அழகான ராட்சசியே -78

78 காவேரிக் கரையினிலே.. காதலித்து பிரிந்து விட்ட.. அழகான ராட்சசி நீ.... எல்லோரும் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக மாறி...


78
காவேரிக் கரையினிலே..
காதலித்து பிரிந்து விட்ட..
அழகான ராட்சசி நீ....


எல்லோரும் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக மாறிவிட்டதே என்று கவலைப்படுவார்கள்.. அகல்யாவோ.. குரங்கைப் பிடிக்க வந்து.. அது பிள்ளையாராக மாறிக் கொண்டிருந்ததில் கொலைவெறி கொண்டாள்..
வேலையாள்களின் முன்னிலையில் ஊர்மிளாவை கண்டபடி பேச வேண்டும்.. அவர்கள் மனதில் சந்தேகத்தை வரவழைக்க வேண்டும்.. அதில் ஊர்மிளா 'ஐயோ..' என்று துடியாய் துடிக்க வேண்டும்.. அந்த வீட்டை விட்டே ஓடிப்போக வேண்டும்..
அந்த திட்டம் ஆட்டம் கண்டு விட்டதை உணர்ந்தாள் அகல்யா.. வேலையாள்களின் மனதிலிருந்த சந்தேகம் விலகி விட்டதை அவர்களின் முகக் குறிப்பிலிருந்து அறிந்து கொண்டவள் வெகுண்டாள்..
எப்போதுமே ஊர்மிளா பழிகளைத் தாங்கிக் கொள்ள மாட்டாள்.. மற்றவர்களின் முன்னால் அவளது மரியாதை குறைவதில் பதறிப் போவாள்.. அப்படி நேர்ந்து விட்டால் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளிந்து கொள்வாள்.. என்பது தான் அகல்யாவின் கணிப்பாக இருந்தது..
ஊர்மிளா மட்டுமல்ல.. பழி பாவத்துக்கு அஞ்சும் நல்லவர்கள்.. மான, மரியாதை பார்ப்பவர்கள்.. சுய கௌரவம் மிகுந்தவர்கள்... எல்லோருமே இதே குணாதிசியத்துடன் தான் இருப்பார்கள்..
கேடுகெட்டவர்களுக்கு அதுதான் மிகச் சாதகமான அம்சம்.. மரியாதையை பெரிதாய் நினைக்கிறவர்களைப் பற்றி.. மரியாதை கெட்ட பிறவி.. இழிவாய் ஒரு சொல் சொல்லி விட்டால் போதும்.. அந்த இழிபிறவி.. மரியாதைப் பட்ட மனிதரை ஜெயித்து விடும்..
அப்படிப்பட்டவர்களை எதிர்த்து நிற்பது எப்படி என்பதை பாரதியார் மிக அருமையாக தமது கவிதையில் சொல்லியிருப்பார்..
 'பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ..
             பயம் கொள்ளலாகாது பாப்பா..
    மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
             முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..'
அப்படி மோதி மிதிக்கும் துணிவையும்... நேர்மையையும் கொண்டவள்தான் ஊர்மிளா.. அன்று அவள் நரேந்திரனை விட்டுப் பிரிந்தாள் என்றால்.. அதற்கான காரணம்.. நரேந்திரனின் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போனது..
இன்று அப்படியல்ல.. எந்தவித சவாலிலும் சிக்கிக் கொள்ளாமல்.. யார்மீதும் நம்பிக்கை வைக்காமல்.. தன் கையே தனக்கு உதவி என்று ஊர்மிளா அகல்யாவை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறாள்.. இந்த யுத்ததிலிருந்து ஒரு போதும் அவள் பின் வாங்க மாட்டாள்..
இதை அறியாத அகல்யா.. பழைய நினைவில் ஊர்மிளாவை விரட்டி விடலாம் என்று மனப்பால் குடித்தபடி அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்..
"கள்ளக்காதலனுடன் கொஞ்சிக் குழாவி... ஊர் சுற்றிட்டு.. அதைப் பத்திக் கேள்வி கேட்ட உன் புருசனுக்குப் பதிலைச் சொல்லாம ஊரை விட்டு ஓடினவதானே நீ..! என்னவோ உன் புருசன்.. உன் புருசன்ங்கிறயே.. இத்தனை வருசமா அந்தப் புருசனுடன் குடும்பம் நடத்தாம எங்கே போய் ஒளிஞ்சிருந்த..?"
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஊர்மிளா மடங்கி விடுவாள் என்று ரம்யாவே எதிர்பார்த்தாள்.. அகல்யா கேட்டு வைத்திருக்கும் கேள்வி அப்படிப்பட்டது.. மீண்டிருக்கும் வேலையாள்களின் நம்பிக்கையை தோண்டிப் புதைப்பது.. அகன்றிருக்கும் அவர்களின் சந்தேகங்களை வெற்றிலை பாக்கு வைத்து திரும்பவும் அழைத்து வருவது..
'இப்ப என்ன செய்யப் போறா..?'
இறுமாப்புடன் நின்றிருந்த அகல்யாவின் கன்னத்தில் "பளார்" என்ற ஊர்மிளாவின் அறை விழுந்தது..
'என்னது..??!!'
ரம்யா இமை கொட்டி விழித்தாள்.. அவளால் நடந்து விட்ட அந்தச் செயலை நம்பவே முடியவில்லை..
'அத்தையம்மா அடி வாங்கிட்டாளா..?'
இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண பல்லவி அங்கே இல்லையே என்று அவள் ஆற்றாற்றுப் போனாள்..
'அம்மா மட்டும் இதைப் பாத்திருக்கனும்.. அவங்க மனசு நிறைஞ்சு.. இன்னைக்கு சாப்பிடாமலே நிம்மதியா தூங்கியிருப்பாங்க..'
'அடிச்சுட்டாளா..'
கன்னத்தைப் பிடித்தபடி அப்படியே நின்று விட்டாள் அகல்யா.. அவள் காதுகளில் "ஙொய்.." என்ற கோடிக் கணக்கான கொசுக்களின் ரீங்கார சத்தம் கேட்டது..
"கொன்று புதைச்சிருவேன்.." ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்த ஊர்மிளாவின் உடல் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது..
எப்போதும் அமைதி தவழும் முகத்துடன்.. அதிகம் பேசாமல் வளைய வரும் ஊர்மிளாவின் முகத்தில் ரௌத்ரம் பொங்கி வழிந்ததை அன்றுதான் அந்த வீட்டின் வேலையாள்கள் பார்த்தார்கள்..
"யாருன்னு நினைச்சே.. நீ பாட்டுக்கு வாயில வந்ததைப் பேசித் தள்ளிக்கிட்டு இருக்க..? என்ன..? நீ பேசப் பேச நான் பேசாமல் இருப்பேன்கிற நினைப்பா உனக்கு..? கொன்று புதைச்சிருவேன்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிற..?"
"அப்படி என்னத்தை நான் இல்லாததை சொல்லிட்டேன்.."
அகல்யா முன்ஜாக்கிரதையாக இரண்டடி தள்ளி நின்று கொண்டு கேட்டாள்.. ஊர்மிளா கோபத்துடன் முன்னேவர.. அவள் பின்னால் பாய்ந்தாள்..
'ஆஹா.. எங்கத்தை ஓட்டம் பிடிக்கிறதில சூரப் புலியாய் இருக்குதே..' ரம்யா வேடிக்கை பார்த்தாள்..
"இருக்கிறதையா சொல்கிற..? தூ.. நீயெல்லாம் ஒரு பொம்பளை.. என் புருசனுக்கு அம்மான்னு சொல்லிக்கறயே.. நீயென்ன அவரை பத்து மாதம் வயித்திலே சுமந்து பெத்த அம்மாவா..?"
ஊர்மிளாவின் கேள்வியில்..
"அதானே பார்த்தேன்.." என்றாள் கண்ணம்மா..
"இந்தம்மா குணத்துக்கு.. இதுவாவது.. நம்ம ஐயாவைப் பெத்த அம்மாவாய் இருக்கிறதாவதுன்னு நினைச்சேன்.. அப்படியில்லையா..? அதுக்குள்ள இந்தம்மாதான் ஐயாவோட அம்மான்னு என்னமா 'லா' பேசுச்சு.. பெத்த பிள்ளையா இருந்திருந்தா.. மருமகள் கிட்ட பேசற பேச்சில பாந்தம் இருக்கும்.. அன்பு இருக்கும்.. மட்டு மருவாதி இருக்கும்.. இங்கதான் அத்தனையும் இல்லயே.. அப்பவே இந்தம்மா யாரோ எவரோன்னு தெரிஞ்சு போச்சே.."
"கேட்டுக்கிட்டியா.." என்றாள் ஊர்மிளா..
"நான் சொல்லலை.. உன்னை முன்னே பின்னே தெரியாத கண்ணம்மா சொல்லுது... இதுக்கு என்ன பதிலை சொல்லப்போற.. அருண்குமாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற பெண்கிட்ட இப்படித்தான் நீ பேசுவியா..?"
ஊர்மிளாவின் கேள்விக்கு.. ரம்யா 'சபாஷ்' போடப் போனாள்.. கடைசி நொடியில் அகல்யா அங்கிருங்கிறாள் என்பது புத்தியில் உறைத்ததில் சபாஷை வாபஸ் வாங்கிக் கொண்டு.. சமர்த்து மருமகளாக அகல்யாவின் பக்கத்தில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டாள்..
"எங்க அருணைப் பத்தி நீ பேசாதே.." என்றாள் அகல்யா..
"ரொம்ப நல்லது.. எனக்கும் பேசனும்னு இல்லை.. அதைப் போல நீயும் இங்கே வந்து எங்களைப் பத்தி எதுவும் பேசாதே.. உன் புத்தியும் பேச்சும் கீழ்த்தரமாவே இருக்கு.. இது நாகரிகமா.. நேர்மையா.. பேசறவங்க இருக்கிற இடம்.. இங்கே உன் போல ஆளுக்கெல்லாம் இடமில்லை.."
அந்த வார்த்தைகளில் கதி கலங்கிப் போய் விட்டாள் அகல்யா.. நரேந்திரனின் வீட்டில் அகல்யாவுக்கு இடமில்லையா..? அப்படியென்றால் அவளின் கோடிஸ்வர வாழ்க்கை என்ன ஆவது..?
அந்த வெறியில் அவள் கூக்குரலிட்டாள்..
"நரேந்திரன் என் மகன்.. என் தம்பி மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்.. அவன் வீட்டில் உனக்குத்தான் இடமில்லை.. நீ கிளம்பு.."
"அடங்கு.." என்றாள் ஊர்மிளா..
"நீ கிளம்புன்னா உடனே பெட்டியைக் கட்ட நான் பழைய ஊர்மிளா இல்லை.. என் புருசன் உனக்கு மகனா..? என் மாமனாருக்கு இரண்டாம் தாரமா வந்தவதானே நீ..? அதனாலதான் உன் புத்தி இரண்டாம் தரமாவே யோசிக்குது.. என் மாமனாரைப் போல.. என் புருசனுக்கும் இரண்டாம்தாரம் கொண்டு வர ஏன் யோசிக்கற..? என் புருசன் என் மாமனாரோட முதல் தாரத்துக்கு பிறந்தவர்.. அதனாலே அவர் இரண்டாம் தாரம்ங்கிறதையெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டார்.. நீ உன் மகனுக்குத்தான் இரண்டாம் கல்யாணமா இரண்டு தாரங்களை கட்டி வைக்கனும்.. ஏன்னா அருண்தான் உனக்கு.. அதாவது இரண்டாம் தாரத்துக்குப் பிறந்தவர்.. அதனால அவருக்கு இரண்டு பெண் தேடு.. என் புருசனை விட்டு விடு.. "
ஊர்மிளா சொல்லச் சொல்ல.. தேன்மொழியும் கண்ணம்மாவும் தாழ்ந்த குரலில் அகல்யாவைப் பற்றி எதையோ பேசி சிரித்தார்கள்.. அகல்யாவுக்கு கோபம் பீறிட்டது.. ஊர்மிளா இந்த அளவுக்கு விளாசித் தள்ளுவாள் என்று அவள் எதிர்பார்த்துக் தொலைக்கவில்லை...
"ஏன் என் மகனுக்கு இரண்டு பெண் பார்க்கனும்..? அவன் என்ன உன் புருசனைப் போல வீட்டுக்கு அடங்காம ஓடிப் போகிறவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்கப் போகிறானா..? என் மகன் அப்படியெல்லாம் ஏமாற மாட்டான்.. அதனால அழகு போல ஒரே ஒரு பெண்ணைப் பார்த்து அவளுக்குத் தாலிகட்டி குடும்பம் நடத்துவான்.. உன் புருசன்தான் ஓடிப் போன உன்னாலே ஒத்தைப் பனைமரம் போல இத்தனை வருசமாய் வாழாம நின்றான்.. அவனுக்குத்தான் இரண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கனும்..."
எத்தனை அடி அடித்தாலும் தாங்கிக் கொண்டு அயராமல் எதிர்த்துத் தாக்கும் அகல்யாவின் பேச்சிலிருந்து ஊர்மிளா எப்படித் தப்பிக்கப் போகிறாள் என்று ரம்யாவுக்கே கவலை வந்து விட்டது..
பல்லவியை ஆட்டி வைத்த அகல்யாவுக்கே அறை கொடுத்த பெண்சிங்கமல்லவா ஊர்மிளா..! அவள் தோற்பதா..?
ஊர்மிளா அகல்யாவை பார்த்த பார்வையே..
'ச்சீ.. போ.. புழுவே..' என்றது..
"சும்மா ஓடிப் போனேன்.. ஓடிப் போனேன்னு சொன்னா.. உன் பல்லு மொத்தத்தையும் பேர்த்து கையில கொடுத்துருவேன்.. எங்கே ஓடிப் போனேன்..? என்னைப் பெத்தவங்க வீட்டுக்குப் போனேன்.. உன் அகராதியில அதுக்குப் பேரு ஓடிப் போகிறதா..? இப்ப எங்கேயோ போகிறதா நீ பெத்த பிள்ளைகள் கிட்ட போக்குக் காட்டிட்டு இங்கே வந்து நிற்கிறயே.. உன்னைப் போல என்னையும் நினைச்சுக்கிட்டியா.." ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
"அது உனக்கு எப்படித் தெரியும்..?" என்று தானாக வாய் விட்டு மாட்டிக் கொண்டாள் அகல்யா..
"உன் திருட்டுப் புத்தியைப் பத்தி எனக்குத் தெரியாதா..?" என்றாள் ஊர்மிளா..
"நீயெல்லாம் என்னைப் பத்தி பேசக் கூடாது.. ஒழுங்காய் புருசன்கூடக் குடும்பம் நடத்த துப்பில்லை.. நீயெல்லாம் என்னைப் பேச வந்துட்ட.." அகல்யா அழிச்சாட்டியம் பண்ணினாள்..
"உன்னைப் போல சின்னப்புத்தி படைச்ச 'சின்ன மாமியார்' இருக்கிற வீட்டில எப்படி நான் என் புருசன்கூட நிம்மதியாய் குடும்பம் நடத்த முடியும்..? என் மாமனாருக்கு இரண்டாம் தாரமா வந்துட்டு அவரைப் பேசிப் பேசியே கொன்ன மகராசிதானே நீ.. எனக்குக் கள்ளக்காதலன் இருந்தானா..? எங்கே.. அதே வீட்டில இருக்கிற.. உன் வயிற்றிலே பிறந்த அருண்குமார்கிட்டயும், அர்ச்சனா கிட்டயும்.. இந்த வார்த்தையைச் சொல்லிப் பாரு.. எனக்குப் பதிலா அவங்களே பெத்த தாய்ன்னு கூடப் பார்க்காம உன்னை கொன்று புதைச்சிருவாங்க.."
"என்னடி.. என் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து எனக்கெதிரா.. திருப்பப் பார்க்கறியா..?"
அகல்யா பயந்து போனாள்.. அவளின் பயத்தை ஆனந்தமாக வேடிக்கை பார்த்தாள் ரம்யா.. அவளுக்கு நடந்து கொண்டிருந்த வார்த்தை விளையாடலை மிகவும்  பிடித்திருந்தது.. அகல்யா வாங்கும் அடிகளில் அவள் உற்சாகமாகிக் கொண்டிருந்தாள்..
'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பல்லவி..'
மானசீகமாக தன் தாயை கேட்டுக் கொண்டாள் ரம்யா.. அதை உணராமல் அகல்யா தம்பி மகள் தனக்காக பரிதாபப் படுகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..
பிரளயம் என்பது எப்படி உருவாகும்..? தாங்க முடியாத சீற்றத்தில் இயற்கை வெடிக்கும் போது பிரளயம் உண்டாகும்..
ஊர்மிளாவும் அது போன்ற சீற்றத்துடன்தான் இருந்தாள்.. தாங்க முடியாத ஆழிப் பேரலைகளாய் அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்த துயரங்களால் பிரளயமாய் வெடித்துச் சிதறினாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -78
அழகான ராட்சசியே -78
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-78.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-78.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy