அழகான ராட்சசியே -75

75 வீம்பிலே பிறந்து வந்து.. வெறும் கனவை எனில் விதைக்கும்.. அழகான ராட்சசி நீ.... "ஆமாம்.. அதென்னடி.. சூடு பட்டவுடனே வனிதா...


75
வீம்பிலே பிறந்து வந்து..
வெறும் கனவை எனில் விதைக்கும்..
அழகான ராட்சசி நீ....


"ஆமாம்.. அதென்னடி.. சூடு பட்டவுடனே வனிதான்னு அலர்ற..? அதுக்கு முன்னாலே.. அக்கா.. உன் சொக்கான்ன..? நீ பச்சைப் புள்ளையா..?"
ரமேஷை முன்னால் வைத்துக் கொண்டே வனிதா கேள்வி கேட்கவும் மாதுரி நழுவப் பார்த்தாள்.. வனிதா விடவில்லை..
"எங்கேடி போற..?"
"வீட்டைக் கூட்ட வனிதா.. அம்மா சொன்னாங்களே.."
"அதை அப்பச் சொன்னாங்க.. இப்பச் சொல்லலை.. இம்புட்டு நேரம் கழிச்சு இப்பத்தான் அவங்க சொன்ன வேலையை தொட்டுப் பார்க்கப் போறன்னு தெரிஞ்சா உன் சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிருவாங்க.. எப்படி வசதி..?"
அதுதான் வசதியென்று சொல்ல மாதுரி என்ன அடி முட்டாளா..? அவள் நிற்கவும் முடியாமல்.. நகரவும் முடியாமல்..
"ஹி.. ஹி.." என்று சகிக்க முடியாத சிரிப்பைச் சிரித்து வைத்தாள்..
ரமேஷீக்கே அந்தச் சிரிப்பை சகிக்க முடியவில்லை.. அதைவிட 'பார்த்துக்க.. இந்த ரதியோட சிரிப்பை..' எனும் விதமாக அவனைத் தீர்க்கமாக பார்த்து வைத்த வனிதாவின் பார்வையின் கேலியை அவனால் சகித்துக கொள்ள முடியவில்லை..
"இப்ப என்னத்துக்கு தரையில் கிடக்கிற மீனைப் போல இப்படி நெளியற..?" வனிதா புருவங்களை உயர்த்தினாள்..
"ஒன்னுமில்ல.." மாதுரி கவனமாக வனிதா என்ற பெயரையும் சொல்லாமல்.. அக்கா என்ற விளிப்பையும் விளிக்காமல் மொட்டையாக பதில் சொன்னாள்..
வனிதாவா அதை கண்டு உணராமல் இருப்பாள்..? அவள் துளைக்கும் பார்வையுடன் மாதுரியைப் பார்த்தபடி..
"போனவாரம் உன்னைப் பார்க்க உன் சித்தப்பான்னு ஒருத்தர் வந்திருந்தாரே.." என்று சும்மா கேட்பதைப் போல கேட்டாள்..
"அவரு சித்தப்பாதான்.." ரமேஷை பார்த்தபடி சொன்னாள் மாதுரி..
அதை ஜாடையாக பார்த்தபடி அடுப்பிலிருந்த எண்ணையில் கடுகைப் போட்ட வனிதா லேசாக தண்ணீரை விசிறிவிட்டு நகர்ந்து நின்று கொண்டாள்.. எண்ணை தெறித்து சிதறியதில் மாதுரியின் கை அடுத்த அடியை வாங்கியது..
"ஸ்ஸ்ஆ.. என்ன வனிதா.. பார்த்துத் தாளிக்க மாட்ட.." கையைத் தடவியபடி வனிதாவிடம் சண்டைக்குப் போனாள்..
"நான் பார்த்துத்தாண்டி வேலை செய்யறேன்.. நீதான் பார்த்து நிற்காம.. பராக்குப் பார்த்துக்கிட்டு நிக்கிற.. அடுப்படியில நிக்கும்போது சூதானமாக நிக்கனும்னு சொல்லித்தான் பாக்கறேன்.. நீ கேட்ட பாடாக இல்லை.. எப்ப குழம்பைத் தூக்கி உன் மேல கொட்டிக்கப் போகிறயோ தெரியலை.."
"வனிதா.."
நடுங்கிப் போனாள் மாதுரி.. ரமேஷை மறந்து நான்கடி தள்ளி நின்று கொண்டாள்.. சூடுபட்ட கை வனிதாவின் வீர, தீரத்தை அறிவுறுத்திக் கொண்டிருந்தது..
"அதென்னடி சூடு பட்டா வனிதாங்கிற.. மத்த நேரத்தில என் பேர் மறந்து போகுது..? ஒரே வருசத்தில.. ஒரே மாசத்தில.. நீயும், நானும் பொறந்திருக்கோம்..
ஒரே வயசுக்காரிகள்ல நீ பச்சைப் புள்ள..! நான் உனக்கு அக்கா.. சமயம் கிடைச்சா அம்மாவா..? அதுசரி.. உனக்கு முதல்ல உன் தங்கச்சிக்கு கல்யாணமாகி.. கையில ஒரு பிள்ளையிருக்காமே.. அந்தப் புள்ளை அவளை விட்டுட்டு உன்னை அம்மான்னு கூப்பிடுதாமே.. என்ன விசயம்..? நான் சொல்லலை.. உன் சொத்தப்பாதான் சொன்னாரு.."
"அது.. அது.."
மாதுரியின் முகம் வெளுத்து விட்டது.. கிராமத்திலே வேலை பார்க்க வந்த வெளியூர்காரனின் செண்ட் வாசனையிலும்.. சூட்டு சட்டையிலும் மயங்கிப் போன மாதுரி.. 'மயில்' போல அவனைப் பார்வையிட ஆரம்பித்தாள்.. பதினாறு வயதைத் தாண்டி இருபதில் இருந்தாலும் பார்வைக்கு பதினாறு வயது மயிலைப் போல இருந்த மாதுரியின் பார்வையை அவனும் கண்டு கொள்ள ஆரம்பித்தான்..
விளைவு.. மாதுரி வயிற்றில் ஏழாம் மாதமாக இருக்க.. வந்தவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனான்.. தேடிப் போனவர்கள் அவன் குடும்பமும்.. பிள்ளை குட்டிகளுமாக இருக்கும் கதையை திரும்பி வந்து சொன்னார்கள்..
"அவன் மகளே இருபது வயசில இருக்குப்பா... பார்வைக்கு மைனர் போல பவுடரைப் பூசிக்கிட்டு இளந்தாரியப் போல இருந்தா இவளுக்கெங்கே போச்சு புத்தி..? அவன் வயசென்ன.. இந்தப் புள்ள வயசென்ன..? நாற்பத்தி ஆறு வயசுக்காரனை காதல் பண்ணிட்டு அவன் மோசம் பண்ணிட்டான்னு நின்னா.. எந்தப் பஞ்சாயத்தில நாயம் சொல்லுவாங்க..?"
மாதுரியின் உறவு முறை ஜனங்கள் திட்டித் தீர்த்தார்கள்.. வேறு வழியில்லாமல் அவசரஅவசரமாக அத்தை மகனுக்கு மாதுரியைக் கட்டிக் கொடுக்க முயன்றால்.. அவன் மாதுரியை விட்டுவிட்டு.. அவள் தங்கையை கை காட்டினான்..
"மாமா.. எனக்கு நீங்க பெத்த மயிலு வேணாம்.. ரெண்டாவதா பெத்து வைச்சிருக்கீங்களே.. இந்தக் குயிலே போதும்.." என்று அவன் சொல்லி விட.. வேறு வழியில்லாமல் மாதுரியின் தங்கைக்கு திருமணம் நடந்து விட்டது..
மாதுரி பெற்ற குழந்தையை தான் பெற்ற குழந்தையாய் அந்தத் தங்கை சொல்லிக் கொள்ள.. அவள் மேலிருந்த காதலால் அத்தை மகனும் அதை அனுமதித்தான்.. இப்படியாகத்தானே.. விலாசம் தெரியாத குழந்தைக்கு ஒரு விலாசம் கிடைத்தது.. அந்தக் குழந்தை மாதுரியைத்தானே அம்மா என்று கூப்பிடும்..?
"என்ன மாதுரி இந்த இழுவை இழுக்கிற..?"
அவளை இழுத்த தோசைக் கரண்டியை வாகாக பிடித்தபடி வனிதா கேட்க.. மாதுரி பயந்து போனாள்..
"இல்ல வனிதா.. தங்கச்சி புள்ள.. அம்மான்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடும்..?"
"ஏன்..? பெரியம்மான்னு கூப்பிடறது..?"
வனிதா கிண்டலாக சொல்லியபடி ரமேஷை பார்த்தாள்.. அவன் அவளை ஆழமாக பார்க்க முயன்றான்.. வனிதாவின் முகம் கடுமையானது.. பத்ரகாளிபோல உறுத்து விழித்தாள்.. அவன் பயந்து போனவனாக சுவரைப் பார்த்தான்..
"பெரியம்மாவா..?" மாதுரிக்கு அழுகையே வந்து விட்டது..
அவள் காட்டிய பச்சைக்குழந்தை ஆட்டம் என்ன..? இன்று அவளை ஒரு பச்சைக் குழந்தையின் பெரியம்மாவாக ஆக்குவதா..?
'சும்மா இரு... அம்மான்னு சொல்றதுக்கு பெரியம்மான்னு பேர் படலாம்.. தப்பே இல்லை..'
அவளுடைய ஆழ்மனது அதட்டி வைத்தது.. ரமேஷை பார்க்க முயன்றாள்.. அவன் யோசனையோடு அவள் பார்வையைத் தவிர்த்தான்.. அவளின் போதை ததும்பும் பார்வையிலே அவன் கள் குடித்த கபோதி போல ஆகி விடும் நேரங்களை நினைத்துப் பார்த்தவளுக்குத் துக்கம் பொங்கியது..
'எப்படி இருந்த என்னை இந்த வனிதா இப்படி ஆக்கிட்டாளே..'
அவளை எதுவும் செய்ய முயலாத இயலாமையில் மாதுரி கைக்கு மருந்தைத் தேடிப் போவதைப் போல அங்கேயிருந்து போய் விட்டாள்.. மற்ற நேரமாக இருந்திருந்தால், அவள் வனிதாவிற்கும்.. ரமேஷிக்குமான தனிமையை உண்டு பண்ணிக்கொடுத்து விட்டு அகன்றிருக்க மாட்டாள்..
எப்போது மாதுரி அந்த வீட்டுக்குள் காலடி வைத்தாளோ.. அப்போதிருந்து.. வனிதாவுக்கும், ரமேஷீக்குமான தனிமையான நேரங்களே இல்லாமல் போய் விட்டன.. அப்படிப்பட்ட தருணங்கள் தானாக வாய்க்கும்போது மாதுரி அத்துமீறி உள்ளே பிரவேசித்து ரமேஷின் முன்னால் வனிதாவை அக்காவென்றும் அம்மாவென்றும் அழைத்து வைத்து.. நீ அன்னை.. நான் பச்சைப் பிள்ளை என்றெல்லாம் வசனம் பேசி வனிதாவின் மேல் ரமேஷிற்கு இருக்கும் ஈர்ப்பை ஆட்டிப் பார்க்க முனைந்து விடுவாள்..
அப்போது அப்படிச் செய்ய முடியாமல் அவள் ஓடிவிட..
"வனிதா.." என்று ரமேஷ் பேச முயன்றான்..
"ஓடியே போயிரு.. சொல்லிட்டேன்.." வனிதா திரும்பிப் பார்க்காமல் எச்சரித்தாள்..
"இல்ல வனிதா.. நான் உன்மேல.."
"பேசாத.. சொல்லிட்டேன்.. கொலைவெறியில இருக்கிறேன்.. தப்பிப் பிழைக்கனும்னா தள்ளியே நில்லு.. உனக்கு என்னைப் பார்த்தா முத்தின கத்தரிக்காயா தெரியுதா..? அவளப்பாத்தா இளசான தக்காளி போல தெரியுதா..? போ.. போயி.. அவ தங்கச்சி கையில இருக்கிற புள்ள அவளுக்குப் பிறந்ததா.. இல்ல.. இந்த இளசான தக்காளிக்குப் பிறந்ததான்னு கேட்டுட்டு வா.. ஆளைப் பாரு.. நான் அவளைக் கூட ஒரு கணக்கில சேர்ப்பேன்.. உன்னை எந்தக் கணக்கிலயும் சேர்க்க மாட்டேன்.. நீயெல்லாம் ஒரு பிறவி..!.. தூ..."
"வனிதா.."
கன்னத்தில் அறை வாங்கியதைப் போல ரமேஷ் திகைத்து நின்று விட்டான்.. இது போன்ற பேச்சை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை விளக்கெண்ணை குடித்ததைப் போல அஷ்ட கோணலாய் மாறிப் போன அவன் முகமே சொல்லியது..
ஆனாலும் அவனால் வனிதாவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.. அவன் தொடர்ந்து கெஞ்சினான்..
"நான் என்ன புள்ள செஞ்சேன்.. அதுவா வந்து பல்லைக் காட்டிச்சு.."
"நீயும் பதிலுக்கு பல்லைக் காட்டின.."
"ஆம்பளைன்னா பதிலுக்கு பல்லைக் காட்டாம இருக்க முடியுமா..?"
"இதையே நான் சொன்னா நீ கேட்டுக்குவியா..?"
"வனிதா.."
"சொல்லு.. உன் வாயில என்ன இருக்கு..? பேசு.. இந்த வீட்டில நீ மட்டும்தான் ஆம்பளைன்னு வேலை செய்யறியா..? வேற ஆம்பளைகளே வேலை செய்யலையா..? அவங்க என்கிட்டப் பல்லைக் காட்டின தில்லையா..? நானும் பதிலுக்கு பல்லைக் காட்டவா..? நீ சொன்னதையே திரும்பிச் சொல்லவா..?"
"என்ன வனிதா இப்படியெல்லாம் பேசற..?"
"ஏன்ய்யா.. நான் இப்படிப் பேசினா ஆகாதா..?"
"இல்ல புள்ள.. உன் வாயில இருந்து இப்படியாப் பட்ட வார்த்தைகள்ளாம் வரலாமா புள்ள.."
"வந்தா என்னய்யா..? அவ வாயில இருந்து வந்தப்ப மட்டும் இனிச்சுச்சு.. என் வாயில இருந்து வந்தா மட்டும் கசக்குதா..? போய்யா போ.. உன்னைப் போல எத்தணை பேரை பார்த்திருக்கேன்.. நான் நல்லவளாம்.. என் வாயில இருந்து இப்படியாப்பட்ட வார்த்தைகள்ளாம் வரக் கூடாதாம்.. ஆனா என்னைச் சுத்தியிருக்க கூட்டம் மட்டும் வாய்க்கு வந்ததைப் பேசி கும்மியடிக்குமாம்.. அதை நான் கண்டுக்க கூடாதாம்.. காதிலயும் போட்டுக்கக் கூடாதாம்.. என்னய்யா நாயம் இது..? ஏன்..? நீங்கள்ளாம் கெட்டவங்களா..? அதை ஒப்புக்குவீங்களா..?"
வனிதாவின் ஆவேசத்தில் ரமேஷ் ஆடிப் போனான்.. அதற்கு முன்பும் அவன் அவனிடம் கோபப் பட்டிருக்கிறாள் தான்.. இந்த அளவுக்கு கோபப் பட்டதில்லை..
"உனக்கெல்லாம் வேசம் போடறவளைத்தான் பிடிக்கும்ய்யா.."
"அப்படி நான் சொன்னேனா புள்ள..?"
"சொன்னாத்தானா..? அதான் இத்தனை நாளும் நடக்கிற நாடகத்தையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கிட்டுத்தான இருந்தேன்..? பேசாம போயிரு.. எனக்கு
உன் முகத்தில விழிக்கக் கூட மனசில்ல.. வெறுப்பா இருக்கு.. நீயிருக்கிற திசைப் பக்கம் தலை வைத்துப் படுத்தாக் கூட பாவம் வந்து சேர்ந்துரும்ய்யா.."
அந்த அளவுக்கா அவனை அவள் வெறுத்து விட்டாள்..?
ரமேஷிற்கு உலகமே கருப்பு வெள்ளைப்படம் போல தோன்றியது.. அந்த விரக்தியில் அவன் ஹாலில் நடந்த நாடகத்தை கவனிக்காமல் கடந்து போனான்.. அதைக் காட்ட முயற்சி செய்த மாதுரியின்
"இஸ்ஸீ.. இஸ்ஸீ.." என்ற சப்தம் ரமேஷின் கவனத்தைத் திருப்புவதற்குப் பதில் வனிதாவின் கவனத்தை திருப்பி விட்டது..
அவள் கண்ணகியாய் முறைத்தாள்.. மாதுரி அசடு வழிய..
"ஹி.. ஹி.. அம்மா பேசறதைப் பார்க்கச் சொன்னேன்.." என்றாள்..
வனிதா எரிச்சலுடன் ஹாலைக் கவனித்தாள்.. அங்கே அகல்யா நரேந்திரனின் செகரட்டரியை வளைக்க முயன்று கொண்டிருந்தாள்.. செகரட்டரி பிடி கொடுக்கவில்லை..
"உட்காரும்மா.. உன்னைப் பார்த்தா என் மகளைப் பார்ப்பதைப் போல இருக்கு.." இது அகல்யா..
"உட்காரல்லாம் நேரமில்லைங்க.. எனக்கு உங்களைப் பார்த்தா என் அம்மாவைப் பார்ப்பதைப் போல இல்லை.." இது செக்ரட்டரி..
"உன் சல்வார் அழகா இருக்கும்மா.. எங்கே எடுத்தது..? கிட்ட வா பார்ப்போம்.." இது அகல்யா..
"இது சல்வார் இல்லைங்க.. சடிதார்.. எங்கே எடுத்ததுன்னு எனக்குத் தெரியாது.. என் அப்பாவுக்குத்தான் தெரியும்.. அவர் அடுத்த வீட்டு லேடிஸ்கிட்டப் பேச மாட்டார்.. எனக்கு கிட்ட வந்து பேசறதுன்னா அலர்ஜி.." இது செக்ரட்டரி..
இப்படியே அகல்யா மீன் பிடிக்க தூண்டிலைப் போட.. செக்ரட்டரி கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதிலைச் சொல்லி விட்டுக் கிளம்பப் போனாள்..
அகல்யா கடைசியாக அஸ்திரத்தை பிரயோகித்தாள்..
"ஏம்மா.. இந்த சாமானையெல்லாம் எங்க நரேன் எங்கே கொண்டு வரச் சொல்லியிருக்கிறான்..? அவனோட தாத்தா வீட்டுக்கா..? இதுக்கான பதிலை நீ சொன்னா.. நான் உன் கையில கத்தையாய் பணக்கட்டை கொடுத்து அனுப்புவேன்.."
செக்ரட்டரி அகல்யாவை தூசியைப் பார்ப்பதைப் போல பார்த்தபடி பதில் சொன்னாள்..
"உங்க பணம் யாருக்கு வேணும்..? நீங்க இப்படிச் சொன்னீங்கன்னு எம்.டிகிட்ட நான் சொன்னால் அவர் உங்களை எங்கே அனுப்பி வைப்பார்ன்னு நினைத்துப் பார்த்துட்டுப் பேசுங்க.."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -75
அழகான ராட்சசியே -75
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-75.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-75.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy