மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-12

12 ஒவ்வொரு பெண்ணாக ஆத்மாராமிடம் நியாயம் கேட்க முயன்று தோற்றுப் பின்வாங்கினார்கள்.. அவர்களில் எவருமே சாருலதா என்ற பெயருடன் இல்லையென்பத...


12

ஒவ்வொரு பெண்ணாக ஆத்மாராமிடம் நியாயம் கேட்க முயன்று தோற்றுப் பின்வாங்கினார்கள்.. அவர்களில் எவருமே சாருலதா என்ற பெயருடன் இல்லையென்பதை மட்டும் சுதாகரன் கவனித்துக் கொண்டிருந்தான்.. அவர்களில் ஒருத்தி மட்டும் எந்தவிதமான நியாயத்தையும் கேட்காமல் வேறு திக்கில் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் முகத்தில் தெரிந்த மென்மையான அழகில் சுதாகரன் அதிசயித்தான்...
'இவதான் அவளா...'
சுதாகரனிடம் ஆத்மாராம் கூறிய கதை ஒன்றாயிருக்க.. சாருலதாவின் சிநேகிதிகள் கூறிய கதை வேறு ஒன்றாக இருந்தது...
"உனக்கு அவசரமா போன் வந்தா நீ போக வேண்டியது தானே...? எதுக்காக ஃபைவ் மினிட்ஸில வந்திடறேன்... நீ கேண்டினில் காபியை குடிச்சுக்கிட்டு வெயிட் பண்ணுன்னு சாருகிட்டச் சொல்லிட்டுப் போகனும்..? அவ உனக்காக வெயிட் பண்ணிப்பண்ணி ஓய்ஞ்சு போயிட்டா.. உன் ரூமை அவ என்ன தூக்கிக்கிட்டா போகப் போகிறா..? ஆபிஸில் ஒருத்தருக்கொருத்தர் நம்பனும் ஆத்மா.. நம்பிக்கைதான் வாழ்க்கை..."
"உன் அட்வைஸீக்கு தேங்க்ஸ் காவ்யா.. நீ பேசாம இந்த வேலையை விட்டுட்டு.. இதைப் போல அட்வைஸ் செய்கிற வேலை ஏதாச்சும் இருந்தா செய்யலாம்..."
"நீ திருந்த மாட்ட ஆத்மா..."
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்கையில் சுதாகரனுக்கு ஒரு விவரம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது...
ஆத்மாராம் வேண்டுமென்றே சாருலதாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் கேண்டினுக்கு காபி சாப்பிடப் போயிருந்த சமயத்தில் அவளுக்குத் தெரியாமல் கதவைப் பூட்டி வந்து விட்டான் என்பது சாருலதாவின் தோழிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.. என்பதுதான் அது..
அவர்கள் கதையை மாற்றிச் சொன்னார்கள்...
'இந்தப் பொண்ணு ஆத்மாவை காட்டிக் கொடுக்கலை போல...'
சுதாகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. ஆத்மாராம் அவளிடம் மல்லுக்கு நின்றிருக்கிறான்.. அவளை சின்னக் குழந்தையைப் போல அதிகாரம் பண்ணியிருக்கிறான்.. இத்தனைக்கும் மேலாக அவளிடம் சொல்லாமல் அவனுடைய அறையைப் பூட்டி விட்டு கம்பியை நீட்டியிருக்கிறான்.. இருந்தபோதும் சாருலதா அவனைக் காட்டிக் கொடுக்கவில்லையே ஏன்..?
ஒரு பெண்ணின் மனம் எது போன்ற வார்த்தைகளைக் கேட்டால் புண்படுமோ.. அது போன்ற வார்த்தைகளை ஆத்மாராம் பேசியிருக்கிறான்.. இருந்தும் அவள் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் அவள் மனது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்...!
சாருலதாவின் முக அழகைவிட.. அக அழகை சுதாகரன் உணர்ந்தான்...
ஆத்மாராம் அறைக் கதவைத் திறந்து விட்டான்.. சாருலதா மின்னல் வேகத்தில் உள்ளே போய் அவளுடைய பொருள்களை அள்ளிக் கொண்டாள்.. ஆத்மாராமைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போய் விட்டாள்...
"போய்ட்டு வரேன்னு ஒரு கர்ட்டஸிக்காவது சொல்லுகிறாளான்னு பாரேன்.. இவளுக்குப் போய் நீ பாவம் பார்த்தயே..." ஆத்மாராம் பல்லைக் கடித்தான்..
"கர்ட்டஸியைப் பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது.." சுதாகரன் கண்டிப்பாகச் சொல்லி விட்டான்...
எப்போதும் வழக்கடிக்கும் ஆத்மாராம்.. அன்று என்னவோ சுதாகரனுடன் சண்டை போட முனையவில்லை.. அவர்கள் கீழே இறங்கி வந்தபோது.. சாருலதா அவளின் ஸ்கூட்டியை உதை.. உதையென்று உதைத்துக் கொண்டிருந்தாள்...
"ஓட்டை வண்டியை வைத்துக்கிட்டு வாயைப் பாரேன்..." என்றான் ஆத்மாராம்...
சுதாகரன் சாருலதாவின் வாயைப் பார்க்காமல் ஆத்மாராமின் வாயைப் பார்த்தான்...
"என்னடா...?" புரியாமல் கேட்டான் ஆத்மா...
"உனக்கு நன்றியுணர்ச்சியே கிடையாதாடா..? இந்தப் பொண்ணு மட்டும் உண்மையைப் போட்டு உடைச்சிருந்ததுன்னு வைய்யி.. அந்தப் பொண்ணுக கூட்டம் உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருக்கும்.."
"கிழிப்பாங்க.."
"உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா..."
சுதாகரன் ஆத்மாராமிற்கு சான்றிதழ் வழங்கிவிட்டு சாருலதாவின் அருகே சென்றான்..
"நகர்ந்துக்கங்க.. நான் என்னன்னு பார்க்கிறேன்.." என்றான்..
சாருலதா நகர்வதா.. வேண்டாமா என்ற யோசனையுடன் நின்றாள்.. போதாக்குறைக்கு ஆத்மாராம் வேறு..
"உனக்கெதுக்குடா இந்த வேலை..?" என்று கேட்டுக் கொண்டிருந்தான்...
ஆத்மாராம் சொன்னதைக் கேட்டவளின் முகம் இறுகுவதைக் கவனித்த சுதாகரன்...
"அவன் பேசறதைக் கண்டுக்காதீங்க..." என்றான்...
"நீங்க அவரோட பிரண்டுதானே...?"
"அதுக்காக உங்களுக்கு எனிமியாய் இருக்கனும்னு அவசியமில்லையே மிஸ் சாருலதா..?"
"உங்க பிரண்ட்தான் வேணாம்ன்னு சொல்கிறாரே.."
"சொன்னாச் சொல்லிட்டுப் போகட்டும்.. நீங்க நகருங்க..."
சுதாகரன் ஏறக்குறைய சாருலதாவிடமிருந்து வண்டியைப் பிடுங்கினான்.. குனிந்து எதையோ ஆராய்ந்தான்.. பின்னர் ஓங்கி ஓர்உதை உதைத்தான்.. வண்டி அலறிக் கொண்டு கிளம்பி விட்டது...
"தேங்க்ஸ்.." நிம்மதியுடன் சொன்னாள் சாருலதா..
"உங்களிடம் ஒன்னு கேட்கனும்..." என்று சுதாகரன் கேட்டுக் கொண்டிருக்க...
"என்னடா கேட்கப் போகிற..? வண்டியை ரிப்பேர் பண்ணினதுக்கு சார்ஜ் கேட்கப் போறியா..?" என்று கனகாரியமாக கேட்டு வைத்தான் ஆத்மாராம்...
ஆத்மாராமாகப் பட்ட ஆத்மாவை முறைத்து விட்டு சாருலதாவின் பக்கம் திரும்பிய சுதாகரன்..
"இவன் பண்ணி வைச்ச வேலையை உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்லாம மறைச்சிட்டிங்களே.. ஏன்..?" என்று கேட்டான்..
"உனக்கு அது குறையாய் போயிருச்சாடா.." என்று முறைத்த ஆத்மாவை அலட்சியப் படுத்தி விட்டு சாருலதாவைக் கூர்ந்து பார்த்தான்..
"இது எனக்கும் உங்க பிரண்டுக்கும் இடையே நடக்கிற பனிப்போர்..! தேவையில்லாம மத்தவங்களை எதுக்காக நுழைய விடனும்னுதான் சொல்லலை..."
"கேட்டுக்கிட்டியாடா.."
"எல்லாம் கேட்குது.. இப்படி நினைக்கிறவங்க எதுக்காக.. கூட்டத்தைக் கூட்டனும் சுதா..? கதவு மூடியிருந்தா வீட்டுக்குப் போக வேண்டியதுதானே..."
"என் திங்ஸ் உள்ளே மாட்டியிருந்ததுன்னு சொல்லுங்க சார்.."
"அதைக் காலையில் வந்து எடுத்துக்க வேண்டியது தானே.. சுதா..?"
"திங்ஸ் இல்லாம வீட்டுக்குப் போனா என் அப்பா ஏன்னு காரணம் கேட்பார் சார்.. அவர்கிட்டப் பொய் சொல்ல முடியாது.. கண்டு பிடிச்சிடுவார்..."
"கண்டு பிடிச்சு என்ன செய்வாராம் சுதா..? என்கவுண்டரில போட்டுத் தள்ளி விடுவாரா..? ஹ..."
இவன் தெரிந்துதான் பேசுகிறானா என்று ஆத்மாவைக் கூர்மையாகப் பார்த்தாள் சாருலதா.. அவன் முகம் சாதாரணமாக இருக்க..
"செய்தாலும் செய்து விடுவார் சார்..." என்று ஆத்மாவை முறைத்தபடி சுதாகரனிடம் சொன்னாள்...
ஆத்மாவின் முகத்தில் கோப அலைகள் பரவ ஆரம்பித்தன...
'யாரைப் பார்த்து இவ மிரட்டறா..' என்று கண்களாலேயே சுதாகரனிடம் கேட்டான்...
ஆத்மாவுடன் நயனபாஷையில் பேசுவதற்கு சுதாகரன் தயாராக இல்லை.. எதற்கு வம்பு என்ற நோக்கத்துடன் சண்டையைத் தவிர்ப்பதற்காக...
"நீங்க கிளம்புங்கம்மா..." என்றான்...
"பொறுடா.. என்னமோ பெரிசா மிரட்டலெல்லாம் வருது.. அம்மணியோட அப்பா யாராம்..? என் கவுண்டர் ஏகாம்பரமா..?" ஆத்மா இகழ்ச்சியாக இதழ்களை மடிக்க..
"பரவாயில்லையே.. உங்க பிரண்ட் கண்டு பிடிச்சிட்டாரே.." என்றாள் சாருலதா...
அவள் முகத்தைப் பார்த்தால் பேச்சுக்காக சொல்வதைப் போல இல்லாமலிருந்ததில் சுதாகரன் குழம்பிப் போனான்...
"ஏங்க.. அவன்தான் சண்டைக்கு அலைகிறான்னா.. நீங்களும் அவனைப் போலவே பேசறிங்களே..." என்று கேட்டான்..
"இல்லை சார்.. உண்மையாகத்தான் சொல்றேன்.. என் அப்பாவுக்கு என்கவுண்டர் ஏகாம்பரம்ன்னு ஒரு பட்டப்பெயர் இருக்கு.."
"உங்க அப்பா யாருங்க..?"
"எஸ்.பி. சக்திவேல்..."
"என்னது..?!"
சுதாகரன் ''வென்று வாய் பிளந்தான்.. அவன் பார்வை ஆத்மாவிடம் 'தேவையாடா உனக்கு..?' என்று கேட்டது..
'போலிஸ் ஆபிசரோட பொண்ணுகிட்ட உறண்டை இழுத்துக்கிட்டு இருக்கிறானே.. இவனை என்ன செய்தால் தேவலாம்..'
ஆத்மாவும் சரி.. சுதாகரனும் சரி.. எஸ்.பி. சக்திவேலைப் பற்றி நிறையவே கேள்விப் பட்டிருந்தார்கள்.. கர்ணன் கவசகுண்டலத்துடன் பிறந்ததைப் போல.. சக்திவேலும் பிறக்கும் போதே காக்கிச் சட்டையுடன் பிறந்திருப்பாரோ என்று பொது ஜனங்கள் பேசிக் கொள்வதைப் பற்றி அவர்களுக்கும் தெரிந்திருந்தது.. கடமை.. கண்ணியம்.. கட்டுப்பாடு என்று வசனம் பேசாமலே.. அந்த முறுக்கோடு இருப்பவர் என்று அவரைப் பற்றி அறிந்தவர்களின் வட்டாரம் கூறியது...
"ஏண்டா டேய்.. அவரோட கட்டை விரலில் 'கம்' இருக்கு.. அது அவர் கையில் பிடித்திருக்கிற துப்பாக்கியோட ஒட்டியிருக்குன்னு ஊருக்குள்ளே பேசிக்கிறாங்க.. அந்த மனுசன் பெத்த பொண்ணு கூட வம்பு வளர்த்தா அந்த ஆளு துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு வந்துர மாட்டாரா.." என்று நண்பனின் காதோரமாக முணுமுணுத்தான் சுதாகரன்..
"அப்பேற்பட்ட ஆளு பெண்ணை வேலைக்கு அனுப்பக்கூடாது.. வீட்டுக்குள்ளேயே பூட்டி வைச்சிருக்கனும்.."
அப்போதும் அடங்குவேனா என்று அடம் பிடித்தான் ஆத்மா.. அவனிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த சுதாகரன்..
"நீங்க எஸ்.பி.சக்திவேலோட பெண்ணா..?" என்று அதிகமாக ஆச்சரியப்பட்டான்...
"இப்பத்தானே அதைச் சொன்னாங்க..?" ஆத்மா குறுக்கிட்டான்...
"பொறுடா.. பாருங்க சாருலதா.. பயல் நல்லவன் தான்.. கொஞ்சம் கோபக்காரன்.. நீங்க எதையும் மனசில வைச்சுக்காதீங்க..."
சாருலதா அமைதியாக சுதாகரனை ஏறிட்டுப் பார்த்தாள்... அவள் விழிகளில் தெரிந்த அதீத புத்திசாலித் தனத்தையும் மீறிய ஒர்விதமான அழகு அவளிடம் ஜொலிப்பதை சுதாகரனால் உணர முடிந்தது...
'என்ன மாதிரியான தேஜஸ் இது...'
"நான் எதையும் மனசில வைச்சுக்கலைன்னு சொல்ல மாட்டேன்சார்.. உங்க பிரண்ட் செய்கிறது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. பட்.. நானே சொன்னதைப் போல இதை நான்தான் ஃபேஸ் பண்ணனும்.. என் டாடியிடமோ.. பிரண்ட்ஸ்களிடமோ பஞ்சாயத்து வைக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.. தட்ஸ் ஆல்..."
சாருலதா பறந்து விட்டாள்... அவளது ஸ்கூட்டியின் பின்புற விளக்குகள் புள்ளிகளாகி மறையும் வரை பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தான் சுதாகரன்.






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-12
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-12
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy