அம்மம்மா.. கேளடி தோழி...! -59

59 உனைப் பார்க்கும் நொடியில்தான்... உயிர்க்கிறேன் இவ்வுலகில்தான்... அன்பு கூட ஒரு தளைதான்... ஒருவரை நேசிப்பதும்.. ஒருவரால் நேசி...


59
உனைப் பார்க்கும் நொடியில்தான்...
உயிர்க்கிறேன் இவ்வுலகில்தான்...

அன்பு கூட ஒரு தளைதான்...
ஒருவரை நேசிப்பதும்.. ஒருவரால் நேசிக்கப் படுவதும்.. ஏதோ ஒருவிதத்தில் நம்மை கட்டுப்-படுத்துகிறது...
அன்புக்கு நான் அடிமை..!
சொல்வதற்கும்.. கேட்பதற்கும்.. அழகாகத்தான் இருக்கும்.. ஆனால்.. அதில் வீழ்ந்து விடும்போதுதான் அதுவரை விட்டு சிறகடித்துக் கொண்டிருந்தவர்கள்... சிறைபட்டு விடுவதை உணர்வார்கள்...
அன்பு ஒருவரை அடிமைப் படுத்தி விடும் வல்லமை கொண்டது.. சுதந்திரமாக செயல்பட விடாதது.. கட்டுப்படுத்துவது.. கலங்க வைப்பது.. கதற வைப்பது.. சிறகடிக்க விடாமல் சிறகை ஒடித்துப் போடுவது...
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால்.. இது அத்தனையையும் நேசிப்பவர்கள் சுகமான ஒரு வேதனையோடு விரும்பிச் செய்வார்கள்.. விரும்பி இசைவார்கள்...
ராதிகா தளைகளற்று இருந்தாள்.. சுதந்திரவானில் சிறகடித்துக் கொண்டிருந்தாள்.. அவள் இருக்குமிடத்தில் கலகலப்பும்.. சிரிப்பும் மட்டுமே குடிகொண்டிருக்கும்...
ஒரு பின்மாலையும்.. முன்னிரவும் சந்தித்துக் கொண்ட அற்புதமான பொழுதில் அவள் பாலமுரளியைச் சந்தித்தாள்.. அவளையறியாமல் அவள்மனம் அவன் பின்னால் சென்று விட்டது..
அந்த நொடியிலிருந்து அவனுக்கு அவள் அடிமையானாள்.. அவளது காதலை அவன் சந்தேகித்தான்... அவளது நடவடிக்கைகளை குற்றம் சாட்டினான்.. அவளது இயல்பையே மாற்றிச் சொன்னான்...
அவள் சீற்றம் கொள்ளவில்லை.. பொங்கி எழவில்லை... எப்படி நீ என்னை குறைவாக எடை போடலாம் என்று சண்டை போடவில்லை..
அதற்குப் பதில் அவனது கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்று பரிதவித்தாள்.. அவனின் பாராமுகம் கண்டு ஏங்கினாள்.. அவனுக்கு விளக்கம் சொல்ல அவனைத் தேடினாள்..
அவள் அனுமதியில்லாமல் அவன் அவளைத் தொட்டு முத்தமிட்டான்..
அவள் பதறி விலகவில்லை.. மாறாக.. மயங்கிப் போனாள்... குழைந்து போனாள்.. அவனுடன் இசைந்து போனாள்...
அவனை விலக்கித் தள்ளி அவன் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை விடுவதற்குப் பதிலாக.. அவன் மார்பில் சாய்ந்து இதம் கண்டாள்... அதன்மூலம்.. அவளின் அவன் மீதான விருப்பத்தை அவனுக்கு உணர்த்தினாள்...
அவன் அவளை கடத்திக் கொண்டு போய் வேட்டையாடிய போது.. எதிர்த்துப் போராட பலமில்லாமல் ஏன் தொய்ந்து விழுந்தாள்...?
அவ்வளவு பலவீனமானவளா அவள்..? இல்லை.. அவள் ஒரு போராளி.. அவனைத்தவிர வேறு ஒருவனின் நிழல்கூட அவள்மீது பட்டிருக்க முடியாது...
அவள் வேட்டையாடப் படும் மானல்ல.. பெண்புலி..!
இருந்தும் அன்று அவனால் வேட்டையாடப் பட்டாள்.. ஏன் அவ்வாறு நிகழ்ந்தது..? விருப்பமானவன் தொடும்போது எதிர்த்துப் போராட முடியாமல் அவளது உடலும் மனமும் அவனைத் தேடியது.. அவன் ஒட்டி உறவாடிய போத கலந்து விடத்துடித்தது...
அவனுக்காக ஏங்கியவள் அவள்.. அவன் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று துடித்தவள் அவள்.. அவனது இருப்பிடத்திற்கு போகும் வகையறியாமல் தவித்தவள் அவள்...
கவர்ச்சிகரமான அழகோடு இருக்கும் கோடிஸ்வரனான சங்கர் அவள்மீது ஆசைகொண்டான்.. அவள் பாலமுரளியின் மீது மட்டுமே ஆசைப்பட்டாள்.. அவள் போகுமிடமெல்லாம் சங்கர் நிழலாகத்தொடர்ந்து தன் காதலை வலியுறுத்தினான்.. பாலமுரளியின் நினைவில் அவள் அதை மறுத்தாள்.. அவன் பெண் கேட்டே அவள் வீட்டுப் படியேறிவந்து விட்டான்.. அந்த திருமணத்தைக் குலைக்க ராதிகா திட்டம் போட்டாள்..
இவை அத்தனையும் அறியாத பாலமுரளி அவள் மேல் கோபம் கொண்டு கடத்தி அவளது விருப்பமில்லாமல் தொட்டு விட்ட போதும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை...
அவனது எண்ணப்படி அவன் காலில் விழுந்து கதறாமல்.. அவளது இயல்புப்படி... அவளைத் தேடி அவனை வரவைத்தாள்.. அவள் நினைத்தபடி அவனுடனான திருமணத்தை பேசி முடித்தாள்..
அவனும் அவளது கட்டளைக்கு இணங்கி பெண் கேட்டு வந்தான்.. திருமணமும் நிச்சயம் ஆகிவிட்டது.. இருந்தும் இன்னும் அவளால் அவளுடைய சிரிப்பை மீட்க முடியவில்லையே.. அது ஏன்..?
ராஜேஸ்வரியின் மனத்தாங்கலின் மையத்தில் அல்லவா அவளது திருமணம் முடிவு செய்யப் பட்டிருக்கிறது..?
'இதுதான் என் விதியா..?'
ராதிகா மனதுக்குள் மறுகினாள்.. அவளுடைய காதலை அவள் காப்பாற்றி விட்டாள்... அவளது
கற்பை சொந்தமாக்கிக் கொண்டவனையே அவளுக்கு சொந்தமாக்கிக் கொண்டாள்.. ஆனால் அம்மாவின் அன்பு...?
வாடிய முகத்துடன் கோவில் வாசலை மிதித்தவளைப் பார்த்த பாலமுரளியின் புருவங்கள் சுருங்கின...
"ஏன்.. என்னவோ போல இருக்க..?" என்று விசாரித்தான்...
"ஒன்னுமில்லையே..." அவன் முகம் பார்க்காமல் சமாளித்தாள் ராதிகா...
தீபாதரனை ஒளியில் பெருமாளை சேவித்த போது அவள் கண்கள் கலங்கி.. நீர்ச்சரம் கன்னத்தில் இறங்கியது...
'என் மனதில் ஏன் இத்தனை பாரம் வைக்கிறாய் கிருஷ்ணா..? நான் இதைத் தாங்குவேனா..? மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பு தொலைந்து போய் விட்டதே.. அதைத் தேடித்தேடி என் நாள்களை தொலைக்க வேண்டுமா..' அவள் மனம் அரற்றியது..
தாயாரை சேவித்து விட்டு.. மனமுருக வேண்டுதல்களை அவள் பாதங்களில் சமர்பித்து விட்டு.. பிரகாரத்தை வலம் வந்தபோது.. பாலமுரளி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்...
கலங்கிய விழிகளை அவன் பார்த்து விடாமலிருக்க அவள் முகத்தை திருப்பியபோது.. வலுக்கட்டாயமாக அவள் முகத்தைப் பிடித்து தன்பக்கமாக திருப்பினான்...
"விடுங்க..." அவள் திமிற முயன்றாள்.. முடியவில்லை...
"எதுக்கு இந்த அழுகை..?" அவன் அதட்டினான்...
அதற்கு மேல் தாள முடியாதவளாக அவள் கேவினாள்...
"ஏய்ய்.. ராதிகா.. என்ன ஆச்சுடி..?"
அவன் சட்டென்று அவள் கைபிடித்து.. அருகிலிருந்த மண்டபத்தின் படிக்கட்டில் அமர வைத்தான்..
"அம்மா.. என்கூடப் பேசறதில்ல.." அவளது கேவல் தொடர்ந்தது...
அவனுக்கு அவள் மனம் புரிந்தது.. அவள் கைவிரல்களைப் பிடித்து இதமாக நீவியபடி.. மெதுவான குரலில் அவளை சமாதானப் படுத்தும் விதத்தில் பேசினான்...
"வலிக்காம ஊசி போட முடியுமா..? வைத்தியம் பார்க்காமல் நோய் குணமாகுமா..? சொல்லு.. நம்ம கல்யாணம் நடக்கனும்ன்னா... நான் அந்த மாதிரி பேசித்தானே ஆகனும்..?"
"அதுக்காக அம்மா மனசை கஷ்டப் படுத்திட்டேன்.."
"நாம என்ன வேணும்னேவா அதைச் செய்தோம்..? வேற வழியில்லடி.. உங்க அம்மாவுக்கு எதனாலோ.. என்னைவிட அந்த சங்கர் உசத்தியானவன்னு தோணிப் போயிருச்சு.. அந்த நிலைமையில நான் அப்படிப் பேசலைன்னா நம்ம கல்யாணப் பேச்சு.. இந்த அளவுக்கு வந்திருக்காதுடி.. என்பக்கமும் நெருக்கடி இருக்கு.. கொஞ்சம் அதையும் நினைச்சுப் பாரு.. அக்காவுக்கு இந்தக் கல்யாணத்தில பிடித்தமில்ல..."
"என்மேலயே அவங்களுக்கு பிடித்தமில்ல..."
"நீயாய் ஏன் அப்படி நினைச்சுக்கறே..? அதுக்கு ஷோபாவை எனக்கு கட்டி வைக்கனும்னு ஒரு எண்ணம்.."
"ஓ.." ராதிகாவின் வாடிய முகம் மேலும் வாடிவிட்டது...
"இப்ப எதுக்கு உம்முன்னு முகத்தை வைச்சுக்கறவ..?" பாலமுரளிக்கு கோபம் வந்துவிட்டது...
"உங்க அக்கா உங்களுக்காக வேற பொண்ணைப் பார்ப்பாங்க.. அந்தக் கதையைக் கேட்டுட்டு நான் '' ன்னு சிரிச்சுக்கிட்டே இருக்கனுமாக்கும்..?"
"ஏய்ய்.. அதுக்குத்தான் எண்ணம்ன்னு சொன்னேன்.. என் எண்ணம்தான் உன் மேலன்னு ஆகிப் போச்சே.. அப்புறமும் எதுக்கு இந்தச் சிலுப்பு சிலுப்பற..?"
"அப்ப நீங்களும்.. உங்க அக்காவும் கூட்டணி போட்டுக்கிட்டு அந்த ஷோபாவைப் பத்திப் பேசுவீங்க.. நான் ஆஹான்னு கேட்டுக்கிட்டே இருக்கனுமாக்கும்..?"
"யாருடி இவ.."
"அது கூடத் தெரியலையா..? பெருமாளே..! நீதான் இதைக் கேட்கனும்..."
"இப்ப எதுக்கு பெருமாளை தொந்தரவு பண்ற..? அவருக்கு ஆயிரம் சோலி இருக்கு.. அந்த நியாயத்தை என்கிட்டக்கேளு.. நான் உனக்கு நியாயம் வழங்கறேன்.."
"வழங்கிட்டாலும்..."
ராதிகா முகவாயை தோளில் இடித்துக் கொண்டு.. முகம் திருப்பிக் கொண்டாள்.. அவளது கண்ணீரும்.. சோகமும் காணாமல் போய் விட்டதை கண்டு கொண்டவனுக்கு லேசாக சிரிப்பு வந்தது.. ஷோபாவின் மீதான அவளின் பொறாமை கண்டு.. அதீதமான பிரியமும் வந்தது...
"அவ பேச்சை ஏண்டி இழுக்கற..?"
"நானா இழுத்தேன்..? உங்க அக்காதான் இழுக்கறாங்க..."
"இப்ப உன்கூட உட்கார்ந்திருக்கிறது யாரு..? நானா.. இல்லை.. என் அக்காவா..?"
இந்தக் கேள்வியில் முகம் சிவந்த ராதிகா உதட்டைக் கடித்துக் கொண்டு பின்னலை முன்னால் விட்டு.. அதன் நுனியை விரல்களால் அளந்து கொண்டிருந்தாள்...
எப்போதும் சுடிதாரில் இருப்பவள் அன்று சேலையில் இருந்தாள்.. அவளது நீண்ட பின்னலும்.. எழிலே வடிவான தோற்றமும் அவனைக் கட்டி இழுத்தன..
"ராது..."
"ம்ம்ம்..."
"அசத்தறடி..."
"ம்ம்ம்..."
"அடச்சீ... வாயைத்திறந்து பேசு... போனில பேசினா.. பக்கத்தில ஆளிருக்காங்கன்னு சொல்லி.. ஊம் கொட்டற.. இப்ப இங்கே யாரிருக்கா..? உன்னோட ஆளு மட்டும்தான இருக்கேன்.. என் முகம் பார்த்து பேசறதுக்கு என்ன..?"
'உன் ஆள்..' என்ற அந்த வார்த்தையில் மயங்கிப் போனாள் ராதிகா... அந்த மயக்கத்துடன் லேசாக விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள்.. அவள் விழிகளில் தெரிந்த அந்த அதீதமான மயக்கத்தைக் கண்டவனின் கண்கள் மின்னின...
மாலை நேரத்தின் கோவிலின் சூழல் அவள் மனதை அமைதிப் படுத்தி விட்டிருந்தது.. 'என் மனபாரம் அகற்று பெருமாளே...' என்று வேண்டிக் கொண்ட பக்தையின் வேண்டுகோளை அந்த பரந்தாமன் நிறைவேற்றி விட்டான்... அவள் மனதில் பாரத்தை அகற்றி.. காதலை அமர்த்தி விட்டான்...
களை பொருந்திய முரளியின் முகம் அவள் மனதை அலைபாய வைத்தது.. காற்றில் பரவிய அவனது முன்னுச்சி முடியில் விரல் விட்டுக் கோத அவள் விரும்பினாள்.. அவனது அண்மை உணர்த்திய நெருக்கம் அவள் மனதில் ஜிலுஜிலுப்பை உண்டாக்கியது.. அவன் மீது வந்த ஒர்விதமான ரம்யமான வாசனையை அவளது நாசி உணர்ந்தது.. அவனது ஆண்மையின் கம்பீரம் அவளை ஆகர்ஷித்தது...
பாலமுரளி மாநிறத்தில் இருந்தான்.. ஆனால்.. அவனிடம் வார்த்தைகளில் வடிக்க இயலாத வசீகரம் குடிகொண்டிருந்தது.. ஒரு கை தேர்ந்த சிற்பி வடித்தெடுத்த சிலையைப் போன்று அவன் வடிவம்.. செதுக்கி வைத்ததைப் போன்றதொரு அமைப்புடன் அவளை அலைக்கழித்தது...
அவன் கிராமத்து வட்டார மொழியில் பேசினான்.. அவன் செயல்களிலும்.. பேச்சிலும் தெரிந்த முரட்டுத்தனத்தில் தன்னை அவள் இழந்து கொண்டிருந்தாள்... அவனது அதீதமான கோபம் கூட அவனது ஆண்மையின் அழகை அதிகப் படுத்துகிறது என்றே அவளுக்குத் தோன்றியது...
அவன் மீதான அவளின் ஆவலை உணர்த்தும் பார்வையை அவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்...
"என்னடி.. பேசுன்னு சொன்னா.. ஆளை முழுங்கறதைப் போல பார்த்து வைக்கிற..? இப்படிப் பார்த்துப் பார்த்துத்தானே என்னைக் கவிழ்த்த..?"
அவன் கிசுகிசுப்பாய் வினவிய போது.. அவளுக்கு ஜிவ்வென்று ஆகிப் போனது.. ஏதோ ஒர்விதமான போதை போன்றதொரு உணர்வு அவளை ஆட்கொள்ள.. அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவள் விரும்பினாள்... லேசாக நகர்ந்து.. அவன் தோள் சாய்ந்தபோது.. அவன் கரம் அவளைச் சுற்றி வளைத்தது...
"ராது.." குழைவான குரலில் அவன் அழைத்த போது.. சட்டென்று அவள் எழுந்து நடந்தாள்...
அவன் புருவங்கள் சுருங்கினான்.. கோபத்துடன் இரண்டே எட்டில் அவளை அடைந்தவன்.. முறைத்தான்.. வழிமறித்தான்...
ஆறடி உயரத்தில்.. தேக்குமரம் போல நீண்ட கைகால்களுடன்.. பரந்து விரிந்த மார்புடன்.. வலுவான புஜ அமைப்புடன்.. கட்டுமஸ்தான தோற்றத்துடன்.. அவன் அவளை வழி மறித்தபோது.. அவளுக்குள் பேரலை ஒன்று எழுந்தது...
"வழியை விடுங்க.."
"என்னன்னு சொல்லு..."
"காருக்கு வாங்க சொல்கிறேன்..."
"இப்பவே சொல்லு..."
"முடியாது..."
அவள் பிடிவாதமாக நடக்க.. அவன் கோபத்துடன் கூட நடந்தான்.. காரில் அவள் ஏறிய பின்பு.. ஓங்கி அவன் கார்கதவை சாத்திய வேகத்தில் அவனது கோபத்தின் பரிணாமம் தெரிந்தது...
காரைக் கிளப்பியவன்.. வேகம் கூட்ட.. ராதிகா ஆட்சேபித்தாள்...
"இப்ப எதுக்காக இவ்வளவு வேகத்தில ஓட்டறிங்க.."
"உனக்கு சொல்லனும்னு ஒன்னும் அவசியமில்லை.."
"ஹலோ.. உங்க கூட உட்கார்ந்திருக்கிறது நான்.. கேட்கத்தான் செய்வேன்..."
"உயிர்மேல அவ்வளவு பிடிப்பிருக்கிறவ என்கூட காரில் வர வேணாம்.. இறங்கி ஓடியே போயிரு..."
அவன் காரை வேகத்துடன் நிறுத்த.. அது 'கிறீச்' சென்ற சத்தத்துடன் நின்றது...
"இறங்குடி.." அவன் உறுமினான்..
ராதிகா இறங்காமல் அவன் முகம் பார்த்தாள்.. அதில் தெரிந்த கோபச்சிகப்பில் அவள் மனம் லயித்தது.. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -59
அம்மம்மா.. கேளடி தோழி...! -59
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-59.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-59.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy