பொதிகையிலே பூத்தவளே -43

43 " கிரி தினமும் அந்தக் குடிசைக்குப் போய் வருவான்.." மீனாவை ஆதரவாக அணைத்திருந்த விஷ்வா சொன்னான்.. மீனா அவன் மார்பில் புத...


43

"கிரி தினமும் அந்தக் குடிசைக்குப் போய் வருவான்.."
மீனாவை ஆதரவாக அணைத்திருந்த விஷ்வா சொன்னான்.. மீனா அவன் மார்பில் புதைந்திருந்தாள்.. அவளது பாசத்துக்குரிய தமையனான கிரியின் வாழ்வில் இப்படியொரு சோகம் இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. தன் மக்களின் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் அந்த மாவீரனின் மனதில் இப்படியொரு ரணமா..?
மீனாவின் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்து நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.. விஷ்வா அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு முதுகில் தட்டிக் கொடுத்தான்.. மீனாவின் மென்மையான மனதைப் பற்றி அவனுக்குத் தெரியுமே..
"அவள் பெயர் வனமலர்.. கிரியும் அவளும் லவ்வர்ஸ்.. அவங்களைச் சேர்ந்து பார்க்க அவ்வளவு நன்றாக இருக்கும்.. மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணியது நான்தான்.."
"அந்தப் பெண் அழகா இருக்கா.."
"இருந்தான்னு சொல்லு.. இப்ப அவ இல்லையே.."
'இல்லையா..?' மீனாவின் மனதில் குடிசையில் அவள் கண்ட போட்டோ அசைந்தாடியது..
'அந்த போட்டோவில் இருந்த பெண்ணின் விழிகளில் தெரிந்த உயிர்ப்பு.. அவளுடைய உதடுகளில் தெரிந்த சிரிப்பு.. உயிருள்ள பெண் ஏதோ சொல்லத் துடிப்பதைப் போல் இருந்ததே..' மீனாவின் உடல் நடுங்கியது..
"அவ இல்லைன்னு சொல்ல மனம் வரலை.. இருந்தான்னு சொல்ல முடியல.. இருக்கான்னுதான் சொல்ல வருது.."
"கிரியைப் போலவே பேசற.. கிரியும் இப்படித்தான் சொல்றான்.. வனமலர் இருக்கிறாள்ன்னு சொல்கிறான்.. அந்தக் குடிசையில் அவனுடன் அவள் பேச வருவாள்ன்னு பிதற்றுவான்.."
"என்ன சொல்கிறீங்க..?"
மீனாவின் நடுக்கம் அதிகமானது.. அது பிதற்றல் இல்லையென்று அவளுக்கு சர்வ நிச்சயமாகத் தோன்றியது.. அந்தக் குடிசையில் வனமலர் இருந்திருக்க வேண்டும்.. அவளும் விஷ்வாவும் எவ்வித நினைவுமின்றி கலக்க முற்பட்டபோது அதைத் தடுக்கும் விதத்தில் போட்டோவை விழ வைத்திருக்க வேண்டும்..
"நீ ஏன் பயப்படற..? அது அவனுடைய கற்பனை.. அப்படியாவது அவனுக்கு ஆறுதல் கிடைக்கட்டுமேன்னு நான் மறுத்துப் பேச மாட்டேன்.. கிரி தினமும் அந்தக் குடிசைக்கப் போய் விடுவான்.. அவன் பாவம் மீனா.. வனமலர்மேல் உயிராய் இருந்தான்.."
"இருக்கிறார்ன்னு சொல்லுங்க.."
மீனா பிழைதிருத்தம் சொன்னாள்.. ஏனோ, கிரி வனமலருடன் தினமும் பேசுவதாகச் சொல்கிறான் என்பதைக் கேட்டதும் அவளது கண்ணீர் நின்று விட்டது.. அவளது கண்ணீரில் விஷ்வாவின் சட்டை நனைந்து விட்டதில் சங்கடப்பட்டவள் அவளது சேலை முந்தானையால் அவனது சட்டையைத் துடைத்து விட்டாள்..
"விடுடி.."
விஷ்வா அவளது சேலை முந்தானையைப் பறித்து அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு அவளை சுண்டியிழுத்தான்.. அவன்மீது விழுந்த மீனாவுக்கு அவளது சேலை முந்தானையை அவன் உரிமையுடன் கழுத்தில் சுற்றியிருந்தது உவப்பானதாக இருந்தது.. ஒரு பெண்ணின் விருப்பத்துடனும், அனுமதியுடனும் அவளது சேலை முந்தானையைப் பற்றித் தன் தோள்மீது போட்டுக் கொள்பவன் அந்தப் பெண்ணின் உடலுக்கும் மனதுக்கும் உரிமையானவன் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான் அல்லவா.. அவ்விதம் அவன் தன்னை அவளுடையவனாக அடையாளப் படுத்திக் கொண்டதில் அவள் எல்லையற்ற சந்தோசம் அடைந்தாள்..
இந்த உணர்வு அவளுக்குப் புதிது.. அவளும் ஒரு ஆண்மகனிடம் மயங்குவாள், அவன்தான் தனக்கு எல்லாமும் என்று மாறுவாள் என்று நினைத்தும் பார்த்ததில்லையே.. குடும்பத்தைத் தவிர மீனாவின் மனதில் எந்த நினைவும் இருந்ததில்லை.. அனைத்தையும் தாண்டி அவன் அவள் மனதில் எப்படிக் குடியேறினான்..? எப்போது குடியேறினான்..? எவ்விதம் அவள் மனதை மாற்றினான்..?
"ரொம்பவும் யோசிக்காதேடி.." அவளது காதோரம் கிசுகிசுத்தான் விஷ்வா.. அவனது மீசையின் ரோமங்கள் அவளது செவிமடல்களில் உராய்ந்ததில் எழுந்த இன்பமான உணர்வில் மீனா கண்மூடிக் கிறங்கினாள்..
"மீனாட்சி விஷ்வநாதனிடம் மயங்கித்தான் ஆகணும்டி.." கர்வத்துடன் அவன் நகைத்த நகைப்பில் அவளுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது.. அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்..
அவளது வெட்கத்தை விரும்பி ரசித்தான் விஷ்வா.. அவளது பெண்மைமிக்க நாணம் அவனை ஈர்த்தது.. குளிர்காற்று அவர்கள் அணிந்திருந்த ஸ்வெட்டர்களையும் தாண்டி ஊசிகளாய் உடல்களைத் துளைத்தது.. விஷ்வாவின் உடல் தந்த கணகணப்பு மீனாவுக்கு இதமானதாக இருந்தது..
கடல்மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் அமைந்திருந்த டால்பின் நோஸ் எனப்படும் மலை முகட்டில் அவர்கள் நின்றிருந்தார்கள்.. விஷ்வாவின் ஜீப் தள்ளி நிற்க.. மலையுச்சியில் அவனது அணைப்பில் அடங்கிக் கீழே தெரியும் கிடுகிடு பள்ளத்தாக்கை அச்சத்துடன் பார்ப்பதுதான் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது..
டால்பின் நோஸ் என்று பெயரிடப்பட்ட பெரும் பாறையில் அவள் நிற்கிறாள் என்பதே பிரமிப்பாக இருந்தது.. பாறையின் கீழ் பசும்புல்வெளி.. அவளது கண்களுக்குப் புலப்பட்ட ஊசி போன்ற வளைவு திருப்பங்களும், நாசியை வருடும் தேயிலை மணம் நிரம்பிய குளிர் காற்றும், பசுமை நிரம்பிய மலைச்சாலைகளும் அவளை வியப்பில் ஆழ்த்தியது.. அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது தெரிந்த இயற்கையின் அற்புதக் காட்சிகளில் அவள் திகைத்தாள்..
டால்பினின் மூக்குப் போல நீண்டிருந்த அந்த இடம்  செந்நிற மணல் பகுதியைப் போன்ற தோற்றத்துடன் சமதளமாக இருந்தது.. இருள் சூழ ஆரம்பித்திருந்த அந்த பின் மாலைப் பொழுதில் அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை அழகான ஓர் தனிமை அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்திருந்தது.. அரணாக நின்ற தனிமையின் அரவணைப்பில் அவர்கள் இருவரும் அட்டையைப் போல ஒட்டிக் கொண்டார்கள்..
பாறையின் முனையில் நின்ற மீனாவின் பின்பக்கம் நின்று, அவளது கைகளை விரிய வைத்து, அவளது கைகளின் மீதுத் தன் கைகளைப் படியவிட்டு, அவளது உச்சந்தலையில் முகம் பதித்தான் விஷ்வா..
டால்பின் நோஸின் முனையில் நிற்பதைப் போல இல்லாமல் டைட்டானிக் கப்பலின் முனையில் நிற்பதைப் போல உணர்ந்தாள் மீனா.. அங்கிருந்து பார்த்தால் நீலக்கடல் தெரியவில்லை.. பசுமை நிரம்பிய மலைகளின் முகடுகள் தெரிந்தன.. கண்ணெதிரே தெரிந்த கேத்தரின் நீர்வீழ்ச்சிகளின் அழகில் தன் மனதைத் தொலைத்தாள் மீனாம்பிகை...
அங்கே அவள் விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் வந்திருக்கிறாள்.. உள்ளங்கைகளை கன்னத்தில் பதித்து உலக அழகி பட்டம் வாங்கியவளைப் போலப் பிரமிப்பு காட்டிய மோகனாவின் சந்தோசத்தில் சந்தோசப்பட்டிருக்கிறாள்.. ஆனால் இதுபோன்ற
ஓர் நூதனமான குதூகலத்தை அப்போது அவள் உணரவில்லை..
விஷ்வாவும் அவளுமாக தனித்து நின்று பார்த்தபோது கிடைக்கும் சந்தோசமே தனிவிதமாக இருந்தது.. எதிரில் கேத்தரின் அருவி பசும்மலையுச்சியிலிருந்து வெள்ளி ரிப்பனாக கொட்டிக் கொண்டிருந்தது.. செந்நிறப் பாறையின் மீது நின்று பசும் மலையைக் காண்பதென்பது இயற்கையின் அதிசயம்.. அந்த அதிசயத்தில் மூழ்கிப் போனாள் மீனா..
அங்கிருந்து பார்த்தாள் மேட்டுப்பாளையம் தெரிந்தது.. டால்பின் நோஸ் என்று அழைக்கப்பட்ட அம்மலையின் இருபக்கமும் தெரிந்த பசும்பள்ளத் தாக்குகள் பயத்தையும், பரவசத்தையும் இணை பிரிக்காமல் சேர்த்து தந்ததில் விஷ்வாவின் இடுப்பைச் சுற்றிக் கைகளைப் பிணைத்துக் கட்டிக் கொண்டாள் மீனா..
"ஆஹா.." என்றான் விஷ்வா..
"என்னவாம்.." சிணுங்கினாள் மீனா..
"இனி உன்னோடு தனியாப் பேச மலையுச்சிகளைத் தேடிக் கூப்பிட்டுக்கிட்டுப் போவது பெட்டரான ஐடியாவா இருக்கும் போல இருக்கே.. பெபிகால் போட்டதைப் போல அப்பிக்கற.. ஐ லைக் இட்.. ஹௌ நைஸ், ஹௌ நைஸ்.." அவன் கண்களைச் செருகி உண்மையிலேயே கிறங்க.. மீனா வெட்கத்துடன் அவன் மார்பில் குத்தினாள்..
"இருக்கும் இருக்கும்.."
"உனக்கு இல்லையா..?"
அவளது முகம் நிமிர்த்தி அவன் கண்சிமிட்டியதில் சொக்கிப் போன மீனா.. உணர்வுகளின் வேகத்தில் அடித்துச் செல்லப் பட்டாள்.. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் உதடுகளைக் கடித்து அவன் மார்பில் சாய்ந்தாள்..
ஆலமரத்தில் படர்ந்திருக்கும் கொடி போல அவன்மீது படர்ந்து நின்றவளை இறுக்கி அவளது உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தான் விஷ்வா.. மீனாவின் உடல் முழுதும் வடவெடத்து நடுநடுங்கியது நிச்சயமாக குளிரினால் அல்ல..
"மீனா.."
தளாமுடியாத தாபத்துடன் அவன் கிசுகிசுப்பாக அழைத்த நொடியில் கரைந்து போனாள் மீனா.. அவளது உடலெங்கும் பரவிய பரபரப்பு அவளை ஏதோ செய்து உருக்குலைத்து ஓடும் நதியாக மாற்றித் தொலைத்தது.. அவளது உணர்வுகளும், உடலும் அவளது கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுத்தன.. அவன்தான் கட்டுக்களை உடைப்பதில் வல்லவனாக இருந்தானே..
கோத்தகிரிப் பகுதியில் விழும் கேத்தரின் நீர்வீழ்ச்சி டால்பின் நோஸ் பாறைக்குப் பக்கத்தில் வீழ்வதைப் போலத் தெரிந்ததில் மீனா கண்களை அகல விழித்து ஆச்சரியத்துடன் பார்த்தாள்.. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெண்பஞ்சு மேகங்கள் வந்து மண்டி மலைமுகடுகளை மூடின.. இப்போது டால்பின் நோஸ் முனையைச் சுற்றி இயற்கைக் காட்சிகள் தெரியவில்லை.. பஞ்சுப் பொதியினைப் போன்ற வெண் பஞ்சு மேகங்கள்தான் தெரிந்தன.. அதில் குதித்து மிதந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தாள் மீனா.. விஷ்வாவிடம் அதைச் சொன்னபோது..
"ஃபூலிஷ்தனமாப் பேசுவியா..?" என்று அதட்டினான்..
நேரமாகி விட்டதால் வீடு திரும்பினார்கள்.. விஷ்வாவின் அருகே அமர்ந்து அவன் தோள் சாய்ந்து பயணித்தபோது மீனா மதுரையை மறந்தாள்.. குடும்பத்தை மறந்தாள்..
"மீனா.."
"ம்ம்ம்.."
"நெக்ஸ்ட் வீக் நான் ஃபாரினுக்குக் கிளம்பியாகனும்.."
மயக்கத்தில் அமிழ்ந்திருந்தவள் சுய உணர்வு வரப் பெற்றவளாக விலகி அமர்ந்து மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்..
விஷ்வாவுக்கு அவளை அப்படிப் பார்க்க வருத்தமாக இருந்தது.. அவளது மிரண்ட பார்வையை அவனால் எதிர் கொள்ள முடியவில்லை..
"அப்படிப் பார்க்காதேடி.."
ஆறுதலாக அவளது தலையைக் கோதிவிட முனைந்தான்..
"வேண்டாம்.."
அவன் கைகளைத் தட்டி விட்டு விட்டு சீறினாள் மீனா..
"ஏய்ய்.. உனக்காகத்தான் கானாடுகிரியில் அதிக நாள் இருக்கிறேன்.. எனக்கு பிஸினெஸ் இங்கே மட்டும் இல்லை மீனா.. மற்ற பிஸினெஸ்களிலும் நான் கான்சென்ட்ரேட் பண்ணியாகனும்டி.. ரை டு அண்டர்ஸ்டான்ட் டூ மீனா.."
"இங்கே இருக்கிற உங்க பிஸினெஸ்ஸைப் பார்த்துக்க உங்களுக்கு நேர்மையான சீனியர் மேனேஜர் தேவைப்பட்டுச்சு.. அதனால மதுரையில இருந்தவளை கானாடுகிரிக்கு கொண்டு வந்துட்டு நீங்க உலகம் சுத்தக் கிளம்பறீக.."
"என் சுயநலத்துக்காகத்தான் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறேன்னு நீ சொல்வதில் துளிக்கூட உண்மையில்லைன்னு உன் மனதுக்கே தெரியும்.. உனக்கு மதுரையிலேயே 'விஷ்வரூபம்' மாலின் அஸிஸ்டெண்ட் மேனேராப் போஸ்டிங் கொடுத்து ஒரு லட்சம் சேலரி கொடுக்கிறதாகத்தான் பிளான் பண்ணியிருந்தேன்.. ஐ நோ ஆல்.. ஆறுமுகம் பெயருக்குத்தான் மேனேஜர்.. மற்றபடி ஃபுல் வொர்க்கையும் நீதான் பார்த்த.. மால் உருவானதில் முழுப் பங்களிப்பும் உன்னுடையதாகத்தான் இருந்ததுன்னு எனக்குத் தெரியும் மீனா.. உன் உழைப்புக்கான வேலையை உனக்குக் கொடுப்பதுதான் சரின்னு டிசைட் பண்ணியிருந்தேன்.. பட்.. உன் அப்பாவோட ஹெல்த் கண்டிசனினால நீ ஹில் ஸ்டேசனில் வேலை வேண்டும்ன்னு கேட்ட.. கானாடுகிரி மலைக்கு கொண்டு வந்தேன்.. இதில் என்னுடைய செல்பிஷ் என்ன இருக்கு..?"
அவளுக்கு அது தெரியாதா என்ன..? அவளை விட்டுப் பிரிந்து போக நினைக்கும் காதலனின் பிரிவுத் துயரைத் தாங்கமுடியாத வேகத்துடன் அவள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள்..
"எல்லாத்தையும் மூடி மறைக்க உங்களுக்குச் சொல்லியா தரனும்..?" குமுறினாள்..
"மூடி மறைக்கலேன்னா குளிர் உடலை சல்லடை போட்டுத் துளைச்சிரும்டி.." அவன் கண்சிமிட்டினான்..
மீனாவுக்குள் கன்னம் சிவந்து விட்டது.. அவன் ரசனையுடன் பார்த்த மேய்ச்சல் பார்வை லேசர் பார்வையாகி அவளை மேய்த்ததில் உடல் சூடானது..
"மூடி மறைக்காம இருந்தா நல்லாத்தான் இருக்கும்.."
அவன் விட்ட ஏக்கப் பெருமூச்சில் அவள் கோபத்தை மறந்து அவனை சராமாரியாக அடித்தாள்.. அவன் உரத்த சிரிப்புடன் அவள் தோள்மீது கைபோட அவன் தோளில் முகம் புதைத்தாள்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -43
பொதிகையிலே பூத்தவளே -43
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/pothikaiyilepooththavale-43.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/pothikaiyilepooththavale-43.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy