பொதிகையிலே பூத்தவளே -45

45 அனுபமா மீனாவைப் பார்த்த பார்வையில் அதீத வெறுப்புடன் கூடிய சீற்றம் தெரிந்தது.. பார்வையிலேயே பொசுக்கி விடுபவளைப் போல அனல் பார்வை பார...


45

அனுபமா மீனாவைப் பார்த்த பார்வையில் அதீத வெறுப்புடன் கூடிய சீற்றம் தெரிந்தது.. பார்வையிலேயே பொசுக்கி விடுபவளைப் போல அனல் பார்வை பார்த்தாள்.. மீனாவுக்குள் இருந்த நிமிர்வு விசும்பி எழுந்து நின்றது.. பதிலுக்கு இவள் பார்த்த நேர் கொண்ட பார்வையில் அனுபமா கொதித்துப் போனது கண்கூடாக தெரிந்தது..
"இவள் யாரோ இல்லையா..? யாரோ இல்லாமல்.. வேறு யார்..? நமக்கு உறவா..?"
கேள்வி என்னவோ ரூபிணியிடம்தான்.. பார்வையெல்லாம் மீனாவின் மீதே இருந்தது.. மீனா உதட்டைச் சுழித்து 'இந்தப் பார்வையை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்..' என்பதைப் போல பார்த்து வைத்தாள்..
"இவங்க சின்ன அண்ணாவிடம் சீனியர் மேனேஜரா வொர்க் பண்ணுகிறவங்க.."
"வேலை செய்பவளுக்கு நம் வீட்டு பங்சனில் என்ன வேலை..? யாரையும் வைக்கும் இடத்தில் வைக்கனும் என்பதை எப்போது நீ தெரிந்து கொள்ளப் போகிறாய் ரூபிணி..?"
"என் மேரேஜ் எங்கேஜ்மெண்ட் பங்சனில் இவங்க ஃபேமிலியோடு கலந்துக்கனும்னு நான்தான் இவங்களை வீடு தேடிப் போய் இன்வைட் பண்ணினேன்.."
"வீடா..? இவளுக்கு ஏது சொந்த வீடு..? இவள் குடியிருப்பது நம் வீட்டில் ரூபிணி.."
"நம் வீடில்லை அண்ணி.. அது சின்ன அண்ணனின் கம்பெனி குவார்ட்டர்ஸ்.. நீங்க ஏன் அண்ணி சின்ன அண்ணனின் சொந்த புராப்பர்ட்டியை எல்லாம் நம்ம புராப்பர்ட்டீஸ்ன்னு சொந்தம் கொண்டாடறீங்க..?"
ரூபிணியின் கேள்வியில் மீனா சின்னதாக சிரித்து வைத்தாள்.. அனுபமாவைப் பார்க்காமல் அவள் வேறு பக்கம் திரும்பிச் சிரித்த ஏளனச் சிரிப்பில் வெகுண்டாள் அனுபமா..
"ஏன், ஏன், ஏன், இப்படிச் சிரிக்கிற..?"
கோபத்துடன் மீனாவின் மீது பாய்ந்தாள்..
"ஏங்க.. நான் சும்மா சிரித்தேன்.. மனுசராய் பிறந்தா சிரிக்கத் தெரிந்திருக்கனும்.. சிரிப்பது ஒரு குற்றமா..?" மீனா நிதானமாகக் கேட்டு அனுபமாவின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்..
"அண்ணி அதிகமாச் சிரிக்க மாட்டாங்கங்க.. அதனால் சிரிக்கிறவங்களைப் பார்த்தாக் கோபப் படுவாங்க.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.." ரூபிணி மீனாவை சமாதானப் படுத்துவதைப் போலக் கூறினாள்..
அது உண்மையிலேயே சமாதானம்தானா என்ற வன்மத்துடன் நாத்தனாரை முறைத்தாள் அனுபமா..
"நீ ஒன்றை மறந்து விட்டாய்ன்னு நினைக்கிறேன் ரூபிணி.. இப்ப உனக்கு எங்கேஜ்மெண்ட் நடக்கப் போவது என்கூடப் பிறந்த அண்ணனுடன்.. அதை மறந்து விடாதே.."
அனுபமாவின் வார்த்தைகளில் உன் வாழ்க்கை என் கையில் என்ற எச்சரிக்கை ஒளிந்திருந்தது.. மீனா அதிர்ச்சியுடன் ரூபிணியைப் பார்க்க, அவள் அலட்சியமாகத் தோளைக் குலுக்கினாள்..
"இதை உங்க மனதில் ஏற்றிக் கொண்டால் தேவலை அண்ணி.. அனிருத் உங்களைப் போல குணம் படைத்தவரில்லை.. நேர்மையானவர்.. அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்படாதவர்.. பக்கா ஜென்டில் மேன்.. என்னைக் காதலிக்கிறவர்.. இத்தனைக்கும் மேலா சின்ன அண்ணனின் பெஸ்ட் பிரண்ட்.. நானா, நீங்களாங்கிற கொஸ்டின் வந்தா ஒரு செகண்ட் கூட யோசிக்காம என்னை சூஸ் பண்ணுவார்.. இந்த கான்பிடெண்ட் என் மனதில் இருக்கிறதினாலதான் இந்த மேரேஜீக்கே நான் ஓகே சொன்னேன்.. ஸோ, உங்க பிறந்த வீட்டுச் சொந்தமா உங்க அண்ணன் உங்க பக்கம் நிற்கனும்னா என்னை நீங்க அனுசரித்துப் போயாகனும் அண்ணி.. மைன்ட் இட்.."
சின்னப்பெண் என்று மீனா நினைத்துக் கொண்டிருந்த ரூபிணியின் மனதில் இத்தனை துணிவா..?
மீனா இமை கொட்டி விழித்து ரூபிணியைப் பார்த்தாள்.. அவளோ இமை சிமிட்டிச் சிரித்தாள்..
"ரிலாக்ஸ்.. எங்க அண்ணி இப்படித்தான்.. பூச்சாண்டி காட்டிக்கிட்டே இருப்பாங்க.. அதுக்கெல்லாம் பயந்த ஆள் நானில்லை என்பதை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கனும்.. இல்லேன்னா அவங்க மைண்டில் எதுவும் ஏறாது.. நீங்க எதுவும் நினைத்துக்காதீங்க.." மீனாவுக்கு அவள் ஆறுதல் சொல்ல..
"ரூபணி.." என்று அலறினாள் அனுபமா..
"வாட்..?" ரூபிணி அலட்டிக்கொள்ளாமல் கேட்டாள்.
"இதே வார்த்தைகளை நானும் சொல்லலாம்.."
"சொல்லுங்க.. யார் தடுத்தது..?"
"உனக்கே தெரியும் உன் அண்ணன் என் கண்ட்ரோலில் இருக்கிறார்.. நான் நில்லுன்னு சொன்னா நிற்பார்.. ஓடச் சொன்னா ஓடுவார்.."
"ஊஹீம்.. மாற்றிச் சொல்கிறீங்க அண்ணி.. அண்ணன் நீங்க நிற்கச் சொன்னா நிற்பார்.. உட்காரச் சொன்னா உட்கார்ந்துடுவார்.. இதெல்லாம் ஓகே.. ஓடுன்னு சொல்லிப் பாருங்க.. நடக்கக்கூட மாட்டார்.. அண்ணன் இருந்த இடத்தை விட்டு அசையாத சுகவாசி அண்ணி.. ஓடியோடி உழைக்கிறதெல்லாம் அவருக்கு செட்டாகாது.. நோகாமல் நோன்பு கும்பிடத்தான் அவருக்குப் பிடிக்கும்.. என் சின்ன அண்ணனைச் சொல்லுங்க.. அவர் சூப்பர் மேன்.. காலில் சக்கரம் கட்டிக்கிட்டு இருக்கிதைப் போல உலகம் சுற்றி வருபவர்.. ஓரிடத்தில் நிற்க மாட்டார்.. ஒவ்வொரு சிட்டியிலேயும் ஒரு பிஸினெஸ்ஸை ரன் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்பார்.."
"அப்படியே போய் விட வேண்டியதுதானே.. கானாடு கிரிக்கு வந்து ஏன் எங்களுக்கு இம்சையைக் கொடுக்கனும்..?"
நிஷ்டூரமாக வெளிவந்த அனுபமாவின் வார்த்தைகளில் அதிர்ந்து போனாள் மீனா.. அவளுடைய விஷ்வா கானாடுகிரிக்குள் கால் வைக்கக் கூடாதா..? அதைச் சொல்ல இவள் யார்..?
"அவர் வருவதில் உங்களுக்கு என்ன இம்சை..?"
கோபத்துடன் கேட்ட மீனாவை பாராட்டுதலாகப் பார்த்தாள் ரூபிணி.. விஷ்வாவுக்காக ஒரு ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் மீனா அனுபமாவையே எதிர்த்து நின்று கேள்வி கேட்டதில் அவள் மனதில் சந்தோச ஊற்று பொங்கியது..
"வேறு என்ன..? சின்ன அண்ணனின் தொழில் சாம்ராஜ்யத்தை இவங்க சொந்தம் கொண்டாட முடியாமல் போய் விடுமே.. அதுதான் இம்சை.."
ரூபிணியின் வெளிப்படையான குற்றச்சாட்டில், மீனா, அனுபமாவைப் புழுவைப் பார்ப்பதைப் போலப் பார்த்து வைத்தாள்.. அனுபமாவுக்கு கொலைவெறி வந்தது..
"ஏன்..? உங்க பெரிய அண்ணாவும், எங்க சாரைப் போலத் தொழில்களைத் தொடங்க வேண்டியதுதானே ரூபிணி..?" மீனா எரிச்சலுடன் கேட்டாள்..
"அதுக்கு உழைக்கனுமே.. உட்கார்ந்த இடத்திலேயே அத்தனையும் கிடைக்கனும்னா எப்படிங்க..? பரம்பரைச் சொத்தா ஏழிசை எஸ்டேட் இருந்தது.. அதை அப்படியே பெரியண்ணனுக்குக் கொடுத்துட்டு பெயருக்கு யாழிசை எஸ்டேட்டுன்னு ஒன்றை ஆரம்பிச்சு, இத்தனூண்டு தேயிலைத் தோட்டத்துடன் சின்ன அண்ணனுக்குக் கொடுத்தாங்க.. அண்ணன் கேள்வியே கேட்காம வாங்கிக்கிட்டு அதை பெரிய எஸ்டேட்டா மாத்திக் காட்டினாரு.. கூடவே தேயிலை எக்ஸ்போர்ட், சாக்லேட் பேக்டரின்னு நிறைய பிஸினெஸ்ஸை ஆரம்பிச்சார்.. இவங்களுக்குத் தாங்கலை.. அத்தனையும் இவங்களுக்கே வேனும்னு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.."
"இது அநியாயம் இல்லையா..?"
"இவங்களுக்கு இதுதான் நியாயம்.."
அனுபமா அங்கே நிற்பதைக் கண்டு கொள்ளாமல் அவர்கள் இருவரும் உரையாடியதில் வெறியேறிய அனுபமா.
"அதிகமாக விளையாடுகிறாய் ரூபிணி.. ஒருநாள் இது அத்தனைக்கும் விலை கொடுக்கப் போகிறாய்.. இந்த கானாடுகிரி அரண்மனையில் நான் வைத்ததுதான் சட்டம்.. இங்கே உறவு கொண்டாடிக் கொண்டு வர வேண்டும்ன்னா என் தயவு உனக்கு வேண்டும்.." என்று அலறினாள்..
"அடங்கறிங்களா அண்ணி.. கனவு காணாதீங்க.. எனக்கு இரண்டு அண்ணன்கள்.. என்னவோ பெரிய அண்ணன் மட்டும்தான் இந்த அரண்மனைக்கு வாரிசு என்கிறதைப் போலக் கத்தறிங்க.. சின்ன அண்ணனும் இருக்கிறார்.. மறந்து விடாதீங்க.. பெரிய அண்ணனுக்கு நீங்கதான் உயிர்.. ஓகே.. பட், சின்ன அண்ணனுக்கு நான் தான் உயிர்.. அவருக்கு மட்டுமில்லை.. என் அப்பா, அம்மாவுக்கும் அப்படித்தான்.. பெரிய அண்ணன் என் அம்மாவின் அண்ணன் மகளான உங்களை மேரேஜ் பண்ணியிருக்கிறதாலே அம்மா உங்களுக்குச் சப்போர்ட் பண்ணலாம்.. பெரிய அண்ணனின் பக்கம் பாரபட்சம் பார்த்து நியாயமில்லாமல் நிற்கலாம்.. அண்ணன் மகளுக்கே அவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறவங்க, சொந்த மகளுக்கு எவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுப்பாங்க என்பதை யோசித்துப் பேசுங்க.."
ரூபணி நினைவுறுத்தியதில் அனுபமாவின் முகம் பயங்கரமாகக் கோணியது..
"யார், யாரை மிரட்டுவது..? நீங்களா, நானான்னு வந்தா பெரிய அண்ணன் மட்டும்தான் உங்க பக்கம் நிற்பார்.. மத்தபடி மொத்த ஃபேமிலியும், உங்க குட்டி பையன் ராமநாதன் உட்பட என் பக்கம்தான் நிற்பாங்க.. நான் கண்னைக் கசக்கி உங்க பக்கம் கை காட்டினேன்னா, அம்மா உங்களை அண்ணன் மகள்ன்னும் பார்க்காம தள்ளி வைத்துருவாங்க.. நினைவிருக்கட்டும்.. உங்களுக்கு பிறந்த வீட்டு சொந்தமும், புகுந்த வீட்டில் மரியாதையும் கிடைக்கனும்னா, நான் உங்க மேல கம்ப்ளெயிண்ட் பண்ணிக் கண்னைக் கசக்காம இருக்கனும்.. பார்த்துப் பேசுங்க.."
அங்கே அண்ணி, நாத்தனாருக்கு இடையில் அனல் பறக்கும் யுத்தம் மூண்டது.. மீனாவுக்கு சங்கடமாக இருந்தது..
"நான் கீழே போகிறேன் ரூபிணி.. என் ஃபேமிலியில லோன்லியா ஃபீல் பண்ணுவாங்க.." என்று சாக்குச் சொல்லிக் கிளம்பிவிட்டாள்..
அவள் அறையை விட்டு வெளியேறி மாடி ஹாலுக்கு வந்திருக்க மாட்டாள்..
"நில்.." என்ற சத்தத்துடன் அங்கே உக்கிரமாக வந்து நின்றான் ரங்கநாதன்..
"எங்கே வந்தாய்..?" அவன் சீற..
"என் வீட்டு பங்சனை அட்டெண்ட் பண்ண வந்திருக்கிறாள் அண்ணா.." என்று கூறியபடி பக்கவாட்டு அறையிலிருந்து வெளியே வந்தான் விஷ்வா..
'வந்து விட்டான்..'
காக்கும் ரட்சகனைப் பார்ப்பதைப் பேலக் கண்ணிர் மல்க அவனைப் பார்த்தக் காதலியைப் பார்த்த விஷ்வாவுக்கு கோபம் தலைக்கேறியது..
"நீ போ மீனா.."
அவன் உத்தரவிட்டதும் ரங்கநாதனை ஏறெடுத்தும் பார்க்காமல் விரைந்து விட்டாள் மீனா..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -45
பொதிகையிலே பூத்தவளே -45
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/pothikaiyilepooththavale-45.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/pothikaiyilepooththavale-45.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy