன இந்த அளவுக்கு என்னைத் தேடறா...'
அவனுக்கு மனதை என்னவோ செய்தது.. ஒரு காதலியிடம் தென்படும் அத்தனை தேடலும்.. அலைபாய்தலும் ராதிகாவின் விழிகளில் இருக்க.. அவன் கிளர்ச்சியுற்றான்...
"நானும் வருவேண்டி... நான் வராம இருப்பேனா..?"
"அப்போச் சரி..."
"அக்கா குடும்பமும் வரனும்.. அவங்க இதுக்காக இன்னொருதரம் அலைய முடியுமா..? கல்யாணத்துக்கு ஊடே இருக்கிற நாள் ரொம்பக் குறைவா இருக்கு.. அவங்க கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னாலேயே தேனூத்தில் வந்து இறங்கியாகனும்.. உன் குடும்பமும்.. என் குடும்பமும் சேர்ந்து எடுக்க வேண்டிய புடவை இது.. இதுக்காக இன்னொரு நாள் இரண்டு குடும்பமும் சேர்ந்து கூட முடியாது.. புரியுதா..."
இதில் இத்தனை இருக்கிறதா.. என்ற நினைவில் ராதிகா பிரமித்தாள்...
"புரியுது..." என்று தலையசைத்தாள்...
"அக்கா குடும்பம் நாளைக்கு நைட்டே திருநெல்வேலிக்கு கிளம்பறாங்க... அதுக்கு முன்னாலே நாம புடவை எடுத்து முடித்தாகனும்..."
"எனக்கு எக்ஸாம் இருக்கேங்க.. ஒன்னு செய்யுங்க.."
"என்னத்தை செய்யச் சொல்ற...?"
"நீங்களா புடவை எடுத்துக்கிட்டு வந்துருங்களேன்.."
"நீ இல்லாமலா..?"
"இப்ப நிச்சயத்துக்கு நான் இல்லாம புடவை எடுக்லியா..?"
"அதுவேற... இது வேறடி..."
"என்னத்தை வேற வேறன்னு இழுக்கறிங்க.. ரெண்டும் ஒன்னுதானே..."
முரளி முகச்சுளிப்புடன் ராதிகாவை அதிருப்தியாகப் பார்த்தான்... அவனது பார்வை போன கோபம் திரும்பி விட்டதை உணர்ந்த.. ராதிகா கைகளைப் பிசைந்தாள்...
'திரும்பவும் மலையேறிட்டானே...'
"ராதிகா.. நீ இந்தக் கல்யாணத்துக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கலையோன்னு நான் நினைக்கிறேன்..."
முரளியின் ஆழ்ந்த குரலில் குற்றச்சாட்டு வெளிப்பட்டது.. ராதிகா பதறிவிட்டாள்...
அவளா இந்தத் திருமணத்தை முக்கியமில்லாததாக நினைக்கறிhள்..?
"என்ன வார்த்தை சொல்லிட்டிங்க..."
"த்ச்சு.. இல்லேடி.. உனக்கு நான் உன் கழுத்தில் தாலி கட்டனும்.. அதனால் உன் குடும்ப கௌரவம் நிலைக்கும்.. அவ்வளவுதான்.. அதை மட்டும்தான் நீ பார்க்கிற.. மத்தபடி கடமைக்காக வேற வழியில்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவதானே நீ..?"
'கடவுளே...!'
சொல்லடி பட்டதில் துடித்துப் போனவளாக இமை மூடி நின்றாள் ராதிகா.. அவள் இமை மறைவிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து விழுந்தது.. அதைக் கண்ட முரளி அதட்டினான்...
"இப்ப எதுக்காக கண்ணீர் விடுறவ...?"
"நீங்க இப்படிப் பேசலாமா..?"
"உண்மையத்தானே சொன்னேன்.. உங்க வீட்டிலேயும்... எங்க வீட்டிலேயும் நினைச்சுக்கிட்டு இருக்கிறதைப் போல.. நாம ஒருத்தரையொருத்தர் காதலிச்சா கல்யாணம் பண்ணிக்கப் போகிறோம்..? நான் உன்னைக் காதலிக்கிறேன்தான்.. ஆனால் நீ...?"
முரளியின் வார்த்தைகள் உமிழ்ந்த வெறுப்பில்.. ராதிகா அமிழ்ந்து போனாள்...
இதுவிடமுடியாத புதைகுழி என்று அவளுக்குத் தோன்றியது.. இந்தக் குற்றச்சாட்டு கடைசிவரை அவளைத் துரத்தப் போகிறது.. காலம் முழுவதும் அவளை அலைக்கழிக்கப் போகிறது.. அதையறிந்தும் அதைத் தடுக்க வழியறியாமல் அவள் திகைத்து நின்றாள்...
"நான் உன்னை பலவந்தப் படுத்திட்டேண்டி.. தொட்டுட்டேன்.. அதுக்காக மட்டுமே எனக்கு நீ கழுத்தை நீட்டப் போற.. மத்தபடி நம்ம கல்யாணத்தைப் பற்றி எந்தவித நினைப்பும் உனக்கில்லைல்ல..."
"முரளி ப்ளீஸ்.. இப்படிப் பேசிப் பேசியே என்னை ஒருவழி பண்றீங்க.. எனக்கு எக்ஸாம் இருக்குன்னு சொன்னேன்.. அது ஒரு குத்தமா..?"
"குத்தம்தான்.. நம்ம கல்யாணம் மட்டும்தான் என் மனசிலிருக்கு... உனக்கும் அப்படித்தான் இருக்கும்ன்னு நான் தப்புக்கணக்கு போட்டுட்டேன்..."
"ஒண்ணு பண்ணலாம்..."
"என்ன..?"
"எனக்கு காலையிலதான் எக்ஸாம்.. நாம மதியமா சேலை எடுக்கப் போகலாமா..?"
"ம்ம்ம்... நீ அப்படிச் சொல்கிறயா..? எங்க அக்கா வீட்டிலேயும் எல்லோரும் கிளம்பி வர நேரமாகும்.. எங்க வீட்டிலயும் சித்தி.. சித்தப்பா.. பெரியம்மா.. பெரியப்பான்னு கிளம்பறதுக்குள்ள மதியமாகிடும்... அப்படி ஆகலைன்னாலும் நான் நேரத்தைக் கடத்திடுறேன்.. ஆனா நீ சொன்னடி வந்துடனும்..."
"கட்டாயம் வந்துடுவேன்..."
"அப்பச்சரி.. நாளைக்கு உன்னைக் காலேஜிலேயே வந்து கூப்பிட்டுக்கறேன்.. அம்மாவும் உன் வீட்டிலே பேசிருவாங்க..."
"அம்மாப்பா.. கீதா எல்லோரையும் நேரே கடைக்கு வரச்சொல்லி விடுவீங்கதானே..."
ராதிகாவின் பேச்சில் முரளியின் முகம் லேசாகத் தெளிந்தது.. இன்னும் முழுமையாக தன் முகச்சுளிப்பிலிருந்து வெளியே வராதவனை ஏக்கத்துடன் பார்த்தாள் ராதிகா...
"என்னடி..." அவன் புருவங்கள் உயர்ந்தன...
"சிரிங்களேன்..." அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள்...
அவன் முகச் சுளிப்பு முற்றிலுமாக மறைந்தது... அவளை உல்லாசமாகப் பார்த்து மெதுவாகச் சிரித்தான்...
"ஹப்பா... இந்தச் சிரிப்பை கேட்டு வாங்க வேண்டியிருக்கு..." அவள் மனத்தாங்கலுடன் சொன்னாள்...
"எங்கே... நீதான் ஒருநிலையாய் நிற்க மாட்டேங்கறியே..."
மீண்டும் பேச்சு திசை மாற ராதிகா அரண்டு போனவளாக கையெடுத்து அவனைக் கும்பிட்டாள்...
"அப்பா.. சாமி... ஒருவழியாய் இப்பத்தான் மலையிறங்கியிருக்கீங்க... திரும்பவும் மலையேறிராதீங்க... தாங்காது..."
இப்போது அவன் மனம் விட்டு கடகடவென்று சிரித்தான்...
"நடிக்காதேடி... நீயாவது... என்கிட்டப் பயப்படறதாவது..." என்று சொன்னாலும்.. அவன் முகத்தில் காதலும்... கனிவும் மீண்டிருந்தது...
"முன்வரிசையில் உட்கார்ந்துக்கிட்டு என்ன பார்வை வேண்டிக்கிடக்கு..?"
அவனின் மனதை உணர்ந்தவளாக... காதலாகப் பேசினாள் ராதிகா.. அவள் எதிர்பார்த்தபடி அவன் கண்களின் உல்லாசம் அதிகமானது...
"அங்கே மட்டும் என்னவாம்..? நலங்கு வைக்கறவங்களை விட்டுட்டு என்னை எதுக்காகடி முழுங்கறவளைப் போலப் பார்த்த...?"
"ம்ம்.. சைட் அடிச்சேன்..."
"நிஜமாகவா...?"
"பின்னே.. பொய்யா...?"
"அதுசரி... உன் தங்கை என்னவோ உன் காதில் ரகசியம் பேசிக்கிட்டு இருந்தாளே.. என்ன சொன்னா..?"
"நீங்க எதுக்காக அவளைப் பார்த்தீங்க...?"
"இதென்னடி வம்பாப் போச்சு... உன்னைப் பார்த்தா.. அந்தப் பார்வை உன் பக்கத்தில நிற்கிறவங்க மேலேயும் விழாதா..?"
"விழும்.. விழும்.. இந்த ஆண்பிள்ளைப் புத்தி இருக்கே... அப்படியே அலைகிற புத்தி..."
"அப்படி எத்தனை பேர் பின்னாலேடி அலைஞ்சேன்..? தேனூத்துக்கு வந்து கேட்டுப் பாரு.. மத்தவங்கதான் என் பின்னாலே அலைஞ்சாங்க.. நான் ஒருத்தரைக் கூடத் திரும்பிப் பார்க்கலைன்னு ஊரே சாட்சி சொல்லும்..."
"உங்க சொந்த ஊரில உங்களுக்கு எதிரா எப்படிச் சொல்லுவாங்க...?"
"நாங்க உண்மை விளம்பிகடி.. நான் அலைஞ்சதெல்லாம் உன் ஒருத்தி பின்னாடி தான்..."
இந்த வார்த்தைகள் மயிலிறகாய் மனம் வருடிச் செல்ல.. ராதிகா சுற்று முற்றும் பார்த்துவிட்டு.. சுவர் மறைவில் முரளியை நெருங்கி நின்றாள்...
பூவாசத்துடன் கூடிய புதுமணப்பெண்ணின் வாசனையை நுகர்ந்தவன் கிறங்கிப் போனான்... என்ன நடக்கிறது என்று அவன் உணருமுன்னாலேயே அவன் கழுத்தை வளைத்து.. அவன் முகத்தை தன் முகத்தை நோக்கி இழுத்த ராதிகா.. அவன் உதடுகளில் அழுத்த முத்தமிட்டாள்...
"ஏய்ய்.. ராது..." அவன் சந்தோசத்தில் திக்கு முக்காடி விட்டான்...
அவன் கைகளுக்குள் அகப்படாமல் விலகி ஓடியவள்.. படிக்கட்டில் இறங்கியபடி அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டு மறைந்து விட்டாள்...
'ஓடிட்டாளே...'
அவன் விரைவாக வந்து மாடிப்படிகளை எட்டிப் பார்த்த போது.. அவள் மேகலாவின் அருகே பதவிசாக நின்று கொண்டிருந்தாள்...
"இவதான் என் மருமக..."
யாரோ ஒரு பெரியவரிடம் மேகலா அறிமுகப் படுத்தி வைக்க.. ராதிகா குனிந்து அந்தப் பெரியவரின் பாதம் பணிந்து எழுந்தாள்...
அதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளியின் மனதில் தென்றலடித்தது... சற்றுமுன் அவளது உதடுகள் தொட்ட உதடுகள் இனித்தன...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -68
அம்மம்மா.. கேளடி தோழி...! -68
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-68.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-68.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy