மழைச்சாரலாய் மனம் நனைத்தாய் -26

26 "எப்படி இருக்க... ?" ஆத்மா நலம் விசாரித்தான்.. சாருலதா உதடுகளைக் கடித்தபடி பார்வையை தழைத்துக் கொண்டாள்.. "பதில்...


26

"எப்படி இருக்க...?" ஆத்மா நலம் விசாரித்தான்..
சாருலதா உதடுகளைக் கடித்தபடி பார்வையை தழைத்துக் கொண்டாள்..
"பதில் சொல்ல மாட்டியா...? என்கூடப் பேசப் பிடிக்காம போயிருச்சுல்ல...? உயிருக்குயிராய் காதலிச்சுட்டு ஒரேநாளில் வெறுத்து விலகிர எப்புடிடீ உன்னால முடியுது...?"
அவன் கேள்வியில் சாருலதாவின் மனம் காயப்பட்டது. அவள் சோகத்துடன் அவனைப் பார்த்தாள்..
"உங்களாலே முடிகிறப்போ.. என்னால முடியாதா...?"
"என்னால எது முடிஞ்சது...?"
"நீங்க ஒருத்தியைக் காதலிச்சிருக்கீங்க..."
"ஊஹீம்.. அவ என் கிளாஸ்மேட்.. பிரண்ட்ஸாத்தான் பழகினோம்.. அவதான் என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னா.."
"நீங்க மாட்டேன்னு சொன்னீங்களா...?"
"அதைச் சொல்லாத குற்றத்துக்காக இப்ப என்னைத் தண்டிக்கிறயா...?"
"நான் யார் உங்களைத் தண்டிக்க...?"
"நீதாண்டி எனக்கு எல்லாமும்..."
"அன்றைக்கு அவதானே உங்களுக்கு எல்லாமுமா இருந்தா...?"
"சாரு..."
"உண்மையைச் சொன்னா உடம்பு எரியுதா...?"
"இல்லடி.. மனசு எரியுது.. தீயாய் காந்துது.. அது படிக்கிற வயசுடி.. தானா வந்து ஒரு பொண்ணு காதலைச் சொன்னா இளம் மனசில ஒரு கிக் வரத்தான் செய்யும்.. கூடப் படிக்கிறவங்க மத்தியிலே எனக்கும் ஒரு காதலியிருக்கான்னு காட்டிக்கிறதில ஒரு ஹெட்வெயிட் வரும்.. என் பிரண்ட்ஸ் வயிறெரிஞ்சானுக.. அந்த சந்தோசத்துக்காகவே அவகூட நான் சுத்தினேன்..மத்தபடி.. அவகிட்ட இருந்த எந்தக்குணம் எனக்குப் பிடிச்சதுன்னு கேட்டா எனக்குச் சொல்லத் தெரியாதுடி.. அவளுக்கு என்னென்ன ரசனைகள்ன்னு எனக்குத் தெரியாது.. எனக்கு என்னென்ன ரசனைகள்ன்னு அவளுக்குத் தெரியாது.. இருந்தும் நாங்க மத்தவங்க முன்னால ஜோடி போட்டுக்கிட்டு ஊரைச் சுத்தினோம்.. காலேஜ் டயத்தில அது ஒரு போதை போல சாரு.. பார்த்துக்கங்கடா.. நாங்க லவ் பண்றோம்ன்னு காட்டிக்க ஜோடி போட்டவங்கதான் நாங்க.. மத்தபடி காதல்ன்னா என்னன்னு அவளுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது.. அதை உன்கிட்டேதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் சாரு.. அதை உணர்ந்தது உன்னிடம் தான்.. நான் காதலிச்சதும் உன்னைத்தான்..."
அவன் பேச்சில் பொய்யில்லை.. இருந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவளாக சாருலதா மனம் உடைந்தாள்..
"இன்னும் எதற்காக என்னையும் காதலித்தேன்னு பொய் சொல்கிறிங்க ஆத்மா...? எத்தனை காலம்தான் இந்தப் பொய்யை மெயின்டெயின் பண்ணிக்கிட்டு இருப்பீங்க...?"
அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் பேசியதில் அவன் முகம் மாறியது..
"சாகிறவரைக்கும் சொல்வேண்டி.. நான் உன்னைத்தான் காதலிச்சேன்.. உன் ஒருத்தியை மட்டும்தான் காதலிச்சேன்..."
"அப்ப அவகூட ஊர் சுத்தினதுக்கு பெயர் என்ன..?"
"டைம் பாஸ் லவ்.. இதை நான் மட்டும் சொல்லலை.. அவளும்தான் சொன்னா... திடிர்ன்னு ஒருநாள் கல்யாணப் பத்திரிக்கையை கொண்டு வந்து நீட்டினா.. பணக்காரனாம் அவளுக்கு சொந்தக்காரனாம்.. சின்ன வயசில இருந்தே.. அவனுக்குத்தான் இவன்னு முடிவாகியிருந்ததாம்.. அப்புறமும் எதுக்காகடி என் கூட ஊரைச் சுத்தின.. காதலி வேசம் போட்டேன்னு கேட்டா.. அவன் இவகூட காலேஜில படிக்கலையேன்னு கூலாச் சொல்றா.. போடி.. உன் புத்தி இவ்வளவுதானான்னு திரும்பிப் பார்க்காம போயிட்டேன்.. அடுத்து என் வாழ்வில் நான் சந்திக்கிற பொண்ணுகள்ளாம்.. ஒன்று அவளைப் போல டைம் பாஸீக்கு பழகுகிறவங்களா இருந்து வைச்சாங்க.. இல்லேன்னா என் அண்ணியைப் போல ராட்சஸ குணம் படைச்சவங்களை இருந்தாங்க.. தேவதை குணம் படைச்ச உன்னைப் போல ஒருத்தியை என் வாழ்வில் பார்க்கவே இல்லையேடி.. அதனாலதானே பெண்கள்ன்னாலே வெறுத்து ஒதுங்கியிருந்தேன்...?"
"நல்லாப் பேசறிங்க.. இப்படிப் பேசிப் பேசித்தானே என்னை மயக்கி வைச்சிருந்தீங்க...?"
"இப்பவும் மயக்கித்தான வைச்சிருக்கேன்...?"
ஆத்மாவின் அந்த உறுதியான கேள்வியில் சாருலதாவின் முகம் சிவந்து போனது..
'என்ன திமிர்...!' அவள் மனம் கொதிப்பதற்குப் பதிலாக அவனது தன்னம்பிக்கையில் குளிர் காய்ந்தது..
ஆனாலும் அவளால் அதை அவனிடம் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
"கனவு காண வேணாம் மிஸ்டர் ஆத்மாராம்..."
"உன்னோட ஆத்மாடி..."
"ஊஹீம்.. எவளோ ஒருத்தியோட ஆத்மா.."
"அறைஞ்சு பல்லைக் கழட்டிருவேன்.. அடுத்தவன் பெண்டாட்டியப்பத்தி எதுக்காக பேசற...? உனக்குப் புருசனாகப் போகிறவன்கிட்ட ஏன் பேசற...?"
ஆத்மாவின் அந்தக் கோபத்தில் சிறகடிக்கும் மன உணர்வுகளை சாருலதாவினால் கட்டுப்படுத்த முடியவில்லை..
அவனுடனான அவளுடைய திருமணம் முறிந்து போய் விட்டது என்பதை நினைவுக்கு கொண்டுவர முயன்றாள் சாருலதா..
'இல்லை.. இவனுடன் நான் வாழப் போவதில்லை...'
கட்டவிழ்த்து ஓடும் மனதைத் தளையினால் பிணைக்க முயன்றாள்.. அது கட்டுக்குள் அடங்க மறுத்தது..
"நம்ம கல்யாணம் நின்னு போயிருச்சு.."
"இருக்கட்டும்.. நீ எவனுக்கும் கழுத்தை நீட்டலையே.. நானும் வேற எவ கழுத்திலயும் தாலியக் கட்டிரலையே..."
"நடக்காததைப் பத்திப் பேச வேணாம்..."
"நடக்காமத்தான் போகட்டுமே ... ஒன்னை மனசில வைச்சுக்கடி.. அந்தப் பொண்ணு விலகிப் போனதும்.. நான் பெண்களைத்தான் வெறுத்தேன்.. அந்தப் பொண்ணை நினைக்கல.. அவளை விலக்கி வைச்ச பின்னால.. அவ நினைப்பு வந்ததே இல்லடி.. ஆனா.. உன்னை விலக்கி வைச்சிருக்கேன்.. உன் நினப்பு என்னைத் துரத்துதேடி.. உன்னை நினைக்காம இருக்க முடியலையேடி.. நீ வேற.. நான் வேறன்னு என்னால நினைக்க முடியல.."
'என்னாலும்தான் முடியலை..!
சாருலதாவின் மனம் பொங்கியது.. அப்படியே அவன் கைகளுக்குள் சரண் புகுந்து விட வேண்டும் போல இருந்தது.. அதற்கு மேலும் அங்கிருந்தால் அவனிடம் சரண் புகுந்து விடுவோம் என்ற பயம் நெஞ்சில் எழுந்ததில் சாருலதா சட்டென்று எழுந்து விட்டாள்..
அவள் மன உணர்வுகளை அவதானித்ததைப் போல அவன் ஆழ்ந்த பார்வையை வீசினான்..
"இன்னும் நான் பேசி முடிக்கல.."
"இந்தப் பேச்சுக்கு முடிவே இருக்காது..."
"தெரியுதில்ல.. முடிவேயில்லாத விசயத்துக்கு முடிவைக் கொண்டுவரனும்னு ஏன் நினைக்கிற...? இது முடியவே முடியாதுடி.. இதுக்குப் பெயர்தான் காதல்.. உன்மேல நானும்.. என்மேல நீயும் வைச்சிருக்கிற இந்த உரிமைக்குப் பெயர்தான் காதல்..."
"நான் போறேன்..."
"அதான்.. போயிட்டயே..."
சாருலதா அதிர்ந்து நிமிர்ந்தாள்.. அவன்  விழிகளில் அவள் விழி கலக்க.. அசையாமல் நின்றவளைப் பார்த்தபடி ஆத்மா எழுந்தான்.. அவளருகே வந்தான்.. அவளைத் தொடக் கைகளை நீட்டினான்.. அவன் விழிகள் அவளை ஊடுறிவின.. அவள் விரல்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன..  மனசில் எதிர்பார்ப்பு பரவியது..
'இதோ.. தொட்டு விடப் போகிறான்..'
மூச்சை அடக்கிக் காத்திருந்தாள் சாருலதா.. அவள் உடலெங்கும் மின்சார அலைகள் பரவத் தொடங்கின.. அவளைத் தொடுவதைப் போல கிட்ட வந்த ஆத்மாவின் கைகள் விலகின..
"நான் தொட்டாத்தான் உனக்குப் பிடிக்காதே..."
சாருலதாவின் உணர்வுகள் தண்ணீர் தெளித்த பாலைப் போல பொங்கி அடங்கின.. அவள் சட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள்.. அவள் சென்ற பின்பும் அறையில் நிரம்பியிருந்த சுகந்த மணத்தை நுகர்ந்தபடி அசையாமல் நின்றான் ஆத்மா அவளுக்கே உரித்தான அந்த மணத்தை நுகர்ந்தபோது.. அவளை முகர்ந்து ஆட்கொள்ள அவன் மனம் வேட்கை கொண்டது.. தாகம் தணியாத கோபத்துடன்.. அவனும் அறையை விட்டு வெளியேறினான்...
கேண்டினில் காபியை குடித்து விட்டு வந்தவனுக்கு வேலையில் மனம் ஒட்டவில்லை.. சுதாகரனைப் பார்க்கப் போகலாம் என்ற நினைவுடன் எழுந்தான்.. தரைத்தளத்திற்கு வந்த போது... வெளியில் மழை கொட்டிக் கொண்டிருந்தது.. காரை எடுத்த போது மழையில் நனைந்தபடி.. சாருலதா அவளின் வண்டியை உதைத்துக் கொண்டிருப்பதை கவனித்தான்..
'இந்த ஓட்டை வண்டியை விட்டுத் தொலைக்கவும் மாட்டா..'
அது போன்ற அவளின் தன்மைகளில் மனம் நனைந்தபடி.. மழையில் நனைந்து கொண்டிருந்தவளின் அருகே சென்றான் ஆத்மா..
"என்னடி ஆச்சு...?"
"ஒன்னுமில்லை..."
"ஒன்னுமில்லாததுக்கா மழையில நனையற...?"
"அப்படியொரு நேர்த்திக்கடனை நேர்ந்துக்கிட்டு இருக்கேன்..."
"விலகு.. நான் என்னாச்சுன்னு பாக்கறேன்.."
"நோ தேங்க்ஸ்.. என் பிராப்ளத்தை நானே ஸால்வ் பண்ணிக்குவேன்.."
அவள் பிடிவாதமாய் பேசிக் கொண்டிருந்த போது.. வானத்தில் மின்னல் வெட்டியது.. அதை தொடர்ந்த இடியின் சத்தத்தில் "அம்மா" என்று அலறிய சாருலதா.. அருகில் நின்ற ஆத்மாவைக் கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,42,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய் -26
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய் -26
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnananaithaai-26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnananaithaai-26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy