மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-18

18 யாருமே தேளை எடுத்து மடியில் கட்டிக் கொள்ள நினைக்க மாட்டார்கள்.. ஆத்மாவின் தோழமையும்.. தேள் கொடுக்கும் ஒன்றுதான்.. அதையும் மீறி.. ப...


18

யாருமே தேளை எடுத்து மடியில் கட்டிக் கொள்ள நினைக்க மாட்டார்கள்.. ஆத்மாவின் தோழமையும்.. தேள் கொடுக்கும் ஒன்றுதான்.. அதையும் மீறி.. புத்தம் சரணம் கச்சாமி என்று போதி மரத்தடி புத்தராக ஆத்மாவுடன் ஜோடி போட்டு அழைகின்ற சுதாகரனைத் தவிர வேறு யாரும் ஆத்மாவை சாப்பிட அழைப்பார்களா...? வம்பைக் கட்டி இழுக்க அவர்களென்ன புத்தியில்லாத முட்டாள்களா..?
'சார்... ஐ ஆம் சாருலதா.. உங்கள் நண்பரான ஆத்மாராமுடன் வேலை செய்பவள்.. நாம் ஒரு முறை சந்தித்திருக்கிறோம்.. உங்கள் நண்பர் என் பொருள்கள் அவர் அறையில் இருக்கும் போதே கதவைப் பூட்டிவிட்டார்.. அன்று நீங்களும் எங்கள் ஆபிஸிற்கு வந்திருந்தீர்கள்.. நினைவிருக்கிறதா...? ஒரு முக்கியமான வேலைக்காக உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.. - சாருலதா..'
சுதாகரனுக்கு மெயில் பறந்தது.. இறக்கையில்லாமல் பறந்து சென்ற மெயிலுக்கு உடனடியாக பதிலும் பறந்து வந்தது..
'இன்று மாலை.. உழைப்பாளிகள் சிலையருகே.. கடற்கரையில் சந்திக்கலாமா...?'
கேள்வியே பதிலாக வந்ததில் சாருலதா மகிழ்ந்து போனாள்.. மாலையில் சீக்கிரமாகவே கிளம்பினாள்..
"என்னடி கம்யூட்டரை கட்டிக்கிட்டவ மாதிரி இங்கேயே உட்கார்ந்திருப்ப.. இப்ப என்னடான்னா எங்களுக்கு முன்னாலே வீட்டுக்குப் போக பறக்கிற.. என்ன ஆச்சு...? கம்யூட்டரை டைவர்ஸ் பண்ணிட்டியா.." என்று கேட்டாள் காவ்யா...
"அவசர வேலை காவ்யா..."
"இதை உன் ஸ்கூட்டி காதில போட்டு வைச்சிட்டியா...?"
"என்னது...?!"
"நீதான் ஒரு மார்க்கமான ஆளாச்சே... ஒன்னு கம்யூட்டரைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுப்ப.. இல்லைன்னா.. உன் ஸ்கூட்டி கூட டூயட் பாடிக்கிட்டு நிப்ப.. அதுவே ஒரு உதையில கிளம்பாது.. நீ அது காதில முன்னக்கூடியே விசயத்தை போட்டு வைச்சிருந்தா பிரச்னை இல்லைபாரு.."
"அதெல்லாம் என் ஸ்கூட்டி அடம் பிடிக்காம கிளம்பிரும்.."
அவள் ஸ்கூட்டி அடம் பிடிக்காமல் கிளம்பி விட்டது.. உழைப்பாளர் சிலையருகே சுதாகரன் காத்திருந்தான்.. காரின் மீது சாய்ந்து நின்றிருந்தவன்.. இவளைக் கண்டதும் நிமிர்ந்து நின்றான்.. ஸ்கூட்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு.. தயக்கத்துடன் அவனருகே போனாள் சாருலதா...
அவன் ஆத்மாவின் நண்பன் என்பது மட்டும்தான் அவளுக்குத் தெரியும்.. மற்றபடி எந்தவித அறிமுகமும் அவர்களுக்குள் இல்லை.. அதுவரை.. அறிமுகமில்லாத புது நபர்களிடம் சாருலதா பேச நினைத்ததில்லை..
இன்றுதான் கதையே மாறியிருக்கிறதே...
அவளின் சங்கடத்தை அறிந்தவனைப் போல சுதாகரன் கனிவுடன் புன்னகை செய்து.. இயல்பாக..
"ஹலோ..." என்றான்...
"ஹலோ.. சார்..."
"பேசனும்னு மெயில் அனுப்பியிருந்தீங்க..."
அவன் கவனமாக 'சந்திக்க' என்ற வார்த்தையைத் தவிர்த்ததில் அவன் மீது சாருலதாவின் மனதில் மதிப்பு உருவானது..
"ம்ம்ம்..." சாருலதா தலையை அசைந்தபடி சுற்றிலும் பார்த்தாள் நெருக்கமாக நின்றிருந்த மக்களின் கூட்டம் அவளைப் பேசவிடாமல் தடுத்தது...
"கடலோரமா போயிட்டு வரலாமா...?"
அன்று ஆத்மா கேட்ட கேள்வியை இன்று சுதாகரன் கேட்டான்.. கேட்கப் பட்ட வார்த்தைகள் ஏறக்குறைய ஒன்றுதான்.. கேள்வி கேட்ட நபர்கள்தான் வேறு.. கேட்கப்பட்ட விதமும் வேறு...
சுதாகரன் காட்டிய இணக்கத்தில் சாருலதாவின் மனது இதமானது.. அவள் சம்தமாக தலையை அசைத்தாள்.. அவர்கள் மணலில் நடக்க ஆரம்பித்தார்கள்..
கடலோரமாக இருந்த சரிவில் சுதாகரன் உட்கார.. அருகில் அமர்ந்தாள் சாருலதா..
"அண்ணே.. அண்ணிக்கு சுண்டல் வாங்கிக் கொடுங்க..." என்று வந்த பையனிடம்..
"இது அண்ணியில்லடா.. என் தங்கை.." என்று சொல்லிவிட்டு இரண்டு பொட்டலம் சுண்டலை வாங்கினான்...
அருகருகே அமர்ந்திருக்கும் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சாருலதாவின் மனதில் ஓடிய சஞ்சலம் மறைந்து அவள் நிம்மதியானாள்..
"சுண்டல் வேண்டாமே.." அவள் சுண்டலை மறுத்தபோது...
"பாவம் அந்தப் பையன்.. அவனுக்காகத்தான் சுண்டல் வாங்கினேன்.. நமக்காக இல்லை.." என்றான் சுதாகரன்..
'சுண்டல் சாப்பிடவா இங்கே வந்தேன்...?'
சாருலதா.. கடலை வெறித்தாள்.. மனதில் ஓடிய எண்ணங்களை கோர்வையாக்கி பேச முயன்றாள்.. சுதாகரன் அவள் பேசுவதற்காக காத்திருப்பதை அவளால் உணர முடிந்தது..
'பேசவென்று வந்த பின்பு பேசித்தானே தீரனும்..'
சாருலதா தைரியத்தை வரவழைத்துக் கொண்டவளாக நிமிர்ந்தாள்.. சுதாகரனின் முகம் பார்த்தாள்..
"உங்க பிரண்ட் கனடா போகிறார்.." மொட்டையாகச் சொன்னாள்..
"தெரியுமே.. இந்த மன்த் என்டில கிளம்பறான்.." சுதாகரன் இயல்பாக பதில் சொன்னான்...
ஆத்மாவைப் பற்றித்தான் அவள் பேச வருகிறாள் என்று இவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டாள்...
இயல்பாக அனைத்துப் பேச்சையும் எதிர்கொள்ள இவனால் ப்படி முடிகிறது என்ற ஆச்சரியம் அவளுக்குள் எழுந்தது..
"இப்பத்தானே கனடாவில இருந்து ரிடர்ன் ஆனார்...? திரும்பவும் போகனும்னு திடிர் முடிவை எடுத்திருக்காரே... ஏன்...?"
"தெரியலைங்க.. நானும் இதே கேள்வியை அவனிடம் கேட்டும் பார்த்துட்டேன்.. இங்க இருக்க முடியலைன்னான்.. ஓகேன்னு விட்டுட்டேன்..."
"இருக்க முடியலையா...? ஏன்...? இது அவர் ஊர்.. இங்கேதான் அவர் வீடு இருக்கு.. அம்மா... அப்பா.. இருக்காங்க.."
"கூடவே அண்ணனும்.. அண்ணியும் இருக்காங்களோ..."
"அவங்க இருந்தா இவர் ஊரை விட்டுப் போகனுமா...? அப்படியேதும் நேர்த்திக்கடன் இவருக்கு இருக்கா...?"
"இல்லைதான்..." சுதாகரன் சிரித்தான்..
இவள் எதற்காக இத்தனை உரிமையோடு விசாரிக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்குள் வந்தாலும்.. அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..
"அவர் எப்பவும் இப்படித்தான் இருப்பாரா...?"
"இப்படின்னா...? புரியலை..."
"மனதில இருக்கிறதை மறைத்துப் பேசுவாரா...?"
"ஆத்மாவா...? நோ....சான்ஸ்.. மனசில நினைக்கிறதை அப்படியே சொல்லிருவான்ங்கிறதுதான் அவனிடம் இருக்கிற மைனஸ் பாயிண்டே..."
"இப்ப மட்டும் எதுக்காக மறைக்கிறார்...?"
"எதை...?"
"அவர் செல்போனில் வால் பேப்பரா என் போட்டோவை வைச்சிருக்கிறதை..."
சாருலதா முகம் சிவக்க.. தலை குனிந்து கொண்டாள்.. அவள் சொன்னதின் சாராமசத்தை புரிந்து கொண்ட சுதாகரன் திகைத்தான்....
'ஆத்மாவா..? நம்பவே முடியலையே...'
கண்ணுக்கு முன்னால் முகம் சிவக்க அமர்ந்திருக்கும் சாருலதாவைக் கண்ட பின்பு அவனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...
"நீங்க பார்த்தீங்களா...?"
"ம்ம்ம். யதேச்சையா பார்த்தேன்..."
"அவனிடம் கேட்டிங்களா...?"
"ஊஹீம்.. அவரே செல் போனும் கையுமா இருந்த என்னைப் பார்த்ததும் நான் தெரிஞ்சுக்கிட்டதை கண்டு பிடிச்சிட்டார் அதுக்குப் பின்னாலேதான் இந்த கனடா போகிற முடிவை எடுத்திருக்கார்.." சாருலதா துக்கத்துடன் சொன்னாள்...
"என்னிடம் எதுவும் சொல்லலையே..."
"அவர் மனசில நானிருக்கேன்.. அதை ஏன் ஒப்புக்க மறுக்கிறார்...?"
சுதாகரன் சில வினாடிகள் மௌனமாக யோசித்தான் அவளைப் பார்த்த பார்வையில் யோசனை இருந்தது..
"அவன் மனசு இருக்கட்டும்.. உங்க மனசில என்ன இருக்கு...? இதை ஏன் கேட்கிறேன்னா.. உங்க பெர்மிசன் இல்லாம உங்க போட்டோவை அவன் செல் போனில ஸ்கிரின் பிக்சரா வைத்திருக்கிறது தப்புன்னு நீங்க அவன்கிட்ட சண்டையும் போடலை.. என்னிடம் கம்ப்ளையிண்டும் பண்ணலை..."
சாருலதா முகம் சிவந்தாள்.. சுதாகரன் புரிந்து கொள்ளலுன்  தலை அசைத்தான்...
"ஸோ.. உங்க மனசில அவன் இருக்கான்..."
"ம்ம்ம்..."
"சாரு.. இவ்வளவு துரத்துக்கு வந்த பின்னாலே.. நீங்க அவன் மனதை தெரிஞ்சுக்கிறது அவசியம்..."
"அதுக்காகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கறேன்.."
"நீங்க ஆத்மா பத்தித்தான் பேச வருவீங்கன்னு நினைச்சேன்.. ஆனா.. இதை எதிர்பார்க்கலை.. அவன் வழக்கப்படி உங்களிடம் ஏதோ வம்பு வளர்த்திருக்கான்.. அதைச் சொல்ல வர்றீங்கன்னு நினைச்சேன்.. நீங்க பேசின பின்னாலதான் விசயம் இப்படின்னு தெரியுது.. அவனுக்கு பெண்கள் மேலே வெறுப்பு இருக்கு..."
'அதான் தெரியுமே..' என்று நினைத்துக் கொண்ட சாருலதா
"ஆபிஸில் சொன்னாங்க..." என்றாள்..
"அது ஏன்னு தெரியுமா...?"
"தெரியலையே.. அவரோட நேச்சரே அதுதானா...?"
"ஊஹீம்.. இப்பக் கொஞ்ச வருசத்துக்கு முன்னால இருந்துதான் இப்படியாகிட்டான்.. அதுக்கு முன்னாலே தாய்க்குலம்ன்னாலே பூப்போட்டு வணங்குவான்..."
"கொஞ்ச வருசத்துக்கு முன்னாலேன்னா.. எப்போ..?"
"அவன் இன்ஜினியரிங் படிச்சுக்கிட்டு இருந்தப்ப.."
"என்ன ஆச்சு...?"
"ரெண்டு விசயம் நடந்துச்சு.. முதலாவது.. இவனோட நண்பன் ஒருத்தன் ஒரு பெண்ணைத் தீவிரமா லவ் பண்ணியிருக்கான்..."
"ம்ம்ம்..."
"அந்தப் பெண் அவனை ஏமாத்திட்டு வேற ஒரு பணக்காரப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிருச்சு.."
"அடடா..."
"அதே வருசத்தில் இவனோட அண்ணனுக்கு கல்யாணம் ஆச்சு.. வந்தவளோ அடங்காப் பிடாரி.. இவனோட அண்ணன்காரன் மகா சாது... அவன் படற பாட்டைப் பாத்ததிலே இவனோட வெறுப்பு அதிகமாகிருச்சு.."
"ஓ..."
"இவன் வாழ்க்கையிலே கல்யாணமே வேண்டாம்கிற முடிவோட இருக்கான்ம்மா..."
சிக்கலின் நுனியைக் கண்டு பிடித்த பின் சாருலதாவின் மனம் தெளிவானதாக மாறியிருந்தது.. இனிச் செய்ய வேண்டியது என்ன என்பதை அவள் முடிவு செய்து விட்டாள்...
'அவன் வேண்டாம்ன்னா நான் விட்டு விடுவேனா...?'
சாருலதா எழுந்து கொண்டாள்.. சுதாகரனுக்கு நன்றி சொன்னாள்.. அவளைப் பார்க்கும் போது ஆத்மாராமின் வாழ்க்கை மாறும் என்ற நிச்சயம் சுதாகரனின் மனதில் வந்தது..
"நான் அவனிடம் பேசறேன்ம்மா..."
"செய்யுங்கண்ணா உங்களுக்கு புண்ணியமாய் போகும்..."
மறுநாள் காலையில் ஆத்மாராமை அலுவலகத்தில் சந்தித்த போது அவனையே இமைக்காமல் பார்த்தாள் சாருலதா.. அவன் புருவங்களை சுளித்தபோது அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்லிய குரலில் பாடினாள்..
"என்னை விட்டு
             ஓடிப் போக முடியுமா...?
    நாம் இருவரல்ல..
             ஒருவர் அது தெரியுமா...?"





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-18
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-18
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy