பொதிகையிலே பூத்தவளே -44

44 சேலை மடிப்பை நீவி விட்டு நிமிர்ந்த மீனா கண்ணாடியில் தெரிந்த அவளது உருவத்தின் பேரழகில் அயர்ந்து போனாள்.. இது அவள்தானா என்று அவளுக்க...


44

சேலை மடிப்பை நீவி விட்டு நிமிர்ந்த மீனா கண்ணாடியில் தெரிந்த அவளது உருவத்தின் பேரழகில் அயர்ந்து போனாள்.. இது அவள்தானா என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது.. அப்படியொரு ஒளிர் விடும் அழகுடன் பிரகாசித்தாள்.. அவளைத் தள்ளி விட்டுக் கண்ணாடியின் முன் நின்று தன்னை அழகுபார்த்த மோகனா..
"உனக்கு கண்ணாடி பார்க்கனும்னு அவசியமே இல்லைக்கா.. கந்தல கோலமா டிரஸ் பண்ணிக்கிட்டாலும், மேக்கப்பே போடலைன்னாலும் நீ தேவதையைப் போல அழகாத்தான் இருக்க.. என்னைச் சொல்லு.. நான் எப்படித்தான் மேக்கப் போட்டாலும் ஏதோ இடிக்குது.." என்று பொறாமைப்பட்டாள்..
மீனாவைப் பெற்றெடுத்த அன்னையான வசந்தா பேரழகோடு இருப்பாள்.. மஞ்சள் அரைத்துப் பூசியதைப் போன்ற நிறம்.. அவள் பெற்ற ஆனந்தனும், மீனாம்பிகையும் அன்னையின் அழகை வரமாய் வாங்கிப் பிறந்தவர்கள்.. மோகனா புனிதாவின் ஜாடையில் இருப்பாள்.. புனிதா மாநிறத்திற்கும் சற்றுக் கூடுதலான நிறம்.. லட்சணமாக குடும்பக் களையுடன் இருப்பாள்.. அவளது சாயலில் இருக்கும் மோகனா அழகுதான்.. மீனாவைப் போல அயர வைக்கம் அழகில்லை.. அவ்வளவுதான்..
"உனக்கென்னடி குறைச்சல்.. நீ புள்ளி மானாச்சே.." தங்கையை அணைத்துக் கொண்டாள் மீனா..
"நான் புள்ளி மான்.. நீ தேவ கன்னிகை..!"
"ஹை..! என் மோகனாக்குட்டி கவித சொல்றா.."
"உன்னப் பாத்தாக் கல்கூட கவித சொல்லும்.."
"பெரிய பேச்செல்லாம் பேசாதேடி.. என்னவோ ஹில் ஸ்டேசனில குடியிருக்கிறதில நிறம் கொஞ்சம் கூடியிருக்கு சீனியர் மேனேஜர்ன்னு பந்தாவா டிரஸ் பண்ணிக்கிறதில அழகா இருக்கிறதைப் போல தெரியுது.."
"நினைச்சுக்கிட்டு இரு.. மதுரையில ஒழுங்கா தலைகூட வாராம நீ வேலைக்கு ஓடுவ பாரு.. அப்பவும் இதே அழகோடதான் இருந்த.. இரண்டு பஸ் மாறி, தலைவிரி கோலமா, சேலை கலங்கி வந்தப்பவும் நீ தேவதைதான்.."
'அப்படியா..?' மீனாவுக்குத் திகைப்பாக இருந்தது..
அவளெங்கே இதையெல்லாம் கண்டாள்..? நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு கண்ணாடி பார்க்கக் கூட நேரமிருந்ததில்லையே.. கண்ணாடி பார்க்க வேண்டும் என்ற நினைவும் ஆர்வமும் இருந்ததே இல்லையே..
"அக்காவும் தங்கையும் இன்னுமா கிளம்பலை.. அப்பாவும் நானும் அப்போதே ரெடியாகிட்டோம்.. லிங்கம் வந்தாச்சு.. இந்தா இருக்கிற அரண்மனைக்கு நாலு எட்டு வைச்சா நடந்தே போயிரலாம்.. லிங்கம் அப்படிப் போகக்கூடாதுன்னு சொல்றாப்புல.. அது அரண்மனையாம்.. அங்க நடந்து போனா அவங்களுக்கு கௌரவக் குறைச்சலா இருக்குமாம்.." மூச்சு விடாமல் பேசியபடி வந்த புனிதா பதட்டமாக இருந்தாள்..
அவள் மட்டுமா பதட்டத்தில் இருந்தாள்..? மீனாவும் நடுக்கத்துடன்தான் இருந்தாள்.. கானாடுகிரிக்கு வந்து ஒரு வருடமாகப் போகிறது.. அவர்கள் வசித்த குவார்ட்டர்ஸின் அருகில்தான் விஷ்வாவின் அரண்மனை இருந்தது.. இதுவரை அங்கே போனதில்லை.. போவதற்கான தேவையும் ஏற்பட்டதில்லை.. இப்போது போக வேண்டிய சூழல்.. ரூபிணியே நேரில் வந்து அழைத்து விட்டுப் போயிருக்கிறாள்.. புனிதாவின் கை பிடித்து அழைப்பு விடுத்திருக்கிறாள்..
"ஆண்ட்டி.. என்னுடைய மேரேஜ் எங்கேஜ்மெண்ட் நடக்கப் போகுது.. அந்த பங்சனுக்கு நீங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்து கலந்துக்கனும்.." என்ற கோரிக்கை விடுத்த போது மறுக்க வேண்டும் என்ற எண்ணம்கூட வர மறுத்ததே..
"அதற்கென்னம்மா.." என்று தலையாட்டத்தான் முடிந்தது..
ரூபிணியை அவ்வளவு பக்கத்தில் பார்த்த போது நடப்பது கனவா இல்லை நனவா என்று பிரமிப்பாக இருந்தது..
"சின்ன அண்ணா ஃபாரின் கிளம்புவதற்குள் எங்கேஜ்மெண்டை நடத்தி விடவேண்டுமாம்.." ரூபிணி அவர்களுடன் எல்லாம் வெகு நாள்களாகப் பேசிப் பழகியவளைப் போல இயல்பாக முறுவலித்த போது பதிலுக்குப் பாந்தமாகப் பேசிப்பழகவேண்டும் என்று
தானே தோன்றியது.. அவள் அரண்மனையின் இளவரசி..! தள்ளி நிற்க வேண்டும் என்று தோன்றவில்லையே..
முதல் நாள்தான் பள்ளி, மருத்துவமனையின் திறப்புவிழா நடந்து முடிந்திருந்தது.. மறுவாரம் வெளிநாட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்று விஷ்வா சொல்லியிருந்தான்.. வீட்டிற்கு வந்தால் ரூபிணி நிச்சயதார்த்த விழாவுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து வந்து நின்றாள்.. மீனா அவளைக் கோவிலில் பார்த்திருக்கிறாள்.. அப்போது ரூபிணி காட்டிய சிநேகித முகபாவம் அவளது அழைப்பை ஏற்கச் சொன்னது.. அத்துடன் அவள் விஷ்வாவின் உடன்பிறந்த தங்கை என்ற நேசம்.. அடித்துப் போட்டதைப் போல உடல் வலித்து ஓய்வுக்காக கெஞ்சிய போதும் அதைப் பொருட்படுத்தாமல் மீனா கிளம்பி விட்டாள்..
புனிதா பட்டுப்புடவை நகைகள் என்று வெகு பாந்தமான தோற்றத்தில் அழகாக இருந்தாள்.. மூர்த்தி பட்டு வேட்டி, சட்டையில் பெரிய மனிதத் தோரணையுடன் இருந்தார்.. மோகனா ஜரிகைகள் இழையோடிய தாக்ரா - கோளி உடையில் அட்டகாசமாக இருந்தாள்.. மீனா தேவதையின் பொழிவோடு இருந்தாள்..
அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்த போது அங்கிருந்த விருந்தினர்கள் யாரும் வேற்றுமையாகப் பார்க்கவே இல்லை.. விருந்தினர்களுன் இவர்கள் பொருந்தித்தான் தெரிந்தார்கள்.. அதில் அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள் புனிதா.. அவளது படபடப்பு கொஞ்சம் குறைந்தது..
 "அக்கா.. இந்த அரண்மனைக்குள் வந்து பார்த்து விடனும்னு ஒரு வருசமா கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்.. சான்ஸ் கிடைச்சதும் கப்புன்னு பிடித்துக்கிட்டு ஓடி வந்துட்டேன்.. நான் நினைச்சிருந்ததை விட சூப்பரா அரண்மனை இருக்கு.. வாவ்.. மைசூர் அரண்மனை போல இருக்கில்ல..?"
மோகனாவின் ஆவலான கேள்விக்கு ஒப்புக்குத் தலையை ஆட்டினாள் மீனா.. அவளது விழிகள் அரண்மனையின் அழகை ரசிக்கவில்லை.. சற்றுத் தள்ளி நின்று விருந்தினர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்த விஷ்வாவின் அழகை விழுங்கிக் கொண்டிருந்தன.. அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளைத் தின்று விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்.. விருந்தினரிடம் அளவளாவி முடிந்த பின்னால் அவர்களிடம் வந்தவன் மூர்த்தியையும் புனிதாவையும் வரவேற்று மோகனாவிடம் விளையாட்டாகப் பேசினான்..
"வாங்க ஆண்ட்டி, வாங்க சார்.. என்ன மோகனா.. எங்க வீடு எப்படியிருக்கு..?"
"இது வீடா..? போங்க சார்.."
"எங்கே போகச் சொல்கிற..? ஃபாரினுக்கா..? அதுக்கு இன்னும் ஒன் வீக் இருக்கே.. இப்பவே கிளம்பினா அடிக்க வந்துருவாங்க.."
விஷ்வாவின் பார்வை மீனாவை அர்த்தத்துடன் பார்த்தது.. ஆமாம், அடித்து விடுவேன் என்ற பாவனையுடன் அவள் விஷ்வாவை முறைத்தாள்.. அவனது விழிகள் மின்னின.. உரிமையான அவளது கோபத்தை அவன் ரசித்தான்..
"இது அரண்மனையாச்சே சார்.. இங்க நான் கெஸ்ட்டா வந்திருக்கேன்னு என்னால நம்பவே முடியலை சார்.."
"கெஸ்ட்டா..? யு ஆர் அவர் ரிலேட்டிவ் மோகனா.."
விஷ்வாவின் விழிகள் அவள் எந்த வகையில் உறவினள் என்பதை மீனாவிடம் சொல்லின.. அவள் உதட்டைக் கடித்தாள்.. அவன் அவளுக்கு மட்டும் கேட்கும்படி சன்னமாக முணுமுணுத்தான்..
"மயக்கறடி.. நேற்றும் பங்சன்தானே.. இப்படி கிராண்ட்டா வந்திருக்கலாமே..?"
"அங்கே நான் சீனியர் மேனேஜர்.."
"இங்கே என் பெண்டாட்டியா..?"
சட்டென்று அவன் கேட்டு விட்டதில் மீனாவுக்கு மயக்கம் வந்தது.. ஒரு நொடி அவனது மனைவியாக அந்த அரண்மனையில் நிற்பதைப் போலக் கற்பனை செய்து பார்த்தாள்.. இனித்தது.. அவனை ஒட்டி நிற்க வேண்டும் போல ஆசையாசையாக இருந்தது..
"ரூபிணியம்மா சீனியர் மேனேஜரம்மாவை அவங்க ரூமுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க.." வேலை செய்யும் பெண்ணொருத்தி வந்து நின்றாள்..
"ஹலோ.. விஷ்வா.." விஷ்வாவின் உறவினர்களில் ஒருவர் அழைத்தார்..
விஷ்வாவும் மீனாவும் எதிரெதிராகப் பிரிந்து நடந்தார்கள்.. மீனா மாடிப்படிகளில் ஏறிய வேலைக்காரப் பெண்ணைப் பின் தொடர்ந்தாள்.. மாடியின் பிரம்மாண்டம் அவளை அச்சுறுத்தியது.. அவளுக்கும் விஷ்வாவுக்கும் இடையில் இருக்கும் அந்தஸ்து வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையில் இருக்கும் அகன்ற அகழியைப் போல மருட்டியது..
ரூபிணியின் அறை தனித்த ஒரு மாளிகையைப் போல இருந்தது.. வரவேற்பறை, மினி தியேட்டர், படிக்கும் அறை, வீணை மீட்டும் அறை, பால்கனி, உடை மாற்றும் அறை, படுக்கையறை என்று அடுத்தடுத்து பல அறைகளுடன் கூடிய பெரிய அறையும் இருக்கக் கூடும் என்பதை அன்றுதான் கண்டாள் மீனா.. விஷ்வாவின் அறையும் இப்படித்தானே இருக்கும் என்ற நினைவு வேறு மனதின் ஓரமாக வந்து தொலைத்தது..
"வாங்க.. வாங்க.."
ரூபிணி எழுந்து வந்து மீனாவை தோளோடு அணைத்து வரவேற்று சோபாவில் உட்கார வைத்துப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. அவள் காட்டிய அன்பில் கரைந்து போனாள் மீனா.
"உங்களுடன் உட்கார்ந்து பேசனும்னு ரொம்பநாளா நினைத்துக்கிட்டு இருந்தேன்.. இப்போதுதான் அதற்கான டைம் வந்திருக்குது.." வரிசைப் பற்கள் தெரிய சிரித்தாள் ரூபிணி..
அப்படியா என்பதைப் போலப் பதிலுக்குச் சிரித்தாள் மீனா..
"கலக்கறிங்க போங்க.. கானாடுகிரி முழுதும் உங்களைப் பத்தின பேச்சுத்தான்.. எங்க அரண்மனை டைனிங் ஹாலில ஃபுட் அயிட்டங்களோட நீங்களும் அரை படாத நாளே இல்லைன்னா பார்த்துக்கங்க.." ரூபிணி கண் சிமிட்டினாள்..
தினமும் அவளைப்பற்றிய பேச்சு விஷ்வாவின் வீட்டில் எழுந்திருக்கிறது என்பதில் மீனா சங்கடம் கொண்டாள்..
"அதில பாருங்க.. இந்த அரண்மனையிலே நாங்க எல்லோரும் தனித்தனியா இருக்கிறதைப் போல இருக்கும்.. சாப்பிடும் போது மட்டும் சேர்ந்து சாப்பிடனும்னு எங்க கொள்ளுத்தாத்தாவுக்கு கொள்ளுத் தாத்தா காலத்தில இருந்து சொல்லி வைத்திருக்காங்களாம்.. அப்போதுதான் ஃபேமிலி மெம்பர்ஸிக்கு ஒருத்தரை யொருத்தர் அடையாளம் தெரியும்ன்னு நினைத்தாங்களோ என்னவோ.. ஸோ, டைனிங் ஹாலில நாங்க மீட் பண்ணிக்குவோம்.. பேச வேண்டிய பேச்சுக்களைப் பேசித் தள்ளுவோம்.."
ஆக.. அந்த வருடம் முழுதும் அரண்மனையின் பேசு பொருளாக மீனா இருநதிருக்கிறாள் என்பதில் மீனாவுக்கு என்னவோ போல இருந்தது.. உதட்டைக் கடித்தவள்..
"நான் சாதாரண மனுஷி.. என்னைப் பத்திப்பேச என்ன இருக்கு..?" என்று கேட்டாள்..
"ஆர்டினரி பெர்சனா..? நீங்களா..? சுனாமி மாதிரி நிறையபேரை அரட்டிக்கிட்டு இருக்கறீங்க.. அது தெரியாம ஆர்டினரி பெர்சன்னு அமைதியாச் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.."
"நான், என்னுடைய வேலையைப் பார்க்கிறேன்.. தட்ஸ் ஆல்.."
"இதுக்கு முன்னாலே வந்தவங்களில யாருங்க உங்களை மாதிரி வேலையைப் பார்த்தாங்க.. வெட்டித் தண்டமா இருந்தாங்க.."
"ஐ டோன்ட் நோ.. என்னைப் பொறுத்தவரை வாங்குகிற சம்பளத்துக்குப் பார்க்க வேண்டிய வேலையை நேர்மையாப் பார்க்கனும்.. இதில் பாராட்ட என்ன இருக்கு..?"
"நிறைய இருக்கு.. பொலிட்டிஷியனெல்லாம் தோற்றுப் போகனும்.. அந்த அளவுக்கு இங்கே ஃபேமிலி பாலிடிக்ஸ் இருக்கு.. உங்களுக்கு அது தெரியாது.."
"தெரிந்து என்ன செய்யப்போகிறேன்..? எப்போதும் போல, நான் பார்க்க வேண்டிய வேலையை நேர்மையாகப் பார்க்கப் போகிறேன்.."
"இது.. இது.. இது.. இதுதான் நிறையப் பேருக்கு இன்ஸ்பிரேசனா இருக்கது.. சிலருக்கு இம்சையா இருக்கு.."
ரூபிணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
"யாருக்கு, என்ன இம்சையா இருக்கு ரூபிணி..?" என்று தேனினும் இனிய குரலில் கேட்டபடி அங்கே பிரவேசித்தாள் அனுபமா..
அவள் எப்போது வந்தாள் என்று மீனாவுக்கு சம்சயமாக இருந்தது.. நிச்சயம் அவள் ரூபிணி பேசிய பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்.. கடுகடுவென முகம் இருந்தது.. துச்சமாக அவள் பார்த்த பார்வையில் துவண்டு போனாள் மீனா.. எப்படி இவங்களால் இப்படியொரு பார்வையை பார்க்க முடிகிறது..? என் கால் தூசிக்குக்கூட நீ இணையாக மாட்டாய் என்று கூறும் கர்வப் பார்வை..
"இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ சபைக்கு வந்தாகனும் ரூபிணி.. இப்போது போய் யார் யாருடனோ பேசிக்கிட்டு இருக்கிற.." அனுபமா கடிந்து கொண்டதில் மீனாவுக்கு சங்கடம் வந்தது..
அவளா ரூபிணியைத் தேடி வந்தாள்..? ரூபிணிதானே மீனாவை வரச் சொன்னாள்..?
"இவங்க யாரோ இல்லை அண்ணி.."
ரூபிணி அழுத்தமாகச் சொன்ன விதத்தில் அனுபமாவின் முகம் பயங்கரமாக மாறியது.. கோபத்தில் அவளது முகம் போன போக்கில் மீனாவுக்கு அங்கேயிருந்து ஓடிவிட வேண்டும் போல ஆகிவிட்டது..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -44
பொதிகையிலே பூத்தவளே -44
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/pothikaiyilepooththavale-44.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/pothikaiyilepooththavale-44.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy