அம்மம்மா.. கேளடி தோழி...! -61

61 பற்றிக் கொண்ட காதல் தீயில்... இற்றுப் போனது எனது எதிர்ப்பு... குளிர்காற்று முகத்தில் மோதிய போது.. கண்விழித்தாள் ராதிகா... அருக...


61
பற்றிக் கொண்ட காதல் தீயில்...
இற்றுப் போனது எனது எதிர்ப்பு...

குளிர்காற்று முகத்தில் மோதிய போது.. கண்விழித்தாள் ராதிகா... அருகே விலகிப் படுத்திருந்தவனின் முகத்தில் தெரிந்த நிறைவைக் கண்டவளின் மனம் நிறைந்தது.. கட்டிலை விட்டு எழுந்து கொண்டாள்...
அவள் கிளம்பும் போது.. அவள் கையில் அந்த நகைப் பெட்டியைக் கொடுத்தான் பாலமுரளி...
"இதை எதுக்காக என்கிட்டக் கொடுக்கறிங்க..?" அவளுக்கு புரியவில்லை...
அவளது அந்தக் கேள்வியில் அவன் முகம் கனிந்தது.. அவளுக்குத் தெரியும்.. அவன் மிகப் பெரிய பணக்காரன் என்பது.. அவள் மீது அவன் கொண்டிருக்கும் ஆசையின் அளவும் அவளுக்குத் தெரியும்.. இருந்தும்.. அவன் வாங்கிய நகைகளை.. யாருக்காக வாங்கினான் என்று புரியாமல் வினவுகிறாள்...
'இவளுக்கு பணம்.. காசு.. நகைன்னு எதுவும் பெரிசில்லை...'
அவன் செல்லமாக அவள் தலையில் குட்டினான்...
"முட்டாள்.. இதை யாருக்கு வாங்குவாங்க..? என் பெண்டாட்டிக்குத்தான் வாங்குவாங்க.."
"எனக்கா வாங்கினீங்க...?"
"நீதானே என் பெண்டாட்டி..?."
அவன் முகத்தில் ஒர்விதமான கடினத்தன்மை வந்து அமர்ந்தது.. அவள் அந்த நகைப் பெட்டியைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் நகர்த்தி வைத்தாள்...
"இல்லை.. இது எனக்கு வேணாம்.."
"ஏண்டி..?" அவன் திகைத்தான்...
"நான் அதிகமா நகை போட்டுக்க மாட்டேன்..."
"என் பெண்டாட்டி அப்படியிருக்க முடியாதே.. எங்க பக்கத்தில பொண்ணுக எல்லாம் அதிகமா நகை போட்டுக்குவாங்கடி.. அதை முக்கியம்ன்னு ஆம்பளைகளும் நினைப்பாங்க..."
"அப்படின்னா.. கல்யாணத்துக்கு அப்புறமாய்.. இந்த நகைகளைக் கொடுங்க.. வாங்கிக்கறேன்.. இப்ப வேணாம்..."
மீண்டும் அவள் மறுக்க.. அவன் முகம் கடுமையானது...
"ராதிகா..." என்று கோபத்துடன் அதட்டினான்...
'ராது...' ராதிகாவாகிவிட்டதை அவளும் கவனிக்கத்தான் செய்தாள்.. இருந்தாலும் தன் மறுப்பில் உறுதியாக நின்றாள்...
"அப்ப.. கல்யாணம்ன்னு ஒன்னு ஆனாத்தான் உனக்கும்.. எனக்கும் சொந்தம் வரும்.. இப்ப எதுவும் இல்லங்கறே.. அப்படித்தானே...?"
"நான் அப்படிச் சொல்லலை..."
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே... இங்கே என்ன நடந்ததுன்னு நினைச்சுப் பாரு.. அப்ப என்னை நீ மறுக்கல.. ஆனா.. நான் கொடுக்கிற நகையை மறுக்கிற.."
"அது.. அதுவந்து.."
"பேசாதே.. இந்த நகையை உனக்காகத்தான் வாங்கினேன்.. நிச்சயத்துக்கு எங்க சொந்தபந்தமெல்லாம் வந்து இறங்குவாங்க.. சபையில நீ வந்து நிற்கிறப்போ... வைர நகை இல்லாட்டி... அதை ஒரு பெரிய குத்தமா பேசுவாங்க.. அதுக்காத்தான் நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து நகை வாங்கிக் கொடுக்கிறேன்.. நீ என்னடான்னா.. அதைப் புரிஞ்சுக்காம இப்படிப் பண்ணி வைக்கிற.."
பாலமுரளியின் பேச்சில் முகம் சுணங்கிப் போனாள் ராதிகா.. அதை அவனும் கவனிக்கத்தான் செய்தான்...
"எதுக்கு இப்ப முகத்தைத் தூக்கி வைச்சுக்கறவ..?"
"உங்க ஸ்டேட்டஸீக்கு தகுந்த மாதிரி எங்க வீட்டில வைரங்களாய் போட மாட்டாங்க.. அதைச் சொல்லிக் காண்பிக்கிறிங்களா..?"
அவன் முகம் பார்க்காமல் அவள் கேட்க.. அவன் கண்கள் சிவந்தான்..
"அடிச்சுப் பல்லைக் கழட்டிருவேன்.. ராஸ்கல்... யாருகிட்ட என்ன பேசற..? அதென்னடி.. உன் ஸ்டேட்டஸ்.. என் ஸ்டேட்டஸ்ன்னு பிரிச்சுப் பேசறவ... உங்க வீடாம்ல்ல.. என்கூட குடும்பம் நடத்தினவ பேசற பேச்சாடி இது..."
'ஆ... ஊன்னா.. இதை ஒன்னைச் சொல்லிருவான்..' அவள் முகம் குங்குமமாய் ஆனது..
இப்படிப் பேசுகிறவனிடம் எப்படி அவள் பதில் சொல்வாள்..?
தர்மசங்கடத்துடன் தரையைப் பார்த்தவளின் வெட்க முகச்சிகப்பு அவனை ஈர்த்தது.. அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் முரளி...
அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளிடம் கூந்தலில் முகம் புதைத்தவனுக்கு இவள் ஒருவரம் என்று தோன்றியது...
"இப்படி நான் ஆனதில்ல..
             புத்தி மாறிப் போனதில்ல..
    முன்னப்பின்ன நேசமில்ல..
             மூச்சுமுட்டிப் போனதில்ல..
    கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள..
             கட்டுத்தறி பார்த்தேனே...
    படபடக்கும் நெஞ்சுக்குள்ளே..
             பட்டாம்பூச்சி கேட்டேனே...
    இசை கேட்டேனே... ஓ..."
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொன்னுச்சாமியின் எப்.எம் ரேடியோவில் இருந்து பாலமுரளியின் மனதை பிரதிபலிப்பதைப் போல பாட்டுச்சத்தம் கேட்டது... அவன் மனதில் பேரலை யொன்று எழுந்தது...
"அடி ஆத்தாடி...
             இள மனசொன்னு...
    ரெக்கைகட்டிப் பறக்குது சரிதானா..?
             அடி அம்மாடி...
    பெரும் அலையொன்னு
             மனசில அடிக்குது அதுதானா..?"
அவன் முதுகில் கைபரவ.. தோள்சாய்ந்து நின்றவளின் முகம் தடவி.. கைகளில் ஏந்தி.. விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான் பாலமுரளி...
அந்த ஓர் பார்வையில் ராதிகாவின் இதயம் ததும்பியது.. இது போதும் என்று தோன்றியது..
ஒருநாள் பார்த்தவன்.. பார்த்த நொடியிலிருந்து அவள் மனதை ஆக்ரமித்து.. அவளையும் ஆக்ரமித்து விட்டானென்றால்.. அவன் எப்பேற்பட்டவன் என்று தோன்றியது.. அவளின் வசதியைப் பார்க்கவில்லை.. அவள் வீட்டின் எதிர்ப்பை பொருட் படுத்தவில்லை.. அவளை விலக அனுமதிக்கவில்லை.. அவளைக் கட்டித் தூக்கி.. இன்று தாலிவரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறானே.. இப்படிப்பட்ட ஆண்மகனின் காதல் கிடைக்க அவள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று அவள் மனம் சொல்லியது...
அவள் அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள்.. அவளது பார்வை வழி வந்த காதல்.. மழைச்சாரலாய் அவன் உயிர் நனைத்தது.. அவன் மனம் லேசானது...
"உயிரோடு.. உயிர்சேர..
             ஒரு கோடி ஆனந்தம்...
    இவன் மேகம் ஆக...
             யாரோ காரணம்...?"
வீட்டிற்கு திரும்பிய போது.. அவர்கள் இருவருமே பேசவில்லை.. பேச்சு எப்போது தேவைப்படும்..? ஒருவர் மனதின் மொழியை மற்றவர் உணர்ந்து கொள்ள முடியாதபோது தேவைப்படும்...
மௌனம் மனதில் மொழி..! மௌனத்தை உணராதவர்கள் காதலை உணர முடியாது.. மௌனமே சிறந்த மொழி.. அதன் பரிபாஷைகளை உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் அவர்கள் காதலர்களே அல்ல...
பாலமுரளியின் மனமும்.. ராதிகாவின் மனமும்.. மௌனத்தில் பின்னிப் பிணைந்திருந்தன.. பேச்சுக்களற்ற மௌனம் அங்கே ஆட்சி செய்ய ராதிகாவின் வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான் பாலமுரளி...
'வரட்டுமா..?' என்று கேட்க நினைத்தாள் ராதிகா.. அவளுக்கு நா அசையவில்லை.. தலையை மட்டும் அசைத்தாள்.. பதிலுக்கு அவனும் தலை அசைத்தான்.. கார் கிளம்பி போய்விட்டது.. நகைப் பெட்டியுடன் வீட்டுப் படியேறினாள் ராதிகா..
"கோவிலுக்கு போயிட்டு வரேன்னு போறாங்க.. திரும்பி வர இத்தனை நேரமாகுது.. நடந்து போனவங்க.. காரில் திரும்பி வர்றாங்க... இதையெல்லாம் ஏன்னு கேட்க முடியுதா...? இந்த வீடு வீடாவே இல்ல.. ஆளாளுக்கு.. இஷ்டம் போல ஆட ஆரம்பிச்சுட்டாங்க..."
கதவைத் திறந்து விட்ட ராஜேஸ்வரி அர்ச்சித்தாள்.. ராதிகா எதுவும் பேசாமல் மாடியேறி விட்டாள்.. குளித்து உடைமாற்றி கீழே இறங்கி வந்தவளிடம் அவள் வைத்து விட்டுப் போயிருந்த நகைப் பெட்டியைக் காண்பித்தார் கிருஷ்ணமூர்த்தி..
"இது என்னம்மா..?"
கீதா.. ஆவலுடன் அந்தப் பெட்டியை வாங்கப் போனாள்.. கிருஷ்ணமூர்த்தி முகச் சுளிப்புடன் சின்ன மகளை பார்வையிலேயே அதட்டினார்...
அதுவரை அவர் அப்படிச் செய்ததில்லை... பெற்ற பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் இதமாகப் பேசும் மனிதர் அவர்... அப்படிப்பட்டவர் முகம் சுளிக்கவும் நகைப்பெட்டியைத் தொடப் போன கீதா கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்...
ராதிகாவின் மனம் சங்கடப்பட்டு விட்டது...
"அப்பா.. இந்த ஜ்வல்ஸை அவர் வாங்கிக் கொடுத்தார்..." அவள் தயக்கத்துடன் சொன்னாள்...
"அவர்ன்னா.. எவர்ன்னு கேளுங்க.. குட்டிச் சுவரா..?" ராஜேஸ்வரியின் குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது...
"யாரைச் சொல்கிறம்மா.. மாப்பிள்ளையைச் சொல்றயா..?" கிருஷ்ணமூர்த்தி இதமாக வினவினார்...
"அவர்தாம்ப்பா..."
"அவரை எங்கே பார்த்த..?"
"கோவிலில்..."
"தப்பில்லம்மா... அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர்தான் ஆனாலும்.. நீ அவரைப் பார்க்கப் போகிறேன்னு ஒருவார்த்தை வீட்டில சொல்லிட்டுப் போயிருக்கலாமேம்மா..."
கிருஷ்ணமூர்த்தியின் கேள்வியில் ராதிகாவின் மனம் கனமானது.. அவள் சொல்லத்தான் நினைத்தாள்.. அவள் சொல்லவந்தபோது ராஜேஸ்வரி கோப முகம் காட்டி.. முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டாள்.. அதனால் அவள் சொல்ல வந்ததை சொல்ல முடியாமலே போய்விட்டது...
"அவர் வீட்டுக்குத்தான் காரை விடுகிறார்ன்னு நினைச்சேன்ப்பா.. நகைக்கடைக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போவாருன்னு எனக்குத் தெரியாது..."
இப்போது ராதிகா உண்மையைச் சொன்னாள்.. கிருஷ்ணமூர்த்தியின் முகச்சுளிப்பு முற்றிலுமாக மறைந்தது...
"விசாரணைக் கமிசனை முடிச்சிட்டிங்களாப்பா.. இனியாவது நகைப்பெட்டியைத் திறந்து பார்க்கலாமா..?"
கீதா அதிலேயே குறியாக நின்றாள்.. கிருஷ்ணமூர்த்தியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டவள் நகைப் பெட்டியைத் திறந்ததும்.. அந்த ஹாலே ஒளிர்ந்தது..
"ஹா..! டயமன்ட்...!" கீதா வாய் பிளந்தாள்...
சமையலறையில் வேலையாக இருந்த ராஜேஸ்வரி வந்து எட்டிப் பார்த்தாள்.. சுந்தரின் விழிகளில் அப்பட்டமான ஆச்சரியம் தெரிந்தது...
"இது என்னம்மா ராதிகா.." கிருஷ்ணமூர்த்தி யோசனையுடன் கேட்டார்...
"அப்பா.. நாளைக்கு மறுநாள் நிச்சயதார்த்தம் நடக்கப் போகுதுல்ல..."
"ஆமாம்..."
"அதுக்குப் போட்டுக்க நகை வாங்கிக் கொடுக்கச் சொல்லி அவரோட அம்மா சொன்னாங்களாம்.. இது அவங்க குடும்ப வழக்கமாம்.."
"இது வைரமாச்சேம்மா..."
"அவங்க வைர நகைகளைத்தான் வாங்கிக் கொடுப்பாங்களாம்..."
"ஓ..."
கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஆழ்ந்த யோசனையில் இறங்க...
"அடடா.." என்றாள் கீதா...
"ஏன்ப்பா.. இந்த நகைகள ராதிகா நம்ம வீட்டிலேயா வைச்சுட்டுப் போகப் போறா..? அவங்க வீட்டுக்குத்தானே போட்டுக்கிட்டுப் போகப் போறா..? அதை நினைப்பீங்களா.. அதை விட்டுட்டு.. ஆயிரத்தெட்டு குறுக்கு விசாரணையைப் பண்ணிக்கிட்டு இருக்கீங்களே.."
"அப்படியொன்னு இருக்கில்ல..."
"ஆமாம்ப்பா.. ஆமாம்..."
"எல்லாம் சரி ராதிகா.. மாப்பிள்ளை எதுக்காக வாசலோட போறாரு.. வீட்டுக்குள்ள வந்து ஒருவார்த்த பேசிட்டு.. ஒரு கப் காப்பிய குடிச்சுட்டுப் போகலாமில்ல..?"
கிருஷ்ணமூர்த்தியின் கேள்வியில்.. சமையலறையில் பாத்திரங்கள் உருண்டன.. அர்த்தத்துடன் அதைப் பார்த்துவிட்டு மௌனமாக தகப்பனாரை ஏறிட்டுப் பார்த்தாள் ராதிகா...
அவள் விழிகளில் தெரிந்த துயரத்தில் அவர் மனம் பரிதாபம் கொண்டது... பரிவுடன் மகளின் தலையைக் கோதிவிட்டு ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தார்.. கீதாவும்.. சுந்தரும்.. நகைகளை வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.. ராதிகா ஆயாசத்துடன் விழிகளை மூடித்திறந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -61
அம்மம்மா.. கேளடி தோழி...! -61
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-61.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-61.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy