அம்மம்மா.. கேளடி தோழி...! -66

66 உள்ளுக்குள்   காதல்   வந்ததால்.. உதைபடும்   பந்தானேன்... அது ஒரு போராட்டம்...! பெற்றவர்களுக்குத் தெரியாமல்... கூடப் பிறந்தவர...


66
உள்ளுக்குள்  காதல்  வந்ததால்..
உதைபடும்  பந்தானேன்...

அது ஒரு போராட்டம்...!
பெற்றவர்களுக்குத் தெரியாமல்... கூடப் பிறந்தவர்களுக்குத் தெரியாமல்.. உயிருக்குயிராய் பழகும் தோழிக்குத் தெரியாமல்... ஏன்.. அவளையே அல்லும் பகலும் நினைத்து தலைவலியை வரவழைத்துக் கொண்டிருக்கும் எதிர்க்கும் தெரியாமல்.. தனித்து ஒருத்தியாக ராதிகா மட்டுமே போராடிய போராட்டம்...
அவள் மனதின் துயரை அறிந்தவர் யார்..?
பெற்றவள் அறிந்தாளா..? கூடப்பிறந்தவள் அறிந்தாளா..? உற்றவள் அறிந்தாளா..? கொல்ல நினைப்பவள் அறிந்தாளா..?
எவரும் அறியாமல் தன் வாழ்வைக் காத்து.. தன் குடும்பத்தின் கௌரவத்தையும் காத்துக் கொள்ளும் முயற்சியில்.. தன் காதலை மறைத்து நின்றாள் ராதிகா..
பாலமுரளியின் கால்களில் விழலாம்..? அவன் கால்களில் விழ அவளுக்கு என்ன தயக்கம்..? காதலின் அடிப்படையே சரணாகதிதானே...
அவன் காதலனாக மட்டும் நின்றிருந்தால் கட்டாயம் அவன் காலில் விழுந்திருப்பாள்.. தன் காதலைச் சொல்லிக் கதறியிருப்பாள்..
அவன் தாலிகட்டாமலே அவளது கணவனாக மாறி நின்றானே... அவன் காலில் அவளால் எப்படி விழுக முடியும்...
அவன் செய்தது தவறில்லையா..? ஆயிரம் தான் அவளைக் காதலித்திருந்தாலும்.. அவளைத் திருமணத்திற்கு முன்னால் தொட்டுவிட அவன் நினைக்கலாமா..?
அந்தக் காரியத்தை பாலமுரளி செய்தபின்பு அவன் காலில் விழ ராதிகாவுக்கு மனமில்லாமல் போய்விட்டது...
அவன் கையால் தாலி வாங்கிக் கொள்ள வேண்டும்.. அதே சமயம் வாழ்க்கைப் பிச்சை கேட்டு அவன் காலில் விழுகவும் கூடாது..
இரண்டும் நிறைவேற வேண்டுமானால் அவள் ஒரு சிறு நாடகத்தை நடத்தித்தான் ஆகவேண்டும்.. அவளும் அதை நடத்திக்காட்டினாள்... அவள் எதிர்பார்த்ததைப்
போலவே பாலமுரளியை அவள் தேடிப் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் ஏற்படாமல்.. அவனே அவளைத் தேடி வந்தான்.. பேச்சு வார்த்தையை ஆரம்பித்தான்.. இப்போது அவனுடன் அவளுக்கு திருமணமும் நடக்கப் போகிறது...
ஆனால் காலமெல்லாம் அவன் நெஞ்சில் ஒரு நெருஞ்சிமுள் நெருடிக் கொண்டிருக்கும்தானே...
அவனைக் காதலிக்காமல் ராதிகா.. சங்கரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்தாள் என்ற நினைவு இருக்கும்தானே...
அவன் தொட்டுப் பெண்டாட்டு விட்டபின்பும்.. அவனைத் தேடி வந்து வாழ்க்கைப் பிச்சை கேட்காமல்.. சங்கரிடம் நடந்ததைச் சொல்லி... அவனிடம் வாழ்க்கைப் பிச்சைக் கேட்கத்தான் ராதிகா முயன்றாள் என்ற எண்ணம் அவன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் தானே...
சங்கரைச் சந்திக்கப் போனவளைக் கடத்திக் கொண்டு வந்து மிரட்டியதால்தான்.. அவனைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு ராதிகா வந்தாள் என்று நிச்சயமாய் அவன் நினைத்துக் கொண்டிருப்பான்தானே..
இந்த நிலைமையில் நிற்கும் ராதிகாவால் ஷோபாவை எதிர்த்துப் போராட முடியுமா..?
குறைந்தபட்சம்.. நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்து முடிகிற வரைக்குமாவது ஷோபாவை தன் பாதையிலிருந்து அகற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள் ராதிகா..
தன் மனதில் கலக்கத்தை மறைத்து நிமிர்ந்து நின்று ஷோபாவை முறைத்தாள்...
'எங்கே அடித்தால்.. எங்கே வலிக்கும்ன்னு கணக்குப் போட உனக்கு மட்டும்தான் தெரியுமா..? எனக்கு அதைவிட பத்து மடங்கு அதிகமாகவே தெரியும்டி...'
"உனக்கு என்னதான்டி வேணும்...?"
"உன் நிம்மதி... அது எனக்கு வேணும்டி.. கொடுக்கறியா..?"
"வெரிகுட்.. இப்போத்தான் நீ மனசில இருக்கிறத ஓபனாப் பேசற.. கீப் இட் அப்.. அதை விட்டுட்டு எதுக்காக என் நாத்தனார் கிட்ட நல்லவ மாதிரி வேசம் போடற.. உனக்கு அது கொஞ்சம்கூட பொருந்தவே இல்லை தெரியுமா..?"
"திமிராடி...?"
"சேச்சே.. அதெல்லாம் உனக்குத்தான் இருக்கும்.. எனக்கு அது எதுக்கு...? உன்னைப் பார்த்தால் அச்சு அசல் 'அக்மார்க் வில்லி'ன்னு எல்லாத்துக்குமே தெரிஞ்சிருது.. அதெப்படி என் அப்பாவி நாத்தனாருக்கு மட்டும் தெரியாமப் போச்சு..?"
"அதான்.. நீயே உன் திருவாயாயல் சொல்லிட்டயே... அது ஒரு அப்பாவின்னு.. பார்த்துக் கிட்டே இருடி.. அந்த அப்பாவியை படுபாவியா மாற்றி உனக்கு ஆட்டம் காண்பிக்கிறேன்.. அப்படிச் செய்யலேன்னா என் பெயர் ஷோபா இல்லைடி..."
ஷோபா சூளுரைத்தாள்.. மனதின் அச்சத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதைப் போன்ற பாவனையுடன் முகத்தை வைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள் ராதிகா...
"அதைச் செய்டி முதலிலே..."
"என்னாலே செய்ய முடியாதுன்னு நினைக்கறியா..?"
"செய்யுன்னுதானே சொல்றேன்.. ஷோபாங்கிறது எவ்வளவு அழகான பெயர் தெரியுமா..? உனக்கும் அந்தப் பெயருக்கும் ஏழாம்பொருத்தம்டி... உனக்கெல்லாம் பூலான்தேவின்னு பெயர் வைச்சிருக்கனும் அந்தப் பெயர்தான் உனக்குச் சரி..."
"ராதிகா..."
"எதுக்குச் சத்தம் போட்டு ஊரைக் கூட்டறே.. இது கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கிற இடம்...இங்கே நீ பதவிசான பெண்ணைப் போல வேசம்தான் போடனும்.. உன் நேச்சரைக் காட்டக்கூடாது... நாள பின்னே உனக்கு ஒரு இளிச்சவாயன் வந்து மாட்ட வேணாமா.. அடக்கி வாசி..."
"என் பொறுமையை சோதிக்கறே ராதிகா..."
"பொறுமைக்கும் உனக்கும் ரொம்பத் தூரம்டி... நீயெல்லாம் பொறுமையைப் பத்திப் பேசவே கூடாது..."
"கோபத்தைக் கிளப்பாதேடி.. நீ தாங்கமாட்ட..."
"நீயெல்லாம் ஒரு ஆளு.. உன் கோபத்தைக் கண்டு நான் பயப்படனும்.. போடி போ.. அதுக்கு வேற ஆளைப் பாரு... நீதானே உன் பெயரை மாத்திவைச்சுக்கப் போறேன்னு சொன்ன.. அதான் உனக்காக நான் உன் பெயரை மாத்தி யோசிச்சேன்.. ஹ..ஹ.. இது எப்படியிருக்கு..?"
"இது கொஞ்சம் கூட நல்லாயில்ல ராதிகா..."
"எதுடி.. பூலான் தேவிங்கிற பெயரா..?"
"ஏய்ய்..."
"அடங்குன்னு சொன்னேனா இல்லியா.. சும்மா சவுண்டு விடாதே.. நான் முரளிமீது ஆசைப்பட்டேன்.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. நீ சங்கர் மேலயும் ஆசை வைச்சுக்கிட்டு.. முரளி கிட்டயும் நூல் விட்டுக்கிட்டு இருந்தியே.. உன் கதி என்ன ஆச்சு..?"
ராதிகா சரியான இடத்தில் அடித்துவிட்டாள்.. ஷோபாவின் வலி அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது...
'யாருகிட்ட..? ம்ம்ம்?' ராதிகா முகம் திருப்பிக் கொண்டாள்...
"ஏன்.. என் கதிக்கு என்ன..? நான் நினைத்திருந்தா முரளி உன் கழுத்தில் தாலிகட்டும் முடிவை எடுத்திருக்க முடியாது..."
"ஏன் நினைக்கல..?" ராதிகா நிதானமாகக் கேட்டாள்...
"அது.. அது.. வந்து..." ஷோபாவால் பதில் சொல்ல முடியவில்லை...
"என்னடி.. வந்து.. போயின்னு ராகம் இழுக்கற.. விசயத்துக்குவா.. முரளி கிராமத்தில் இருந்தார்.. அதோட.. உனக்கு சங்கர் மேல ஒரு மயக்கம்.. எங்கே.. இதை இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்..."
"இரண்டு பேருமே என்னைப் பெண் கேட்டாங்க..."
"சும்மா கதை விடாதே.. அப்புறம் எப்படி சங்கர் என்னைப் பெண் கேட்டு வந்தாராம்.. முரளியைப் பார்.. கல்யாணமே பண்ணிக்கப் போகிறார்..."
ராதிகாவின் வார்த்தைகளில் வெற்றியின் எக்களிப்பு இருந்தது.. ஷோபா மனம் ஒடுங்கினாள்.. அதை அவளது முகம் பிரதிபலித்தது...
ராதிகாவிற்கு அதுதான் வேண்டும்... ஷோபாவை மனரீதியாக வலிமை குறைச் செய்ய வேண்டும் என்பதுதான் அவளது திட்டமாக இருந்தது..
அவளை எகத்தாளம் பேச விடக்கூடாது.. அதற்கு மாறாக.. அவளைப்பற்றி எகத்தாளமாகப்
பேசி.. அதை அவள் நினைத்து மறுகும்படி செய்ய வேண்டும்.. அதிலிருந்து அவள் வெளிவருவதற்குள் பாலமுரளியுடனான ராதிகாவின் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்திருக்கும்...
அதற்குப் பின்னால் ஆண்டவன் விட்ட வழி...
அதுவரை ஷோபாவை அவள் சமாளித்தாக வேண்டும்... ஷோபாவின் கவனத்தை திசை திருப்ப வேண்டும்...
"ரொம்பவும் ஆடாதே ராதிகா... இன்னும் உன் கல்யாணம் நடந்து முடியலை..."
'நினைச்சேண்டி.. உன் புத்தி இப்படித்தான் போகும்ன்னு...'
"நிச்சயமே நடந்து முடிஞ்சாச்சு.. இன்னுமா நீ வாய் விடற..."
"மணமேடை வரைக்கும் வந்த கல்யாணமே நின்னு போயிருக்கு... அதை நினைவில் வைத்துக்க..."
'ஆஹா... நீ இப்படியும் நினைக்கறியா...?'
"நீ மத்தவங்க கல்யாணத்தை நிறுத்தறதிலேயே ஏன் குறியாய் இருக்க ஷோபா.. உனக்கெல்லாம் கல்யாணம்ங்கிற ஒன்னு நடக்கவே நடக்காதுன்னு உனக்குத் தெரிஞ்சு போச்சா...?"
"ஏய்ய்.. எனக்கு ஏண்டி கல்யாணம் நடக்காது...? எனக்கென்ன குறை...?"
'நீயே ஒரு குறை.. இதில குறையைப் பத்தி கேள்வி கேட்கிற...'
"அடடா... நீ நிறை குடமாச்சே... என்ன ஒன்னு.. இப்படிப்பட்ட நிறைகுடத்தை எவனும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேங்கிறான்..."
"ராதிகா..."
'எரியுதில்ல... இப்படித்தானே எனக்கும் இருக்கும்..'
"சும்மாக் கத்தாதே ஷோபா.. நான் சொன்னதில என்ன தப்பு..? நான் உனக்கு ஒரு சவால் விடறேன்.. அதைச் செய்து முடிக்க உனக்கு தில்லிருக்கா...?"
"சவாலா...?"
'ஆமாண்டி.. சவால்தான்.. நீ அதைச் சமாளிக்-கிறதுக்குள்ள... நான் முரளியைக் கல்யாணம் பண்ணி முடிச்சிருப்பேன்... அதுக்குப் பின்னால வா.. மோதிப் பார்க்கலாம்.. அதுவரைக்கும் என் வழிக்கு வராதே...'
"சவால்தான் ஷோபா.. தில்லிருக்கா...?"
"உனக்கே தில்லிருக்கும்போது எனக்கிருக்காதா... ஹ..."
'இந்தத் திமிருக்கொன்னும் குறைச்சல் இல்லடி.. நீ என்ன பெரிய இவளா..?'
"அப்போச் சரி.. கேட்டுக்க.. எனக்கு முரளி மேல மயக்கம்.. நான் அவரைக் கல்யாணம் பண்ணப் போறேன்.. உனக்கு சங்கர் மேல மயக்கம்தானே.. முடிஞ்சா அவரைக் கல்யாணம் பண்ணிக்காட்டு பார்க்கலாம்..."
ராதிகா விட்ட சவாலில் ஷோபா அரண்டு போய் விட்டாள்.. பாவம்.. அவளும்தான் என்ன பண்ணுவாள்...? கிழக்கே உதிக்கிற சூரியனை மேற்கே உதிக்க வைக்கச் சொன்னால் அவளால் அதைச் செய்து முடிக்க முடியுமா..?
"என்னடி பேச்சைக் காணோம்..."
"எனக்கொன்னும் சங்கர் மேல மயக்கமில்லை..."
"ஆ.. ஆ... யாருகிட்ட காது குத்தற..? இந்த ரீல் சுத்தற வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது.. நான்தான் பார்த்தேனே..."
"எதைப் பார்த்த...?"
"உன் பர்த்டே பார்ட்டிக்கு வந்தப்ப.. நீ சங்கர் கிட்ட வழி.. வழின்னு வழிஞ்சு.. உன் தோட்டத்தையே நனைச்சியே.. அதை நான் பார்த்துட்டேனே..."
ராதிகாவின் கேலிப் பார்வையில் ஷோபா குன்றிப் போனாள்...
'அப்பாவும்.. அம்மாவும் தினமும் சொல்கிறது சரிதான்.. இவளை அந்த பர்த்டே பங்சனுக்கு கூப்பிட்டிருக்கவே கூடாது...'
"வாயடைச்சுப் போச்சில்ல.. அப்புறமாய் அம்மணி கூட சங்கர் ஒருநாள் நம்ம காலேஜ்பக்கம் வந்தானே.. அப்ப அம்மணி.. ஐயாவ பார்த்தீங்களே ஒரு பார்வை.. அதை மறக்க முடியுமா..?"
"ஏய்ய்.. நீ ஓவராப் போற..."
"உன்னைவிடவா ஷோபா..? ஓவராப் போறதில நீ எக்ஸ்பர்ட் ஆச்சே.. எதில நீ எக்ஸ்பர்ட்டோ இல்லியோ.. இந்தமாதிரி விசயங்களிலே உன்னை முந்த யாருமே இல்லைடி..."
"அவர் என்கூட வந்தார்... நான் பார்த்தேன்.. உனக்கென்ன வந்தது...?"
"எனக்கொன்னும் வரலைப்பா.. உன்கூட வந்த சங்கருக்குத்தான் உன்னை விட்டுட்டு.. என்மேல் காதல் வந்தது.. ஆனா.. நான் அவனைக் காதலிக்கலைப்பா..."
"ராதிகா..."
"போடி.. போய் தில்லிருந்தா அந்த சங்கரைக் கல்யாணம் பண்ணிக்காட்டு ஒன்றைப் புரிஞ்சுக்க.. மணமேடை வரைக்கும் போய் என் கல்யாணம் நின்று போனாலும் மறுவாழ்வு கொடுக்க சங்கர் சந்தோசமா முன்வருவான்.. அதை நினைவில வைச்சுக்கிட்டு எதையும் பேசு.. என் கழுத்தில் வேற யாரும் தாலிகட்டாமல் சங்கரும் வேற ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்ட மாட்டான்... நீ எனக்குப் பிடிச்சனோட என் கல்யாணம் நடக்கிறதை நிறுத்தினேன்னு வைய்யு.. உனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக் காட்டிவிடுவேன்.. புரியுதா...?"
எதைச் சொன்னால் ஷோபாவின் ஆவி துடிக்குமோ.. அதைச் சொன்னாள் ராதிகா.. அதைச் சொல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி தென்பட வில்லை... அவளால் என்னதான் செய்ய முடியும்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -66
அம்மம்மா.. கேளடி தோழி...! -66
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-66.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-66.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy