மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...8

8 ஷீபாவிற்கும் முறத்தைப் பற்றித் தெரியவில்லை.. அதைக் கேட்டுக் கொண்டிருந்த சாருலதாவிற்கும்.. காவ்யாவிற்கும் முறத்தைப் பற்றித் தெரியவில...


8

ஷீபாவிற்கும் முறத்தைப் பற்றித் தெரியவில்லை.. அதைக் கேட்டுக் கொண்டிருந்த சாருலதாவிற்கும்.. காவ்யாவிற்கும் முறத்தைப் பற்றித் தெரியவில்லை...
"உனக்கே முறம்ன்னா என்னன்னு தெரியலையே.. அப்புறமும் எதுக்காக முறத்தைக் கட்டி இழுக்கிற...?"
"உனக்கு மட்டும் தெரியுமா..?"
"நான் முறத்தைக் கட்டி இழுத்தேனா.. பாருடி சாரு.. இவதானே அந்த ஆத்மாவை கனடாப் பொண்ணுக முறமில்லாமலே விரட்டி அடிச்சாங்கன்னு சொன்னா.."
"யாருடி இவ.. எங்க பாட்டி தமிழ் புரபசர்..."
"இருந்துட்டுப் போகட்டும்.. நானா வேணாம்ன்னு சொன்னேன்..?"
"காவ்யா.."
"சொல்லு..."
"காலையிலேயே கடுப்படிச்சன்னு வைய்யு..."
"என்னடி செய்வ...?"
"அந்த ஆத்மா ரூமில இவளுக்குப் பதிலா உன்னைப் போட்டு வைக்கலாம்ன்னு விக்ரம்கிட்டப் போட்டுக் கொடுத்துருவேன்..."
"அடிப்பாவி.. நான் உனக்கு என்னடி கெடுதல் பண்ணினேன்..? பூச்சாண்டி கிட்டப் பிடிச்சுக் கொடுக்கப் பார்க்கிறயே..."
வாரான்.. வாரான் பூச்சாண்டி என்ற திணுசில் ஆத்மாராமைப் பற்றி அந்தப் பெண்கள் பேச.. அதை ரசித்துச் சிரித்தாள் சாருதலா...
"ம்ம்ம்.. இவ இப்ப சிரிச்ச முகமா இருக்கா.."
"இந்த முகத்தை நல்லாப் பார்த்துக்கடி காவ்யா.."
"அதைச் சொல்லு.. அந்த ஆத்மா ரூமுக்குள்ளே நுழைஞ்ச பின்னாலே இந்த சிரிப்பு நிலைச்சிருக்குமா..?"
"ஏற்கனெவே சொல்லிட்ட போல..."
"அப்பவே சொல்லியாச்சு.. நீதான் இன்னமும் முறத்தைப் பத்தின விளக்கத்தைச் சொல்லலை.."
"நீ சொல்ல விடலை..."
"நானாடி விடலை...? நீ தான் ஏழு கடல்.. ஏழுமலை தாண்டி உன் பாட்டி தமிழ் புரபசர்ன்னு கதை சொல்லிக்கிட்டு வந்த.. முறத்தைப் பத்தி மட்டும் சொல்ல மாட்டேங்கிற..."
"பாட்டிதான் சொன்னாங்க..."
"என்னன்னு..? வடை சுட்டேன்... காக்கா வடையைத் தூக்கிக்கிட்டு ஓடிப் போயிருச்சுன்னா..?"
"அடி வாங்கப் போற காவ்யா..."
"முறத்தால அடிக்கப் போறயா..? எங்கே முறம்..? காட்டு பார்க்கலாம்..."
"இப்ப உனக்கு கதை வேணுமா.. வேணாமா..?"
"சொல்லு.. சொல்லு..."
"அந்தக் காலத்து தமிழ் பெண்கள் தைரியமானவங்களாம்..."
"இந்தக் காலத்து தமிழ் பொண்ணுகளும் தைரிய மானவங்கதான்.. இல்லைன்னா.. இந்த ஆத்மா மாதிரி ஆளுக கூட குப்பை கொட்ட முடியுமா..?"
"நிஜம்தான்.. அப்ப.. நெல் காயப் போட்டிருந் தாங்களாம்..."
"நெல்லுன்னா..."
"நீ திங்கிற சோத்தில் இருக்கிற அரிசி..."
"ஓ.. அதுதான் நெல்லா..? நீ சொல்லு..."
"அப்ப புலி வந்துச்சாம்.. உடனே கையில இருந்த முறத்தாலே அதை விரட்டியடிச்சாங்களாம்..."
"இதெல்லாம் நிஜமாய் நடந்திருக்கும்ன்னா சொல்ற...?"
"இல்லாமலா பாட்டைப் பாடி வைச்சிருக்காங்க.."
"கற்பனையாய் இருக்கலாமில்ல..."
"கற்பனையாய் பாடி வைக்கிறதா இருந்தா ஏதாச்சும் அரசியைப் பத்தியில்ல பாடி வைச்சிருக்கனும்..?
இவளோ தமிழ் நாட்டுப் பொண்ணு.. புலவருக்கு அள்ளிக் கொடுக்க இவகிட்ட தங்கமும் வைரமுமா கொட்டிக் கிடந்தது.. புலியை விரட்டிய முறம்தான் இருந்தது.. அதை வைச்சுக்கிட்டு புலவர் என்ன பண்ணுவார்..?"
"கரெக்டா பாயிண்டைப் பிடிச்சிருக்க ஷீபா.. ஆக மொத்தம் நம்ம ஆத்மாவை புலின்னு நீ புகழ்கிற.."
"புகழ்றேனா..? என்னடி சொல்ற..?"
"கனடா பொண்ணு முறமில்லாம இவனை விரட்டியடிச்ச வரைக்கும் சரி.. இதை எதுக்காக சங்கப் பாடல்கூட இணை கூட்டற.. அந்தப் பாட்டுப்படி ஆத்மா புலின்னுதானே அர்த்தமாகுது...?"
"ஊஹீம்.. நான் இதை ஒப்புக்கவே மாட்டேன்.. நானாவது.. ஆத்மாவைப் போய் புலின்னு சொல்கிறதாவது..."
"நீ சொன்ன.."
"நான் சொல்லலை..."
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருந்தார்கள்.. இது போன்ற பேச்சுக்களை இனிக் கேட்க முடியாதே என்று சாருலதாவிற்குள் ஏக்கம் தோன்றியது.. அவள் தனிமைப் படுத்தப் படுவதைப் போல உணர்ந்தாள்...
அலுவலகச் சூழல் என்பது மனம் விட்டுப் பேசிச் சிரித்து சிநேகிக்க கூடிய இடமாக அமைய வேண்டும்.. அப்படியொரு சூழ்நிலை இருக்குமானால் மனதில் உற்சாகமும்.. புத்துணர்வும் நிலைத்திருக்கும்.. அது செய்கின்ற வேலையைத் திருத்தமாகவும்.. அதிகமாகவும் செய்வதற்கான சக்தியைத் தரும்..
அப்படிப்பட்ட சூழலிருந்து விடுபட வேண்டிய நிர்பந்தம் வந்து சேர்ந்ததில் மனம் சோர்ந்து போனாள் சாருலதா...
அவளுக்கான டேபிளும்.. கம்யூட்டரும் தயாராகி விட்டதாக.. ஆத்மா தகவலை அனுப்பி வைத்தான்...
கவலைப்படாதேடி.. அழுதுவிடாதேடி.. தைரியமாக இருக்க முயற்சி பண்ணுடி.. அது முடியாதுதான்.. இருந்தாலும் வருகின்ற துன்பத்தை எதிர் கொண்டு ஆக வேண்டும்தானேடி.. என்றெல்லாம் ஆறுதல் சொல்லுவதைப் போல சாருலதாவை மனதிற்குள் அலற வைத்தபின்.. சிங்கத்தின் குகைக்குள் வேலை செய்யப்போ என்று சாருலதாவை அவளது தோழிகள் அனுப்பி வைத்தார்கள்...
சாருலதா கலவர முகத்துடன் ஆத்மாராமின் அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.. ஏதோ வேலையாக இருந்த ஆத்மாராம் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. அவனின் ஊடுறுவும் அந்தப் பார்வையில் சாருலதாவின் தைரியம் குறைந்தது.. திரும்பி ஓடிப் போய் விடலாமா என்று நினைத்தாள்...
'இந்த வேலையில்லைன்னா வேற ஒன்னு...'
அவள் வேலையை விட்டுவிட்டுச் சென்றால் அவள் வீட்டில் யாரும் அவளை கேள்வி கேட்கப் போவதில்லை...
"டாட்.. நான் வேலையை விட்டுட்டேன்.."
"ஈஸிட்..? ரிலாக்ஸா இரு.. ரெஸ்ட் எடு..."
"மாம்.. இன்னைக்கு நான் ஃப்ரீதான்.. வேலையை ரிஸைன் பண்ணிட்டேன்.."
"ஹப்பா.. அப்ப அரக்கப் பறக்க நீ ஓட வேணாம்.. நிம்மதியா ரெண்டு வாய் உட்கார்ந்து சாப்பிடலாம்.. வெரிகுட்..."
"சொர்ணா.. என் வேலை அம்பேல்..."
"நினைச்சேன்.. நீயாவது.. அடங்கி வேலை பார்க்கிறதாவது.. கீப் இட் சாரு..."
இப்படித்தான் அவள் வீட்டில் அதை எதிர் கொள்வார்கள்... காரணத்தைக் கூடக் கேட்க மாட்டார்கள்..
இப்படிப் புதுப் பெண்ணைப் போல பதட்டப் படுவதற்குப் பதிலாக வேலையை விட்டு விட்டால்தான் என்ன என்று சாருலதாவிற்குத் தோன்றிவிட்டது..
அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்த வண்ணம் இருந்த ஆத்மாராம் என்ன நினைத்தானோ...
"டேக் யுவர் சீட்..." என்று கடுமையில்லாத குரலில் சொன்னான்...
அந்தக் குரலில் கொஞ்சம் தெம்பு வரப் பெற்றவளாக சாருலதா அவளுக்கென்று போடப்பட்டிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தாள்.. டேபிளில் அவள் வேலை செய்ய வேண்டிய ஃபைல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன...
"ஸ்டார்ட் யுவர் வொர்க்..."
என்னவோ.. கேமராவின் முன்னால் நிற்கும் நடிகையிடம் 'ஆக்சன்..' என்று சொல்லும் டைரக்டரைக் போலச் சொன்னான் ஆத்மாராம்...
'நீ சொல்லலைன்னா என் வேலையை நான் பார்க்க மாட்டேனா..' கடுப்புடன் வேலையை ஆரம்பித்தாள் சாருலதா...
ஃபைல்களைப் புரட்டி ஊன்றிப் படித்தவள் கம்யூட்டரின் திரையை உயிர்ப்பித்தாள்.. கீ போர்டில் அவள் விரல்கள் வேகமத்துடன் நடனமாடுவதைப் போல லாவகத்துடன் படிந்து மீள்வதைக் கவனித்த ஆத்மாராமுக்கு அவள் வேலைத்திறமை மிக்கவள் என்பது புரிந்தது..
சாருலதா வேலையில் கவனமாக இருந்தாள்.. மறந்தும் கூட அவள் தலைநிமிர்ந்து ஆத்மாராமைப் பார்க்கவில்லை... ஆத்மாராம் என்ற ஒருவன் அந்த அறையில் இல்லாததைப் போன்ற பாவனையுடன் அவள் வேலை பார்த்ததைக் கண்டவனுக்கு.. காரணம் புரியாத கோபம் ஏற்பட்டது...
'இவ பெரிய உலக அழகி..'
அவள் உலக அழகியாக இருந்தாலும்.. உள்ளூர் கிழவியாக இருந்தாலும் அவனுக்கு ஆகப்போவது எதுவுமில்லை என்பது ஏனோ அவன் புத்திக்கு உறைக்க வில்லை..
எப்போர்பட்ட பேரழகியையும் அவன் உனக்கெல்லாம் ஒரு கணக்கா என்று.. கல்லையும், மண்ணையும் பார்ப்பதைப் போல்தான் பார்த்து வைக்கப் போகிறான்.. அப்படியிருக்கும் போது.. சாருலதாவின் மீது எதற்காக அப்படியொரு கோபம் ஏற்படுகிறது என்று அவனுக்கே புரியவில்லை...
ஊடும்.. பாடும் நிமிர்ந்து.. அவளைப் பார்த்தபடியே அவனும் வேலையில் மூழ்கியிருந்தான்.. வயிறு பசித்து நண்பகல் வேளை வந்து விட்டதை உணர்த்தியபோது அவளைத் திரும்பிப் பார்த்தான்.. அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை....
"லன்ச் டைம் வந்தாச்சு..." என்றான்...
சாருலதாவின் காதுகளில் அது விழுந்ததைப் போலத் தெரியவில்லை.. அவனுக்கு மறுமொழி கூறாமல் அவள் வேலையில் கவனமாக இருந்தாள்...
"மிஸ் சாருலதா.." அவன் சப்தமாக அழைத்தான்...
அவள் அதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வேலையைத் தொடர்ந்த வண்ணம் இருந்தாள்..
ஆத்மாராமுக்கு கோபம் வந்தது.. அவன் சுழல் நாற்காலியை விட்டு எழுந்து அவளருகில் சென்று நின்றான். அதே விநாடியில் பக்கத்திலிருந்த மர ஷெல்பில் இருந்த ஃபையை எடுக்க சாருலதா எழுந்தாள்.. எழுந்த வேகத்தில் ஆத்மாராமின் மீது அவள் மோதிவிட.. தடுமாறி கீழே விழ இருந்தவளை ஆத்மாராம் தாங்கிப் பிடித்துக் கொண்டான்...
அவன் தோளில் கை வைத்து சரிந்து அவள் நின்றிருக்க.. அவள் இடுப்பில் கை கொடுத்து வளைத்துப் பிடித்தபடி அவன் நின்றிருந்தான்...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...8
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...8
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy