அழகான ராட்சசியே -93

93 அட்சய சுரபியாக.. அன்பை வாரி வழங்குகிற... அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் அதை மறுக்கவில்லை.. தாத்தா , பாட்டியின் பேச்சுக்கு எ...


93
அட்சய சுரபியாக..
அன்பை வாரி வழங்குகிற...
அழகான ராட்சசி நீ....

நரேந்திரன் அதை மறுக்கவில்லை.. தாத்தா, பாட்டியின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் கனிந்த முகத்துடன் அவன் நின்றான்..
அது ஏன் என்பது.. வீட்டுக்குள் போனதும் நளினியின் உருவப் படத்திற்கு முன்னால் ஊர்மிளாவை நிறுத்தி வைத்தபோது புரிந்தது..
மிகப்பெரிய ஓவியம் போன்ற புகைப்படத்துக்குள் அமைதியே வடிவமாக, அழகான சித்திரமாக சிரித்துக் கொண்டிருந்தாள் நளினி.. அவளைப் பார்த்தவுடன் எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது ஊர்மிளாவிற்கு.. எங்கே பார்த்திருக்கிறோம் என்ற சிந்தனையுடன் நரேந்திரனைப் பார்த்தவளுக்கு அந்த உருவ ஒற்றுமை பிடிபட்டு விட்டது..
நரேந்திரன் தாயின் சாயலோடு இருந்தான்.. எதனால் அவனுக்கும்.. அருண்குமார், அர்ச்சனாவிற்கும் உருவ ஒற்றுமை இல்லாமல் போனது என்று அன்றுதான் ஊர்மிளாவுக்குப் புரிந்தது..
அதனால்தான் அகல்யா அடிக்கடி நரேந்திரனிடம் புலம்பினாளா..?
"பாரு நரேன்.. உன்னோட தம்பி, தங்கைன்னு இவங்களைச் சொல்லிக்கிட்டா யாரும் நம்ப மாட்டேங்கிறாளாம்.. அதுக்குத்தான் உன்னோட பிஸினெஸ் சம்பந்தமான பார்ட்டிகளுக்கு இவங்களையும் கூடக் கூப்பிட்டுக்கிட்டுப் போன்னு நான் கெஞ்சறேன்."
நரேந்திரன் அசைந்து கொடுக்க மாட்டான்.. அப்படி அகல்யா புலம்பியதற்கான காரணம் இதுதானா..? அருண்குமாரும், அர்ச்சனாவும்.. அகல்யாவின் சாயலில் இருந்தார்கள்.. நளினியின் சாயலில் இருப்பவனின் தம்பி, தங்கையாக அவர்களை மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள்..?
"என்னோட பிஸினெஸ் வட்டாரத்தில இருக்கிற அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டுப் போவாங்க.. நரேன் அப்படியே நளினியின் ஜாடையில் இருந்தான்.. அதனாலேயே என் பேரன்ங்கிறதை இவன் சொல்லாமலே மத்தவங்க ஈஸியா கண்டு பிடிச்சுருவாங்க.."
இப்படிப்பட்ட பின்புலத்தையா அகல்யா தன்னுடையதாக்கிக் கொள்ளப் பார்த்தாள்..?
ஊர்மிளா மன பாரத்துடன் நளினியின் முன்னாலிருந்த விளக்கின் திரியை தூண்டி விட்டு.. அதன் சுடரைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்... கை குவித்து நரேந்திரனைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அந்தப் புண்ணியவதியின் படத்தின் முன்னால் கை குவித்து நின்றாள்.. கண்மூடி.. மனமுருக.. மனம் விட்டு.. மாமியாருடன் மனதுக்குள் பேசத்துவங்கினாள்.. அவளது உதட்டசைவைக் கண்ட கஜேந்திரனும், சித்ரலேகாவும் அசைவற்று நின்று விட்டார்கள்.. ஆத்மார்த்தமான ஊர்மிளாவின் செய்கையில் நளினியைப் பெற்றவர்களுக்குப் புல்லரித்து விட்டது..
யார் சொல்லி ஊர்மிளா அதைச் செய்தாள்..? இயல்பான அவளின் அந்த வேண்டுதலில்..
"நீ எங்களுக்கும், இவளுக்கும் ஒரே சமயத்திலே அநியாயம் செய்து விட்டாயடா.." என்று மனம் குமுறினாள் சித்ரலேகா..
"உண்மைதான் பாட்டி.." குற்ற உணர்வுடன் சொன்னான் நரேந்திரன்..
நளினியிடம் என்ன சொன்னாளோ.. கண்மூடி மனதுக்குள் பேசிக் கொண்டிருந்த ஊர்மிளாவின் முகம் லேசாகத் தெளிந்தது.. கண்திறந்தவள் சித்ரலேகாவைப் பார்த்து புன்னகை செய்தாள்..
"வாம்மா.. உனக்கு வீட்டைச் சுற்றிக் காட்டறேன்.." சித்ரலேகா அவளை அழைத்துக் கொண்டாள்..
"சுரேன்.. அவனுக்குப் பாலாற்றிக் கொடுக்கனுமே.." ஊர்மிளா தயங்கினாள்..
"நாங்க எதுக்கு இருக்கிறோம்.. நாங்க பார்த்துக்கிறோம்.. நீ உன் பாட்டிகூட வீட்டைச் சுற்றிட்டு வா.." கஜேந்திரன் சுரேந்திரனை மடியில் வைத்துக் கொண்டு சொன்னார்..
"விட்டால் ஊரைச் சுற்றிட்டு வாங்கன்னு பாட்டியையும்.. பேத்தியையும் அனுப்பி வைச்சிருவீங்க போல.." நரேந்திரன் கிண்டலடித்தான்..
"செய்வேண்டா.. உன்னைப் போல பெண்டாட்டியோட மனசைப் புரிஞ்சுக்காதவனில்ல நான்.. அவங்க மனசைத் தெரிஞ்சு நடந்துக்கிறவண்டா.."
கஜேந்திரனின் பெருமையில் நரேந்திரன் முகம் மாறினான்.. அதைப் பாராததைப் போல பார்த்த சித்ரலேகாவின் முகத்தில் துயரம் வந்தது.. லேசான பெருமூச்சுடன் ஊர்மிளாவுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள்..
'மாளிகை போல..' என்று ஊர்மிளா நினைத்துப் பார்த்த அந்த வீடு மாளிகையைப் போலதான் இருந்தது.. அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஹாலுக்கு வந்தபோது ஊர்மிளாவுக்கு கால்வலியே வந்திருந்தது.. அங்கே கண்ட காட்சியில் அப்படியே நின்றுவிட்டாள்..
கோடிஸ்வர கஜேந்திரன்.. ஹாலில் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து.. இரு தம்ளர்களில் இருந்த பாலை ஆற்றிக் கொண்டிருந்தார்.. அருகிலிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு படு தோரணiயாக அமர்ந்திருந்தான் சுரேந்திரன்.. இவர் பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்குப் புகட்டினார்.. அவனோ ஒரு வாய் குடித்து விட்டு சூடாக இருக்கிறது என்ற பாவனையுடன் தம்ளரைத் தள்ளி விட்டான்.. இவர் காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதைப் போல பாவனை செய்து விட்டு திரும்பவும் பாலை ஆற்றினார்.. அவன் மிடுக்காக முகத்தை வைத்துக் கொண்டு வெகு கறாராக அவர் வேலை செய்வதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..
'இந்தக் குட்டிக்கு இருக்கிற அழும்பைப் பாரேன்..'
ஊர்மிளா அவசரமாக கஜேந்திரனின் பக்கத்தில் போனாள்.. பணிவுடன் குனிந்து பால் தம்ளரை வாங்க முயன்றாள்..
"நான் ஆற்றிக் கொடுத்துக்கறேன் தாத்தா.. நீங்க போய் இந்த வேலையெல்லாம் பார்க்கலாமா..? அதுவும் தரையில் உட்கார்ந்திருக்கீங்க.. எழுந்திருங்க தாத்தா.."
"மூச்.." வாயில் ஒற்றை விரலை வைத்து அவளை எச்சரித்தார் கஜேந்திரன்..
"தாத்தா.." அவள் திகைத்தாள்..
"எனக்கும் குட்டிப்பயலுக்கும் இடையே அவன் அம்மாகூட வரக்கூடாது.. நானாச்சு.. அவனாச்சு.. நீ போய் உன் பாட்டியோட சேலை முந்தானையைப் பிடித்துக்கங்கறேன்.."
"ஆனா தாத்தா.. இவன் உங்க கண்ட்ரோலுக்கு வர மாட்டான்.."
"ஏன் வரனும்..? என் நளினியின் பேரனோட கண்ட்ரோலுக்குள்ள நான் போயிட்டுப் போறேன்.. எனக்கு அதிலதான் சந்தோசம்.."
கஜேந்திரன் அவளை மறந்தவராக சுரேந்திரனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சி பாலைக் குடிக்கச் சொன்னார்.. அவனும் போனால் போகிறதென்று குடிக்க ஆரம்பித்தான்..
'எப்பேர்பட்ட பாசம் இது..!' பிரமிப்புடன் சித்ரலேகாவைத் தேடிப் போனாள் ஊர்மிளா..
"உனக்கு இங்கேயென்ன வேலை.. உன் ரூம் மாடியில இருக்கு.. போ.. போய் குளிச்சு டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.." சித்ரலேகா அவளை விரட்டினாள்..
"சுரேன் இங்கேயிருக்கானே பாட்டி..?"
"அவன் இங்கேதான் இருப்பான்.."
"அவனைக் குளிக்க வைத்து டிரெஸ் சேன்ஜ் பண்ணனுமே.."
"அதை நாங்க பார்த்துக்குவோம்.."
"நாங்கன்னா..?"
"உன் தாத்தாவும், பாட்டியும்தான்.."
"உங்களுக்கு எதுக்கு பாட்டி வீண் சிரமம்..?"
"சிரமமா..? நல்லாச் சொன்னே போ.. இதுக்குத்தானே இத்தனை காலமா இந்தக் கிழவனும், கிழவியும் தவமிருந்தோம்.. இதுக்கு நாங்ககொடுத்து வைச்சிருக்கனுமே.. ஆண்டவனோட அருளால அந்தக் கொடுப்பினை எங்களுக்குக் கிடைச்சிருக்கு.. அதை நாங்க அனுபவிக்க வேணாமா..? நீ போம்மா.."
சித்ரலேகா கஜேந்திரனிடம் போய் விட்டாள்.. கணவருக்குப் பக்கத்தில் அவளும் தரையில் உட்கார்ந்து.. சுரேந்திரன் பிஞ்சுப் பாதங்களைப் பிடித்து முத்தம் கொடுத்ததில் ஊர்மிளாவின் மனம் நெகிழ்ந்தது.. அந்த வயோதிக கோடிஸ்வரத் தம்பதிகள் எந்த அளவுக்கு பேரனின் அருகாமைக்கு ஏங்கியிருக்கிறார்கள் என்பதை அது உணர்த்தியது..
'நீ பாவி அகல்யா..' மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..
'உன் சுயநலத்திற்காக.. இந்த வயதானவர்களிடமிருந்து இவர்களின் பேரனை பிரித்து வைத்திருக்கிறாய்.. உனக்கு மன்னிப்பே கிடையாது..'
அவள் அங்கேயே நிற்பதைப் பார்த்த சித்ரலேகா புருவங்களை உயர்த்தினாள்.. ஊர்மிளா தயங்கினாள்..
"அவனுக்கு மாத்து டிரஸ் பாட்டி..? அது பெட்டியில இல்ல இருக்கு.. நான் எடுத்துக் கொண்டு வரவா..?"
"வேணாம்மா.. என் கொள்ளுப் பேரனுக்குன்னு ஷெல்ப் முழுக்க புதுடிரஸ்ஸா வாங்கிக் குமிச்சுருக்கேன்.. அதைப் போட்டு விட்டு அழகு பார்க்க வேணாமா..?"
'என்ன இது..?'
ஊர்மிளாவுக்கு அவள் சிறுவயதில் பார்த்த 'பூவே பூச்சூடவா..' படம் நினைவுக்கு வந்து விட்டது..
அந்தப் படத்தில் வரும் பாட்டியைப் போல அல்லவா சித்ரலோக பேசுகிறாள்..?
மாடிப்படிகளில் ஏறியபடி ஊர்மிளா திரும்பிப் பார்த்தாள்.. கஜேந்திரனும்.. சித்ரலேகாவும்.. சுரேந்திரனின் கால்களைப் பிடித்து ஆட்டியபடி அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்..
'அழைப்பு மணியோசை..
             எந்த வீட்டில் கேட்டாலும்
    ஓடி நான் வந்து பார்ப்பேன்..
             தென்றல் என் வாசல்..
    தீண்டவே இல்லை..
             கண்ணில் வெந்நீரை வார்த்தேன்..
                 தென்றலும் வந்தது..
    ஜீவ அமுதங்கள் ஓயும் முன்னாலே..
             நீயும் நெய்யாக வந்தாய்..
    இந்தக் கண்ணீரில் சோகமே இல்லை..
             கண்ணில் ஆனந்தம் தந்தாய்..'
ஊர்மிளாவின் நெஞ்சில் பாடல் ஒலித்தது.. அவள் மாடிஹாலை அடைந்து.. அதன் இருபக்கமும் இருந்த அறைகளில்... அவளுக்கும், நரேந்திரனுக்குமான அறையென்று சித்ரலேகா சுட்டிக் காட்டியிருந்த அறையின் கதவில் கை வைத்துத் தள்ளினாள்.. கதவு தாழிடப்படாமல் இருந்ததால் திறந்து கொண்டது.. உள்ளே அப்போதுதான் குளித்து முடித்து ஈரமான நீர்த் துளிகள் உடல் முழுவதும் படிந்திருக்க ஈரத்துவாலையை இடுப்பில் கட்டியபடி கட்டிலில் இருந்த பெட்டிகளில் ஒன்றைத் திறந்து கொண்டிருந்தான் நரேந்திரன்.. அந்தக் கோலத்தில் அவனைப் பார்த்த ஊர்மிளாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. சென்னை வீட்டில் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டது உண்டுதான் என்றாலும்.. அப்போதெல்லாம் சுரேந்திரன் கூட இருந்ததினால் ஊர்மிளா சமாளித்து விடுவார்.. அவன் எதைத் தேடுகிறான் என்பதை யூகித்து அதை சுரேந்திரனின் கைகளில் கொடுத்து "அப்பாவிடம் கொடு.." என்று அனுப்பி வைத்து விடுவாள்.. அவனும் சமர்த்தாக தகப்பனிடம் போய் தாய் கொடுத்து அனுப்பியதை நீட்டி விடுவான்..
"குட்.." மகனின் கன்னத்தில் தட்டியபடி அதை வாங்கிக் கொள்ளும் நரேந்திரனின் பார்வை அவளை ஊடுருவும்..
இப்போது அதற்கு வழியில்லாமல் சுரேந்திரன் தாத்தா, பாட்டியிடம் இருந்ததில்.. ஊர்மிளா தடுமாறிப் போனாள்..
அறையை விட்டு வெளியில் போகலாமென்றால்.. சித்ரலேகா அவளை என்னவென்று கேட்பாள்.. ஊர்மிளாவால் என்ன விளக்கத்தைச் சொல்ல முடியும்..? இப்படி என் கணவன் ஈரத்துவாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு நிற்கிறான்.. நான் சங்கடப்பட்டுக் கொண்டு வெளியில் வந்து நிற்கிறேன் என்று சொல்ல முடியுமா..? சொன்னால் சித்ரலேகா அதை மெச்சிக் கொள்வாளா..?
அதற்குள் அவளைப் பார்த்து விட்ட நரேந்திரன் நிமிர்ந்ததில் அவனது வெற்றுமார்பின் நீர்த்துளிகள் அவளைப் பார்த்து துடைத்து விட அருகில் வரச் சொல்லி அழைப்பு விடுத்தன.. கலைந்திருந்த அவனது ஈரத் தலைமுடியில்..
'ஒழுங்காய தலையைத் துவட்டிக் கொள்ளத் தெரியாதா..? சுரேந்திரனை விட இவர் சின்னப் பையனா..?' என்று மனம் சினந்தாள்..
"என் டவலை எங்கே வைச்சே..?"
அவளின் தடுமாற்றத்தைக் கவனிக்காததைப் போல வெகு இயல்பாக கேட்டான் நரேந்திரன்..
"அது பெட்டியிலே அடியிலே இல்ல இருக்கும்.. இந்த டவல் எப்படிக் கிடைச்சது..?" ஊர்மிளா முகச் சிகப்புடன் அவன் இடுப்பில் சுற்றியிருந்த டவலைக் காட்டினாள்..
"இதுவா..? டிரஸ்ஸிங் ரூமிலே.. டீப்பாய் மேலே மடிப்புக் கலையாம இருந்தது.." என்றான் நரேந்திரன்.
"அப்படின்னா.. டிரஸ்ஸிங் ரூம் ஷெல்பில் வேற டவல்ஸ் இருக்கலாமில்லையா..? அங்கே பார்த்தீங்களா..?"
"ஆமாமில்ல.. அதை ஏன் மறந்து போனேன்..?"
ஊர்மிளாவிடமே கேள்வி கேட்டு விட்டு டிரஸ்ஸிங் ரூமுக்குள் போனான் நரேந்திரன்..
'அப்பாடி..' ஆசுவாசப் பெருமூச்சுடன் உட்கார்ந்தாள் ஊர்மிளா..
"ஊர்மிளா.. ஒரு நிமிசம்.."
நரேந்திரனின் குரல் அழைத்தது.. என்னவோ ஏதோ.. என்று ஊர்மிளா அங்கே போனாள்.. நரேந்திரன் கையில் உலர்ந்த துவாலையுடன் நின்றிருந்தான்..
"நீ சொன்னது சரிதான்.. இங்கே ஷெல்பில் டவல் இருக்கு.. எடுத்துட்டேன்.." நீட்டினான்..
"அதான் இருக்கில்ல.. அப்புறம் என்னை எதுக்காக கூப்பிட்டிங்க..?" புரியாமல் கேட்டாள் ஊர்மிளா..
"என் தலை ஈரமாயிருக்குன்னு நீதானே கவலைப் பட்ட..? துவட்டி விடு.." அவளிடம் தலையைக் காட்டினான் நரேந்திரன்..
"நோ.. நோ.." கை சுட்டு விட்டதைப் போல துவாலையைத் தொடாமல் துள்ளிப் பின்னால் நகர்ந்தாள் ஊர்மிளா..
"என்னடி..?" நரேந்திரன் அவளை விடவில்லை.. வழிமறித்தான்..
"நானொன்னும் கவலைப்படலை.." அவள் மறுத்தாள்..
"இல்லேன்னு எங்கம்மா மேலே பிராமிஸ் பண்ணு பார்க்கலாம்.." அவன் சவால் விட்டான்..
"உங்க அம்மா மேலேயா..?" அவள் திகைத்தாள்..
"யெஸ்.. எங்க அம்மா மேலேதான் நீ பிராமிஸ் பண்ணனும்.. வந்தவுடனே மாமியார் படம் முன்னாலே உருகி உருகி வேண்டினேயில்ல.. அவங்க பெத்த மகன் எக்கேடு கெட்டா என்னன்னு விடுவியா..? தாயில்லாப் பிள்ளைடி.. ஈரத்தலையை நீ துவட்டி விடலைன்னு வைய்யி.. நானும் துவட்டிக்க மாட்டேன்.. இப்படியே டிரெஸ்ஸை மாட்டிக்கிட்டு வந்துருவேன்.. அதுக்கப்புறம் எனக்கு ஃபீவர் வந்திருச்சுன்னா அதுக்கு நீதான் பொறுப்பு.."
அவன் பயமுறுத்தியதில் அவள் கைகளைப் பிசைந்தபடி தவித்தாள்..
"ஏண்டி.. நான் என்ன கட்டிலுக்கா கூப்பிடறேன்..? ஈரத் தலையைத் துவட்டி விடுன்னுதானே கேட்கறேன்..? அதைச் செய்யக் கூட நீ இந்த அளவுக்கு யோசிப்பியா..? உனக்கே இது ஓவராத் தெரியலையா ஊர்மிளா..? உன் முன்னால் நிற்கிறவன்.. தெருவில் போகிற மூணாம் மனிதன் இல்லைடி.. உன்னைத் தொட்டுத் தாலி கட்டின உன் ஹஸ்பெண்ட்.. எனக்குத் தலை துவட்டி விடறதுனாலே உன் கற்பு குறைஞ்சிராது.. அதுக்கு நான் கேரண்டி.."
அதற்கு மேலும் அவனைப் பேச விட்டால் அவளை ஒருவழி பண்ணி விடுவான் என்பதில் அவசரமாக அவன் கையில் இருந்த துவாலையைப் பிடுங்கி அவன் தலையை அழுத்திப் பிடித்துத் துவட்டி விட ஆரம்பித்தாள் ஊர்மிளா.. அவன் உதடுகளில் வெற்றிப் புன்னகை வந்தது..
அந்தப் பிடிவாதக்காரனின் முகத்தை வெகு அருகாமையில் பார்த்தவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறப்பதைப் போன்ற ஏதோவொரு இம்சையான இன்ப உணர்வு எழுந்து.. ஊர்மிளா தன் மயக்கத்தை மறைக்கப் போராடினாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -93
அழகான ராட்சசியே -93
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-93.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-93.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy