அம்மம்மா.. கேளடி தோழி...! -67

67 விரல்தொட்டு   விட்டு   விட்டாய்.. வெண்பஞ்சை   அனல்   பற்றியது... "கேட்டுக்க ஷோபா... முரளியோட என் கல்யாணம் நடந்தாகணும்.. அ...


67
விரல்தொட்டு  விட்டு  விட்டாய்..
வெண்பஞ்சை  அனல்  பற்றியது...

"கேட்டுக்க ஷோபா... முரளியோட என் கல்யாணம் நடந்தாகணும்.. அது நின்னுச்சுன்னா எனக்கொன்னுமில்ல.. உனக்குத்தான் தலைவலி..."
"ஏன்..? எனக்கு ஏன் தலைவலி வரனும்..?"
"உன் கண் முன்னாலேயே சங்கரைக் கல்யாணம் பண்ணிக் காட்டிருவேனே..."
"நான் உன் முரளியைக் கல்யாணம் பண்ணிக் காட்டி விடுவேன்..."
"செய்து பார்.. நீ முரளி முன்னால் போய் நின்னா அவர் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்.. அதுவே நான் உன் சங்கர் முன்னால் போய் நின்னா அவன் என்னைத் தவிர வேற யாரையும் திரும்பிப் பார்க்க மாட்டான்.. என்ன...? அதைச் செய்து காட்டவா...?"
"இதை முரளியிடம் நான் சொல்லவா..?"
"சொல்லேன்... நான் சங்கரைத் தேடிப் போகிறேன்..."
"ஏண்டி.. உன்னை என்னவோ ரொம்ப நல்லவன்னு நினைச்சேன் கடைசியில் நீ இவ்வளவு தானா..?"
"என்ன இவ்வளவுதானா..?"
"காதலிக்கிறது ஒருத்தனை.. கல்யாணம் பண்ணிக்கிறது வேற ஒருத்தனையா...?"
"என்னடி செய்கிறது..? இந்த சினிமாக்களில எல்லாம் இந்த மெஸேஜைத்தானே திரும்பத் திரும்பச் சொல்கிறாங்க..."
"என்னன்னு..?"
"நீ ஆசைப்படுறவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதை விட... உன்மேல ஆசைப்படுகிறவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நல்லாயிருக்கும்ன்னு சொல்றாங்களேடி..."
ராதிகா அப்பாவியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு பேசப்பேச.. அவள் அப்படியேதும் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவாளோ என்ற பயத்தில் ஷோபா திகிலடைந்து போனாள்...
"உன்னைப் போய் மேகலா ஆண்ட்டி மருமகளா செலக்ட் பண்ணியிருக்காங்களே.. அவங்களைச் சொல்லனும்..."
"சொல்லித்தான் பாரேன்.. நீ சொல்கிறதை மதிச்சு அவங்க காது கொடுத்துக் கேட்கிறாங்களான்னு பார்ப்போம்... என் நாத்தனார்தான் அப்பாவி... மாமியார் ரொம்ம்ப புத்திசாலி... உன் சாகஸமெல்லாம் அங்கே செல்லுபடியாகாது.. அவங்க உனக்கும் 'பெப்பே...' உன்னைப் பெத்தவங்களுக்கும் 'பெப்பே'ன்னு சொல்லிருவாங்க.. "
"நானும் அப்போப் பிடிச்சுப் பார்க்கிறேன்.. நீ திமிராவே பேசறடி..."
"திமிர்தான்.. நான் காதலிக்கிறவர்.. என்னைக் காதலிக்கிற திமிர்.. போ.. முடிந்தால் சங்கரை காப்பாத்தி.. கைப்பத்திக்கப் பாரு.. ஒன்றை நினைவில் வைச்சுக்க.. முரளியுடனான என் கல்யாணம் நின்று போனாலும் முரளி உன் கழுத்தில் ஒருநாளும் தாலியைக் கட்ட மாட்டார்.. அதே சமயம் சங்கர் தேடிவந்து என் கழுத்தில் தாலியைக் கட்டுவான்... ஸோ.. என் கல்யாணம் நின்று போனால் நஷ்டம் எனக்கில்லை.. உனக்குத்தான்.. சங்கர்.. முரளி.. ரெண்டு பேருக்குமே நீ குறிவைச்சே.. முரளி என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறார்.. மீதமிருக்கிறது சங்கர்தான்.. அவனையும் கோட்டை விட்டுட்டு உட்கார்ந்து விடாதே.. நான் சொல்கிறதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. எனக்கென்ன வந்தது..? எனக்கு முரளி இல்லைன்னா சங்கர் இருக்கவே இருக்கிறான்.. உனக்கு சங்கர் இல்லைன்னா யாரிருக்கா..? யோசிச்சுக்க.. சங்கரை நீ தக்க வைச்சுக்கனும்னா எனக்கு முரளியோட கல்யாணம் நடந்தாகனும்.. அப்படி ஆகலைன்னா உனக்குத்தான் கஷ்டம்..."
அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது.. ராதிகாவிடமிருந்து விடுபட்டு ஓடுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஷோபா.. நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அவசரமாகக் கதவைத் திறந்தாள்..
சந்தேகப் பார்வை பார்த்தபடி குளிர்பானப் பாட்டிலுடன் உள்ளே வந்தாள் கீதா...
"கதவைப் பூட்டிக்கிட்டு உள்ளே என்ன பண்றீங்க..?"
"ஊம்.. உன் அக்கா எனக்கு பெஸ்ட் பிரண்ட் பாரு.. அவ மேரேஜ் பண்ணிக்கிட்டு என்னை விட்டுப் பிரிஞ்சு போறாள்ல.. அந்தத் துக்கத்தை அழுது ஆற்றிக்கிட்டு இருந்தோம்..."
குளிர்பானம் கேட்டவள் அதைக் குடிக்க மறந்து வெகு வேகமாக அந்த இடத்தை விட்டு ஏறக்குறை ஓடினாள்...
"இவ எதுக்கு ராது இப்படி பின்னங்கால் பிடறியில பட ஓடுறா.."
"அப்படி ஒரு நேர்த்திக் கடனாம்..."
"அப்படிங்கறே..."
"ஆமாம்கிறேன்..."
"இந்த கூல்டிரிங்கை என்னடி செய்கிறது...?"
"உனக்கும் எனக்கும் வாயில்லையா..? நாம குடிக்கிறது..."
"அதைச் சொல்லு..."
கீதா கூல்டிரிங்கை வாயில் சரித்தாள்.. ராதிகா யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தாள்..
"என்னடி இம்புட்டு யோசனை யோசிக்கிற..?"
"ஒன்னுமில்ல.. இந்த ஷோபா இருக்காளே... அவளப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..."
"நல்ல நாளும் அதுவுமா.. அவளைப் பார்த்துப் பேசறதே ஆபத்து... அதில அவளப்பத்தி யோசிக்க வேற ஆரம்பிச்சிட்டயா.. நீயாய் ஏண்டி வினையை விலை கொடுத்து வாங்கற..."
"நானாடி அவளக் கூப்பிட்டு வைச்சுப் பேசினேன்..?"
"வினை தானாத்தான் வந்துச்சு.. எதுக்கு வந்துச்சாம்...?"
"வேற எதுக்கு..? என் உயிரை எடுக்கத்தான்..."
"அச்சாணியமாய் பேசாதே ராதிகா... நானும் அவளை வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்.. இந்தக் கல்யாணம் நடக்கிறதில இவளுக்கு எதுக்குடி இத்தனை வருத்தம்...?"
"ம்ம்ம்.. முரளி அவளுக்கு முறை மாப்பிள்ளை..."
"ஓ... அதான் காண்டா..?"
"ம்ம்ம்..."
"ஐயோ பாவம்.. முரளிக்கு இப்படியொரு இக்கட்டா..?"
கீதாவின் பரிதாபத்தில் ராதிகாவுக்கு சிரிப்பு வந்து விட்டது..
"பாவம்... அவர் என்னடி பண்ணுவார்..?"
"எதைவைச்சு.. இவளுக்கு முரளி முறை மாப்பிள்ளை ஆகனும்னு சொல்கிற..?"
"வேண்டாம்டி.. உனக்குச் சொன்னாப் புரியாது..?"
"இதானே வேண்டாம்கிறது.. இன்னும் ரெண்டே மாதத்திலே பிளஸ்டூவை முடிச்சிட்டு காலேஜீக்கு ஓடப் போறேன்.. எனக்கா புரியாது..? என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு..? சின்னப் பப்பா மாதிரி இருக்கா..? உனக்கே புரியும் போது எனக்குப் புரியாதா..?"
"அப்ப சொல்லித்தான் ஆகனும்கிற..?"
"ஆமாம்..."
"எனக்கென்ன வந்தது.. நீ இவ்வளவு கேட்கிறதால சொல்றேன்.. கேட்டுக்க.. முரளியோட அக்கா இருக்காங்கள்ல..."
"இருக்குது.. இருக்குது.. அந்தம்மாவுக்கு எதுக்குடி அவ்வளவு ராங்கி..? சாப்பாடு தூள்ன்னு எல்லோரும் சொல்கிறாங்க.. இது மட்டும் சசிக்கலைன்னு சொல்லுது.. நல்ல வேளை.. லேடிஹிட்லர் காதில இது விழுகலை.. விழுந்திருந்தா இந்தக் கல்யாண மண்டபம் வியட்நாம் வீடாய் ஆகி இருக்கும்..."
"ஏண்டி.. முரளிக்கு அந்த ஷோபா எப்படி உறவு முறையாகனும்னு சொல்லவந்தா.. நீ எங்கேயோ போய் நிற்கிற.. இப்ப அதை நான் சொல்லனுமா.. வேணாமா..?"
"உன் நாத்தனாரைப் பேசினா கோபம் பொத்துக்கிட்டு வந்துருமே.. இப்ப எதுக்காக அந்தம்மாவைப் பத்திச் சொல்கிற..."
"அவங்களோட மாமியார் இருக்காங்கள்ல..."
"இருக்காங்க.. தங்கமான மாமியார்.. உன் நாத்தனார் கொடுத்து வைச்ச பிறவிடி ராது.. இது மூஞ்சிக்கெல்லாம் எப்படிப்பட்ட மாமியார் வந்து மாட்டறாங்கன்னு பாரு..."
அடுத்த விமரிசனத்தை கீதா ஆரம்பித்து வைக்க.. இவளை என்ன செய்தால் தேவலாம் என்ற கோபத்துடன் முறைத்தாள் ராதிகா...
"டோனி.. டோனி.." என்று கைகளைத் தூக்கினாள் கீதா...
"என்னது.. டோனியா...?"
இவள் எதற்காக.. கிரிக்கெட் டீமின்  பெயரைச் சொல்கிறாள் என்ற திகைத்துப் போனாள் ராதிகா...
"யெஸ்... மை டியர்..."
"அவரை எதுக்குடி வம்புக்கு இழுக்கற...?"
"ஊஹீம்.. அவரைப் போய் யாராவது வம்புக்கு இழுப்பாங்களா..? டோனின்னா கூல்ன்னு அர்த்தம்..
கூல்.. கூல்.. அப்படிங்கறதைத்தான் டோனி.. டோனி.. அப்படின்னு சொன்னேன்..."
"நீ தேறவே மாட்டடி..."
"நோ சான்ஸ்.. நான்தான் கிளாஸ் பர்ஸ்ட்.. அதனால சாபத்தை மாத்திக்குடு... என்னை மட்டும் சொல்றயே.. நீ எதுக்காக உன் நாத்தனாரின் மாமியாரையெல்லாம் சீனுக்குள் இழுத்து விடற..."
"நேரம் தான்... வேற என்ன..? என் நாத்தனாரோட மாமியாருக்கு ஒரு தங்கை இருக்காங்க..."
"ராதிகா.. இது உனக்கே நியாம்ன்னு தோணுதா..? இப்ப நான் என்ன கேட்டேன்..? அந்த ஷோபாவுக்கு முரளி எப்படி முறை மாப்பிள்ளையாய் ஆனாருன்னுதானே கேட்டேன்.. அதுக்காக.. உன் நாத்தனாரின் மாமியார் முதற்கொண்டு சொல்லிக்கிட்டு வரனுமா..? நான் தாங்குவேனான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா..?"
"என்னைக் குற்றம் சொல்லாதேடி... நான் எச்சரிச்சேன்.. நீதான் கேட்கலை.. மத்த விவரம் புரிஞ்சா.. உனக்கு எல்லா விவரமும் புரிஞ்சு விடுமா..?"
"ஜாடையாய் எதிர்த்த வீட்டுத் தடியனையும்.. பக்கத்து வீட்டு முரடனையும் பற்றி சொல்லிக் காட்டறாப்புல இருக்கே..."
"புரிஞ்சாச் சரி..."
"அவனுகளே ஒரு விவரம் கெட்ட பயலுக.. அவனுகளுக்கும் விவரத்திற்கும் என்ன சம்பந்தம்ன்னு இதை நீ சொல்ற...?"
"வேணாண்டி.. அடி வாங்காதே..."
"நீ விசயத்துக்கு வா..."
"என் நாத்தனாரோட.. மாமியாரோட.. தங்கையோட.. மகள்தான் ஷோபா..."
"எப்படி மூச்சு வாங்குது பாரு உனக்கு.. ஊம்.. உன் நாத்தனாரோட.. மாமியாரோட... தங்கை மகள்ன்னா.. முரளிக்கு தங்கை முறையாயில்ல ஆகனும்...? கல்யாணம் பண்ணிக்கிற முறை வராதே..."
நெற்றியில் ஒற்றை விரலால் தட்டியபடி கீதா யோசனையில் ஆழ்ந்து விட.. 'அப்பாடி..' என்ற விடுதலை உணர்வுடன் கட்டிலில் சரிந்து கண்களை மூடினாள் ராதிகா...
எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தாளோ தெரியாது.. விழா நாளுக்கான சந்தடியில் கண்விழித்தவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்...
நிச்சயதார்த்தப் பெண்ணைப் பார்க்கவென்று உறவினர்கள் வரக்கூடும் என்ற நினைவுடன் கலங்கிய தலைமுடியையும்.. சேலையையும் சரி பண்ணிக் கொண்டே எதிரே பார்த்தவள் திகைத்துப் போனாள்...
நாற்காலியில் கால்களை மடித்து அமர்ந்தபடி.. காற்றில் கை விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கீதா...
'இவளுக்கு என்ன ஆச்சு...'
ராதிகா கவலைப் பட்டுப் போனவளாக தங்கையின் தோளில் ஓங்கி ஒரு போட்டு கவனத்தை திருப்பினாள்...
"என்ன ராது...?"
"என்னடி பண்ணிக்கிட்டு இருக்க...?"
"நீ சொன்ன உறவு முறையை யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.. அதெப்படி டீ அந்த ஷோபா முரளிக்கு முறைப் பெண்ணாய் ஆவா..?"
"ஏண்டி.. அதை நீ விடவே மாட்டியா...?"
"அதுக்கில்லைடி ராது..."
"அடச்சீ.. எழுந்திரு.. இப்ப இதுதான் ரொம்ப முக்கியம்... அவ முரளிக்கு யாராய் இருந்தா நமக்கென்ன..?"
"அதைச்சொல்லு... நீதானே அவளுக்கு வொய்ப்.."
"தெரியுதில்ல... போ.. போய் அம்மா என்ன செய்கிறாங்கன்னு பார்த்துட்டு வா..."
"வேணாண்டி ராது.. லேடி ஹிட்லர் சுள்ளு.. சுள்ளுன்னு விழுந்து வைக்குது.. அதுக்கு உன் நாத்தனாரே தேவலாம் போல இருக்கு..."
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே மேகலா சில உறவுக்காரப் பெண்களுடன் உள்ளே வந்துவிட ராதிகா மரியாதையுடன் எழுந்து நின்றாள்... அதைப் பெருமைபொங்க பார்த்தபடி...
"உட்காரும்மா..." என்று அருகில் அமர்ந்து கொண்டாள் மேகலா...
சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் நேரமாகிறது என்று கிளம்பினார்கள்.. சுந்தர் வந்து ராதிகாவின் காதைக் கடித்து முரளி அவளுக்காக மாடியில் காத்திருக்கிறான் என்று சொல்லி விட்டுச் சென்றான்...
"கொஞ்சம் இருடி.. இதோ வந்திர்ரேன்..." ராதிகா கிளம்பினாள்...
"என்னவாம்.. உன் ஹீரோ வரச்சொல்லி தூது விட்டாரா...?" என்று கேட்டாள் கீதா...
"எப்படிடீ கண்டு பிடிச்ச..?" ராதிகா ஆச்சரியமானாள்...
"அதான் சுந்து வந்து உன் காதைக் கடிச்சானே..."
"இதிலெல்லாம் நீ செம விவரம்டி..."
"என்ன இருந்து என்ன பிரயோஜனம்..? இந்த ஷோபா எப்படி முரளிக்கு முறைப் பெண்ணாய் ஆனாங்கிற விவரம் மட்டும் எனக்கு பிடிபட மாட்டேங்குதே..."
"ஆரம்பிச்சுட்டியா.. ஆளை விடு தாயே... அங்கே என் ஆள் எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்..."
"உனக்கு உன் பிரச்னை..."
"உனக்கு எதுக்குடி இந்தப் பிரச்னை.. நீயாய் இழுத்து விட்டுக்கறே..."
"போ ராது.. இதைத் தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு தலை வெடிச்சுடும்..."
"ஓகே.. என் மாமியார் உனக்கு என்னவாக ஆகனும்...?"
"அத்தை..."
"என் சின்ன மாமியார்...?"
"சின்னத்தை..."
"என் சின்னத்தையின் மகள் உனக்கு என்னவாகனும்..."
"சின்னத்தை மகள்... அதாவது அத்தை மகள்.. புரிஞ்சுருச்சு ராதிகா..."
'யுரேகா...' என்று கூவாத குறையாக கீதா மகிழ்ந்து போக... ராதிகா மாடிக்கு விரைந்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -67
அம்மம்மா.. கேளடி தோழி...! -67
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/67.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/67.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy