அழகான ராட்சசியே -89

89 என் வாழ்வின் சுழல்களினால்.. உன் வாழ்வில் சுழலேற்ற.. அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் பெருமூச்சு விட்டான்.. எல்லாமே அவன் கைக...


89
என் வாழ்வின் சுழல்களினால்..
உன் வாழ்வில் சுழலேற்ற..
அழகான ராட்சசி நீ....


நரேந்திரன் பெருமூச்சு விட்டான்.. எல்லாமே அவன் கைக்குள் இருக்கிறது.. கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற அவனின் திட்டவட்டமான நம்பிக்கைதான் இந்த அளவுக்கு அவனை ஆட்டிப் படைத்து விட்டது என்று மனம் நொந்தான்..
அகல்யா எந்தவிதமான கட்டுதிட்டங்களுக்கும் அடங்காதவள் என்பதைப் பற்றி அறிந்திருந்தும் அவளைக் கட்டுப்பாட்டில் பிணைத்து விட்டதாக அவன் நினைத்து விட்டானே.. அந்த நிச்சயத்தினால்தானே ஊர்மிளாவிடம் அவள் வியைளயாடத் துணிய மாட்டாள் என்று அவன் 'அப்ராட்' போனான்..
"அந்தம்மாவைப் பார்த்தேன்..." 
நரேந்திரன் ஊர்மிளாவைப் பார்த்தான்.. அவள் கைவிரல் நகங்களைப் பார்த்தபடி இறுக்கமாக உட்கார்ந்திருந்தாள்..
"என்னைப் பார்த்ததும் ஏதேதோ கதை சொல்ல ஆரம்பிச்சாங்க.. நான் போட்ட சப்தத்தில் வாயை மூடிக்கிட்டாங்க.."
'அகல்யாவா வாயை மூடுகிறவள்..?'
ஊர்மிளாவின் முகத்தில் ஏளனம் வந்தது.. அதைப் புருவங்கள் முடிச்சிடப் பார்த்தபடி நரேந்திரன் தொடர்ந்தான்..
"உன் மனசில என்ன எண்ணம் ஓடுதுன்னு எனக்குத் தெரியும்.. அந்த லேடி அவ்வளவு சீக்கிரமா வாயை மூடாதுதான்.. ஆனா நான் மூட வைப்பேன்.."
'இதையேன் அன்றைக்கே நீ செய்யலை..?'
"செய்திருந்தேன்.. உனக்குத்தான் அது தெரியலை.. என் முன்னாலே வாய் திறந்து பேச அதுக்குத் தைரியம் வராத அளவுக்குத்தான் நான் நடத்திக் கொண்டிருந்தேன்.. அந்த தைரியத்தை நீதான் அதுக்குக் கொடுத்த.."
அகல்யாவை 'அவங்க' என்பதிலிருந்து மாறி.. 'அது' என்று நரேந்திரன் குறிப்பிடுவதை ஊர்மிளாவின் மனது குறித்துக் கொள்ளத்தான் செய்தது.. அகல்யாவைப் போன்ற பிறவிகளை 'அது' என்று குறிப்பிடுவதில் கூட ஊர்மிளாவுக்குச் சம்மதமில்லை.. தனது சுயநலத்திற்காக அடுத்தவர்களின் வாழ்வை வேட்டையாட நினைக்கும் பிறவியும் ஒரு பிறவியா என்று மனதுக்குள் அருவெறுத்தாள் ஊர்மிளா..
"உன் அப்பாவைப் போல நீயும் தைரியமா அதை எதிர்த்துக்குரல் கொடுத்திருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது.."
'எதிர்த்து நான் குரல் கொடுக்கலைன்னு நீ கண்டயா..? குரல் கொடுத்ததினால்தான் இந்தக் கதி..'
"தனிச்சு ஏன் குரல் கொடுக்கிற..? உன் அப்பா என் முன்னாலே அது சொன்ன பொய்யை அம்பலப் படுத்தலையா..? அதைப் போல நீயும் செய்வதற்கென்ன..? அதற்குத்தானே அன்றைக்கு உனக்கு சான்ஸ் கொடுத்தேன்..? மத்தவங்க முன்னாலே கேள்வி கேட்டேன்..?"
அவள் மனதில் சொல்வதை அப்படியே படித்து பதிலைச் சொல்லிக் கொண்டு வந்தவனின் கேள்வி பழைய கேள்வியிலேயே மையம் கொண்டு நின்றது.. காலச் சக்கரத்தின் சுழற்சியைப் போல எங்கே சுழன்றாலும் ஒரே இடத்தில் வந்து நிற்கும் அந்தக் கேள்வியில் மனம் நைந்தாள் ஊர்மிளா..
இன்னும் எத்தனை காலம்தான் அந்தக் கேள்வி இவளைத் துரத்தப் போகிறது..? இவளும் அதை எதிர் கொள்ள முடியாமல் ஓடிக் கொண்டே இருக்கப் போகிறாள்..?
"இனி அந்த வீட்டில் என் காலடி படாதுங்கிறதை சொல்லிட்டேன்.. அர்ச்சனாவை வைத்து அந்தம்மா ஒட்டப் பார்த்துச்சு.. நரேந்திரனோட தங்கச்சிங்கிறதுதானே இவளுக்கான அடையாளம்.. அது இல்லாம போனா இவளோட எதிர்காலம் என்னவாகிறதுன்னு கேட்டுச்சு.. நான் அசைஞ்சு கொடுக்கலை.."
அர்ச்சனாவை முன்னிருத்தி அகல்யா பிளாக் மெயில் செய்திருப்பதை புரிந்து கொண்டாள் ஊர்மிளா..
'அதுதான் அந்தம்மாவுக்கு கை வந்த கலையாச்சே.. எதை வேணும்னாலும் பேசிரும்.. என்ன வேணும்னாலும் தயங்காம செய்து முடித்திரும்.. கேள்வின்னு வந்தா எதைச் சொல்லியும் சமாளிச்சுரும்..' அவள் முகம் கடுத்தது..
"இப்ப அந்த பிளாக்மெயில் எடுபடலை.." என்றான் நரேந்திரன்..
இவனுக்கு மனதிலிருப்பதை படிக்கும் வித்தை தெரிந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா..
"அருண்குமாரோட தங்கைங்கிற அடையாளம் மட்டும்தான் அர்ச்சனாவுக்கு இனி இருக்கும்ங்கிறதை புரிய வைச்சுட்டு வந்துட்டேன்.. அவங்கம்மாவோட முகம் போன போக்கைப் பார்க்கனுமே.."
"பாவம்.." உண்மையான வருத்தத்துடன் சொன்னாள் ஊர்மிளா..
"அருணும்.. அர்ச்சனாவும் நல்ல பசங்க.."
"அது எனக்கும் தெரியும்.." என்றான் நரேந்திரன்..
"ஆனா ஊர்மிளா.. அவங்களை அவங்கம்மா கேடயம் போல யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. அது நல்லதுக் கில்லை.. எனக்கு அது பிடிக்காது.. அப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கு அவங்களைக் காப்பாத்தறதுக்கு மட்டும் தான்.. அவங்களை என் குடும்பத்து ஆள்களா அடையாளம் காட்டறதுக்காக இல்லை.. அப்பா அதைக் கேட்கலை.. என் தகப்பன்தான் அவங்களுக்கும் தகப்பன்ங்கிறதில மனசுக்குள்ள ஒரு பாசம் இருக்கு.. இல்லேன்னு சொல்லலை.. அந்த பாசத்துக்காக அவங்களோட அம்மா ஆடுகிற ஆட்டத்தை நான் சகிச்சுக்கனும்னா.. நெவர்..! இந்த நரேந்திரனை எமோசனலா பிளாக் மெயில் பண்ணி கண்ட்ரோலில் வைத்துக்க யாராலும் முடியாது.. அதை அந்தம்மாவுக்கு தெரிய வைத்துட்டு வந்திருக்கிறேன்.. இனி அவங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.."
வாசலில் ஈரக்காற்று அடித்தது.. ஹாலின் ஜன்னல் வழி அது வந்து உடலைத் தீண்டியதில் ஊர்மிளா சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள்.. சுரேந்திரனுக்கு எப்போது பள்ளி முடியும் என்று அவள் மனம் கணக்கிட்டது..
"சுரேனுக்கு ஸ்கூல் விட இன்னும் நேரமிருக்கு.."
நரேந்திரனின் வார்த்தைகள் அவன் அவளையே கவனித்துக் கொண்டிருப்பதை உணர்த்தின.. அதில் மனம் கசிந்தாள் ஊர்மிளா.. இந்தக் காதலை அனுபவித்து வாழ அவளுக்கு கொடுத்து வைக்கவில்லையே..
அகல்யாவுக்கான தண்டனை நியாயமானதுதான் என்று அந்த நொடியில் அவளுக்குத் தோன்றியது..
"மழை வரும் போல இருக்கு.." மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்..
"வந்தா என்ன..? காரிலதான் அழைச்சுக்கிட்டு வரப்போகிறேன்.." சமாதானமாக சொன்னான் நரேந்திரன்..
"உடம்புக்கு சரியில்லாதவன்.."
"நீ அதை மறக்கவே மாட்டியா..? உடம்புக்கு சரியில்லாம இருந்தான்... தட்ஸ் ஆல்... இப்ப ட்ரீட்மெண்டிலே பாதிக்கு மேலே குணமாகிருச்சு.. அண்டர்ஸ்டாண்ட்..?"
கண்டிப்புடன் பேசிய நரேந்திரனின் தொனியில் எல்லையற்ற பாதுகாப்பான உணர்வை அடைந்தாள் ஊர்மிளா..
"ம்ம்ம்.." என்று முணுமுணுத்தாள்..
"அருணை ஷேப் கார்டு பண்ணிட்டேன்.. பெங்களூரில் நான் ஆரம்பித்திருந்த சின்னக் கம்பெனி ஒன்றை அவன் பெயருக்கு எழுதிக் கொடுத்துட்டேன்.. வீடும் அவன் பெயருக்கு மாற்றியாச்சு.."
"அப்ப உங்க கம்பெனியில அவர் ஜி.எம்மா வேலை பார்த்தது..?"
அவளையுமறியாமல் ஊர்மிளா கேட்டு விட்டாள். அகல்யாதான் ஊர்மிளாவுக்கு கெடுதல் செய்தாள்... அவள் பெற்ற பிள்ளைகள் செய்யவில்லையே.. அவர்கள் தங்கமான பிள்ளைகள் ஆயிற்றே.. அவர்களை நரேந்திரன் தண்டித்து விட்டால் ஊர்மிளாவின் மனச்சாட்சி அவளை உறுத்துமே..
'பெத்தவ செய்கிற பாவம் பிள்ளைகள் தலைமேல விழுந்துரக் கூடாது.. இவதான் உப்பைத் தின்னா.. தண்ணியை இவதான் குடிக்கனும்..' ஊர்மிளாவின் மனம் அடித்துக் கொண்டது..
குனிந்த தலை நிமிராமல்.. 'அண்ணி..' என்ற ஒற்றை வார்த்தையையும் முகம் பார்க்காமல் சொல்லியபடி கண்ணியத்துடன் மரியாதையாக விலகிப் போகும் அருண்குமாரின் முகமும்.. 'அண்ணி' என்ற அழைப்பிலே அத்தனை பாசத்தையும் அன்பையும் தேக்கி வைத்து சிறு குழந்தை போல உரிமை கொண்டாடும் அர்ச்சனாவின் முகமும் அவள் மனக்கண்ணில் வந்து நின்றன..
அதை உணர்ந்தவனாய் நரேந்திரனும் இதமாகவே விளக்கம் சொன்னான்..
"வேண்டாம் ஊர்மிளா.. ஏற்கனெவே அம்மாவோட கம்பெனியில அருணுக்கு வேலை கொடுத்திருக்கேனேன்னு மனதுக்குள்ளே சங்கடமாக இருந்தது.. அவங்க ஆத்மா அதை ஏத்துக்கிட்டு இருக்காது ஊர்மிளா.. அதனால தான் இத்தனை பாடுபடுகிறேனோ என்னவோ.. அருண் வெளியே போகட்டும்.. என் வருமானத்தில ஆரம்பிச்ச கம்பெனியில முதலாளியா இருக்கட்டும்.. உழைச்சு முன்னுக்கு வரட்டும்.. அவன் வருவான் ஊர்மிளா.. வீட்டை அவன் பெயருக்கு எழுதினால்தான் அருனோட பெண்டாட்டியால அந்த வீட்டில் வாழ முடியும்.. இனியாவது அந்தம்மா அடங்கி.. ஒடுங்கி இருந்து பழகட்டும்.."
'அகல்யாவினால அது முடியாது..' ஊர்மிளா முகத்தைச் சுளித்தாள்..
"அடங்காதுதான்.. ஆனாலும்.. வேற வழி அதுக்கு இல்லையே.. என்னிடம் இனிமேல் வரமுடியாது.."
'அது வரும்..'
"வந்தா என்ன நடக்கும்ங்கிறதை சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்... அருணை வெளியே அனுப்பியதில தாத்தாவுக்கு ரொம்ப சந்தோசம்.. எனக்கும் மன நிம்மதி.. அர்ச்சனாவோட படிப்பும் முடிஞ்சிருச்சு.. நல்ல இடத்திலே மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் பண்ணி அனுப்பிரனும்.. இந்தம்மாவோட குணம் தெரிஞ்சா அர்ச்சனாவை பெண் கேட்டு வரக்கூட யாரும் பயப்படுவாங்க.. அதனாலே தான் அவள் பெயரிலே சென்னையிலே ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.."
யட்சன் போல நரேந்திரன் சொன்னான்... சென்னையில் இருந்தவனுக்கு பெங்களூரில் நடந்தது எப்படித் தெரியும்..? மனதோடு பூட்டி வைத்து அழுது கொண்டிருந்த அர்ச்சனா அதை தமையனிடம் வெளிப்படுத்தவே இல்லையே.. வெளியில் இருந்து என்ன.. அகல்யாவின் கூடப்பிறந்த தம்பியின் மகனே அர்ச்சனாவின் காதலைப் புறக்கணித்து விட்டான்.. அதற்கான ஒரே காரணம் அர்ச்சனா அகல்யாவின் மகள் என்பதுதான் என்பதை அறியாமல் தீர்க்கதரிசியைப் போல நரேந்திரன் ஆருடம் சொல்லி வைத்தான்..
"வேண்டாம்.. உங்க வாயாலே அப்படிச் சொல்லாதீங்க.." அவசரமாக சொன்னாள் ஊர்மிளா..
"ஏன்..?"
"அர்ச்சனா பாவம்.. பச்சைக் குழந்தை..! சூது வாது அறியாதவள்.. அவள் வாழ்க்கை நல்லாயிருக்கனும்.."
ஊர்மிளாவையே இமைக்காமல் பார்த்தான் நரேந்திரன்.. என்ன மாதிரியான மனசு இவளுக்கு என்று அவன் மனம் பொங்கியது..
'இவள் கருணையே வடிவானவள்.. நியாயத்தின் அவதாரம்.. நேர்மையின் மறு பிம்பம்.. இவளை மனம் புண்படப் பேசி விலகி ஓட வைத்த ஒரு நயவஞ்சகியின் மகள்மீது இரக்கம் கொள்பவள்..'
அவளை நினைக்க... நினைக்க அவனுக்கு பெருமையாக இருந்தது..
சடசடவென்ற மழைத்தூறல் வந்தது.. கண்ணம்மாவும், தேன்மொழியும் கடைத் தெருவிலிருந்து திரும்பி விட்டார்கள்... நரேந்திரன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிப் போனான்.. ஊர்மிளா உலர்ந்திருந்த துணிகளை அயர்ன் பண்ணி அடுக்கிக் கொண்டிருந்தாள்.. கண்ணம்மா மாலை டிபனுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.. தேன்மொழி அவளுக்கு ஒத்தாசை செய்கிறேன் பேர்வழியென்று ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தாள்..
போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது..
"இப்பத்தானே அவர் கிளம்பிப் போனார்..? அதுக்குள்ளே அப்பாவும் பிள்ளையும் வந்துட்டாங்களா..?" ஊர்மிளா ஆச்சரியத்துடன் சுவர் கடிகாரத்தை பார்த்தாள்..
"அப்பாவும் பிள்ளையும் வரலை.. உன் பிரண்ட் தான் வந்திருக்கேன்.."
ராதா உள்ளே வந்தாள்.. ஊர்மிளா அயர்ன்பாக்ஸை தேன்மொழியிடம் ஒப்படைத்து விட்டு தோழியைக் கட்டிக் கொண்டாள்.. தேன்மொழி விட்டுப் போன அயர்ன் வேலையைத் தொடர்ந்தாள்..
"இன்னும் எத்தனை நாளைக்கு சென்னையில் இருப்ப..?"
"இந்த மன்த் என்ட் வரைக்கும்தான் ஊர்மி.. அதுக்குப் பின்னாலே டெபுடேசன் சேன்ஜ் ஆகுது.."
"எங்க போகப் போகிற..? நியூயார்க்குக்கு ரிட்டர்ன் ஆகப்போறியா..?"
"ஊஹீம்.. டெபுடேசன் பாக்கியிருக்கு.. அதை கம்ப்ளீட் பண்ணிட்டுத்தான் நியூயார்க்குக்கு ரிட்டர்ன் ஆகனும்.."
"ஓ..."
"இப்ப பெங்களூர்க்கு போகப் போகிறேன்.. நெக்ஸ்ட் சிக்ஸ்த் மன்த் அங்கேதான்.."
பெங்களூரைப் பற்றிய பேச்சு வந்ததும் ஊர்மிளா மௌனமாகி விட்டாள்.. அதை உணர்ந்த ராதா பேச்சை மாற்றினாள்.. மெதுவாக பேச்சில் ஐக்கியமான ஊர்மிளா பழைய இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாள்.. கண்ணம்மா கொண்டு வந்த காபி டிபனை வாங்கிக் கொண்ட ராதா..
"தேங்க்ஸ் கண்ணம்மா.." என்றாள்..
அதற்கு அவள் எக்கச்சக்கமாக வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே ஓடிவிட.. அவளை வினோதமாக பார்த்த ராதா..
"என்னடி இது.." என்றாள் ஊர்மிளாவிடம்..
அவள் சிரித்தாள்.. ராதா காபியை உறிஞ்சியபடி..
"தேங்க்ஸ்ன்னுதானேடி சொன்னேன்..? ஐ லவ் யுன்னா சொன்னேன்..?" என்று அங்கலாய்த்தாள்..
இப்போது தேன்மொழியும் சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்.. போர்டிகோவில் கார் வந்து நின்று... காரின் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதில் ராதா புன்னகைத்தாள்..
"இப்ப வந்திருக்கிறது உன் ஹஸ்பெண்டும் பிள்ளையும்தான்.. கன்பர்ம்.."
நீ சொல்லாமலே எனக்குத் தெரியும் என்ற பாவனையுடன் வாசலை ஆவலுடன் பார்த்தாள் ஊர்மிளா..
"அம்மா.."
கைகளை விரித்து எதிரே வந்த மகனை மண்டியிட்டு அணைத்துக் கொண்டாள் ஊர்மிளா.. காலையிலிருந்து மகனைப் பிரிந்திருந்த தாபம் அவளிடம் தெரிந்தது..
தாயும் மகனும் பிணைந்திருந்த காட்சியில் மனம் லயித்தான் நரேந்திரன்.. அவள் அவனுடைய மனைவி.. அவன் பிள்ளைக்குத் தாய் என்பதில் அவன் மனதில் கூட்டுக்குத் திரும்பிவிட்ட பறவையின் நிம்மதி ஏற்பட்டது..
"ஹாய்.." என்றாள் ராதா..
பதிலுக்கு ஹாய் சொல்லி விட்டு செல்போனை காதுக்கு கொடுத்தபடி வாசலுக்குப் போய் விட்டான் நரேந்திரன்..
"ஹலோ மிஸ்டர் ஜீனியர்..! ஹௌ ஆர் யு..?"
ராதா சுரேந்திரனிடம் பேச ஆரம்பித்தாள்.. அவள் கேட்கும் கேள்விகளுக்கு மழலையில் பதில் சொல்லிக் கொண்டிருந்த மகனை புன்னகையுடன் பார்த்தபடி அவனுடைய ஷீவையும்.. டையையும் கழட்டி விட்டு.. சட்டையின் மேல் பட்டன்களை தளர்த்திவிட்டாள் ஊர்மிளா.. ஆசுவாசமாக உணர்ந்த சிறுவன் அன்னையின் மடிமீது ஏறிக் கொண்டான்.. அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த தோழியிடம் தலையசைத்து விட்டு வெளியில் வந்தாள் ராதா.. போன் பேசி முடித்து விட்டு வீட்டுக்குள் போக திரும்பிய நரேந்திரன் ராதாவைக் கண்டதும் தேங்கி நின்றான்..
"கிளம்பிட்டிங்களா..?" என்றான்..
புன்முறுவலுடன் தலையை ஆட்டினாள் ராதா.. அவள் அதிகமாக அவனிடம் நின்று பேசியதில்லை.. நரேந்திரனுக்கு அவள்மீது ஓர்விதமான மரியாதை உணர்வு இருந்தது.. அமிர்தா ஒருவகையில் அவனது மதிப்பையும், மரியாதையையும் பெற்றாள் என்றால் ராதா வேறு வகையில் அவனது மரியாதையைப் பெற்றாள்..
ராதாவின் இயல்பான பேச்சும்.. சிநேகிக்கும் புன்முறுவலும்.. அறிவுக்களை சொட்டும் விழிகளும்.. நகையில்லாத தோற்றமும் நரேந்திரனின் கவனத்தை ஈர்த்தன..
"உங்களைப் போன்ற ஒருத்தங்களுக்கு அனாமிகான்னு பெயரிருக்கிறது ஆச்சரியம்தான்.." என்று சொன்னான்..
"வாட்..?" ராதாவின் புருவங்கள் ஆச்சரியத்துடன் உயர்ந்தன..
அவளும் அவனும் தனித்துப் பேச நேர்ந்ததில்லை.. பெரும்பாலும் நரேந்திரன் இல்லாத சமயங்களில் ராதா வந்து போய் விடுவாள்.. இல்லா விட்டால் அவன் வெளியே கிளம்பும்போது இவள் வருவாள்.. இவள் வெளியே கிளம்பும்போது அவன் வருவான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -89
அழகான ராட்சசியே -89
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-89.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-89.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy