அம்மம்மா.. கேளடி தோழி...! -60

60 உன் பார்வை மட்டும்தான் -எனை.. பெண்ணென்று உணர வைத்தது... அவளது அந்தப் பார்வையில் அவனது புருவச் சுளிப்பு மெல்ல மறைந்தது.. அவள் ப...


60
உன் பார்வை மட்டும்தான் -எனை..
பெண்ணென்று உணர வைத்தது...

அவளது அந்தப் பார்வையில் அவனது புருவச் சுளிப்பு மெல்ல மறைந்தது.. அவள் பார்வையோடு.. அவன் பார்வை பிண்ணிப் பிணைந்தது.. ராதிகா மெதுவாக அவன் பக்கம் நகர்ந்தாள்.. அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.. இப்போது அவன் கரம் அவளைச் சுற்றி வளைத்தபோது அவள் விலகவில்லை..
"ராது..."
அவன் ஆசையுடன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.. அவளது உதடுகளில் அழுத்த முத்தத்தைப் பதித்து விட்டு நிமிர்ந்தவன் அவள் விழிகளுக்குள் உற்று நோக்கினான்...
"ஏண்டி..?"
அவன் கேள்வி புரிந்தவளாக.. அவனது சட்டையின் பொத்தானை பிய்த்து விடும் நோக்கத்துடன் திருகியபடி.. அவள் மெல்லிய குரலில் சொன்னாள்..
"அது கோவில்..."
"ஓ..."
அவன் முகத்தில் லேசாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச சுணக்கமும் பறந்துவிட.. அவன் அவளை இறுக்கிக் கொண்டான்...
"இது ரோடு பாஸ்..."
"ஆமாமில்ல..."
அவன் விலகி சாலையைப் பார்த்தான்.. அங்கொன்றும்... இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் இருந்தது...
"ஆளே இல்லைடி.." மீண்டும் நெருங்கப் போனான்..
"அவங்களைப் பார்த்தா உங்க கண்ணுக்கு ஆளாத் தெரியலையா..?" அவள் தலையைச் சரித்துச் சிரித்தாள்..
கார் கிளம்பியது.. அவள் வீட்டுக்குச் செல்லாமல் வேறு திசையில் திரும்பியது...
"இப்பவும் கடத்தலா..?" அவள் புருவங்களை உயர்த்தினாள்...
"ஆமாம்.." அவன் பல்வரிசை தெரிய சிரித்தான்...
அவன் சிரிக்கும் போது தெரிந்த பல் வரிசையின் அமைப்பு.. முல்லைப் பூக்களின் சரத்தை நினைவு படுத்த.. ஆசையுடன் அதைப் பார்த்தாள் ராதிகா...
மாநிறமான அவனது முகத்தில் எப்போதும் கண்டிப்பின் சாயல் மட்டுமே தெரியும்.. அவன் சிரிக்கும் போது அது மறைந்து விட... அவன் மிக அழகாகத் தெரிந்தான்.. மாநிறமான அவன் முகத்தில் பளீரிட்ட அந்த வெண்பற்களின் சிரிப்பு.. அவனது வசீகரத்தை இன்னும் கூட்டிக் காண்பித்தது...
"ராது.."
"ம்ம்ம்.."
"இப்ப உன்னைப் பார்க்கும் போது எப்படியிருக்கு தெரியுமா..?"
"எப்படியிருக்காம்..?"
அவன் 'மானே.. தேனே..' என்று வர்னிக்கப் போகிறான் என்ற நினைவில் அவள் வெட்கச் சிணுங்கலுடன் கேட்டபோது.. அவன் சொன்னான்...
"நிஜமாகவே என்னைக் காதலிக்கிறவளைப் போல இருக்குடி..."
'சுளீர்..' என்ற சாட்டையடியை மனதில் வாங்கினாள் ராதிகா.. ஒரு இனிய கனவு கலைந்ததைப் போல இருந்தது அவளுக்கு.. அதை உணராதவனாக அவன் பேசிக் கொண்டே போனான்...
"நான் கூட வேதனைப்பட்டுப் போயிட்டேண்டி.. அன்னைக்கு உன்னைத் தொட்டப்புறம்.. ராத்திரியில என்னால தூங்க முடியல... இப்படியொரு கிராதகனா ஆயிட்டோமேன்னு மனசை குற்ற உணர்ச்சி அரிச்சுக்கிட்டே இருந்துச்சு... இப்ப நீ கிட்ட வந்து பார்க்கிற பார்வையைப் பார்த்தப்புறம்தான் நான் செஞ்சது சரின்னு எனக்குத் தோணுது..."
ராதிகா 'ஊம்' கொட்ட முடியாத மனத்துயரத்துடன் மௌனமானாள்...
"அன்னைக்கு மட்டும் நான் உன்னைத் தொடலேன்னு வைய்யி.. இந்நேரம் உனக்கு அந்த சங்கரோடதான் கல்யாணம் நிச்சயமாகியிருக்கும் ..நான் தொட்டதால நீ எனக்குக் கிடைச்ச..."
ஜன்னல் வழி தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராதிகா.. தப்பிக்கும் மார்க்கம் புலப்படாதா என்று ஏங்கிப் போனாள்...
"தொட்டவனைக் கட்டிக்கனும்கிற கட்டாயம் உனக்கு வந்திருச்சு.. என் காதலும் பிழைச்சிருச்சு.. இறங்கு..."
'எங்கே இறங்கச் சொல்கிறான்..?'
அதுவரை.. அவன் பேசிய பேச்சுக்களில் தொலைந்து போயிருந்த ராதிகா எங்கே வந்திருக்கிறோம் என்று புரியாமல் திரும்பிப் பார்த்தாள்..
ஒரு பிரம்மாண்டமான நகைக்கடையின் முன்னால் அவனது கார் நின்றிருந்தது...
'இங்கே எதுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கான்..' அவள் புரியாமல் இறங்கினாள்...
"வா..."
அவன் படிகளில் ஏற.. அவள் பின்தொடர்ந்தாள்.. கண்ணாடிக் கதவைத் திறந்தவுடன் ஏஸியின் குளிர் சில்லென்று அவர்களின் உடல்களைத் தழுவியது...
கண்ணாடி குவளைகளில் குளிர்ச்சியான பழரசம் வந்தது... குடித்தபடியே நகைகளை அவன் பார்வையிட ஒன்றும் புரியாமல்.. அவனை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ராதிகா...
"இந்த செட் அழகாயிருக்கில்ல..."
அவன் காட்டிய நகைப் பெட்டியில் வைரங்கள் ஒளிர்ந்தன...
"வைரமா..?" அவள் விழிகள் அகன்றன...
"ம்ம்.. நல்லாயிருக்கான்னு சொல்லு..."
அவளது பிரமிப்பை ரசித்தபடி அவன் சொன்னான்...
அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த வைர நெக்லஸின் அழகில் மெய்மறந்து போனாள் ராதிகா.. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய வைர தொங்கட்டான்கள் அதை விடவும் அழகாக இருந்தன.. அவற்றையெல்லாம் தோற்கடிக்கக் கூடிய அழகும்.. வேலைப்பாடும்.. அவற்றோடு இருந்த வைர வளையல்களுக்கு இருந்தன.. இவற்றுக்கு சிகரம் வைத்தது போன்ற ஒளிர்வுடன் மோதிரம் மிளிர்ந்தது...
"பெண்டாஸ்டிக்.. இதைப் போய் யாராச்சும் நல்லாயில்லைன்னு சொல்லுவாங்களா..?" அவள் குழந்தைத் தனத்துடன் சொன்னாள்.. அவன் அதையும் ரசித்தான்...
அந்த நகைகளுக்கான விலை பல லட்சம் ரூபாய்கள் என்பதை அறிந்தபோது.. அவனின் உயரம் அவளுக்குப் புரிந்தது...
'இதை யாருக்காக வாங்கியிருக்கான்..?'
கேட்க வேண்டும் போல தோன்றினாலும்.. அவள் அதைக் கேட்கவில்லை.. அவனுடைய அக்காவிற்காக வாங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டவள்.. அதற்குமேல் அந்த நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை...
கார் பண்ணை வீட்டிற்குள் நுழையவும்.. ராதிகா செல்லக் கோபத்துடன் பாலமுரளியை முறைத்தாள்...
"என்ன சொல்லி என்னை வரச்சொன்னீங்க..?"
"என்ன சொன்னேன்..?"
அவன் ஏதுமறியாமதவனைப் போல வினவினான்..
"கோவிலில் சாமி கும்பிட்டு முடிச்சதும்.. வீட்டிலே கொண்டு போய் விட்டு விடறேன்னு சொன்னீங்களா.. இல்லையா..?"
"சொன்னேன்தான்.. அதுக்கென்ன..?"
"சொன்னதைப் போலவா செய்திருக்கீங்க...?"
"ஆமாம்.. இதுவும் வீடுதானே..."
"இது எங்க வீடா...?"
"இது தாண்டி உன்னோட வீடு..."
பாலமுரளியின் பொருள் பொதிந்த பார்வையில் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறப்பதை உணர்ந்தாள் ராதிகா...
'இவன் ஒருத்தன்.. என்னை கிறங்கடிக்கறதையே தொழிலாய் வைச்சிருக்கான்...' அவள் மனம் வெட்கத்துடன் சலித்துக் கொண்டது..
"வீட்டுக்குப் போகனும்..."
"வீட்டுக்குத்தான் வந்திருக்கோம்..."
"அம்மா தேடுவாங்க.. ப்ளீஸ்..."
"போகலாம்.. போகலாம்.. முதல்ல உள்ளே வா..."
ராதிகா பண்ணை வீட்டுக்குள் கால் வைத்தபோது.. பழைய ஞாபகங்கள் அவளை சூழ்ந்து கொண்டன...
அன்றைக்கும்.. இன்றைக்குமான சூழல் வித்தியாசமாகப்பட.. வீட்டை சுற்றி பார்வையை ஒட்டினாள்.. வித்தியாசம் பிடிபட்டது..
அதிகமாக பொருள்கள் இல்லாத ஹாலை விலையுயர்ந்த சோபாக்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.. வெறுமையான மூலையில் பெரிய திரைகொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அமர்ந்திருந்தது.. சுவர்களில் ஓவியங்கள்..
"உட்கார்..."
பார்வையை சுழல விட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி அவன் உட்கார்ந்தான்.. அவள் ஆராய்ச்சியுடன் பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருக்கவும்.. அவள் கையைப் பிடித்து இழுத்தான்.. அவன் மடியில் அவள் விழுந்தாள்.. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவனின் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிந்த போது..
"ஐயா.." என்ற குரல் கேட்டது..
'இந்த வீட்டிலே யாரிருக்கிறது..?' அவசரமாக அவள் விலகி அமர்ந்தாள்...
"வா.. வள்ளி.." பாலமுரளி ராதிகாவைப் பார்த்தபடியே சொன்னான்..
காபிக் கோப்பைகளோடு வந்த வள்ளியின் பார்வை ராதிகாவை அளந்தது...
"என்ன பார்க்கிற.. இவதான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரி.." பாலமுரளி சொந்தத்துடன் கூறினான்...
"அப்படிங்களாய்யா.. அம்மா அழகா கீறாங்க.." சென்னை பாஷையில் புகழ்ந்தாள் வள்ளி...
"கீரையும்.. பாத்தியும் உன் பேச்சை விட்டுப் போகவே போகாதா..?"
காபிக் கோப்பையை வாங்கியபடி கேட்டான் பாலமுரளி...
"இன்னாங்கய்யா செய்யறது.. பேசிப்பேசி பழகிப் போச்சே..."
அவள் உள்ளே போனதும்..
"யாரு இது..?" என்று விசாரித்தாள் ராதிகா...
"இந்த வீட்டில வேலை பார்க்குது..."
"அப்பல்லாம் இவங்க இல்லையே..."
"ஆமாண்டி.. வீடு பூரா ஆளை வைச்சிக்கிட்டுத்தான் உன்னைத் தூக்கிக்கிட்டு வரனும்கிற போல.. ஆளைப் பாரு.. இந்த வள்ளியும்.. இவ புருசனும் இப்ப வந்து வேலைக்கு சேர்ந்தவங்க..."
"ஓ.. இவ புருசனும் கூட இருக்காரா..?" ராதிகா நிம்மதியானாள்...
"பின்னே.. தனியாத்தான் வேலை செய்கிறான்னு நினைச்சிட்டயா..? ஆனாலும் உனக்கு என்மேல் இவ்வளவு உசத்தியான அபிப்ராயம் இருக்கக் கூடாது..."
"அது அப்படித்தான்..."
ராதிகா வெட்டும் பார்வையொன்றைப் பார்க்க.. பாலமுரளி எழுந்து கொண்டான்.. அவனுக்கு அவள் வேண்டும் போல இருந்தது...
"வீட்டுக்குப் போகலாமா..?" ராதிகா ஆவலுடன் எழுந்து நிற்க...
"நீ அதிலேயே குறியாய் இரு.." என்று எரிந்து விழுந்தான்..
"இப்ப என்னதான் செய்யனும்கறிங்க..?"
"மாடிக்கு வா.."
"எதுக்கு..?"
அவள் விழிகளில் பிரதிபலித்த ஜாக்கிரதை உணர்வைக் கண்டவனின் எரிச்சல் அதிகமாகியது..
"எதுக்காக அலட்டிக்கறவ..? உன்னைக் கடிச்சா தின்னப்போறேன்..?"
"அதுவந்து.."
"என்னவோ.. உன்மேல என்விரல் நகம்கூட பட்டதில்லைபோல இந்த பில்ட் அப்பை கொடுக்கக் கூடாதுடி..."
"ஆரம்பிச்சுட்டிங்களா..? மாடிக்குத்தானே வரனும். வர்றேன்.. போதுமா..."
அவள் விடுவிடுவென்று மாடியேறினாள்.. அவளது பின்னல் ஆடியதை ரசித்தவன்.. மனமும் அதனுடன் சேர்ந்து ஆடியது...
'ரதின்னா.. இவதான் ரதி...'
அவளது பின்னழகை ரசித்தபடி அவள் பின்னாலேயே அவன் மாடியேறினான்.. அவள் திரும்பிப் பார்த்தாள்...
"என்னைச் சொல்லிட்டு.. ஐயா ஆடி.. அசைஞ்சு வர்றீங்க.."
"அதெல்லாம் வர்ற நேரத்தில கரெக்டா வந்துருவோம்ல.."
மாடியறையில் கால்வைத்தவுடன் ஏனோ.. ராதிகாவின் இதயம் குழுங்கியது.. எவ்வளவுதான் முயன்றாலும்.. பழைய நினைவுகளை அவளால் பின்னுக்குத் தள்ள முடியவில்லை...
அவள் விழிகளில் எதைக் கண்டானோ.. பாலமுரளி உதடுகளைக் கடித்தபடி அவளையே பார்த்தான்..
அவன் முகத்தில் வேதனை படர்ந்தது...
"ஸாரிடி..."
அவன் குரலில் வருத்தத்தில் தோய்ந்திருந்தது...
இதற்கு அவள் என்ன பதிலைச் சொல்வாள்.. இருக்கட்டும் பரவாயில்லையென்றா சொல்ல முடியும்..?
ஜன்னலருகே சென்றவள் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தாள்..
இந்த ஜன்னல்கள் மட்டும் இல்லாவிட்டால்.. அவளுக்கு பைத்தியம் பிடித்து விடக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது...
எல்லையில்லாமல் பரந்திருக்கும் இந்த வான்வெளி ஏதோ ஒரு வகையில் அவளுக்கு ஆறுதலாக இருப்பதாக அவள் உணர்ந்தாள்...
"ராது..."
அவன் கரங்கள் அவள் தோளில் பரவிப் படர்ந்தன...
"ப்ளீஸ்.." அவள் விலக முயன்றாள்...
"ஏன் ராது.." அவனது வெப்ப மூச்சு அவளின் கன்னத்தை சுட்டது...
"இன்னும் இரண்டே நாளில் நமக்கு நிச்சயதார்த்தம்..."
அவனது பரவிப் படர்ந்த கைகளை நிறுத்த முயன்றபடி அவள் சொன்னாள்...
"இருக்கட்டுமே.." அவன் கேட்பதாக இல்லை...
அவன் கைகள் அவள் கைகளுக்குள் அடங்க மறுத்தன...
"இரண்டே வாரத்தில் நமக்கு கல்யாணம்..."
அவனது பிடியில் மூச்சுத்திணற.. அவள் திணறிப் பேசினாள்...
"தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்கு தள்ளி விடறவ.."
அவன் நியாயம் வேறாக இருந்தது.. அவனின் வேட்கையான ஆக்ரமிப்பை அவள் அறிந்திருக்கிறாள்.. அன்று அவன் தொட்டபோது இருந்த வேட்டைக்காரனின் வெறி.. இன்று அவனிடம் காணப்படவில்லை... ஆனால்.. அந்த வேட்கை மட்டும் அப்படியே இருந்தது...
"இதுக்குத்தான்... இரண்டு நாளுக்கு முன்னாலேயே சென்னைக்கு வந்து நிற்கறிங்களா..?"
அவனுக்குள் புதையுண்டு கொண்டே.. அவள் கேட்டாள்...
"ஆமாம்ன்னு சொன்னா.. என்னடி செய்வ..?"
அவனது அராஜகம் அதிகமானது.. விலக முயன்றவளை இழுத்துக் கொண்டு.. கட்டிலில் சரிந்தான்.. அவளது கூந்தலில் முகம் புதைத்துப் புரட்டி.. அவள் முகத்தோடு முகம் வைத்தான்.. தன் வயமிழந்த ராதிகா.. மெல்ல.. மெல்ல.. எதிர்க்க மறந்து.. அவனுடன் ஒன்றிப் போனாள்...
எதிர்ப்பை நிறுத்தி விட்டவளின் நிலையைப் புரிந்து கொண்டவனின் முகத்தில் திருப்தியான சிரிப்பு வந்தது... அவனுடன் பரிபூரணமாக கலந்து விட்டவளை ஆசையுடன் முத்தமிட்டான் பாலமுரளி...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -60
அம்மம்மா.. கேளடி தோழி...! -60
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-60.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-60.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy