அழகான ராட்சசியே -76

76 தூண்டிலிலே எனை பிடித்தும்.. தண்ணீரில் தூக்கிப் போட்ட அழகான ராட்சசி நீ.... அந்த செக்ரட்டரி கஜேந்திரனால் தேர்வு செய்யப்பட்டு...


76
தூண்டிலிலே எனை பிடித்தும்..
தண்ணீரில் தூக்கிப் போட்ட
அழகான ராட்சசி நீ....


அந்த செக்ரட்டரி கஜேந்திரனால் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப் பட்டவள்.. செக்ரட்டரி என்று இல்லை.. நரேந்திரனைச் சுற்றியிருந்த முக்கியமான பொறுப்புக்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே கஜேந்திரனால் நியமனம் செய்யப் பட்டவர்களே.. அவர்கள் நேர்மையின் மறுவடிவமாக இருப்பவர்கள்..
"பணத்துக்கு விலை போக வேறு ஆiளாப் பாருங்க.. எங்க பாஸ் கிட்ட வேலை செய்கிறவங்களுக்கு கை நிறைய பணம் கிடைக்குது.. எங்களுக்கு அதுவே போதும்.. எப்பவுமே நமக்குச் சொந்தமானது மட்டுமே நம்மிடம் நிலைத்திருக்கும்.."
செக்ரட்டரியின் பேச்சில் தொனித்த மறைமுகப் பொருளைப் பற்றி வனிதாவிடம் கிசுகிசுத்தாள் மாதுரி.. அகல்யாவுக்கும் அது புரிந்துதான் இருந்தது.. அவள் செக்ரட்டரியின் துணிச்சலைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசித்தள்ளினாள்.. போனை காதுக்குக் கொடுத்தபடி அறைக்குள் போனாள்.. சற்றுப் பொழுதுக்குள் அவளுக்கு நரேந்திரனின் பொருள்கள் எங்கு செல்கின்றன என்ற விவரம் கிடைத்து விட்டது..
'சொன்னைக்கா..?' அவள் யோசித்துக் கொண்டிருந்த போது..
"எப்படி அத்தை..?" என்று ஆச்சரியப் பட்டாள் ரம்யா..
"இது என்ன பெரிய ரகசியமா..? இந்த செக்ரட்டரி தான் பணம் வாங்க மாட்டா.. லாரி டிரைவர் வாங்கு வானில்ல..?" என்று இலகுவாக சொன்னாள் அகல்யா..
"அத்தை.." ரம்யா வியந்து போனாள்..
"எதுக்கும் இருக்கட்டும்ன்னு யாருக்கும் தெரியாம அந்த லாரி டிரைவர்கிட்ட மூவாயிரம் ரூபாயைத் தள்ளி.. அவன் செல்போன் நம்பரை வாங்கி வைச்சேன்.. இந்த செக்ரட்டரியா இருந்தா பத்தாயிரம் செலவாகியிருக்கும்.. இப்பப் பாரு.. எனக்கு ஏழாயிரம் மிச்சம்.."
"அத்தைன்னா அத்தைதான்.."
வெளியே பாராட்டிய ரம்யா.. மனதுக்குள்..
'இவள் ஜெகஜால கில்லாடி..' என்று நினைத்துக் கொண்டாள்..
"அந்தப் பக்கம் செக்கரட்டரி போனா.. இந்தப் பக்கம் டிரைவருக்கு போனை போட்டேன்.. அவன் போக வேண்டிய அட்ரஸை ஒப்பிச்சுட்டான்.. எனக்கென்னன்னா.. இந்த நரேந்திரனுக்கு சென்னையில என்ன வேலை..? அங்கே எதுக்காக வீடெடுத்து தங்கியிருக்கான்..? அதை முதல்ல தெரிஞ்சுக்கனுமே.."
"அப்பா என்னைத்துக்கு இருக்கார்..? அவருக்கு போனைப் போடுங்க.." ரம்யா வழி சொல்லிக் கொடுத்தாள்.
"இந்த அத்தைக்கேத்த மருமகள் நீதான்.." அகல்யா மெச்சிப் போனபடி தியாகராஜனுக்கு போனைப் போட்டாள்..
இரண்டே நாளில் தியாகராஜனிடமிருந்து போன் வந்து விட்டது.. சும்மாவும் வரவில்லை.. ரம்யாவை சென்னைக்கு அனுப்பி வைத்து விடும்படி போன் வந்தது..
"பாருக்கா.. நரேந்திரன் பெண்டாட்டியை விட்டுப் பிரிஞ்சிருக்கான்னா கதையே வேற.. டைவர்ஸ் வாங்கிட்டு.. அவனுக்கு இரண்டாம்தாரமா ரம்யாவை கல்யாணம் பண்ணி வைத்து விடலாம்.. அதுவும் உனக்காகத்தான்.. இப்ப கதையே மாறிப் போச்சே.. அவன் பெண்டாட்டியோடு ஒன்னாய் சேர்ந்துட்டான்.. சென்னையிலே தனிக்குடித் தனமும் வைத்துட்டான்.. போதாக்குறைக்கு அவங்களுக்கு மகன் வேற இருக்கான்.."
"என்னடா தம்பி சொல்ற..? அவ போகிறப்ப எதுவும் சொல்லலைடா.."
"மறைச்சிருப்பா.."
"கைகாரி.."
"அந்தப் பொண்ணு கைகாரியா இருக்கட்டும்.. இல்லை.. கால்காரியா இருக்கட்டும்.. குழந்தைன்னு ஒன்னு இருக்கிறப்ப ரம்யாவை இரண்டாம்தாரமாய் கட்டிக் கொடுக்க முடியாது.. ராம்குமாருக்கு தெரிஞ்சா என்னை அப்பான்னு கூடப் பார்க்க மாட்டான்.. தள்ளி வைச்சிருவான்.."
"பொறு தியாகு.. எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு.."
"கொடுத்தா..?"
"அந்த ஊர்மிளாவை ஓட்டிவிட்டு.. அந்த இடத்தில ரம்யாவை உட்கார வைச்சுக் காட்டறேன்.."
"எந்த இடமும் என் மகளுக்கு வேணாம்க்கா.. இருக்கிற இடமே போதும்.. அவளை திருப்பி அனுப்பி வை.."
"ஏண்டா தியாகு.. நீ உன் மகளைப் பத்தி மட்டுமே யோசிக்கிறயே.. உன் கூடப் பிறந்த இந்த அக்கா என்ன கதியாப் போனாலும் அதைப் பத்தி உனக்குக் கவலை யில்லைல்ல..? புரிஞ்சு போச்சுடா.. மகள்ன்னு வந்த பின்னாலே அக்கால்லாம் ரெண்டாம் பட்சம்தான்.."
"அக்கா.. என்ன வார்த்தை சொல்லிட்டக்கா.. என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியை நீ கேட்கலாமா அக்கா..? இப்ப என்னை என்னதான் பண்ணச் சொல்ற..? அந்தப் பொண்ணு நரேந்திரனோட பெண்டாட்டிக்கா.. அவனோட குழந்தையை பத்து மாதம் வயித்தில சுமந்து பெத்து வளர்த்து வைச்சிருக்கு.. அவளைப் போய் உன்னாலே அசைக்க முடியுமா..? அசைக்கவும் கூடாதுக்கா.."
"முடியும்டா தம்பி.. என்னாலே எதுவும் முடியும்.."
"அது பாவமில்லையாக்கா..?"
"என் பாவத்தை யாருடா  பார்க்கிறது..?"
"எனக்கு இதில துளிக்கூட விருப்பமில்ல.. அடுத்த வாரம் நான் அங்கே வர்றேன்.. இதுக்கு மேல ரம்யாவை அங்கே விட்டு வைக்க முடியாதுக்கா.. என் மகளும் படிப்பை முடிச்சிட்டா.. என் மகளை நான் எங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்துடப்போறேன் வேற நல்ல இடத்தில மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துக் கறேன் தயவுசெய்து இனி இந்தப் பேச்சை என்னிடம் எடுக்காதே.."
"நரேந்திரன் கோடிஸ்வரண்டா.." அகல்யா கெஞ்சினாள்..
"நான் அதுக்காக என் மகளை உன்கூட அனுப்பி வைக்கலைக்கா.. அவன் வேற யாரையும் ரெண்டாம்தாரமா கட்டிட்டா உன் கதி என்னாகும்ன்னு நீ அழுது புலம்பின.. உனக்காகத்தான் என்னோட ஒரே மகளை ரெண்டாம் தாரமா கட்டிக் கொடுக்க நினைச்சேன்.. மத்தபடி அவன் யாரா இருந்தா எனக்கென்ன..? நீ காலாகாலத்தில என் மகளை திருப்பி அனுப்பற வழியைப் பாரு.."
தியாகராஜன் போனை வைத்து விட்டார்.. அகல்யாவுடன் பிறந்து விட்டு.. இப்படிப்பட்ட எண்ணங்களுடன் தியாகராஜன் இருக்கலாமா என்று ரம்யாவிடம் கோபப்பட்டாள் அகல்யா.. அவள் ஆழ்ந்த யோசனைக்குப் பின்னால்..
"அப்பா சொல்கிறதிலயும் நியாயம் இருக்கே அத்தை.." என்றாள்..
அகல்யாவுக்கு 'சுரீர்' என்றது.. அவளுடன் இருப்பவர்கள்.. நியாய, அநியாயத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதே.. அதிலும் அதி முக்கியமாக ரம்யா அவற்றைப் பற்றி யோசிக்கவே கூடாதே..
ரம்யாதானே அகல்யாவின் துருப்புச் சீட்டு..!
"அவன்தான் முட்டாள்தனமா பேசறான்னா நீயும் அவனோடு கூட்டுச் சேர்கிறயே ரம்யா.. இத்தனை நாளாய் பட்ட பாடெல்லாம் வீணாய் போவதா..?"
"அதுக்கு என்ன பண்ண முடியும் அத்தை..?"
"நிறைய பண்ணலாம்.. அதுக்கு நீ என்கூட இருக்கனும்.."
'எதுக்கு..? செய்கிறதையெல்லாம் செய்துட்டு பழியை என்மேல தூக்கிப் போடறதுக்கா..?' ரம்யா உஷாரானாள்..
"உங்களாலே முடியாதது என்னால முடிஞ்சிருமா அத்தை..? எனக்கென்ன தெரியும்..? உங்க அறிவில கால்தூசிகூட எனக்கு வராதே அத்தை..? நான் உங்க கூட நின்று என்ன ஆகப் போகுது..?" சாமர்த்தியமாக பதிலாளித்தாள் ரம்யா..
அந்த புகழ்மாலையில் கிளின் போல்டாகி விட்டாள் அகல்யா..
"உனக்குத் தெரிகிறது... உன் அப்பனுக்குத் தெரியலையே.." என்ற மனத்தாங்கலுடன் அவளுடைய திட்டத்தை விவரிக்கத் தொடங்கினாள்..
"நாம சென்னைக்குக் கிளம்பிப் போகனும் ரம்யா.."
"நாமன்னா..? யார் யாரு அத்தை..? நீங்க.. அருண் அத்தான், அர்ச்சனா.. எல்லோருமா..?" கெட்டிக்காரத் தனமாக குடும்பத்தையே திட்டத்துக்குள் இழுத்தாள் ரம்யா..
"கெடுத்தியே காரியத்தை.."
"ஏன் அத்தை..?"
"அருணையும், அர்ச்சனாவையும் கூப்பிட்டுக்கிட்டுப் போனா அதுக ரெண்டும் நம்மை அம்போன்னு விட்டுட்டு 'அண்ணி'ன்னு ஓடிப் போய் அவளைக் கட்டிப் பிடிச்சு உறவு கொண்டாட ஆரம்பிச்சுருவாங்க.. அப்புறம் எங்கே நான் அவளை விரட்டறது..?" அகல்யா அலுத்துக் கொண்டாள்..
'அவ்வளவு அன்பா ஊர்மிளாவின் மீது..?' ரம்யாவுக்கு பொறாமையாக இருந்தது.. அதேசமயம் வேறொரு கேள்வியும் எழுந்தது..
"ஊர்மிளாவை விரட்டப் போறிங்களா..?" என்று கேட்டாள்..
"ஆமாம்.." பெருமையாக தலையை ஆட்டினாள் அகல்யா..
"நடக்கிற காரியத்தை பேசுங்கத்தை.." ரம்யா 'த்ச்சு' கொட்டினாள்..
"ஏன் நடக்காது..? இதுக்கு முன்னாடி அவளை விரட்டிக் காட்டலை..? இப்பவும் அதைப் போல விரட்டறதில எனக்கு என்ன கஷ்டம்..?"
"என்ன சொல்லி விரட்டுவீங்க..?"
"அவளை அவ புருசன் தள்ளி வைச்சிருந்தான்னு அவ வீட்டில வேலை செய்கிற வேலையாள்கள் முன்னாலே சொல்லுவேன்.. அவ இத்தனை வருசமா எந்தக்
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தினாள்ன்னு அதே வேலையாளுக முன்னாலே கேட்பேன்.. உன்னை நரேந்திரன் காதலிக்கிறான்.. உனக்கும், அவனுக்கும் கல்யாணம் நிச்சயமாகிருக்கு.. நரேந்திரன் உன்னைத்தான் காதலக்கிறான்.. ஊர்மிளா பிள்ளையைக் காட்டி நரேந்திரனை அவளுடன் குடித்தனம் பண்ண வைத்திருக் கிறாள் அப்படின்னு சொல்லுவேன்.. இதையெல்லாம் தாங்கிக்கிட்டு அவ அங்கே நிற்பான்னா நினைக்கிற..? ஊஹீம்.. அவ பிள்ளையைத் தூக்கிகிட்டு நரேந்திரனிடம் சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிருவா.."
அகல்யாவின் பிசிறில்லாத திட்டத்தில் வெறுத்துப் போனாள் ரம்யா இது நடந்து விடக் கூடுமா என்ற யோசனை அவளுள் வந்தது.. இருந்தும் வெளியில் பல சந்தேகங்களை கேட்கலானாள்.. அவளது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் அகல்யாவிடம் பதில்கள் இருந்தன..
"நரேனும், ஊர்மிளாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க.. என்னை நரேன் காதலிக்கிறார்ன்னு சொன்னா அவள் அதை நம்புவாளா..?"
"முதலில் தாங்கிக்க மாட்டா.. அதை யோசி.. எப்பவுமே காதலுக்கும் யோசனைக்கும் காத தூரம் ரம்யா.. இந்த ஊர்மிளா இருக்காளே.. அவ நரேந்திரனை உருகி.. உருகி.. காதலிக்கிறவ.. அவனுக்கு இன்னொரு பெண் மேலே காதல்ன்னு காதில விழுந்தாலே போதும்.. அந்த இடத்திலேயே உயிரை விட்டிருவா.. நாமளும் சோலி முடிஞ்சதுன்னு நிம்மதியா வந்திரலாம்.."
ஊர்மிளாவின் மரணத்தைப் பற்றி எத்தனை இலகுவாக அகல்யா பேசுகிறாள் என்று மனம் அதிர்ந்தாள் ரம்யா.. ஒரு பெண்ணின் மரணம் என்பது.. வேலை முடிந்தது என்பதைப் போல மிக இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றா..?
இப்படிப்பட்ட ஒருத்தி தனது அத்தை என்பதைப் பற்றி மனதுக்குள் அருவெறுத்தாள் ரம்யா.. மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றிய பிரக்ஞை இன்றி.. தான், தன் சுகம் என்று வாழும் அகல்யாவைப் பார்த்த போது ரம்யாவின் அடி மனதில் பயம் வந்தது..
"அவ அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களோட நினைப்பைப் பத்தி ரொம்பவும் யோசிப்பா ரம்யா.. வேலையாளுக முன்னாலே அவளோட கடந்த கால சரித்திரங்கள் அள்ளித் தெளிச்சோம்ன்னு வைய்யி.. அந்த வீட்டிலே ஒரு நிமிசம் கூட நிற்க மாட்டா.."
தனது கடந்த காலம் எப்பேற்பட்ட கறைகளைக் கொண்டது என்ற எண்ணமின்றி உற்சாகமாக திட்டம் தீட்டினாள் அகல்யா..
ரம்யாவுக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை.. ஊர்மிளாவின் கடந்த காலச் சரித்திரம் அப்பழுக்கில்லாதது என்பதை அர்ச்சனாவின் மூலம் அவள் அறிந்து வைத்திருந்தாள்..
"அண்ணியையும்.. அண்ணனையும் பார்க்கிறப்ப ராமர், சீதையை பார்த்ததைப் போல அவ்வளவு பாந்தமாயிருக்கும் ரம்யா.." அர்ச்சனாவின் கண்களில் பிரகாசம் வரும்..
அதில் ரம்யாவின் மனதில் பொறாமை வரும்.. இதுபோன்ற அன்புடன் அவளை நேசிக்கும் நாத்தனார் கிடைப்பாளா என்று அவள் ஏக்கப்பட்டாள்.. ஊர்மிளாவுக்கு அது வாய்த்திருக்கிறது என்பதில் இயல்பான பெண் மனதின் ஏக்கம் கொண்டபொறாமை அவள் மனதில் துளிர்த்தது..
அவளும்தான் அந்த வீட்டில் இரண்டு வருடங் களுக்கும் மேலாக இருக்கிறாள்.. இது போன்ற அன்பை அர்ச்சனா ரம்யாவின்மீது காட்டியதில்லையே..
கண் முன் இல்லாத ஊர்மிளாவின் மீது அவளுடைய நாத்தனார் வற்றாத பாசத்தோடு இருக்கிறாள்... ஊர்மிளாவின் கணவனோ மாறாத காதலுடன் இருக்கிறான்.
ஏனோ தெரியவில்லை.. ரம்யாவின் மனதில் அவள் முன்பின் பார்த்தறியாத ஊர்மிளாவின் மீது மரியாதை வந்தது..
அந்த ஊர்மிளாவை அகல்யா அசிங்கப் படுத்தி ஓட வைக்கப் போகிறாளா..?
இப்படிப்பட்ட அகல்யாவை எதிர்த்து நிற்கும் முதுகெழும்பு இல்லாத கோழையா ஊர்மிளா..?
ரம்யா அதை அறிய விரும்பினாள்..
அகல்யாவைப் பின்பற்றிப் போய் அதை நேரடியாக பார்த்து உணர அவள் விரும்பினாள்.. இத்தனைக்கும் மேலாக ஒன்று இருந்தது..
ரம்யா அழகி..! அதை அவள் அறிவாள்.. நரேந்திரனின் முன்னால்.. அவனை விரும்பும் நோக்கத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டு இரண்டரை வருடங்களுக்கும் மேலாக நடமாடிக் கொண்டிருக்கிறாள்.. இருந்தும் நரேந்திரன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..
இந்த அளவுக்கு அவன் மனதில் இடம் பிடித்திரும் பெண் எத்தகைய அழகோடு இருப்பாள்..?
ரம்யா ஊர்மிளாவை சந்திக்கும் முடிவை எடுத்தாள்.. அதை அறியாத அகல்யா தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்..
"அவ வண்டவாளத்தை தண்டவாளத்திலே ஏத்தினா அவ ஓடியே போயிருவா ரம்யா.."
'உன் வண்டவாளம் எப்படிப்பட்டதுன்னு அவ பிட்டுப்பிட்டு வைத்தால் நீ என்ன பண்ணுவ..?' இகழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டாள் ரம்யா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -76
அழகான ராட்சசியே -76
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-76.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-76.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy