மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-9

9 சாருலதா ஸ்தம்பித்துப் போய் விட்டாள்.. அப்படியொரு நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. என்பதை அவளின் கலவரமடைந்த முகமே சொல்லியது.....


9

சாருலதா ஸ்தம்பித்துப் போய் விட்டாள்.. அப்படியொரு நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. என்பதை அவளின் கலவரமடைந்த முகமே சொல்லியது.. அவள் முகத்தருகில் குனிந்திருந்த அவன் முகத்தைப் பார்த்தவளின் மிரண்ட விழிகளில் அவன் எதைக் கண்டானோ.. அவளை விடுவிக்க மனமின்றி அப்படியே நின்று விட்டான்...
முகத்தருகே வெகு அருகாமையிலிருந்த அவன் முகத்தின் மூச்சுக்காற்றில் தன்னுணர்வு வரப் பெற்றவளாக சாருலதா பதறி விலகினாள்...
"சார்.. என்ன இது..?" சீற்றத்துடன் கேட்டவளின் உடல் நடுங்கியது..
"வாட்..?" ஆத்மாராமினால் அந்தக் கேள்வியை ஜீரணிக்க முடியவில்லை...
அவள் என்ன சொல்ல வருகிறாள்..? ஆத்மாராம் வேண்டுமென்றே வந்து அவளைக் கை வளைவிற்குள் நிறுத்தி அணைத்தான் என்று நினைக்கிறாளா..?
"மைன்ட் யுவர் வெர்டேஸ் சாருலதா.." அவளைவிட அதிகமான சீற்றத்துடன் அவன் சப்தம் போட்டான்...
"பர்ஸ்ட்.. மைன்ட் யுவர் பிகேவியர் மிஸ்டர் ஆத்மாராம்.. உங்கள் ரூமில்தான் நான் வேலை செய்யனும்னு சொன்னது இதுக்காகத்தானா..?" சாருலதா வேக மூச்சுடன் கேட்டாள்...
"ஏய்ய்.. நிறுத்து.. நிறுத்து.. நானும் போனால் போகுதுன்னு பார்க்கிறேன்.. நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போகிற.. என்னை யாருன்னு நினைச்ச..?" அவன் கண் சிவந்தான்...
"ஜெண்டில் மேனாய் இருப்பீங்கன்னு நினைச்சேன்.. அந்த நினைப்பு தப்புன்னு நீங்க புரூவ் பண்ணிட்டிங்க..."
"பார்க்க நல்ல பெண்ணாய் தெரிகிறன்னு நானும் உன்னைப் பத்தி நினைச்சேன்.. என் நினைப்பும் தப்புன்னு நீ காட்டிட்ட..."
"என் சீட்டுக்குப் பக்கத்தில் உங்களுக்கென்ன வேலை..?"
"எதுவாக இருக்கும்ன்னு நீ நினைக்கிற..?"
"ஐ நீட் ஆன்சர்.."
"இந்த மாதிரியான கொஸ்டினுக்கெல்லாம் ஆன்சர் பண்ண என்னால் முடியாது..."
"அங்கிருந்தவர் இங்கே எதுக்காக வரனும்..?"
"வந்தா நீ மோதியாகனும்னு ஏதாச்சும் சட்டமிருக்கா..?"
"ஹலோ.. நான் வேணும்னே மோதினேன்னு சொல்கிறிங்களா..?"
"சொன்னாத் தப்பில்லை..."
"ஆமாம் ஸார்.. நீங்க வெரி ஸ்மார்ட் மேன்.. உங்க அழகைப் பாத்து நான் மயங்கிட்டேன்.. அதான் நீங்க பக்கத்தில் வந்து நின்னதும் வேணும்னே மோதிட்டேன்..."
"இதுதான் விசயமா..? தந்நிலை விளக்கத்துக்கு ரொம்ப தேங்க்ஸ்.. பட் ஒன்திங்.. இதுவே கடைசித்தரமா இருக்கட்டும்.. இனிமேலும் இதைக் கன்டினியூ பண்ணாதே.."
ஆத்மாராம் கண்கள் இடுங்க மிதப்பாக சொன்ன விதத்தில் சாருலதாவின் ரத்த அழுத்தம் எகிறியது.. அவளால் காதுகளில் விழுந்த பேச்சை ஜீரணிக்க முடியவில்லை.. இப்போது...
"வாட்..? வாட்..?" என்று கொதிப்பது அவள் முறையாகி விட்டது...
'பதிலுக்குப் பதில்...'
ஆத்மாராமின் காயப்பட்ட ஈகோ திருப்தியடைந்தது.. சாருலதாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவன் அறையை விட்டுப் போய் விட்டான்...
நடந்த பேச்சு வார்த்தையின் தாக்கத்தில் தலையைப் பிடித்தபடி சாருலதா அப்படியே உட்கார்ந்து விட்டாள்.. அவளின் செல்போன் குறுஞ்செய்தியை அறிவித்தது...
'இன்னும் என்னத்த வெட்டி முறிக்கற.? வேலை பார்த்தது போதும்.. கொட்டிக்க வா.. லன்ச் டைம் தாண்டிக்கிட்டு இருக்கு...'
நேரில் பேசுவதைப் போல குண்டுத் தமிழில் செல் போனின்திரை ஒளிர்ந்தது.. காவ்யா அழைத்திருந்தாள்.. சாருலதா தன்னை சரி செய்து கொண்டு லன்ச் பேகை கையில் எடுத்தாள்.. லேசாக முகம் மாறியிருந்தால் கூட காவ்யா கண்டு பிடித்து விடுவாள்.. ஆயிரம் கேள்விகளைக் கேட்பாள்.. அவளிடம் ஆத்மாராமின் கை சாய்ந்து அவள் நின்ற கதையைச் சொல்ல முடியாது...
"ஏண்டி லேட்.." என்ற காவ்யாவிடம்..
"வேலைடி.." என்று முகம் பார்க்காமல் பதில் சொன்னாள்...
மனதில் இனிமேல் இதைத் தொடராதே என்று ஆத்மாராம் சொல்லிய வார்த்தைகள் பாறையின் கனத்துடன் அழுத்தின...
"உன் முகம் வாடிப் போயிருக்கே.." காவ்யா சாருலதாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள்...
"ப்த்ச்.. ஒன்னுமில்லை.." சாருலதா தலை கவிழ்ந்தாள்...
"இவ என்னடி... புதுப் பெண்ணைப் போல முகத்தைக் கீழே போட்டுக்கிறா.." காவ்யா அதிசயித்தாள்..
"அடச்சீ.. வாயை மூடிக்கிட்டு சாப்பிடு.." சாருலதாவிற்கு முகம் சிவந்தது...
"வெட்கத்தைப் பாரேன்.." ஷீபா கேலி செய்தாள்..
தோழிகள் வேலையைப் பற்றியும்.. இட மாற்றத்தைப் பற்றியும் விசாரித்தார்கள்.. இயந்திர கதியில் பதிலைச் சொல்லியபடி சாப்பிட்டு முடித்தாள் சாருலதா.. திரும்பவும் அவன் முகத்தில் விழிக்க வேண்டுமே என்றிருந்தது அவளுக்கு...
'இதுதான் விசயமா...?'
அவனது கேலிக்குரல் அவள் காதில் ஒலித்தது.. சாருலதாவின் தன் மானத்தை அது சுட்டது.. அதன் வேதனை தாளாமல் அவள் கண்களில் நீர் முட்டியது.. மற்றவர்கள் பாராமல் இமைகளைச் சிமிட்டி அதைச் சரி செய்து கொண்டாள்...
'தந்நிலை விளக்கத்திற்கு ரொம்ப தேங்க்ஸ்...'
அவனது ஏளனத்தில் கட்டுப்பாட்டை மீறி அவள் இமைகள் நனைந்தன.. எதற்காக அந்த நன்றியைச் சொன்னான்..? அவள் எதை ஒப்புக் கொண்டதற்காக அந்த வார்த்தைகளைச் சொன்னான்..? அவன் அழகில் அவள் மயங்கி விட்டாளா..? என்ன ஒரு நெஞ்சழுத்தம்...?
"சாரு..? அழுகிறயா..?" காவ்யா கண்டுபிடித்து விட்டாள்...
"வாட் ஹேப்பன் சாரு.." ஷீபா பரபரத்தாள்..
"நத்திங் டு வொர்ரி.." சாருலதா சமாளித்துக் கொண்டாள்...
"என்னடி ஆச்சு..? ஆத்மா திட்டினானா..?"
"ம்ம்ம்..."
"சொன்னேனில்ல ஷீபா.. அவன் சும்மா இருக்க மாட்டான்னு.. அவன் ஒரு ஸாடிஸ்டுடி.."
"நிஜம்தான் காவ்யா.. சாருமாதிரி.. ஷாப்ட் நேச்சர் லேடியைப் பார்க்கவே முடியாது.. அவன் இவளையே அழ வைச்சிருக்கான்னா.. ஹி இஸ் எ டேன்ஜரஸ் ஃபெல்லோ.."
"அதையும் ஒரு நாளுக்குள்ள செய்திருக்கான் பாரேன்..."
"ஒரு நாள்கூட இல்லைடி.. ஜஸ்ட் ஃபோர் அவர்ஸ்.."
"நாலே மணி நேரத்துக்குள்ள சாருவை கண்ணீர் விட வைச்சிருக்கான்.. இதை நாம சும்மா விடக்கூடாது..."
அந்தப் பெண்கள் குழாம் பொங்கி எழ.. சாருலதா கெஞ்சிக் கூத்தாடி அவர்களை அடக்கி வைத்தாள்.. அவளுக்கு 'பக் பக்'கென்று இருந்தது...
அவர்கள் பாட்டுக்கு ஆத்மாராமுடன் சண்டை போடப் போக.. அவன் சாருலதாவிடம் பேசி வைத்ததைப் போல அவர்களிடமும் பேசி வைத்து விட்டால் சாருலதாவின் மானம் கப்பலில் ஏறி டாட்டா காட்டி விடாதா..?
"லுக் லேடிஸ்.. நான் மிஸ் சாருலதாவின் வேலையை செக் பண்ணத்தான் பக்கத்தில் போனேன்.. பட்.. சாருலதா தான் எழுந்து நின்னு என்னைக் கட்டிப் பிடித்து கையில் சாய்ந்தாங்க.. நான் வெரி ஸ்மார்ட் மேனாம்.. என்னைப் பார்த்து அவங்க மயங்கிப் போயிட்டாங்களாம்.. அவங்களே தந்நிலை விளக்கமும் கொடுத்துட்டாங்க.. பட்.. ஐ கேன்'ட் அசெப்ட் இட்.. இது கன்டினியூ ஆகக் கூடாதுன்னு நான் ஸ்ட்ரிக்டா அவங்களை வார்ன் பண்ணினேனா இல்லையான்னு அவங்களிடமே நீங்க கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்..."
இப்படியெல்லாம் அவன் சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்..?
அவன் கட்டாயம் சொல்லுவான்... இதை மட்டுமல்ல.. இதற்கு மேலேயும் சொல்லுவான்..
'தேவையா..?' என்ற நினைவில் சாருலதா தோழிகளைத் தடுத்து நிறுத்தி விட்டு.. ஆத்மாராமின் அறையை நோக்கிப் போனாள்...
அதற்குள் அவன் சாப்பிட்டு முடித்துத் திரும்பியிருந்தான்.. என்ன வேகத்தில் சாப்பிட்டானோ என்ற நினைவில்..
'ரோபோ...' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள் சாருலதா..
அவள் அறைக்குள் வந்ததைக் கவனிக்காதவனைப் போல அவன் கம்யூட்டரில் கவனமாக இருந்தான்... சாருலதாவும் எதையும் பேசாமல் இறுகின முகத்துடன் அவள் சீட்டில் உட்கார்ந்தாள்...
'என்ன வார்த்தையைச் சொல்லிட்டான்...'
அவள் மனம் அதிலேயே உழன்றது.. அவளால் காலையில் காட்டிய வேகத்தை.. மதியத்திற்கு மேல் காட்ட முடியவில்லை... தப்புத்தப்பாய் கம்யூட்டரில் அடித்து வைத்து விட்டு.. தலையைப் பிடித்தபடி அதைத் திருத்தினாள்.. அவன் புருவங்கள் முடிச்சிட அடிக்கண்ணால் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்...
சற்று நேரத்திலேயே அவளுக்கு தலைவலி அதிகமாகி விட்டது.. காபி சாப்பிட்டால் தேவலை என்ற உணர்வுடன் கேண்டினுக்குப் போக எழுந்தாள்..
"எங்கே போகிற..?" அவன் கம்யூட்டரை விட்டுப் பார்வையை அகற்றாமல் கேட்டான்..
அவளுக்கு அது பிடிக்கவில்லை.. அது என்ன பள்ளிக்கூடமா..? இல்லை அவள்தான் எல்.கே.ஜி படிக்கும் சின்னஞ்சிறு குழந்தையா..?
கையில் பிரம்புடன் அவன் கேள்வி கேட்க.. அவள் கைகட்டி.. வாய் பொத்தி பதில் சொல்ல வேண்டுமா...?
அவள் பதில் சொல்லாமல் வெளியேறி விட்டாள்.. கேண்டினில் சூடான காபியைக் குடித்தபோது.. தலைவலி கொஞ்சமாகக் குறைந்ததைப் போல அவளுக்கு இருந்தது.. ஆத்மாராமின் அறைக்கு அவள் திரும்பி வந்தபோது அது பூட்டியிருந்தது...
'எங்கே போயிருப்பான்..?'
எங்கே போயிருந்தாலும் அறையைப் பூட்டி விட்டு எப்படி அவன் போகலாம் என்ற கோபம் அவள் மனதில் எழுந்தது...
அந்த அறை அவனுக்கு மட்டுமான அறையல்ல.. அவளும் அங்கேதான் உட்கார்ந்து வேலை பார்த்தாக வேண்டும்.. தவிரவும் அவளுடைய செல்போன்.. ஹேண்ட்பேக்.. இத்யாதி.. இத்யாதி.. போன்ற உடமைகள்.. அந்த அறைக்குள் இருந்தன...
சாருலதா.. நகத்தை கடித்தபடி அறைவாசலில் காத்திருந்தாள்.. அவன் வரவேயில்லை.. மாலை மயங்கி.. இருள் பரவி.. விளக்கும் எரிய ஆரம்பித்தபோது அவன் திரும்பி வரவே இல்லை..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-9
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-9
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy