அம்மம்மா.. கேளடி தோழி...! -50

50 உன்னோடு ஒருநாள் - என்.. வாழ்வினிலே அது திருநாள்.. "உன் அக்காவுக்கு எம்புட்டு சீர்வரிசை செஞ்சோம்.. உனக்கு அது மறந்து போச்ச...


50
உன்னோடு ஒருநாள் - என்..
வாழ்வினிலே அது திருநாள்..

"உன் அக்காவுக்கு எம்புட்டு சீர்வரிசை செஞ்சோம்.. உனக்கு அது மறந்து போச்சா முரளி..."
"அவங்க கேட்டாங்க செஞ்சோம்.. இங்க நாம பொண்ணைமட்டும்தான கேக்கப் போறோம்...?"
"அதுக்காக வெறுமனே கட்டிக்கிட்டு வந்திர முடியுமா முரளி..? இந்த தென்காசிபட்டினமே உன் கல்யாணத்தை திரும்பிப் பார்க்கும்ப்பா... அவங்க கண்ணுக்கு முன்னாலே நீ ஆப்பை சாப்பையான இடத்தில பொண்ணைக் கட்டிக்கிட்டு வந்தா நம்ம பெருமை என்னாகிறது..?"
"ஒன்னும் ஆகாது.. என் மகன் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்லுங்க..."
"இது அதைவிட மோசம்..."
"ஏம்மா.. நான் காதலிக்கக்கூடாதா..?"
"ஊருக்குப் பெரிய மனுசன் பேசற பேச்சாடா இது..?"
"இதென்னம்மா வம்பாப் போச்சு.. பெரிய மனுசனுக்கு காதல் வரக்கூடாதா..?"
"அக்காவை நினைச்சுப் பாருடா.."
"என் கல்யாணத்துக்கும் நான் அக்காவ நினைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்..?"
"அவ வீட்டில என்ன நினைப்பாங்க..?"
"நீங்க ஊரைப் பத்தியே நினைங்க.. உங்க மகனின் ஆசையைப்பத்தி நினைக்காதீங்க.. எனக்கு அவதான் வேணும்..."
ஒருவழியாக மேதாவி மேகலா மகனுக்காக மலையிறங்கினாள்...
"என்னவோ முரளி.. இப்பவாவது உனக்குன்னு ஒருத்தி வேணும்ன்னு நீ நினைச்சியே.. எனக்கு அதுவே போதும்..."
"அம்மான்னா அம்மாதான்.. இத முதல்லயே சொல்றதுக்கென்ன..?"
"வேற எதுக்கு..? எந்தொண்டைத் தண்ணிய வத்தடிச்சுக்கத்தான்... நீ பிடிச்சா உடும்புப் பிடிதான்னு தெரிஞ்சும் உங்கிட்ட வாதாடினா இப்படித்தான் ஆகும்..."
மனத்தாங்கலோடு சொல்வதைப் போல மேகலா சம்மதத்தைச் சொல்லி விட்டாள்...
ஆனால் பாலசரஸ்வதிதான் சம்மதத்தைச் சொல்லவில்லை.. மேகலா சொல்வதை ஒரு வார்த்தை விடாமல் கவனமாக கேட்டுவிட்டு.. அவளை அதட்டினாள்...
"என்னம்மா இப்படி இருக்கறிங்க.. அவன் சொல்லிட்டா நீங்க உடனே அதுக்கு சரின்னு சொல்லிடறதா...?"
"வேற என்னடி பண்ணச் சொல்ற.. அவன் பிடிவாதமா இருக்கானே..."
"அவன் ஆடற ஆட்டத்துக்கு தாளம் போடறதை எப்பத்தான் நீங்க நிறுத்தப் போறிங்களோ.. அவனுக்குத்தான் அறிவில்லை.. மோகம் அவன் கண்ணை மறைக்குது.. உங்களுக்கென்னம்மா ஆச்சு.. நீங்க ஏன் இப்படி இருக்கறிங்க..?" பாலசரஸ்வதி படபடத்தாள்...
ராதிகா என்ற பெயரைக் கேட்டவுடனேயே அது இன்னார் என்று அவளுக்குத் தெரிந்து விட்டது..
'ஷோபா சொன்ன அந்தப் பொண்ணுதானே.. பணக்காரன்னு தெரிஞ்சு உடனே வலையை விரிச்சு என்தம்பிய மடக்கிப் போட்டுட்டாளா...'
இதுதான் பாலசரஸ்வதியின் எண்ணமாக இருந்தது.. ஷோபாவின் வார்த்தைகள் உருவகித்த ராதிகாவின் பிம்பம் அதைத்தான் சொல்லியது.. பாலசரஸ்வதி ராதிகாவை தவறாக மதிப்பிட்டு விட்டாள்...
"உன் தம்பிக்கு உன் சின்னமாமியா மகளைப் பிடிக்கலை சரசு..."
"கடுப்பைக் கிளப்பாதீங்கம்மா.. கோடிஸ்வரன் மகள்.. அழகா இருக்கா.. படிச்சிருக்கா.. சொத்துக்கு ஒரே வாரிசு.. இப்படிப்ட்ட பொண்ணு கழுத்தில உங்க மகன் தாலியக் கட்டினா.. தென்காசி வட்டாரத்தில நமக்கு பெருமை.. அதை விட்டுட்டு.. பணங்காசுக்கு ஆளாப்பறக்கிற ஒரு பொண்ண அவனுக்கு கட்டி வைக்கனும்னு நினைக்கறிங்களே.. உங்களை என்ன சொல்ல..?"
பாலசரஸ்வதியின் கோபத்தில் மேகலாவுக்கு யோசனை வந்தது...
"இரு.. இரு.. பணங்காசுக்கு ஆசைப்படற பொண்ணுன்னு எதை வைச்சு நீ சொல்ற...?"
"ஷோபாதான் சொன்னா..."
"யாரு.. உன் சின்ன மாமியா மகளா..?"
"அவளேதான்.. ஏம்மா... பெயரைச் சொன்னா உங்களுக்குத் தெரியாதா..? உறவு முறையைச் சொன்னாத்தான் தெரியுமா..?"
"அவ பேரை யாரு கண்டா..? அதைவிடு.. அவளுக்கும் உந்தம்பி பாத்திருக்கிற பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்...?"
"ரெண்டு பேரும் ஒரே கிளாஸிலதான் படிக்கிறாங்க..."
"கூடப் படிக்கிற பொண்ணுன்னு சொல்லு..."
"நான் எதைச் சொன்னாலும் எகனைக்கு மொகனையாத்தான் கேட்டு வைப்பீங்களா..?"
"இல்லடி சரசு... உன் சின்ன மாமியா மகளுக்கு அந்தப் பொண்ணை பிடிக்காமலிருக்கலாமில்லையா..?"
மேகலா வாழ்க்கையின் அத்தனை பரிணாமங்-களையும் பார்த்தவள்.. மாணிக்கவாசகத்தின் மனம் அறிந்து.. அவரின் மனம் கோணாமல் பெற்ற பிள்ளைகளுக்குத் தேவையானதை செய்ய வைத்த சாமர்த்தியசாலி... கிராமத்தில் பிறந்து வளர்ந்து.. கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு வந்தவள்.. மனித மனங்களின் சூட்சுமங்களைப் பற்றி ஒரளவு தெரிந்து வைத்திருப்பவள்.. ஒருவரின் கண்களைப் பார்த்தே அந்த நபரின் குணாதிசியத்தை எடை போட்டு விடும் தன்மை படைத்தவள்...
ஷோபாவைப் பார்க்கும் போதே.. அவளது விழிகளில் தெரிந்த ஆணவத்தையும்.. பொய்மையையும் கண்டு கொண்டவள் மேகலா...
அவளுக்கு ஷோபாவைக் கட்டோடு பிடிக்காது.. ஆனால் பாலசரஸ்வதிக்கு ஷோபாவை தம்பியின் மனைவியாக்கும் எண்ணம் இருந்ததை அறிந்தவுடன் அவளுக்காக தன் மனதை மாற்றிக் கொண்டவள் அவள்...
'நான் வாழ்ந்து முடிச்சவ.. என் மக அன்னியத்தில வாக்கப் பட்டிருக்கா.. தகப்பனில்லாத பொண்ணு.. என்காலம் முடிஞ்சா தாயுமில்லைன்னு ஆகிரும்... அதுக்குப் பின்னால அவளை பிறந்த வீட்டில ஆதரிக்க யாரு இருக்கா..? முரளி ஆயிரம் சோலிக்காரன்... அக்காமேல பாசமிருந்தாலும் அவனால வீடு தங்கி.. அக்காவுக்கு எல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்க முடியுமா..? அவனுக்கு வாரவ என் மகளுக்கு வேண்டப்பட்ட சின்ன மாமியா மகளா இருந்தா அவளுக்குத்தானே நல்லது.. எனக்கென்ன.. எம்புள்ளைக நல்லா வாழ்ந்தாச்சரி.. அந்தப் பொண்ணு எப்படி இருந்தாலும் கண்டும் காணாம போயிர வேண்டியதுதான்...'
இதுதான் அவளது எண்ணமாக இருந்தது... இந்த எண்ணத்தோடுதான் ஷோபாவைத் திருமணம் செய்து கொள்ளும்படி பாலமுரளியை வற்புறுத்திக் கொண்டிருந்தாள்...
ஆனால் ராதிகாவின் மேல் அவன் ஆசைப்பட்டு விட்டதைத் தெரிந்தவுடன் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டாள்...
'எம்புள்ள பதினைஞ்சு வயசில குடும்ப பாரத்தை தோளில சுமக்க ஆரம்பிச்ச தங்கம்.. ராப்பகலா உழைச்சு எங்குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தவன்.. இந்த தென்காசிப் பட்டினத்தில பெயர் சொல்கிறதைப் போல பொழைக்க வைச்சவன்.. அக்காகாரியை பெரிய இடத்தில கட்டிக் கொடுத்து அவங்களே மூக்கு மேல விரலை வைக்கிற மாதிரி சீர் செஞ்சு அசத்தினவன்.. ஒன்னுக்குப் பத்தா தொழில் மேல தொழிலாச் செஞ்சுக்கிட்டு கல்யாண வாழ்க்கையப் பத்தியே யோசிக்க நேரமில்லாம கிடந்தவன்.. அவனுக்குன்னு இது வரைக்கும் எதையும் அவன் செஞ்சுக்கிட்டது இல்லை.. முதன் முதலா ஒரு பொண்ணுமேல ஆசைப்படறான்.. அவன் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைய அவன் வாழட்டும்...'
இப்படித்தான் அவள் நினைத்தாள்.. கூடுதலாக பாலமுரளி காட்டிய புகைப்படத்தில் சிரிக்கும் கண்களோடு தெரிந்த ராதிகாவின் விழிகளில் தெரிந்த வசீகரத்துடன் சேர்ந்த ஒர்விதமான நேர்மை அவளைக் கவர்ந்து இழுத்து விட்டது...
'குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு...'
மனம் சான்றிதழை வணங்கினாலும்.. பெற்றவள் என்ற முறையில் கொஞ்ச நேரம் வழக்கடித்து பின் மகனுக்காக இறங்கி வருவதைப் போல இறங்கி வந்தவள் மேகலா...
அவள் கெட்டிக்காரி.. மாற்றி யோசிக்கும் ரகம்.. உடனடியாக காதல் திருமணத்திற்கு சம்மதிப்பது குடும்ப பாரம்பர்யத்திற்கு சரிவராது என்பதை உணர்ந்து.. ஆட்சேபிப்பதைப் போல நடித்து சம்மதித்தவள்...
அவளிடம் போய் ஷோபாவின் அனுமானத்தைச் சொன்னால் ஊம்கொட்டிக் கேட்டுக் கொள்வாளா..?
"என்னம்மா இப்படிச் சொல்லிட்டிங்க..."
"நாம நாலையும் யோசிக்கனும் சரசு.. இப்படியும் இருக்கலாமுன்னுதான் உனக்குச் சொன்னேன்.. இதுதான்னு சொல்லலை..."
"ஷோபா சொன்னா அது சரியாத்தான் இருக்கும்மா..."
"உன்தம்பி எதைச் செஞ்சாலும் சரியாத்தான் செய்வான்ம்மா..."
"இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க...?"
"பாரு சரசு.. தோளுக்கு மேல வளர்ந்துட்ட ஆம்பளைப் புள்ளகளை கைக்குள்ள அடக்க முடியாது.. உந்தம்பி... வானம் தொட்டு வளர்ந்துட்ட ஆம்பளை சிங்கம்.. அவனை அடக்க என்னால முடியாது.. அவன் கிட்ட அடங்கிப் போய்த்தான் எனக்குப் பழக்கம்..."
"அதனால..?"
"என்னால உந்தம்பி கல்யாணத்தை நிறுத்த முடியாது..."
"நான் நிறுத்திக்காட்டறேன்..."
"முடிஞ்சா அதைச் செய்..."
பாலசரஸ்வதி முழுமூச்சாக காரியத்தில் இறங்கினாள்.. போனில் பாலமுரளியிடம் பேசினால் கதைக்கு ஆகாது என்று நேரிலேயே வந்து இறங்கிவிட்டாள்.. அதற்கு அவளுடைய கணவன் ராஜராஜன் ஆட்சேபித்தபோது...
"உங்களுக்கு ஒன்றும் தெரியாது.. இது என்னோட வாழ்க்கைப் பிரச்னை..." என்று சொல்லி விட்டாள்...
"உன் வாழ்க்கைக்கென்னடி குறைச்சல்.. நான் நல்லாத்தானே வைச்சிருக்கேன்..?" அவனுக்கு சுர்ரென்னு கோபம் வந்துவிட்டது..
"உங்களை யாருங்க சொன்னது..? என் தம்பியை இல்ல சொன்னேன்..?"
"அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்..?"
இப்படிக்கேட்ட கணவனை.. உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் பாலசரஸ்வதி...
அது எப்படித்தான் இந்த ஆண்கள் எல்லோரும்.. மனைவியாக வந்து வாய்ப்பவளுக்கு பிறப்பிடம் என்பது வேறு.. அங்கும் அவளுக்கு வேர் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்களோ என்றிருந்தது அவளுக்கு...
'இவங்களுக்கு பெண்டாட்டிக்கு சீர் செய்துகிட்டே இருக்க மட்டும் பிறந்தவீடு வேணும்.. அங்கிருந்து இவங்களுக்கு வாரி வழங்கிக்கிட்டே இருக்கனும்... ஆனா உரிமை கொண்டாடறது மட்டும் கூடாது... என்ன ஒரு நினைப்பு...'
"என் தம்பிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னே வைச்சுக்குவோம்.. எனக்கும் என் தம்பிக்குமாவது சம்பந்தம் இருக்குங்கிறதை நீங்க ஒப்புக்கிறீங்களா.. இல்லையா...?"
"இப்ப எதுக்குடி தேவையில்லாத பேச்சுக்கெல்லாம் சண்டைக்கு வர்ற..? நம்ம வீட்டிலே ஆயிரம் பிரச்னை இருக்கு.. இதை விட்டுட்டு மத்தவங்க பிரச்னை நமக்கு எதுக்கு..?"
ஏற்கனெவே மேகலா பேசியதில் கோபம் தலைக்கு ஏறியிருந்த பாலசரஸ்வதிக்கு அது கட்டுக்கடங்காமல் பீறிட்டது...
அவள் எப்போது பிறந்த வீட்டைப் பற்றிப் பேசினாலும்.. அதை தேவையில்லாத வம்பு என்று கணவன் நாமகரணம் சூட்டினால் அவளுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்..? இந்த லட்சணத்தில் அவளுடைய பிறந்த வீட்டின் பிரச்னையை ஊரான் பிரச்னை என்று வேறு சொல்லி வைக்கிறான்...
"அப்படிங்களா.. போனவாரம் உங்க தங்கை கண்ணைக் கசக்கிட்டு வந்து நின்னாளே.. அப்ப மட்டும் ஏன் தாவிக் குதித்துக்கிட்டு உங்க தங்கையின் மாமனார் வீட்டோடு சண்டைக்குப் போனீங்க..? அது மத்தவங்க பிரச்னையில்லையா...?"
"அதுவும்... இதுவும் ஒன்னாடி.. நான் உன்னை என்னைக்காவது கண்ணைக் கசக்கிட்டு பிறந்த வீட்டுக்கு நியாயம் கேட்டுப் போக விட்டிருக்கேனா..?"
ராஜராஜன் சரியான இடத்தைத் தொட்டு விட.. பாலசரஸ்வதி உதட்டைக் கடித்துக் கொண்டாள்...
அந்த வகையில் அவன் அருமையானவன்.. மனைவியின் கண்கள் கலங்கும்படி ஒருவார்த்தைகூடச் சொல்ல மாட்டான்.. அவளைத் தன் உரிமைப் பொருளாய் நினைப்பவன்.. அவனையும்.. அவன் வீட்டையும் அவளுக்கு உரிமைப் பொருளாக்கியிருந்தான்..
பால சரஸ்வதியின் கோபம் வடிந்து விட.. அவள் காதலுடன் கணவனை நெருங்கி அவனது சட்டைப் பொத்தான்களைத் திருகினாள்..
"இங்கே பாருங்களேன்..."
"பார்த்துட்டாப் போச்சு..."
அவன் காதலுடன் மனைவியைப் பார்க்க.. பாலசரஸ்வதி.. தம்பியின் திடிர் திருமண முடிவைப் பற்றி அவனது சட்டைப் பொத்தானைப் பிய்த்து எடுத்தபடி ஒருவழியாக சொல்லி முடித்தாள்...
"அந்தப் பொண்ணு யாரு.. எவருன்னு ஒரு விவரமும் தெரியாது.. அம்மா பாவம்.. வயசானவங்க.. நோயாளி.. போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்துடறேன்.. ப்ளீஸ்.."
இப்படிக் கேட்கும் மனைவியிடம் முடியாது என்றா அவன் சொல்லுவான்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -50
அம்மம்மா.. கேளடி தோழி...! -50
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-50.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-50.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy