அம்மம்மா.. கேளடி தோழி...! -49

49 என்நெஞ்சில் மிதக்கும் உன்முகம்... இமைமூடினாலும் மறையாமல் நிலைத்திருக்கும்... காரை ஓட்டிக் கொண்டிருந்த பாலமுரளியின் மனதில் ராதி...


49
என்நெஞ்சில் மிதக்கும் உன்முகம்...
இமைமூடினாலும் மறையாமல் நிலைத்திருக்கும்...

காரை ஓட்டிக் கொண்டிருந்த பாலமுரளியின் மனதில் ராதிகாவின் அந்த கவலை தோய்ந்த முககே நிறைந்திருந்தது...
'கல்யாணமும் நடந்துருமில்ல...'
அவன் மெலிதாக விசிலடித்தான்.. இரவு நேரத்தின் அந்தகாரக் கிழித்துக் கொண்டு சாலையில் பாய்ந்த வெளிச்ச வெள்ளத்தில் அவனுக்கு ராதிகாவின் முகமே தோன்றியது...
இவ்வளவு எளிதாக அவனது காதல் கைகூடி விடுமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.. தேனூத்தை விட்டுக் கிளம்பும்போது ராதிகாவின் மீது ஏற்பட்டிருந்த கட்டுக் கடங்காத கோபம் அவனுக்குள் காணாமல் போய் விட்டிருந்தது...
'என்னமா வாயடிக்கிறா...' ரசித்துச் சிரித்துக் கொண்டான்...
என்வோ... அவனும்.. அவளும் காதலுடன் கலந்து பேசிப் பழகி திருமணம் வரைக்கும் வந்து நின்றிருப்பதைப் போல இருந்தது அவனின் செய்கை...
ராதிகாவை அவன் பலவந்தமாய் தொட்டு ஆண்டதை அவன் மறந்தே போய் விட்டான்.. அதனால்தான் அவளுடனான அவனது திருமணம் உறுதியாகி இருக்கிறது என்பதும் அவனுக்கு மறந்து விட்டது.. அவன் நினைவில் நின்றதெல்லாம்.. அவள் கவலையுடன் கேட்ட 'கல்யாணமும் நடந்துருமில்ல...' என்ற வார்த்தைகள் மட்டும்தான் அவை.. அவன் மனதுக்குள் சுழன்று கொண்டிருந்தன...
விடிவெள்ளி வானில் முளைத்தபோது அவனது கார் தேனூத்தை தொட்டு விட்டிருந்தது... இருள் சூழ்ந்த அந்த பின்னிரவுப் பொழுதில் அரண்மனை போன்ற அவனது வீட்டின் காம்பவுண்டிற்குள் அவனது கார் நுழைந்தது...
அழைப்பு மணியோசையில் கதவைத் திறந்த மீனாட்சியிடம்...
"அம்மா.. எப்படியிருக்காங்க..?" என்று கேட்டான்...
"நல்லாயிருக்காங்கய்யா.." என்றாள் அவள்...
"மாத்திரை சாப்பிட்டாங்களா..?"
"சாப்பிட்டாங்கய்யா.. போய் எழுப்பட்டுமா..?"
"வேணாம்.. தூங்கட்டும்..."
அவன் மாடியேறி அவன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்.. பயணக் களைப்பின் அசதியில் கண்கள் செருகின.. அவனையுமறியாமல் தூங்கிவிட்டான்...
அவன் கண்விழித்துப் பார்த்தபோது.. சூரியனின் கதிர்கள் அறைக்குள் படிந்திருந்தன.. அவசரமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்... பல்தேய்த்து.. முகம் கழுவி விட்டு வெளியேவந்து.. மாடிப்படியின் அருகேயிருந்த பால்கனி போன்ற அமைப்பின் கைப்பிடியில் சாய்ந்து..
"மீனாட்சி..." என்று அழைத்தான்...
"ஐயா.." கையில் தண்ணீர் வாளியோடு அவள் ஓடிவந்தாள்...
"காவேரி கிட்ட காபி கலக்கச் சொல்லி வாங்கிட்டுவா..." உத்தரவிட்டுத் திரும்பியவன்..
"சரிங்கய்யா..." என்று போனவளை மீண்டும் அழைத்தான்..
"ஐயா.." அவள் அப்போதும் தண்ணீர் வாளியை கீழே வைக்காமல் அண்ணாந்து பார்த்தாள்...
"இன்னைக்கு பேப்பரை எடுத்துட்டு வாம்மா..."
"ஆகட்டும்ய்யா..."
அவன் அறைக்குள் போய் லேப்டாப்பை உயிர்ப்பித்தபோது காபியும் பேப்பருமாக மீனாட்சி வந்து விட்டாள்...
"அம்மா.. காபி சாப்பிட்டாங்களா..." காபியை வாங்கியபடி கேட்டான்...
"அப்பவே சாப்பிட்டாங்கய்யா..." அவள் பணிவுடன் சொன்னாள்..
காபித் தம்ளரை வாங்கிக் கொண்டு அவள் நகர்ந்ததும்.. பேப்பரின் பக்கங்களை பார்வையில் மேய்ந்தான்.. ஊடே போன் பண்ணிய சதீஷிடம் அவன் ஊர்திரும்பிய விவரத்தைச் சொன்னான்.. அவனே போனில் சுதர்சனத்தை அழைத்து ஜவுளிக்கடையின் நிலவரத்தை விசாரித்தான்.. பேப்பரை போட்டு விட்டு குளியலுக்குப் போனான்...
சாப்பிட அவன் வந்தபோது.. மேகலா அவனுக்காகக் காத்திருந்தாள்..
"அம்மா.." என்று பாசத்துடன் அழைத்தவனிடம்...
"அட.. என்னை உனக்கு அடையாளம் கூடத் தெரியுதாப்பா...? என்று கேட்டு வைத்தாள்..."
"என்னம்மா இப்படிப் பேசறிங்க.. வேலை விசயமா சென்னைக்கு போக வேண்டியதாப் போச்சு.. அதுக்குன்னு இப்படியெல்லாமா பேசறது..." பாலமுரளி மேகலாவின் மோவாயைப் பிடித்தான்...
"போதும்டா..." அவன் கையைத் தட்டி விட்டாள் மேகலா...
பாலமுரளியின் முன்னால் தட்டை வைத்து அதில் இட்லிகளை பறிமாறியபடியே...
"இப்போல்லாம் உனக்கு அடிக்கடி மெட்ராஸில் வேலையிருக்கு போல..." என்றாள்..
அவள் குரலில் தெரிந்த வேறுபாட்டை பாலமுரளி உணர்ந்து கொண்டான்.. மேகலாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. அதில் அவள் மனதிலிருந்த மனத்தாங்கல் தெரிந்தது...
"இது புதிசில்லயேம்மா..." முரளி இட்லியில் கவனமானான்...
"இது புதிசில்ல.. ஆனா எப்பவுமே மெட்ராஸீக்குப் போனா.. ரெண்டொரு நாளில வேலைய முடிச்சுப்புட்டு ஓடி வர்றவன்.. இப்பல்லாம் மாசக்கணக்கில அங்கேயே கிடயாய் கிடக்கிறயே.. அந்த மர்மம் என்னான்னுதான் எனக்குப் புரியல..." சட்னியை ஊற்றியபடியே குத்தலாகப் பேசினாள் மேகலா..
"மாசக் கணக்கில வேலையிருந்தா தங்கித்தானே ஆகனும்.. புதுசா இதென்னம்மா விசாரனைக் கமிசன் போடறிங்க..." பாலமுரளி கண்டிப்புடன் கேட்டான்...
"ஐயா.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா.. உன் வீடுவாசல்.. சொந்தபந்தம்.. தோப்பு துரவு.. தொழில்ன்னு எல்லாமே இங்க இருக்கு.. இதையெல்லாம் விட்டுட்டு நொடிப்பொழுது கூட நீ வெளியூரில தங்க மாட்ட.. இப்ப அப்படியில்லயே ராசா.. போட்டது போட்டபடி இங்கே அத்தனையும் கேட்பாரில்லாம கிடக்க.. நீ மாசக் கணக்கில வெளியூர்ல கிடக்கறியேப்பா.. அதனாலதான் என்னைக்கும் இல்லாத திருநாளா உங்கிட்ட கேள்வி கேக்க வேண்டியதாப் போச்சு.." மேகலாவின் குரலில் மறைமுகமான கோபம் தொனித்தது...
பாலமுரளி அதை கண்டு கொள்ளாமல் மௌனமாக சாப்பிட்டு முடித்தான்...
"ம்ம்.. ஆத்தாகாரி கேள்வி கேட்டா பதில் சொல்ல உங்களுக்கெல்லாம் கஷ்டமாத்தான் இருக்கும்.. இதுவே பெண்டாட்டின்னு ஒருத்திவந்து கேள்வி கேட்டா.. விழுந்தடிச்சுக்கிட்டு பதில் சொல்லுவீங்க.. இதுக்காகவாவது காலாகாலத்தில ஒருத்தி கழுத்தில மூணு முடிச்சைப் போடுடான்னு சொன்னா.. அதையும் காது கொடுத்துக் கேட்க மாட்டேங்கறே.." மேகலா தன் போக்கில் புலம்பினாள்...
பாலமுரளி அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்...
"இப்பச் சொல்லுங்க... நான் காது கொடுத்துக் கேட்கிறேன்.." என்றான்...
மேகலாவிற்கு அவள் காதில் விழுந்த செய்தியை நம்ப முடியவில்லை...
"முரளி.. நிசமாவா சொல்ற..?" வாயெல்லாம் பல்லாக மகனை கட்டிக் கொண்டாள்...
"நிசமாத்தான் சொல்றேன்.." தாயின் சந்தோசத்தை ரசித்தபடி சொன்னான் பாலமுரளி...
"இப்பவே உன் அக்காவுக்கு போனைப் போடறேன்.." மேகலா கிளம்பவும்.. பாலமுரளிக்கு ஒன்றும் புரியவில்லை...
"எதுக்கும்மா..?" விளக்கம் கேட்டான்..
"அவ சின்ன மாமியா மகளை உனக்குப் பேசி முடிக்கச் சொல்லத்தான்.."
"அம்மா.. இப்படியே சன்யாசம் வாங்கிக்கிட்டு நான் ஓடிருவேன்.. பரவாயில்லையா..."
"என்னடா தம்பி இப்படிச் சொல்ற.. அப்ப விடு.. தென்காசியில இருக்கிற நம்ம சொந்த பந்தத்துக்கு போன் போடறேன்..."
"அது எதுக்கு..?"
"உனக்குப் பெண் பார்க்கத்தான்..."
"ஒன்னும் வேணாம்.. நான் பெண்ணைப் பார்த்தாச்சு..."
பாலமுரளி நிதானமாகச் சொல்ல.. மேகலாவின் முகம் மாறிவிட்டது...
"என்னடா சொல்ற..?" ஒரு மாதிரியான குரலில் வினவினாள்...
"நான் ஒரு பொண்ணு மேல ஆசைப்படறேம்மா..."
"யாருடா அந்தப் பொண்ணு...?"
"பேரு ராதிகா... ஊரு சென்னை.. இன்ஜினியருக்குப் படிக்கிறா..."
"அவ அப்பாம்மா என்ன செய்றாங்க..."
"அவ அப்பா கவர்ண்ட்மென்ட் ஆபிசர்ம்மா..."
"மாசச் சம்பளம் வாங்கற குடும்பமா..?"
பாலமுரளி மேகலாவை ஏறிட்டுப்பார்த்தான்.. அவன் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் மேகலாவின் வாய் மூடிக் கொண்டது...
"ஏம்மா.. நீங்ககூட பேச்சுமாறிப் பேசுவீங்களா..?" அவன் குரலில் அப்பட்டமான குற்றச்சாட்டு வெளிப்பட்டது..
"எதைச் சொல்றப்பா.." மேகலா குழம்பினாள்...
"எந்தப் பொண்ணைக் காட்டினாலும் பிடிக்க மாட்டேங்குதே.. நீயாய் ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னாவது சொல்லு.. அந்தப் பொண்ணையே உனக்கு கட்டி வைக்கிறேன்னு சொன்னீங்களா... இல்லையா...?"
"சொன்னேன்தான்..."
"இழுக்க வேணாம்... சொன்னீங்களா.. இல்லையா..? ரெண்டில ஒன்னைச் சொல்லுங்க..." முரளி அதட்டினான்...
"சொன்னேன்டா... அதுக்கு இப்ப என்னாங்கிற...?" மேகலா சிலிர்த்தாள்...
"எனக்கு அந்தப் பொண்ணைத்தான் பிடிச்சிருக்கு.. கட்டினா அந்தப் பொண்ணத்தான் கட்டுவேன்.. இல்லைன்னா காவி வேட்டிதான்.. என்ன சொல்கிறிங்க..?" பதிலுக்கு பால முரளியும் சிலிர்த்தான்..
பாலமுரளி வெடிகுண்டைத் தூக்கிப் போட மேகலா அலறிவிட்டாள்..
"என்னடா முரளி இப்படிச் சொல்ற...? நீ கையைக் காட்டினா ஒரு கழுதையைக்கூட எம்மருமகளா ஏத்துக்க மாட்டேனா..?"
"அவ கழுதையில்ல.. இத அவ காதுபட சொல்லிராதீங்க.. அப்புறம் என்னைக் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிரப் போறா.. அப்புறம் காவி வேட்டியைத்தான் நான் கட்டிக்க வேண்டியிருக்கும்.. அதனால எதைப் பேசறதா இருந்தாலும் யோசிச்சுப் பேசுங்க..."
"அடேங்கப்பா.. அப்படிக்கூட அந்த அழகுரதி சொல்லிப் புடுவாளா..? யாருடா அது...? இந்த தென்காசிச் சீமையில கிடைக்காத பூலோக ரம்பை...?"
"அவ அழகு ரதிதான்.. போட்டாவைப் பார்த்துட்டுச் சொல்லுங்க..."
பாலமுரளி தன் செல்போனில் பதிவு பண்ணி வைத்திருந்த ராதிகாவின் போட்டோவைக் காட்டினான்.. முதல் பார்வையிலேயே மேகலாவுக்கு அவளைப் பிடித்து விட்டது.. அவள் முகத்தில் திருப்தியின் சாயல் படிந்தது..
"நல்லாத்தான் இருக்கா..."
"இன்ஜினியருக்கு படிச்சுக்கிட்டு இருக்காம்மா.. இது கடைசி வருசம்..."
"என்னத்தையோ படிச்சுட்டுப் போகட்டும்.. அதுவா முக்கியம்..? பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருக்கா.. அதுதான் முக்கியம்..."
மேகலாவுக்கு என்றுமே படிப்பு என்பது பெண்களுக்கான கூடுதல் சுமை...  இன்னமும் தனது மகளை பட்டப்படிப்பு படிக்க வைத்ததினால்.. ஐந்தாவது படித்த சித்தப்பா மகனுக்கு அவளைத் திருமணம் பண்ணிக் கொடுக்க முடியாமல் போய்விட்ட துயரத்தை நினைத்து புலம்பும் ரகம்...
அவளிடம் படிப்பைச் சொல்லிப் புரிய வைப்பது கால விரயம் என்று அடுத்த பேச்சிற்கு தாவி விட்டான் பாலமுரளி...
"பொண்ணோட தாய்.. தகப்பன் தங்கமானவங்கம்மா..."
"இருந்துட்டுப் போகட்டும்.. அதுக்காக அவங்களை கழுத்தில கட்டியா தொங்க விட்டுக்குற முடியும்...?"
மேகலா கேட்டு வைத்த இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிப் போய் விட்டான் பாலமுரளி...
இப்படியாகப்பட்ட அதிபுத்திசாலித்தனமான... கேள்விகளை எப்படி மேகலாவினால் சற்றுக் கூட யோசிக்காமல் உடனடியாக கேட்க முடிகிறது.. என்ற ஆச்சரியம் என்றும் போல் அன்றும் அவனுக்குள் வந்தது..
"இப்படிப் பேசினா எப்படிம்மா..? முதல்ல எனக்கு இதுக்கொரு பதிலைச் சொல்லுங்க.. உங்களுக்கு என் கல்யாணத்தை நடத்திவைக்கிற ஐடியா இருக்கா.. இல்லையா...?"
"என்னடா தம்பி இப்படிக் கேட்டுட்ட..? அதெல்லாம் மலையளவு இருக்கு..."
"அப்புறம் எதுக்கு வம்பைக்கட்டி இழுக்கறிங்க..? பொண்ணைப் பெத்தவங்கள நக்கலடிச்சா.. அவங்க பொண்ணைத் தருவாங்களா..?"
"சும்மா இப்படியே சொல்லி வைக்காதே முரளி.. உனக்கு பொண்ணு கொடுக்க.. நான்.. நீன்னு நம்ம சொந்த பந்தத்துல அடிச்சுக்கிட்டு கிடக்காங்க.. அதில ஒரு பொண்ணை நம்ம அந்தஸ்துக்கு தகுந்தாப்புல கட்டிக்கிட்டு வரமாட்டாம.. மாதச் சம்பளம் வாங்குற வீட்டில பொண்ணை எடுக்கனும்கிற... இது எனக்கு சுத்தமா பிடிக்கலடா..."
"இப்பத்தானம்மா.. பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க..."
"பொண்ணோட அந்தஸ்தைப் பிடிக்கலயே..."
அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பாலமுரளி மேகலாவின் அருகே அமர்ந்து பொறுமையாக வகுப்பெடுத்து... அவளைக் கரைத்தான்.. ஒரு வழியாக மேகலாவின் சம்மதத்தை வாங்குவதற்குள் அவனுக்கு போதும்.. போதுமென்று ஆகிவிட்டது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -49
அம்மம்மா.. கேளடி தோழி...! -49
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-49.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-49.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy