அம்மம்மா.. கேளடி தோழி...! -62

62 வெற்றிடமாய்   இருந்த   மனதை.. இட்டு   நிரப்பியது   உன் காதல்... பாலசரஸ்வதி தீவிர சிந்தனையிலிருந்தாள்.. கம்பெனியிலிருந்து திரும...


62
வெற்றிடமாய்  இருந்த  மனதை..
இட்டு  நிரப்பியது  உன் காதல்...

பாலசரஸ்வதி தீவிர சிந்தனையிலிருந்தாள்.. கம்பெனியிலிருந்து திரும்பியிருந்த ராஜராஜன்.. மனைவியிடம் வழக்கமான வரவேற்பில்லாததைக் கவனித்தபடி சட்டையைக் கழற்றினான்.. குளியலறைக்குள் புகுந்து கைலிக்கு மாறி வெளியே வந்த போதும்... அவள் அப்படியே உட்கார்ந்திருக்க.. அவனுக்கு கோபம் வந்து விட்டது...
"சரஸ்..." சத்தமாக அழைத்தான்...
அந்த அழைப்பில் பதறி எழுந்தவள்...
"எப்போ வந்தீங்க..?" என்று கேட்டாள்..
"நான் வந்ததைக் கூடக் கவனிக்காம... அப்படியென்னடி யோசனை வேண்டிக்கிடக்கு..?"
"உங்களுக்கு காபி கொண்டு வர்றேன்.."
"கேட்டதுக்கு பதிலைச் சொல்லிட்டுப் போ.. எதைப்பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்த..?"
"எதைப்பத்தி யோசிக்கப் போறேன்..? எல்லாம் முரளியோட கல்யாண நிச்சயதார்த்தத்தைப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..."
"நினைச்சேன்.. ஏண்டி.. நம்ம வீட்டிலயே ஆயிரம் பிரச்னைகள் இருக்கு.. இதை யோசிக்காம எப்பப் பார்த்தாலும் உன் தம்பியைப் பத்தியே யோசனையில இருந்தியின்னா என்னடி அர்த்தம்..?"
"இது ஒரு குற்றமா..?"
"குற்றம்தான்.. எதுவும் ஒரு அளவோட இருக்கனும் சரஸ்..."
"அதில்லங்க... ஷோபா இன்னைக்கு மதியானமா எனக்குப் போன் பண்ணியிருந்தா..."
மனைவி சொன்னதைக் கேட்ட ராஜராஜனின் புருவங்கள் மேலேறின..
"அவ எதுக்கு உன்கிட்டப் பேசினா..?"
இப்படிக் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள் பாலசரஸ்வதி.. மனைவியின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று ராஜராஜனுக்கு புரியவில்லை...
"என்னடி..?"
"ஏன்..? அவ என்கிட்டப் பேசக்கூடாதா..?"
"அதுக்குக் கேட்கலைடி.. இதுக்கு முன்னாடியும் அவ ரெண்டுதடவை உன்கிட்டப் போனில பேசியிருக்கா.. என்கிட்டப் பேசலை..."
"அதுக்கென்ன..?"
"என்கிட்டப் பேசாம உன்கிட்ட மட்டும் அவ பேசியிருக்கான்னா.. அதை ஏன்னு நான் கேட்கக் கூடாதா..?"
"நாங்க பெண்கள்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.."
இப்படிச் சொன்ன மனைவியை கவலையுடன் பார்த்தான் ராஜராஜன்.. அவனுக்கு ஷோபாவின் குண விசேசம் அத்துபடியான ஒன்று.. அவனுடைய அம்மாவான அகிலாவிடம் இருக்கும் அமைதியும்.. அலட்டிக் கொள்ளாத பெருந்தன்மையான குணமும் அவனுடைய சித்தியான சுசிலாவிடம் இல்லை என்பதை எப்படி மனைவியிடம் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை...
எல்லா ஆண்களையும் போல.. மனைவியிடம்... தன்வீட்டு மனிதர்களை விட்டுக் கொடுத்துப் பேசக்கூடாது என்று அவன் நினைத்தான்...
அந்த நினைவினால்தான்.. தன் தாயின் தங்கையான சுசிலாவைப் பற்றியும் அவள் பெற்ற குலக்கொழுந்தான ஷோபாவைப் பற்றியும் அவன் வாய் திறக்கவில்லை.. பாலசரஸ்வதியும் யார்.. எப்படியென்று தூண்டித் துருவி கேள்வி கேட்டதில்லை...
இப்போதுதான் தம்பியின் திருமண விவகாரத்தில் தலையிட்டு அவள் சுடுவார்த்தைகளைப் பேசி வருகிறாள்.. அதுவரை அவள் அப்படிப் பேசி அவன் கேட்டதேயில்லை..
அப்படிப்பட்டவளின் மாற்றத்தின் பிண்ணனியில் எது இருக்கிறது என்ற சிந்தனை சில நாள்களாவே ராஜராஜனின் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது...
பாலசரஸ்வதி அந்தஸ்தான மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நிறைகுடம்.. ஒரு போதும் பணத்தை வைத்து மனிதர்களின் தராதரத்தை அவள் எடை போட்டதில்லை..
அந்த பாலசரஸ்வதி.. ராதிகாவின் பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி.. அவளை மட்டம் தட்டிப் பேசினாள்... திருமணம் என்ற ஒன்றைப் பண்ணிக் கொண்டால்.. ராதிகாவைத்தான் திருமணம் பண்ணிக் கொள்வேன் என்று முரளி ஆணித்தரமாக சொன்ன பின்னாலும்.. அந்தத் திருமணத்தை நிறுத்த பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டாள்...
மனைவியிடம் காணப்பட்ட இந்தப் புதிய பரிணாமம் ராஜராஜனை அதிர்விற்கு ஆளாக்கியது...
அவனறிந்த மென்மையான பாலசரஸ்வதி இப்படியெல்லாம் யோசிக்கக் கூடமாட்டாளே என்ற யோசனையில் அவன் ஆழ்ந்தான்...
அந்த யோசனையின் வட்டத்திற்குள்.. ஷோபா.. அடிக்கடி பாலசரஸ்வதியிடம் மட்டும் போனில் பேசுகிறாள் என்ற விவரம் தட்டுப்பட்டது...
அவளது பேச்சிற்கும்.. பாலசரஸ்வதியிடம் தென்படும் மாற்றத்திற்கும் இடையில் ஏதோ ஒரு பினைப்பு இருப்பதாக அவன் அறிவிற்கு புலப்பட்டது...
அப்படியொரு பிணைப்பு ஷோபாவிற்கும் அவன் மனைவிக்கும் இடையில் வருவதை அவன் விரும்பவில்லை..
ஷோபா அவனுக்கு ஒன்றுவிட்ட தங்கைதான்.. அதற்காக.. அவளது சூழ்ச்சி வலையில் மனைவி சிக்குவதை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது...
சுசிலாவின் அத்தனை சூட்சுமங்களையும் கரைத்துக் குடித்து வளர்ந்தவள் ஷோபா.. அவளுடன் ஆயிரம் ரகசியம் இருக்கும் என்று மனைவி சொல்வதில் அவனுக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை...
"அவ கூட ஆயிரத்தில ஒன்னை வைத்துக்கிட்டாக்கூட நீ தாங்க மாட்ட.. இதில.. அவளுக்கும்.. உனக்கும் ஆயிரம் இருக்கும்ன்னு பெருமை பேசறயா..?"
"என்னங்க இது வம்பாப் போச்சு..?"
"அவ கூட பேசினா உனக்கு வம்புதாண்டி.."
"உங்க சித்தி மகள்கூடப் பேசினாக் கூடத்தப்பா..?"
"அதான்... இப்பல்லாம் நீ தப்புத்தப்பா யோசிக்கறேயே..."
"அதானே பார்த்தேன்.. உங்க மச்சினன் மேலே பாசம் பொங்கி வழியுதாக்கும்.. அந்தப் பாசத்திலே கொஞ்சத்தை சித்தி மக பக்கமும் திருப்பி விட வேண்டியதுதானே.."
"எல்லாம் எனக்குப் பாசமிருக்கு.. அவ என்ன பேசினான்னு நீ விசயத்தைச் சொல்லு..."
"பெரிசா எதையும் பேசலை.. பொதுவாய்த்தான் பேசினோம்..."
பாலசரஸ்வதி காபியுடன் வந்தபோது.. பிள்ளைகள் வீட்டுப் பாடத்தை முடித்திருந்தார்கள்.. கணவனிடம் காபியை நீட்டியவள்.. பிள்ளைகளின் பாடங்களைப் பார்த்து திருப்தியாக தலையாட்டினான்...
"சரி.. இனிமே நீங்க விளையாடப் போகலாம்.."
"ஹேய்... தேங்க்யு மாம்..."
ராஜீயும்.. சாதனாவும் அவளது இருபக்க கன்னத்திலும் முத்தம் பதித்து விட்டு.. புத்தகப் பையுடன் ஓடினார்கள்..
குழந்தைகளின் சந்தோச ஆரவாரத்தை தாய்மையின் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டவனின் மனம் கனிந்தது...
கணவனின் பார்வையைக் கண்டு கொண்ட சரஸ்வதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது...
"என்னவாம்.. நேத்துத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டவரைப் போல இப்படிப் பார்த்து வைக்கறீங்க..? இன்னைக்குத்தான் புதுசா என்னைப் பார்க்கறீங்களா..?"
"கொஞ்ச நாளாவே நீ புதுசாத்தான் எனக்குத் தெரியற.."
"அடடா.. இப்ப உங்களுக்கு என்ன தெரியனும்ங்கறிங்க... ஷோபாகூட நான் என்ன பேசினேன்னு தானே தெரியனும்..? அது வேற ஒன்னுமில்லங்க.. ஷோபாகிட்ட முரளி பிடிச்சிருக்கிற இந்த ராதிகாவப் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்..."
"பொறு... பொறு.. ராதிகாவைப் பற்றி ஷோபாவுக்கு என்ன தெரியும்..?"
"உங்களுக்கு விசயமே தெரியாதா...?"
"தெரியாமல்தானே உன்கிட்டக் கேட்கிறேன்..."
"ஷோபாவும் அந்த ராதிகாவும் கிளாஸ்மேட்ஸ்..."
ராஜராஜனுக்கு இத்தனை நாளாக இது தெரியாமல் இருந்தது.. தெரிய வந்தபோது.. எதுவோ புரிவதைப் போல இருந்தது...
"அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸா..."
"சேச்சே.. இந்த ராதிகா கூடல்லாம் ஷோபா பழகவே மாட்டாளாம்.. இவதான் வலிய வந்து ஷோபாகிட்டப் பேசுவாளாம்..."
"ஓஹோ.. இப்படி யார் சொன்னது..? ஷோபாவா..?"
"வேற யார் சொல்லுவா...?"
ஷோபாவிடம் வலிய வந்து பேசும் ரகமாக ராதிகாவை ராஜராஜனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை... கொஞ்ச நேரம்தான் பார்த்திருப்hன் என்றாலும்.. ராதிகாவின் குணாதிசியத்தை ஓரளவு அவனால் தீர்மானிக்க முடிந்திருந்தது... ராதிகாவின் முகத்தில் ஓடிய புத்திசாலித்தனமான ரேகைக்கும்.. ஷோபாவிற்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாதே...
"உனக்கெப்படி ஷோபாவோட கிளாஸ்மேட் தான் ராதிகான்னு தெரியும்..? ராதிகா சொன்னாளா..?"
"அவகிட்டயெல்லாம் நான் பேச்சு வைச்சுக்கிட்டேனா..?"
"அதானே.. அன்னைக்கு ராதிகாகூட ஒற்றை வார்த்தை கூடப் பேசாம எழுந்து வந்த நாத்தனாராச்சே நீ..."
"எரிச்சலக் கிளப்பாதீங்க.. இந்த ராதிகா முரளிக்கு வலை விரிக்கிறதை முதலிலேயே ஷோபா என்கிட்டச் சொல்லிட்டா..."
"என்னடி கதை சொல்கிற...?"
"வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க.. முரளி மில் விசயமா சென்னைக்கு போயிருக்கான்.. போன இடத்திலே உங்க சித்தி வீட்டிலே தலையைக் காட்டிட்டு வரச்சொல்லி அம்மா சொல்லியிழுக்காங்க..."
"வளமை தெரிஞ்ச மாமியார்..."
"நீங்கதான் உங்க மாமியார் சொல்லித் தந்த வளமையை மெச்சிக்கனும்..."
"ஏண்டி.. அதுக்கு என்ன குறையாம்..?"
"அந்த வளமையை வெளியே சொல்லிவைக்காதீங்க... அதைக் கேட்டுத்தான் முரளி இந்தக் கதிக்கு ஆளாகி நிக்கிறான்..."
ஆசைப்பட்டவளை திருமணம் செய்து கொள்வது என்பது.. அந்தக் கதிக்கு ஆளாவது என்று விமரிச்சிக்கப்படுமா என்று நெற்றிப் பொட்டை ஒற்றைவிரால் அழுத்த ஆரம்பித்தான் ராஜராஜன்..
அவனது செயலை கவலையுடன் பார்த்தாள் பாலசரஸ்வதி...
"என்னங்க ஆச்சு..?"
"ஒன்னுமில்ல.. நீ மேலே சொல்லு..."
"என்னத்தை சொல்ல..? இவன் போன அன்னைக்கு ஷோபாவோட பர்த்டே பார்ட்டியாம்.. அதில இந்த ராதிகாவும் கலந்துக்க வந்திருந்தாளாம்..."
"ஓ... அங்கே வைச்சுத்தான் முரளி ராதிகாவைப் பார்த்தாரா.. உனக்கு அதுக்காகத்தான் அத்தை சொல்லித்தந்த வளமை மேலே இத்தனை கோபமா..?"
"ஏங்க.. நீங்க வேற கடுப்பைக் கிளப்பறிங்க.. ஆக்சுவலா.. ஷோபா.. இந்த ராதிகாவை பார்ட்டிக்கே இன்வைட் பண்ணலியாம்..."
"அப்புறம் எப்படிடீ ராதிகா பார்ட்டிக்கு வருவா..?"
"அவளா வலிய வந்து.. என்னையெல்லாம் கூப்பிட மாட்டியான்னு ஷோபாகிட்ட கெஞ்சிக் கேட்டாளாம்.."
'ராதிகாவாவது.. அப்படிக் கேட்கிறதாவது...'
ஏன் ராதிகாவை சரஸ்வதி இந்த அளவுக்கு இளப்பமாக நினைக்கிறாள் என்பது இப்போதுதான் ராஜராஜனுக்கு புரிந்தது...
"வேற வழியில்லாம வேணும்னா நீயும் வாயேன்னு ஒரு பேச்சுக்கு ஷோபா சொன்னாளாம்.. உடனே வெட்கமில்லாம முதல் ஆளா இவ பார்ட்டிக்கு வந்து நின்னுட்டாளாம்..."
"இதையும் ஷோபாதான் உனக்குச் சொன்னாளா..?"
"ம்ம்ம்.. அவ பணக்காரங்ககிட்ட ஒட்டுப்புல் போல ஒட்டிக்குவாளாம்... அவகுணம் தெரிஞ்ச ஷோபா.. இவகிட்டயெல்லாம் பழக்கமே வைச்சுக்க மாட்டாளாம்... அவாய்டு பண்ணப் பார்த்தாலும் முடியலைண்ணி... தானா வந்து பார்ட்டியில நின்னுட்டான்னு ஷோபா ரொம்ப சங்கடப்பட்டுட்டா..."
ஷோபாவின் சங்கடத்தைப் பற்றி ராஜராஜனுக்கா தெரியாது..? அதைப்பற்றித் தெரியாத மனைவியின் அப்பாவித்தனத்தை எண்ணி மனதுக்குள் நொந்து போனான் ராஜராஜன்...
"பார்டி முடிஞ்சவுடன் இவ வந்ததைப் போலக் கிளம்பிப் போகனுமா.. இல்லையா..? அதை விட்டுட்டு எண்னைக் காரில் கொண்டு போய் விடுன்னு ஷோபாவோட உயிரைப் போட்டு எடுத்திருக்கா.. அதைக் கேட்ட பாலமுரளி.. நான் காரில் விடுறேன்னு கூப்பிட்டுட்டானாம்.. அன்னைக்கே ஷோபா எனக்குப் போன் போட்டு கதைகதையாய் சொல்லிட்டா.. அந்த ராத்திரியில காரில் விடப் போனப்ப என்ன நடந்ததோ... ஏது நடந்ததோ.. முரளி பதினைஞ்சு நாளா தேனூத்துக்கு திரும்பி வராம சென்னையிலேயே தங்கிட்டான்... அப்பத்தான் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு.. எல்லாம் இந்த ராதிகாவால வந்த வினை..."
இதைக் கேட்ட ராஜராஜன் திகைத்துப் போய்விட்டான்...
தேனூத்தில் இருந்த மேகலாவின் மாரடைப்பு நோய்க்கும்.. சென்னையில் தேமே என்று இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கும் எதன் அடிப்படையில் பாலசரஸ்வதி சம்பந்தத்தை உண்டு பண்ணுகிறாள் என்ற விவரம் அவனுக்குப் பிடிபடவில்லை...
"ஏண்டி.. ராதிகாவா மந்திரம் போட்டு அத்தைக்கு ஹார்ட் அட்டாக்கை வரவைச்சா..? எப்படிடீ நீ இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்ட..?"
வேறு எங்கிருந்து மனைவி கற்றிருப்பாள்..? எல்லாம் அந்த ஷோபா சொல்லிக் கொடுத்து கற்றுக் கொண்டதுதான் என்று ராஜராஜனுக்கு தெரியாமல் இல்லை.. ஆனாலும் சித்தியின் மகளை விட்டுக் கொடுக்கவும் அவனால் முடியவில்லை...
"உங்களுக்குத் தெரியாதுங்க..."
"ஆமாம்.. நீ ரொம்பத் தெரிஞ்சவதான்..."
"இவ பின்னாலே முரளி சுத்தினதாலேதான் அம்மாவை மறந்துட்டு சென்னையே கதின்னு உட்கார்ந்துட்டான்..."
"அவரும் மனுசன்தாண்டி.. அவருக்கும் ஆசாபாசம் இருக்காதா..? இருக்கக் கூடாதா..? அவரென்ன மெஷினா..?"
"அப்படி நான் சொன்னேனா..? நமக்கெல்லாம் கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில ஒரு முறைதாங்க..."
"இதையேண்டி எங்கிட்டச் சொல்ற..?" ராஜராஜன் குழம்பினான்...
"நடப்பைச் சொன்னேங்க.. நீங்க உடனே எதையெதையோ நினைச்சுக்காதீங்க..."
"அவ்வளவுதானே.. ஒரு செகண்ட் பகீர்ன்னு ஆகிப் போச்சு..."
"ஆகும்.. ஆகும்.. இந்த முரளி ஒழுங்கான பெண்ணைக் கட்டிக்கிட்டாத்தானே அவனோட குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருக்கும்..? அதைவிட்டுட்டு பணத்துக்கு ஆளாப் பறக்கிற இந்த ராதிகாவைப் போயி செலக்ட் பண்ணியிருக்கானே.. ஓசி விருந்துக்கும்.. ஓசி கார் சவாரிக்கும் ஆசைப்படற பொண்ணு எப்பேற்பட்டவளா இருப்பா...?"
பாலசரஸ்வதியின் மனதிலிருந்தது வெளியே வந்துவிட்டது... அதை எப்படிச் சரிசெய்வது என்ற மார்க்கம் புரியாமல் ராஜராஜன் திணறிப் போனான்.. அவனால் ஷோபாவைக் குறைத்துப் பேச முடியாது.. எனவே.. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -62
அம்மம்மா.. கேளடி தோழி...! -62
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-62.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-62.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy