அம்மம்மா.. கேளடி தோழி...! -55

55 உன்னோடு நானிருக்கும்.. மணித்துளிகள் என்று வரும்.. ? நெய் மணம் நாசியைத் துளைக்க.. ஆசையுடன் அந்த வாசனையை நுகர்ந்து.. "ம்ஹா....


55
உன்னோடு நானிருக்கும்..
மணித்துளிகள் என்று வரும்..?

நெய் மணம் நாசியைத் துளைக்க.. ஆசையுடன் அந்த வாசனையை நுகர்ந்து.. "ம்ஹா.." என்று இழுத்து மூச்சு விட்டாள் கீதா...
"ம்ஹீம்... இப்படி வாசம் பிடிக்கிறதுக்கு பதிலா உள்ளே போய் ஒருபிளேட் கேசரியை மொக்கிட்டு வர வேண்டியது தானே..."
நெய் வழியும் கேசரியை வாய்க்குள் தள்ளியபடி கேட்டான் சுந்தர்...
"டிரை பண்ணிப் பார்த்துட்டேண்டா சுந்தர்.. லேடி ஹிட்லர் என்னை கிச்சன் பக்கமே சேர்த்துக்க மாட்டேங்கறாங்க..."
"அம்மா காரணமில்லாம உன்ன தள்ளி வைக்க மாட்டாங்களே..."
"எதை வைச்சுடா அப்படிச் சொல்ற...?"
"நாட்டாமை தீர்ப்பு நியாயமா இருக்கும்ங்கிற நம்பிக்கைதான்.. வேறென்ன..?"
"அது ஒன்னுமில்லடா சுந்தர்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே அம்மா பஜ்ஜியை சுட்டு அடுக்கிக்கிட்டு இருந்தாங்களா.."
"அதைச் சுட.. நீ போனயாக்கும்.."
"கரெக்டா கண்டு பிடிச்சிட்டயே.. எப்படிடா..?"
"கூடப்பிறந்தது புத்தி எனக்குத் தெரியாதா..? நீ பஜ்ஜிய சுடவா போயிருக்கப் போகிற.. சுட்ட பஜ்ஜியை சுட்டு வாய்க்குள்ள போடத்தான் போயிருப்ப.. அப்புறம் என்னதான் ஆச்சு..? பஜ்ஜியை உள்ளே தள்ளினயா இல்லையா...?"
"எங்கேடா.. அதுக்குள்ள வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனே..."
"யாருகிட்ட..?"
"வேற யாருகிட்ட.. எல்லாம் நம்ம லேடி ஹிட்லர் கிட்டத்தான்..."
"என்ன சொன்ன..?"
"அதையேண்டா கேட்கிற..."
"சரி.. கேட்கலை... விடு..."
"அடப்பாவி.. ஒரு பேச்சுக்கு புலம்பினா.. இதான் சாக்குன்னு என்னைத் தனியாய் புலம்ப விடுவியா..?"
"அதுக்காக ஒருவார்த்தையில சொல்ல வேண்டியத.. நீ ஏழு ஊரு.. ஏழு கடல்.. ஏழு மலையைத் தாண்டி.. சுற்றி வளைச்சு சொல்லி வைப்ப.. நான் பொறுமையா 'ஊம்' கொட்டிக் கேட்கனுமாக்கும்.."
"கூடப் பிறந்தவனாடா நீ..."
"போதும்.. கண்னைக் கசக்காதே.. நீ எவ்வளவுதான் கசக்கினாலும் ஒத்தப் பொட்டு கண்ணீர் உன் கண்ணில வரப்போறதில்ல.. வீனா எதுக்கு பிலிம் காட்டற... விசயத்துக்கு வா..."
"ஆனாலும் நீ ரொம்ப அழும்புடா.. நான் பஜ்ஜியைத் தூக்கத்தான்.. கிச்சன் பக்கம் போனேன்..."
"மறந்து போய் அம்மாவைத் தூக்கிட்டியா..."
"வேணாண்டா சுந்தர்.. எனக்கு நல்லா வந்திரும் வாயிலே..."
"ஹை.. இது அம்மாவோட பேவரிட் டயலாக்காச்சே.. பஜ்ஜிக்கு பதிலா அம்மாவோட டயலாக்கை சுட்டுட்டியா..? அதனாலேதான் நம்ம வீட்டு நாட்டாமை உன்னைக் கிச்சனை விட்டுத் தள்ளி வைச்சிட்டாங்களா..?"
"ஏண்டா இந்த பாடுபடுத்தற..?"
"மூக்காலே அழுகாம விசயத்தை சொல்லித் தொலை... தேவையில்லாம மொக்கை போட்டா இப்படித்தான் பதில் மொக்கையை நான் போட வேண்டியிருக்கும்.. இந்த மொக்கை போதுமில்ல..."
"போதும்டா சுந்தர்.. இதுக்கு மேலே நான் தாங்க மாட்டேன்.. நான் பஜ்ஜியைத் தூக்கப் போனேனா..?"
"அடச்சீ.. காக்காகூட பாட்டி சுட்ட வடையை ஈஸியாத் தூக்கிருச்சு.. நானும் அப்போதிருந்து பாக்கறேன்.. நீ அம்மா சுட்ட பஜ்ஜியை தூக்குவேனான்னு அடம் பிடிக்கற.. இந்தக் கதையைக் கேட்க என்னால முடியாது சாமி.. நீ ஆளை விடு..."
"எங்கேடா சுந்தர் போற..?"
"உன் கண்ணில படாம ஒளிஞ்சுக்கப் போறேன்..."
"சுந்தர்..."
"அம்பேல்..."
மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி... தடதடவென்று ஏறிவந்து மேலே மோதிய மகனைப் பிடித்து நிறுத்தினார்...
"எதுக்குடா இப்படி ஓடிவர்ற..?"
"குட்டிப் பிசாசு.. பஜ்ஜி சுட்ட கதையைச் சொல்லி என்னை டார்ச்சர் பண்ணுதுப்பா..."
"யாரைச் சொல்ற..? ராதிகாவையா..?"
"அது பெரிய பிசாசுப்பா... இது அதற்கடுத்த பிசாசு.. குட்டிப் பிசாசு..."
"கீதாவைச் சொல்றயா..?"
"அதேதான்..."
"ஏண்டா.. அக்காக்களை பிசாசுன்னு சொல்லலாமா..?"
"ஏம்ப்பா.. அப்படிச் சொன்னா பிசாசு கோவிச்சுக்குமா...?"
சிரிக்காமல் கேட்ட மகனிடம் புத்திமதி சொல்லிப் பிரயோஜனமில்லை என்பதை கடந்த கால வரலாற்றின் நினைவுச் சின்னங்கள் அறிவுறுத்த... வாயை மூடிக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி...
'அஃது...' என்ற பார்வையுடன் அவன் மாடியேறிப் போய்விட.. இந்த வாயும்.. வம்பு வழக்கும் ராஜேஸ்வரியைக் கண்டவுடன் மாயமாய் மறைந்து விடுவது எப்படி..? என்ற சிந்தனையுடன் படியிறங்கினார் கிருஷ்ணமூர்த்தி...
வாசல்படியில் உட்கார்ந்து.. நெற்றியை ஒற்றை விரலால் கட்டிக் கொண்டிருந்த சின்ன மகளைப் பார்த்தவர் புருவங்களை உயர்த்தினார்...
'இது இவ்வளவு சிந்தனையைச் செய்யக்கூடாதே..'
சிந்தனை செய்யாமலே கலங்கடிக்கும் சின்ன மகள்.. சிந்தனைச் சிற்பியாகி விட்டால் நிகழக்கூடிய அபாயங்களை எண்ணி மனம் பதைத்துப் போன கிருஷ்ணமூர்த்தி.. வருமுன் காப்பவராக.. முன்னெச்சரிக்கையுடன் சின்ன மகளின் ஒற்றை விரலைப் பிடித்து.. நிறுத்தி அவளது சிந்தனையிலிருந்து அவளைத் தடுத்தாட்கொண்டார்...
விரல் அகப்பட்டுக் கொண்டதால்... சிந்தனை தடைபட்டுப் போன கீதா... மூடிய இமைகளைத் திறந்து தகப்பனைப் பார்த்தாள்..
"என்னப்பா..?"
"இப்ப எதுக்கும்மா இவ்வளவு சீரியஸா யோசனை பண்ணிக்கிட்டு இருக்க..?"
"ஏம்ப்பா.. இந்த வீட்டில யோசிச்சாக்கூட குத்தமா..?"
"நீ யோசிச்சா குத்தம்தான்.. எதுக்காக இந்த யோசனை...?"
"இல்லை.. அம்மா.. நல்லவங்களா.. இல்லை.. வில்லத்தனமானவங்களான்னு யோசிக்கிறேன்.. ஒன்னும் பிடிபட மாட்டேங்குது..."
"ம்ஹீம்.. என்னாலேயே அதைக் கண்டு பிடிக்க முடியல.. உன்னால முடிஞ்சிருமா..? இதுக்குப்பதிலா..
நீ வேற எதையாவது ரிசர்ச் பண்ணு.. உலகப் புகழ் கிடைச்சிரும்..."
"அப்படிங்கறிங்க...?"
"அப்படித்தான்.. ஆமாம்.. திடிர்ன்னு எதுக்கு உனக்கு இப்படியொரு ஆராய்ச்சி பண்ணனும்னு தோணுச்சு..?"
"நீங்களே இதுக்கொரு நியாயத்தைச் சொல்லுங்கப்பா..."
"நியாயமெல்லாம் உன் அம்மா சொல்லுவா.. நீ விசயத்தைச் சொல்லு.. நான் அப்படியான்னு சொல்றேன்..."
"அம்மா பஜ்ஜி சுட்டாங்க.. அதை உள்ளே தள்ள.. நான் கிச்சனுக்குள்ள போனேன்.. என்னைப் பார்த்ததும்.. ஒரு மார்க்கமா பேச ஆரம்பிச்சாங்க..."
"என்னான்னு..."
"ஊமை மாதிரி இருந்தவளே.. ஊருவிட்டு ஊரு போயி காதல் பண்ணிட்டா.. இது எப்பவுமே ஆடும்.. எதை இழுத்துக்கிட்டு வரப்போகுதோன்னு சொல்லிட்டாங்கப்பா..."
"அப்படியா சொன்னா..? அவளுக்கு ராதிகாவோட காதலைக் கேட்டதில இருந்து பித்துப்பிடிச்சிருச்சு... சின்னப்பொண்ணு.. ப்ளஸ் டூவைக்கூட முடிக்காத பச்சைக் குழந்தை... உன்னைப் போயி என்ன வார்த்தை சொல்லியிருக்கா..? இதை நினைச்சா நீ இம்புட்டு நேரமும் வருத்தப்பட்ட..? வேணாம்மா.. நீ வருத்தப்படாதே.. அவளுக்கு பேசத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. நீ மனக் கஷ்டப்படாதே.."
கிருஷ்ணமூர்த்தி உருக.. உருக.. அவரை விசித்திரமாகப் பார்த்தாள் கீதா...
"ஹலோ.. அப்பா.. இப்ப யாரு மனசு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறது..?"
"நீதான்.."
"அப்படி உங்ககிட்ட நான் சொன்னேனா..?"
இப்படிக் கேட்ட சின்ன மகளை இமை கொட்டாமல் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.. ஏன் சுந்தர்.. அவளுக்கு 'குட்டிப் பிசாசு..' என்று நாமகரணம் சூட்டினான் என்று அப்போது அவருக்குப் புரிந்தது...
"அப்ப.. உனக்கு மனசுக்கு கஷ்டமாயில்லையா..?"
"இல்லை..."
"அம்மாதானேன்னு நினைச்சிட்டயா..?"
"ஏம்ப்பா.. எதையும் முழுசாக் கேட்காம ஒரு முடிவுக்கு வந்துருவீங்களா...? இப்பத்தானே... எல்லாப் பஞ்சாயத்தும் உங்ககிட்ட சொல்ல ஆரம்பிச்சு.. அம்மா தீர்ப்பு வழங்கறதில ஏன் முடியுதுன்னு எனக்குப் புரியுது..."
"இன்னும் விசயம் இருக்கா..?"
"ஆமாம்ப்பா.. ஆமாம்.. அம்மா அப்படிச் சொன்னவுடனே நான் கவலைப்படாதீங்க அம்மான்னேன்..."
"நீ ஆறுதல்தானேம்மா சொன்ன...?"
"அதுக்கும் மேலேயும் சொன்னேன்..."
"என்னத்தைம்மா சொல்லிவைச்ச..?"
"ராதிகாவாவது ஊருவிட்டு ஊரு போயி காதல் பண்ணியிருக்கா.. எனக்கு உள்ளூரெல்லாம் வொர்க் அவுட் ஆகாது.. நான் நாடுவிட்டு நாடு போய்த்தான் காதல் பண்ணுவேன்னு சொன்னேன்.. அதுக்கு அம்மா கையிலிருந்த கரண்டியைத் தூக்கி என்மேல விட்டெறிஞ்சுட்டாங்கப்பா..."
'பின்னே.. சும்மாவா விடுவா...'
"கிச்சனை விட்டு வெளிநடப்புப் பண்ணச் சொல்லிட்டாங்க.. பஜ்ஜியையும்.. சொஜ்ஜியையும் என் கண்ணிலேயே காட்டலை.. அப்போப் பிடிச்சு.. வாசம் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்..."
'சரியாத்தான் செய்திருக்கா...'
"இதுகூடப் பராவயில்லைப்பா.. நல்லா வந்திரும் வாயிலேன்னு இதுவரை சொல்லிப் பயமுறுத்தினவங்க.. நல்லாவே பேசிட்டாங்கப்பா..."
'பேசிட்டாளா.. இப்பத்தான் நிம்மதியாச்சு...'
"அம்மாவுக்கு ராதிகாமேல கோபம்.. இருந்தாலும்.. காலையில இருந்து பம்பரமா சுத்தி வீட்டைக் கிளின் பண்ணியிருக்காங்க.. அழகா டெக்கரேட் பண்ணியிருக்காங்க... மாய்ஞ்சு.. மாய்ஞ்சு.. டிபன் பண்றாங்க...."
"இதுக்குத்தான் அவ நல்லவளா... வில்லியான்னு கேட்டு வைச்சியா...?"
"ஆமாம்ப்பா.. ஆமாம்..."
"அவ எப்பவுமே நல்லவதான்.. சில காரணங்களாலே ராதிகா சொல்கிற பாலமுரளியை விட.. தானா வந்த சங்கர் பெட்டர்ன்னு அவளுக்குத் தோணுது... அதனால கோபப் படறா.. அதேசமயம்.. பாலமுரளியைத்தான் ராதிகா கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் பிடிக்கிறதாலே.. அம்மாவாய்.. லட்சணமாய் அவ செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறா.. இதுதான் ராஜேஸ்வரி.. உங்க அம்மா..."
இதைச் சொல்லும்போது கிருஷ்ணமூர்த்தியின் முகம் கனிந்திருந்தது.. அதைக் கவனித்த கீதாவிற்கு.. பஞ்சாயத்து தலைவர் பதவியை அவர் பெருமையுடன் மனைவிக்கு விட்டுக் கொடுக்கிறார் என்று தோன்றியது..
"எங்கே அந்த குட்டிச் சாத்தான்..?" ராஜேஸ்வரி வீட்டுக்குள்ளிருந்து சத்தம் போட்டாள்...
"இங்கேயிருக்கா ராஜேஸ்வரி..."
கிருஷ்ணமூர்த்தி சொன்ன பதிலைக் கேட்டதும்.. கீதாவிற்கு மனம் தாளவில்லை...
"அம்மா குட்டிச் சாத்தான்னு சொன்னால் அது நானாத்தான் இருக்கும்ன்னு எப்படிப்பா நீங்களா ஒரு முடிவுக்கு வரலாம்...?"
தகப்பனாருடன் சண்டைக்கு கிளம்பினாள் அவள்..
"வாசலில் இருக்காளா..? அவளை மாடிக்கு அனுப்பி.. ராதிகாவை ரெடி பண்ணச் சொல்லுங்க.. சும்மா இருந்தாத்தான் அவ வாய் சும்மாயிருக்காம பேசி வைக்கும்.."
உள்ளேயிருந்து ஒலித்த ராஜேஸ்வரியின் வார்த்தைகளைக் கேட்டதுட்ம...
'கேட்டயா..?' என்று வினவும் பார்வையொன்றை பார்த்து வைத்தார் கிருஷ்ணமூர்த்தி...
"ம்ஹீம்.. இந்த வீட்டில் எனக்கு மதிப்பில்லாம போயிருச்சு.. அந்தக் குட்டிப்பய என்னான்னா என்னைக் குட்டிப் பிசாசுங்கிறான்.. அம்மா என்னடான்னா.. என்னை குட்டிச்சாத்தான்ங்கிறாங்க.. இதைக் கேட்க யாருமேயில்லையா...?"
உரத்துப் பேசிய கீதா...
"அங்கே என்ன சத்தம்..?" என்ற ராஜேஸ்வரியின் சத்தத்தில் அடங்கிப் போனாள்...
"ஒன்னுமில்லம்மா.. அம்மா சொன்னபடி மாடிக்குப் போறேன்னு அப்பாகிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.. இல்லேப்பா.." என்ற மகளிடம்...
"இல்லை..." என்றார் கிருஷ்ணமூர்த்தி...
மகா சாதுவான அவரே எதிரணிக்கு தாவி விட்டதால் வாயைத் திறக்காமல் மாடியேறினாள் கீதா.. ராதிகாவின் அறைக்குள் போன போது.. அவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
"அசத்தற ராது..."
அவள் தலையிலிருந்த மல்லிகைச் சரத்தை சரி செய்தபடி தமக்கையை ரசித்தாள் கீதா...
"நிஜமாவா...?"
"பின்னே பொய்யா..? இந்தப் பட்டுச் சேலைதான் இடிக்குது..."
"அம்மா கட்டனும்னு சொல்லிட்டாங்க..."
"சரி விடு.. வரப்போகிற தோனூத்துக்காரங்க பட்டுச் சேலையைத்தான் பெரிசா நினைப்பாங்களாயிருக்கும்..."
"அம்மாவும் அதைத்தான் சொன்னாங்க..."
"சும்மாவா சொன்னாங்க...?"
"திட்டிக்கிட்டேதான் சொன்னாங்க... உனக்கெப்படி இது தெரியும்..?"
"என் ராசி அப்படி டீ.. நெல்லுக்கு பாய்கிறது கொஞ்சம் புல்லுக்கும் பாயட்டுமேன்னு நான் சொன்ன தென்னவோ உண்மைதான்.. சைட்டடிக்கிற விசயத்தில அப்படிச் சொன்னேன்.. இப்படி பைட்டடிக்கிற விசயத்தில வந்து அது வொர்க் அவுட் ஆகித் தொலைக்குதேடி ராது.. உன்னைத் திட்டுகிற போது என்னையும் சேர்த்து வைச்சு திட்டக் கண்டோமாடி...?"
"த்சு.. த்சு..."
"இப்ப எதுக்குடி நாயைக் கூப்பிடற...?"
"உன்மேல பாவப் பட்டுத் தொலைச்சேண்டி..."
"அது எதுக்கு வேஸ்டா...?"
"வேணாம்கறியா.."
"உன் வேலையைப் பாருங்கிறேன்..."
ராதிகாவின் புடவை மடிப்புகளை சரி செய்து விட்ட கீதா.. கார் சத்தம் கேட்டு பால்கனிக்கு ஓடினாள்.. அங்கேயிருந்து தகவல் கொடுத்தாள்...
"உன் ஹீரோ இறங்கறார்டி.. அன்னைக்கை விட இன்னைக்கு இன்னும் ஜம்முன்னு இருக்கார்.. அவரோட அம்மாவா அது.. அம்சமா இருக்காங்க... வைரம்தான் எட்டுதிசையும் டாலடிக்குது.. இதுயாருடி.. சங்கரோட அம்மா போலவே தெனாவெட்டாய் முகத்தை வைச்சுக்கிட்டு..? ராது.. எனக்கென்னவோ.. உன் காதல் பாதைக்கு குறுக்கே வர்ற டேன்ஜரஸ் சிக்னல் இவங்கதான்னு தோணுது.. மனசுக்குள்ள பட்சி படபடக்குதுடி..."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -55
அம்மம்மா.. கேளடி தோழி...! -55
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-55.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-55.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy