அழகான ராட்சசியே -88

88 மோகத்தீயை பற்ற வைத்து.. மோகினியாய் எனை ஆட்டிவைக்கும்.. அழகான ராட்சசி நீ.... மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நரேந்திரன்....


88
மோகத்தீயை பற்ற வைத்து..
மோகினியாய் எனை ஆட்டிவைக்கும்..
அழகான ராட்சசி நீ....


மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நரேந்திரன்.. அவனைவிட மௌனமாக பரிமாறிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. விழியுயர்த்தி அவளைப் பார்த்தவனின் விழிகளில் சினம் வந்தது.. என்று அகல்யா அந்த வீட்டிற்கு வந்து விட்டுப் போனாளோ.. அன்றிலிருந்து ஊர்மிளாவிடமிருந்து வெளிப்பட்ட ஒன்றிரண்டு வார்த்தைகளும் நின்று விட்டன.. முற்றிலுமாக அவள் விலகி நின்று விட்டதில் நரேந்திரன் பொருமிப் போனான்..
'இவளுக்கு அநியாயம் நடந்தா அதைப் பார்த்துக் கிட்டு நான் கைகட்டி நிற்பேன்னு எப்படி இவ நினைக்கிறா..?'
அதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
"ஏய்ய்.. நில்லுடி.."
நகர்ந்து கொண்டிருந்தவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தியவன் கோபத்துடன் அந்தக் கேள்வியை அவளிடமே கேட்டான்..
"அன்றைக்கு அப்படித்தானே நின்றீங்க..?" அவள் நிதானமாக வினவினாள்..
நிமிர்ந்து அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து.. விழியோடு விழி கலக்க கேள்வி கேட்டவளின் பார்வை அவன் இதயத்தை வாளில்லாமலே அறுத்தது..
"ஊர்மி..!"
"அன்றைக்கு மட்டும் நீங்க ஹாலில் கேட்ட கேள்வியை.. நம்ம ரூமிலே என்னை நிற்க வைத்துத் தனியாக் கேட்டிருந்தா.. நான் அத்தனையையும் சொல்லியிருப்பேனே.. கல்யாணமான முதல் நாளே அவங்க என்னைக் கேட்க ஆரம்பித்த கேள்வியில இருந்து.. மொட்டை மாடியில நிலாச்சோறு சாப்பிட்டப்ப நாம பேசிக்கிட்டு இருந்ததை அவங்க ஒளிஞ்சு மறைந்து வேடிக்கை பார்த்தது வரைக்கும் பிட்டுப்பிட்டு வைச்சிருப்பேனே.. நீங்க அதைச் சய்யலையே.. அதையெல்லாம் ஹாலில் வைத்து அத்தனை பேரின் முன்னாலேயும் சொல்ல முடியுமா..?"
"என்னடி சொல்கிற..? மூன் லைட் டின்னரை அவங்க ஒளிஞ்சிருந்து பார்த்தாங்களா..? சீச்சீ..."
நரேந்திரனின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. அதனாலெல்லாம் ஊர்மிளா ஆஹா என்று மகிழ்ந்து விடவுமில்லை.. அவள் மனதிலிருந்த அத்தனை சுமையையும் அவன் முன்னால் கொட்டி விடவுமில்லை..
அவள் கர்ம சிரத்தையாக.. அவன் கையிலிருந்து தன் கையை உறுவிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்தாள்..
"இப்ப எதுக்காக ஓடறதிலேயே குறியாய் இருக்க..?" கோபத்துடன் அவன் அதட்டினான்..
"பாடின வாயும்.. ஓடின காலும் சும்மா இருக்காதாம்.. அன்றைக்கு நீங்க என்னை நிற்க வைத்துக் கேட்ட கேள்வியிலே ஓட ஆரம்பிச்சேனில்ல.. அப்ப ஆரம்பிச்ச ஓட்டம் நிற்கவே மாட்டேங்குது.. அதான்.. நான் ஓடறதிலேயே குறியாய் இருக்கேன்.." அவள் விளக்கம் சொன்னாள்..
எடுத்தெரிந்து அவள் பேசிய பேச்சு நரேந்திரனுக்கு கடுப்பை வரவழைப்பதற்குப் பதில் சிரிப்பை வரவழைத்தது..
'சோமசுந்தரத்தின் மகளில்ல.. பேச்சுன்னு வந்தா ஒருகை பார்க்காம விட மாட்டா..' அவன் அவள் பேச்சை ரசித்தான்..
"இந்த வாய்க்கொன்னும் குறைச்சலில்ல.. இந்தப் பேச்சையெல்லாம் என்னிடம் போனில் பேசியிருக்கனும்.. நான் பெங்களூரில் காலடி வைக்கிறதுக்குள்ள அந்த வீட்டில நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நீ எனக்குத் தெரியப்படுத்தியிருந்திருக்கனும்.. அது உன்னுடைய கடமையும் கூட.. பக்கத்தில இருந்தாத்தான் உனக்கு புருசன் நினைப்பு வருமா..? தொலை தூரத்துக்கு பறந்து போயிட்டா அவனை நீ நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டியா..?"
நரேந்திரனின் வார்த்தைகளில் அவன் முகத்தை ஊன்றிப் பார்த்த ஊர்மிளாவின் முகத்தில் வந்து கவிந்த கோடிக்கணக்கான உணர்வின் அலைகளில் நரேந்திரன் பிரமித்துப் போய் விட்டான்.. அந்த உணர்வலைகள் உணர்த்திய காதலின் வர்ணஜாலத்தில் அவனின் கடந்து போன காதல் பார்வைகளும் அவள் விழிகளில் வந்து போயின..
எந்தப் பார்வைக்காக நரேந்திரன் ஏங்கிக் கொண்டிருந்தானோ.. அந்தப் பார்வையை அவள் விழிகளில் கொண்டு வந்து நிறுத்தி.. மாற்றினாள்.. நொடிப் பொழுதுக்கு மேல் நீடிக்காத அந்த வசந்த கால நினைவுகளின் சுவடுகளில் மனம் வெறுத்து விட்டான் நரேந்திரன்..
"நீ நிலையாவே இருக்க மாட்டியா ஊர்மிளா..?"
அவள் விரக்தியுடன் சிரித்தாள்..
"அந்த வரம் வாங்கி நான் பிறக்கலை.."
அப்போதும் அவள் கை அவன் கையிலிருந்து தன்னை விடுவித்துக கொள்ளும் போராட்டத்தில்தான் இருந்தது..
"ஊஹீம்.." என்றான் நரேந்திரன்..
அவன் பிடி இரும்புப் பிடியாக இருந்தது.. என்னதான் அவள் போராடினாலும் அவன் பிடியிலிருந்து அவள் கையை உறுவிக் கொள்ளவே முடியவில்லை..
"நானா நினைச்சாத்தான் உன்னால கையை உறுவிக்க முடியும்.. நீ நினைச்சா அது முடியாது.. உன் கை என் கைக்குச் சொந்தம்டி.. இந்தக் கையை என் கை பிடிச்சுத்தான் அக்கினியை வலம் வந்தது.."
நரேந்திரனின் நினைவுறுத்தலில் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அந்த அற்புதமான பந்தத்திற்கு அவன் உரிய மரியாதையை அளித்தானா..?
"நான் கொடுத்தேன்.. கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. இனியும் கொடுப்பேன்.." அவள் மனதை படித்ததைப் போல அவன் சொன்னான்..
அவள் உதட்டைச் சுழித்தாள்.. அதில் தெரிந்த அசட்டையில் அவன்பிடி இறுகியது.. அவள் கை வலித்தது.. வலியை முகத்தில் அவள் காட்டாவிட்டாலும் அவள் கண்கள் காட்டிக் கொடுத்து விட்டன.. அவன் பிடி லேசாக தளர்ந்தது.. அவள் வலி குறைந்தது..
"இந்த அலட்சியம் ஆகாது.." கடினமான குரலில் சொன்னான் நரேந்திரன்..
"என்னை விட்டு விலகிப் போனவ நீ.. சும்மாவும் போகலை.. உன் வயிற்றில் என் குழந்தை வளருதுங்கிற விவரத்தை என்னிடம் சொல்லாம போன.. மூனரை வருசமா நான் அநாதையா நின்னேண்டி.."
"இல்லையே.." ஊர்மிளா மறுத்தாள்..
"உங்களுக்குன்னு வீடு இருந்தது.. உங்க 'அம்ம்மா..' இருந்தாங்க.. தம்பி, தங்கை இருந்தாங்க.. அவங்க தானே உங்க குடும்பம்..? குடும்பத்தோட இருந்தவர் சந்தோசமாக இருந்திருக்க வேண்டியது தானே..?"
"ஊர்மிளா.."
நரேந்திரனின் 'ஊர்மி..' என்ற அழைப்பு 'ஊர்மிளா' வாக மாறி விட்டதை அவள் கவனித்தாள்.. லேசாக மனம் வலித்த போதும்.. அந்த நான்கு வருட காலமாக அவள் அனுபவித்து வந்த மனவேதனைகளின் ஆறாத ரணங்களின் வலி.. அந்த வலியை அமுக்கி அடி ஆழத்தில் புதைத்து விட்டது.. அந்த வேகத்தில் அவள் திரும்பவும் உதட்டைச் சுழித்தாள்.. அது அவனை மிகவும் பாதித்தது..
"ஏன் அப்ஜெக்ட் பண்றீங்க..? நானென்ன இல்லாததையா சொல்லிட்டேன்..? அவங்களுக்காகத் தானே.. உங்களைப் பெற்ற அம்மாவை பெற்று வளர்த்து.. அவங்களுக்குப் பின்னால் உங்களையும் வளர்த்த தாத்தா.. பாட்டியை நீங்க தூக்கி எறிஞ்சீங்க..?"
அவள் கேள்வி அம்பின் கூரிய முனையோடு நரேந்திரனின் நெஞ்சில் பாய்ந்தது.. அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்..
'நான் அநியாயம் செய்து விட்டேன்..' மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..
'இவளை என்தாத்தா.. பாட்டியிடம் சேர்த்திருக்க வேண்டும்.. அவங்களுக்குத்தான் இவள் மருமகள்... அகல்யாவுக்கும் இவளுக்கும் என்ன இருக்கிறது என்று நான் அந்தம்மா இருக்கும் வீட்டிற்கு இவளைக் கூப்பிட்டுப் போனேன்..?'
"ஐ ஆம் ஸாரி.." அவன் வருத்தத்துடன் சொன்னான்.
இதையா அவள் எதிர்பார்த்தாள்..? ஊர்மிளாவின் கண்கள் கலங்கி விட்டன... அவளால் நரேந்திரன் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை..
அவளுடைய யுத்தம் அவனோடா...? அவனைத் தோற்கடித்து அவள் முன் மண்டி போட வைப்பதற்காகவா அவள் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக் கிறாள்..?
'கடவுளே..!' அவள் இதயம் விம்மியது..
அவளது கலங்கிய விழிகளில் நரேந்திரன் அசைவற்று நின்று விட்டான்.. அவன் மீதான அவளின் காதலை அவை சொல்லியதில் அவன் மனதில் தூறல் விழுந்தது.. இதமான அந்தத் தூறலின் இனிமையோடு அவன் ஆழ்ந்த குரலில் வினவினான்..
"தப்புச் செய்தவன் 'நான்..' அப்படின்னு நீ நினைக்கிற.. இருந்தும் நான் மன்னிப்புக் கேட்டா அதை உன்னால தாங்கிக்க முடியலைல்ல.. ஏண்டி..?"
ஊர்மிளா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவளின் உதட்டுச் சுழிப்பு இப்போது எங்கோ ஓடி மறைந்து விட்டிருந்தது.. நரேந்திரன் இதமானான்.. மனைவியை காதலுடன் பார்த்தான்..
"உன் மனசில என்னவெல்லாம் இருக்குன்னு எனக்குத் தெரியலை.. இது கொடுமைடி.. நான் என் மனசை மறைக்கலை.. அதிலிருந்த அத்தனையையும் உன்னிடம் கொட்டிட்டுத்தான் அப்ராட் போக பிளேன் ஏறினேன்.. ஆனா நீ..? உன் மனசுக்குள்ளே எத்தனையோ வேதனைகளைப் புதைச்சு வைச்சுக்கிட்டு என்னிடம் அதைச் சொல்லாம விலகிப் போகிற.. இது எனக்கு நீ செய்கிற அநியாயம்ன்னு ஏண்டி உன் மனசுக்குப் புரியலை.. உன் புருசன் பாவம்ன்னு ஏண்டி நீ நினைக்க மாட்டேங்கிற..?"
ஊர்மிளா தவித்தாள்.. நியாயம் கேட்பவன் அவளுடைய காதலன்.. அவள் கழுத்தில் தாலிகட்டி, அவளைத் தொட்டுக் கலந்து குடும்பம் நடத்திய கணவன்.. அவளுடைய உயிரான மகனுக்குத் தகப்பன்..
இருந்தும் அவள் அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.. அவனே சொல்வதைப் போல.. அவள் மனதில் தைத்திருக்கும் அத்தனை முற்களையும் அவனிடம் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறாள்.. அதைப்பற்றி அவள் பெற்றவர்களிடம் கூடச் சொல்லவில்லையே..
"ராதாவை.. ராதாகிருஷ்ணன்னு அவங்கம்மா மாற்றிச் சொல்லிட்டாங்க.. இவரும் பாரின்ல இருந்து வந்ததும் அத்தனை பேரின் முன்னாலேயும் யார் அந்த ராதாகிருஷ்ணன்னு கேட்டுட்டார்ப்பா.."
இந்த விவரத்திற்கே சோமசுந்தரம் வீச்சறுவாளைத் தேடி விட்டார்.. பூங்குழலிதான் வன்பாடு பட்டு அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள்.. இதில் மொத்த விவரங்களும் தெரிந்திருந்தால் சோமசுந்தரம் அகல்யாவை உண்டு இல்லையென்று ஆக்கியிருப்பார்.. அப்படிப்பட்ட சிற்றன்னையின் பொறுப்பில் ஊர்மிளாவை விட்டுச் சென்ற குற்றத்திற்காக நரேந்திரனின் மீது விரோதம் பாராட்டி.. முகம் கொடுத்துப் பேசாமல் வாழ்க்கை முழுவதும் தள்ளி வைத்திருப்பார்..
ஊர்மிளா சொல்லவில்லை.. எல்லாவற்றையும் இதயத்துக்குள் புதைத்துக் கொண்டவளாக மௌனமாகி விட்டாள்.. அவளின் நிலைமையைப் பார்த்து மறுகிப் போன சோமசுந்தரமும்.. பூங்குழலியும் அவளுக்கு ஆதரவாக இருப்பதிலேயே கவனமாக இருந்தார்களே தவிர.. அவளைத் தூண்டித் துருவி எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை..
"எதனாலே எனக்குச் சொல்லலைன்னு எனக்குத் தெரியாது... ஆனா.. ராதாகிருஷ்ணன்னு ஒருத்தன் வந்திருக்கான்னு ஆரம்பிச்சு அவங்க அதிகப்படியா பேசியதிலே எனக்கு கவலை வந்திருச்சு.."
நரேந்திரன் சொல்லிக் கொண்டிருந்த போது.. அதுவரை ஊர்மிளாவை விட்டு விலகி நின்ற இகழ்ச்சிப் புன்முறுவல் மீண்டும் வந்து அவள் இதழ்களில் ஓட்டிக் கொண்டது.. அதில் நரேந்திரனின் புருவங்கள் சுருங்கின.. அவளைக் கேள்வியாக பார்த்தான்..
"அப்படி அதிகப்படியா என்னைப் பத்தி அவதூறா பேசுகிற தைரியத்தை அவங்களுக்கு நீங்க கொடுத்திருக்கீங்க.."
இல்லையென்ற பாவனையில் தலையை அசைத்தான் நரேந்திரன்..
"உனக்கே தெரியும்.. அவங்களை நான் தள்ளித்தான் நிறுத்தி வைத்திருந்தேன்னு... தெரியாம இதை நீ சொல்லியிருந்தா நான் விளக்கம் சொல்றதில அர்த்தமிருக்கு.. தெரிந்துக்கிட்டே பழி போட்டேன்னா நான் என்ன விளக்கத்தைச் சொல்ல..?"
ஊர்மிளா அமைதியாக டைனிங் டேபிளிலில் இருந்த பாத்திரங்களை மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.. தேன்மொழியும், கண்ணம்மாவும் வீட்டில் இல்லை.. காய்கறி, மளிகை பொருள்கள் வாங்கவென்று கூட்டணி போட்டுக்கொண்டு ஊர் சுற்றப் போயிருந்தார்கள்.. அவர்களுக்கு காரை ஓட்டிக் கொண்டு மணிவாசகமும் போயிருந்தான்.. யாருமற்ற அந்தச் சூழல் தம்பதியினரின் பேச்சுக்கு இடையூறு செய்யாத வகையில் இருந்தது..
"அவங்களை அதைப்பத்திப் பேசக் கூடாதுன்னு ஆர்டர் போட்டேன்.. இங்கே எதையாவது அதைப் போல பேசிவைத்திருந்தால் என்ன செய்கிறதுன்னுதான் வந்ததும் அத்தனை பேரின் முன்னாலும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.. நீ சொல்லியிருக்க வேண்டியதுதானே.. அவன் என் பிரண்ட்.. நம்ம மேரேஜீக்கு வரலை.. அதனால உங்களுக்கு அவனை தெரிந்திருக்காது.. பெங்களூர் வந்தவன் என்னைப் பார்க்க வந்தான்.. அப்படின்னு சொல்லியிருந்தா அவங்களை அத்தனை பேரின் முன்னாலும் கண்டித்து வைத்திருக்க மாட்டேனா..?"
ஊர்மிளா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவன் பேச்சை நிறுத்தினான்..
"என்னடி..?" அவன் புருவங்கள் உயர்ந்தன..
"வந்திருந்தது என்னுடைய பிரண்ட்.. அதில் உங்களுக்கு கோபம் வந்திருக்கலாம்.. அவங்களின் கம்ப்ளெயின்ட் அதை தூண்டி விட்டிருக்கலாம்.."
ஊர்மிளா பார்வையைத் தழைத்தபடி பேசினாள்.. நரேந்திரன் அவளையே இமைக்காமல் பார்ப்பதை உணர்ந்தும் அவள் நிமிரவில்லை..
"அதாவது.. நான் உன்னை சந்தேகப் பட்டிருப் பேன்னு நினைக்கிற..?"
"தெரியலை... அந்தக் கேள்வி அதைத்தான் சொன்னது.. இல்லேன்னா வேற ஏதாவது இருக்கலாம்.."
"வேறன்னா..? பொறாமையா..?"
"ஐ டோன்ட் நோ.."
நரேந்திரன் எழுந்தான்.. அழுத்தமான காலடிகளுடன் அவளருகே வந்தான்.. அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. ஊர்மிளாவின் மனம் படபடத்தது.. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.. என்னவோ அன்று தான் அவனை முதன்முதலாக பார்ப்பதைப் போல அவள் தவித்துப் போனாள்..
"உன்மேல் எனக்குச் சந்தேகம் வராது..." அழுத்தமாகச் சொன்னான் நரேந்திரன்..
"அதே போல்.. உன்னுடன் வேறொரு ஆண் பழகினால் எனக்குப் பொறாமையும் வராது.."
'ஏன்..?' ஊர்மிளா தடுமாறிப் போனாள்..
நரேந்திரனின் கண்களில் தெரிந்த அதீத தன்னம் பிக்கையில் அவள் திகைத்தாள்... அவன் விழிகளில் அழகான சிரிப்பு படர்ந்திருந்தது.. அந்த நிலையில் அவன் வெகு அழகானவனாக அவள் கண்களுக்குத் தோன்றினான்.. அவள் முகத்துக்கு வெகு அருகாமையில் தெரிந்த அவன் முகத்தின் அழகில் அவள் திணறிப் போனாள்..
"உன்னால் என்னைத் தவிர வேறு யாரையும் காதலிக்க முடியாது.. என்னைத்தவிர வேற ஒருவரால் உன் மனக் கதவைத் தட்ட முடியாது... எனக்கு நீ கொடுத்திருக்கும் இடத்தை வேறு ஒருவருக்குக் கொடுக்க உன்னால் முடியவே முடியாது.. அப்படியிருக்கிறப்ப உன்னை ஏண்டி நான் சந்தேகப்படனும்...? உன் நண்பன்மேல் எதுக்காக நான் பொறாமைப்படனும்..?"
நரேந்திரன் கை கழுவ நகர்ந்து விட்டான்.. ஊர்மிளா அசையாமல் சிலைபோல நின்றாள்.. அவள்மீதான அவனது அசாத்திய நம்பிக்கையில் அவள் மனம் வலித்தது.. எல்லாமும் அவளுக்குக் கிடைத்திருக்கிறது.. ஆனால் எதுவுமே இல்லாத வறியவள் போல வாழும் நிலைமைக்கு அவள் தள்ளப் பட்டிருக்கிறாள் என்றால் வாழ்க்கையின் குரூரத்தை அவள் என்னவென்று உரைப்பாள்..?
ஊமையாக அவள் மனதுக்குள் துடித்தபடி டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்களை சமையலறைக்கு கொண்டு போய் அடுக்கி வைத்தாள்.. சின்க்கில் கை கழுவி விட்டு.. ஈரக்ககையை சேலை முந்தானையில் துடைத்தபடி சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.. இயல்பான அவளின் அந்தச் செய்கையில் ஈர்க்கப்பட்டான் நரேந்திரன்.  அவனைக் கடந்து ஹாலில் இருந்த சோபாக்களில்.. ஒற்றை சோபாவாய் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தாள் ஊர்மிளா..
'நீண்ட சோபாவாய் இருந்தால் நான் பக்கத்திலே உட்கார்ந்திருவேனாம்..'
நரேந்திரன் அவளையே பார்த்தபடி எதிர் சோபாவில் அமர்ந்தான்..
"பெங்களூர் போயிருந்தேன்.." என்றான்..
ஊர்மிளாவின் உடலில் ஓர் விறைப்பு வந்தது.. கண்களில் கனல் வந்தது.. அகல்யா இருக்கும் ஊரைக் கேட்டவுடன் அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தில் எந்த அளவுக்கு அகல்யாவால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை நரேந்திரனால் புரிந்து கொள்ள முடிந்தது..
'எல்லாம் என்னாலே வந்தது..'
அவன் மனம் வருந்தினான்.. செழியன் அவனிடம் என்ன கேட்டார்..? அருணையும், அர்ச்சனாவையும் காப்பாற்று என்று கேட்டுக் கொண்டார்.. அதை அவன் தள்ளியிருந்துதானே செய்தான்..? எதனால் செழியனை சாகடித்த அகல்யா வசித்த வீட்டில் அவனும் வசிக்கப் போனான்..?
அதனால் அல்லவோ அவனுடைய காதல் மனைவி இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கிறாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -88
அழகான ராட்சசியே -88
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-88.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-88.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy