அம்மம்மா.. கேளடி தோழி...! -65

65 ஒருவார்த்தை   உனைக்   கேட்டேன்.. நீ காதோடு.. காதல் என்றாய்... கீதா செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.. ராதிகா விழா நாளி...


65
ஒருவார்த்தை  உனைக்  கேட்டேன்..
நீ காதோடு.. காதல் என்றாய்...

கீதா செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.. ராதிகா விழா நாளின் அயர்வுடன் மண மகளுக்கான அறையிலிருந்த கட்டிலில் சரிந்தாள்.. போன் பேசி முடித்த கீதாவைப் பார்த்து...
"யாருடி போனில..?" என்று கேட்டாள்..
"யாருமே இல்ல.. நீ வேணா உத்துப்பாரு..." கீதா அவளது போனைத் தூக்கிப் பிடித்துக் காட்டினாள்...
"பதில் சொல்லாம தப்பிக்க இது ஒரு வழியா..? உடனே கடிக்கக்கிளம்பிடுவியே.. யாருகூட போனில் பேசின..?"
"என்னவோ... யாருகூட கடலை போட்டன்னு கேட்கிற மாதிரி இருக்குதே..."
"நான் சாதாரணமாத்தாண்டி கேட்டேன்.. நீயாய் ஏன் வாயை விடற..? அப்ப... நீ கடலைதான் போட்டிருக்க..."
"நான் கடலை போட்டாலும்..."
"ஏண்டி அலுத்துக்கறே...?"
"அலுத்துக்காம என்னத்தை செய்யச் சொல்ற.. நானும் கடலை வறுத்துத்தான் பார்க்கிறேன்... எதுவும் தேறுகிற கேஸா தெரியலை... அதுவே உன்னைப் பாரு.. இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு... ஔவையார் மாதிரி இருந்துக்கிட்டு.. கரெக்டா ஒரு ஹீரோவைப் பார்த்து கணக்குப் பண்ணிட்டயே.. உன் கெட்டிக்காரத்தனம் யாருக்கு வரும்...?"
கீதா சொன்னதைக் கேட்டபடி அறைக்குள் பிரவேசித்த ஷோபா...
"அதுதானே.. நீ சரியாய் சொன்ன கீதா..." என்று சிரித்தாள்...
பதிலுக்கு சிரிக்காமல் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள் கீதா...
'இவ அலப்பறை கேஸாச்சே.. என் லெவலுக்கு நானெல்லாம் இந்த பங்சனுக்கு வர்றதே பெரிசுன்னு பீலா விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டியாச்சே... இப்ப எதுக்காக இந்த என்ட்ரி...?'
"கன்கிராஜீலேசன்ஸ் ராதிகா..." என்றாள் ஷோபா...
ஷோபாவைப் பார்த்ததும் கட்டிலில் எழுந்து அமர்ந்த ராதிகா...
"தேங்க்ஸ்.." என்று பதிலுக்குச் சொன்னாள்...
"இந்த ஸாரியில் நீ ரொம்ப அழகா இருக்க..?"
"அப்படியா..?"
"ம்ம்.. எனக்கு தொண்டை வறளுதே.. இங்கே கூல்டிரிங்க்ஸ் இருக்கா...?"
இப்படிக் கேட்டவளை விசித்திரமாகப் பார்த்த கீதா...
"இங்கேயெல்லாம் அது இருக்காதுங்க.. டைனிங் ஹாலில்தான் அது இருக்கும்.. நீங்க வழி தப்பி இந்தப் பக்கம் வந்துட்டிங்க போல இருக்கே..." என்று கிண்டலுடன் சொன்னாள்...
"ஹௌ ஸ்வீட்... உன் தங்கையும்... உன்னைப் போலவே கிளவர்கேர்ளா இருக்கா ராதிகா... ஹாய்.. உன் அக்காவின் பிரண்டுக்காக நீ... டைனிங் ஹாலுக்குப் போய் அந்த கூல்டிரிங்கை கொண்டு வரமாட்டியா என்ன...?"
ஷோபாவின் வார்த்தைகளைக் கேட்ட ராதிகா கெஞ்சுதலாக தங்கையைப் பார்த்தாள்.. அவளும் 'உனக்காக போகிறேன்...' என்ற சமிக்ஞையுடன் அறையை விட்டு வெளியேறினாள்...
அவள் வெளியேறும் வரை காத்திருந்த ஷோபா அறைக் கதவை மூடித்தாழிட்டாள்... ராதிகாவின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது...
'ஏன்.. இவ கதவை மூடறா...?'
"என்னடி பார்க்கிற... உன் தகுதிக்கு கோடிஸ்வரனுக்கு பெண்டாட்டியாக ஆகனுமா..?"
"மைன்ட் யுவர் வெர்டுஸ் ஷோபா.. நான் பாலமுரளிக்கு பெண்டாட்டியாகனும்னு தான் ஆசைப்பட்டேன்... அவர் கோடிஸ்வரரா.. இல்லை நாடோடியான்னு நினைச்சும் பார்த்ததில்லை..."
ஷோபா பேசிய பேச்சில் தன்னையுமறியாமல் ராதிகா தன் உள்ளத்தைச் சொல்லிவிட.. ஷோபாவின் விழிகளில் வெற்றியின் சாயல் படர்ந்தது...
"பூனைக்குட்டி வெளியே வந்திருச்சு..." என்றாள்...
'ஆஹா... இவகிட்ட வாயை விட்டுட்டோமே...' என்று தோன்றினாலும்... அதைத்தானே பாலமுரளி ஊர்... உலகத்திற்கு சொல்லியிருக்கிறான் என்ற நினைவில்.. அலட்சியமாக தோளைக் குலுக்கினாள் ராதிகா...
"ஸோ.. வாட்...?"
"அப்படிச் சொன்னா எப்படி..? இனிமேல்தாண்டி உனக்கு இருக்கு..."
"ஹ.. உன்னால் என்னை என்ன செய்ய முடியும்..? என் முரளி என் கழுத்தில் தாலியைக் கட்டப் போவது உறுதி..."
"அவன் தாலியை மட்டும் தான் உன் கழுத்தில் கட்டுவான்.. அதற்குப்பின்னால் வாழவேண்டிய வாழ்க்கையை உன்னுடன் வாழ மாட்டான்..."
ஷோபாவின் வெறிபிடித்தத் தோற்றத்தைக் கண்ட ராதிகா அதிர்ந்தாள்.. அவள் பேசிய பேச்சில்... அவள் மனதில் மெலிதான பயம் தோன்றியது...
'இவ எதுக்காக இவ்வளவு ஆங்காரமாய் பேசறா...'
"வாழ விடமாட்டேண்டி.. என்னை வைச்சே என் சொந்தக்காரனை வளைச்சுப் போட்டுட்டியில்ல.. நீ எப்படி அவன்கூட வாழ்ந்து விடறன்னு நானும் பார்க்கிறேன்..."
'அடிப்போடி... அவன் ஏற்கனெவே என்னுடன் வாழ்ந்துட்டான்... அந்தக் கதை தெரியாம வந்து பேசாதே...'
"இந்த ஷோபாவைப் பற்றி நீ இன்னும் சரியாய் தெரிஞ்சுக்கலைடி..."
'தெரிஞ்சுக்கிட்ட வரைக்குமே போதும்.. போதும்ன்னு இருக்கு... இந்த லட்சணத்தில.. இன்னும் வேற தெரிஞ்சுக்கனுமா..?'
"தயாராய் இரு ராதிகா.. இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு... இது என் இடம்டி... காலேஜில் நீ ரவுண்டு கட்டி அடிச்சதைப் போல இங்கே அடிக்க முடியாது.. உன் நாத்தனாரின் குடுமி என் கையில்... அது சரியான களி மண்.. நான் நினைத்த வடிவத்தில் அதை உருவாக்கலாம்... அதை வைச்சு உனக்கு ஆட்டம் காண்பிக்கறேண்டி..."
'அடிப்பாவி...'
"உன் ஆசைக் காதலன் பாலமுரளி இருக்கானே.. அவன் காதலில் மட்டும் மன்னனில்ல... கோபத்திலும் மன்னன்தான்.. அவனுக்கு வேண்டும்ன்னு நினைத்தா அவன்... ஏழுகடல்.. ஏழுமலை தாண்டிக்கூட வந்து சிறையெடுப்பான்.. அதே விசயத்தை வேண்டாம்ன்னு அவன் முடிவு கட்டிட்டான்னு வை... ஜென்மத்துக்கும் திரும்பிப் பார்க்காம தள்ளி வைச்சுருவான்..."
'இப்ப எதுக்காக... இவ... இந்த வார்த்தையைச் சொல்கிறா...'
ராதிகாவின் முதுகுத் தண்டில் ஜிலீர் என்ற உணர்வு ஏற்பட்டது.. அவளது அடிவயிறு கலங்கி.. மனதில் சஞ்சலம் ஏற்பட்டது...
இப்படிப்பட்ட நன்னாளில்.. இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கவேண்டுமென்று அவளுக்கு விதிக்கப் பட்டிருக்கிறதா..?
இது.. எதற்கான அறிகுறி...?
"அவனோட அக்காவை என்னால ஆட வைக்க முடிகிறதைப் போல.. அவனையும் ஆட வைக்க என்னால் முடியும்..."
அதுவரைப் பொறுத்திருந்த ராதிகா.. பொறுமையை கைவிட்டாள்...
"உன்னால் அது முடியாது..." என்று சொல்லி விட்டாள்...
"பார்க்கலாமா...?" ஷோபா சவால் விட்டாள்...
"பார்க்கலாம்..." ராதிகா சவாலை ஏற்றுக் கொண்டாள்...
"எங்கே தட்டினால்.. எங்கே அடி விழும்ன்னு கணக்குப் போட என்னால் மட்டும்தாண்டி முடியும்..."
"உன் கீழ்த்தரமான கணக்கைத்தான் நான் கேட்டேனே... நான் சங்கரைப் பற்றிப் பேசியதை நீ ரிகார்டு பண்ணி முரளிக்கு அனுப்பியிருக்க.. ஏண்டி உன்புத்தி இப்படிப் போகுது...?"
"உனக்கும் அது தெரிஞ்சாச்சா..?"
"எனக்குத் தெரிஞ்சிட்டதை நீயும் தெரிஞ்சுக்க.. கூடவே இன்னொன்னையும் சேர்த்துத் தெரிஞ்சுக்க.. நீ அனுப்பின ரிகார்டைக் கேட்ட பின்னாலேயும் முரளி என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு உறுதியாய் நிற்கிறார்..."
ராதிகாவின் குரலில் தன்னம்பிக்கை இருந்தது.. வெற்றியின் அறைகூவல் இருந்தது.. அது பாலமுரளியின் அதீத காதல் தந்தது என்பதில் ஷோபா கொதித்துப் போனாள்..
அவள் அவ்வளவு தூரத்துக்கு ராதிகாவைப் பற்றி மோசமாக சித்தரித்தும் அதையும் மீறி... பாலமுரளி ராதிகாவின் கழுத்தில் தாலியைக் கட்டப் போகிறான் என்றால்... ராதிகா ஏன் இவ்வளவு திமிராகப் பேச மாட்டாள்..?
அதில் ஷோபாவின் ஆவேசம் அதிகரித்தது...
"ரொம்பவும் மகிழ்ந்து போகாதே ராதிகா.. இப்போதைக்கு வேணும்னா முரளி உன்பக்கம் சாய்ஞ்சிருக்கலாம்.. ஆனா.. எப்பவுமே.. நான் அனுப்பி வைச்ச ரிகார்டில் இருந்த உன் பேச்சு அவன் மனதில் நிற்கும்..."
அது உண்மை என்ற நினைவில் மனம் கலங்கிப் போனாள் ராதிகா...
அவள் அனுபவித்த வேதனைகளைப் பற்றி அவளுக்குத்தானே தெரியும்..? பாலமுரளியுடனான திருமணத்தை உறுதி பண்ண.. அவள் எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாள வேண்டி இருந்தது என்பதை அவள் மறந்து விடவில்லையே...
தன் திருமண வாழ்வின் அஸ்திவாரம் பலமில்லாமல் இருப்பதைப் போன்ற உணர்வை அடைந்தாள் ராதிகா...
சீட்டுக்கட்டு மாளிகையின் மேல் மாடியில் நின்றிருக்கும் தத்தளிப்பு அவளுக்குள் ஏற்பட்டது...
எந்த நிமிடமும்.. எந்த நொடியும்... ஏதேனும் ஒரு சீட்டு உருவப்படலாம்.. அவ்வாறு உருவப்பட்டால்.. அடுத்த நொடியிலேயே.. அவள் வீற்றிருக்கும் சீட்டுக்கட்டு மாளிகை சரிந்து விடும்...
ராதிகாவின் மனதில் இனம் புரியாத பீதி மையம் கொண்டது...
அவளுக்குத் தெரியும்.. பாலமுரளி அவளைக் காதலிக்கிறான்... அவளை மட்டுமே காதலிக்கிறான் என்பது... அதே சமயம் ராதிகா அவனைக் காதலிக்காமல் சங்கரைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையுடன் இருந்தாள் என்ற நினைவில் அவன் இருப்பதும் அவளுக்குத் தெரியும்....
இதை ஷோபா கண்டு பிடித்து விடக்கூடாது என்பது மட்டும்தான் அவளது கவலையாக இருந்தது... தன் எண்ணம் நிறைவேற ஷோபா எந்த அளவுக்கும் இறங்கிப் போவாள் என்பதில் துளிக்கூட ராதிகாவுக்கு சந்தேகம் ஏற்படவில்லை...
ஷோபா சொல்வதைப் போல பாலசரஸ்வதியின் பிடி அவள் கைக்குள் இருக்கிறது.. பாலசரஸ்வதிக்கு ராதிகாவைப் பிடிக்காமல் போனதின் பிண்ணணியில் ஷோபா இருக்கலாம் என்பதை அன்றுதான் உணர்ந்தாள் ராதிகா...
அது மேலும் தொடரக்கூடும் என்பது அவளது அனுமானமாக இருந்தது... ஷோபாவும் அதைத் தன் வாயால் சொல்லிவிட்டாள்...
இந்த நிலையில் ஷோபாவை எதிர்த்து நிற்பதற்கு முன்னால்... தன்னை வலிமையாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் ராதிகா...
பாலமுரளி அவள் கழுத்தில் தாலியைக் கட்டினாலும்.. அவனால் தொடப்பட்டுவிட்ட நிர்பந்தத்திற்காகவே ராதிகா அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறாள் என்ற நினைவுடன் தான் காலம் முழுவதும் வாழப் போகிறான்.. அவனை ராதிகா காதலிக்கவில்லையென்பதில் உறுதியாக அவன் இருக்கிறான்..
ராதிகா அதை எதிர்கொண்டு.. அவளது காதலை முரளிக்கு உணர்த்தியாக வேண்டும்...
பாலசரஸ்வதிக்கு ராதிகாவை கட்டோடு பிடிக்க வில்லை.. அவளுக்குப் பிடிக்காவிட்டால் எனக்கென்ன போச்சு..? என்று அலட்சியமாக ராதிகா நினைத்து விட முடியாது.. ஏனென்றால் பாலசரஸ்வதி... பாலமுரளியின் ஒரே சகோதரி... அவள் மீதான பாலமுரளியின் சகோதர பாசத்தைப் பற்றி ராதிகா நன்கு அறிவாள்... இன்று மகனின் காதலுக்கு துணை நிற்கும் மேகலா எப்போதுமே மகளைக் கண்டித்துக் கொண்டிருப்பாள் என்று நிச்சயமாக சொல்லி விடமுடியாது.. ஒரு நேரம் போனாலும் ஒரு நேரத்தில்.. நிச்சயமாக மகளை விட்டுக் கொடுக்காமல் அவள் பக்கம் நின்று விடுவாள்...
அப்படியொரு நேரம் வந்தால் ராதிகா என்ன ஆவாள்..?
அதைப் பற்றியும் ராதிகா யோசிக்க வேண்டியிருந்தது..
மேகலாவுக்கு ராதிகாவை பிடிக்கும்தான்... எதுவரைக்கும் அந்தப் பிடிமானம் நிலைத்து நிற்கும்..? கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையாதா...?
மேகலா கல்லில்லையே.. சாதாரண மனிதப் பிறவிதானே... மகள் கரைத்தால் அவள் கரைந்து விட மாட்டாளா..? மகள் ராதிகாவை வெறுத்துப் பேசினால் மகள் பக்கம் சாய்ந்து விட மாட்டாளா..?
எந்த அளவுக்கு புகுந்த வீட்டில் மாமியாரின் அனுசரணையும்.. பக்கபலமும் கிடைக்கும் என்று புரியாத நிலைமையில் இருந்தாள் ராதிகா...
திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் வாழ ஆரம்பித்த பின்புதானே எதையும் தெளிவாக கண்டு கொள்ள முடியும்..? அதுவரையில் அவள் என்னதான் மனதில் நினைத்தாலும் எதிர்படும் நிதரிசனம் வேறாகத்தானே இருக்கும்...?
ராதிகாவிற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.. எதுவரை ஷோபா போவாள் என்று அவள் யோசிக்க-வேயில்லை... அவளுக்கு தெரியும்... ஷோபாவின் மனதில் ராதிகாவின் மீது ஆழ்ந்த வன்மம் இருக்கிறது என்பது.. ராதிகாவைக் காயப்படுத்த வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருப்பவள் ஷோபா...
அதை நிறைவேற்ற அவள் எந்த எல்லைக்கும் போவாள் என்பதை அறிந்து வைத்திருந்தவளுக்கு அதை முறியடிக்க மிக அதிகமான மனோ பலம் தேவைப்பட்டது...
ராதிகா மனதளவில் களைத்துப் போயிருந்தாள்.. அவளது காதலனே அவளை முறையில்லாமல் தொட்டு ஆண்டு விட்டதில் துயரப்பட்டுப் போயிருந்தாள்.. தொட்டு விட்டவனையே திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் தன் இயல்பையே வேறாகச் சித்தரித்துக் காட்ட நேர்ந்ததில் மனதுக்குள் குன்றிப் போயிருந்தாள்.. நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை... என்னை சங்கர் திருமணம் செய்து கொள்வான் என்று அவள் சொன்னதை காலம் முழுதும் முரளி மறக்காமல் நினைவில் வைத்திருப்பான் என்ற நினைவில் கலங்கிப் போயிருந்தாள்.. தொட்டவனிடமே... மற்றவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்கிற பெண்ணாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு விட்டதில் துக்கப்பட்டுப் போயிருந்தாள்.. ஒன்றையே நினைத்து அந்த ஒன்றிலேயே நிலைப்பவளை.. இது இல்லாவிட்டால் வேறொன்னு என்று நிலை மாற்றிக் கொள்ளும் பெண்ணாக முரளியை நினைக்க வைத்து விட்டதில் மனம் உடைந்து போயிருந்தாள்...
இத்தனையும் மீறி.. பாலமுரளி அவள் கழுத்தில் தாலிகட்டப் போகிறான்.. அவளே ஷேபாவிடம் சொன்னதைப் போல... அந்த அளவுக்கு ஆவேசமான காதல் அவள்மீது பாலமுரளிக்கு இருக்கிறது...
இது கடைசிவரை நிலைத்து நிற்குமா...?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -65
அம்மம்மா.. கேளடி தோழி...! -65
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-65.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-65.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy