அழகான ராட்சசியே -96

96 ஏழேழு பிறவிகளிலும்.. இணைந்து வரும் காதல்கொண்ட.. அழகான ராட்சசி நீ.... "உங்களுக்குத் தெரியுமா பாட்டி.. இவ பெட்டியைத் தூக்...


96
ஏழேழு பிறவிகளிலும்..
இணைந்து வரும் காதல்கொண்ட..
அழகான ராட்சசி நீ....

"உங்களுக்குத் தெரியுமா பாட்டி.. இவ பெட்டியைத் தூக்கிட்டு வீட்டை விட்டுப் போனாளே... அந்தப் பெட்டிக்குள்ளே என்ன கொண்டு போனான்னு நினைக் கறிங்க... இவளோட அப்பாவீட்டில இருந்தப்ப இவ வாங்கியிருந்த டிரெஸ்ஸை மட்டும் எடுத்துக்கிட்டுப் போயிருக்கா... ஜ்வல்ஸீம் அப்படித்தான்.. இவளோட அப்பா போட்ட ஜ்வல்ஸ் மட்டும்தான்.. நான் வாங்கிக் கொடுத்திருந்த வைர நகைகளில ஒன்றைகூட இவ எடுத்துக்கிட்டுப் போகலை பாட்டி.."
"அதெல்லாம் எங்கேடா..?"
"பத்திரமா பேங்க் லாக்கர்ல இருக்கு.."
"நல்ல வேலை செய்தே.. இல்லேன்னா அந்த அகல்யா அதை எடுத்து வைச்சுக்கட்டு காணாமல் போயிருச்சுன்னு கதை அளந்திருப்பா.." வெறுப்புடன் சொன்னாள் சித்ரலேகா..
"இல்லை பாட்டி.. என் ரூமுக்குள்ளே அவங்களை அலோவ் பண்ண மாட்டேன்.. மாடிப் பக்கமே அவங்க வரக்கூடாதுன்னு ஆர்டர் போட்டிருந்தேன்.."
"ஆமாண்டா.. உன் ஆர்டரை ஒபே பண்ணிட்டுத் தான் அவ வேற வேலை பார்ப்பா.. மொட்டை மாடியில புருசனும் பெண்டாட்டியும் தனியாப் பேசிக்கிட்டு இருக்கிறதை ஒளிஞ்சு மறைஞ்சு பார்க்கிற ஜென்மம் எப்படியாப்பட்ட ஜென்மமா இருக்கும்..? த்தூ.."
சித்ரலேகாவின் அறுவெருப்பில் நரேந்திரனும் முகம் சுளித்தான்..
"ஊர்மிளா சொன்னாளா..? எனக்குத் தெரியாது பாட்டி.. இன்னும் என்னவெல்லாம் நடந்ததோ... இவ எதையும் என்னிடம் சொல்லவே இல்லை பாட்டி.. சொல்லியிருந்தா துளிர் விடும் போதே கிள்ளி எறிஞ்சிருப்பேன்.."
"அவளா துளிர்..? அவ ஆலமரம்டா நரேந்திரா.. வேர் விட்டு படர்ந்திருக்கிறது.. அவளை வெட்ட உன்னாலே மட்டுமில்லை.. யாராலேயும் முடியாது.. ஒரே ஒருத்தராலே மட்டும்தான் அது முடியும்.."
"அது யாரு பாட்டி.. என்னைவிட வீராதி வீரர்.. சூராதி சூரர்..?"
"வேற யாரு..? எல்லாம் உன் தாத்தா கஜேந்திரன் தான்.. அவளை கிட்டக் கூட அண்ட விட மாட்டார்.. யாரை எங்கே நிறுத்தனும்னு அவருக்குத் தெரியும்.. நீ தயவு தாட்சண்யம் பார்ப்ப நரேந்திரா.. சாகப் போகிற சமயத்திலே உன் அப்பா கேட்டுக்கிட்டார்ன்னு அந்த வஞ்சகிக்குப் பாவம் பார்ப்ப.. உன் தாத்தா அப்படிச் சிக்கலில் எல்லாம் மாட்டிக்க மாட்டார்.. அவர் மனசில சாகப் போகிற சமயத்திலே.. என் பிள்ளையைப் பார்த்துக்கங்க அப்பான்னு கண்ணீர் விட்டபடி உயிரைவிட்ட உன் அம்மாவின் முகம் மட்டும்தான் இருக்கு.. மத்த எதுக்கும் அங்கே இடமில்லை.."
நரேந்திரன் மௌனமாக இருந்தான்.. சித்ரலேகாவுக்கு பேரனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.. தகப்பனுக்குரிய கடமைகளைச் செழியன் செய்யாவிட்டாலும்.. அவனுக்குத் தந்தையாகி விட்டாரே என்ற ஒரேயொரு காரணத்துக்காக எப்பேற்பட்ட பாரத்தை நரேந்திரன் இழுத்துக் கொண்டு விட்டான் என்று அவள் மனம் வலித்தது..
"ஊர்மிளாவோட டிரஸ்ஸெல்லாம் எங்கேடா..? எல்லாமே விலையுயர்ந்த பட்டுப் புடவைகள்.. டிசைனரி சேலைகள் ஆச்சே.. அதுவும் முக்கியம்தானே நரேந்திரா.."
"பத்திரமா வைத்திருந்து.. என் ரூமை காலி பண்ணும் போது பேக் பண்ணிக் கொண்டு வந்துட்டேன்.."
"கெட்டிக்காரன்தான் போ.. இந்தக் கெட்டிக்காரத் தனத்தை மற்ற எல்லாத்திலேயும் காட்டியிருந்தால் பெட்டரா இருந்திருக்கும்.."
"சொல்லிக்காட்டறிங்களா பாட்டி.."
"உன்னைச் சொல்லிக்காட்டி எனக்கென்னடா கிடைக்கப் போகுது..? நீ காபியைக் குடி.."
காபியை அருந்தியபடியே தோட்டத்தைப் பார்த்தான் நரேந்திரன்.. இப்போது தாயும் மகனும் நீச்சல் குளத்தின் விளிம்பில் தண்ணீரில் கால்களை விட்டு அளைந்தவாறு அமர்ந்திருந்தார்கள்.. ஊர்மிளா கைகளை ஆட்டி எதையோ சொல்லிக் கொண்டிருக்க சுரேந்திரன் விழி விரித்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்..
'கதை சொல்வாளா இருக்கும்..'
நரேந்திரன் நினைத்துக் கொண்டான்.. இப்படிப்பட்ட மனைவி அவனை விட்டு மட்டும் எட்ட நிற்கிறாளே என்ற விசனம் அவனுக்குள் ஏற்பட்டது..
"உங்களிடம் என்ன சொன்னா பாட்டி..? ஏதாவது சொன்னாளா..?"
திடிரென்று வந்த நரேந்திரனின் கேள்வியில் என்ன பதிலைச் சொல்வது என்று திகைத்து விட்டாள் சித்ரலேகா..
ஊர்மிளாதான் அவள் கைகளையும் கட்டிப் போட்டிருந்தாளே..
"ராதாவிடம் என்ன சொன்னேனோ.. அதைத்தான் உங்களிடமும் சொல்கிறேன் பாட்டி.. நீங்க சொல்லி என் வாழ்க்கை சரியானதா இருக்கக் கூடாது.. சொல்லனும்னு நான் நினைச்சிருந்தா எப்பவோ அவரிடம் இதையெல்லாம் சொல்லியிருப்பேனே.. இல்லை பாட்டி.. இன்னும் எனக்கான நியாயத்தை அவர் செய்யலை.. எனக்கு நியாயம் கிடைக்காம அவர்கூட இசைஞ்சு குடும்பம் நடத்த என்னால முடியாது பாட்டி.. தயவு செய்து உங்ககிட்ட நான் சொன்ன எந்த விவரத்தையும் அவளிடம் சொல்லாதீங்க பாட்டி.."
"அவனுக்கு ஒன்னுமே தெரியாதா ஊர்மிளா..?"
"மொட்டை மாடி நிலாச்சோறு விருந்திலே.. நாங்க பேசிக்கிட்டு இருந்ததை அந்தம்மா ஒளிஞ்சிருந்த பார்த்தது மட்டும் தெரியும்.. மற்ற எதுவும் தெரியாது.."
அதனால்தான் சித்ரலேகா அந்த நிகழ்வை மட்டும் பேரனிடம் சொன்னாள்... மற்றதை எப்படி அவள் சொல்வாள்..?
சித்ரலேகாவின் மௌனத்தில் ஊர்மிளா வேறு எதையும் சொல்லவில்லை என்ற முடிவுக்கு வந்தான் நரேந்திரன்..
"இவ சொல்லியிருக்க மாட்டா.. நான்தான் சொல் கிறேனே.. இவ ராட்சசி பாட்டி.. சொல்லாம நம்ம உயிரைக் குறைப்பா.."
"அவ மனசில என்ன இருக்கோ..?"
"அதை சொன்னாத்தானே தெரியும் பாட்டி.. சொல்லாம அவ மனசுக்குள்ளேயே புதைச்சு வைத்திருந்தா எப்படி எனக்குத் தெரியும்..? வீம்பு பாட்டி.. பிடிவாதம்.. இப்படித்தான் அன்றைக்கு தஞ்சை ஹாஸ்பிடலில் சுரேந்திரனோட ட்ரீட்மெண்டுக்காக அவ அப்பா போட்ட அத்தனை நகைகளையும் விற்றுப் பணத்தைக் கட்ட வருகிறா.. நான் வாங்கிக் கொடுத்திருந்த வைர நகைகளைக் கொண்டு போயிருந்தான்னா அந்த நிலைமை அவளுக்கு வந்திருக்குமா பாட்டி..? அந்த வைரநகைகளில் ஒரே நகையை விற்றிருந்தால் கூடப் போதும்.. சுரேனுக்கு அரச வைத்தியம் நடந்திருக்கும்.. திமிர் பாட்டி.. இவ உடம்பெல்லாம் திமிர்.. என் நகை வேண்டாமாம்.. என் மகன் மட்டும் இவள் மகனாம்.. எப்படி உரிமை கொண்டாடறா பார்த்தீங்களா..? நானில்லாம இவள் மகன் வந்தானா..?"
"டேய்ய்ய்ய்..."
சித்ரலேகா சிரித்து விட்டாள்.. பேரனின் முதுகில் ஒரு போடும் போட்டாள்.. அவன் கேட்ட கேள்வியில் இருந்த கோபத்தில் அவளின் சிரிப்பு அதிகரித்தது..
இதே கேள்வியை ஊர்மிளா வேறு விதமாக கேட்டதை நினைத்துப் பார்த்தவளின் சிரிப்பு வந்த வேகத்தில் மறைந்தது..
"சும்மா என் மகன்.. என் மகன்னு சொல்கிறாரே பாட்டி.. நான் பத்து மாதம் சுமந்து பெற்றுக் கொடுக்காம இவர் மகன் வந்து விட்டானா..?"
'இரண்டுமே நன்றாகத்தான் நியாயம் பேசுதுகள்..'
சித்ரலேகா பெருமூச்சு விட்டாள்..
"அவர் தஞ்சாவூருக்கு வந்தார் பாட்டி.. எனக்காக வரலை.. அவரோட மகனுக்காக வந்தார்.. நான் அவருக்குத் தகவல் கொடுக்கலை பாட்டி.. அமிர்தாதான் தகவல் சொல்லியிருக்கா.. இருந்தும் அவர் என்னைப் பார்த்து கேட்டாரே ஒரு கேள்வி.. திரும்பவும் மறக்க முடியாதபடி கேள்வி கேட்டு வைச்சுட்டார் பாட்டி.. கேள்வியின் நாயகன்னா அது உங்க பேரன்தான் பாட்டி.. அவர் மகனோட ட்ரீட்மெண்டுக்கு செலவளிக்கப் பணம் இல்லைங்கிற தினாலதான் அவருக்கு நான் தகவல் சொல்லச் சொன்னேனாம்.. எப்பேர்பட்ட பழி..! என் உயிரைக் கொடுத்தாவது என் மகனைக் காப்பாற்றியிருப்பேன் பாட்டி.. ஒருநாளும் உங்க பேரனிடம் கையேந்தி நின்றிருக்க மாட்டேன்.."
"சேச்சே.. என்ன பேச்சுன்னு இப்படிப் பேசற..? அவன் சம்பாதிக்கிறது யாருக்காக..? கொட்டிக்கிடக்கிற இத்தனை செல்வமும் யாருக்காக..? உனக்கும்.. உன் மகனுக்காகவும் தான் ஊர்மிளா.. உரிமைக்காரியான நீயே இப்படிப் பேசலாமா..?"
"உரிமை.." கசப்புடன் சிரித்தாள் ஊர்மிளா..
"யாருக்கு வேணும் பாட்டி அந்த உரிமை..? எனக்கு வேண்டியது பாசம் பாட்டி.. உண்மையான பாசம்.. எனக்கும் அவருக்கும் இடையில் அத்தனை நாளாய் இருந்தது காதல்ன்னா.. அதனாலே வந்த பாசத்திலே அவர் என்பக்கமாய் யோசிச்சிருப்பார்.. அவர் மகன் என் வயிற்றில் வளர்வதைச் சொல்லியிருந்தா என்னைப் போக விட்டிருக்க மாட்டேன்னு அவர் சொன்னார் பாட்டி.. எனக்காக என்னைத் தடுத்து நிறுத்தனும்னு ஏன் அவருக்குத் தோணலை பாட்டி..? அவர் மகன் பிறந்திருப்பதைச் சொல்லியிருந்தா திருச்சிக்கு என்னைத் தேடி வந்திருப் பேன்னு அவர் சொன்னார் பாட்டி.. எனக்காக என்னைத் தேடி வரனும்னு ஏன் அவருக்குத் தோணாம போச்சு பாட்டி..? அவ்வளவு தானா..? எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த காதல் அவ்வளவுதானா பாட்டி.. இப்பவும் அவரோட மகனுக்கு ஆயாவாய் வேலை பார்க்கத்தான் என்னைக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கார் பாட்டி.. அவரோட காதலியாய்.. பெண்டாட்டியாய் நினைத்துக் கூப்பிட்டுக்கிட்டு வரலை.."
ஊர்மிளாவின் தவிப்பில் மனம் கரைந்து போனாள் சித்ரலேகா.. அவள் சொல்லிய விவரங்களைச் சொல்லாமலே.. பேரனுக்கும், அவன் மனைவிக்கும் இடையினில் இருக்கும் சிக்கலை தீர்த்து வைக்க முடியுமா என்றுதான் அவள் நரேந்திரனுடன் பேச வந்திருந்தாள்.. அவன் என்னடா வென்றால் ஊர்மிளாவை விட அதிகமாக விசனப்பட்டான்..
"எப்படி இருப்பா தெரியுமா பாட்டி.. பார்வையிலேயே என்னைச் சாப்பிட்டிருவா.."
"ஏண்டா.. பாட்டிகிட்டப் பேசற பேச்சாடா இது..?"
"வேற யார்கிட்டப் பேசச் சொல்கிறிங்க..? தாத்தா கிட்டேயா..?"
"எதுக்குடா..? உன் தாத்தா துப்பாக்கியைத் தூக்கிக் கிட்டுப் போய் அந்த அகல்யாவை சுட்டுட்டு வாரதுக்கா..? அவரைக் கொலைகாரன் ஆக்க வேணாம்.. என்கிட்டயே சொல்லு.. கேட்டுக்கறேன்.."
"இப்ப எப்படிப் பார்க்கிறா பாருங்க.."
"எப்படிடா பார்க்கிறா..?"
நரேந்திரனைப் பின் தொடரும் ஊர்மிளாவின் ரகசியப்பார்வைகள் அவனைச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை அறிந்து வைத்திருந்த சித்ரலேகா கள்ளச் சிரிப்புடன் கேட்டாள்..
ஊர்மிளா அவளுக்கும், அகல்யாவுக்கும் இடையினில் வந்த போராட்டத்தைத்தான் நரேந்திரனிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்..
மற்றபடி சித்ரலேகாவாக கண்டு கொண்டிருந்த எதையும் சொல்லக்கூடாது என்று சொல்லவில்லையே..
"யாரோ மூணாம் மனுசனைப் பார்க்கிறதைப் போல பார்த்து வைக்கிறா பாட்டி.."
"நீ பார்த்த..."
"பார்க்காமலா சொல்கிறேன்.."
"போடா முட்டாள்.."
"இந்தப் பட்டம் மட்டும்தான் பாக்கியிருந்தது.. இந்த அழகான ராட்சசி எனக்கு வொய்பா வந்து வாய்த்தா.. இதையும் வாங்கிக் கொடுத்துட்டா.."
"நரேன்.. நீ பார்த்தது வேறு.. நான் பார்த்தது வேறுடா.."
"பார்வைங்கிறது ஒன்னுதானே பாட்டி.. இதிலென்ன டிபரன்ஸ் வந்து கிழிச்சிரப் போகுது..?"
நரேந்திரன் அலுத்துக் கொண்டதில் சித்ரலேகா சிரித்தாள்.. பேசியபடியே அவன் காலி பண்ணி வைத்திருந்த டிரேயையும் காபி கப்பையும் எடுத்து அங்கிருந்த டீப்பாயில் வைத்து விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தவள்..
"இப்ப ஊஞ்சலை ஆட்டுடா.." என்றாள்..
"ஊஞ்சலாடற மூடில நானில்லை பாட்டி.."
"நானிருக்கேனே.."
சித்ரலேகா அவனை சோதித்தாள்.. காதல் மனைவி கண்ணுக்கெட்டிய தூரத்தில் தளதளவென்று தக்காளி பழத்தைப் போல இருக்க.. அவளைக் கொஞ்சி.. அவளுடன் ஊஞ்சலாட முடியாமல் பாட்டியுடன் ஊஞ்சலாட வேண்டி வந்து விட்ட கொடுமையில் மனம் வெறுத்துப் போய் விட்டான் நரேந்திரன்..
'நரேந்திரா..! உன் தலைவிதி இப்படியாடா இருக்கனும்..'
விரக்தியுடன் அவன் தரையை ஓங்கி மிதித்த மிதியில் ஊஞ்சல்.. இந்த விளிம்புக்கும்.. அந்த விளிம்புக்குமாக காற்றில் பறந்து ஆடியாது.. சித்ரலேகா கண்களை மூடிக் கொண்டாள்.. பயந்து போய் கண்களை மூடுகிறாள் என்று நரேந்திரன் நினைத்தான்..
'இவ்வளவு பயத்தை வைச்சுக்கிட்டு ஏன் இந்தப் பாட்டி ஊஞ்சலாட வரனும்..?'
அவன் நினைத்து முடிப்பதற்குள் அதை பொய்யாக்கி சித்ரலேகா பாட ஆரம்பித்து விட்டாள்..
"நான் பார்த்த பார்வை..
             நீ பார்க்கவில்லை..
    உன் பார்வை போல..
             என் பார்வையில்லை.."
"அரதப் பழசு பாட்டு.. இதையெல்லாம் அவதான் ரசிச்சுக் கேட்பா.. அவ அப்பாம்மாவோட டிரெயினிங்... என்னிடம் எதுக்காக பாடி வைக்கறிங்க.."
"பார்வையைப் பத்தி உனக்குக் கிளாஸ் எடுக்கத்தான்.."
"ம்ப்ச்.. பேசாம இருங்க பாட்டி.. காமெடி பண்ணாதீங்க.. இவ எப்பேற்பட்டவ தெரியுமா..? சுரேனோட ட்ரீட்மெண்ட் சமயத்தில் கூட இவ என்னை நினைக்கலை பாட்டி.. இவளோட பிரண்ட்.. அமிர்தாதான் மெசேஜ் பண்ணினாங்க.."
"அப்படியிருந்தும் நீ அவளைப் பார்த்து பணத் தேவை வந்ததும் பிள்ளைக்குத் தகப்பன்னு என்னைக் கூப்பிடனும்னு நினைவு வந்ததான்னு கேட்டிருக்க..?"
அழுத்தம் திருத்தமாக அவனைக் குற்றம் சாட்டினாள் சித்ரலேகா.. நரேந்திரனின் முகம் மாறியது..
"பாட்டி..?"
"ம்ம்ம்.. அவதான் இதைச் சொன்னா.. இப்பப் புரிஞ்சுக்க நரேந்திரா.. அவளைக் குற்றம் சொல்கிற ஒவ்வொரு நிகழ்விலேயும் உன்மேல ஒரு குற்றத்தை நீ உண்டு பண்ணியிருக்க.. அவ மனசில அது காயமா.. ஆழமாபதிஞ்சிருக்கு.. உன்னை அவ ஆசையா பார்க்கலையா..? ஒளிஞ்சு மறைஞ்சு உன்னை மட்டும் தாண்டா அவ பார்த்துக்கிட்டு இருப்பா.. பக்கத்தில் மகன் இருக்கிறதைக் கூட மறந்திருவா.."
'உண்மையாகவா..?' நரேந்திரனின் முகத்தில் வெளிச்சம் பரவியது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -96
அழகான ராட்சசியே -96
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-96.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-96.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy