அம்மம்மா.. கேளடி தோழி...! -64

64 கொட்டுகிற   மழைத்துளியில்... எந்தத்துளி.. உன்னைத் தொட்ட துளி.. ? ஒரு திருமண வீட்டின் கலகலப்பு அங்கே நிலவியது... பாலமுரளியின் உ...


64
கொட்டுகிற  மழைத்துளியில்...
எந்தத்துளி.. உன்னைத் தொட்ட துளி..?

ஒரு திருமண வீட்டின் கலகலப்பு அங்கே நிலவியது... பாலமுரளியின் உறவினர் கூட ஆச்சரியப்பட்டார்....
"பரவாயில்லையே முரளி.. இது நிச்சயம்ன்னு தோணவேயில்ல.. என்னமோ கல்யாண வீட்டைப் போலல்லகளை கட்டுது.. சும்மா சொல்லக்கூடாது.. உன் மாமனார் நம்ம லெவலைப் புரிஞ்சு நடந்துக்கிறாரு..."
பாலமுரளிக்கு அதைக் கேட்கும் போது நிறைவாக இருந்தது... அவனுடைய உறவினர்கள் சொல்லியது என்னவோ உண்மைதான்.. கிருஷ்ணமூர்த்தி பாலமுரளியின் தரம் அறிந்து மிகச் சிறப்பாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்...
வசதியான திருமண மண்டபத்தை ஏற்பாடு பண்ணியதிலிருந்து.. சமையல் வரை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தார்...
"வருகிறவங்களுக்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணிடவா மாப்பிள்ளை..?" என்று முதல்நாளே பாலமுரளிக்கு போன் செய்து வினவினார்..
பாலமுரளிதான் வேண்டா மென்று சொல்லி விட்டான்...
"அக்கா குடும்பம் அவங்க சொந்தக்காரங்க வீட்டிலே தங்கிக்கு வாங்க மாமா... எனக்கு சென்னையில ஒரு பண்ணை வீடு இருக்கு.. எங்க பக்க சொந்தக்காரங்களை நான் இங்கேயே தங்க வைச்சுக்கறேன்..."
முரளி காட்டிய இணக்கம் கிருஷ்ணமூர்த்தியின் மனதைத் தொட்டது... அதை அவரால் ராஜேஸ்வரியிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை...
குறித்த நேரத்தில் பாலமுரளியின் வீட்டார் திருமண மண்டபத்தில் வந்து இறங்கி விட்டார்கள்.. வாசலில் நின்று வரவேற்றார் கிருஷ்ணமூர்த்தி.. பக்கத்தில் ராஜேஸ்வரி விட்டுக் கொடுக்காமல் வந்து நின்று கரம் குவித்தாள்.. பந்தி நடைபெற்றது...
"சாப்பாடெல்லாம் தூள்ப்பா.. இதைச் செஞ்ச கைக்கு தங்க மோதிரம்தான் போடனும்..."
"சமையல் காண்ட்ராக்ட் யாருன்னு விசாரிங்கப்பா.. நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கும் இந்தப் பார்ட்டியையே பேசி வைச்சிரலாம்..."
"காலி பிளவர் பக்கோடா வாயில் போட்டவுடனே கரையுது.."
"பாயாசம் பிரமாதம்..."
"ரசம் ஏ ஒன்..."
இப்படித்தான் விருந்தை ருசித்தவர்கள் சொன்னார்கள்... ஆனால் பாலசரஸ்வதி மட்டும் அந்தச் சாப்பாட்டை வாயில் வைக்க முடியவில்லை.. என்று சொன்னாள்...
"சாப்பாடா இது..?" என்று முகம் சுளித்தாள்..
"ஏன் ராஜா.. உன் மச்சினருக்கு பெண் கொடுக்கப் போகிறவருக்கு நம்ம ஸ்டேட்டஸ் தெரியாதா..? கொஞ்சம் தாராளமா பணம் கொடுத்து ஒழுங்கா சமையல் பண்றவங்களை ஏற்பாடு பண்ணியிருக்கக் கூடாதா..?" என்று சுசிலா பாலமுரளியின் காதுபட ராஜராஜனிடம் கேட்டு வைத்தாள்...
"என்ன அண்ணி இது.. நாங்க உங்க முகத்துக்காகத்தான் வந்தோம்.. இல்லைன்னா.. இப்படிப்பட்ட இடத்துக்கெல்லாம் நாங்க வந்திருக்கவே மாட்டோம்... பெரிய இடத்தில் பெண் கொடுக்கனும்னு ஆசைப்பட்டா மட்டும் போதாது... அவங்களை நல்ல முறையில் ட்ரீட் பண்ணவும் தெரிஞ்சிருக்கனும்.. இங்கே அதுகூட இல்லையே..." ஷோபா தன்பங்குக்கு உருவேற்றினாள்...
கிருஷ்ணமூர்த்தியின் காதுகளில் இவையெல்லாம் விழுந்து விடக்கூடாது என்பது மட்டும்தான் பாலமுரளியின் கவலையாக இருந்தது.. ராஜேஸ்வரியைப் பற்றிப் பிரச்னையே இல்லை... ஒரு பார்வையிலேயே ஷோபாவை ஓரம் கட்டி உட்கார வைத்துவிடும் சக்தி அவளிடம் இருந்தது...
அதனால்.. கிருஷ்ணமூர்த்தி பத்தி விசாரணை பண்ண அங்கே வந்தபோதெல்லாம் பாலமுரளி அவரை ஒரு நொடிகூட அங்கே நிற்கவிடாமல் அனுப்பிக் கொண்டேயிருந்தான்...
"மாப்பிள்ளை... உங்க அக்கா குடும்பம் சாப்பிட்டாங்களா..?"
"மாமா.. அதோ அங்கே நிற்கிறாரே.. அவர் எனக்குத் தாய்மாமன் முறையாகனும்.. அவர்கிட்ட நீங்க ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்திட்டாத் தேவலை..."
"அதுக்கென்ன மாப்பிள்ளை... பேசிட்டாப் போகுது.."
அந்தப் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வருபவரிடம் சொல்வதற்கு வேறு வேலைகளை தயாராக வைத்திருந்தான் பாலமுரளி...
"மாமா.. எங்க அம்மா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்.."
"இதோ.. உடனே போகிறேன் மாப்பிள்ளை..."
"மாமா.. நலங்கு வைக்க நேரமாகுமான்னு எங்க அத்தை கேட்டாங்க..."
"இதோ.. ராஜேஸ்வரிகிட்டக் கேட்டுச் சொல்றேன் மாப்பிள்ளை.."
"மாமா... மேடையில நாற்காலி போடனுமாம்..."
"இதோ.. சுந்தர்கிட்டச் சொல்லி.. போட வைக்கிறேன் மாப்பிள்ளை..."
"மாமா.. வாசலிலே பன்னீர் செம்பில பன்னீர் தீர்ந்து போச்சாமே..."
"இதோ.. கீதாகிட்டச் சொல்லி.. என்னன்னு பார்க்கச் சொல்கிறேன் மாப்பிள்ளை..."
ஆக மொத்தத்தில் அவன் சாட்டையாக சுழற்றிவிட.. அவர் பம்பரமாக சுழன்றார்.. ஒருவழியாக அவருக்கே
பந்தி விசாரனை மறந்து போய்விட.. பாலமுரளி நிம்மதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்தான்...
அதுநேரம் வரை மாமனார்.. மருமகனின் பேச்சு வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருந்த பாலசரஸ்வதியின் மாமனார் கனகராஜ் மனைவியிடம் மெதுவான குரலில்...
"அப்படியே.. அந்தக்காலப் பாட்டு ஒன்னை பார்த்ததைப் போலவே இருக்கு அகிலா.." என்று சொல்லிச் சிரித்தார்...
"எந்தப் பாட்டைச் சொல்றீங்க..?" அகிலாவுக்கு நினைவு வரவில்லை..
"அதாண்டி.. மாமா.. மாப்பிள்ளேன்னு... நம்ம நடிகர் திலகமும்.. நடிகவேளும் மாத்திமாத்தி சொல்லிக்குவாங்களே.." என்று அவர் நினைவு படுத்த..
"ஓ.. அந்தப் பாட்டா..?.." என்று அதன் பொருத்தத்தை நினைத்துப் பொங்கிச் சிரித்தாள் அகிலா..
பாலமுரளியின் காதில் அந்த கணவன் மனைவியின் உரையாடல் மிகத் தெளிவாகவே விழுந்தது.. அவன் அதை கண்டு கொள்ளாமல் மேடையைப் பார்த்ததை ராஜராஜன் மிகவும் ரசித்தான்...
"என்ன முரளி.."
"மாமா...?"
"அப்பாவும்.. அம்மாவும் உங்களை இந்த வாரு வாருறாங்க.. நீங்க கண்டுக்காம போஸ் கொடுக்கறிங்க.."
"வேற வழி..?"
"ஒரு வழியாய் உங்க அக்காவின் வாயில் விழுந்து அரைபடாமல் உங்க மாமனாரை தப்பிக்க வைச்சிட்டிங்க.."
"உங்களுக்கும் இது தெரிஞ்சிருச்சா..?"
"கூடப்பிறந்த உங்களுக்குத் தெரியும் போது.. கூட வாழ்கிற எனக்குத் தெரியாமல் போகுமா...?"
அவர்கள் இருவரும் புரிந்து கொள்ளலுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்...
நலங்கு ஆரம்பித்து விட்டது.. மேடையில் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ராதிகாவின் நகைகளின் ஒளிர்வைக் கவனித்த ஷோபா பாலசரஸ்வதியிடம் அதைப் பற்றிப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்... அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலசரஸ்வதி முகம் இறுக.. தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்...
கன்னங்களில் சந்தனத் தீற்றலோடு ராதிகா விழியுயர்த்தி பாலமுரளியை தன் பார்வையினால் துழாவினாள்.. அதைக் கண்டு கொண்ட பாலமுரளியின் கண்கள் மின்னின.. அவன் முகத்தில் ஆண்மையின் கர்வம் தோன்றியது...
அவளது பார்வை அவன்மீது படிந்ததும் அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்டன.. நாணப் புன்முறுவலுடன் அவள் தலை தாழ்த்திக் கொள்ள.. அவனைப் பார்க்க வசதியாக முன்பக்க வரிசையில் வந்து அமர்ந்து கொண்டான் பாலமுரளி...
இந்த பார்வை நாடகத்தை ஷோபாவும் கவனித்தாள்... பாலமுரளியின் காதல் பார்வைக்கு சளைக்காமல் பதில் காதல் பார்வையைக் கொடுத்த ராதிகாவைப் பார்க்கும் போது ஷோபாவின் மனதில் பொறி தட்டியது...
'இவ சங்கரை இப்படிப் பார்த்ததாய் நினைவில்லையே...'
மேடையில் அமர்ந்திருந்த ராதிகாவின் அருகே நின்றிருந்த கீதா.. பாலமுரளியின் பார்வையைக் கண்டு கொண்டவளாய்.. குனிந்து அதைப்பற்றி ராதிகாவின் காதில் கேலி பேச.. ராதிகா முகம் சிவந்தாள்...
'முரளியைப் பத்திப் பேசும்போதே இப்படி முகம் சிவக்கிறாளே.. இந்த முகச்சிகப்பு சங்கரைப் பத்தி இவ பேசும்போது வரவேயில்லையே...'
ஷோபாவின் முகம் ஆராய்ச்சியாக அவர்கள் இருவரையும் கன்காணித்தது.. அவளுக்கு பாலமுரளியின் காதலைப் பற்றித் தெரியும்.. அவனுக்கு ராதிகாவின் மேல் ஆசை இருந்தது..
ராதிகாவிற்கும் பாலமுரளியின் மேல் காதல் இருக்கிறது என்ற விவரம் ஷோபாவுக்கு தெரியவே... தெரியாது...
ராதிகாவின் மனதில் முரளியின் மீது எண்ணம் இருக்கக்கூடும் என்று ஷோபா அறிந்திருந்தால்.. நிச்சயமாக பாலமுரளியைத் தூண்டி விட்டிருக்கவே மாட்டாள்...
'இவ சங்கரையும் கணக்குப் பண்ணிக்கிட்டு.. முரளியையும் கணக்கு பண்ணனும்னு நினைச்சாளா..?'
ராதிகாவைப் பற்றி ஷோபாவால் அப்படி நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.. அவள் ராதிகாவிற்கு எதிரிதான்... இரவும்.. பகலும்.. ராதிகாவை ஏதாவது ஒரு விசயத்தில் தோற்கடித்து விட வேண்டுமென்று திட்டம் போட்டு தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருப்பவள்தான்.. அதனாலேயே அவளுக்கு ராதிகாவின் அத்தனை குனாதிசியங்களும் அத்துபடியாக இருந்தது...
'இவ ஒரே நேரத்திலே இரண்டு பேருக்கும் நூல் விடுகிற ரகமில்லையே...'
மிகச் சரியாக ஒன்றிலேயே நிலைக்கும் ராதிகாவின் குணத்தை கணித்து வைத்திருந்தாள் ஷோபா...
'உன் நண்பனைப் பார்த்தால்.. உன்னைப் பற்றித் தெரிந்து விடும்...!' இப்படி ஒரு வழக்கு மொழி உண்டு...
'உன் எதிரியிடம் கேட்டால்.. உன்னைப் பற்றிய எல்லாமும் தெரிந்து விடும்..!'
இதையாராவது உணர்ந்திருக்கிறீர்களா...?
இதுதான் உண்மை.. நமது நண்பர்களைவிட... நமது எதிரிகள்... நம்முடைய பலத்தையும்... பலவீனத்தையும் பற்றித் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள்...
நமக்குக் கூட நம்மைப்பற்றி அவ்வளவு விவரங்கள் தெரியாது.. ஆனால் நம் எதிரிகள் நம்மைப் பற்றிய விவரங்களை அள்ளிக் கொட்டி...
'இந்த விவரம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா..?' என்று கேட்பார்கள்...
அப்படித்தான் ஷோபாவும் இருந்தாள்.. அல்லும் பகலும் ராதிகாவை பற்றிய ஆராய்ச்சியிலேயே கழித்தவளுக்கு அவளைப்பற்றித் தெளிவாக தெரிந்திருந்தது...
பாலமுரளியை ராதிகாவின் பார்வை தேடி அலைந்தபோது.. அதில் காதலின் தவிப்பைக் கண்டு பிடித்து விட்டாள் ஷோபா...
'அப்படின்னா.. சங்கரைப் பத்தி அன்றைக்கு இவ பேசினது...?'
பாலமுரளியின் பார்வையோடு பின்னிப் பிணைந்து கிடந்த ராதிகாவின் பார்வையைக் கண்டபோதுதான்.. தான்.. இதிலும் ராதிகாவிடம் தோற்றுப் போய் விட்டதை உணர்ந்தாள் ஷோபா...
'இவ பாலமுரளியைத்தான் காதலிச்சிருக்கா...'
அவளையறியாமலே.. ராதிகாவின் காதல் ஜெயிக்க வழி வகுத்து விட்டாளே என்ற நினைவில்.. சில நாள்களாக தள்ளி நின்றிருந்த தலைவலி.. மீண்டும் ஷோபாவை ஆட்கொண்டது...
'என்னை வைச்சே காரியத்தை சாதிச்சிட்டாளே...'
அவர் தலையைப் பிடித்துக் கொள்ள..
"ஆரம்பிச்சுட்டியா..?" என்று அலுப்புடன் கேட்டாள் சுசிலா...
"எங்கேயிருந்துடி.. நீ இந்த தலைவலியை தேடிப்பிடிப்ப..?"
"ஸ்ஸ்... சும்மாயிருங்கம்மா.. யாராவது தலைவலியை வா.. வான்னு வெல்கம் பண்ணுவாங்களா..."
"எங்களுக்கெல்லாம் வராத தலைவலி.. உனக்கு மட்டும் எப்படி வருதோ..?"
சுசிலாவின் அங்கலாய்ப்பில் மேடையைப் பார்த்தாள் ஷோபா... முகம் பூராவும் மகிழ்ச்சியுடன் வைர நகைகள் ஒளிர மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள் ராதிகா...
'இவளை என்றைக்குப் பார்த்தேனோ.. அன்றைக்கிருந்தே இந்தத் தலைவலி என்னைத் துரத்துது மம்மி...'
மனதுக்குள் பொறுமினாள் ஷோபா...
'இப்படியொரு முட்டாளாய் இருந்திருக்கேனே.. இவ மனசில முரளி இருக்கிறான்னு தெரிஞ்சிருந்தா... நான் அவனையே மேரேஜ் பண்ணிக்கிற முடிவை எடுத்திருப்பேனே... சங்கரைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்திருக் மாட்டேனே.. இவளை தோற்கடிக்க.. இவ்வளவு அருமையான சான்ஸ் கிடைச்சும்... அதை நான் மிஸ் பண்ணிட்டேனே...'
நினைக்க.. நினைக்க... அவளுக்குத் தாங்க முடியவில்லை... ராதிகாவின் ஒவ்வொரு சிரிப்புச் சத்தத்திற்கும்... அவளது தலைவலியின் வேதனை கூடிக்கொண்டேயிருந்தது...
அவள் முன் அவளது எதிரியைத் தோற்கடிக்க... மிக எளிதான வழி ஒன்று இருந்தது...
அதுதான்.. அந்த எதிரியின் மனதிலிருந்தவனை கைபிடித்துக் காட்டுவது...
அவள் அதை அறிந்து கொள்ளாமல்.. எதிரியின் காதலனுடன் அவளைச் சேர்த்து வைக்கும் முட்டாள் தனமான வேலையைச் செய்து விட்டாள்... ராதிகா சங்கர் மீதுதான் அவளுக்கு ஆர்வம் போலப் போட்டுக்காட்டிய நாடகத்தில் அவள் ஏமாந்து விட்டாள்...
'எப்பேற்பட்ட மாஸ்டர் பிளான்... முரளியிடம் என்னைத் தூது அனுப்பியிருக்காளே.. இருந்த இடத்தில் இருந்து கொண்டே காரியத்தைச் சாதிச்சிருக்காளே.. நானும் பேக்கு போல... இவளுக்கும்.. சங்கருக்கும் மேரேஜ் நடக்கப் போகுதுன்னு முரளியை கிளப்பி விட்டு விட்டேனே...'
ஷோபா பரிதவித்தாள்... நினைத்து ஒன்று.. நடந்தது ஒன்றாக ஆகிப் போனதில் ஆடிப்போனாள்.. அவள் குரங்கை வரவழைக்க நினைத்தால் அங்கே பிள்ளையார் தோன்றி நின்றதில் அயர்ந்து போனாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -64
அம்மம்மா.. கேளடி தோழி...! -64
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-64.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-64.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy