அழகான ராட்சசியே -91

91 காலமென்னும் பாதையிலே.. கால் போன போக்கில் போன.. அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.. முன் சீட்டிலி...


91
காலமென்னும் பாதையிலே..
கால் போன போக்கில் போன..
அழகான ராட்சசி நீ....


நரேந்திரன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.. முன் சீட்டிலிருந்த கண்ணாடியை அடிக்கடி பார்த்துக் கொண்டான்.. அந்த இரவு நேரப் பயணத்தில் கடந்து போன வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தில் அழகோவியமாக தெரிந்தாள் ஊர்மிளா.. மகனை மடியில் படுக்க வைத்திருந்தாள்.. தூங்கிக் கொண்டிருக்கும் மகன் கீழே புரண்டு விழுந்து விடக் கூடாது என்று வலது கரத்தால் அவனை இறுக்கி அணைத்திருந்தாள்..
அதைப் போல நரேந்திரனை அவள் மடியில் படுக்க வைத்திருந்த தருணங்களை நினைவு கூர்ந்தான் நரேந்திரன்.. அவன் வெளிநாட்டிற்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவில்.. மொட்டை மாடியின் நிலா விருந்தில்.. தரையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்து அவனை மடியில் கிடத்திக் கொண்டவள்தான் அவள்..
'அந்த மூன்லைட் டின்னரை அகல்யா வேவு பார்த்தாங்களா..?'
நரேந்திரன் பல்லைக் கடித்தான்.. இது போல அவனுடைய கவனத்திற்கு வராத எத்தனை செய்திகள் அவள் மனதில் புதைந்திருக்கின்றனவோ என்ற வருத்தம் அவனுக்கு ஏற்பட்டது..
நரேந்திரன் மனைவி இது போன்ற அநாகரிகப் பேச்சுக்களையும், செயல்களையும் எதிர்கொண்டாளா..?
துயரம் தோய்ந்த ஊர்மிளாவின் தோற்றம் நிழலோவியமாக கண்ணாடியில் தெரிந்தது.. இவள் சுமக்கும் பாரத்தை இறக்கி வைக்கவே முடியாதா என்று அவன் மனம் மருகினான்..
ஒரு நொடி அவனைப் பிரிந்தால் கூட விழிகளால் அவனைத் தேடுபவள்.. அவன் வெளிநாட்டில் இருக்கும் போது செல்போனில் கூட ஏன் பேசவில்லை..?
இதற்குப் பின்னால் பலமான காரணம் ஒளிந்திருக்க வேண்டும்.. என்று நரேந்திரன் அன்றும் நினைத்தான்.. இன்றும் நினைத்தான்.. எங்கே.. அதைத்தான் ஊர்மிளா வாய் விட்டுச் சொல்ல மறுக்கிறாளே.. தனக்குள்ளே இறுகி புதைந்து போகிறாளே..
"என்னதாண்டி நடந்தது..?" அவன் கேட்டு விட்டான்..
ஜன்னல் வழியாக வானத்தில் தெரிந்த நிலவையும்.. நட்சத்திரங்களையும் வெறித்துக் கொண்டிருந்த ஊர்மிளா தூக்கிவாரிப் போட்டவளாக அவன் பக்கம் திரும்பினாள்..
"என்ன கேட்டிங்க..?"
"என்னதான் நடந்ததுன்னு கேட்டேன்.."
ஊர்மிளா பதில் சொல்லவில்லை.. உதட்டைச் சுழித்த அவளின் வெறுப்புச் சிரிப்பை கடந்து போன வாகனத்தின் வெளிச்சம் காட்டிக் கொடுத்தது..
'அவ்வளவுதான்.. இறுகிப் போவா..' அவனுக்கு வெறி வெறியாய் வந்தது..
"ஏண்டி என்னை இந்தப் பாடு படுத்தற..?" எரிச்சல் பட்டான்..
"நான் என்ன செய்தேன்..?" நிதானமாக அவள் நியாயம் கேட்டாள்..
"ஆட்டுக்குட்டியைப் போல.. நீங்கள் சொடக்குப் போட்டுக் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பின்னாலேயே ஃபாலோ பண்ணி வந்துக்கிட்டு இருக்கேன்.. தஞ்சாவூரில் வேலை பார்த்தேன்.. சென்னைக்கு வர வைத்தீங்க... வேலையும் போச்சு.. மூச்சு விடாமல் வந்தேனா இல்லையா..? இப்ப எங்கே போகிறோம்ன்னே தெரியாம டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. இப்பவும் வாய் பேசாம உங்க பின்னால் வருகிறேனா இல்லையா..?"
"ஓ..."
அவளின் நீண்ட விளக்கத்தை ரசித்துக் கேட்டவன்.. அவளிடம் திருத்தமாக ஒரு விளக்கத்தைக் கேட்டான்..
"நான் சொடக்குப் போட்டுக் கூப்பிட்ட அத்தனை இடத்துக்கும் நீ அப்ஜெக்சன் பண்ணாம வந்துட்டியா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டவன் எதைக் குறிப்பிட்டுக் கேட்கிறான் என்று அவளுக்கு விளங்கி விட்டது.. அந்த இருள் படர்ந்த மெலிதான வெளிச்சத்திலும் அவளது முகச் சிவப்பை அவனால் கண்ணாடியில் பார்க்க முடிந்தது.. அவன் மனம் உல்லாசமானது..
"இதுக்குப் பதில் சொல்ல மாட்டியே.." அவன் குரலில் சிரிப்பிருந்தது..
"ஹெவி டிராபிக்.." சம்பந்தமில்லாமல் சொன்னாள் ஊர்மிளா..
"அதுக்கு..?"
"ரோட்டைப் பார்த்துக் காரை ஓட்டுங்க.."
"அப்படிங்களா மேம்.. நீங்க சொன்னா சரிதான் மேம்.."
அவனின் கேலியில் அதிகமாக முகம் சிவந்தாள் ஊர்மிளா.. இதமான ஏஸியின் குளிரில்.. வெளிச்சமில்லாத அந்த இரவுப் பயணம் அவளை ஏதோ செய்தது... அதற்கேற்றார் போல சிடி பிளேயரில் ஓடிக் கொண்டிருந்த பாடலும் அவளுக்குள் இன்பமான இம்சையை விதைத்தது..
"எனக்காக வா..
             நான் உனக்காக வா..."
ஒலித்த பாடல் கிளப்பி விட்ட ஓராயிரம் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர யத்தனித்தபடி ஜன்னலில் வேடிக்கை பார்ப்பதைப் போல காரை ஓட்டிக் கொண்டிருந்தவனை வேடிக்கை பார்த்தாள் ஊர்மிளா.. கலைந்திருந்த அவன் முடியில் விரல் விட்டுக் கோத அவள் மனம் ஆசை கொண்டது.. ஆசையை அதட்டி வைத்தாள்..
கண்ணுக்கு முன்னால் இருந்தும் எட்டாத தொலைவில் இருக்கிறவனைப் போல அவளை ஏங்க வைத்தவனின் புஜங்களைத் தழுவிச் சேர்ந்துவிடத் துடித்தது அவள் மனம்..
ஊர்மிளா பெருமூச்சு விட்டாள்.. இது துயரம் என்று நினைத்துக் கொண்டாள்.. கட்டிய கணவனை கட்டியணைக்க முடியாமல் போவது.. அவளது விழியோரம் கண்ணீர் அரும்பு கட்டியது.. துயரத்துடன் சீட்டில் தலை சாய்ந்தாள்..
"நான் உன் பக்கத்தில்தான் இருக்கிறேன் ஊர்மிளா.."
நரேந்திரனின் குரல் அவளை ஊடுறிவியது.. அவன் எதைச் சொல்கிறான் என்று அவளுக்குப் புரியாவிட்டாலும்.. அவளுக்கும்.. அவனுக்குமான அந்தரங்கத்தைத்தான் சொல்லப் போகிறான் என்று அவள் மனதுக்குள் ஒரு பட்சி சொன்னது..
"நீ நினைச்சா என்னை மடியில சாய்த்துக்கலாம்.. என் தலை முடியில் விரல் விட்டுக் கோதலாம்.. யார் உன்னைத் தடுக்கிறது..? நான் உன்னுடையவன் டி.."
ஊர்மிளாவுக்கு அழுகையே வந்து விட்டது.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு கேவலை அடக்கிக் கொண்டாள்..
"ப்ளீஸ்.. காரை ஓட்டற வேலையை மட்டும் பாருங்க.." என்று சொன்னாள்..
"நானென்ன உனக்கு கார் டிரைவரா..?" அவன் சட்டமாக கேட்டு வைத்தான்..
"இப்படி வம்பிழுக்கத்தான் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தீங்களா..?"
"காரில் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கேன்.. தூக்கிப் போட்டுக்கிட்டு வரலை.. நீ சொன்ன பின்னால் தான் ஏன் அதைச் செய்யாமல் விட்டேன்னு ஆசை ஆசையாய் வருது.."
இவன் பேசாமல் வரக் கூடாதா என்றிருந்தது ஊர்மிளாவுக்கு.. அவள் தபஸ்வினி அல்ல.. முற்றும் துறந்த சன்யாசினி அல்ல.. நரேந்திரன் என்ற மனிதனின் மீது அளவுகடந்த ஆசையையும், காதலையும் வைத்திருந்தவள்.. வைத்திருக்கிறவள்.. அவளுடைய எதிர்பார்ப்புகளை அவன் தவிடு பொடியாக்கி அகல்யாவின் முன்னால் தோற்றுப் போக வைத்த பின்னாலும்.. பிரிந்து வந்து அவனின் நினைவுச் சுமையைத் தாங்க முடியாமல் ஒடிந்து விழுந்தவள்..
அவனைப் பிரிந்து.. அவனின் நினைவோடு வாழ்கிற போது அவள் தபஸ்வினியாக இருந்தாள்.. ஆசாபாசங் களைத் துறந்த சன்யாசினியாக இருந்தாள்.. அவனுடைய நினைவுடன் தபோ வாழ்வை வாழ அவளால் முடிந்தது..
இப்போது அப்படியில்லையே.. அவள் மனதில் இருந்தவன்.. நிஜத்தில் எதிரில் நின்று தொலைக்கிறானே.. அவளை பார்வையாலும் பேச்சாலும் அழைக்கிறானே.. அவனுடைய அழைப்பை ஏற்று அவன் அணைப்பில் அடங்கத் துடிக்கும் மனதையும், உடலையும் கட்டுப் படுத்திக் கொள்ள அவள் பாடாய்பட வேண்டியிருக்கிறதே..
வழியில் காபி ஷாப்பில் காரை நிறுத்தினான் நரேந்திரன்.. விழித்துக் கொண்ட சுரேந்திரனை அங்கிருந்த பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்தாள் ஊர்மிளா.. மகனின் முகத்தைத் துடைத்து விட்டுக் கொண்டிருந்தவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டான் நரேந்திரன்..
"அதிக சூடில்லாமல் ஒரு கப் பால்.. சூடா இருந்தா இவன் குடிக்க மாட்டான்.." என்றாள் ஊர்மிளா..
"நான் சுரேனைக் கேட்கவில்லை.. உன்னைத்தான் கேட்டேன்.. ஆல்ரெடி அவனுக்குப் பால்சொல்லி ஆற்றி வாங்கிக் கொண்டு வந்தாகி விட்டது.. உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு.. காபியா..? டீயா..?" எரிச்சலுடன் சுரேந்திரனுக்கான பாலை நீட்டினான் அவன்..
"எப்படித் தெரியும்..." வியப்புடன் பால்கப்பை வாங்கிக் கொண்ட ஊர்மிளா மகனுக்கு அதை புகட்டத் துவங்கினாள்..
"நான் அவனுக்கு அப்பாடி.." நரேந்திரன் சீறினான்..
அவனுடைய சீற்றம் எதற்காக என்று அவனுக்கும் தெரியவில்லை.. அவளுக்கும் தெரியவில்லை.. அவளை ஆள முடியாத கோபம் அவ்வபோது சீற்றமாக வந்து வெடிக்கிறது என்பதை அவர்கள் இருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை..
"உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லப் போறியா இல்லையா..?" அவன் கோபப் பட்டான்..
"டீ.." ஊர்மிளா முணுமுணுத்தாள்..
"அதைச் சத்தமாத்தான் சொல்கிறது..?" நரேந்திரன் அதற்கும் அவளை முறைத்தபடி காபி ஷாப்பிற்க்குள் போனான்..
காரின் பின் சீட்டின் கதவை திறந்து வைத்த ஊர்மிளா மகனை காருக்குள் உட்கார வைத்தாள்.. நரேந்திரன் டீயுடன் வந்துவிட.. அதை வாங்கிப் பருகியபடி அவனைப் பார்த்தாள்.. அவனும் அவளையேதான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.. பார்வைகள் பின்னிக் கொண்டன.. அவன் கண்களில் மின்னல் வந்தது.. அவள் முகத்தில் வெட்கம் வந்தது.. தடுமாற்றத்துடன் பார்வையை விலக்கிக் கொண்டவளை ரசனையுடன் அவன் பார்த்தான்.. சன்னமாக விசிலடிக்கவும் செய்தான்.. விசில் ஒலியில் சுரேந்திரன் விசித்திரமாக தகப்பனைப் பார்த்து வைக்க.. இவன் அவனைப் பார்த்து கண்சிமிட்டினான்..
"என்னடா பார்க்கிற..? தி கிரேட் இன்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரன் விசிலடிக்கிறானேன்னு பார்க்கறியா..?" என்று கேட்டான்..
தகப்பனின் கேள்வி புரியாவிட்டாலும்.. ஆமாம் என்று தலை ஆட்டி வைத்தான் சுரேந்திரன்..
"இதுக்கே இப்படிப் பார்க்கறியே.. இதே கிரேட் நரேந்திரன்.. திருச்சியில உங்க அம்மா பின்னாலே ரோமியோ மாதிரி சுத்தினதைப் பார்த்திருந்தா எப்படிப் பார்ப்பியோ.." என்று நரேந்திரன் சொல்ல.. வாய் மூடி
"களுக்.." என்று சிரித்து வைத்தாள் ஊர்மிளா..
எப்போதும் இறுக்கமான முகபாவனையுடனே வளைய வருகிறவளிடம் வந்த அந்தச் சிரிப்பு அழகு மயமானதாக நரேந்திரனுக்குத் தோன்றியது.. அவன் அவளையே பார்த்தான்.. வாய் பொத்திச் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தாள் ஊர்மிளா..
கண்களும்.. முகமும்.. பூவாக மலர்ந்து சிரித்த அந்தச் சிரிப்பில் தன் மனதை பறிகொடுத்தான் நரேந்திரன்..
'எப்படிச் சிரிக்கிறா..' அவன் இதயம் நெகிழ்ந்தது..
'இத்தனை நாளா இந்தச் சிரிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தா..?'
எதற்காக அகல்யா இருந்த வீட்டிற்கு ஊர்மிளாவுடன் வாழப் போனான் என்று மீண்டும் அவனை நொந்து கொண்டான் நரேந்திரன்..
அவன் மட்டும் அதைச் செய்யாமல் அவனுடைய சொந்த வீட்டிற்கு.. அவனுக்கு மட்டும் உரிமையான வீட்டிற்கு ஊர்மிளாவை அழைத்துப் போயிருந்தால் அவனடைய காதல் மனைவியின் மனதில் என்ன ரணம் இருக்கிறது என்று அறிய முடியாமல் அவன் துடித்துக் கொண்டிருப்பானா..?
"எதுக்குடி சிரிக்கிற..?" அவளை விழுங்குவதைப் போலப் பார்த்தபடி கேட்டான் நரேந்திரன்..
"சும்மா.." ஊர்மிளா அப்போதும் சிரித்தாள்..
"நீ சும்மா சிரிக்கிறவ.. எனக்கு உன்னைத் தெரியாதா..? சிரிக்கிறதுக்கு சேலரி கேட்கிற ஆளாச்சே நீ.." அவன் வெட்கமில்லாமல் அவளைப் பார்வையிலேயே தின்று வைத்தான்..
அவள் மேனி முழுவதும் மேய்ந்த அவன் பார்வையில் அவள் லஜ்ஜையானாள்..
"லஜ்ஜாவதியே..! என்னை
             மயக்கிற ரதியே..."
நரேந்திரன் மெதுவாக பாடி வைத்தான்.. இதற்கும் சுரேந்திரன் தகப்பனை உற்றுப் பார்த்து வைத்தான்..
"இவன் வேற உளவுப்படை போல கண்காணிச்சுக் கிட்டே இருப்பான்.. எதுக்குடா இப்படிப் பார்க்கிற..? உன் அம்மாகூட திருச்சியைச் சுத்தி வந்த காலத்திலே இதைவிட அதிகமா பாட்டுப் பாடுவேன் தெரியுமா.. அப்ப நீ பார்த்திருக்கனும்.."
நரேந்திரனின் பெருமையில் மீண்டும் பொங்கிச் சிரித்தாள் ஊர்மிளா..
"என்னடி..?" என்றான் நரேந்திரன்..
"இவன் எப்படி 'அப்ப' வந்து பார்ப்பான்..?"
ஊர்மிளா 'அப்ப...' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள்..
"ஓ.." இப்போது நரேந்திரனும் சேர்ந்து சிரித்தான்..
தாய், தகப்பனின் இணைந்த சிரிப்பில் எதற்கும் இருக்கட்டுமென்று தானும் சிரித்து வைத்து இணைந்து கொண்டான் சுரேந்திரன்..
ஒன்றுபட்ட அந்த மூவரின் சிரிப்பில் நரேந்திரனின் மனம் நிறைந்தது.. தொலைந்திருந்த அமைதி வந்து அவன் மனதில் விரவுவதை வியப்புடன் அவன் உணர்ந்தான்..
"அப்ப இவன் எங்கே இருந்தாண்டி..?"
கிசுகிசுத்த குரலில் ஊர்மிளாவிடம் நரேந்திரன் கேட்டபோது அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது..
"போதும்.." அவள் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்..
இதுபோதும் என்று நரேந்திரனின் மனம் சொன்னது.. அவளை ஆள முடியாத வேட்கை தந்த வெக்கை தணிந்து குளிர் பரவியது.. அவன் மகனைத் தூக்கி காரின் முன் சீட்டில் அமர வைத்துக் கொண்டான்.. ஊர்மிளா பின் சீட்டில் ஏறிக் கொண்டாள்..
மகனுடன் பேசியபடி நரேந்திரன் காரை ஓட்ட.. தகப்பனும் மகனும் பேசிக் கொள்ளும் உரையாடலை நிறைவுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. நிம்மதியுடன் அவள் விழிகள் மூடின..
இதுபோன்ற இன்பம் கட்டில்தரும் இன்பத்தை விட நிறைவானது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -91
அழகான ராட்சசியே -91
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-91.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-91.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy