அம்மம்மா.. கேளடி தோழி...! -57

57 தொட்டு விட்டு சென்று விட்டாய்.. தூக்கம் இழந்தது நான்தானே.. ? ' அம்மா..! ' பாலமுரளி மனம் நெகிழ்ந்தான்.. ராதிகாவோ.. மே...


57
தொட்டு விட்டு சென்று விட்டாய்..
தூக்கம் இழந்தது நான்தானே..?

'அம்மா..!'
பாலமுரளி மனம் நெகிழ்ந்தான்.. ராதிகாவோ.. மேகலாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டு விடும் உத்தேசத்திற்கே போய் விட்டாள்...
மகளின் மீது தாய் கொண்டிருந்த அபரிதமான பாசத்தை அறிந்தவன் பாலமுரளி.. மேகலாவுக்கு பாலசரஸ்வதியின் நலனே பிரதானமான ஒன்றாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது..
அப்படிப்பட்டவள்.. மகனுக்கு பெண் பார்க்க வந்திருக்கும் அந்தச் சூழ்நிலையில்... பெண்ணைப் பெற்றவளிடமே மகளை குறைவாகப் பேசுகிறாள் என்றால் அந்த தாய் மனதை என்னவென்று சொல்வது..?
"முதல்ல சாப்பிட்டு விடலாம்.. பசியோட பேசினா.. பலவிதமாத்தான் பேசத் தோணும்"
கடைசித் தாக்குதலை தொடுத்து விட்டு ராஜேஸ்வரி சமையலறைக்குள் சென்று விட்டாள்...
'திமிரைப் பார்.. இவங்க வீட்டு சாப்பாட்டுக்குத்தான் ஏங்கித் தவிக்கிறோமா..?'
பாலசரஸ்வதி எழுந்து கொள்ளப் போனாள்.. ராஜராஜன் ஒரு பார்வை பார்த்ததும் அடங்கிப் போய் அமர்ந்து விட்டாள்...
வரவழைத்துக் கொண்ட முக மலர்ச்சியுடன் ராஜேஸ்வரி எல்லோருக்கும் டிபன் காபியை பரிமாறினாள்.. பாலசரஸ்வதி முகத்தைச் சுளித்துக் கொண்டே அவற்றைத் தொடாமல் தள்ளி வைக்க.. மற்றவர்கள் அதன் ருசியில் ஈர்க்கப்பட்டு ஒரு கை பார்த்தார்கள்...
"டேஸ்டா இருக்கு..."
ராஜராஜன் வாய்விட்டே பாராட்டி வைத்தான்.. பாலசரஸ்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.. கணவனை விரோதமாக பார்த்து வைத்தாள்...
"நிஜமாகவே டேஸ்டா இருக்குடி.. நீ வேணா ஒரு துளியெடுத்து டேஸ்ட் பண்ணிப்பாரேன்..."
அவளது கோபம் புரியாமல் அவன் சொல்லிவைக்க..
"எனக்குப் பசியில்லை.." என்றாள் பாலசரஸ்வதி...
"எங்களுக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு... நிச்சயத்துக்கும்... முகூர்த்தத்திற்கும் நாள் பார்த்துரலாமா..?"
மேகலா திருமணப் பேச்சை ஆரம்பித்து விட்டாள்.. 'அப்பாடா...' என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள் ராதிகா...
'இனி பயமில்லை...'
அவள் நினைத்தது நடக்கவில்லை...
"அதுக்கென்னங்க.. பார்த்துட்டாப் போச்சு.." என்று இணக்கமாக பேசிய கிருஷ்ணமூர்த்யை
"கொஞ்சம் பொறுங்க.." என்று இடை மறித்தாள் ராஜேஸ்வரி...
'சொன்னேனில்ல..' ராதிகா கண்களால் பதற.. பாலமுரளி இமைகளை மூடித்திறந்து அவளை அமைதிப் படுத்தினான்...
"என்ன சம்பந்தியம்மா..? நீங்க ஏதோ சொல்ல நினைக்கறிங்க போல..." மேகலா ராஜேஸ்வரியின் முகம் பார்த்தாள்...
"ஆமாங்க... நான் சொல்லனும்.." ராஜேஸ்வரியின் முகத்தில் கடினத்தன்மை வந்திருந்தது...
"தாராளமாச் சொல்லுங்க.. நீங்க பெண்ணைப் பெத்த தாய்.. உங்களுக்கில்லாத உரிமையா..?"
"ராதிகாவை ஏற்கனெவே பொண்ணு பார்த்துட்டுப் போயிருக்காங்க..."
"அப்படியா... முரளி இதைச் சொல்லவே இல்லையே..."
மேகலா கேள்வியுடன் மகனைப் பார்த்தாள்.. அவன் நிதானமாக தாயின் கேள்விக்கு பதில் சொன்னான்...
"ராதிகா அந்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லலைம்மா..."
மகன் சொன்னதைக் கேட்டதும்.. மேகலா ராஜேஸ்வரியின் பக்கம் திரும்பினாள்...
"பொண்ணுன்னு இருந்தா ஆயிரம் பேர் கேட்டு வருவாங்க.. அதைப் போயா பெரிசா சொல்றிங்க..? பெண்ணுக்கு சம்மதமில்லையாமே..."
ராஜேஸ்வரி சொன்னதை எதுவுமேயில்லாததாக மேகலா ஆக்கிவிட... அதற்கெல்லாம் அயர்வேனா என்று விடாமல் பேச்சைத் தொடர்ந்தாள் ராஜேஸ்வரி...
"இருக்கலாம்ங்க.. ஆனாலும் கூட... தூரத்தில் இருக்கிற பலாக்காயை விட... பக்கத்தில இருக்கிற கலாக்காய் உசத்தியில்லையா..?"
'இந்தப் பழமொழியை எதுக்கு இந்தம்மா சொல்லுது..' மேகலா புரியாமல் ராஜேஸ்வரியை பேச விட்டாள்...
"அப்படித்தாங்க.. தென்காசியில இருக்கற தேனூத்தைவிட.. இங்கே சென்னையிலேயே இருக்கிற மாப்பிள்ளை எங்களுக்கு உசத்தியாப்படுது..."
ராஜேஸ்வரி இதைச் சொல்லிய போது.. ராதிகா கண்களை மூடித் தன்வேதனையை வெளிப்படுத்த... கிருஷ்ணமூர்த்தியோ வெளிப்படையாக...
"த்ச்சு.." என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்... அந்த இரண்டையும் ஊன்றிக் கவனித்த மேகலா...
"எங்களுக்குன்னு நீங்க கூட்டுச் சேர்க்கறிங்க.. ஆனா.. உங்ககூட பெண்ணும்.. பெண்ணைப் பெற்ற அப்பாவும் கூட்டுச் சேர தயாரா இல்ல போல இருக்கே.." என்று சொல்லிவிட்டாள்...
"அவங்களுக்கு என்னங்க தெரியும்..? அவங்கவங்க மனசுப்படி நடந்தா அது குடும்பமா இருக்காதுங்க..."
ராஜேஸ்வரி எரிச்சலுடன் கணவரைப் பார்த்தாள்...
"அதுக்காக பெத்த பிள்ளைக மனசுப்படி நடக்காம விட்டாலும் அது குடும்பமா இருக்காது.." மேகலா பொறுமையாக பதில் சொன்னாள்...
மேகலா ராஜேஸ்வரியுடன் வாதாடிக் கொண்டிருக்க பொறுக்க முடியாமல் பாலசரஸ்வதி குறுக்கிட்டாள்...
"ஏம்மா.. அவங்களுக்கு இஷ்டமில்லைன்னா நீங்க எதுக்காக வற்புறுத்தறிங்க..? எழுந்திருடா முரளி.. உனக்கு ஆயிரம் பொண்ணு காத்திருக்கு.. இதுகளை மதிச்சு வீடு தேடி வந்தியே.. உன்னைச் சொல்லனும்டா.. தராதரம் தெரியாதவங்க..."
அக்காவின் திருமணத்துக்காக வாயடக்கி நின்றிருந்த கீதா வாயைத் திறந்தாள்.. சுந்தரின் காதில் முணுமுணுத்தாள்...
"ஆஹா.. இந்த லேடி எதுடா சாக்குன்னு காத்திருந்தாங்க... நம்ம வீட்டு லேடி ஹிட்லர் லட்டு.. லட்டா சான்ஸை அள்ளிக் கொடுக்கறாங்களேடா சுந்து.. அந்த லேடியும் அதை லபக்கு.. லபக்குன்னு  பிடிச்சுக்கிறாங்க.. என்னடா அநியாயம் இது..?"
"ஆமாம் கீது.. இது எங்கே போய் முடியுமோ.. தெரியலையே..."
"நிச்சயமாய் ராதிகாவின் கல்யாணத்தில போய் முடியாதுன்னு எனக்குத் தோணுதுடா.. அது ரொம்பவும் சிக்கல்தான்..."
"ஏண்டி வாய் வைக்கிற..?"
"நானாடா வாய் வைக்கிறேன்..? மாப்பிள்ளையோட அக்கா இல்ல வாய் வைக்குது..?"
"நம்ம வீட்டு நாட்டாண்மை மட்டும் வாய் வைக்கலையா..?"
அவர்களுக்குள் சன்டை ஆரம்பமாக.. பாலமுரளி களத்தில் இறங்கினான்.. முதலில் பாலசரஸ்வதியின் பக்கம் திரும்பினான்..
"அக்கா.. சும்மாயிரு..." என்று தமக்கையை அதட்டினான்...
"என்னை ஏண்டா அதட்டி வைக்கிற..? உனக்குப் பொண்ணு கொடுக்க கசக்குதுன்னு இந்தம்மா சொல்றாங்க... இதைக் கேட்கத்தான் எங்களை திருநெல்வேலியில இருந்து வர வைச்சியா..?"
"முரளி.. எனக்கும் சரஸ் சொல்கிறதில ஒரு நியாயம் இருக்கிறதா மனசில படுது.. அவர்களுக்கு விருப்பமில்லைன்னா... நாம ஏன் இவ்வளவு தூரம் அலையனும்..? நம்ம ஸ்டேட்டஸையும் பார்க்கனுமில்ல..."
அதுவரை மனைவியை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த ராஜராஜன் மனைவியின் பக்கம் சாய்ந்து விட.. ராதிகா கண்ணீர் விடவே ஆரம்பித்து விட்டாள்.. அதை மேகலாவும் பார்த்தாள்.. முரளியும் பார்த்தான்...
"என்னத்த மாமா.. நியாயத்தைக் கண்டுட்டிங்க... பெண்ணைக் கொடுக்க மாட்டேன்னு இவங்க சொல்லிட்டா ஆச்சா..? நான் வான்னு சொன்னா இந்த நொடியே ராதிகா என் பின்னாலே வந்து விடுவா... சொல்லவா..? என்ன நடக்குதுன்னு செய்து காட்டவா..?" பாலமுரளியின் கோபக் குரலில் சவால் இருந்தது...
"முரளி..!" ராஜராஜன் திகைத்தான்...
"நாங்க காதலிக்கிறோம் மாமா.. முறைப்படி பெண் கேட்டு வந்திருக்கேன்.. கொடுத்தா.. அவங்களுக்கு நல்லது.. கொடுக்கலைன்னா.. அவங்களை மீறி அவங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு பேச்சு வரப்போகுது.. அப்புறம் அவங்க இஷ்டம்..."
"வந்து விடுவாளா..? என் பொண்ணு அப்படி வந்து விடுவாளா...?" ராஜேஸ்வரி பதறினாள்...
"வரமாட்டான்னு அவளைச் சொல்லச் சொல்லுங்க.. பார்ப்போம்..." பாலமுரளி உறுதியான குரலில் கேட்டான்...
"ராதிகா..." ராஜேஸ்வரி அதட்டினாள்...
ராதிகா அசையவில்லை.. இல்லையென்று சொல்லவில்லை... எதுவாக இருந்தாலும் என் வீட்டார் பேச்சைத்தான் கேட்பேனென்று வசனம் பேசவில்லை... இத்தனைக்கும் மேலாக பாலமுரளியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை... கல்லைப் போல உறைந்திருந்தாள்...
ராஜேஸ்வரி அதிர்ந்து போனாள்.. இந்த ராதிகா அவளுக்குப் புதியவளாக இருந்தாள்.. அவள் பெற்று வார்த்த ராதிகா இப்படி ஒருநாளும் இருந்ததில்லையே...
பாலமுரளியின் முகத்தில் தெரிந்த வெற்றிக்குறி ராஜேஸ்வரியை பாதித்தது...
"மாமா... நீங்க கொல்லுங்க.. மேற்கொண்டு என்ன செய்யலாம்..? நீங்க எங்க வீட்டைப் பார்க்க வருகிறீங்களா..?"
"வேண்டாம்ன்னு சொல்லுங்க..." ராஜேஸ்வரி மறுத்து விட்டாள்...
"எப்ப என் பொண்ணு இவரை நம்பி இவர் பின்னாலே போய் விடுவான்னு பேச்சு வந்துருச்சோ.. அதுக்கு மேல அவர் வீட்டையும் ஊரையும் பார்த்து நமக்கு என்ன ஆகப்போகுது..? மாப்பிள்ளையோட அம்மா எந்த நாளைச் சொல்கிறாங்களோ.. அந்த நாளில் பெண்ணை அழைத்துக்கிட்டுப் போய் அவங்களிடம் ஒப்படைத்து விடுவோம்.. அதுக்கு மேல பேச என்ன இருக்கு...?"
தாயின் துயரத்தைக் காணச் சகிக்கவில்லை ராதிகாவுக்கு...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -57
அம்மம்மா.. கேளடி தோழி...! -57
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-57.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-57.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy