அழகான ராட்சசியே -71

71 ஒட்டி உறவாடியவனை.. விட்டுப் பிரிந்து விட்ட அழகான ராட்சசி நீ.... "இந்த சோமசுந்தரத்தை என்ன நினைச்சுக்கிட்டாரு.. என் மகளை ...


71
ஒட்டி உறவாடியவனை..
விட்டுப் பிரிந்து விட்ட
அழகான ராட்சசி நீ....

"இந்த சோமசுந்தரத்தை என்ன நினைச்சுக்கிட்டாரு.. என் மகளை கண்ணீர் விட வைச்சு திருப்பியனுப்புவாரு.. நான் பார்த்துக்கிட்டு பேசாமல் இருப்பேன்னு நினைச்சாரா..? கேக்கறேன்.. போய் கேட்கறேன்.. நல்லா நாலு வார்த்தை கேட்டு விட்டு வந்தாத்தாண்டி என் மனசு ஆறும்.."
சோமசுந்தரம் பெங்களூருக்குக் கிளம்பத் துடித்தார்.. ஒரு வகையில் நரேந்திரனும் அதைத்தான் எதிர்பார்த்தான்.. சண்டை போடவாவது அவர் வர வேண்டும்.. அவரிடம் அவன் பக்க நியாயத்தைச் சொல்லி அவன் மனைவியை அனுப்பி வைக்குமாறு கேட்க வேண்டும் என்று நினைத்தான்.. சோமசுந்தரம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்க மாட்டார் என்பது அவனுக்கும் தெரியும்.. நியாயம் கேட்க கிளம்பி வருவார்.. அவனிடம் போர் முரசைக் கொட்டுவார்.. அப்படி அவர் கொட்டும்போது அவனும் அவன் மனதிலிருப்பதைக் கொட்ட வேண்டும்..
நரேந்திரன் அவர் வரவுக்காக காத்திருந்தான்.. அகல்யா தினமும் அவனிடம் தோண்டித் துருவிக் கேள்விகளைக் கேட்டாள்..
"ஏன் நரேன்..! அந்த மனுசர் உன்னைப் பார்க்க கம்பெனிப் பக்கம் வந்தாரா..?"
"எந்த மனிதர்..?" அவன் நிதானமாகக் கேட்டான்..
துளைக்கும் அவன் பார்வையில் அகல்யா சற்று நடுங்கித்தான் போனாள்.. நாக்கைக் கடித்தபடி மரியாதை சேர்த்து..
"உன் மாமனாரைத்தான் சொன்னேன்ப்பா.." என்றாள்
"மாமனார்ன்னா சொன்னீங்க..? மனிதர்ன்னுல்ல சொன்னீங்க..?"
நரேந்திரன் லேசான முகச் சுளிப்புடன் கை கழுவ நகர்ந்தான்.. பின்னாலேயே ஓடிய அகல்யாவின் மனதில்..
'அந்த ஆள் மனிதரில்லாம.. சிங்கம், புலி, கரடியா..?' என்ற வினா எழத்தான் செய்தது..
'மூச்..!' ஒற்றைவிரலை வாய் மேல் வைத்து எழுந்த வினாவின் தலையில் தட்டி அதை மனதுக்குள் அமுக்கிக் கொண்டாள்..
நரேந்திரனே முன்னால் போனால் கடிப்பவன்.. பின்னால் போனால் உதைப்பவன்.. அவனைப் போலவே அவனுடைய மாமனாரும் அமைந்து விட்ட கொடுமையில் அகல்யா வெகு நாள்கள் தூக்கமில்லாமல் தவித்திருக் கிறாள்.. அந்த மாமனாரை அருமை பெருமையாக நரேந்திரன் நினைக்கக்கூடும் என்பதை மறந்து விட்டுப் பேசியவள் தன் சிற்றறிவை நொந்து கொண்டாள்..
"ஏதோ வாய் தவறி வந்திருச்சுப்பா.. உன் பெண்டாட்டிதான் உன் கேள்விக்கு பதில் சொல்லாம.. உனக்கெல்லாம் என்ன கணக்குன்னு கிளம்பிப் போயிட்டா.. அவளோட அப்பா சும்மாவே சத்தம் போடற மனுசன்.. இப்ப பொண்ணு போயி வேப்பிலை அடிச்சா சும்மாவா இருப்பாரு..? சாமியாட இங்கே வந்து சேர்ந்திருக்க மாட்டாரா..? இன்னுமா வரலை..? நான் நினைக்கிறேன் நரேந்திரா.. உன்பெண்டாட்டி திருச்சிக்குப் போயிருக்க மாட்டா.. அவ பிரண்டோட சேர்ந்து நியூயார்க்குக்கு பறந்திருப்பா.. எதுக்கும் நீ விசாரித்துப் பாரேன்.."
'இதை விசாரிக்க வேற செய்யனுமா..?' நரேந்திரனின் மனம் இறுகி விட்டது..
அகல்யா அதைத்தானே எதிர்பார்த்தாள்..? திருச்சியில் அவனுடைய மனைவி இருக்கிறாள் என்ற நினைவே வராமல்.. அவள் திருச்சிக்குப் போயிருப்பாளா.. இல்லை.. அவளுடைய தோழனுடன் நியுயார்க்குக்கு போயிருப்பாளா என்ற சஞ்சலத்தை நரேந்திரனின் மனதில் வர வைத்தாள் அவள்..
"பொண்ணைக் கண்டிருந்தா இந்நேரத்துக்கு அந்த மனுசர்.. தப்புப்பா தப்பு.. உன் மாமனார்.. இங்கே வந்து குதிச்சிருக்கனுமே.. அந்த வகையில யாருக்கும் அஞ்சாத மனுசராச்சே அவரு... ம்ஹீம்... அவருக்கு அவரோட பொண்ணு வீட்டை விட்டு வெளியே போனது தெரியலையோ என்னவோ.."
நரேந்திரனின் வெட்டும் பார்வையில் அகல்யாவின் பேச்சு நின்று விட்டாலும்.. அவள் நினைத்ததை சாதித்து விட்டாள்.. சோமசுந்தரத்திற்கு போன் போட்டு ஊர்மிளாவைப் பற்றிப் பேச நினைத்திருந்த நரேந்திரன் அந்த நினைப்பை மறந்து விட்டான்..
அகல்யா பேசுவதை அவன் காதில் போட்டுக் கொள்வதில்லை என்றாலும் அதிலிருந்த ஒரு லாஜிக் அவனை யோசிக்க வைத்தது.. அது சோமசுந்தரம் தன் கோபத்தை அடக்கிக் கொள்ளும் மனிதரல்ல என்பது.. ஊர்மிளா திருச்சிக்குப் போயிருந்தால்.. மறு நொடியே புயல்போல அவர் கிளம்பி பெங்களூருக்கு வந்து நின்றிருப்பாரே.. ஏன் வரவில்லை..?
"அவர் வரட்டும்ப்பா.." ஊர்மிளா தீர்மானமாக சொல்லி விட்டாள்.
"அது வரைக்கும் என்னைப் பொறுமையா இருக்கச் சொல்கிறாயாம்மா..?" கண்சிவந்தார் சோமசுந்தரம்..
"வேறு வழியில்லைப்பா.. நீங்க பொறுமையாத்தான் இருந்தாகனும்.. நான் கிளம்பி வந்து ரெண்டு நாளாகுது.. இன்னும் என்னைத்தேடனும்னு அவர் நினைக்கலை.. என்கிட்டத்தான் போனில்லை.. உங்க போன் நம்பர் அவருக்குத் தெரியுமில்லையா..? ஏன்ப்பா போன் பண்ணலை..? நான் வந்துட்டேனான்னு ஏன்ப்பா கேட்கலை..? கோபத்தோட வெளியேறினவ வேறு முடிவை எடுத்திருந்தா அப்பவும் அவர் அதைப்பத்தித் தெரிஞ்சுக்காம பேசாமத்தானே இருந்திருப்பாரு..?"
ஊர்மிளாவின் கேள்வியில் பூங்குழலி பொங்கி அழுதாள்.. சோமசுந்தரம் ருத்ரரானார்.. ராதா உதட்டைக் கடித்தபடி தோழியின் அம்மாவை சமாதானம் செய்தாள்..
"அழாதீங்கம்மா.."
"என் ஈரக்குலை துடிக்குது ராதா.. என்மகளை யாருமில்லாத அனாதைன்னு அவர் நினைச்சுக்கிட்டாரா..? பெங்களூரில் நீயிருக்கப் போய் ஆச்சு.. இல்லைன்னா ஊர்மிளா விரக்தியிலே தப்பான முடிவெடுத்து.. ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தா எங்க கதி என்னாகிறது..? இதுக்கா என் மகளை கட்டிக் கொடுத்தேன்..?"
"இல்லேம்மா.. ஊர்மிளா தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டாம்மா.. அவ தைரியமானவ.."
"அந்த தைரியத்தைத்தான் உடைச்சு.. சுக்கு நூறாக்கி.. என் மகளை நடைபிணமாய் திருப்பி அனுப்பி வைச்சிருக்காரேம்மா.. பாரும்மா.. உன் தோழியைப் பாரு.. ஊர்மிளா இப்படியா இருந்தா..?"
மனம் வலிக்க தோழியைப் பார்த்தாள் ராதா.. வெளிறிய மேகம் போல ஊர்மிளாவின் முகம் நிறமற்று.. களையிழந்து காணப்பட்டது.. அவள் கண்களில் நிராசையுடன் கூடிய தோல்வியின் முகவரி இருந்தது..
"இல்லேம்மா.." ராதா தலையை அசைத்தாள்..
ஊர்மிளாவைப் பற்றிய இனிப்பான விவரத்தை அந்தக் குடும்பத்திற்கு அவள் சொல்ல வேண்டியிருந்தது.
அதை அறிவதன் மூலம் அந்தத் தாய் தந்தையர் மகளைப் பற்றிய துயரத்திலிருந்து கொஞ்சம் மீளலாம்.. அவள் தோழியும் தோல்வியின் சுமையிலிருந்து மீண்டு.. வரப்போகும் வாழ்நாளில் கவனம் செழுத்தலாம்..
ஊர்மிளாவே மறந்து போன.. ஊர்மிளாவைப் பற்றிய அந்த விவரத்தை நினைவூட்டினாள் ராதா..
"அவ வயிற்றிலே அவளோட குழந்தை இருக்கு.. எப்படிம்மா அவ தப்பான முடிவுக்குப் போவா..? அவ தனியாள் இல்லையேம்மா.."
"என்னது..??!!"
பூங்குழலியும்.. சோமசுந்தரமும் ஆனந்தமும்.. துயரமும் சேர்ந்த கலவையுடன்... ஒருமித்த குரலில் கேட்டார்கள்.. ஊர்மிளாவுக்கு அவள் வயிற்றிலிருந்த நரேந்திரனின் குழந்தையின் நினைவு வந்தது.. அவள் கை அனிச்சையாக அவள் வயிற்றில் படிந்தது..
"சண்டாளப்பாவி..! பிள்ளைத்தாய்ச்சியை தனியா அனுப்பி வைச்சிருக்காரு.. இதுக்கே அந்த ஆளை என்னன்னு ஒருகை பார்க்கனும்.." சோமசுந்தரம் வெறியானார்..
"இல்லேப்பா.. இது அவருக்குத் தெரியாது.." மெல்லிய குரலில் சொன்னாள் ஊர்மிளா..
"என்னது..??!!"
சோமசுந்தரமும்.. பூங்குழலியும் மீண்டும் ஒருமித்த குரலில் ஒன்றுகூடி அதிர்ந்தார்கள்..
"ஆமாம்ப்பா.. அவர் பாரின்ல இருக்கிறப்பவே ஊர்மிளா டெஸ்டை எடுத்துப் பார்த்து அவ கன்சீவ் ஆகியிருக்கிற விவரத்தைக் கன்பர்ம் பண்ணிக்கிட்டா.. அதை போனில் சொல்ல முடியாம அவளுக்கு அவளோட மாமியார் இடைஞ்சல் பண்ணிட்டாங்க.. அவர் திரும்பி வந்தவுடன் சொல்ல வாய்திறந்தா.. அவர் அவளைப் பேசவிடாம கேள்வி கேட்டு.. பெட்டியைத் தூக்க வைச்சிட்டாரு.."
ராதா விவரித்தாள்.. பூங்குழலி மகளை அணைத்து.. அவளிடம் எத்தனை மாதம் என்பதைப் போன்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டாள்.. சோமசுந்தரம் மகளை டாக்டரியம் அழைத்துப் போனார்..
ராதா திருச்சியில் ஒரு வாரம் தங்கியிருந்தாள்.. அவளுடைய பெற்றோர் வீட்டில் இருப்பதாகத்தான் பெயர்.. பொழுது விடிந்ததும் ஊர்மிளாவைப் பார்க்க ஊர்மிளாவின் வீட்டுக்கு ஓடி வந்து விடுவாள்.. இரவு வரை தோழியுடன் நேரத்தைச் செலவிடுவாள்.. தூங்குவதற்கு அவளுடைய தாய் வீட்டுக்குப் போய் விடுவாள்..
"ஊர்மி... நாளைக்கு நான் பெங்களூர் கிளம்பியாகனும்.."
சங்கடத்துடன் சொன்னாள் ராதா.. நகரும் மேகங்களை இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ஊர்மிளா திரும்பி தோழியின் முகத்தைப் பார்த்தாள்.. ஆறுதலாக அவளருகில் இருந்த தோழியும் பிரியப் போகிறாள் என்பதில் அவள் கண்களில் வேதனை அப்பியிருந்தது..
"இப்போதும் கேட்கிறேன்.. என்னுடன் நியூயார்க் வந்து விடுகிறயா..? நீ வருகிறதா இருந்தா டெபுடேசனை முடித்துக்கிட்டு உடனடியா நியூயார்க் போய் விடலாம்..."
மறுப்பாக தலையை அசைத்தாள் ஊர்மிளா.. அவள் முகத்தில் திடம் இருந்தது.. பழமையும், புதுமையும் கலந்து பிரகாசிக்கும் தமிழகத்தின் பெண்மையின் மிளிர்தல் இருந்தது..
"இல்லை ராதா.. ஒன்று நான் அவர்கூட இருந்திருக்கனும்.. பிரிந்து வந்திருந்தா அப்பா, அம்மா கூடத்தான் இருக்கனும்.. அதுதான் முறை.. என்னைக்காவது அவர் என்னைத் தேடி வந்தா.. என்னை கேள்வி கேட்கிறது அவராக இருக்கக் கூடாது.. அவரை கேள்வி கேட்கிறதைப் போல நான் இருக்கனும்.."
ஊர்மிளா தெளிவாகப் பேசினாள்.. தீர்க்கமான முடிவை எடுத்தாள்.. அப்படிப்பட்டவளைத்தான் அவள் எங்கேயிருக்கிறாளோ என்ற எண்ணத்தை நரேந்திரனின் மனதில் அகல்யா விதைத்தாள்..
"போனவ எங்கே போனாங்கிற விவரம் கூடத் தெரியலையே.. திருச்சிக்குத் தேடிப் போனா.. அவ அங்கேயில்லாம நியூயார்க்குக்கு பறந்திருந்தா என்ன செய்கிறது..? அந்த மனுசன்.. அதான் தம்பி.. உன் மாமனாரு.. தாம் தும்ன்னு வானத்துக்கும்.. பூமிக்குமா குதிச்சு வைச்சா யார் பதில் சொல்கிறது..?"
நரேந்திரன் பதில் சொல்ல அஞ்சுகிறவன் அல்ல.. ஆனால் ஒருவேளை.. ஊர்மிளா திருச்சிக்குப் போகாமல் வெளிநாட்டிற்குப் போயிருந்தால்.. அந்த விவரத்தைத் தாங்கி நிற்க அவனால் முடியாது.. அதனாலேயே அவன் திருச்சிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தான்..
"அவர் தேடி வராம எந்தச் செய்தியையும் அவருக்குச் சொல்லக் கூடாது.." தீர்மானமாகச் சொல்லி விட்டாள் ஊர்மிளா..
அவள் சொல்வதில் இருந்த நியாயத்தில் சோமசுந்தரமும்.. பூங்குழலியும் மௌனமாகி விட்டார்கள்.. சோமசுந்தரம் மகளுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்.. பூங்குழலி அவள் வாய்க்குப் பிடித்தபடி ருசியான உணவுகளைச் சமைத்துப் போட்டாள்.. ஊர்மிளாவைப் பெற்றவர்கள் அவளைத் தாங்கிக் கொண்டார்கள்..
"உன்னை விட்டுப் போக மனமில்லை ஊர்மி" ராதா தோழியின் கையைப் பிடித்துக் கொண்டாள்..
மாலை வேளையில் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பறவைகளை அண்ணாந்து பார்த்தாள் ஊர்மிளா.. ஒவ்வொரு பறவைக்கும் வெவ்வேறு கூடு.. அவை ஒன்றாகப் பறந்தாலும் கூடென்று வரும் போது பிரிந்துதானே வசிக்க வேண்டும்..?
"நீ என்னைப் பற்றிக் கவலைப்படாம போயிட்டு வா.." தோழியிடம் சோகையாக சிரித்தாள் ஊர்மிளா..
ராதாவின் மனம் நைந்தது.. அவள் மனது பால்யகாலத்திற்கு திரும்பியது.. அன்று போல இன்றும் இல்லையே.. ஏன் என்று அவள் தவித்துப் போனாள்.. ஊர்மிளாவின் சிக்கலில்லாத சிக்கலான வாழ்வில் அவளை தனித்து நிற்க வைத்து விட்டு அவள் மட்டும் ராபிட்சனைத் தேடிப் பயணப் படுவதா..? அவளால் அது முடியுமா..?
"நான் நரேனிடம் பேசிப் பார்க்கிறேண்டி.."
"வேண்டாம்.."
"இது சின்னப் பிரச்னைதான் ஊர்மிளா.."
"இப்போது பெரிய பிரச்னையாகி விட்டது ராதா.. கௌரவப் பிரச்னையாகி விட்டது.. எனக்காக மற்றவர் பரிந்து பேசி அவர் என்னைத் தேடி வருகிறதா இருந்தால் என் சுயகௌரவம் செத்து விடும் ராதா.. அதுக்கப்புறம் நான்.. நானாய் வாழ முடியாது.."
ஊர்மிளாவின் உறுதியை மாற்ற விரும்பாமல் பெங்களூருக்கு பயணப்பட்டு விட்டாள் ராதா.. போவதற்கு முன்னால் தஞ்சைக்குப் போய் அமிர்தாவை பார்த்தாள்..
"ஹேய்.. எப்போடி இந்தியாவுக்கு வந்த..?" அமிர்தா ராதாவை கட்டிக் கொண்டாள்..
"வந்து ஒன் மன்த்தாகுது.."
"அடிப்பாவி..! இத்தனை நாள் கழித்தா என்னைப் பார்க்க வந்த..? உன்னை என்ன செய்தா தேவலாம்..? உனக்குத் தெரியுமா..? நம்ம ஊர்மிக்கு மேரேஜ் ஆகிருச்சு.. அவ பெங்களூரில் இருக்கிறா.. அவ ஹஸ்பெண்ட் பிக்மேன்.. யு நோ.."
"ஐ நோ ஆல்.. அமிர்தா.. ஊர்மிளா இப்ப பெங்களூரில் இல்லை.. திருச்சியில் அவ பேரண்ட்ஸோட இருக்கா.."
"உனக்கு எப்படித் தெரியும்..? நீ அவளைப் பார்த்தியா..?"
"ம்ம்ம்.. அவ மேரேஜீக்கு இன்வைட் பண்ணியிருந்தா.. அப்ப வர முடியலை.. உன்னிடம் கேட்டப்ப நீயும் சரியா பதில் சொல்லலை.."
"அது ஒரு கலாட்டாக் கல்யாணம் போல ஆகிருச்சுப்பா.. ஊர்மிளாவோட ஹஸ்பெண்ட் பெரிய கோடிஸ்வரர்.. அதை மறைச்சு ஊர்மிளாவோட அப்பாகிட்ட அவர் ஒரு தொழிலாளின்னு சொல்லிப் பெண் கேட்டு.. ஏழை போல நடிச்சு கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிட்டார்.. நான்தான் பெண்ணுக்கு தோழி..!
நாங்க பெங்களூர் போய் இறங்கறோம்.. அங்கே பார்த்தா பேலஸ் போல கல்யாண மண்டபம்.. ஊர்மியோட அப்பா சண்டைக்குப் போயிட்டார்.. என்னத்தைச் சொல்ல..? ஒருவழியாய் கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சு.."
"பட்.. அவ நல்லபடியா வாழலை.. இப்ப திருச்சிக்கு திரும்பிவந்துட்டா.."
"என்னடி சொல்ற..?"
"பெங்களூருக்கு டெபுடேசன் பேஸிக்கில் வந்தேன் அமிர்தா.. ஊர்மிளாவையும் பார்த்தேன்.. அவ ஹஸ்பெண்ட் அப்ராட் போயிருந்தார்.."
ராதா நடந்தவற்றை விவரித்தாள்.. அமிர்தா பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.. ஒரு தோழியை மற்றொரு தோழியிடம் ஒப்படைத்தாள் ராதா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -71
அழகான ராட்சசியே -71
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-71.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-71.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy