அழகான ராட்சசியே, -79

79 பிரளயமாய் ஆட்டிவைக்கும்.. பேரிடியாய் கோபம் காட்டும்.. அழகான ராட்சசி நீ.... "நீ சின்னப்பப்பா பாரு.. உனக்குப் பேசத்...


79
பிரளயமாய் ஆட்டிவைக்கும்..
பேரிடியாய் கோபம் காட்டும்..
அழகான ராட்சசி நீ....


"நீ சின்னப்பப்பா பாரு.. உனக்குப் பேசத் தெரியாது பாரு.. என் பிரண்ட் ராதா வந்து போனதுக்கு ராதாகிருஷ்ணன் வந்து போனதா சொல்லி வைத்த பிறவிதானே நீ... அதுக்கே உன்னை வீடு கட்டி அடிக்கனும்.. அப்படிச் செய்யாம உன்னைப் போல பிறவிகள் இருக்கிற பக்கம் தலை வைத்துப் படுத்தாலே பாவம்ன்னு விலகிப் போனேன் பாரு.. அதுதான் உனக்குத் துளிர் விட்டுப் போச்சு.. என் அப்பாவுக்கு மட்டும் தகவல் சொல்லி விட்டிருந்தேன்னு வைய்யி.. உடனே கிளம்பி வந்து உன்னைத் தொலைச்சுக் கட்டி விட்டுட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பாரு.. அப்ப வரச் சொல்லாட்டி என்ன.. இப்ப சொல்லிட்டாப் போச்சு.. தேன்மொழி.. என் போனை எடு.. என் அப்பாவை வரச் சொல்றேன்.. அவர் வந்து இத்தனை வருசமாய் ஏன் நான் என் புருசனை பிரிஞ்சு வாழ்ந்தேன்ங்கிறதுக்கு இந்தம்மாவுக்கு விளக்கம் சொல்லட்டும்.. கூடவே கள்ளக்காதலனைப் பத்தி இந்தம்மா சொன்னதையும் சொல்லி வைக்கிறேன்.. அதுக்கப்புறம் இந்தம்மா இந்த உலகத்தில எந்த மூலையிலே போய் ஒளிஞ்சாலும் எங்கப்பா விட மாட்டாரு.. தேடிப் போய் பொலி போட்டிருவாரு.."
சோமசுந்தரம் ஊர்மிளா சொன்னதையும் செய்வார்.. சொல்லாததையும் சேர்த்துச் செய்வார் என்பதில் குலை நடுங்கிப் போன அகல்யா போர் நிறுத்தம் செய்து பின்வாங்கி விடுவதே சாலச்சிறந்தது என்ற அவசர முடிவிற்கு வந்தாள்.. அதை தாழ்ந்த குரலில் அவள் ரம்யாவிடம் முணுமுணுத்தபோது அவள் இமை கொட்டி விழித்தாள்..
"நீங்களா அத்தை இப்படிப் பேசறது..? ஊர்மிளாவை ஓட ஓட விரட்டறேன்னு எனக்கு வாக்குக் கொடுத்து கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டு இப்ப நீங்க ஓடனும்னு சொல்கிறீங்களே.. வாட் எ ஷேம்..! என் அத்தை இப்படித் தோற்றுப் போய் பின் வாங்குவதா..?"
ரம்யாவின் ஒன்றுமறியாத சின்னக் குழந்தை போன்ற முகத்தைப் பார்த்த அகல்யாவிற்கு ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை..
'இவ உண்மையிலேயே எனக்குத் தைரியம் கொடுக்கிறாளா..? இல்லை.. நான் இன்னும் கொஞ்சம் வாங்கிக் கட்டிக்கனும்னு நினைக்கிறாளா..?'
ரம்யாவின் நினைவு என்னவாக இருந்தாலும்.. அதைப் பற்றிய ஆராய்ச்சியை அப்போது மேற்கொள்ளாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிப் போய் விட வேண்டுமென்று நினைத்தாள் அகல்யா..
'நாம பாட்டுக்கு லேட் பண்ணிட்டு இங்கே நின்னுக் கிட்டிருக்க.. வெளியே போயிருக்கிற நரேந்திரன் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டான்னா என்ன பண்றது..? இவதான் துணிச்சலா எதுத்து நிற்கிறாளே.. இப்ப நடந்ததையும் சொல்லி.. இதுக்கு முன்னாலே நடந்ததையும் சேர்த்துச் சொன்னான்னா அவன் என்னைச் சும்மா விடுவானா..?'
இதையும் தாழ்ந்த குரலில் அவள் ரம்யாவிடம் முணுமுணுத்தபோது அவள் சின்னப் பாப்பாவைப் போல விழி விரித்தாள்.. அதை விடக் கொடுமை எதுவென்றால்.. அவள் அகல்யாவை சின்னப் பப்பாவாக ஆக்கியதுதான்..
"என்ன அத்தை சின்னக் குழந்தையைப் போலப் பேசறிங்க.. நாம ஓடிப் போயிட்டா மட்டும் இந்த ஊர்மிளா இப்ப நடந்ததையும்.. இதுக்கு முன்னாலே நடந்ததையும் நரேந்திரன் அத்தானிடம் சொல்லாமல் விட்டு விடுவாளா..? அவரும் உங்களை என்னவென்று கேட்காமல் விட்டு விடுவாரா..? த்ச்சு.. த்ச்சு.. பாவம் அத்தை நீங்க.. பயத்திலே எதுவும் புரியலை உங்களுக்கு.."
ரம்யாவின் கண்களில் கேலிச் சிரிப்பிருக்க.. அவளது உதடு மட்டும் 'த்ச்சு' போட்டது.. அகல்யா பல்லைக் கடித்தாள்.. அவள் முன்னால் பதவிசாக.. 'அத்தை.. அத்தை' என்று குழைந்த ரம்யாவுக்கெல்லாம் வாய் வந்து விட்டது என்ற நினைவில்..
'எல்லாம் என் நேரம்டி..' என்று பல்லைக் கடித்தாள்..
அகல்யாவே ரம்யா சொன்னதைப் போல நிகழ்ந்து விடுமோ என்றுதான் மனதுக்குள் அஞ்சிக் கொண்டிருந்தாள்.. அதை ரம்யா புளி போட்டுத் தேய்த்து.. விளக்கிச் சொல்லவும் அவள் வெறியாகிப் போனாள்..
'இவ என்ன இதெல்லாம் நடந்து விடும்ன்னு என்னைப் பார்த்துப் பாவப்படறாளா.. இல்லை.. இதெல்லாம் நடக்கப் போகுதுன்னு புளியைக் கரைச்சு ஊத்தறாளா..?'
இரண்டாவதாகத்தான் ரம்யாவின் எண்ணமிருக்கும் என்று தோன்றியபோதும்.. அந்த நேரத்தில் அதை வெளிப் படுத்தி ரம்யாவைப் பகைத்துக் கொள்ள அகல்யா விரும்பவில்லை.. அவளுக்கு ரம்யாவின் தயவு தேவைப் பட்டது.. ஆதலால்.. ரம்யாவைப் பற்றிய ஆராய்தலை ஓரம் கட்டி விட்டு.. ஊர்மிளாவைப் பற்றிய நினைவுக்கு வந்தாள்..
'இந்த ஊமைக் கோட்டான் முதலிலாவது சும்மா இருந்தது.. இப்பக் கையிலே பிள்ளையோட இருக்குது.. அப்பவே அந்த நரேந்திரன் இவ சொல்றதுக்குத்தான் தாளம் போடுவான்.. இப்ப அவன் பிள்ளைக்கு இவ அம்மா... சொல்லவே வேணாம்.. இவ கண்ணைக் கசக்கினாலே என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவானே...'
அதிக நேரம் அங்கே தாமதிக்கலாகாது என்ற ஞானோதயத்துடன் அகல்யா வெளிநடப்பு செய்ய முயன்றாள்.. ரம்யா தடுத்தாள்..
"எங்கே கிளம்பறிங்க அத்தை.."
"அதை போற வழியில சொல்றேன்.. இப்ப வா ஓடிப் போகலாம்.."
"இது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா அத்தை..?"
"எது..?"
"உங்க மகன் நரேந்திரன்கூட என்னை ஓடிப் போகச் சொன்னா அதில ஒரு 'கிக்..' இருக்கும்.. இப்படி வயசான பொம்பளையான உங்க கூட என்னை ஓடிப் போகச் சொல்கிறீங்களே அத்தை.. வாட் எ ஷேம்..! ரம்யா இப்படியாடி உன் நிலைமை ஆகனும்..?"
ரம்யா அகல்யாவை கேலிதான் செய்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாக அகல்யாவுக்குப் புரியத்தான் செய்தது.. புரிந்து என்ன செய்ய..?
'ஏம்மா.. நீ என்னை வைத்து காமெடி.. கீமெடி.. பண்றயா..?' என்று ரம்யாவிடம் அவளால் கேட்கத்தான் முடியுமா..? கேட்டால் அவள் சும்மாதான் இருப்பாளா..?
'அதெல்லாம் இல்லை அத்தை..' என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.. அகல்யாவின் 'கெத்து' கொஞ்சம் தப்பிப் பிழைக்கும்.. அப்படியில்லாமல்.. அவள்..
'ஆமாம் அத்தை..' என்று சொல்லி விட்டால் அகல்யா என்ன ஆவாள்..? ஏற்கனெவே அடி வாங்கி.. பலத்த சேதாரத்திற்கு ஆளாகியிருக்கும் அவளின் 'கெத்து' சுக்கு நூறாகி காணாமல் போய் விடாதா..?
அதனால் அவள் தம்பி மகளின் கேலியை ரசிப்பதைப் போல பாவனை செய்தாள்..
"உனக்கு ஜோக் அடிக்க நேரம் காலம் தெரியாது ரம்யா.. ஆனாலும் உன் ஜோக்கைக் கேட்டா சிரிப்புச் சிரிப்பாத்தான் வருது.."
"அப்படியா அத்தை..? இந்த நிலைமையிலயும் உங்களுக்குச் சிரிப்பு வருதா..? அதுசரி.. அதுதான் துன்பம் வரும் நேரத்திலே சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லி வைச்சிட்டுப் போயிருக்காரே.. நீங்க சிரிங்க அத்தை.."
"அந்தச் சிரிப்பை ஓடிக்கிட்டே சிரிக்கலாம்.. வா.."
அகல்யா அவசரமாக திரும்பி நடந்தாள்.. அவளை பின்பற்றப் போன ரம்யா நின்று திரும்பி ஊர்மிளாவைப் பார்த்து சிநேகிதமாக சிரித்தாள்.. கண்ணம்மா முகவாயில் கரண்டியை வைத்தாள்..
"இன்னா தேன்மொழி..! இது அதிசயமா கீது.. இந்தக் குட்டியத்தான் நம்ம ஐயாவுக்கு ரெண்டாம்தாராம கட்டி வைக்கப் போறதா.. அந்த ரெண்டாம் தாரம் சொல்லுச்சு.. இந்தக் குட்டி என்னடான்னா நம்ம அம்மாகிட்ட பல்லைக் காட்டுது..?"
"பாசப் பறவய பறக்க விடுதுக்கா.."
"அப்படியா சொல்ற..?"
"அட.. ஆமாக்கா.. பாத்தாத் தெரியலையா..?"
"என்னமோ போ தேன்மொழி..! ஒன்னுமே புரியல உலகத்திலன்னு நம்ம சந்திரபாபு தாத்தா சொல்லி வைச்சதிலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் கீது புள்ள.."
"கீதுக்கா.. கீது.."
தேன்மொழியும், கண்ணம்மாவும்... சென்னை பாஷையில் கலந்துரையாடிக் கொண்டிருக்க.. ரம்யா ஊர்மிளாவை நோக்கிக் கை நீட்டினாள்..
"ஹாய்.. ஐ ஆம் ரம்யா.."
இறுகிப் போன முகத்துடன் ஊர்மிளா ரம்யாவின் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினாள்..
"நான் உங்களுக்கு எதிரியில்லை ஊர்மிளா.."
"சொந்தத்துக்குள்ளே யாருமே யாருக்கும் எதிரியாகக் கூடாது.."
"அது நடக்காத காரியம் ஊர்மிளா.. சொந்தம்ன்னு சொல்லிக்கிட்டு கழுத்தை அறுத்து ரத்தம் குடிக்கிறவங்க கிட்ட உறவு கொண்டாட முடியாது.. நான் உங்களைப் போல அஹிம்சா வழியில் போகிறவளில்லை..."
"நான் அஹிம்சாவாதின்னு யார் உங்களுக்குச் சொன்னது..? என் அப்பா ஒரு போராளி.. அந்த போர் குணம் அப்படியே என்னிடமும் இருக்கு.."
"அப்புறம் எதற்காக நரேந்திரன் அத்தானை விட்டு விலகிப் போனிங்க ஊர்மிளா..? இருந்து இவங்க முகத்திரையை கிழித்திருக்க வேண்டாமா..? இவங்களைக் கண்டு பயந்து ஓடிப் போனதா இவங்க சொல்லிக்கிட்டிருக் காங்களே.. அதுக்கு இடம் கொடுத்திருக்கனுமா..?"
"இல்லை ரம்யா.. நான் உங்க அத்தையைக் கண்டு பயந்து ஓடி வரலை.. என் நம்பிக்கை உடைஞ்சிருச்சு.. அதனால நான் உடைஞ்சு போனேன்.. விலகிப் போனேன்.. உங்களுக்கு இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது.. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கங்க.. உங்க அத்தையிடமும் சொல்லுங்க.. எனக்கு எதிரியா இருக்கிறதுக்கும் ஒரு தகுதி இருக்கனும்.. அந்தத் தகுதி உங்க அத்தையிடம் இல்லை.. இதை மறக்காம சொல்லிருங்க.."
"மறப்பேனா ஊர்மிளா.. இப்ப வெளியில போனதும் முதல் வேலையா இதைச் சொல்லிடறேன்.. எனக்கு வேறென்ன வேலை..?"
ரம்யா சிரித்த முகத்துடன் கண்ணம்மாவுக்கும், தேன்மொழிக்கும் கையாட்டி விட்டு நிதானமாக கேட்டை நோக்கி நடை போட்டாள்..
"இந்தக் குட்டிய புரிஞ்சுக்கவே முடியலைக்கா.." என்றாள் தேன்மொழி..
"ஆமாம்மே.." கண்ணம்மா அதை ஆமோதித்தாள்..
ஊர்மிளா தோளைக் குலுக்கிக் விட்டு வீட்டுக்குள் நடந்தாள்.. கைவேலையை விட்டு விட்டு மாடிக்குப் போய் விட்டாள்.. அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.. உறங்கிய அவளின் கடந்த கால நினைவின் சுவடுகளை அகல்யா தட்டி எழுப்பி விட்டுப் போய் விட்டாள்.. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க முடியாத சோர்வுடன் ஊர்மிளா சுருண்டு படுத்து.. அப்படியே தூங்கி விட்டாள்..
எவ்வளவு நேரம்.. அப்படியே தூங்கிக் கொண்டிருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை... உறக்கத்தில் இருந்தவளின் நெற்றியின் மீது வலிமையான உள்ளங்கையும், விரல்களும் படிந்தன.. அந்த ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் ஊர்மிளா.. அவளுக்கு வெகு அருகாமையில் நரேந்திரன் நின்றிருந்தான்.. ஊர்மிளா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்..
"சுரேன்.." அவள் கண்கள் மகனைத் தேடின..
காலையில் மகனை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் போகும் நரேந்திரன்.. மதிய உணவுக்கு வரும் போது மகனையும் அழைத்துக் கொண்டுதான் வருவான்.. சுரேந்திரனுக்கு நண்பகலோடு வகுப்பு முடிந்து விடும்..
அன்றும் அதுபோல மகனுடன் அவன் வந்திருப்பான் என்ற நினைவில் மகனைத் தேடினாள் ஊர்மிளா..
"இல்லை.. சுரேனை அழைச்சுக்கிட்டு வரலை.. அவனுக்குக் கிளாஸ் முடிய இன்னும் டைம் இருக்கு.." என்றபடி கட்டிலில் ஊர்மிளாவின் பக்கத்தில் உட்கார்ந்தான் நரேந்திரன்..
ஊர்மிளா விலகி உட்கார்ந்தாள்.. அதில் நரேந்திரனின் முகம் கடுமையானது..
"உன் கூடப் பேசனும்.. கீழே வேலையாள்கள் இருப்பாங்க.. ரூமுக்குள் நாம தனியாப் போசிக்கிட்டு இருந்தா அவங்க உள்ளே வர மாட்டாங்க.. அதுக்குத்தான் இங்கே உட்கார்ந்தேன்.. மத்தபடி உன் கையைப் பிடிச்சு இழுத்து.. 'ரேப்' பண்ணனும்ங்கிற உத்தேசமெல்லாம் எனக்கில்லை.." என்றான்..
ஊர்மிளா உதட்டைக் கடித்தாள்.. அவள் முகம் செவ்வானமானது.. சங்கடத்துடன் சுவரைப் பார்த்தபடி..
"என்ன பேசனும்..?" என்றாள்..
நரேந்திரனின் பார்வை கூர்மையானது.. கண்கள் இடுங்க அவளையே வெறித்தவன்..
"பேச எதுவுமே இல்லையா..?" என்று கடினமான குரலில் கேட்டான்..
ஊர்மிளா பதில் சொல்லவில்லை.. அமைதியாக இருந்தாள்..
"ஏண்டி.. வீட்டில் பிரளயமே வெடிச்சிருக்கு.. மணிவாசகம் போன் போட்டான்... செக்யூரிட்டி வாசலிலேயே வழிமறிச்சு விவரம் சொல்றான்.. வீட்டுக்குள் வந்தால் தேன்மொழியும்.. கண்ணம்மாவும் கதைகதையாய் கொட்டறாங்க.. நீயென்னடான்னா என்ன பேசனும்ங்கற..? சொல்லுடி.. உனக்கு உண்மையிலேயே பேச எதுவுமே இல்லையா..?"
நரேந்திரனின் கொதிப்பில் ஊர்மிளா திரும்பி அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.. அதிலிருந்த ஒட்டாத தன்மையில் நரேந்திரனின் மனம் வலித்தது..
"ஐயா.. உங்க அம்மான்னு சொல்லிக்கிட்டு உங்க அப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டி வந்து நம்ம அம்மாகிட்ட சண்டை போட்டுட்டுப் போனாங்கய்யா.."
மணிவாசகம் இதைத்தான் போனில் சொன்னான்.. நரேந்திரன் உடனடியாக எழுந்து வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.. வாசலில் வழி மறித்த செக்யூரிட்டி..
"நான் தடுக்கத் தடுக்க அந்தம்மா இன்னொரு பொண்ணோட கேட்டைத் தாண்டிப் போர்டிகோவுக்கு போயிட்டாங்கய்யா... அங்கே மணிவாசகம் தடுத்து நிறுத்திட்டான்.. அவன் கூடயும் சண்டை.. நம்ம அம்மாவை பேசாத பேச்சையெல்லாம் பேசிட்டாங்க.." என்று சொல்லி நரேந்திரனின் கண்களை சிவக்க வைத்தான்..
தேன்மொழியும், கண்ணம்மாவும் அக்குவேறு.. ஆணிவேறாக நடந்த நிகழ்வுகள் அத்தனையையும் திரைக்கதை, வசனத்தோடு ஒப்பித்து விட்டார்கள்.. அவர்களுக்கும் ராதாவுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இருந்த சம்பந்தத்தைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை..
"என்னவோ ராதாகிருஷ்ணன்னு சொல்லி.. அதுக்கே உன்னை வீடு கட்டி அடிச்சிருக்கனும்ன்னு அம்மா கோபப்பட்டாங்கய்யா.. எனக்குக் கள்ளக் காதலன் இருந்தான்னு நீ பெத்த பிள்ளைகள் கிட்ட சொல்லிப்பாரு.. அவங்களே உன்னை கொன்று புதைச்சிருவாங்கன்னு சொன்னாங்கய்யா.." என்றுதான் கண்ணம்மா சொன்னாள்..
'கள்ளக் காதலன்..!'
நரேந்திரனின் முகம் பயங்கரமாக மாறிப் போனது.. அந்த வேகத்துடன் மாடியேறி ஊர்மிளாவின் அறைக்கதவை திறந்து உள்ளே போனான்.. அவள் கட்டிலில் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே, -79
அழகான ராட்சசியே, -79
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaaatsasiye-79.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaaatsasiye-79.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy