அழகான ராட்சசியே -77

77 நீதிக்கு தலை வணங்கி.. நேர்மையிலே திளைத்திருக்கும் அழகான ராட்சசி நீ.... இந்த உலகம் அப்படிப்பட்டது.. அவரவர் முதுகில் ஆயிரம் ...


77
நீதிக்கு தலை வணங்கி..
நேர்மையிலே திளைத்திருக்கும்
அழகான ராட்சசி நீ....


இந்த உலகம் அப்படிப்பட்டது.. அவரவர் முதுகில் ஆயிரம் அழுக்கிருக்கும்.. அவர்கள் அதைப் பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் மற்றவர்களின் மீது படிந்திருக்கும் தூசியை சுட்டிக் காட்டுவார்கள்..
குறை சொல்வதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்.. மகாத்மா காந்தியிடம் ஒருநாள் ஒரு பெண்மணி வந்து..
"பாபுஜி..! என் மகன் எப்போது பார்த்தாலும் சர்க்கரைக் கட்டிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறான்.. தாங்கள் தான் அவனுக்கு புத்திமதி சொல்லி அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.. தங்களின் அறிவுரைக்கு அவன் செவி சாய்ப்பான்.." என்று வேண்டிக் கொண்டாள்..
மகாத்மாவும் "ஆகட்டும்.. நாளைக்கு உன் மகனுடன் வந்து என்னைப் பார் அம்மா.." என்று சொல்லி அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்தார்..
மறுநாள் அந்தப் பெண்மணி மகனுடன் வந்த போது.. அந்தச் சிறுவனிடம் இனிப்புக் கட்டிகளை அதிகம் உண்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விவரித்த மகாத்மா காந்தி.. அதை இனிமேல் அதிகமாக உண்ண வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்.. அந்தப் பையனும் கேட்டுக் கொண்டான்.. அவர்கள் போனபின்பு அருகிலிருந்தவர் மகாத்மாவிடம்..
"பாபுஜி.. இந்த அறிவுரையை நேற்றே அந்தப் பையனுக்குத் தாங்கள் சொல்லியிருக்கலாமே.. இன்று எதற்காக வரச் சொன்னீர்கள்," என்று கேட்டார்..
அதற்கு பாபுஜி சொன்ன பதிலில்தான் எதற்காக இந்த உலகம் அவரை மகாத்மா என்று போற்றுகிறது என்ற செய்தி அடங்கியிருக்கிறது.. அவர் சொன்னார்..
"எனக்கும் இனிப்புக் கட்டிகளைச் சாப்பிடும் பழக்கம் இருந்தது.. அதை நிறுத்தாமல்.. அதைப்பற்றிய தீமை களைச் சொல்லி அந்தப் பையனை நிறுத்தச் சொல்ல முடியுமா..? அதற்கான தகுதி எனக்கிருக்க வேண்டாமா..? நேற்று முதல் நான் இனிப்புக் கட்டிகளை சாப்பிடும் வழக்கத்தை விட்டு விட்டேன்.. இன்று அதற்கான தகுதி எனக்கு வந்து விட்டது.. இப்போது நான் அவனுக்கு அறிவுரை சொல்லலாம்.."
எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்..? நம்மைச் சுற்றி இருப்பவர்களெல்லாம் கண்ணாடி மாளிகைக்குள் இருந்தபடி கல் எறிபவர்களே.. இங்கே வேதாளம் தேவாரம் ஓதலாம்.. ஆயிரம் பெண்களுடன் வாழ்பவன் ராமன் வேடம் தரிக்கலாம்.. மனம் போல வாழும் கூட்டம் மற்றவர்களுக்கு போதனை செய்யலாம்..
அகல்யாவும் அவர்களில் ஒருத்தியே.. அதுபோன்ற பிறவிகளின் பிரதிநிதி அவள்..
"அவ கடந்த காலத்திலதான் எதுவுமில்லையே அத்தை.."
'ரம்யா சந்தேகம் கேட்டுவிட்டு அகல்யாவின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆனானாள்..'
"அது உனக்கும், எனக்கும் தெரியும்.. ஊருக்குத் தெரியுமா..? அவங்க நெருப்பில்லாம புகையுமான்னு கேட்பாங்க.."
"ஓஹோ.."
"ஒரே பொய்யை திரும்பித் திருப்பிச் சொன்னோம்ன்னு வைய்யி.. அதை உண்மைன்னு நம்பிருவாங்க.."
"அப்படியா..?"
"அதனாலே.. ஊர்மிளா விக்கி, விறைச்சுப் போயி அந்த வீட்டைவிட்டு ஓடியே போயிருவா.."
"நரேந்திரன் போய் கூப்பிடுவாரே.."
"அதைச் சொல்லு... மூன்றரை வருசமா பொண்டாட்டியை பிரிஞ்சு இருந்தவன் நொடிப் பொழுதிலே ஒன்றாய் சேர்ந்துட்டானே.. இவனை எந்தக் கணக்கிலேயும் வைக்க முடியாது ரம்யா.. இவன் போய் கூப்பிடுவான்.. ஆனா.. அவ இவனைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா.."
அகல்யா உத்திரவாதம் அளித்தாள்..
"இவர் வற்புறுத்துவாரே அத்தை.."
"இதுக்கு மேலே இந்த நரேந்திரன் போய் எவ்வளவு தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் அவ இவன் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா.. இவனுடன் வாழவும் வரமாட்டா ரம்யா.."
"எப்படி அத்தனை நிச்சயமா சொல்கிறிங்க அத்தை..?"
"அவ ரோசக்கார ஏமாளி.. அந்த ஏமாளித்தனத்தை கண்டு கொண்டுதானே அவளை ரோசப்பட வைத்து சவாலுக்கு இழுத்தேன்..? அந்த ஏமாளியும் அது தெரியாம வகையா என் வலையிலே மாட்டிக்கிட்டா.. வீட்டை விட்டு ஓடிப் போனா.. அப்படியாப்பட்ட ஏமாளி அவ.. அவளைப் பத்தி நீ கவலைப்படாதே.."
அகல்யாவின் எக்களிப்பில்.. இந்த அத்தையின் அகராதியில் ரோசக்காரர்கள் எல்லோரும் ஏமாளிகள் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் ரம்யா..
அகல்யாவுக்கு என்றுமே ரோசம் போன்ற குணங்கள் எல்லாம் இருந்ததில்லை.. அது என்ன தேவைக்கு என்று கேட்கும் பிரகிருதி அவள்.. எப்படிப்பட்ட கேள்வியையும் தட்டி விட்டுப் போய் விடுவாள்.. காரியம் பெரிதா.. வீரியம் பெரிதா.. என்ற கேள்வியில் அவள் முன்னால் காரியம் தான் பெரிதாக நிற்கும்.. வீரியம் கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டி விடப்பட்டு விடும்..
அகல்யா போட்ட திட்டத்தில் எதுவும் நடந்து விடும் என்று ரம்யா நினைக்காவிட்டாலும்.. கூடப் போய் அந்த ஊர்மிளா எப்பேற்பட்ட அழகி என்று பார்த்துவிட வேண்டும் என்று மட்டும் நினைத்தாள் அவள்..
"சரி அத்தை.. நானும் உங்க கூட வர்றேன்.. ஆனா.. நான் எதுவும் பேச மாட்டேன்.. எதுவானாலும் நீங்கதான் பேசிக்கனும்.. சொல்லிட்டேன்.." என்ற நிபந்தனையுடன் ரம்யாவும் கூடச் செல்ல ஒப்புக் கொண்டாள்..
சென்னைக்கு தம்பி வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு ரம்யாவுடன் அகல்யா கிளம்பியபோது அருணும்.. அர்ச்சனாவும் சந்தேகப் படவில்லை.. இயல்பாகவே 'டாட்டா' சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்..
அகல்யா பிறந்த வீட்டிற்குப் போகாமல் நரேந்திரனின் வீட்டிற்குப் போவாள் என்று அவர்கள் என்ன கனவா கண்டார்கள்..?
சுரேந்திரனை பள்ளியில் விட்டு விட்டு.. கம்பெனிக்குப் போக வேண்டும் என்று அப்போதுதான் நரேந்திரன் பிள்ளையுடன் கிளம்பிச் சென்றிருந்தான்.. சென்னையிலேயே அவன் தங்கியிருக்க தீர்மானித்து விட்டதில் அவனது கம்பெனியின் கிளை அலுவலகமாக இருந்த சென்னை அலுவலகம், தலைமை அலுவலகமாக மாறிக் கொண்டிருந்தது.. அங்கிருந்தே.. அனைத்து தொழில்களையும் அவன் கண்காணித்துக் கொண்டிருந்தான்..
தகப்பனும், மகனும் கிளம்பிப் போன பின்பு வெறிச்சோடிப் போயிருந்த வீட்டில.. ஹாலில் இருந்த அலமாரியை தூசி தட்டிச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. தேன்மொழி வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.. கண்ணம்மா.. சமையலறையில் இருந்தாள்.. ஊர்மிளாவின் வசதிக்காக வாங்கப் பட்டிருந்த காரின் மீது சாய்ந்து நின்று
பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் மணிவாசகம்.. வாசலில் நின்ற செக்யூரிட்டியை தள்ளி விட்டு உள்ளே வந்த அகல்யாவைக் கண்டதும்.. சென்னையின் மணிபிரவாகத் தமிழில்..
"யாரும்மே..?" என்று கேட்டபடி அகல்யாவையும், ரம்யாவையும் ஏற, இறங்கப் பார்த்தான்..
'யாரு இந்தம்மா..? பாத்தா பஜாரிக் கணக்கா கீது.. கூட வந்திருக்கிற சின்னப் பொண்ணு படு ஷோக்கா கீது.. இதுக ரெண்டும் இங்க எதுக்கு வந்திருக்குதுக.. தோரணையைப் பாத்தா சண்டை வலிக்க வந்திருக்கிறதைப் போல கீதே..'
மணிவாசகத்தின் ஆராய்ச்சிப் பார்வையில் உஷ்ணமான அகல்யா..
"மே.. மே..ன்னு ஆட்டுக்குட்டியப் போலக் கத்தினேன்னு வைய்யி.. பிளந்து கட்டிருவேன்.. யாரைப் பார்த்து மே..மேங்கிற.. நான் யாரு தெரியுமா..?" என்று அதட்டினாள்..
அகல்யாவின் அதட்டலில் மணிவாசகத்திற்கு கோபம் வந்து விட்டது.. அவன் பேப்பரைத் தூக்கிக் கடாசிவிட்டு அவளை நேரடியாகவே முறைத்தான்.. அவன் முறைத்த முறைப்பில் ஒற்றை விரலை உயர்த்திய அகல்யா..
"ஏய்ய்.." என்று எச்சரித்தாள்..
அவ்வளவுதான்.. மணிவாசகத்திற்கு சாமி வந்து விட்டது..
"சும்மா இரும்மே.. உனக்குத்தான் மருவாதி இருக்கா.. எனக்கு இல்லையா..? ஒரு சின்னப் பார்வைக்கு ஏய்ய்ன்னு கூவறயே.. இத்தப் போலதானே எனக்கும்
காண்டா இருக்கும்..? வீட்டில வேலை செய்கிறவங்க.. தெரியாத ஆளுக வீட்டுக்குள்ளே வந்தா யாரும் மேன்னுதான் கேப்பாங்க.. அத்துக்கு இந்த போடு போடுற..? உன்னக் காட்டிலும் யாரும் இங்கே கொறைஞ்சவக இல்லம்மே.."
'பாருடா.. இந்த வேலையாளு.. நம்ம அத்தையம்மாளை போடற போட்டை..'
பெங்களூரில் அகல்யாவைக் கண்டால் வேலையாள்கள் அலறுவார்கள்... அகல்யா என்றால் அவர்கள் அத்தனை பேருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும்.. அப்பேற்பட்ட அகல்யாவை நரேந்திரனின் வீட்டு கார் டிரைவர் மாட்டு.. மாட்டென்று மட்டுவதை வெகு சுவராஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ரம்யா..
அதிகாரம் செய்தே பழக்கப்பட்டிருந்த அகல்யாவுக்கு.. ஒரு வேலையாள்.. அவனுக்கு இணையாக அகல்யாவை பேசி விட்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"யாரு.. யாரோட இணையாப் பேசறது..? நான் யாரு தெரியுமா..?" என்றாள்..
"அட.. இதத்தானேம்மா அப்போப் பிடிச்சு கூவிக் கிட்டே இருக்கே.. நீ யாரு..? மைசூர் மகாராணியா..? யாருன்னு சொன்னாத்தான்ம்மே தெரியும்.. அத்தச் சொல்லாம சும்மா.. நான் யாரு தெரியுமான்னு கீறல் விழுந்த ரிகார்டப் போலக் கூவிக்கினு இருந்தா யாருக்கு என்ன தெரியும்..?"
மணிவாசகம் அலட்சியமாக கேட்டான்..
"நான்தான் நரேந்திரனோட அம்மா.. இவ நரேந்திரனோட வருங்காலப் பெண்டாட்டி.." படு தெனா வெட்டாக தங்களை அறிமுகம் செய்து கொண்டாள் அகல்யா..
"என்னது..?!"
மணிவாசகத்திற்கு 'என்னடா இது..' என்று ஆகி விட்டது..
"தேன்மொழி.." என்று குரல் கொடுத்தான்..
"இன்னாய்யா.." என்றபடி அவளும் அங்கே வந்தாள்.
அகல்யாவையும் ரம்யாவையும் காட்டி அவன் தாழ்ந்த குரலில் கிசுகிசுத்ததில் அகல்யா திருப்தியாகிப் போனாள்..
'எப்படி..? நான் போட்ட திட்டம் வேலை செய்யுதா..?'
அவள் விழிகள் ரம்யாவிடம் கேட்டன.. அவளோ அகல்யாவை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்..
மணிவாசகம் சொன்னதைக் கேட்ட தேன்மொழி ஆடிப் போய் விட்டாள்.. மணிவாசகத்தின் முகமும் குழப்பத்தைக் காட்டியது..
வந்திருப்பது வருங்காலப் பெண்டாட்டி என்றால் அந்த வீட்டில் இருக்கும் ஊர்மிளா யார்..? நிகழ்காலப் பெண்டாட்டியா..?
'அப்ப இறந்தகாலப் பெண்டாட்டியா யார் இருந்திருப்பாங்க...?' அவன் தாடையைத் தடவிக் கொண்டு யோசிக்கலானான்..
தேன்மொழியோ... "இருக்காதுய்யா..." என்று சொன்னாள்..
"ஐயாவையும், அம்மாவையும் பாத்தா... பார்வதியையும், பரமசிவனையும் பாத்ததைப் போல இருக்குய்யா... தங்கம் போல கையில பிள்ளைவேற..
இதில முக்காலமும் அவருக்கு பெண்டாட்டிமார்கள் வரிசை கட்டிக்கிட்டு இருப்பாங்கன்னு சொன்னா நம்பறதைப் போலவா இருக்கு..?"
அகல்யாவை துரத்திக் கொண்டு அவள் பின்னாலேயே வந்த செக்யூரிட்டி.. அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளைக் கேட்டதும் அப்படியே நின்று விட்டான்.. அவன் விழிகளிலும் கேள்வி இருந்தது..
அனைத்துச் சூழலும் அகல்யாவுக்கு சாதகமாக அமைந்து விட்ட நிலையில்.. அவள் வெற்றிப் புன் முறுவலுடன் நிமிர்ந்து நின்றிருந்தாள்.. தேன்மொழி வீட்டுக்குள் ஓடினாள்.. அவள் ஒலிபரப்பிய செய்தியில் ஊர்மிளா கை வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தாள்..
'வரட்டும்..' கருவியபடி தெனாவெட்டாக ஊர்மிளாவைப் பார்த்த அகல்யா அயர்ந்து போனாள்..
தேன்மொழி இந்தப் பக்கம் வர.. கரண்டியும் கையுமாக என்னவோ.. வாளேந்திய பெண் தளபதியைப் போல கண்ணம்மா அந்தப் பக்கம் வர.. நடு நாயகமாக ஊர்மிளா.. 'லேடி பாட்ஷா..' ஸ்டைலில் நிமிர்வான நடை நடந்து அங்கே வந்து நின்றாள்..
ஊர்மிளாவின் அந்த நிமிர்வில் அகல்யாவுக்கு ஆங்காரம் வந்து விட்டது..
"தூ... இப்படித் திருட்டுத்தனமா குடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கியே.. உனக்கு வெட்கமாயில்லை..?" அவள் வெடிக்க..
"பல்லைக் கழட்டி விடுவேன்.." என்றாள் ஊர்மிளா..
'அப்பாடி..' மணிவாசகத்திற்கும், செக்யூரிட்டிக்கும் சுவாசம் சீரானது... அகல்யாவைத் தடுத்ததினால் அவர்களுக்கு வேலை போய்விடாது என்று நிச்சயமானதில் அவர்கள் நிம்மதியாக சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்..
"திருட்டுத்தனமா நான் ஏன் குடித்தனம் பண்ணனும்..? ஊர்.. உலகம் முழுவதும் இன்விடேசன் கொடுத்து.. பெங்களூரிலேயே பெரிய கல்யாண மண்டபத்திலே என்னைச் சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட என் புருசன்கூடத்தான் நான் குடித்தனம் பண்றேன்.. இதில திருட்டுத்தனம் எங்கே வந்தது..?"
ஊர்மிளாவின் ஆணித்தரமான கேள்வியில் வேலையாள்களின் மனதில் நிலவிய கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் அகன்று விட்டன..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -77
அழகான ராட்சசியே -77
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-77.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-77.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy