அழகான ராட்சசியே -84

84 மைவிழியில் மயக்கம்தந்து.. மறுவிழியில் கடுமை காட்டும்.. அழகான ராட்சசி நீ.... எப்போது இது நிகழ்ந்தது என்று அவர்கள் இருவருக்கும...


84
மைவிழியில் மயக்கம்தந்து..
மறுவிழியில் கடுமை காட்டும்..
அழகான ராட்சசி நீ....

எப்போது இது நிகழ்ந்தது என்று அவர்கள் இருவருக்குமே தெரியாது.. என்னதான் இருவரும் அத்தை மகள்.. மாமன்மகன் உறவோடு இருந்தாலும் அடிக்கடி பார்த்துக் கொண்டதில்லை.. கோடிஸ்வரனுக்கு மனைவியாகி விட்டோம் என்ற மிதப்போடு இருந்த அகல்யா.. அத்தனையும் வெளிவேசம்.. செழியன் கோடிஸ்வரன் அல்ல.. கோடிஸ்வரி நளினியின் கழுத்தில் தாலியைக் கட்டியவர் என்ற உண்மை புலப்பட்டதில் இடிந்து போய் விட்டாள்.. அடுத்து அவள் செய்த முதல் வேலை.. அந்த விவரத்தை பிறந்த வீட்டிற்கு தெரிய விடாமல் பார்த்துக் கொண்டதுதான்..
கோடிஸ்வரனின் மனைவி என்ற பிம்பத்தை உடைய விடாமல் கட்டிக் காப்பாற்றினாள் அகல்யா.. அதற்காக அவள் தண்ணீராய் வாரி இறைத்த பணத்தை கடன் வாங்கி அவள் கையில் கொடுத்தார் செழியன்.. பிறந்த வீட்டிற்கு  வரும் போதெல்லாம் பட்டும்வைரமுமாக.. பளபளக்கும் புதிய காரில் வந்து இறங்குவாள்.. இருந்த பெண்ணுக்கு இசைந்த மாப்பிள்ளை என்று பல்லவியின் மனம் நோக பெருமையடிப்பாள்..
அவளின் திமிரையும்.. ஆணவத்தையும் கண் முன்னே பார்த்து வளர்ந்தவன் ராம்குமார்.. அவன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பிக்க முனைந்தபோது அவனைக் காலடியில் விழ வைக்க வேண்டும் என்பதற்காகவே பெட்டியில் பணத்தை நிரப்பி நீட்டியவள் அகல்யா..
அந்தப் பணத்துக்காகசெழியன் யாரிடமோ கடன் பட்டு விட்டார்.. அதை அடைக்க வேண்டும்.. இல்லா விட்டால் செழியனின் ஆத்மா சாந்தியடையாது என்று நரேந்திரனிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது நாடகமாடியது தனிக்கதை..
என்னதான் அவள் அழுது புலம்பி நாடகமாடினாலும் நரேந்திரன் அவளை கொஞ்சம் கூட நம்பவில்லை என்பது கிளைக்கதை..
"யார்ன்னு சொல்லுங்க.. அப்பா கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டாக்குமெண்ட் இருக்கான்னு பார்த்திட்டு நானே பணத்தை செட்டில் பண்ணி விடுகிறேன்.." என்றுதான் நரேந்திரன் சொன்னான்..
"இது என்மூலமா வாங்கின கடன்ப்பா.. என்கூட உயிருக்குயிரா பழகின சிநேகிதி வீட்டில கடன் வாங்கிக் கொடுத்தேன்.. எல்லாம் உன் அப்பாவோட ஆஸ்பத்திரி செலவுக்காக வாங்கின கடன்தாம்ப்பா.. ஒரு கையெழுத் தில்லாம.. வாய் வார்த்தையை நம்பி அவ கடன் கொடுத்தா.. இப்ப வார்த்தை தவறினா என்ன சொல்லுவாளோ.."
'என்னவொரு பொய்..'
வெறுப்புடன் அந்தப் பணத்தைக் கொடுத்தான் நரேந்திரன்.. செழியனின் மருத்துவ செலவுகளை செட்டில் பண்ணியது அவன்தான்..
"கொண்டு வந்து அட்மிட் பண்ணினாங்க.. அட்வான்ஸ் கூடக் கட்டலை.. நரேந்திரன் சாரோட பாதர்ன்னு சொன்னதினால நாங்க கேள்வியே கேட்காம அட்மிட் பண்ணிட்டோம்.. அட்மிட் பண்ணினவங்க இதோ வரேன்னு போனாங்க.. நீங்க வருகிறவரைக்கும் வரவேயில்லை.. பாவம் பேசண்ட்.. தனியா இருந்தார்.. என்னதான் பிடிக்காதுன்னாலும் இப்படியா சார் பண்ணுவாங்க..?"
செழியனுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனையின் ரிசப்சனிஸ்டும் கேஷியரும் சொன்னபோது அவனுக்கு ரத்தம் கொதித்தது..
செழியனை அந்த நிலைமையில் விட்டு விட்டு ஓடியவள்.. அவருக்கான மருத்துவ செலவிற்காக கடன் வாங்கியதாக கதை அளக்கிறாள்..
பல்லைக் கடித்தபடி நரேந்திரன் கொடுத்த பணத்தில் பாதியை ஒரு பெட்டியில் போட்டு ராம்குமாரிடம் கெத்தாக நீட்டி விட்டு.. மீதியில் அகல்யா வைர நகைகளை வாங்கி வைத்தாள்..
"என் தம்பிக்கு நான் எதுவுமே செய்யலை.. உனக்குச் செய்தால் அவனுக்குச் செய்ததைப் போல.. இந்தப் பணத்தை வைத்து நீ முன்னேறி என் தம்பியையும்..
தம்பி பெண்டாட்டியையும் வயிறு வாட விடாமல் பார்த்துக்கிட்டால் போதும் ராம்.. என் தம்பி குடும்பத்துக்கு படியளந்திட்டேன்னு என் மனசு நிம்மதியாகிரும்.. காலம் முழுவதும் என் தம்பி குடும்பம் சாப்பிடுகிறப்ப இந்தச் சாப்பாட்டை அகல்யா போட்டாள்ன்னு நன்றியோட நினைச்சுக்கிட்டாப் போதும் ராம்.. எனக்கு வேறென்ன வேண்டும்..என்னால முடிஞ்சது.. என் தம்பி குடும்பத்துக்கு சாப்பாட்டுக்கு வழி செஞ்சிட்டதுதான்.. அந்த நன்றி உனக்கும்.. உன் குடும்பத்துக்கும் காலம் முழுவதும் இருந்தாப் போதும் ராம்.. எனக்கு அதுதான் வேண்டும்.."
அகல்யா தனக்கு எது வேண்டும் என்பதை மிக அழகாக தெளிவு படுத்தி விட்டாள்.. பல்லவியின் உயிர் துடித்தது.. பணத்தை வாங்காதே என்று மகனிடம் சொல்லவும் முடியாமல்.. அகல்யா எதிர்பார்த்த நன்றிக்கடனை அவளிடம் படவும் முடியாமல் தாய்
துடித்த துடிப்பையும்.. தவிப்பையும் உணர்ந்தவன்தான் ராம்குமார்..
அதை தெரிந்து கொண்டதாக அவன் காட்டிக் கொள்ளவேயில்லை.. அகல்யா கொடுத்த பணத்தை தயங்காமல் வாங்கிக் கொண்டான்.. இரவு பகலாய் உழைத்தான்.. அவள் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தான்..
அன்றுதான் பல்லவி நிம்மதியாக ஓர் கவளம் உணவை உண்டு விட்டு படுத்து உறங்கினாள் என்பதை அவளறியாமல் கண்காணித்து மனதில் பாரம் சுமந்தவன் தான் ராம்குமார்..
அந்த ராம்குமாரால் அகல்யாவின் வயிற்றில் பிறந்த மகளின் காதலை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..?
ரம்யாவை பார்க்க அவன் பெங்களூருக்கு வரும் போதெல்லாம் அர்ச்சனாவின் பார்வையில் ஆர்வம் வந்து சேர்ந்து விடும்.. சிலசமயங்களில் அவள் அகல்யாவுடன் ஒட்டிக்கொண்டு சென்னைக்கு வருவாள்..
குட்டி போட்ட பூனை போல ராம்குமார் இருக்கு மிடத்திலேயே உலாத்திக் கொண்டிருப்பாள்.. அப்படி ராம்குமார் எவ்விடமோ.. அவ்விடமே அவளிடம் என்று சுற்றிக் கொண்டிருப்பவளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெற்றிலையில் மை தடவி ஜோஸியமா பார்க்க வேண்டும்..தன்னாலே அது புரியாதா..?
ராம்குமாருக்குப் புரிந்தது.. புரிந்தும் புரியாதவனைப் போல அவன் நடித்தான்.. அவனிடம் வலிய வந்து பேச முயன்ற அர்ச்சனாவை கண்டு கொள்ளாமல் விலகிப் போனான்..
அன்றும் அதைப் போலவே இளக்கமில்லாத இருகிய முகத்தோடு நின்றவனைப் பார்த்து அர்ச்சனா மருகினாள்..
"உங்களிடம் பேசனும் அத்தான்.."
"எனக்கு நேரமாகுது.."
ராம்குமார் பிடிகொடுக்காமல் பேசியதில் அர்ச்சனாவின் முகம் விழுந்து விட்டது.. அவள் இயலாமையோடு அவனைப் பார்த்தாள்..
"ஒரு ஐந்து நிமிசம் கொடுங்க அத்தான்.."
"இல்லைம்மா.. என்னால நிற்க முடியாது.."
"அப்ப உட்கார்ந்து பேசலாம் வாங்க.."
அர்ச்சனா தோட்டத்து சிமிண்ட் பெஞ்சைக் காட்டினாள்.. ராம்குமார் அவளை அறிமுகமற்ற பார்வை யொன்றை பார்த்து வைத்தான்.. தெருவில் போகும் முகமறியாதவர்களைக் கூட அப்படிப் பார்க்க மாட்டார்கள்.. அப்படியொரு பார்வையை பார்த்து வைத்தவனைக் கண்டு நொந்து நூடுல்ஸாகிப் போனாள் அர்ச்சனா..
'இருந்திருந்து இந்த நல்லல்லல்லவன் மேலா எனக்குக் காதல் வந்து தொலைக்கனும்..'
ராம்குமார் கல்லையும்மண்ணையும் கூட காதல் பார்வை பார்த்து விடுவான் போல.. அவளை எவளோ ஒருத்தியைப் பார்ப்பதைப் போல பார்த்தபடி ஓடி விடுவதிலேயே குறியாக இருந்தான்..
"தோட்டத்தில் உட்காருகிறதா..?"
என்னவோ வேற்றுக்கிரகத்தில் உட்காரச் சொல்லி விட்டதைப் போல விதிர்த்தவனை.. வேற்றுக்கிரக வாசியைப் பார்ப்பதைப் போல விசித்திரமாக பார்த்து வைத்த அர்ச்சனா.. இவனிடம் தன்மையாக பேசினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்தாள்..
"ஹலோ.. என்ன..?" வலது உள்ளங்கையை குவித்து உயர்த்திக் கேட்டாள்..
அவள் கேட்ட தோரணையில் அவன் வசீகரிக்கப் பட்டான்.. ஓர்நொடி அவன் கண்ணில் வந்து போன மின்னலில்..
'இந்த ரோபோ மனசுக்குள்ள காதல் இல்லாம இல்லை.. சும்மா பிலிம் காட்டுது..என்று கண்டு கொண்டாள் அர்ச்சனா..
"ஊர்விட்டு ஊர் வந்திருக்கிறவனை இப்படியா மிரட்டி வைப்ப..?" ராம்குமார் கேட்டதும் அர்ச்சனா மயக்கம் வருவதைப் போல பாவனை செய்தாள்..
"ஹப்பா..! இவ்வளவு நீளமான டயலாக்கை பேசினது நீங்கதானா..நம்பவே முடியலைங்க.."
அவளின் நடிப்பில் ராம்குமாரின் முகத்தில் லேசான சிரிப்பின் சாயல் படர்ந்தது..
'ஐயா.. சிரிச்சிட்டாராமாம்..அர்ச்சனா உதட்டைக் கடித்துக் கொண்டு அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தாள்..
"உனக்கு என்னதான் வேணும்..?" சிரிப்பினூடே கேட்டு வைத்தான் ராம்குமார்..
"நீங்கதான் வேணும்..."
கிடைத்த வாய்ப்பை வெகு சமர்த்தாக பயன்படுத்திக் கொண்டாள் அர்ச்சனா..
வெளிப்படையான அவளின் பதிலில் வசீகரிக்கப் பட்டான் ராம்குமார்.. அவளையே ஒரு நிமிடம் பார்த்து வைத்தான்..
"எப்படியிருக்கேன்..நல்லாயிருக்கேனா..உங்களுக்குப் பிடிச்சிருக்கா..?" குறும்பாக கேட்டாள் அர்ச்சனா..
ராம்குமார் வாய் விட்டுச் சிரித்தான்.. சிரிக்கும் போது தெரிந்த அவனுடைய கவர்ச்சியான முக அமைப்பில்..
"ஹப்பா.." என்று இரு கண்களையும் விரித்து அதிசயப்பட்டாள் அர்ச்சனா..
"என்ன..?" ராம்குமார் புருவங்களை உயர்த்தினான்..
"உங்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா..?"
"இது கூடத் தெரியாமலா என்னை நிறுத்தி வைத்து வம்பிழுத்துக்கிட்டு இருக்கிற..?"
"யார் வம்பிழுத்தது..?"
"நீதான்.."
"யாரை வம்புக்கிழுத்தேன்..?"
"என்னைத்தான்.."
"எப்படியாம்..உங்க கையைப் பிடிச்சு இழுத்தேனா..?"
அர்ச்சனாவின் கேள்வியில் உண்மையாகவே ராம்குமாரின் கையைப் பிடித்து இழுத்து விடும் உத்தேச மிருந்ததால் ராம்குமார் சிரித்தபடி பின்னால் நகர்ந்தான்..
"ஏன் அத்தான் அகப்படாமல் விலகி ஓடுகிறதிலேயே குறியாய் இருக்கீங்க..?" அர்ச்சனா அலுத்துக் கொண்டாள்..
ராம்குமாரின் சிரிப்பு மறைந்து அங்கே கடினம் பரவியது..
"வேண்டாம் அர்ச்சனா.." ஆழ்ந்த குரலில் சொன்னான்..
"ஏன் அத்தான்..?" அவள் திடுக்கிடலுடன் கேட்டாள்.
ஓர் இனிய கனவு கலைந்து விட்டதைப் போன்ற ஏமாற்றம் அவளுக்குள் வந்தது..
அவளுக்கு ராம்குமாரை பிடிக்கும்.. அவனுடைய நேர்மையும் கண்ணியமும்.. காணக் கிடைக்காதவை என்று அவள் நினைத்தாள்.. ஆனால்.. அவளின் நினைவு அவனுக்கில்லையா..?
"உனக்கும்.. எனக்கும் சரிப்பட்டுவராது அர்ச்சனா.. நீ நினைப்பது நடக்காது.. இது நிறைவேறாத ஆசை.. விட்டு விடு.."
அவன் தெளிவான குரலில் பேசினான்.. எல்லா வற்றையும் அறிந்து வைத்திருக்கும் சித்தனைப் போல அவன் பேச்சு இருந்ததில் அர்ச்சனா மனம் உடைந்தாள்..
என்னவோ அவனுக்கும் அவளுக்கும் இடையில் மதம்இனம்மொழிவர்க்கம் என்று ஆயிரம் தடைகள் இருப்பதைப் போலவும்.. அதைத்தகர்த்தெறிந்து அவர்கள் ஒன்று சேர்வது கடினம் என்பதைப் போலவும் அவன் பேசி வைத்த விதத்தில் கைக்கு கிடைப்பதை எடுத்து அவன் தலையில் போட்டு உடைத்தாலென்ன என்ற வெறி அவளுக்குள் வந்தது..
"எதனால நிறேவேறாது அத்தான்..சொல்லுங்க.. நீங்களும்நானும் வேறவேற மதமா..இனமா..மொழியா..?" அர்ச்சனா கோபத்துடன் கேட்டாள்..
கலங்கிச் சிவந்திருந்த அவள் விழிகளில் ஆற்றாமையினால் ஏற்படும் துக்கத்தின் சிகப்பும் சேர்ந்திருந்ததில் ராம்குமார் உதட்டைக் கடித்தான்..
'எப்படி இவளுக்கு நான் புரிய வைப்பேன்..?'
அது துன்பமான ஒன்றாக அவனுக்கு இருந்தது.. மென்மையான பெண்.. அன்பானவள்.. அழகானவள்.. இத்தனைக்கும் மேலாக அவனை உண்மையாக காதலிப்பவள்..
அவளை மறுதளிப்பது என்பது எவ்வளவு கொடுமையானது..!
இந்த உலகில் உண்மையான அன்பும்பாசமும்நட்பும்காதலும் கிடைப்பது என்பது அரிதான ஒன்றல்லவா..?
"ஒன்றைப் புரிந்து கொள் அர்ச்சனா.. நீ சொன்ன அத்தனை வேறுபாடுகளும் உனக்கும்எனக்கும் நடுவில் இருந்திருந்தாலும் யோசிக்காமல் நான் காதல் சொல்லி யிருப்பேன்... உன்னைச் சிறையெடுத்து கல்யாணம் பண்ணியிருப்பேன்.. இது அப்படியில்லை.."
"அத்தான்.."
"நீ சொன்ன வேறுபாடுகளில் ஒன்றுகூட உனக்கும்.. எனக்கும் நடுவில் இல்லைதான்... ஆனால் இது அத்தனையையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிற்கு பெரிதான ஒரு வேறுபாடு இருக்கிறது.."
"எதைச் சொல்கிறிங்க..?"
அவனது மர்மமான பேச்சில் குழம்பிப் போனாள் அர்ச்சனா.. அவளுக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் அந்த அகழி எது..?
அகல்யா என்றான் ராம்குமார்..
"என்னது..?" அர்ச்சனா அதிர்ந்தாள்..
"யெஸ்.. உன் அம்மாதான் உனக்கும்.. எனக்கும்  நடுவில் இருக்கிறவங்க.."
"அத்தான் அவங்க உங்க அத்தை.. உங்க அப்பாவோட கூடப் பிறந்த அக்கா.."
"அதனால்தான் உன் அம்மாவின் குணத்தையும்செய்கைகளையும் நான் பிறந்ததிலிருந்து பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.. உன் அம்மாவின் நிழல் கூட எங்கள் வீட்டில் படக் கூடாதுன்னு நினைக்கிறேன்.. இதில் அவங்களோட பெண் எங்க வீட்டில் மருமகளாக வாழ வருகிறது என்பது எப்படி சாத்தியமாகும் அர்ச்சனா..நீயே சொல்லு.. உங்க அம்மாவிடமிருந்து விலகி நிற்க ஆசைப்படுகிற நான்.. உங்க அம்மாவின் மகளான உன் கழுத்தில் எப்படித் தாலியைக் கட்ட முடியும்..சொல்லு.."
அர்ச்சனா அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. ராம்குமார் அவளை மறுப்பதற்கு இதுதான் காரணமா..?
என்னதான் இருந்தாலும் அகல்யா அர்ச்சனாவைப் பெற்ற தாய்..! அவளைப் பற்றிக் குறைவாக பேசுவது அர்ச்சனாவின் காதலனாகவே இருந்தாலும்.. எப்படி அவள் கேட்டுக் கொள்வாள்..?
"குட்.." இகழ்ச்சியுடன் சொன்னாள்..
ராம்குமாரின் முகம் மாறியது.. எதற்காக அந்த இகழ்ச்சி என்று புரியாவிட்டாலும் அர்ச்சனா எதையோ சொல்லப் போகிறாள் என்பதில் அவள் முகத்தை உன்னிப்பாக பார்த்தான் அவன்...
"எங்க அம்மாவின் மகள் கழுத்தில் நீங்க தாலி கட்டக் கூடாது.. அகல்யாவின் மகள் உங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்த விடக்கூடாது.. ஆனா உங்க கூடப் பிறந்த தங்கை மட்டும் என் அண்ணனுக்கு கழுத்தை நீட்ட டிரை பண்ணலாம்.. இதே அகல்யாவின் வீட்டில மருமகளா வாழ முடியுமான்னு கனவு காணலாம்.. கெட்டிக்காரங்கதான் நீங்க.."
"என்ன சொல்கிற..?"
"ம்ம்ம்..சுரைக்காயில் சால்ட் இருக்குன்னு சொல்கிறேன்.."
"ரம்யா அருண்குமாரை விரும்புகிறாளா..?"
"நோ.. நோ.. அவள் எங்க அம்மாவை விட கெட்டிக்காரி.. அருண் வெறும் ஜெனரல் மேனேஜர்ன்னு அவளுக்குத் தெரியும்.. அதனாலே ஜி.எம்மை விட்டு விட்டு மேனேஜிங் டைரக்டருக்கு வலை விரிச்சா.. புரியலை..அவ நரேன் அண்ணாவுக்கு நூல் விட்டா.."
"இருக்காது.. நான் நம்ப மாட்டேன்.. நீ கோபத்தில பேசுகிற.."
ராம்குமார் தலையை ஆட்டினான்.. அர்ச்சனா கோபச் சிரிப்பை சிரித்தாள்.. அந்தச் சிரிப்பிலிருந்த உண்மையில் ராம்குமாரின் கண்கள் சிறுத்தன.. அவன்மீது ஆசைப் பட்டவளை அவன் உற்றுப் பார்த்தான்..
அது.. அவன் அதுநாள்வரை பார்த்தறியாத அர்ச்சனா..!
"நம்ப முடியலைன்னா போய் உங்க தங்கையிடமே விளக்கம் கேளுங்க.. உங்க அம்மாஅப்பாவிடமும் சேர்ந்து கேளுங்க.. அவங்க ரம்யாவை இங்கே அனுப்பி வைச்சது அவ பி.ஜி. படிக்கனும்கிறதுக்காகன்னு தானே நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..அதுதான் இல்லை.. அந்தச் சாக்கிலே இந்த வீட்டிலே தங்கி.. நரேன் அண்ணா மனசை மாத்தி அவருக்கு இரண்டாம் தாரமா கழுத்தை நீட்டனும்கிற பிளானோடதான்
அவ இங்கே தங்கி படிக்க வந்தா.. இது அம்மா வோட பிளான்.. அதுக்கு உங்க பேரண்ட்ஸீம்தங்கையும் ஓகே சொன்னாங்க.."
"ஓ..."
ராம்குமார் கோபத்துடன் 'போட்டான்.. அந்த நேரம் பார்த்து வாசலுக்கு வந்த அகல்யா தோட்டத்துக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பது யார் என்று கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தாள்.. அர்ச்சனாவும்ராம்குமாரும் அவளின் பார்வை வட்டத்துக்குள் வந்ததில் அவசரமாக அவர்களுக்கு அருகே வந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -84
அழகான ராட்சசியே -84
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-84_16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-84_16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy