அழகான ராட்சசியே -94

94 தொலைதூர தொடுவானாய்.. எனைவிட்டு விலகி நின்ற அழகான ராட்சசி நீ.... கணகணவென்ற மணியோசையுடன் தீபாதரனை நடந்து கொண்டிருந்தது.. கற்...


94
தொலைதூர தொடுவானாய்..
எனைவிட்டு விலகி நின்ற
அழகான ராட்சசி நீ....


கணகணவென்ற மணியோசையுடன் தீபாதரனை நடந்து கொண்டிருந்தது.. கற்பூர ஒளியில் தெரிந்த.. ஈஸ்வரன்.. அம்பிகையின் திருவுருவச் சிலைகளைப் பார்த்து மனமுருக வேண்டிக் கொண்டாள் ஊர்மிளா.. கற்பூர ஒளியுடன் வந்த அர்ச்சகரின் கையிலிருந்த தீபாதரனைத் தட்டைத் தொற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.. அவள் பக்கத்தில் நின்ற சித்ரலேகாவுக்கும், அவளுக்கும் குங்கும பிரசாதத்தைக் கொடுத்தார் அர்ச்சகர்.. இருவரும் மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்து கோவிலின் சுற்றுப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வரத் தொடங்கினார்கள்..
ஊர்மிளாவின் மனதில் அமைதி வந்திருந்தது.. நரேந்திரனின் தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு வந்த பின்னால் அவளுக்குள் ஓர் உயிர்ப்பு பொங்குவதை வியப்புடன் அவள் உணர்ந்திருந்தாள்..
"இங்கே உட்காரலாமா..?"
சித்ரலேகா கை காட்டிய மண்டபத்தில் அவர்கள் இருவரும் உட்கார்ந்தார்கள்.. அருகில் விளையாடிய குழந்தைகளைப் பார்த்த ஊர்மிளா..
"சுரேனையும் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கலாம்.. அவனுக்கு வெளியில் வர ரொம்பப் பிடிக்கும்.." என்றாள்..
"பிடிக்கும்தான்.. ஆனா அவனுக்கு ஸ்கூல் இருக்கே.. மற்ற நேரத்திலே அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு நரேந்திரன் சொல்லிட்டான்.. இப்ப என்ன.. அவனுக்கு லீவு நாள் வர்றப்ப கோவிலுக்கு அழைச்சிட்டு வரலாம்.." இதமாக சொன்னாள் சித்ரலேகா..
"அதுவும் சரிதான் பாட்டி.." தலையை அசைத்தாள் ஊர்மிளா..
அவர்கள் பெங்களூருக்கு வந்த மறுநாளே சுரேந்திரனை அங்கிருந்த பிரசித்தி பெற்ற பள்ளியில் சேர்த்து விட்டான் நநேரந்திரன்.. பள்ளியில் இடம் கிடைக்குமோ.. கிடைக்காதோ என்று மனதுக்குள் பயந்து கொண்டிருந்த ஊர்மிளாவுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.. நரேந்திரனிடம் சொன்னபோது அவன்..
"ஹி இஸ் மை சன்.." என்றான்..
ஊர்மிளா பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்.. புதிய பள்ளியில் சுரேந்திரன் எப்படிப் பழகுவானோ என்று அவள் தவித்துக் கொண்டிருந்தபோது அதி விரைவில் புதிய பள்ளியின் புதிய சூழலோடு ஒன்றி விட்டான் சுரேந்திரன்.. அவனுக்கு புதிய நண்பர்களும் கிடைத்து விட்டார்கள்.. அதை அவன் உற்சாகத்துடன் ஊர்மிளாவிடம் பகிர்ந்து கொண்டபோது அவள் மனதிலிருந்த மலை போன்ற பாரம் விலகியது.. மகனை வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு சூழ்நிலைகள் என்று அலைக்கழிக்கிறோமோ என்ற அவளின் குற்ற உணர்வு அவளை விட்டு விலகி ஓடியது..
அதைக் கவனித்துக் கொண்டிருந்தானோ என்னவோ..
"உன் ஹஸ்பெண்ட் மேல கொஞ்சமாவது நம்பிக்கை வைடி.." என்று அன்றைய இரவின் தனிமையில் நரேந்திரன் சொன்னான்..
'இதை நான் சொல்லனும்..' ஊர்மிளா முகம் கன்றினாள்.. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்..
"எனக்கு உன்மேல் மலையளவு நம்பிக்கை இருந்தது.. இருக்கிறது.. இனியும் இருக்கும்ன்னு சொன்னா நீ நம்பவா போகிற..?" என்று கேட்டு விட்டு கண்களை மூடிப் படுத்து விட்டான்..
ஊர்மிளாவுக்குத்தான் தூக்கம் வர வெகு நேரமானது.. இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளின் வீங்கிய இமைகளை மறுநாள் காலையில் பார்த்த நரேந்திரனின் மனம் வலித்தது..
"ஏண்டி..?" ஆற்றாமையுடன் கேட்டான்..
கலங்கிய விழிகளுடன் காபியை நீட்டினாள் ஊர்மிளா..
"உன்னையும் வருத்திக்கிட்டு.. என்னையும் வருத்தற ஊர்மிளா.. இதுக்கொரு முடிவே இல்லையா..?" பொறுக்க முடியாமல் கேட்டு விட்டான் நரேந்திரன்..
நிராசையுடன் முகம் திருப்பிக் கொண்டவளைப் பார்த்தவனுக்கு ஆத்திரம் மூண்டது.. காலிக் காபிக் கோப்பையை விட்டெறிந்தான்.. அது சுவரில் மோதிச் சிதறி துகள்களாக தரையில் விழுந்தது..
கண்களை மூடி நின்று விட்ட ஊர்மிளாவைப் பார்த்து உறுமினான்..
"ராட்சசிடி நீ.. அழகான ராட்சசி..! இரக்கமே இல்லைடி உனக்கு.. அப்படி என்னடி உனக்கு கொடுமை பண்ணிட்டேன்..? எதுவா இருந்தாலும் என் சட்டையைப் பிடித்து நீ நியாயம் கேட்டிருக்கனும்.. எதுவும் செய்யாம என்னை விட்டு விட்டுப் போன கல்நெஞ்சக்காரிடி நீ... உன் மனசில் ஈரமேயில்லைடி.. காவேரிக் கரையில பிறந்துட்டு.. எப்படிடீ இப்படியொரு ஈரமில்லாத மனசுக்காரியா இருக்கிற..? உன் மனசு திரும்பவே.. திரும்பாதா..?"
இரைந்து விட்டு அவன் உடை மாற்றும் அறைக்குள் போய் விட்டான்..
"டபால்.." அவன் மூடிய வேகத்தில் கதவு அதிர்ந்தது..
ஊர்மிளாவுக்கு அழுகை வந்தது... லேசான விம்மலுடன் தரையில் கிடந்த காபிக் கோப்பையின் துகள்களைச் சுத்தம் செய்யப் போனாள்..
"இருக்கட்டும்மா.. செல்வியை அனுப்பறேன்.. அவ வந்து சுத்தம் செய்வா.."
சித்ரலேகாவின் குரல் கேட்டது.. அதிர்ந்து நிமிர்ந்தாள் ஊர்மிளா..
'பாட்டியா..? இவங்க எப்ப வந்தாங்க..?'
"நான் இங்கே வரலைம்மா.. மாடிக்கு வந்திருந்தேன்.. இந்தப் பக்கம் போகிறப்ப உள்ளே சத்தம் கேட்டது.. நீ ரூம் கதவைத் திறந்து வைச்சிருந்த.. மூடச் சொல்லலாம்ன்னு நின்னேன்.. அதுக்குள்ளே நரேன் காபிக் கப்பை உடைச்சிட்டான்.."
அதற்கு மேல் சித்ரலேகா எந்த விளக்கமும் சொல்ல வில்லை.. ஊர்மிளாவிடம் விளக்கமும் கேட்கவில்லை.. செல்வியை அழைத்து அறையைச் சுத்தம் செய்யச் சொன்னாள்.. போய் விட்டாள்..
அப்போது மட்டுமல்ல.. அதற்குப் பின் வந்த நாள்களிலும் சித்ரலேகா ஊர்மிளாவிடம் எதையும் கேட்கவில்லை..
கோவிலில் அமர்ந்திருந்த அந்தப் பொழுதில் அதை நினைத்துப் பார்த்த ஊர்மிளாவுக்கு சித்ரலேகாவின் அந்தத் தன்மையைக் குறித்து மரியாதை வந்தது..
'இவங்க எங்கே.. அந்த அகல்யா எங்கே.. இவங்க கால் தூசியளவு கூட அகல்யாவினால் வர முடியாது..'
"என்னம்மா யோசிச்சுக்கிட்டு இருக்க..?"
சித்ரலேகா இதமாக வினவினாள்.. ஊர்மிளா சிந்தனைவயப் பட்டிருப்பதை அவள் கவனித்திருக்க வேண்டும் என்று ஊர்மிளா நினைத்துக் கொண்டாள்.. இந்தச் சிந்தனையே இப்படித்தான்.. எந்த நேரம் என்றில்லை.. ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.. மற்றவர்கள் கவனிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடும்..
"ஒன்றுமில்லை பாட்டி.." ஊர்மிளா முறுவலித்தாள்..
"உனக்கும், நரேனுக்கும் இடையே ஒன்றுமே இல்லையாம்மா..?" சித்ரலேகா நிதானமாக கேட்டாள்..
"பாட்டி.." ஊர்மிளா தடுமாறினாள்..
"அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நான் கேட்க மாட்டேன்.. அது புருசன், பெண்டாட்டிக்குள்ள நடந்த சண்டை.. அதைப்பத்தி நான் கேட்கிறது நாகரிகம் கிடையாது.. ஆனா.. என் பேரனைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ.. ஒரு வருசம் முடிகிறதுக் குள்ளேயே அவனை விட்டுப் பிரிஞ்சு போனது ஏன்னு நான் கேட்கலாமில்லையா..? என் பேரனுக்கு மகன் பிறந்திருக் கிறதைக் கூட அவனுக்குச் சொல்லாம அவனைத் தனிமைப் படுத்தற அளவுக்கு அவன் என்ன குற்றம் செய்தான்னு நான் தெரிந்துக்கலாமில்லையா..? சொல்லும்மா.. நரேன் என்ன குற்றம் செய்தான்..?" சித்ரலேகா பொறுமையாகக் கேட்டாள்..
"இல்லை பாட்டி.." ஊர்மிளா விம்மினாள்..
"குற்றம் செய்தது அவரில்லை.. என் தலைவிதி என்னைத் துரத்துச்சு பாட்டி.. இல்லேன்னா.. அன்பான நீங்களும், தாத்தாவும் இருக்கிறப்ப அந்த அகல்யாவின் பார்வையிலே இவர் என்னைக் கொண்டு போய் விட்டிருப்பாரா..?"
"அந்தச் சண்டாளி என்னம்மா பண்ணினாள்..?"
சித்ரலேகாவின் முகம் கடுமையானது.. அவளது கனிவான முகத்தில் கோபம் தாண்டவமாடியது.. அது ஊர்மிளாவுக்கு இதமாக இருந்தது.. அவள் சொல்ல ஆரம்பித்தாள்.. அவளைப் பெற்றவர்களிடம் சொல்ல முடியாத நிகழ்வுகளை சித்ரலேகாவிடம் விவரிக்க ஆரம்பித்தாள்.. கட்டிய கணவனிடம் சொல்ல முடியாதபடி பிணைக்கப் பட்டிருந்த உண்மைகளை சித்ரலேகாவின் முன்னால் கொட்டிக் கவிழ்த்தாள்..
"பர்ஸ்ட் நைட் முடிஞ்சு மறுநாள் காலையிலே நான் மாடியிலிருந்து இறங்கி வந்தப்ப என்னை எதிரியைப் பார்க்கிறதைப் போல பார்த்தாங்க பாட்டி.. இந்த ஒரு ராத்திரியிலேயே கோட்டையைப் பிடிச்சு கொடியை நாட்டி விட்டதாய் நினைக்காதே.. எல்லா நாளும் உன்னுடைய நாளாய் இருக்காதுன்னு சொன்னாங்க பாட்டி.."
"ச்சீ..! சின்னப் பெண்ணிடம் பேசுகிற பேச்சா இது..? அவளெல்லாம் என்ன பிறவி..?" அருவெறுத்தாள் சித்ரலேகா..
"இதைத்தான் நானும் நினைச்சுக்குவேன் பாட்டி.. நரேன் பாரின் கிளம்பறதுக்கு முதல்நாள் நைட்டில 'நிலாச்சோறு' விருந்துக்கு ஏற்பாடு பண்ணினேன்.."
"நிலாச்சோறா..?" ஆர்வத்துடன் கேட்டாள் சித்ரலேகா..
"சின்னவயசிலே எங்கம்மா வீட்டிலே அதை ஏற்பாடு பண்ணுவாங்க.. உனக்கு அது கூட தெரியுமா.."
"தெரியும் பாட்டி.. மொட்டைமாடியிலே நானும், அவரும் மட்டும் நிலாச்சோறு விருந்து சாப்பிட்டோம்.. அப்பத்தான் அவர் மனதில இருந்தையெல்லாம் என்னிடம் கொட்டினார் பாட்டி.. பிரியப் போகிறோம்ன்னு அன்னைக்கே அவர் மனசில பட்டதோ என்னவோ.. நிறையப் பேசினார் பாட்டி.. அவர் பிறந்ததில இருந்து நடந்த கதை அத்தனையையும் என்னிடம் சொன்னார்.."
ஊர்மிளா பொங்கி அழுதாள்.. அவள் மனதிலிருந்த துயரை சித்ரலேகாவால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவள் பரிவுடன் ஊர்மிளாவின் கையைப் பற்றித் தட்டிக் கொடுத்தாள்..
'இப்படி மருகுகிறவளா நரேனைப் பிரித்து வைத்து தண்டனை கொடுத்துக்கிட்டு இருக்கிறா..?'
"அன்னைக்குத்தான் உங்களைப் பத்தியும், தாத்தாவைப் பத்தியும், அத்தையைப் பத்தியும் அவர் சொன்னார் பாட்டி.. நீங்க எங்கேயிருக்கீங்கன்னு நான் கேட்டேன.. எங்க கல்யாணத்துக்கு வரலையான்னு விசாரிச்சேன்.."
"என் கண்ணே.."
சித்ரலேகா ஊர்மிளாவின் கன்னங்களைப் பற்றி நெகிழ்ந்தாள்.. அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஊர்மிளா தவித்திருந்த தவிப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. அந்தப் புரிந்து கொள்ளலில்..
'இவள் எங்களை ரட்சிக்க வந்த தேவதை..' என்று தனிமையில் தவித்த அந்த முதியவளின் மனம் கசிந்தது..
"அவர் சொன்னார் பாட்டி.. அவர்தான் உங்களை விட்டுப் பிரிஞ்சு நிற்கிறார்ன்னு சொன்னார்.. அப்போத்தான் நான் அவர்கிட்ட அந்த வாக்கைக் கேட்டேன் பாட்டி.."
"என்ன கேட்டேம்மா..?"
"அவர் பாரின்ல இருந்து திரும்பி வந்ததும் உங்க ரெண்டு பேரையும் பார்த்து ஆசிர்வாதம் வாங்க என்னை அழைச்சுக்கிட்டுப் போகனும்னு கேட்டேன்.. அவரும் வாக்குக் கொடுத்தார்.."
"ஊர்மிளா.."
சித்ரலேகாவின் கைகள் ஊர்மிளாவின் முகத்தை ஏந்தின.. இரு பெண்களின் கண்களும் ஒருவரையொருவர் தேடிய தேடலை இனம் கண்டு கொண்டன..
"எனக்கு உங்களைப் பார்க்கனும்னு இருந்தது பாட்டி.. நம்ம வீட்டைப் பார்க்கனும்.. அந்த வீட்டில்தானே என் நரேனைப் பெற்ற அம்மா பிறந்து வளர்ந்தாங்க.. அவங்க வாழ்ந்த இடத்தைப் பார்க்கனும்னு இருந்தது பாட்டி.. வேற எதுவும் நான் நினைக்கலை.. ஆனா.. அந்த அகல்யா.. நரேனை அவளை விட்டுப் பிரிக்க நான் திட்டம் போடறேன்னு சொல்லிட்டா பாட்டி.."
"நீங்க மொட்டை மாடியிலே பேசிக்கிட்ட விவரம் அவளுக்கு எப்படிம்மா தெரிய வந்தது..?"
"பாவி..! ஒளிஞ்சு மறைஞ்சு எங்களைப் பார்த்துக் கிட்டு இருந்திருக்கா பாட்டி.."
ஊர்மிளாவின் முகம் அன்றைய நினைவில் கன்றிச் சிவந்துவிட்டது.. அவள் பேச முடியாமல் தடுமாறினாள்..
"பாட்டி.. யாருமில்லாம நாங்க மட்டும் இருக்கோம்ங்கிற நினைவில.. நாங்க.."
ஊர்மிளா உதட்டைக் கடித்துக் கொண்டதில் சித்ரலேகாவிற்குப் புரிந்து விட்டது..
"த்தூ..! அவளெல்லாம் என்ன ஜென்மம்.."
"அவர் என்னை விளையாட்டாய் துரத்தறார்... சிரிச்சுக்கிட்டே ஓடி வந்தேன் பாட்டி.. என்னைக் கண்டதும் அந்த அகல்யா தடதடன்னு மாடிபடியில இறங்கிப் போறா பாட்டி.."
"ஈனப்பிறவி..! புருசன் பெண்டாட்டியோட அந்தரங்கப் பேச்சை ஒட்டுக் கேட்டு வேவு பார்க்கிற பிறப்பெல்லாம் மனுசப் பிறப்பில்லம்மா.. சாக்கடையிலே கிடக்கிற புழும்மா அது.."
"எனக்கு உடம்பெல்லாம் கூசிருச்சு பாட்டி.."
அடுத்து நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் ஒப்பித்து முடித்தாள் ஊர்மிளா.. சொல்லி முடித்ததும் அவள் மனதில் அதுநாள்வரை சட்டமாக உட்கார்ந்திருந்த பாறாங்கல் இறங்கி ஓடி விட்டதைப் போல இருந்தது.. மனது லேசாக மாறுவதைப் போல உணர்ந்தாள்..
"சொல்லுங்க பாட்டி.. உங்க பேரன் கேட்ட கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்..? அந்த அகல்யா போட்ட சவாலில ஜெயிச்சுட்டா பாட்டி.. அதுக்கு மேலேயும் அந்த வீட்டிலே அவர்கூட வாழ என்னால முடியுமா பாட்டி..? நான் அப்பாம்மாவிடம் ஓடினேன்.. உங்க பேரன் என்னைத் தேடி வரலையே.. அப்படி அவர் தேடி வந்திருந்தா அந்த விதத்திலே நான் அகல்யாவை ஜெயிச்சிருப்பேன்.. இல்லை பாட்டி.. அவர் வரலை.. அவ சொன்னா.. ராதாகிருஷ்ணன் யார்ங்கிற கேள்விக்கு பதில் சொல்லி உன்னை நீ புரூவ் பண்ணாத வரைக்கும் உன் புருசன் உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டான்னு.. இவர் அதை புரூவ் பண்ணிட்டாரே பாட்டி.."
"ஊர்மிளா.."
"அவ ஈன ஜென்மமா இருக்கலாம் பாட்டி.. அந்த ஈன ஜென்மம் சொன்ன வார்த்தை உண்மையாகலாமா பாட்டி..? அது நியாயமா..?"
"ஊர்மிளாம்மா.."
"அவ சொன்னா பாட்டி.. உன்னை நரேன் கேள்வி கேட்பான்னு சொன்னா.. அவளைப் போல ஒரு ஈன ஜென்மம் சொல்கிற பேச்சைக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்து என் நரேன் அப்படியொரு கேள்வியைக் கேட்டு விட்டால் அந்தக் கணமே அவரை விட்டு நான் பிரிந்து விடுவேன்னு நானும் சொன்னேன் பாட்டி.. நீங்களே சொல்லுங்க பாட்டி.. அப்படி அவர் கேட்ட பின்னாலே அவருக்கு விளக்கம் சொல்லி புரிய வைச்சுட்டு அவர்கூட நான் வாழ்கிற வாழ்க்கை வாழ்க்கையாக இருக்குமா பாட்டி.."
'எப்படி இருக்கும்..?'
சித்ரலேகா துயருடன் ஊர்மிளாவை தோள் சாய்த்துக் கொண்டாள்.. அகல்யா மிகச் சரியான ஆடுகளத்தைத் தேர்ந்தெடுத்து விளையாட்டை நடத்தியிருக்கிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது.. அகல்யாவைப் போன்றவர்களுக்கு இது ஒரு பிரச்னையே அல்ல.. ஆனால் சித்ரலேகா, நளினி, ஊர்மிளாவைப் போல இருக்கிற பெண்களுக்கு இது ஒரு மாபெரும் இடி..!




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -94
அழகான ராட்சசியே -94
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-94.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-94.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy