அழகான ராட்சசியே -80

80 வாளேந்தும் வீராங்கனையாய்.. வார்த்தையிலே சுழற்றியடிக்கும் அழகான ராட்சசி நீ.... ஒரு சோகச் சித்திரம் போல சுருண்டு படுத்திருந்...


80
வாளேந்தும் வீராங்கனையாய்..
வார்த்தையிலே சுழற்றியடிக்கும்
அழகான ராட்சசி நீ....


ஒரு சோகச் சித்திரம் போல சுருண்டு படுத்திருந்தாள் ஊர்மிளா.. அவள் முகத்தில் அப்பியிருந்த துக்கத்தின் ரேகைகளில் நரேந்திரன் துக்கம் கொண்டான்..
இதற்காகவா அவளைத் தேடிப் பிடித்துக் காதல் சொன்னான்..?
கண்களில் ஒளிர்வோடும்.. கலகலத்த சிரிப்போடும்.. அன்றுதான் பூத்த புதுமலரைப் போல அவனின் கருத்தைக் கவர்ந்து காதலிக்க வைத்த அந்த ஊர்மிளா எங்கே போனாள்..?
சோகமே வடிவாக.. அசோக வனத்து சீதையைப் போல.. சொந்தவீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருப் பவளைப் போல சொந்தமில்லாத முகத்துடன் சுருண்டு படுத்திருக்கும் இந்த அழகான ராட்சசியின் மனதில் என்ன முள் தைத்திருக்கிறது..?
'அயோத்தியை சீதை அசோக வனத்தைப் போல நினைக்கக் கண்டோமா..?' தனக்குத்தானே துயரத்துடன் கேட்டுக் கொண்டாள்
'இவள் நினைக்கிறாளே..'
அவனது சீதையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.. விழித்துப் பார்த்தவள் அவனைக் கண்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து.. என்னவோ பத்துத் தலை ராவணன் பக்கத்தில் வந்து விட்டதைப் போல விலகி அமர்ந்தாள்..
'நான் உன் புருசன்டி..' நரேந்திரனுக்கு கோபம் வந்தது..
"இன்னைக்கு நீ பேசினதை... அன்னைக்கு எல்லோரின் முன்னாடியும் பேசனும்னுதானேடி அத்தனை பேரின் முன்னாலேயும் உன்னை நிற்க வைச்சுக் கேள்வி கேட்டேன்..? இன்னைக்குப் பேசினதை அன்னைக்கு நீ பேசாம விலகிப் போனதினால அவங்க எந்த அளவுக்கு துணிஞ்சிட்டாங்கன்னு பார்த்திட்டல்ல.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.. நரேந்திரனின் மனைவி.. சூது, வஞ்சம், சூழ்ச்சி.. இதைப் பார்த்தெல்லாம் ஓடி ஒளிகிறவளா இருக்கக்கூடாது.. எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறவளா இருக்கனும்.. இப்பப் புரியுதா..? நான் ஏன் அன்னைக்கு உன்னைக் கேள்வி கேட்டேன்னு..?"
நரேந்திரனின் கேள்விக்கு இப்போதும் ஊர்மிளா பதில் சொல்லவில்லை.. இகழ்ச்சியாக உதட்டைச் சுழித்தபடி லேசான கோபச் சிரிப்பைச் சிரித்தாள்.. நரேந்திரனின் பொறுமை பறந்தது.. அவன் அவளை முரட்டுத்தனமாக தன் பக்கம் திருப்பினான்..
"ராட்சசி..! அழகான ராட்சசி..! இப்பவும் பதில் பேசனும்னு நினைக்கிறயாடி..? இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்..?"
"நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு.." என்றாள் ஊர்மிளா..
அவள் முகத்தில் தீவிரம் வந்திருந்தது.. அதற்குக் குறையாத தீவிரத்துடன் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் நரேந்திரன்..
'பேசட்டும்.. இவ பேசியே ஆகனும்.. அப்பத்தான் இவ மனசில என்ன இருக்குன்னு எனக்குத் தெரியவரும்..'
"உங்க பக்கத்தை நீங்க சொல்லிட்டிங்க.."
"உன் பக்கத்தை நீயும் சொல்லுன்னுதான் நான் சொல்றேன்.."
"நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கனும்னா.. நமக்குள்ளே இருந்த காதலுக்கு எந்த விதமான சக்தியும் கிடையாதுன்னு அர்த்தமாகிடும்.. நீங்களும் நானும்
வாழ்ந்த வாழ்க்கைக்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாதுன்னு அர்த்தமாகிரும்.."
"ஊர்மிளா.."
"உங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதைப் போல எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்குமில்லையா..?"
"இருக்கக்கூடாதுன்னு நான் சொன்னேனா..?"
"நரேந்திரனின் பெண்டாட்டி இப்படி இருக்கனும்னு நீங்க நினைக்கிறதைப் போல.. ஊர்மிளாவின் புருசனும் இப்படித்தான் இருக்கனும்னு நானும் நினைக்கலாமில்ல..?"
"நினைடி.. உன் புருசன் எப்படியிருக்கனும்னு நீ நினைக்கிறயோ.. அப்படி நான் இருப்பேண்டி.. உன் மனசில இருக்கிற அந்த நினைப்பை உன் புருசன்கிட்டச் சொல்லித் தொலைன்னுதானேடி நான் மன்றாடறேன்..?"
நரேந்திரன் ஆயாசப்பட்டான்.. ஊர்மிளா ஒரு பெருமூச்சுடன் தோள்களைக் குலுக்கிவிட்டு கட்டிலை விட்டு இறங்கப் போனாள்..
"எங்கேடி போகிற..? இங்கே ஒருத்தன் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கிறது உன் கண்ணில் படலையா..? என்னைப் பார்த்தா வேலையில்லாதவனைப் போல தெரியுதா..? பத்து கோடி புராஜெக்ட்டுடி.. அது சம்பந்தமான மீட்டிங்கை போஸ்ட்போன் பண்ணிட்டு ஓடி வந்திருக்கேன்.. நீ என்னடான்னா.. பேசறதை அவாய்ட் பண்றதிலேயே குறியாய் இருக்கிற.." என்று நரேந்திரன் சப்தம் போட்டான்..
ஊர்மிளா அவனது கோபத்தைப் பொருட்படுத்தாமல் எழுந்து ஜன்னல் பக்கமாக போய் நின்றாள்.. வெளியே மழை ஊற்றிக் கொண்டிருந்தது..
'சுரேன் ஸ்கூலில் இருக்கானே..' அவள் மனம் கவலை கொண்டது..
அதை நரேந்திரனிடம் சொல்லி விட முடியாது.. அவன் பேசிக் கொண்டிருக்கும் பேச்சை அவள் மதிக்க வில்லையென்று அதற்கும் அவள்மேல் குற்றம் சாட்டுவான்.. அதோடு.. அவன் பொறுப்பான தகப்பன்... சுரேந்திரனைப் பற்றிய அவனது கவலையும், அக்கறையும் ஊர்மிளாவின் அக்கறைக்கும், கவலைக்கும் குறைவானதல்ல..
வெளியே மழை வலுத்தது.. அடர்ந்த மழை நீரின் தாரைகள் நெருக்கமாக கொட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது.. நீர்த்தாரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து 'நீர் திரை'யைப் போல ஊர்மிளாவுக்குத் தோன்றியது..
'திரைதான்..!' அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..
அவளையும், நரேந்திரனையும் பிரித்து வைத்திருக்கும் கண்ணாடி சுவரின் திரை..
கண்ணாடியின் இந்தப் பக்கம் அவள் நிற்கிறாள்.. அந்தப் பக்கம் நரேந்திரன் நிற்கிறான்.. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளலாம்.. தொட முடியாது.. ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்க முடியாது..
கொட்டுகின்ற நீர்த்தாரைகள் ஊர்மிளாவின் கடந்த கால இரவுகளில் அவள் விட்ட கண்ணீரின் தாரைகள் போல நிற்காமல் கொட்டிக் கொண்டே இருந்தன..
மழையினால் சில்லிட்டுப் போயிருந்த ஜன்னல் கம்பியில் ஊர்மிளா முகம் பதித்தாள்.. அவற்றின் சில்லிப்பை உணர்ந்தவளுக்கு என்னவோ செய்தது.. இதமான மழைக்குளிர் அவள் உடலை ஊசிபோல துளைத்து இம்சை செய்தது.. அதை அறிந்தவனைப் போல.. அவள் பின்னால் வந்து நின்று வெப்பமான மூச்சுக் காற்றோடு.. அவள் தோளின் இருபக்கமும் கை பதித்து அவளை சிறை பிடித்தான் நரேந்திரன்..
ஊர்மிளாவின் மீது சாய்ந்தாற்போல நின்றிருந்தவனின் உடல் முழுவதும் அவள் மீது ஒட்டிக் கொண்டிருக்க.. அவனது உடல் வெப்பம் இடம் பெயர்ந்து அவள் உடலுக்கு மாறி ஒரு கதகதப்பை ஊட்டிக் கொண்டிருந்தது..
'ஸ் ஆ..' ஊர்மிளா கண் மூடித் தவித்தாள்..
அவளால் அசைய முடியவில்லை.. அவளை பின்பக்கமாக நின்று அவன் சிறை பிடித்திருந்ததில் அவள் அசைந்தால், மேலும் அவன் மீது இழையத்தான் செய்வாள்.. இந்த தொடு உணர்வையே தாங்க முடியாமல் துடித்துப் போகிறவளால் அந்த நெருக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா..?
"ப்ளீஸ்.." பலவீனமாக அவள் முணுமுணுத்தாள்..
அந்த அழகான ராட்சசியின் மீது அப்பிக் கிடந்தவனுக்கு அவளின் வேண்டுகோள் காதுகளில் ஏறவே இல்லை.. அவளது கூந்தலின் நறுமணத்தை முகர்ந்தவன்.. கூந்தல் காட்டில் முகம் புதைத்துப் புரட்டினான்.. ஊர்மிளா கிளர்ந்தாள்.. துடித்துப் போனாள்..
"கூந்தல் மலரின் தேனை எடுக்கக்..
             காத்துக்கிடந்தேன்.. கால்கள் கடுக்க..
    இதயம் துடிக்க.."
அவள் காதோரமாக பாடினான்.. அவனது மூச்சுக் காற்றின் வெப்பத்தை அவளின் செவி உணர்ந்தது.. அவனது இதழின் தொடுகையில் அவளின் செவி மடல் சூடாகிப் போனது.. அவனது மீசை முடிகளின் உராய்வில் அவளது செவியின் பின்பக்கம் மெதுவாக இன்பம் கொள்ள ஆரம்பித்தது..
நரேந்திரன் அவளை பின்பக்கமாக நின்ற நிலையில் தழுவிக் கொண்டான்.. அவளின் தோள் தொட்டுத் தடவிய அவனது கைகளின் அழுத்தத்தில் அவள் உடலில் தீப்பிடித்ததைப் போன்ற பரவசம் பற்றிக் கொண்டது..
"உன் மனசில என்ன காயம் இருக்குன்னு எனக்குத் தெரியலைடி.. என் மனசிலயும் காயம் இருக்கு... அது உனக்குத் தெரியுமா..? தெரிஞ்சுக்க நீ முயற்சி பண்ணினயா..?"
நரேந்திரனின் குரல்தான் அவளை குற்றம் சாட்டியது.. அவனது கையோ இறங்கி.. அவளின் வளவளப்பான இடைப் பகுதியில் அழுந்திப் படிந்தது..
'ஸ் ஆ...' ஊர்மிளா பல்லைக் கடித்துத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளப் போராடினாள்..
"யார் வாழ்க்கையிலே மனக் காயங்கள் இல்லை..? எல்லோர் வாழ்க்கையிலயும் மனத்தாங்கல் வந்து போயிருக்குடி.. கணவன் மனைவி சண்டை இல்லாத வீடு எதுன்னு சொல்லு.. கோவித்துக்கிட்டு பேசாம இருக்கிறதும்.. நாளடைவில் கோபம் தணிஞ்சு அவங்க ஒன்றாய் சேர்ந்துக்கிறதும் எல்லோரின் வீட்டிலும் நடக்கிற நிகழ்வுதானே ஊர்மிளா..?"
அவன் சரசரமாக வினவினான்.. அவளை உறவாட அழைத்தான்.. அவனை அவள் மறுத்ததை மறந்து.. அந்த மழை நேரக்குளிரில் அவளிடம் குளிர் காய்ந்து விடத் துடித்தான்.. அவனை ஆக்ரமித்திருக்கும் மோகத்தீயின் வேட்கையை தணித்துக் கொள்ள அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்தான்..
"வாழ்கிறது ஒரு முறைதான் ஊர்மிளா.. அதிலே ஏற்கனெவே என்னை நான்கு வருசத்தைக் தொலைக்க வைச்சிருக்க.. இனியாவது கருணை காட்டுடி.."
நரேந்திரனின் இறைஞ்சலில் ஊர்மிளாவின் உடலும், மனமும் பாகாய் உருகின.. அவனது கைகள் அத்து மீறிப் பிரவேசிக்க ஆரம்பித்ததை உணர்ந்த ஊர்மிளா அதைக் கட்டுப்படுத்தப் போராடினாள்.. அவன் விட மறுத்தான்..
"புண்பட்டுப் போன மனக் காயத்தை கிளறி விட்டுக் கிட்டே அதை ஆறவிட மாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படிடீ..? அதை மறக்கடிக்க மருந்து போடனும் ஊர்மிளா.. அப்பத்தான் காயம் ஆறும்.. இதுதான் அதுக்கான மருந்துடி.."
நரேந்திரனின் சூடான முத்தத்தை தன் பின் கழுத்தில் உணர்ந்த ஊர்மிளா.. ஜன்னல் கம்பியில் கண்மூடி முகம் புரட்டினாள்.. அவளை முரட்டுத்தனமாக தன் பக்கம் திருப்பிய நரேந்திரன் அவள் முகத்தைத் தேடி வேட்கையுடன் குனிந்த போது..
"உங்களுக்குத் தேவை இந்த உடம்புதானே.." என்று ஆவேசத்துடன் கேட்டாள்...
நரேந்திரனின் முகம் அப்படியே நின்று விட்டது.. ஊர்மிளாவின் உடல் நடுங்கியது.. அவள் விலகியாக வேண்டும்.. இன்னும் ஒரு நொடி தாமதித்தால் கூட நரேந்திரனிடம் அவள் ஒன்றி விடுவாள்.. அவன் கேட்டதை மறுக்காமல் கொடுக்க ஆரம்பித்து விடுவாள்.. அவனது வேட்கைக்கு இரையாகி மோகத்தீயில் மூழ்க ஆரம்பித்து விடுவாள்..
'கூடாது..' ஊர்மிளாவின் மனம் ஜெபித்தது..
'இது கூடாது.. எனது நான்கு வருட போராட்டத்திற் கான நியாயமும்.. தீர்வும் கிடைக்காமல் இவனுடன் நான் கலந்து விடக் கூடாது.. அது என் சுயகௌரத்தைக் கொன்று, தின்று விடும்..'
அன்று அவனுடைய ஆசைக்கு இணங்கி விட்டால் அது அப்படியே தொடர்கதையாகி நீண்டு நிலைத்து விடாதா..? அதன்பின்னால் அவனிடம் எப்படி அவளால் போராட முடியும்..?
"ராட்சசி.." அவன் வெறியுடன் அவளைத் தள்ளி விட்டான்..
ஊர்மிளா கட்டிலின் மீது போய் விழுந்தாள்.. விழுந்த வேகத்தில் விலகிய அவளது உடையில்.. வெளிப்பட்ட அவளின் மேனி அழகை அவனது கண்கள் மொய்த்தன.. அவனுக்கு கொலை வெறி வந்தது..
"அழகான ராட்சசி.." குமுறினான்..
"அப்படி என்னடி நான் கேட்கக் கூடாததை கேட்டுட்டேன்.. இன்றைக்கு டாண், டாண்ணு கொடுத்துக் கட்டினயே.. அந்தத் துணிவு அன்றைக்கு எங்கேடி போயிருந்தது..? உன் அப்பா நம்ம மேரேஜ் சமயத்தில என் சித்தி சொன்ன பொய் வார்த்தைகளை அம்பலப் படுத்தலையா..? அதைப் போல நீயும் அவங்களோட பொய்களை அம்பலப் படுத்துவாய்ன்னுதானே உன்னிடம் நான் கேள்வி கேட்டேன்..?"
'என்னது..?'
ஊர்மிளாவின் புருவங்கள் சுருங்கின.. இதில் இப்படியும் ஒரு கோணம் இருக்கக்கூடும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லையே..
"என்னடி முழிக்கற..? அந்தச் சமயத்தில உங்க அப்பாம்மாவை அருணும், அர்ச்சனாவும் சாப்பிடக் கூப்பிட்டும் அவங்க சாப்பிட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னு என் சித்தி புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டாங்க. நான் என்ன செய்தேன்..? அவங்க முன்னாடியே அருணிடமும், அர்ச்சனாவிடமும் விசாரித்து சித்தியின் மூக்கை உடைத்தேனா இல்லையா..? அதைப் போலதானே உன்னிடமும் விசாரித்தேன்..?"
இல்லை என்று ஊர்மிளாவால் சொல்ல முடியவில்லைதான்.. ஆனால்.. அவள் தரப்பில் இருந்த நியாயங்கள் அவளை ஊமையாக்கி வைத்தன..
"என் கேள்விக்கு நீ பதில் சொல்லியிருக்கனும்டி.. அப்பத் தெரிந்திருக்கும்.. அவங்களுக்கு நான் எந்த அளவுக்கு பனிஷ்மெண்ட் கொடுத்திருப்பேன்னு..
அவங்க வாழ்க்கையிலே மறக்க முடியாத அளவிற்கு பனிஷ் பண்ணியிருப்பேன்.. நீ சொல்லலையே.. பதிலையும் சொல்லலை.. என் மகன் உன் வயிற்றில் இருக்கிறான்ங்கிற விவரத்தையும் சொல்லலை.. உன்னை உயிருக்குயிராய் காதலிச்சவனை பனிஷ் பண்ணிட்டு விலகிப் போயிட்டேயேடி.. உன் மனசு என்ன கல்லா..? அதில ஈரமே இல்லையா..? நீ ராட்சசிடி.. மனுஷியே இல்லை.."
அவனது வேகமான பேச்சில் விழியுயர்த்தி அவனைப் பார்த்த ஊர்மிளாவின் தோற்றம் அவனை வசீகரித்தது.. அவளைக் கட்டி அணைத்து அந்த வசீகரத்தை உணர்த்த முடியாதவனாக மனதுக்குள் அவன் பொருமினான்..
இவள்.. அழகான ராட்சசி..!'




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -80
அழகான ராட்சசியே -80
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-80.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-80.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy